July 2025
விழிகளில் நீருடன் அம்பாய் பாய்ந்து சென்றவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இன்னுழவனைக் கடந்து அவனுக்குப் பின் நின்று கொண்டிருந்தவனின் மார்புக்குள் தஞ்சமடைந்து இருந்தாள்.
இன்னுழவன் திரும்பிப் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்தான் நிவர்த்தனன்.
ஆம், மேக விருஷ்டி ஓடிச் சென்று தஞ்சம் அடைந்தது அவளவனிடம் இல்லை. அவள் உடன் பிறந்தவனிடம்.
இப்பொழுது வரை தன் முன் நிற்பவன் தான் தன் மனதிற்கு பாத்தியப்பட்டவன் என அவள் அறியா நிதர்சனம்.
“நிவர்த்தனா…” என அவனை கட்டி அணைத்து அவன் மார்புக்குள் புதைந்து அழுதாள் மேக விருஷ்டி.
தன் சகோதரியை இந்நிலையில் கண்டதும் முற்றிலும் கலங்கி அவளை மேலும் தன்னோடு ஆதுரமாய் அணைத்தவனோ, “அக்கா… என்னாச்சுகா…? ஏன் இப்படி அழுகிற…? காம் டவுன் சிசி…” என்றான் அவள் முதுகு வருடி.
சற்று நேரத்தில் தமையனின் அணைப்பில் அவளது அழுகை கேவலமாக மாறியது.
நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
சோமசுந்தரம் நிவர்த்தனனை ஆற்றாமை உடன் பார்க்க.. மைதிலி குற்ற உணர்வுடன் பார்த்தார்.
நிவர்த்தனன் கை வளைவுக்குள் மேக விருஷ்டி நிற்க…
“ஓ இவன உன் பொண்ணு இழுத்துகிட்டு போக நினைச்சு தான் அவன் தாலி கட்டாம போயிட்டானா…” நடந்தது தெரிந்தும் மாற்றி திரித்து பேசியவாரு
“உன்ன மாதிரி தான் உன் பொண்ணு இருக்கா சுத்த கேடு கெட்ட குடும்பம்” என தங்கமணி நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அக்கா தம்பி என அறியாது வார்த்தையை விட்டார் விஷமமாய்.
அதைக் கேட்டவுடன் கழுத்து நரம்பு புடைக்க “அத்…” என இன்னுழவன் வெடிப்பதற்குள் மேக விருஷ்டியின் கரத்தை அழுத்தி பிடித்து அவர் முன் ஒற்றை விரல் நீட்டி முகமது செஞ்சாந்தாய் சிவக்க “ஏய்… என் அக்காவ பத்தி ஒரு வார்த்தை பேசின… யார் என்ன எல்லாம் பாக்க மாட்டேன் புதைச்சி போட்டு போய்கிட்டே இருப்பேன்” என வெடித்து சிதறி இருந்தான் நிவர்த்தனன்.
தன் முன் நின்ற இனிதுழனியை விலக்கி பார்த்தார் அம்பிகாமா.
“ஓ… செகண்ட் ஹீரோ என்ட்ரி ஆ… பரவால்ல என் பேராண்டி அளவுக்கு இல்லாட்டாலும் இவனும் ஹாண்ட்சம்மு பாயா தான் இருக்கான், நடத்தட்டும் நடத்தட்டும்” என மீண்டும் போனில் பார்வையை பதித்தார்.
எப்பொழுதும் இன்னுழவனின் சீற்றத்திற்கு மட்டுமே அமைதியாகும் தங்கமணி இன்று நிவர்த்தனனின் சீற்றத்தில் விழிகள் நிலை குத்த அதிர்ந்து தான் போனார்.
“ஏய் யாருடா நீ… எங்க வந்து யார மிரட்டுற என சக்திவேல்” வரிந்து கட்டிக் கொண்டு வர…
அவரை பார்த்து திரும்பியவன் “யோவ்… வாய மூடுயா என்ன எகிறிக்கிட்டு வர… வயசானவர்னு பார்க்க மாட்டேன் அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்” என வெகுண்டு எழுந்தான் உயிருக்கு உயிரான சகோதரியின் கண்களில் விழி நீரை கண்டவுடன் தன்னிலை இல்லாது.
“டேய் நிவர்த்தனா… அது என் மச்சான்…” என அவன் அருகில் சோமசுந்தரம் வர…
தடை இறுக்கியவன் “யாரா இருந்தா எனக்கு என்னப்பா. என் அக்கா கண்ணுல கண்ணீர் வர வச்ச யாரா இருந்தாலும் எனக்கு முக்கியமே கிடையாது. அது மட்டும் இல்லாம இவர் மேல கொலை வெறில இருக்கேன்” என்றவன் தனலாய் கொதித்தான்.
“அப்பிடி சொல்லுடா நிவர்த்தனா… எவ்ளோ பேசினாங்க தெரியுமா…” என அவன் அருகில் வந்து நின்றார் மைதிலி.
இதற்கிடையில் இவை அனைத்தையும் கைகளை கட்டிக்கொண்டு சற்று நேரம் மௌனத்தை பாவித்து நின்றான் இன்னுழவன்.
அப்பொழுது அவனுக்கு அலைபேசி வாயிலாக சொல்லப்பட்ட செய்தியில் கல்யாணம் எப்படி நின்று இருக்கிறது என்று அறிந்து கொண்டான்.
ஆம், கல்யாணத்திற்காக கோவிலில் அனைவரும் கூடி இருந்தனர்.
மைதிலி சோமசுந்தரம் மேக விருஷ்டி கோவிலில் தயார் நிலையில் இருக்க, முதலில் ஷாமும் அவரது அம்மாவுமே அவர்களுடன் ஒரு சில உறவினர்களும் கோவிலை வந்தடைந்தனர்.
ஷாமின் அப்பாவும் அவர்களது மற்ற சொந்தமும் அடுத்த காரில் வருவதாக கூறியிருந்தனர்.
ஒரு மணி நேரம் கடந்தும் முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் ஆனபோதும் ஷாமின் அப்பாவும் அவர்களது உறவினர்களும் கோவிலில் வந்தடையாமையால் ஐயரோ அவர்கள் வரும் முன் மாலையை மட்டும் மாற்றிக் கொள்ளட்டும் என்று உரைத்தார்.
மேக விருஷ்டி ஷாமும் ஒருவருக்கொருவர் எதிராய் நின்று கையில் மாலையோடு நிற்க, முதலில் மாலையை அணிவிக்க போன ஷாமை பெரும் குரல் அதிரவோடு நிறுத்தி இருந்தார் அவர் அம்மா.
கையில் வைத்திருந்த மாலையை பொத்தென்று கீழே போட்டு அவன் அம்மாவை பார்க்க, “அப்பாக்கு வர வழியில ஆக்சிடெண்ட் ஆயிருச்சு ஷாம். அவர் உயிருக்கு போராடிட்டு இருக்காராண்டா” என கதறினார்.
சோமசுந்தரம் மைதிலியும் அதிர்ந்து நிற்க, ஷாமின் உறவினர்களோ மேக விருஷ்டியை வைத்து இஷ்டத்துக்கு கதை கட்ட ஆரம்பித்தனர்.
இவ வருகைக்கு முன்பு மாமியார் தாலியை பறிக்க பாக்குறா… அபசகுணம், சரியான ராசி இல்லாதவள் அப்படி இப்படி என்று சரமாரியாக வார்த்தைகளால் வதைத்தனர் மேக விருஷ்டியை.
அதை அனைத்தையும் பதட்டத்தில் இருந்த ஷாமின் அம்மாவின் மனதில் கற்பூரமாய் பற்றிக்கொள்ள கல்யாணத்தை உடனடியாக நிறுத்தினார்.
மேலும் அதிர்ந்து மைதிலி அவரின் கரம் பற்றி மகள் வாழ்க்கை குறித்து கேட்க, “உன் பொண்ணு வாழ்க்கை வாழனும் என்பதற்காக ஏன் புருஷன நான் பறி கொடுக்க முடியாது.
என் மகன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டான்.
இந்த ராசியில்லாதவள வச்சு நான் என்ன பண்ண முடியும்.
என் குலம் தழைக்கணும், இந்த ராசி இல்லாதவ வந்தா என் குலம் அடியோட அழிஞ்சுரும் டேய் வாடா..” என ஷாமை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.
இப்பொழுது தன் அருகில் நின்ற மைதிலியை அனைவரையும் விடுத்து தீயாக முறைத்தான் நிவர்த்தனன். இவை அனைத்திற்கும் முழுமுதற் காரணமே அவர்தானே.
“முதல்ல நீங்க பேசாதீங்க மாம்… இன்னிக்கு என் அக்கா வாழ்க்கை இப்படி எல்லாரும் பேசும் பொருளா மாறுனதுக்கு முழு காரணமே நீங்கதான்” என்றான் குரலில் ஏக்கத்துக்கு கடுமை விரவயிருக்க.
“நிவர்த்து…” மேக விருஷ்டி தடுக்க போக அவளை ஒரே பார்வை தான் பார்த்தான்.
தமையன் பார்வையில் இதழ்களை பசை போட்டு ஒட்டிக்கொண்டாள் மேக விருஷ்டி அவனுடன் நின்று.
கோபத்தோடு நின்றாலும் இதை அனைத்தையும் ரசித்துக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தான் இன்னுழவன்.
மேலும் நிவர்த்தனன் பேசுவது சரியாக இருப்பதால் மௌனம் காத்தான் சபையின் நடுவே.
நிவர்த்தனனோ விழிகள் குற்றம் சாட்ட மைதிலியை பார்த்தவனாய் “போதுமா மாம்… உங்களோட அவசரம், பயம், பிடிவாதம் இன்னைக்கு என் அக்காவை எந்த இடத்துல கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கு.
படிச்சு படிச்சு சொன்னேன் இந்த ஷாம்பு பாட்டில் வேண்டாம் வேண்டான்னுட்டு. நீங்கதான் என் அக்காவை எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க.
சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் சொல்றேன், நீங்க காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு உங்களுக்கு மகளா பொறந்து அவ இப்ப வர படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கா.
நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை ஏன் என்னன்னு கூட கேட்காம போய் இருக்கான். இது தான் அவன் லக்ஷணம்.
நல்லவேளை கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஆச்சு, கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் வந்திருந்தா என் அக்கா நிலைமை.
இப்ப சொல்றேன் இனிமேல் என் அக்கா வாழ்க்கைல முடிவ அவ தான் எடுப்பா. அதைத் தடுக்க உங்களுக்கோ அப்பாக்கோ எந்த உரிமையும் கிடையாது. மீறி தடுத்தீங்கனா நான் மனுஷா இருக்க மாட்டேன்.” என்றான் தீர்க்கமாக.
“நிவர்த்தனா… என்ன பேசுற நீ… அது நம்ம அம்மா…” என மேக விருஷ்டி குறுகிட
“நீ பேசாம இரு சிசி…” என அவளை அடக்கியவன்,
“போதும் உங்க ஆசைப்படி உங்க கட்டளைப்படி உங்களுக்கு அடங்கி அவ இவ்ளோ நாள் வாழ்ந்திட்டா. இதுக்கு அப்புறமா தான் அவளுக்காக அவளே முடிவெடுத்து வாழட்டும் ப்ளீஸ் நீங்க ஒதுங்கி நில்லுங்க” என தன் முழு ஆதங்கம் அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டான் மைதிலி என் மேல் நிவர்த்தனன் சரமாரியாக.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்து பேசிக் கொண்டிருக்க, “போதும் நிறுத்துங்க… ” என அனைவரையும் பார்த்து அடுத்ததாக கத்திய நிவர்த்தனன்,
“அதான் கல்யாணம் நின்னு போச்சு இல்ல.. இன்னும் உங்களுக்கு இங்க என்ன வேலை. தயவு பண்ணி எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க ப்ளீஸ். அக்கா வாக்கா நம்ம போலாம்” என மேக விருஷ்டியை இழுத்துக் கொண்டு சென்றான் நிவர்த்தனன்.
அவர்களோடு சோமசுந்தரம் மைதிலியும் சென்றனர் தலை குனிந்து.
செல்லும் அவர்களை பார்த்து சக்திவேலும் வெற்றிப் புன்னகை சிந்திக் கொண்டார் உள்ளுக்குள்.
சற்று நேரத்தில் மகன் அதற்கு தக்க சன்மானம் கொடுக்க இருப்பதை அறியாது.
அவ்வளவு நேரம் மௌனத்தை கடைபிடித்து நின்ற இன்னுழவன் அதை விடுத்து தன்னை கடந்து செல்லும் அவனின் தேவதையின் கரத்தை பற்றி இருந்தான் அழுத்தத்திலும் அழுத்தமாக.
தன்னோடு இழுபட்டு வந்தவள் தடை பட்டு நிற்க… நிவர்த்தனன், மேக விருஷ்டி இருவரும் ஒரு சேர ஏறெடுத்து பார்த்தனர் தடுத்து நிற்கும் இன்னுழவனை.
இன்னுழவனோ மேக விருஷ்டியை அழுத்த விழிகளுடன் மையலிட்டவன், “இந்தக் கல்யாணம் இப்ப இங்க நடக்கும்” என்றான் மிகவும் தீர்க்கமாக.
அதைக் கேட்டு மேக விருஷ்டி கரு விழிகள் அதிர்ந்து விரிய.. “ஹலோ நீங்க யாரு சார்? என் அக்கா கல்யாண நடக்கும்னு சொல்றதுக்கு முதல்ல அவ கைய விடுங்க” என மற்றொரு கரத்தால் இன்னுழவன் கரம் பற்றியிருந்தான் நிவர்த்தனன்.
“நான் யாருன்னு தெரியனுமா…?இன்னுழவன்.” என கணீர் குரலில் கூறியிருந்தான் பார்வை தன்னவள் மீது இருந்தாலும் பதில் அவளின் தமையனுக்கு செல்லும் வகையில் அழுத்த விழிகளுடன்.
அதைக் கேட்டவுடன் சித்தமும் அதிர தானாக மேக விருஷ்டி மற்றும் இன்னுழவனை பிடித்திருந்த தன் இரு கரங்களையும் விடுவித்திருந்தான் நிவர்த்தனன்.
