May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55

குறிஞ்சி மலர்.. 55 ஜீவோதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து சேரும் தூரத்தில் தான் எலிசபெத்தையும் செபமாலையையும் அடைத்து வைத்திருந்தார்கள். அரைமணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அங்கே செல்ல முனைய அவனை தடுத்தார் வியாகேசு. “பீட்டர் நாங்கள் அதை பாத்துக் கொள்ளுறம்.. நீ உன்ரை பொஞ்சாதியோட இரு..” “நீங்கள் அங்க போய் என்ன செய்யப் போறியள்..” “அந்த இடத்துக்கு போய் அவையளை மீட்டிட்டு அதுக்கு பிறகு இதை […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54

குறிஞ்சி மலர்.. 54 கோதையும் வியாகேசும் பேசிக் கொண்டிருந்த போதே, கையில் அர்ச்சனை தட்டோடு வந்து சேர்ந்தார் நீலரூபி. தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு, வியாகேசு அங்கிருந்து போய் விட்டார். நீலரூபிக்கு கோதையைப் பார்த்ததுமே அத்தனை சந்தோஷமாகி விட்டிருந்தது. “அடி பிள்ளை எப்போடி வந்தனீ..” “நீங்கள் கோயிலுக்கு போய் கொஞ்ச நேரத்துலயே வந்திட்டன் நீலும்மா..” “என்னடி சரியா மெலிஞ்சு போனாய்.. ஒழுங்கா சாப்பிடுறேலையோ..” “அங்கத்தையான் சாப்பாடு எனக்கு பிடிக்கேல்லை நீலும்மா..” “சரி விட்டுத் தள்ளு.. இங்க

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53

குறிஞ்சி மலர்.. 53 ஜேம்ஸ் சொன்னதை எல்லோரும் திகைப்போடு பார்க்க, அதே திகைப்போடு தான் கோதையும் அவனைப் பார்த்திருந்தாள். தில்லையம்பலம் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவனிடம் கேள்விகளை வீசினார். “ஏன் ஏன் அப்புடி செய்தனியள்..” “ஏன்னா.. நான் தான் என்னோட பேபியை விரும்பீட்டனே.. அப்போ அவளைக் கல்யாணம் செய்றது தானே முறை..” “பேபியா..” “யெஸ்.. என்னோட பேபி..” என்று கொண்டு கோதையை மெல்ல தோளோடு அணைத்துக் கொள்ள, ரூபாவும் தில்லையம்பலமும் விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52

குறிஞ்சி மலர்.. 52 கோதையும் ஜேம்ஸும் ஜீவோதயம் வந்து இறங்க, அடுத்த பிரச்சினையும் கூடவே வந்து இறங்கியிருந்தது. இருவரும் வருவதற்கு முன்னரே ரூபவர்ஷி அங்கே வந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அவளது வருகையை வியாகேசும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஜேம்ஸ் மற்றும் கோதையின் திடீர் வருகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ரூபவர்ஷியை ஆள் வைத்து தூக்காது போனாலும், ஜேம்ஸ் கோதையின் கழுத்தில் தான் தாலி கட்டியிருப்பான். ஆனாலும் கோதை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் கழுத்தை நீட்ட

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 51

குறிஞ்சி மலர்.. 51 தன்னை பரிசோதனை செய்த, அந்த பெண் வைத்தியர் சொன்ன பதிலில், கோதை சந்தோசம் தாங்க முடியாமல் திக்கு முக்காடி போனாள். வைத்தியசாலைக்கு வந்த இடத்தில், கர்ப்பிணி பெண்களை பார்த்ததும் தனக்கு உண்டான உடல் உபாதைகளுக்கு காரணம், தானும் உண்டாகி இருக்கிறேனோ என்ற எண்ணம் கோதைக்கு வந்ததால் தான், அவள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாள். அவள் நினைத்தது போலவே அவள் தன் கணவன் மீது கொண்ட நேசத்திற்கான அடையாளம், அவள் நேசம் கொண்ட

