May 2025

மயக்கியே என் அரசியே… டீஸர்

மயக்கியே என் அரசியே… டீஸர்   (  “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”) “உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி. “நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு” “நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா […]

மயக்கியே என் அரசியே… டீஸர் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 30

குறிஞ்சி மலர்.. 30 ஜேம்ஸ் பீட்டர் தன்னிடம் கொடுத்து விட்டுப் போன, அந்தப் பெரிய பெட்டியைக் கையில் திறந்து வைத்திருந்தபடி வியாகேசு விழித்துக் கொண்டு நிற்க, அவருக்கு பின்னால் “பெரிசு.. பெரிசூஊஊ..” என ஏலம் போட்டபடி வந்து நின்றான் வஞ்சிமாறன். “என்ன பெரிசு நிண்டபடியே நித்திரையோ.. உதென்ன கையில ஏதும் புதையல் கிடைச்சிதோ..” என்று கொண்டு அவரின் கையில் இருந்த பெட்டியை எட்டிப் பார்த்தவன் “வாவ்..” என வாயைப் பிளந்தான். “பூச்சியேதும் உள்ள போவப் போகுது வாயை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 30 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 29

குறிஞ்சி மலர்.. 29 சுற்றி நின்ற மரங்களினை ஊடறுத்து வந்த காற்று கோதையின் முகத்தில் வேகமாக வீச, அவள் நெற்றியோரம் வந்து விழுந்த முடி அவள் கண்களை மறைத்தது. அவளையே பார்த்திருந்தவன் அவளது கண்களில் விழுந்த முடியை ஒதுக்கி காதோரம் விட்டான். இப்போது கோதை சாதாரண நிலைக்கு வந்திருந்தாள். நாய்கள் மூன்றும் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்த தைரியம் தான் அது. தன் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவனின் கையைப் பிடித்துக் கொண்ட கோதை “இப்புடி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 29 Read More »

யாருக்கு இங்கு யாரோ? (Teaser)

கதையின் முன் சுருக்கம்: பல வருட காதல் கை கூடும் என்ற கனவோடு, தன் மனம் கவர்ந்தவளை கை பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக மணமேடையில் முகம் முழுக்க புன்னகையோடு அமர்ந்திருந்தான் மித்ரன்… அந்நேரம் தேவலோக பெண்ணாக குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் தேவ் மித்ரனின் அருகில் வந்து அமர்ந்தாள் நம் கதையின் நாயகி ஆதினி என்னும் ஆதிலட்சுமி.. பெரிய வீட்டு திருமணம் என்பதால் மொத்த ஊரும் அங்கு கூடி இருக்க, அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல்

யாருக்கு இங்கு யாரோ? (Teaser) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 28

குறிஞ்சி மலர்.. 28 நீலரூபி அமைதியாக அமர்ந்திருக்க, அவரின் முன்னால் நின்றிருந்த அவரின் கணவரும் மகளும் சற்றே கடுப்போடு ஜேம்ஸை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “அப்பா.. எனக்கு இந்த கலியாணத்துல கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. சொன்னா கேக்கிறியளா நீங்கள்..” “என்ன பிள்ளை நீ.. எல்லாம் உன்ரை நல்லதுக்கு தான்.. அதோட அவனை கலியாணம் கட்டி சொத்து எல்லாத்தையும் உன்ரை பேருக்கு எழுதி வாங்கும் வரை தானே இந்த நாடகம் எல்லாம்..” “அதுக்கு எதுக்குப்பா கலியாணம்.. கொஞ்ச நாளைக்கு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 28 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 27

குறிஞ்சி மலர்.. 27 மாலை நேரத்தில் மலர்ந்த பெயர் தெரியாத மலர்களின் சுகந்தம் நாசி தீண்டிச் செல்ல, மாலை நேரக் காற்றின் குளுமை தேகம் வருடிச் செல்ல, பெண்ணவளின் ஸ்பரிசத்தில் உற்சாகமான ஜேம்ஸ் மெல்ல ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான். ஜேம்ஸ்ஸின் பின்னால் அவனைக் கட்டிக் கொண்டு, மறைந்தார் போல நின்றிருந்தவளுக்கோ அதன் பிறகு சுற்றுப்புறம் எதுவுமே கருத்தில் படவில்லை. மாறாக நாய்களின் தோற்றமும் அவற்றின் உறுமலும் தான் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தன. அவளை மேலும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 27 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 26

குறிஞ்சி மலர்.. 26 இரண்டு மூன்று தினங்களாக கோதையால் அவளது அறையை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் அன்று கண்ட பயங்கரக் கனவே மீண்டும் மீண்டும் வந்து அவளைப் பயமுறுத்தித் தள்ளியது. அந்தக் கனவின் வீரியத்தால் அவள் அறையிலேயே முடங்க, வியாகேசும் வஞ்சியும் ஆள் மாற்றி ஆள் அவளுக்கு துணைக்கு இருந்தார்கள். இப்படியே அவளது நாட்கள் படு மோசமாகப் போக, வெளியே அவளது அறையையே பார்த்த வண்ணம் தினமும் மூன்று முறையாவது நடை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 26 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 25

குறிஞ்சி மலர்.. 25 தலைக்கு குளித்து விட்டு, தோள் வரை கிடந்த தன் முடியை உலர்த்தியபடி வந்த கோதைக்கு, கட்டிலில் கிடந்த புடவைகளைப் பார்த்ததும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. எத்தனை அடாவடித்தனம் செய்து இந்தப் புடவைகளை வாங்க வைத்தான் அந்த அசுரன் என நினைத்தவளுக்கு, அவனிடம் அந்தக் கோபத்தைக் காட்டத் தான் முடியவில்லை. வழமை போல வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டவள், அன்று ஜேம்ஸின் முன்னால் போகக் கூடாது என முடிவெடுத்துக்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 25 Read More »

அசுரனின் இதய ராணி – டீசர்

DISCLAIMER ⚠️ வணக்கம் அன்பர்களே இது எனது முதல் கதை அதுவும் இதுவரை நான் ஒரு வாசிப்பாளராக மட்டுமே இருந்த என்னை கதை எழுத தூண்டியது எனது உடன்பிறவா உடன்பிறப்புகள் தாங்கள் தான் எனக்கு ஊக்கமே.உங்களுடைய ஊக்கம் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது ஆகையால் எனது கதையை படித்து உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி இப்படிக்கு பெயரை கூற முடியாது என்ற நிபந்தனையுடன் இருக்கும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🫂🫂🫂🫂😍😍😍😍😍  

அசுரனின் இதய ராணி – டீசர் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 24

குறிஞ்சி மலர்.. 24 பொதுவாக பயணம் போகும் போது, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கும் கோதையால் அன்று அப்போது அப்படி வேடிக்கை பார்க்க முடியவில்லை. காரணம் காரின் இரு மருங்கும் பசுமையான மரங்கள் செடிகள் புதர்கள் இருந்த போதும், அசுரனின் கரத்தில் கார் அத்தனை வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. சாதாரண வேகத்தை விடச் சற்று வேகமாக வாகனம் பிரயாணித்தாலே பயத்தில் கண்களை மூடி குலதெய்வத்தை தொல்லை செய்யும் கோதைக்கு, இந்த

அசுரனின் குறிஞ்சி மலரே.. 24 Read More »

error: Content is protected !!