மேக விருஷ்டியோ தான் காண்பது கனவா நினைவா என்ற நிலையில் பனியாய் உறைந்து நின்றாள்.
இவ்வளவு நாள் முகம் பார்க்காது செவி வழி கேட்டு கற்பனையாய் கண்டவன் இன்று விழி வழியாய் அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்ட விழி முழுவதும் அவனை நிறைத்து விழிகள் அகலாது நின்றாள்.
நிவர்த்தனனை பார்த்து இன்னுழவன் மென்னகை உதிர்க்க…
“இன்னு… எப்பிடி கல்யாணம் அதான் மாப்புள…” என தளர்வுடன் அவன் அருகில் வந்தார் சோமசுந்தரம்.
சக்திவேல் நடப்பவற்றை பார்த்து ஏதும் புரியாது நிற்க, “உங்க பொண்ணோட காதலன், உங்களோட மருமகன் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் மாமா” என்றான் பதிலை சோமசுந்தரத்திற்கு கொடுத்து பார்வையை சக்திவேல் மீது பதித்து இம்முறை.
அவ்வளவு நேரம் கலக்கத்தில் கலங்கியிருந்த சோமசுந்தரத்தின் விழிகள் இன்பத்தில் கலங்கின.
“இன்னு… மருமகனே…” என அவன் கரம் சோமசுந்தரம் பற்ற.. “இன்னுழவா… என்ன சொல்ற நீ…” என கத்தியிருந்தார் சக்திவேல்.
அனைத்தையும் கேட்டு நிவர்த்தனனோ, “அப்போ இவர் தான் அப்பாவோட அக்கா பையனா…! இந்த ஊர் தலைவர், சக்திவேல் பையன், அப்பா உருகி உருகி புகழ்ந்தது எல்லாம் இவர் தானா…! ஓ அதானல தான் கல்யாணம் நடக்கலனாலும் நான் மாமா தான் சொன்னாரா… யோவ் கேடி மாமா…” என அதிர்ச்சியுடனும் அகம் மகிழ்ந்தும் நின்றான் எனில்… மேக விருஷ்டி சொல்லவே வேணாடாம்.
ஏற்கனவே அவன் வரவில் ஆடிப் போய் இருந்தவள் இப்பொழுது அவன் பற்றி முழுதும் கூறியவுடன் நினைவுகள் எங்கேங்கோ செல்ல அதிர்ச்சியின் சிகரம் தொட்டு நின்றாள் சிலையாய்.
இன்னுழவனோ சக்திவேலை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவன், தன்னையே பார்த்து மதியிழந்து நின்று கொண்டிருந்தவள் கரங்களை மேலும் அழுத்தி பிடித்தவனாய்
உடல் வளைத்து மற்றவர்கள் கேட்கா வண்ணம் “பார்வையாலே என்ன சாப்பிட்டது போதும் டி… இப்பிடி பார்த்து வைக்காத உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ணுது…” என மணமேடை ஏறினான் மணமாலை சூட மனம் கவர்ந்தவளுடன்.
மேடை ஏறியவன் தன் அருகில் முகமது செவ்வரளியாய் சிவந்து நின்று கொண்டிருந்தவளை தோள் பிடித்து அமர வைத்து அனைவரையும் நேர்க்கொண்டு நிமிர்ந்த பார்வையுடன் பார்த்தவன்,
“உங்க எல்லார் சாட்சியா இன்னைக்கு எனக்கும் என் மாமா பொண்ணுக்கும் கல்யாணம்.” என்றான் சபை நிமித்தம் வணக்கம் வைத்து.
அவன் கூற மைதிலி ஏதோ பேச வர சோமசுந்தரம் மற்றும் நிவர்த்தனன் பார்த்த பார்வையில் நாவடக்கி கொண்டார்.
“எங்கள சந்தோஷமா வாழ்த்துறவங்க இங்க இருக்கலாம். மத்தவங்க வந்த வழிய பார்த்து கிளம்பலாம். ஐயர் நீங்க மந்திரத்த சொல்லுங்க” என அமர்ந்தான் அவனின் தேவதை அருகில் மணமகனாய் இன்னுழவன்.
கோதாவரியோ தான் நினைத்தது போல் நடக்க விருப்பதை கண்டு உள்ள நெகிழ்வுடன் நின்றார்.
“மா… இன்னும் எவ்வளவு நேரம் ஒதுங்கி நிக்க போறீங்க, இது உங்க மகன் கல்யாணம் முன்னாடி வர போறீங்களா எப்பிடி. இதுக்கு தான ஆசைப்பட்டிங்க” என்றான் இன்னுழவன் மாலையை மங்கையவளுக்கு சூட்டி.
விழி நீரை வேகமாக துடைத்தவர் “இதோ… இதோ… வந்துட்டேன் இன்னு…” என அவன் அருகில் வந்து நின்றார்.
“அப்பத்தா…” இன்னுழவன் குரல் கொடுக்க,
“ஐம் ஆளு ரெடி யூவரு பேக்கு பேராண்டி” என நின்றார் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அம்பிகாமா.
“எங்க எல்லார் மனசுக்கும் பிடிச்ச, ஊர் தலைவர் எல்லாத்துக்கும் மேல எங்க குடும்பத்துல ஒருத்தரான எங்க இன்னுழவன் கல்யாணத்துல நாங்க இல்லாமையா” என ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்தனர் கல்யாணத்தை காணும் பொருட்டு.
இப்பொழுது ஊர் பெரியவர்கள் முதல் சொந்தகள் வரை மன மகிழ்ச்சியுடன் குடியிருக்க, ஐயர் தாலி இருக்கும் தாம்பூலதட்டை அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வர கோரி நீட்டியிருந்தார்.
நந்தனா அதை கையில் வாங்கிக் கொள்ள, அவளை முகம் இறுக பார்த்தார் தங்கமணி.
நிவர்த்தனன் பேச ஆரம்பிக்கும் பொழுதே அவர்களும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“கொஞ்சம் இரு நந்தனா…” என அவளை தடுத்து நிறுத்திய இன்னுழவன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து தாம்பூலத்தில் ஏற்கனவே இருக்கும் தாலியை அகற்றி தான் கொண்டு வந்ததை வைத்தான்.
“இப்ப போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வா… ” என்றான் குருநகையுடன்.
“மாமா எல்லாத்துக்கும் ப்ரிப்பேர்டா தான் வந்திருப்பீங்க போல…” நந்தனா நகைக்க, மேக விருஷ்டி அவனை தான் பார்த்தாள்.
“முகூர்த்த நேரம் முடிய போகுது சீக்கிரமா ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என ஐயர் உரைக்க, அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்தாள் நந்தனா.
ஐயர் தாலியை கொடுக்க, “அப்பத்தா…” என்றான் இன்னுழவன்.
“நான் எதுக்கு பேராண்டி…” என அம்பிகாமா சற்று தயங்க…
“நீ தந்தா தான் நம்ம குலம் விருத்தி அடையும். நாங்களும் எந்த குறையும் இல்லாம சந்தோசமா செழுமையா இருப்போம்” என்றான் உரக்க.
அதன் பின் மறுபேச்சு ஏது! அம்பிகாமா தாலி எடுத்து கொடுக்க… தாலியை தன் கையில் வாங்கியவன் இப்பொழுதே அவனின் மழை தேவதையை பார்த்தான்.
அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் காதல் உருக.
“என்னபா… என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா…” புருவம் தூக்கியவன் கேட்க,
“சம்மதமான்னு இப்பிடி தான் கேட்பியா டா… நீ…” என விழிகளால் அவள் தாலியை காண்பிக்க…
அவனோ இதழ் விரித்து சிரித்தவன், “அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் நீ என்னுடையவ தான் டி…” என அனைவரும் அட்ச்சதை துவ மங்கையவள் விழிகளில் ஈரம் சுரக்க..
அவள் விழி பார்த்து அவன் பார்த்து பார்த்து செய்ய சொல்லிய தாலி வடிவில் மழை துளிக்களுக்கு நடுவில் இன்னுழவன் என்னும் அவன் நாமம் பொறிக்கபட்டிருந்த பொண் தாலியை அனைவரும் சூழல அவளுக்கு அணுவித்திருந்தான் இன்னுழவன்.
தன் தோள் சாய்த்து அவளுக்கு குங்குமம் வைத்தவன் யாரும் காணா அவள் செவியில் இதழ் தீண்ட… அதில் மேனி குறுகுறுத்து சிலிர்த்தவள் அவன் விழி பார்க்க, “என்னபா… ஹாப்பியா…” என்றவனிடம் இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள்.
அவனோ புருவம் வளைக்க, “முத்தா வேணும்” என்றாள் கன்னம் தொடும் விழி நீருடன்.
அதை கண்டு தாராளமாக இதழ் பிரிய சிரித்தவன் தன்னோடு அணைத்து அவள் பட்டு நெற்றி வகிட்டில் அனைவர் முன்னிலையில் அழுத்த இதழ் பதித்தவன், பெருவிரல் கொண்டு விழிநீர் துடைத்து “அங்க மட்டும் போதுமா டி…” என அவளை சிவக்க வைக்க..
“உழவா…” என்றவள் வெட்கத்தில் சிணுங்கி அவன் மார்பில் சாய…
“நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் நீ கேட்கவே வேண்டாம் டி… நானே அள்ளி அள்ளி தரேன். அங்க மட்டும் இல்ல… எல்லா…” என வசிகர புன்னகையை அவள் மீது தெளித்து கள்வனாய் பேசி மேலும் அவளை நாணத்தில் சிவக்க வைத்தான்.
சோமசுந்தரம், நிவர்த்தனன், கோத்தாவரி, அம்பிகாமா உட்பட அனைவரும் அவர்களை கண்கள் நிறைவாய் பார்த்து சந்தோஷத்தில் நெகிழ்ந்து நிற்க…
இவ்வளவு நாள் தன் காதலியானவளை முழுதும் தன்னில் ஒரு பாதியாக்கி இருந்தான் இன்னுழவன் அக்னீ சாட்சியாய்.
செங்கோதை மணம் வீசும்…
உங்க எல்லாரும் ஆசைப்படி உங்க இன்னு மேகா கல்யாணத்த நல்ல படியா முடிச்சி வச்சிட்டேன் ஃப்ரெண்ட்ஸ் 🙂.
So நீங்க எனக்கு heart ❤️❤️❤️ rating ⭐⭐⭐ போட்டு தள்ளுங்க🙂
நாளைக்கு first night சீனோட வரேன் 🫣🫣🫣🫣.
தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 42
பார்க்கிலிருந்து தர்ஷினி வா ஸ்ருதி போவோம், என அவளின் கை பிடித்து அழைத்து சென்றவள், ஆட்டோவில் அவளை ஏற்றி, அவளும் ஏறி கொண்டு தேவாவின் வீட்டிற்கு வழியை சொல்லிவிட்டு அமர்ந்திருக்க…
ஸ்ருதிக்கு ஏண்டா உண்மையை கூறினோம்… சரியான ஆர்வக்கோளாறாக இருக்கிறாளே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை…
அப்போது ஸ்ருதிக்கு போன் வரவே,, யாரென எடுத்து பார்க்க ஜெய் தான் அழைத்திருந்தான்… இந்த மண்ணாங்கட்டி வேற சலித்து கொண்டவள், ஹலோ சொல்லுங்க என்றாள்….
ஏய் அமுலு எங்க டி இருக்க? நா வரதுக்குள்ள போய்ட்ட..! டியூட்டர் கூப்டாருன்னு சொல்லி வெயிட் தான பண்ண சொன்னேன்… நீ பாட்டுக்க போய்ட்ட.. வர வர என் மேல உனக்கு லவ் இல்லல… நா அழுத்து போய்ட்டேனா?
மண்ணாங்கட்டி தலையில் அடித்து பல்லை கடித்தாள் ஸ்ருதி…
என்னடி? யாரை சொல்ற…
உன்னையும், என் பக்கத்துல உள்ளதையும் சேர்த்து தான் சொல்றேன்…
என்னது உன் பக்கத்துல வேற ஒருத்தனா? என்ன ஏமாத்திட்டில? அவ்ளோ தானா நான்? எனக்கு அப்போவே தெரியும் டி, அதுனால தான் உன்ன லவ் பண்ண அவ்ளோ யோசிச்சேன் பயத்தில் புலம்பவே ஆரம்பிக்க….
கடவுளே என பல்லை கடித்தவள். நேர்ல வந்து மிதிச்சேன் குறுத்தெலும்பு உடைஞ்சிரும்… தெண்டம் உன் பிரெண்ட் அதான் அந்த ஆர்வகோளாறு, பைத்தியம் அது கூட தான் போயிட்டு இருக்கேன்…
யாரு நம்ம வண்டா… கண்கள் விரித்து அதிர்ச்சியில் கேட்க….
ஆமா, ஆமா நீ வை நா வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடுறேன் என்றவள் போனை வைத்து விட்டு, தர்ஷியை திரும்பி பார்க்க அவள் நகத்தை கடித்து வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்…
பூரா பைத்தியமும் என்ன சுத்தி தான் இருக்கும் போல! சைக்கோ நாய்ங்களா!மனதிற்குள் வறுத்தெடுத்தாள்..
ஜெய்க்கு தான் ஒன்றும் புரியவில்லை.. என்ன இதுங்க ரெண்டும் ஒண்ணா சுத்துது சரி இல்லையே! இவனை வேற காணும்… ஹ்ம்ம் என்னனு கண்டுபிடிப்போம் என்றவன் பைக்கை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்..
ஆட்டோ தேவாவின் வீட்டில் சென்று நிற்கவும்.. வாசலில் தேவாவின் வண்டியை தேடி பார்க்க அது இல்லை என்றதும் தான் இருவரும் கீழே இறங்கினர்.. ஸ்ருதி அவன் இன்னும் வரல, 10 நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள போறோம் அந்த டைரிய தேடி கண்டுபிடிச்சி எடுத்துட்டு வரோம்…
நானா? நா எதுக்கு தர்ஷினி.. நீ போய் எடுத்துட்டு வாயேன் நா இங்கேயே இருக்கேன்,, அமுலுவிற்கு அடி வயிறு கலக்கியது..