அசுரனின் குறிஞ்சி மலரே.. 51 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 50

குறிஞ்சி மலர்.. 50 தன் வாகனத்தை மறித்தவர்களை நோக்கி முன்னேறிய ஜேம்ஸுக்கு வழமை போல கோபம் ஏறி, நிதானம் காற்றில் பறந்து போய் விட, ஒற்றையாளாக அத்தனை பேரையும் புரட்டிப் போட்டான். காரின் உள்ளே இருந்தபடி நடந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த கோதைக்கு, பயத்தோடு ஆச்சரியமும் சேர அவளது முட்டைக் கண்கள் விரிந்தன. தன் கணவன் இத்தனை பலசாலியா என்று நினைத்து பெருமை கொள்வதா, அல்லது இப்படிப் போட்டுப் புரட்டி எடுத்தால் பொலிஸ் வந்து பிடித்துக் கொண்டு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 50 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 49

குறிஞ்சி மலர்.. 49 கண்களை மூடிப் படுத்திருந்த கோதைக்கு, கணவனின் ஸ்பரிசத்தில் தூக்கம் கலையவே, திறப்பேனா எனச் சண்டித்தனம் செய்த விழிகளை சிரமப் பட்டுத் திறந்து பார்த்தாள். எதிரே அமர்ந்திருந்த கணவனைப் பார்த்ததும், அதுவரை லேசாகப் பின்னுக்குப் போயிருந்த பயம் வேகமாக எட்டிப் பார்க்கவே, உடல் நடுங்க பதறியடித்து எழுந்து சுவரோடு ஒட்டிக் கொண்டாள் கோதை. “என்னாச்சு பேபீ.. பயந்திட்டியா நான் தான்டி..” என்றபடி அவன் அவளை நெருங்க, கண்களை இறுக மூடிக் கொண்டு மீண்டும் சுவரோடு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 49 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 48

குறிஞ்சி மலர்.. 48 கோதை அசதியோடு படுத்திருந்த அந்த நேரம் பார்த்து வியாகேசின் அழைப்பு வந்தது. திரையில் தெரிந்த அவரின் சிரித்த முகத்தை பார்த்ததும் கொஞ்சம் உற்சாகம் வரவே, வேகமாக அவரது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் கோதை. ஆனாலும் மனதோடு லேசான பாரம் இருந்தது. “என்ன பிள்ளை.. என்ன செய்றாய்.. என்ன சாப்பிட்டனீ.. ரெண்டு மூண்டு தரம் ஃபோன் எடுத்தன்.. நீ திரும்பி எடுக்கவே இல்லையே..” “……………” “பீட்டர் எங்க பிள்ளை.. ரெண்டு பேரும் ஊரெல்லாம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 48 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 47

குறிஞ்சி மலர்.. 47 ஜேம்ஸும் கோதையும் அவுஸ்திரேலியா வந்து, இரண்டு மாதங்கள் ஓடி விட்டிருந்தன. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாகவே மாறி விட்டிருந்தார்கள். ஆனாலும் கோதைக்கு இன்றுவரை தன் கணவன் அண்டகிரவுண்டில் போதைப் பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் மன்னன் என்பது தெரியவே தெரியாது. அது தெரிய வரும் போது அவள் என்ன செய்வாள் என்ற பயம் வியாகேசுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் இது பற்றி அவர் அவளிடம் மூச்சு கூட விடவில்லை. ஜேம்ஸ் போன்ற ஒரு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 47 Read More »

விடாமல் துரத்துராளே 24

பாகம் 24 ‘அச்சோ டைமாச்சு’ என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி… “அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய்” என்று கூறவும். “ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு”என்று தாய் கௌரியும்,  “நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் 

விடாமல் துரத்துராளே 24 Read More »

error: Content is protected !!