அந்த டைரி எங்க இருக்குனு எனக்கு ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே தெரியும்… நாம இப்போ தேட வேண்டியது அந்த கப்போர்டுக்கான சாவியை தான்..நா மட்டும் தேடுனா, லேட் ஆகிரும்… நீயும் சேர்ந்து தேடுனா சீக்கிரம் எடுத்திரலாம் ப்ளீஸ் வா ஹெல்ப் பண்ணேன் கெஞ்சி கேட்க ..
சரி சரி வரேன்… ஆனா அவங்க அம்மா இருப்பங்களே என்ன சொல்லுவ?
அது எங்கத்தை ஒரு வெகுளி எது சொன்னாலும் நம்புவாங்க… நீ வா நா பாத்துக்குறேன் என்றவள், அவளின் கையை பிடித்து விறு விறுவென உள்ளே அழைத்து செல்ல…
ஏய் இருடி நீ பாட்டுக்க உள்ளக்க போற? காலிங் பெல் அடி டி லூசு….
அதெல்லாம் தேவை இல்லை.. சின்ன வயசுலேந்து வரேன்.. எனக்கு தெரியாதா!? நீ பேசாம வா… டைம் ஆகுது.. என்றவள் உள்ளே சென்று அத்தை அத்தை என கூப்பாடு போட… அமுலுவுக்கு இதயம் படபடக்க நெஞ்சில் கை வைத்து நின்று கொண்டாள்…
கலாவதி தர்ஷினி குரல் கேட்டு வந்தவர்… வா டா கண்ணா… இது யாரு? உங்க கூட படிக்குற பொண்ணா? வா மா உட்காரு… நா போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்… இன்னும் தேவா வரல உரைத்த படியே அடுப்படிக்குள் செல்ல…
அத்தை நாங்க தேவா ரூம்ல இருக்கோம் அங்க வாங்க என அவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்…
ஏய் ஏய் நானும் வரேன் டி … விட்டுட்டு போகாத குரல் வெளியே வராமல் பேசிய ஸ்ருதி…அடுப்படியை பயத்தில் விழி உருட்டி பார்த்து விட்டு, வேகமாக ஓடி அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
எதிர்பார்த்தது போலவே அந்த கப்போர்டு பூட்டி இருக்க, சீக்கிரம் டி இந்த பூட்டுக்கான சாவியை தேடு சும்மா நிக்காத என அவசரப்படுத்த… அமுலு கை கால் வெட வெடக்க சாவியை தேட ஆரம்பித்து விட்டாள்…
ஒரு 5 நிமிடம் தேடி பார்த்த பின் ., சாவி அவன் ஸ்டடி டேபிளின் டிராயரில் தான் இருந்தது.. அமுலு அதை எடுத்தவள், ஏய் தர்ஷி இதுவா பாரு? என அவளின் கையில் குடுக்க…
கண்கள் விரிந்து பார்த்து வாங்கியவள், சிறிதும் பொறுமையின்றி கை நடு நடுங்க பூட்டிற்குள் சாவியை விட பார்க்க… அதற்குள் அறை கதவு திறக்க… இருவருக்கும் உயிரே போய்விட்டது…
நல்ல வேலை, கலாதான் காபி கொண்டு வந்திருந்தார்… அமுலு மூச்சு வாங்க நின்றிருந்தவள் தொப்பேன பெட்டில் உட்கார்ந்து விட்டாள்…
அதை பார்த்த கலா, இந்தா மா காபி எடுத்துக்க என கொடுக்கவும் , தேங்க்ஸ் மா என அமுலு வாங்கி கொண்டதும்… தர்ஷி க்கு காபியை கொடுக்க… அதை வாங்கிய தர்ஷி.. அத்தை நாங்க ரெஸ்ட் ரூம் போனும்.. கொஞ்சம் வெளில இருக்கிங்களா?
ஓஹ் சரி டா, என கலாவதி வெளியே சென்று விட .. இப்போது பெருமூச்சி எடுத்து விட்ட தர்ஷி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு பூட்டில் சாவியை விட்டு திருக, பூட்டு திறந்து கொண்டது… சிறிதும் தாமதிக்காமல் அந்த சிறிய கதவினை திறந்து பார்க்க.. தர்ஷி வாயை பிளந்து விட்டாள்…
அதில் அவளது போட்டோக்கள் முழுக்க ஒட்டப்பட்டிருக்க, அவள் யூஸ் செய்த பொருட்கள் க்ளிப் முதல் ஹேர் பேண்ட் வரை இருக்கவும்… அனைத்தையும் ஆச்சரியத்துடன் கண்கள் மின்ன எடுத்து பார்த்தாள்… அவளுக்கென வாங்கிய க்ரீட்டிங் கார்ட்ஸ் முதல் கிப்ட் என அடுக்கி வைக்கப்படிருக்க… அனைத்தையும் விரித்து படித்து பார்க்க ஆசை தூண்டியது…
ஆனால் நேரம் இல்லை… நடுவில்
தேவை எல்லாம் தேவதையே என எழுதப்பட்ட ஒரு டைரி இருக்க, அதை எடுத்து பார்த்தவள்… இது தான் அந்த டைரி என கன்பார்ம் செய்து தனது பேகில் திணித்து கொண்டவள், அங்கிருக்கும் பொருட்களையும் எடுத்து பேகில் போட…
அமுலு அவளிடம் அடியேய் எதுக்கு டி எல்லாத்தையும் எடுக்குற.? டைரி போதும் சீக்கிரம் வா டி ஓடிருவோம் என கத்தினாள்,
இதோ இதோ வந்துட்டேன்… சரி வா போலாம், என வெளியே செல்ல, சோபாவில் கலாவதி அமர்ந்திருந்தார்… அவர் எதிரில் நின்ற இருவரும்., அத்தை வந்த வேலை முடிஞ்சிது நாங்க கிளம்புறோம் என வெளியில் ஓட பார்க்க…
கலாவதி அவ்வளவு எளிதில் அவர்களை விட வில்லை… தேவா வருகிறானா என வாசலை பார்த்து கொண்டே பேசிவிட்டு, ஆட்டோ நிக்குது அத்தை, ஒரு நோட்ஸ் எடுக்க தான் வந்தோம் எடுத்தாச்சு…நாங்க போயிட்டு நாளைக்கு வரோம் பை அத்தை என ஸ்ருதியை இழுத்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள்…
அவளின் நடவடிக்கையை கன்னத்தில் கை வைத்து பார்த்த கலாவதி…இந்த பொண்ணு மட்டும் எப்ப வந்தாலும் காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரியே ஓடுவா என பெரிதாக அதை கண்டு கொள்ள வில்லை…
ஆட்டோவில் ஏறியவர்கள் சீக்கிரம் சீக்கிரம் வண்டிய எடுங்க னா, என வெளியே எட்டி பார்த்து பதட்டத்துடன் சொல்ல, டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து அந்த தெருவை தாண்டவில்லை… தேவா வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தியிருந்தான்….
தர்ஷி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. என்ன மாட்டி விட்ராத என கெஞ்ச… சரி சரி நா சொல்ல மாட்டேன்., என அவளை சமாதானபடுத்தி அவளை வீட்டில் இறக்கி விட்டு, இவளும் தன் வீட்டிற்கு சென்று விட்டாள்…
தனது அறைக்குள் சென்றவள், கதவை தாழ்ப்பால் போட்டு விட்டாள், எங்கே தேவா இங்கு வந்து அவள் படிப்பதற்குள் அந்த டைரியை பறித்து விடுவானோ என்ற பயம் தான்…உடை மாற்றி விட்டு வந்தவள், டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்திருந்தாள்..
இங்கு தேவா வீட்டிற்குள் நுழைய, கலாவதி டேய் தர்ஷினியும், இன்னோரு பொண்ணும் வந்தாங்க டா என சொல்ல… தேவாவிற்கு புரிந்து விட்டது.. எதற்கு வந்தாள்? இங்கேயும் சண்டை போட வந்திருப்பாள்… என தவறாக எண்ணியவன்… ஓஹ் சரி மா என தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்…
ஏற்கனவே தர்ஷியை அறைந்து விட்டதாலும், அவள் நான் செத்து விடுவேன் என கூறியதாலும் மன வலியில் இருந்தவன்…. என்ன ஏது என எதையும் பற்றி பெரிதாக ஆராய்ச்சி செய்யவில்லை….
குளித்து விட்டு வந்தவனுக்கு அவள் நியாபகமாகவே இருக்க… அவளை அறைந்த கையை வெறித்து பார்த்தவன்,4, 5 முறை அந்த கையை மரக்கட்டிலில் குத்தி கொண்டான்…
தர்ஷி கண்களில் கண்ணீருடன்,, அவனுடைய இத்தனை வருட கால காதலை அந்த டைரியை படித்து தெரிந்து கொண்டாள்…
தேவாவால் இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்டதில் இந்த டைரியை போல் நானும் ஒருத்தி… இவ்வளவு காதலா? யாராலும் இப்படி காதலிக்க முடியுமா? நானே சுவாசம் என வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. எப்படி அவனை தெரிந்து கொள்ளாமல் போனேன்… என்னை அணுதினமும் நொடிக்கொரு முறை காதலித்தவன் சித்ரவதை அனுபவித்திருக்கிறானே! அதுவும் என்னால்…
நிமிடத்திற்கொரு முறை என்னையே நினைத்து உருகியவனை உணராது, வேறு ஒருவனை காதலிக்கிறேன் என அவனிடமே கூறி சந்தோஷப்பட்டிருக்கிறேன்.. என்ன ஜென்மம் நான்..
தர்ஷியால் தேவாவின் இவ்வளவு காதலை தாங்க முடியவில்லை.. உடல் நடுங்க, இதழ் துடிக்க கண்கள் சிவக்க அமர்ந்திருந்தாள்… இவ்ளோ காதலா? எதுக்கு டா? என்கிட்ட சொல்லிருக்கலாமே! அவன் அளவில்லா காதலை தெரிந்து கொண்ட பின் மூச்சு முட்டியது அவளுக்கு… தொண்டை அடைக்க தேவா தேவா சா சாரி டா குரல் வெளியே வரவில்லை…
உன் காதலுக்கு நா தகுதியானவளா? இல்ல டா….. அந்த டைரியை எடுத்து நெஞ்சில் அழுத்தி கொண்டவள்.. இதயத்தின் துடிப்பையும், அவன் கொடுத்த காதல் உணர்வையும் தாங்க முடியாமல் கீழே சரிந்து விட்டாள் தர்ஷினி…
கண்கள் திறக்க முடியாமல் இருக்க.. அவனின் புன்னகை முகம் தோன்றி அவளை இம்சை செய்தது….
அதிகரித்துக் கொண்டே செல்கிறது!
உன்னை பார்க்காமல்……
உன் காதலுடன்……
நான் கடக்கின்ற நொடிகள்….
அதீத அன்பையும்…
அளவில்லா நேசத்தையும்
உளமறியா வேதனையையும்
உன் கண்ணீர் ததும்பும் விழிகளையும்
கண்காணாத சோகங்களையும்
சொல்லத் தெரியா காதலையும்
உள்ளூற வைத்துக்கொண்டு சிரிப்பது
போல் நடித்து வாழ்ந்திருக்கிறாய்….
அதீத அன்பு ஒன்று வெல்லும்
இல்லை கொள்ளுமடா
( மனதை )…..
வேரூன்றி விட்டாய் மனதில்
வேறு எங்கும் நகர்வதில்லை
என் எண்ணங்களும் உனையன்றி காத்திருக்கிறேனடா….
கொல்லாமல் வந்துவிடு… தேவா உதடுகள் முனுமுனுக்க…..
தேவாவிற்கு இதயம் எக்குத்தப்பாய் துடிக்க ஆரம்பிக்க.. தர்ஷிக்கு கால் செய்து பார்த்தான்.. அவள் எடுப்பது போல் தெரியவில்லை…ஏதோ யோசித்தவன் அடுத்து ஜெய்க்கு கால் செய்ய.. அவன் ஒரே ரிங்கில் எடுத்து காதில் வைத்திருந்தான்…
மச்சான் மனசே சரி இல்ல டா., இன்று நடந்ததை அனைத்தையும் ஒப்பித்தவன் இன்னைக்கு அவளை அடிச்சிட்டேன் டா கஷ்டமா இருக்கு டா மச்சான்.,
விடு டா நாளைக்கு எப்படியும் வசி பர்த்டேக்கு போவோம்ல,, அப்ப அவளை மட்டும் தனியா கூப்டு போய் உன் காதல சொல்லிரு என்ன புரிஞ்சிதா?
ஹ்ம்ம் சரி டா மச்சான் என்றவன் இணைப்பை துண்டித்து விட்டு அவளின் நியாபக அலைகளை ஓட விட்டிருந்தான்…
தொடரும்……
பாகம் 29
மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது…
அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம் குழந்தை என்று அவன் வாழ்வு சிறப்பாக அமையும்… தேவா மகிழ்ச்சியாக இருப்பான் என்பதை எண்ணி அவர் மகிழ்ந்தார்…
அதற்கு நேர் எதிராக அதீத கோவத்தில் இருந்தார் ஜீவாவின் தந்தை செந்தில்… தேவா தியா திருமணம் விஷயம் அறிந்ததும் எப்போதும் போல் ஜீவாவின் அன்னை கௌரி ” என் பையனும் உயிரோட இருந்திருந்தா அவனும் இந்நேரம் இப்புடி கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்ந்து இருப்பான்ல, எல்லாத்தையும் ஒன்னுமில்லாமா பண்ண அவனுக்கு மட்டும் எல்லாமே நல்லதா நடக்குதே, கடவுளே உனக்கு கண் இல்லையா, இப்புடி அவனை உயிரோட விட்டு வச்சு இருக்கியே” என்று தேவாவிற்கு வழக்கம் போல சாபங்களை அள்ளி தெளித்து விட்டு எப்போதும் போல் ஜீவா படத்தின் முன்பு அமர்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்…
மகனின் இழப்பு, மனைவியின் கண்ணீர் இரண்டையும் பார்க்கையில் செந்திலுக்கு தேவா மீது தான் இன்னும் இன்னும் கொலைவெறி உண்டானது… தாங்கள் மகனை இழந்து ஒவ்வொரு நாளையும் நகர்த்த முடியாமல் துன்பத்தில் வாடும் போது அவன் மட்டும் காதல், கல்யாணம் என்று சந்தோஷமாக இருப்பதா, தானே நேரிடையாக தேவாவை ஏதாவது செய்து விடலாம் என்று கூட யோசனை தோன்றியது…
ஆனால் சற்று நேரத்திலே திவேஷ் அன்று கூறியது நினைவு வந்தது.. தேவா மறுபடியும் சந்தோஷமா இருக்கனும்… அப்புடி அவன் மகிழ்வின் உச்சியில் இருக்கும் போது அவனை கீழே தள்ளி விட வேண்டும்… அதன் பிறகு தேவாவே தன்னை அழித்துக் கொள்வான்… அதுவரை அமைதியாக இருங்க என்று கூறியது நினைவு வந்தது.. மறுபடியும் தன் மொபைலை எடுத்து தேவா தியா திருமண வீடியோவை ப்ளே செய்து பார்த்தார்… அதில் இருக்கும் தியாவை பார்த்து ஓ…. தேவாவோட சந்தோஷம்ன்னு திவேஷ் சொன்னது இந்த பொண்ணை தானா, பார்த்துக்கலாம் இந்த சந்தோஷத்தை கொஞ்ச நாள் கழிச்சு அந்த தேவா வாழ்க்கையில் இருந்து அழிச்சு காட்டுறேன்… பிடிச்சவங்களோட இழப்பு எப்புடி இருக்கும்னு அந்த தேவாவிற்கு காட்டுறேன் என்று தியாவை பார்த்தபடி வன்மத்துடன் மனதில் நினைத்துக் கொண்டார்…
மஞ்சுவின் மூலமாக வெண்ணிலாவுக்கும் தேவா திருமணச் செய்தி போய் சேர்ந்தது… ” இப்ப அதுக்கு என்ன? யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறாங்க அதை எதுக்கு என்கிட்ட சொல்ற போனை வை மஞ்சு எனக்கு வேலை இருக்கு” என்று சாதரணமாக கூறி விட்டு மொபைலை வைத்து விட்டாள்… நான் சாதரணமாக தான் இருக்கின்றேன் என்று வெகு இயல்பாக நடக்க தான் முயற்சித்தாள்..ஏனோ அன்றைய காலை பொழுது அவளுக்கு வழமையான மற்ற நாளை போல் அமையவில்லை.. தொட்ட அனைத்து வேலையும் தடுமாற்றதுடன் முடிந்தது… என்ன ஏது என்று தெரியாமல் மெலிதான ஒரு வலியை உணர முடிந்தது… தனியே இருப்பதால் தான் வேண்டாத சிந்தனைக்கு வழிவகுக்கின்றது என்று எண்ணி அவசர அவசரமாக குளித்து மருத்துவமனை கிளம்பி சென்றாள்… நல்ல வேளை திவேஷ் இரவு சென்றது அவன் மட்டும் இருந்திருந்தால் அவளின் இந்த முகத்தை பார்த்தே அவள் மனதை படித்து இருப்பான்… பின்பு வீண் சண்டை எழுந்திருக்கும் என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி ஆட்டோவில் கிளம்பினாள்…
சூர்யா அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழிறங்கி சமையல் அறை நோக்கி சென்றான்… அங்கும் யாரும் இல்லாததால் கீழ் இருந்த மற்ற அறைகள் வீட்டின் பின்புறம் தோட்டம் வாசல் என்று ஒரு வித பதட்டதுடன் தேட எங்கும் அவன் மனைவியும் குழந்தையும் இல்லை… ச்சே என்றபடி தலையில் கை வைத்தபடி போர்டிகோவிலே அமர்ந்தான்… காலையில் கண் விழித்த போதே நேற்று இரவு ஷோபனாவை அறைந்தது நியாயபகம் வர அவளை சமாதானம் சொய்யலாம் என்று தேடி வர எங்குமே அவள் இல்லை…
சூர்யா எப்புடி நூறு சதவீதம் சிறந்த நண்பனோ அதை விட இருநூறு சதவீதம் சிறந்த கணவனும் கூட, மனைவி ஷோபனா மீது கொள்ளை காதல்… இவர்கள் செட்டிலே முதலில் திருமணம் செய்தது சூர்யா தான்… அதுவும் ஷோபனா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது அதையும் மீறி அவர்கள் சம்மதமின்றி நடந்த திருமணம்…
நேற்று இரவு ஷோபனா பேசியது போன்று தான் தேவா பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து இந்த ஐந்தாண்டுகளாக பேசுவாள்… தேவா நட்பை விடும்படி சண்டை இடுவாள்.. ஆனால் சூர்யா மனைவியை ஏதேதோ பேசி கொஞ்சி சமாளிப்பானே ஒழிய மாறி சண்டையிட மாட்டான்… அவனுக்கு தெரியும் அவன் மனைவியை தூண்டி விடுவதே அவனின் உடன்பிறப்பு மஞ்சு தான் என்று, அதனால் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டான்… நேற்று இரவு அவன் இருந்த மனநிலையில் தேவா மீது இருந்த கோவத்தையும் சேர்த்து மனைவியின் கன்னத்தில் இறக்கி விட்டான்…
அச்சோ உண்மையாவே கோவிச்சுக்கிட்டு அவங்க அப்பன் வீட்டுக்கு போய்ட்டா போலயே, என் பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டாளே, இப்ப நான் என்ன பண்ணுவேன்… ஏற்கெனவே என் மாமானார் அந்த ஆளுக்கு என்னை கண்டாலே ஆகாது… இப்ப அடிச்சேன் வேற தெரிஞ்ச்சு அவ்ளோ தான்.. கண்டிப்பா டீவோர்ஸ் வாங்கி கொடுத்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான்.. டேய் தேவா நாயே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு சம்சாரி ஆக்கிட்டு நான் சன்னியாசம் வாங்க வேண்டிய நிலை வந்துரும் போலயே, என்று தலையில் கை வைத்து புலம்பி கொண்டு இருந்தவன் நெற்றியில் தீடிரென குளிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்… ஷோபனா தான் அவன் நெற்றியில் தீருநீறு பூசி விட்டு அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்கு உள்ளே சென்றாள்…
ச்சே வெள்ளிக்கிழமையா கோவிலுக்கு போயிட்டு வந்துருப்பா போல, ஒரு செகண்ட் பயந்துட்டேன்.. பொண்டாடிங்கூட வாழறதும் கஷ்டம் பொண்டாட்டி இல்லாமா வாழறதும் கஷ்டம், அடடா என்ன ஒரு தத்துவம் வர வர நாமளும் பாப்பு கூட சேர்ந்து ரொம்ப அறிவாளி ஆகிட்டோம் போலே என்றபடி உள்ளே செல்ல, அங்கு அவன் மனைவி சமையல் அறையில் பாத்திரங்களை உருட்டும் ஸ்டைலிலே சூர்யா புரிந்து கொண்டான்… அவன் மனைவி தன் மீது எவ்வளவு கோவத்தில் உள்ளாள் என்பதை,
சமையலறை வாயிலில் நின்றபடி மனைவியை பார்த்தான் எப்படி சமாதானம் செய்வது என்றபடி, தக்காளி பழ நிறத்தில் சேலை அணிந்து முடியை இருபுறம் சிறிது எடுத்து சின்ன பின்னல் இட்டு, மீதி முடியை இடை வரை தளர விட்டு முல்லை பூ சூடி இருந்தாள்… நெற்றியில் சின்ன கல்பொட்டு வைத்து அதன் மேல் சிறு கோடு போல் திருநீறு கீற்று நெற்றி வகுட்டில் குங்குமம் என மங்களரமாக நின்று இருந்த மனைவியை ரசித்தப்படியே உள்ளே நுழைந்தவன் பின்னிருந்து அவளை அணைத்து தோளில் தாடையை பதித்து,
ஷோபி சாரிடி ஏதோ டென்சன்ல அடிச்சுட்டேன்… சாரிடி என்று நேற்று அறைந்த கன்னத்தில் முத்தமிட,
டேய் பர்ஸ்ட் என்னை விட்டு தள்ளி போடா உன் சாரி பூரி ஒன்னும் வேண்டாம்… உனக்கு அவன் தானே முக்கியம்.. நான் இரண்டாம் பட்சம் தான அவனுக்காக அடிக்கிற அளவுக்கு வந்துட்டல, போ போ அவன் கிட்டையே போ, என்கிட்ட பேசாத என்றாள், அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றபடி,
நீ எனக்கு இரண்டாம்பட்சமா, யார் சொன்னதுடி அப்புடி, நீ என் உயிர், உலகம்டி, காத்து கூட இல்லாமா நான் உயிர் வாழ்ந்துருவேன்.. ஆனா என் காதல் மனைவி என் ஷோபி குட்டி பக்கத்தில்ல இல்லைன்னா ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாது.. ஐ லவ் யூ சோ சோ சோ மச் டி உனக்கு தெரியாதா என்றபடி கழுத்தில் முத்தமிட்டான்..
டேய் டேய் ரொமாண்டிக்கா பேசுறதா மனசில்ல நினைப்பா, ரொம்ப க்ரின்ஞ்சா இருக்குடா.. கை எடு இல்ல அடுப்புல வச்சு சூடு வச்சிருவேன்..
என்னது பேசுனது ரொமாண்டிக்கா இல்லையா, அப்ப ரொமாண்டிக்கா ஏதாவது பண்ணட்டுமா என்றவன் அவளை கைகளில் அள்ள, விடுடா விடுடா என்று அவளின் திமிறலை பொருட்படுத்தமால் அறைக்குள் வந்தவன், மனைவியை மெத்தையில் இறக்கி விட்டு அவள் மேல் படர்ந்து இதழை சிறைப்பிடித்து, நேற்று இரவு சண்டை நடந்த மெத்தையில்லே சமாதானத்தில் இறங்க, முதலில் கோவத்தில் முரண்டு பிடித்த ஷோபனா மெல்ல மெல்ல கணவனின் தொடுகையில் கரைந்தவள் அவனின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைக்க துவங்கினாள்…
பாகம் 30
காலை மணி பதின்னோன்றை தாண்டி இருந்தது… சூரிய வெளிச்சம் மூடி இருந்த திரைசிலையையும் மீறி உறங்கி கொண்டு இருந்தவள் மீது சுளீரென பட, அதனால் இதற்கு மேல் எவ்வளவு இழுத்து போர்த்தி படுத்தாலும் தூங்க முடியாது என்பதால், மெல்ல மெல்ல உறக்கத்தை விடுத்து கண் விழித்தாள் தியா…
நேற்று நடந்த களேபரத்தில் அதிகாலை தொடக்கத்தில் தான் உறங்கினாள் என்பதால், தூங்கி வழிந்து கொண்டே எழுந்து அமர்ந்தவளுக்கு என்ன இது நம்ம ரூம் மாதிரி இல்லையே என்று கண்ணை நன்றாக கசக்கி விட்டு பார்த்தாள்.. நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவு வந்தது… அதும் தேவா அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடியை நினைக்கையில் உள்ளத்தினில் பூரிப்பும் எல்லை இல்லா இன்பமும் அதோடு இதுவரை அவள் அறியா வெட்கமும் அவளை ஆட்கொண்டது..
அதே வெட்கத்துடன் மெத்தையின் மறுபுறம் பார்க்க தேவா இல்லை… எங்க போனாரு என்று மெத்தையில் இருந்து எழுந்து வீடு முழுக்க தேட தேவா இல்லை.. கால் பண்ணி பார்க்கலாம் என்று மொபைலை எடுக்க அறைக்கு வர, அவளின் மொபைலுக்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது… அது தேவா எழுதி வைத்து இருந்த பேப்பர் பிரித்து படித்தாள் அதில்,
“ஏய் கீழே கிச்சன்ல டிபன் வாங்கி வச்சு இருக்கேன்… பக்கத்தில் இருக்க கவர்ல உனக்கு தேவையான ஒரு செட் டிரெஸ் இருக்கு.. இப்ப அதை குளிச்சிட்டு போட்டுக்கோ.. அப்புறம் உனக்கு என்ன வேணுமோ போய் வாங்கிக்கலாம், இந்த குளிக்கிறது ப்ரெஸ் பண்றது எல்லாம் உனக்கு நான் கொடுத்த ரூம்ல போய் பண்ணு, என் ரூமை யூஸ் பண்ண கூடாது சொல்லிட்டேன்.. நான் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். பார்த்து பத்திரமா இரு” என்று தேவா எழுதி வைத்து விட்டு சென்று இருந்தான்…
அருகில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள்… அதில் ஒரு நீல நிற முட்டி தாண்டிய டாப்பும் அதே நிறத்தில் பலசோ பேண்ட்டும் இருந்தது.. தேவா தியாவை பெரும்பாலும் இந்த உடையில் தான் பார்த்து இருக்கான்.. அதான் அதே போல் வாங்கி வைத்திருக்கிறான் என்பது தியாவுக்கு புரிந்தது…
“ம்க்கும் இந்த பாவா ரொம்ப ஸ்டீரிட்டு தான்ப்பா” என்று உதட்டை சுழித்தாலும், தனக்கு வேண்டியதை கேட்கும் முன் வாங்கி வைத்திருப்பவனை நினைக்கையில் கணவனின் மேல் காதல் பெருகியது.. சிரிப்புடனே மொபைலை பார்க்க டிஸ்ப்ளேயில் இருந்த தியா அம்மா அப்பா போட்டோவை பார்த்த
அடுத்த நொடி முகம் வாடியது பெற்றோரை எண்ணி, உடனே தனது மொபைலை கையில் எடுத்து தனது அம்மா யமுனாவிற்கு அழைத்தாள்.. முழு ரிங் போயி கட்டானது மறுமுனை எடுக்கவில்லை… அடுத்து பல முறை அழைத்தும் பயனில்லை யமுனா எடுக்கவே இல்லை..
தியாவுக்கு கஷ்டமாக இருந்தது… இந்த திருமணம் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம், அதனால் அவர்கள் கோவம் நியாயமானது என்பது புரிந்தாலும், அவர்களின் கோவத்தையும் ஒதுக்கலையும் தாங்க முடியவில்லை.. கஷ்டமாக இருந்தது… இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கையிலே இனியா போன் செய்து இருந்தாள்…
அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ “என்றாள் சுரத்தே இல்லாத குரலில்,
“தியாகுட்டி எப்புடி இருக்கடா என்ன ஆச்சு ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு, ஏதாவது பிரச்சனையா மாமா உன்னை சத்தம் போட்டாங்களா” என்று பதறி போய் இனியா விசாரிக்க..
“அது எல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை”..
“வேற என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுற”,
“யமுனாக்கு ஒரு பத்து பதினைஞ்சு டைம் கால் பண்ணுனேன் தெரியுமா எடுக்கவே இல்லை… அதான் கஷ்டமா இருக்குடி. இனியா எனக்காக மம்மி டாடி கிட்ட கொஞ்சம் ரெக்மெண்டேஷன் பண்ணுடி” என்று தியா கெஞ்ச,
“அட ஏன்டி நீ வேறா, இப்ப இருக்க நிலைமைக்கு எனக்கே யாராவது மம்மி டாடிகிட்ட ரெக்மெண்டேஷன் பண்ணணும் போல இருக்கு”..
ஏன் ஏன் என்னாச்சு? தியா கேட்த
“எல்லாம் உன்னால தான் எருமை, அவ தேவாவ காதலிக்கிற விசயம் உனக்கு முன்னவே தெரியும்ல, ஏன் எங்க கிட்ட பர்ஸ்டே சொல்லலை, அவ கூட சேர்ந்து நீயும் எங்களை முட்டாள் ஆகிட்டல்ல, இனிமே எங்க கூட பேசதா வீட்டுக்கு வராத, எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க இரண்டுமே எங்களுக்கு வேண்டாம்னு மம்மி சொல்லிட்டாங்கடா, நானும் தான் கால் பண்ணுனேன் எடுக்கவே இல்லை” என்று வருத்தமாக இனியா கூற,
தியா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
“எருமை எருமை எதுக்கு இப்ப சிரிக்கிற எருமை” என்று இனியா எரிச்சல் பட
“ஒண்ணும் இல்லடி வோய் ப்ளட் சேம் ப்ளட் அதுக்கு தான் சிரிச்சேன்… என்னை மட்டும் இல்லாம உன்னை சேர்த்து மம்மி துரத்தி விட்டுட்டாங்களே அதை நினைக்கும் போது” என்று மறுபடியும் தியா சிரிக்க ஆரம்பிக்க, இனியா மறுபடியும் பேயே பிசாசே திட்ட ஆரம்பித்தாள்..
“ஓகே ஓகே கூல் இனியா மம்மி டாடி தானே ஒரு ஒன் வீக் இல்லைன்னா பத்து நாள் அதுக்குள்ள அவங்களா பேசுவாங்க. இல்லைன்னா நான் எதுக்கு இருக்கிறேன் பேச வச்சு காட்டுறேன் பாரு, அப்படியெல்லாம் கோவமா இருக்கட்டும்னு யமுனாவையும் பாலகிருஷ்ணனையும் விட முடியாது அவங்க நம்ம கிட்ட பேசி தான் ஆகணும்.. சரி நான் இப்ப போனை வைக்கிறேன்” என்று தியா கூற,
“இருடி ஒரே ஒரு நிமிஷம் அத்தை உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதுக்கு தான் நான் கால் பண்ணது.. இரு அவங்க கிட்ட தரேன் பேசு” என்ற இனியா தேவா அன்னை மீனாட்சியிடம் கொடுத்தாள்…
,”ஹலோ தியாம்மா என்ற மீனாட்சி என்ன பண்றீங்கடா, தேவா என்ன பண்றான், என் மேல்ல கோவம் நான் கால் பண்ணுனா எடுக்க மாட்டேங்கிறான், அங்க எந்த பிரச்சினையும் இல்லையே, ” என்று விசாரிக்க,
“பாவா வெளிய எங்கயோ போய் இருக்காங்க அத்தைம்மா.. நாங்க நல்லா இருக்கோம் எந்த பிரச்சினையும் இல்லை அத்தைம்மா” என்று தியா கூற,
மேலும் மீனாட்சி “என் தேவாவுக்கு கல்யாணம் ஆகிட்டு, பண்ணவே மாட்டேன் சொல்லி அடம் பிடிச்சவன் உன்னை கல்யாணம் பண்ணுனதில் நான் இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா, எல்லாத்துக்கும் நீ தான் நீ மட்டும் தான் காரணம் ரொம்ப தாங்க்ஸ்டா அப்புறம் தியா” என்று ஏதோ கேட்க வந்து மீனாட்சி தயங்க,
“என்ன அத்தைம்மா எதுவா இருந்தாலும் தயங்கமா கேளுங்க”..
“இல்லடா அது வந்து தேவாவை உனக்கு உண்மையா பிடிக்குமா” என்று மீனாட்சி கேட்க,
அதை கேட்டு சிரித்த தியா “இந்த கேள்வியை நேத்து இது தான் சமயம்னு தாலி எடுத்து உங்க பையன் கையில்ல கொடுக்கறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும்” என்ற தியா பதிலில் மீனாட்சி முகம் அந்த புறம் சுருங்கி விட்டது…
“அப்புடினா உனக்கு தேவாவ,
“பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் நைட்டு 12 மணிக்கு எதை பத்தியும் கவலை படமா அவரை பார்க்க போற அளவுக்கு பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ஆனா உங்க பையனுக்கு தான் என்னை சுத்தமா பிடிக்காது” என்றாள்..
அதை கேட்ட மீனாட்சி அந்த புறம் சிரித்து, “பிடிக்காமலா உன் கழுத்தில் தாலி கட்டுனான்.. அவனுக்கும் நீ னா இஷ்டம் தான் போல உனக்காக நேத்து எவ்ளோ சண்டை போட்டான் பார்த்தல்ல” என்று கூற,
“அட ஏன் நீங்க வேற, அவருக்கு என்ன பிடிக்காது… நான் தான் பின்னாடியே துரத்தி பிடிவாதமா அவர் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு இருக்கேன்” என்றாள் தியா..
“போடி லூசு உன் பிடிவாதம் அவனுக்கு பிடிச்சதால்ல தான் இப்ப நீ அவனுக்கு பொண்டாட்டி ஆகி இருக்க.. அவனுக்கு விருப்பம் இல்லைன்னா நீ எவ்ளோ பிடிவாதமா அடம் பண்ணுனாலும் குண்டு ஊசி நுழையற அளவுக்கு கூட அவன் வாழ்க்கையில்ல இடம் தந்து இருக்க மாட்டான்” என்ற மீனாட்சியிடம்,
“அத்தைம்மா இது எல்லாம் உண்மையோ பொய்யோ ஆனா கேட்கிறதுக்கு நல்லா இருக்கு” என்று கூற இருவரும் சிரித்தனர்…
“இன்னைக்கு தேவாவோட பிறந்த நாள்… அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தேவா பிறந்த நாள்னா வீடே ஜே ஜேன்னு இருக்கும்… அப்புடியே திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க… அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு அவனுக்கு என் கையாலயே செஞ்ச”,
“பால்பாயசம் செஞ்சு தருவீங்களா”
“இல்ல”
“கேசரியா”
“இல்லடி கேரட் அல்வா செஞ்சு கொடுப்பேன்.. தேவாவுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்.. அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேட்பான்.. அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு கேரட் அல்வா சாப்டு தான் கேக் சாப்பாடுகூட சாப்டுவான்… ஆனா இப்ப எல்லாம் மாறி போயிட்டு” என்று மீனாட்சி வருத்தப்பட,
“அத்தைம்மா இப்ப என்ன கேரட் அல்வா தானே, நான் செஞ்சு பாவாக்கு கொடுக்கிறேன்.. இதுக்கு போய் வருத்தப்படுலாமா”,
“உனக்கு சமைக்க தெரியுமா”?
“தெரியாது தான் ஆனா உங்க மருமகளுக்கு கற்பூர புத்தி சொல்லி கொடுத்தா உடனே கத்துப்பேன்.. அத்தோடு என் பாவாக்கு பிடிக்கும்னு சொல்லிட்டீங்க.. அதனால்ல நான் எவ்ளோ கஷ்டப்பட்டுனாலும் செஞ்சு கொடுப்பேன்.. கேரட் அல்வா ரெசிபி மட்டும் சொல்லிங்க” அசத்திரேன் என்று தியா வீரமாக கூற,
மருமகளை பற்றி ஒன்றும் தெரியாத மீனாட்சி அப்பாவியாக கேரட் அல்வா செய்முறையை எந்தெந்த பொருள் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து விட்டு போனை வைத்தார்… அவருக்கு தெரியவில்லை அவரின் மருமகள் இதை வைத்து செய்ய போகும் கூத்தை,
தியாவும் சென்று அவசர அவசரமாக குளித்து ரெடியாகி கிச்சன் சென்று கேரட் அல்வா செய்வதற்கு மீனாட்சி சொன்ன பொருட்கள் ஒன்று ஒன்றாக தேடி எடுத்தாள்… பால், சர்க்கரை, பாதாம், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, நெய் எல்லாம் இருந்தது… கேரட்டை தவிர, “அய்யோ கேரட் இல்லையே என்ன பண்ணலாம்” என்று தியா யோசிக்கும் போதே, வெளியே கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் என்று காய் வண்டி சத்தம் கேட்க,
“ஆஹான் இவங்ககிட்ட கேரட் இருக்கும் வாங்கிட்டு வந்து கேரட் அல்வா செஞ்சு கொடுத்து பாவா கவுத்துரனும்ப்பா, ஆனா என்கிட்ட கையில்ல காசு இல்லையே என்ன பண்ணலாம்.. அதான் போன் இருக்கே இப்ப தான் ஜிபே பண்ணிக்கலாம்” என்று போனையும் அங்கிருந்து ஒரு பேக்கையும் எடுத்து கொண்டு வெளியே வந்தாள்…
தேவா காரில் வீட்டை நெருங்கும் போது அவன் வீட்டின் முன்பே ஏதோ சலசலப்பு சற்று கூட்டமாகவும் இருந்தது… அதை பார்த்தவன் தியாவுக்கு தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணி காரில் இருந்து அவசரமாக இறங்கி அங்கு நின்று இருத்தவர்களை விலக்கி விட்டு பார்த்தான்…
அங்கு தியாவுடன் ஒருவன் வாக்குவாதம் செய்வது தெரிந்தது.. உடனே கோவமாக அவர்கள் அருகில் நெருங்கிய தேவா, “ஏய் யார் நீ எதுக்கு என் வொய்ஃப் கிட்ட பிரச்சினை பண்ற” என்று கோவமாக கேட்க,
சார் “நான் இந்த ஏரியாவுல காய்கறி வியாபாரம் பண்றவன் சார், நான் எந்த பிரச்சினையும் பண்ணல, இந்த பொண்ணு தான் என்கிட்ட பிரச்சினை பண்ணுது” என்று சொல்ல,
“ஏதே நான் பிரச்சினை பண்றானா, பாவா இவரை நம்பாதீங்க, இவர் தான் என்னை ஏமாத்த பார்க்கிறார்”..
தேவா,” என்னடி ப்ராப்ளம் எதுக்கு நீ வீட்டை விட்டு வெளிய வந்த காய்கறி வியாபாரம் பண்றவர்கிட்ட உனக்கு என்ன வேலை அதை பர்ஸ்ட் என்கிட்ட சொல்லுடி “என்று தேவா கேட்க,
“நான் கேரட் வாங்கலாம்னு வந்தேன்”..
எதுக்குடி?
“கேரட் அல்வா பண்றதுக்கு” என்றவளை ஏறங்க இறங்க பார்த்தவன் அது எதுக்குடி என்று முறைக்க,
“அதை அப்புறம் சொல்றேன் பாவா, இந்த அநியாயத்தை கேளுங்க பாவா”,
“இந்த அண்ணாகிட்ட வந்து நூறு கேரட் எவ்ளோன்னு கேட்டேன்.. 20 ரூபாம்மான்னு சொன்னாங்க… சரின்னு சொல்லி நூறு கேரட் வாங்கினதுக்கு அப்புறம் 500 ரூவா சொல்றாங்க பாவா, இது தப்பு தானே, ஏன்னு நான் கேட்டா என்கிட்டேயே சண்டை போடுறாங்க இந்த அண்ணா” என்று தியா புகார் கூற,
அந்த காய் விற்கும் நபரை பார்த்த தேவா “என்னங்க இது எல்லாம் சின்ன பொண்ணு கிட்ட இப்புடி எல்லாம் ஏமாத்துறது நியாயமா” என்று கோவமாக கேட்க,
அந்த நபரோ சார் “பர்ஸ்ட் உங்க வொய்ஃப் கையில்ல வச்சு இருக்க பேக்கை வாங்கி பார்த்துட்டு அப்புறம் என்கிட்ட கோவப்படுங்க சார்” என்று கூற,
தியா கையில் இருந்த பேக்கை வாங்கி பார்த்த தேவா லேசாக அதிர்ந்து “என்னடி இது” என்று கேட்க,
“நூறு கேரட் பாவா” என்று பதில் அளித்த மனைவியை தேவா முறைக்க,
எதுக்கு இவரு முறைக்கிறாரு “கவுண்ட் பண்ணி பாருங்க பாவா நூறு கரெக்ட்டா
இருக்கும்.. நான் கணக்குல புலி என்றவளின் பதிலில் தேவாவிற்கு தான் எங்காவது முட்டி கொள்ளலாம என்று இருந்தது…
அரிமா – 21
முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான்.
மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து,
“இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான்.
வேகமாக நடந்து வரும் தன் மகனை கண்டதும் ப்ரீத்தா,
“வா பா” என்று புன்னகை முகமாக அவனை உணவு உண்ண அழைக்க, உடனே மறுத்த அர்ஜுன்,
” சாரிமா முக்கியமான வேலை இருக்கு நான் இப்போ கிளம்புறேன். அப்புறம் ம்மா நேத்து நைட்டு ஜுவாலாக்கு ரொம்ப காய்ச்சல்” என்று சொன்னதுமே பதறிய ப்ரீத்தா, “அச்சோ என்னை எழுப்பி இருக்கலாமே ” என்க,
” அம்மா ரிலாக்ஸ்” என்று தன் தாயை சமாதானம் படுத்திய அர்ஜுன்,
” நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்ல, நானே டேப்லெட் கொடுத்து தூங்க வச்சிட்டேன். இப்போ காய்ச்சல் லைட்டா இருக்கு, நல்லா தூங்கிட்டு இருக்கா அதான் நான் எழுப்பல அவளா எந்திரிக்கும் போது எழும்பட்டும், அப்போ அப்போ மட்டும் போய் பார்த்துக்கோங்க, அவ எழுந்ததும் எப்படி இருக்கான்னு என்கிட்ட சொல்லுங்க. பீவர் கன்டின்யு ஆனா நானே வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் ” என்று சொல்லவும் மகனை புன்னகையுடன் பார்த்த ப்ரீத்தா,
” இதத்தான்டா நான் எதிர்பார்த்தேன். ஒரு பொண்ணு முதல்ல தன் ஹஸ்பண்ட் கிட்ட எதிர்பார்க்கிறதே கேர் அண்ட் ரெஸ்பெக்ட் தான். எப்பவும் இதே அக்கறையோட அவள பாத்துக்கோ. அது போதும் மத்ததெல்லாம் சீக்கிரமா சரியாகிடும். ” என்றார்.
அதற்கு , ” அக்கறையும் மரியாதையும் எனக்கு எப்போதுமே ஜூவாலா மேல உண்டுமா.” என்ற தன் மகனை புன்னகையுடன் அனுப்பி வைத்த ப்ரீத்தா நேராக பூஜை அறை நோக்கி வந்தவர்,
” சீக்கிரம் அர்ஜூன் மனசு மாறி ஜூவாலாவோட சந்தோஷமா, வாழனும் . எல்லாமே சீக்கிரம் சரியாகனும், அப்போ தான் மதுவை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடியும்.
இங்கிருந்து போனதுல இருந்து மது என்கிட்ட பேசவே இல்ல. எனக்கும் அவ கிட்ட பேசவே குற்ற உணர்ச்சியா இருக்கு, சந்தியா அவள நல்லா பாத்துக்குவா தான், ஆனாலும் வேறொருத்தர் வீட்ல அவள தங்க வைக்கிறதுல எனக்கு விருப்பமே இல்லை.
சீக்கிரம் எல்லா பிரச்சினையும் சரி பண்ணி குடுங்க. மதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் ” என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டார்.
@@@@@@@@@
கார் மருத்துவமனை வளாகத்தை அடைந்ததும் தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்த வீரா மதிக்கு கதவை திறந்து விட ,
“அதுக்குள்ள வந்துட்டோமா?!” என வீராவிடம் கேட்டபடி கீழே இறங்கினாள் மதுமதி .
அவனோ, “ஆமா மது வந்துட்டோம் வா ” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் .
காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து விடுதலை பெற்ற உணர்வோடு நடந்த மதுவால் , அந்த அசுர வனத்தில் இருந்து தாம் தப்பித்து வந்துவிட்டோம் என்பதை இன்னுமும் நம்ப முடியவில்லை. சுகந்திர காற்றை மகிழ்ச்சியோடு சுவாசித்தவள்,
‘இது எந்த ஏரியா. ?சிட்டி மாதிரி தெரியலையே இங்க இருந்து எப்படி ஊருக்குள்ள போறது.? வீராகிட்ட இருந்து தப்பிக்க முடியுமா ? ஒருவேளை மாட்டிக்கிட்டா அந்த அரக்கன் என்ன பண்ணுவான்னு தெரியலையே?’ என ஆதித்யாவை விட துரியனை எண்ணி இன்னுமே மனதில் பயம் கொண்டவள் மறுநொடியே,
‘இதே மாதிரி வாய்ப்பு அடிக்கடி வராது மதி ஏதாவது பண்ணி தப்பிச்சிரு .’ என தன்னை தானே தேற்றியவள்,
‘ஒரு ஃபோன் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று சிந்தித்தபடி வீராவுடன் நடக்காமல் நின்ற இடத்திலே தேங்கி நிற்க ,
வீரா தான் “வா மது” என்று அவளது சிந்தனையை கலைத்தபடி அவளது கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான் .
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ரிசெப்ஷனிஸ்ட் அவர்களை மரியாதையுடன் அழைத்து சென்று விஐபி அறையில் அமரச்செய்து குடிப்பதற்கு சூடான காஃபியை பரிமாறியவள் ,
“சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல டாக்டர் வந்துருவாங்க. வேற எதுவும் வேணுமா சார்” என்று பணிவுடன் கேட்டாள்.
“நோ தேங்க்ஸ், டாக்டரை சீக்கிரமா வர சொல்லுங்க” என்றான் வீரா
“ஓகே சார்” என்றபடி அந்த அறையில் இருந்து அந்த பெண் வெளியேறிய மறுநொடி மது வீராவிடம் ,
“உன்னை இவங்களுக்கு தெரியுமா!”ஆச்சரியத்துடன் கேட்டாள் .
“ம்ம் தெரியாம எப்படி? இது எங்களோட ஹாஸ்ப்பிட்டல்.அதாவது ஆதித்யாவோட ஹாஸ்ப்பிட்டல். நம்ம ஆளுங்களுக்கு ஏதாவது அடிபட்டா இங்க தான் வருவாங்க. இங்க இருக்கிறவங்க எல்லாருமே நம்ம ஆளுங்க தான். ஸோ வெயிட் பண்ணவே தேவையே இல்லை சீக்கிரமா பார்த்துட்டு வீட்டுக்கு போய்டலாம் சரியா” என்றான் வீரா.
‘அச்சோ இது தெரியாம போயிட்டே மறுபடியும் அங்கேயா !?’ மதுமதியின் மனம் மலர்வதற்குள் வாடியது .
“ஏன் ஒருமாதிரி இருக்க ரொம்ப வலிக்குதா?” என்று வீரா கேட்கவும்,
“ஹெலோ வீரா” என்றபடி அங்கே வந்த ஆண் மருத்துவர்.வீராவின் கைகளை குலுக்கியபடி ஒரு சில வார்த்தைகள் பேசியவர், வீராவை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு மதுமதிக்கு வைத்தியம் பார்க்க தொடங்கினார்.
மதுமதியை பரிசோதித்த மருத்துவர் வீராவை உள்ளே அழைத்தார் .
“என்னாச்சு டாக்டர் சாதாரண தலைவலி தானே ?” அக்கறையோடு கேட்டான் .
“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க இந்த மருந்து சாப்பிட்டா.ப்ளட்க்கும் நல்லது. தலைவலியும் சரியாகிரும் ” என்றவர் மருந்து சீட்டை பணிப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீராவிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் மதுவோ வீராவிடம்,
” மருந்து வாங்கனுமே அவங்களே சீட்ட எடுத்துட்டு போறாங்க” என்றதும், அவளைப் பார்த்து புன்னகைத்த வீரா,
” பிரச்சனை இல்ல மது அவங்களே எல்லாம் வாங்கிட்டு வந்துருவாங்க” என்க, மதுவோ தலையில் இடி விழுந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.
வீரா மருந்து வாங்க செல்லும் இடைவெளியில் அவனை திசை திருப்பி விட்டு தப்பித்து செல்லலாம் என்று இருந்தவளுக்கு, இந்த விடயம் அதிர்ச்சியை கொடுக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினாள்.
தான் எண்ணியது நடக்கவில்லை என்றதுமே பதறிய மதுவால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சட்டென்று யோசிக்க முடியாமல் போக, வீராவோ பணிப்பெண் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு மதுவையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
“ரொம்ப வலிக்குதா மது சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம், டேப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு சரியா ” என்ற வீராவிடம் சரி என்பதாய் தலையாட்டிய மதுவுக்கு, மீண்டும் அதே குகைக்குள் மாட்டிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணமே கோபத்தை கொடுக்க, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் திடீரென்று தோன்றிய சிந்தனையில் முகம் மலர,
“வீரா யலைட் பிளாசாக்கு மட்டும் போகணும் கொஞ்சம் முக்கியமான திங்க்ஸ் வாங்கணும், போய்ட்டு வீட்டுக்கு போலாமே ” என்றாள். அதைக் கேட்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டிய வீராவோ,
” அங்கையா? அது சிட்டிக்குள்ள போகணும் மது, அவ்ளோ முக்கியமான திங்க்ஸா என்ன? இங்க எல்லாம் வாங்க முடியாதா” என்று கேட்டான்.
” அது லேடிஸ் விஷயம் ரொம்ப முக்கியம் அந்த ப்ராண்ட் வேற எங்கேயும் கிடைக்காது ப்ளீஸ், முக்கியம் வீரா ” கெஞ்சி கேட்டாள்.
“ஓ” வீராவோ யோசனையுடன் மதுவை பார்த்தவன், சில நொடிகள் கழித்து,
“சரி மது இவ்வளவு சொல்ற வாங்கிட்டே போய்டலாம் ” என்க மதுவோ மகிழ்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டாள்.
மருத்துவமனையைப் போல இந்த மால் ஒன்றும் அவர்களுடையது அல்லவே, போதாக்குறைக்கு விடுமுறை நாள் வேறு, நிச்சயம் கூட்டம் அலைமோதும், எளிதில் தப்பித்து விடலாம், என்று தன் மனதிற்குள் திட்டம் தீட்டியவள், தன் திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தாள்.
@@@@@@@@
உள்ளே வந்தாயிற்று இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையுடனே மாலிற்குள் நுழைந்த மதுமதியால் தான் காண்பதை நம்பவே முடியவில்லை.
தன் எதிரே அர்ஜுனும் ஜூவாலாவும் ஏதோ பேசியபடி புட் கோட் பக்கம் செல்வதை கண்டவள், இனி தான் தப்பிக்க போவதை யாரும் தடுக்க முடியாது என்கிற மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அவர்கள் பின்னால் செல்ல போக அவளது கரங்களைப் பிடித்துக் கொண்ட வீரா,
“மது எங்க போற ஷாப் லெப்ட் சைட் இருக்கு வா” என்று அழைத்து சென்றான். மதுவோ வீராவை எப்படி திசை திருப்புவது என்று புரியாது அர்ஜுன் ஜூவாலா சென்ற திசையை பார்த்த படியே வீராவுடன் சென்றாள்.
பின் கடைக்குள் நுழைந்ததும் கைக்கு எட்டிய பொருட்களை எல்லாம் எடுத்து ட்ராலிக்குள் அள்ளிப் போட்டவள், ட்ராலியை நிரப்பிவிட்டு வேகமாக வீராவிடம் வந்து,
” வீரா எல்லாம் வாங்கிட்டேன் நீ பில் போடு நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு ஓடி வந்திடுறேன் ” என்க, அவள் திட்டம் புரியாது அவனும் சரி என்பதாய் புன்னகைத்தான்.
‘மன்னிச்சிரு வீரா எனக்கு வேற வழி தெரியலை’ என மனதிற்குள் கூறிய மது, வீரா பார்க்க கடையை விட்டு நிதானமாக வெளியேறியவள், அடுத்த நொடி வேகமாக அர்ஜுன் ஜூவாலாவை தேடி புட் கோட்டை நோக்கி விரைந்தாள்.
எங்கே வீராவிடம் மாட்டிக்கொண்டுவிடுவமோ என்கின்ற பதற்றத்தோடே புட் கோட்டிற்குள் நுழைந்து அவர்களை தேடியவளின் கண்களில் அவர்கள் படமால் போகவே மதுவுக்கு அழுகை வர ‘எங்க இருக்கீங்க ‘என கலங்கியவள் மீண்டும் அவர்களை தேடினாள்.
பதற்றத்தில் நெஞ்சம் தாறுமாறாய் துடிக்க சில நொடிகள் நிதானமாக சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழலவிட்டாள்.
அப்பொழுது கை கழுவும் இடத்தில் இருந்த கண்ணாடியை எதர்ச்சையாக பார்த்த மதுமதிக்கு , திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே அர்ஜுன் மற்றும் ஜூவாலா உணவருந்தி கொண்டிருப்பது தெரிய, மகிழ்ச்சியுடன் கண்களை துடைத்துக் கொண்டு அவனை நோக்கி திரும்ப இருந்த கணம்,
“ஜில்லுனு ஜிகர்தண்டா சாப்பிடுறியா பேபி” என்ற குரல், அவள் காதருகே கேட்டது.
கர்ஜனையான அந்த குரலை கேட்டதுமே மதுமதிக்கு தன் பின்னால் நிற்பது யார் என்று தெரிந்து விட, மதுவால் நிமிர்ந்து கண்ணாடியை கூட பார்க்க முடியவில்லை, பயமும் கோபமும் அவளை நிலைகுலைய செய்ய, அடக்கப்பட்ட உணர்வுகளுடன் நின்றிருந்தாள்.
” உன் அக்காவும் உன் அக்கா புருஷனும் உயிரோட வீட்டுக்கு போகணும்ன்னா” என்றவன் ஒரு கணம் நிறுத்தி,
“ம்ஹூம் முதல்ல உயிரோட இருக்கணுமா” என்று அழுத்தமாக கேட்கவும் நிமிர்ந்து ஆதித்யாவின் கூரிய விழிகளை பார்த்தவள் ஆமாம் என்பது போல தன் தலையை அசைக்க,
” அப்ப என்ன பண்ணனும்னு உனக்கே தெரிஞ்சிருக்கும் ” என்றவன் சிரித்தபடி அவளை பார்த்து, “ஸ்மையில் ம்ம் ஸ்மையில்” என்க, அவளும் வேண்டா வெறுப்பாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
ஆதித்யாவோ அத்தோடு நிறுத்தாமல் நேராக அர்ஜுன் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி செல்ல,
“இப்போ எங்க போறீங்க ” பதற்றத்துடன் வினவினாள் மதுமதி.
” இவ்வளவு ட்ராமா பண்ணி திட்டம் போட்டு வந்திருக்க, ஏசிபி சாரை பார்க்கலைன்னா நல்லா இருக்காதுல” என்ற ஆதித்யாவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்ட மதுமதி,
“ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க வேண்டாம் கிளம்பலாம்” கெஞ்சி கேட்டாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த ஆதித்யாவோ,
“அப்போ ஒரு கிஸ் குடு உன் பேச்சை கேட்கிறேன்” என்று சொல்லவும், அவனை முறைத்தவள் முகத்தை திருப்பி கொள்ள ஆதித்யாவோ நக்கலாக சிரித்தபடி அர்ஜுன் அமர்ந்திருக்கும் டேபிள் முன்பு சென்று அமர்ந்து,
” ஹலோ ஏ சி பி சார் வாட்ட அ ப்லசென்ட் சர்ப்ரைஸ்” என்றான்.
ஆதித்யாவையும் மதுவையும் அங்கு எதிர்பார்த்திறாத அர்ஜுனோ திகைப்புடன் அவர்களைப் பார்க்க, அவன் அருகில் இருந்த ஜூவாலாவுக்குமே அவர்களை அங்கே கண்டதில் அதிர்ச்சி தான், அர்ஜுனுக்கு மதுவை பார்த்ததில் என்ன உணர்வென்றே சொல்ல முடியவில்லை.
அதுவும் ஆதித்யாவின் கையணைவில் மதுவை பார்த்ததில், இதயத்தை யாரோ வேகமாக அழுத்துவது போல, ஒருவித வலியை உணர்ந்தவனுக்கு தொண்டை அடைத்து கொள்ள வார்த்தை வர மறுத்தது.
அப்பொழுது ஜூவாலா தான் வேகமாக சென்று மதுவை அணைத்துக் கொண்டாள். தன் தங்கையிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏகப்பட்டது இருந்தாலும், பொது இடம் என்பதால் மதுவின் நலனை மட்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.
வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதில் சகோதரிகள் இருவரும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டனர்.
அதன் பின் ஆதித்யாவை பார்த்து ஜூவாலா மரியாதை நிமித்தமாய் புன்னகைக்க, மதுவோ அர்ஜுனை பார்த்தாள். ஆனால் அவனது மொத்த பார்வையும் ஆதித்யா மீது தான் இருந்தது.
அர்ஜுனின் விழிகளில் தீப்பொறி தெறிக்கவில்லை அவ்வளவு தான், ஆதித்யாவை தன் கனல் விழிகள் தகிக்க முறைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் ஆதியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அர்ஜுனின் கனல் விழிகளை நேருக்கு நேராய் பார்த்தவன் வேண்டுமென்றே, “அப்புறம் சகளை எப்படி இருக்கீங்க” என்க அர்ஜுனோ இன்னும் முறைக்க, ஜூவாலாவுக்கும் மதுவுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இதற்கிடையில் ஆதித்யாவோ,
” சகளன்னு சொல்றது ஏ சி பி சாருக்கு பிடிக்கல போல, அப்போ தம்பின்னு கூப்பிடவா ” தன் குரலில் ஏகத்துக்கு நக்கல் வழிய அவ்வாறு கேட்கவும், தலை கவழ்ந்த நிலையில் அமர்ந்திருந்த மதுவை ஒரு கணம் பார்த்த அர்ஜுன்,
“கால் மீ அர்ஜுன் ” என்றான் அழுத்தமாக.
“ஓகே அர்ஜுன் சார் ” என்ற ஆதித்யா ஜூவாலாவை பார்த்து,
” என்ன மா உன் ஹஸ்பண்ட் எப்பவுமே இப்படி வெரப்பா தான் சுத்துவாரா, இல்லை என்கிட்ட மட்டும் தான் இப்பிடியா ” என்று கேட்கவும் சங்கடமாக அவனைப் பார்த்து புன்னகைத்த ஜூவாலா ஏதோ பேச வரவும்,
“தட் இஸ் யுவர் லிமிட் மிஸ்டர் ஆதித்யா” என்று டேபிளை தட்டியபடி எழுந்து கொண்ட அர்ஜுன்,
” இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம் , நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தரப் பத்தி ஒருத்தர் நல்லாவே தெரியும். சோ இந்த ஃபார்மல் பேச்செல்லாம் வேண்டாம்.
ஓப்பனா சொல்றேன் ஆதித்யா எவ்வளவு ஆடணுமோ ஆடிக்கோ, சீக்கிரம் உன் சாம்ராஜியத்தையே தர மட்டம் ஆக்குவேன் ” என்று ஆக்ரோஷமாக கூறவும் நிலைமை கை மீறுவதை உணர்ந்த ஜூவாலா,
” என்ன பேசிட்டு இருக்கீங்க அத்தான் அமைதியா இருங்க ” என்று அர்ஜுனின் காதில் கூறினாள்.
ஆனால் அளவுக்கு மிஞ்சிய கோபத்தில் இருந்த அர்ஜூனோ ஜுவாலாவின் பேச்சை காதில் வாங்காது, மதுவை பார்த்து,
” இப்ப நான் சொல்ற எல்லாமே உனக்கு தப்பா தான் தெரியும் மது , ஆனா உனக்கு ஒரு நாள் இவன் யாருன்னு புரிய வைப்பேன். அப்போ உனக்கு யாரும் இல்லைன்னு மட்டும் நினைச்சிடாத . உனக்கு நான் இருப்பேன் மது ” என்று கூறினான்.
அவ்வளவு தான் ஆதித்யாவின் முகம் சூடாகி சிவந்து விட்டது. அர்ஜுன் சொன்ன அனைத்தையும் எள்ளல் பார்வையுடன் எதிர்கொண்ட ஆதித்யாவால் மதுவிடம்,
‘உனக்கு நான் இருப்பேன்’ என்று அவன் கூறியதை மட்டும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மர டேபிள் அதிரும் அளவிற்கு அதை ஓங்கி தட்டிவிட்டு,
” ஹவ் டேர் யூ ” என்று தான் அமர்ந்திருந்த சேரை பின்னால் உதைத்து தள்ளிவிட்டு எழுந்தான் ஆதித்யா.
ஆதியின் கோபத்தின் அளவை ஏற்கனவே அறிந்திருந்திருக்கும் மதுவோ மிகவும் பயந்து போனவள்,
“ஆதி ப்ளீஸ் ” தவிப்புடன் அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு, அவனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாள்.
அடங்கா ஆத்திரத்துடன், “நான் இருப்பேன்னா என்னடா சொல்ல வர ஹான்” என்று சீறிக்கொண்டு நின்றான் ஆதித்யா.
“எஸ் ஐ மீன் யிட், மதுக்கு நான் இருப்பேன் அன்னைக்கும் இருந்தேன் இன்னைக்கும் இருக்கேன் என்னைக்கும் இருப்பேன் ” என்று அர்ஜுன் அழுத்தமாக சொல்லி முடிக்கவில்லை,
கொதித்து போன ஆதித்யா “உன்னை” என்று அர்ஜுனிடம் பாய்ந்து அவன் சட்டையை பிடித்து விட, எங்கே இருவரும் அடித்து கொள்வார்களோ என்று பயந்த மது, வேகமாக இருவருக்கும் இடையில் வந்து, ஆதித்யாவை அணைத்து கொண்டவள் வலுகட்டாயமாக அவன் கன்னம் பற்றி, தன் முகத்தை பார்க்க வைத்து, “ப்ளீஸ் ஆதி போகலாம்” என்றாள் கண்ணீருடன். சில நொடிகள் அவள் விழிகளையே பார்த்திருந்தவன், தன் இறுக்கத்தை குறைத்து விட்டு, தனக்கும் மதுவுக்கும் இருக்கும் நெருக்கத்தை தன் விழிகளாலே அர்ஜுனுக்கு சுட்டி காட்டியபடி அவனை ஏறிட்ட ஆதித்யா,
“நல்லா கேட்டுக்கோ அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் மதி எனக்கு மட்டும் தான். மதி என் மகாராணி அவளுக்கு நான் இருக்கேன் அவளை எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும் . சோ என் குடும்பத்தை பத்தி யோசிக்கிறத நிப்பாட்டிட்டு உன் மனைவியையும் உன் குடும்பத்தையும் பாரு.
அப்புறம் ஆம்பளையா இருந்தா ஏதோ சவால் விட்டியே என் சாம்ராஜ்யத்தையே அழிச்சு காட்டுவேன்னு அதை செஞ்சிட்டு என் முன்னாடி நின்னு பேசு டா” என்ற ஆதித்யாவின் பிடியில் இருந்த தனது சட்டையை வேகமாக பறித்தெடுத்த அர்ஜுன் அதே வேகத்துடன் அவனைப் பார்த்து,
“என் பொண்டாட்டியையும் என் குடும்பத்தையும் பார்த்துக்க எனக்கு தெரியும் அதை நீ சொல்ல வேண்டாம். அப்புறம் மிஸ்டர் ஆதித்யா எவ்வளவு ஆடனுமோ ஆடிக்கோ சீக்கிரம் உன் ஆட்டத்தை முடிச்சு வைக்கிறேன்” என்க,
முகம் கொள்ளா புன்னகையுடன் அர்ஜுனை பார்த்த ஆதித்யா,
“முடிஞ்சா செஞ்சிப்பாருங்க ஏ சி பி சார்” என்றவன் மதியின் கரத்தை பற்றிக்கொண்டு அங்கிருந்து செல்ல, செல்லும் அவர்களையே அர்ஜுன் அழுத்தமாக பார்த்துக் கொண்டிந்தான்.
அந்நேரம் சுற்றி இருந்த மொத்த கூட்டமும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த ஜூவாலாவோ, நிறைந்த விழிகளுடன் அர்ஜுனை ஒரு கணம் பார்த்தவள் அங்கிருந்து கிளம்பவும்,
” ஜூவாலா நில்லு” என்றபடி ஜூவாலாவை பின் தொடர்ந்து அர்ஜுன் செல்ல ஆனால் அவளோ வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் அர்ஜுன் தன்னை நெருங்குவதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட, ஜூவாலாவின் செயலில் பல்லை கடித்தான் அர்ஜுன்.
@@@@@@@@@
” நான் வரலைன்னா அவன் கூட போயிருப்பல்ல ” இறுகிய முகத்துடன் அவளை வெறித்து பார்த்தான் ஆதித்யா சக்கரவர்த்தி. மதுமதி அரண்டு போனாள். பயத்தில் இதயம் ‘ தட தட ‘ என ஓடியது. உள்ளங்கை முதல் மொத்த உடம்பும் வியர்வையில் குளித்தது .
கையில் பொருட்கள் அடங்கிய பையோடு நின்றிருந்த வீராவை கண்டாள், ‘ நம்புனதுக்கு நல்லா செஞ்சிருக்க ? ‘ ஐவிரல் பட்டு சிவந்திருந்த அவனது கன்னங்கள் மதுவை குற்றம் சாட்டியது .
வீராவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் உதட்டை கடித்து கொண்டு தலை கவிழ்ந்தாள் மதுமதி .
” தலைவலி இப்போ எப்படி இருக்க பேபி “அடங்கியிருந்த அவன் குரலில் சூறாவளியின் சீற்றம் ஒளிந்திருப்பதை அறிந்த மதுமதியின் உடலில் நடுக்கம் பிறந்தது .’ பேபி ‘ என்னும் சொல்லில் இருந்த அழுத்தம். அவளை அச்சுறுத்தியது.
“…….”
” ஏதாவது சொன்னீங்களா எனக்கு கேட்கல ” – வேண்டமென்றே நக்கலாக கேட்டான் .
” ஸ்பீக் அவுட்” காட்டுக்கத்து கத்தினான்.
” சாரி “
” எதுக்கு ?”
“———————————” கண்களில் இருந்து கண்ணீர் மணிகள் உருண்டன.
மதுமதியின் வெளிறிய முகமும், வடியும் கண்ணீரும் வீராவை கலங்கடித்தது. அவள் மீது அவனுக்கும் கோபம் இருக்க தான் செய்தது. ஆனாலும் ஏனோ அவள் துன்பப்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை. அதனால் அவள் மீதுள்ள கோபத்தை ஒதுக்கிவைத்தவன் ,
” ஆதித்யா “- மதுவின் மீது ஆதித்யாவுக்கு இருந்த கோபத்தை திசை திருப்ப ஆதித்யாவை அழைத்தான் வீரா .
“… “
” ஆதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “
” ம்ம் லிசனிங் “- கேட்டுட்டு தான் இருக்கேன் ..மதியின் மீது இருந்த தன் பார்வையை அகற்றாமல் கூறினான் .
” ஆதி பேசணும்ன்னு சொன்னேன் “
” சொல்லுங்க சார். நீங்க என்ன சொல்ல போறீங்க ” இப்பொழுது அவனது பார்வை வீராவை எரித்தது .
‘ சொல்லி தான் பாரேன். அவளுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு உன் மூஞ்சோடு சேர்த்து உன் பல்லையும் உடைக்கிறேன். என்கிட்ட சொல்லாம சுத்துற அளவுக்கு உனக்கு குளிர் விட்டு போச்சு ‘ என எண்ணியவனின் கை முஷ்டி இறுகியது .
‘ நான் பார்த்துகிறேன் ‘ கலங்கி போயிருந்த மதுவுக்கு தன் கண்களாலே தைரியம் கூறினான் வீரா. ‘ சாரி ‘ மதியின் கண்கள் மன்னிப்பை யாசித்தது. நொடி பொழுது நடந்த பார்வை பரிமாற்றம் தான். அதை கண்ட ஆதித்யாவின் விழிகள் தகித்தது .
“ஓ இதுவேரா !” இகழ்ச்சியில் ஆதித்யாவின் இதழ் வளைந்தது.
‘என்னை தவிர மற்ற அனைவரையும் பிடித்திருக்கிறது ??’ என திகுதிகுவென எரியும் ஆதித்யாவின் கனல் விழிகள் மதியை பஸ்மமாக்கி கொண்டிருக்க அப்பொழுது ,
“கொஞ்சம் ஈஸியா ஹண்டில் பண்ணு ஆதி” – என வீரா சொன்ன மறுநொடி.இதற்காக தான் காத்திருந்தவன் போல “ஹவ் டேர் யு. நீ எனக்கு சொல்லி தரியா” – உச்சஸ்தாதியில் கத்தியபடி வீராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன். கரத்தில் இருந்த தன் அலைபேசியை தரையில் ஓங்கி எறிந்தான் .அலைபேசி சில்லு சில்லாக சிதறியது .
” என்ன பண்றீங்க ஆதி ..” என வீராக்காக பதறியபடி தன்னை நெருங்கிய மதுவை.
“ஏய் ஸ்டே தேர் என்ன ம்ம்ம் துடிக்கிற. அங்கையே நில்லு” தீவிரமாக ஆதித்யா எச்சரிக்க. அதிர்ந்தபடி பின்வாங்கினாள் .
செய்வதை செய்து விட்டு. மழைக்கு கூட அஞ்சும் பூனையை போல அழுது கொண்டு இருப்பவளை காண காண இளகும் தன் மனதை எண்ணி பல்லை கடித்தவன். ‘ எல்லாம் நடிப்பு. மத்தபடி பயமே இல்லை. இன்னைக்கு விட்டா திரும்ப திரும்ப இதையே தான் செய்வா ‘ என்று எண்ணியவன். தன்னிடம் இருந்து நழுவிக்கொண்டிருந்த கடுமையை மீண்டும் இறுக்கமாக பற்றி கொண்டான் .
“வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என அவளது கரத்தை இறுக்கமாக பிடித்தவன் வலுக்கட்டாயமாக அவளை தன்னோடு அழைத்து சென்றான் .
ஆதித்யாவின் கைகளில் சிக்கிக்கொண்ட கார் சீறியபடி அவன் கோட்டையை அடைந்தது. அர்ஜுனை கண்டதும் அவள் கண்களில் தோன்றிய மகிழ்ச்சி ஆதித்யாவின் கண்முன் வந்து போக, ‘ அ..ர்…ஜு..ன் .’ வலியும் கோபமும் ஒன்றாய் வந்து அவனை வதைத்தது. கண்களை இறுக்கமாக மூடி திறந்தான் ஆதித்யா.
அவளை பார்த்தான் ! காரின் ஓரத்தில் ஒடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் . அவள் உடல் வெட வெடவென நடுங்கியது. விலகுகிறாள் ! ஆனால் அதை எப்படி அனுமதிக்க முடியும் உள்ளுக்குள் பொருமினான். தலையை அழுந்த கோதி சீரற்ற தன் மூச்சு காற்றை சமன் செய்தான் .
நல்லாதானே இருந்தாள் திடிரென்று ஏன்? அன்று கூட என் தொடுகைக்கு உருகி குழைந்தாளே. அப்படியிருக்க ஏன் என்னை விட்டு செல்ல துணிந்தாள். அப்படியென்றால் அனைத்தும் நடிப்பா? ஆத்திரமாய் வந்தது.
‘தப்பிக்க நினைத்தது கூட சரி. அந்த அர்ஜுன் அவனை கண்டதும் அவள் கண்களில் என்ன ஒரு ஆனந்தம் ஏதோ நான் கொடுமை காரன் போல ‘ அவனால் தாங்கிக்கவே முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் போல் தோன்றியது.
‘மனதில் வேறு ஒருவன் இருக்கும் பொழுது உன்னிடம் குழையும் அளவிற்கு மது ஒன்றும் தவறானவள் இல்லை கிடையாது. அவள் கண்களில் தெரிந்த நேசம் ஒன்றும் பொய்யும் இல்லை. வேறு ஏதோ உள்ளது பொறுமையாக செயல் படு ஆதி ‘எச்சரித்தது மனம்! கண்களை மூடி ஆழமாக மூச்சை வெளியிட்டு கோபத்தை மட்டுப்படுத்த எண்ணினான். ம்ஹும். ஒன்றும் வேலைக்காகவில்லை.
அர்ஜுன் பேசியதும் அவனது நக்கல் பார்வையும் அவன் நினைவுக்கு வந்து வந்து சென்று ஆதித்யாவின் கோபத்தை தூண்டிவிட. ‘பாடம் புகட்டிய தீர வேண்டும்’ என உள்ளுக்குள் இருந்த மிருதன் ஏற்றிவிட்டான்.
தன் அறைக்கு செல்லும் வரை கூட பொறுமை இல்லாமல் போக. மதியை இறுக்கமாக முறைத்தான் ஆதித்யா .
‘அவன் உன்னை தான் முறைத்து பார்க்கிறான்.’ எச்சரித்தது அவளது மனம். தெரியாமல் இல்லை ! ஆனால் அவனை பார்க்காதது போல அமர்ந்திருந்தாள்.
முதல் நாள் தப்பித்த பொழுது நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவள் முன்பு தோன்றி மறைந்தன. முதுகுத்தண்டு சில்லிட்டது .
“இன்னும் உன் மனசுல தப்பிச்சு போகணும் என்கிற எண்ணம் இருக்கு….ம்ம்ம்ம் ” முரட்டு குரலில் விரவியிருந்த அமைதி.அவளை மேலும் கலவரப்படுத்தியது .
‘ சா… ர ‘ பயத்தில் வார்த்தை வர மறுத்தது .
” அப்போ அன்னைக்கு அவ்வளவு எச்சரிச்சும் உனக்கு பயம் இல்ல அப்படித்தானே “
“— ” பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள்..ஆனால் ‘ஏதோ நடக்க போகிறது ‘ என்று மட்டும் அவள் மனம் எச்சரித்து கொண்டே இருந்தது.
” அவன் தான் உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டானே. தப்பிச்சி என்ன பண்ண போற, உன் வாழ்க்கையில இன்னும் வேற யாரும் இருக்காங்களா என்ன? ” அவளிடம் ‘உங்கள தவிர வேறு யாரும் இல்லை’ என்னும் பதிலை எதிர்பார்த்து அவன் கேட்டான்.
அவளும் அதையே தான் சொல்லிருப்பாள் நேற்று அந்த சம்பவத்தை காணாமல் இருந்திருந்தால். ஆனால் இன்று இந்த நொடி மதிக்கு ஆதித்யா மீது இருக்கும் கோபம் அவளை வேறு விதமாய் பேச வைத்தது.
” ஆமா இருக்காங்க. இப்போ என்ன” பயம் தான் ஆனாலும் சொல்லிவிட்டாள்.
ஆதித்யாவிடம் இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துவிட. சுரீரென்று ஏதோ அவனுக்குள் பாய்ந்தது. சட்டென்று படபடவென துடித்த இதயத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று அவனுக்கு தெரியவில்லை. இது போன்று பதற்றமடைவதெல்லாம் அவனுக்கு மிகவும் புதிது. மனம் மோசமாக வலித்தது .
” ஆஹாங். ” வலியை மறைத்தவன் பொய்யாக வியந்தான் .
“ஆமா ” மீண்டும் ஆமோதிப்பதாக கூறி தலையசைத்தாள். அவனது தாடை இறுகியது. அவளை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்தான். இதயம் துடிப்பின் வேகம் அதிகரித்தது. வலி. கோபம். வெறுமை. வெறுப்பு என ஏகப்பட்ட உணர்ச்சிக்குவியல்கள். ஆதித்யாவுக்கு அதை எப்படி கையாள்வது என்பது கூட தெரியவில்லை. அடக்கப்பட்ட கோபத்தில் தன் பின்னங்கழுத்தை நீவியவன் அவளை நெருங்கி ,
” ம்ம்ம் அது அப்போ..இனி உன் வாழ்க்கையில நான் மட்டும் தான். வேற எவன் இருந்திருந்தாலும் மறந்திடு, அது எவனா இருந்தாலும் சரி “என்று அழுத்தமாக கூறியவன், இதற்கு மேல் இங்கே இருந்தால் தனது கோபம் நிச்சயம் அவளை காயப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, அவளது பதிலை எதிர்பாராமல் காரை விட்டு இறங்கி வேகமாக நடக்க,
மதுவுக்கு தான் ஆத்திரமாக வந்தது ‘இவன் யாரு இதை சொல்றதுக்கு ..?இவன் சொன்னா அப்படியே செய்யணுமா என்ன ? ‘ என எண்ணியவள் “முடியாது” என ஆதித்யாவின் காதில் விழும்படி கத்தினாள்.
அடுத்த நொடியே அவனது நடையின் வேகம் குறைந்திருக்க, ஆதித்யாவின் பார்வை இப்போது மதியின் முகத்தை முற்றுகையிட்டது.
” நீங்க சொன்னா நான் மறந்திடணுமா ?நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை ” அதரங்கள் துடிக்க கூறினாள்.
‘ தன்னவளின் கோபம் ‘ கலப்படமற்ற குழந்தையின் சிரிப்பை போல அழகாக இருந்தது
ரசிக்கத்தான் செய்தான். ஆனால் அதற்கு பிறகு அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் அசுரனை எழுப்பிவிட்டது .
” நீங்க என்னை கட்டுப்படுத்தலாம் ஆனால் என் மனசை கட்டுப்படுத்த முடியாது. கேட்டீங்கல்ல இன்னைக்கு அர்ஜுன் சொன்னத, இன்னைக்கு இல்லைன்னாலும் ஒருநாள் கண்டிப்பா அர்ஜுன் என்னை கூட்டிட்டு போக வருவான்” என உறுதியாக கூறினாள். அவள் குரலில் தான் அத்தனை நம்பிக்கை .
“ஓ அவன் மேல அவ்வளவு நம்பிக்கை…! அப்போ உடைக்காம எப்படி ?இதோ இப்பவே உடைக்கிறேன் ” என தன் சிவந்த விழிகள் இடுங்க பார்த்த ஆதித்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .
மதியை பயமும் கோபமும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டது.
‘ மிஞ்சி போனால் என்னை என்ன செய்துவிடுவான். ?? உயிர் தானே போனால் போகட்டும். இந்த வெறி பிடித்த மிருகத்தினரிடம் இருப்பதை விட மரணம் ஒன்றும் கொடூரம் அல்ல! ‘ என எண்ணியவள் தனக்குள் இருக்கும் பயத்தை முழுங்கியபடி தன் முகத்தை அவன் பார்க்க வேறுபக்கம் திருப்பிக்கொண்டு அலட்சியமாக நின்றாள்.
இங்கே வந்த இத்தனை நாட்களில் அவள் அர்ஜுனை என்ன வேறு யாரை பற்றியும் சில நிமிடங்கள் கூட முழுமையாக எண்ணியதே இல்லை காரணம், திட்டிக்கொண்டோ இல்லை ரசித்துக்கொண்டோ அவள் மனம் ஆதித்யாவை மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தது .
ஆனால் நேற்று இரவு சம்பவம் கொடுத்த ஏமாற்றமும் வலியும் மதியின் மனதை வெகுவாய் பாதித்தது அந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் இந்த அலட்சியம் .
அதை கொஞ்சமும் அறிந்திராத ஆதித்யாவுக்கு அவளது அலட்சியம் ஆத்திரத்தை கொடுத்தது. அவளது கோபத்தை ரசிக்க முடிந்த அவனால் அவளது உதாசீனத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு நேரம் இழுத்துப்பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் எங்கோ பறந்திருக்க.வேகமாக அவளை நெருங்கியவன் முரட்டுத்தனமாக அவளது தாடையை பற்றி தன் பக்கம் திருப்பினான்.
” என்ன நெஞ்சழுத்தம் ! பேசிட்டு இருக்கும் போது முகத்தை திருப்புற” பல்லை கடித்துக்கொண்டு கேட்டான். லேசாக அவன் பிடித்ததுக்கே அவள் கண்கள் கலங்கியது.அப்பொழுதும் அவளது பார்வை அவனை சந்திக்க வில்லை .
” ம..தி. பாரு.லுக் அட் மீ ” கோபமாக கூறினான். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் வலி தாங்காமல் சரணடைந்துவிடுவாள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.. ஆனால் பெண்ணவளை காயப்படுத்தி தனது காரியத்தை சாதித்துக்கொள்வதை தன் ஆண்மைக்கு ஏற்படும் இழுக்காக நினைத்தவனால் அவளிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவளது பிடிவாதம் அவனை சோதித்தது .
” திமிரு உன்னை என்ன பண்றேன் பாரு ” பல்லை கடித்துக்கொண்டு தன் அழுத்தத்தை கூட்டினான். வலி தாங்காமல் அவன் முகத்தை பார்த்தாள் அழகிய மீன் விழிகள் இப்பொழுது வெறுப்பை கக்கியது. சட்டென்று தன் பிடியை தளர்த்தினான் .
” யு ஆர் ஸோ டிஸ்கஸ்டிங் ” – நீ மிகவும் அருவருப்பானவன் வலியில் தன் தாடையை பிடித்து நீவியபடி முகத்தை சுளித்தாள்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்’ ! அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .யார் நீ என அவனை தள்ளி நிறுத்திய அவளது பார்வை அவனது மனதை கூறுபோட்டது.
‘ மதி என்னை அப்படி பார்க்காத’ என்று மனதிற்குள் மிகவும் வருந்தினான். சிறு வயதில் இருந்து வலிகளையும் உதாசீனங்களையும் போராடி கடந்து வந்தவனால் இந்த சிறு பெண்ணின் நிராகரிப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் விலகி சென்றான் .
வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்றியவன் கட்டிலில் அமர்ந்து தலையை இறுக பற்றிக்கொண்டான். தன்னை தானே கட்டுப்படுத்த முடியாதளவு கோபம் கொண்டவனின் முகம் அதீத உணர்ச்சியில் சிவந்து இருக்க சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்களில் அவன் அறையின் பால்கனியில் தொங்க விட பட்டிருந்த பஞ்சிங் பேக் கண்களில் பட. தன் பலம் முழுவதையும் சேர்த்து வேகமாக பஞ்சிங் பேகில் குத்தினான்.
” ஏன் மதி திடீர்ன்னு ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு ? ” என ஆக்ரோஷமாக கத்தியபடி தன் பலம் முழுவதையும் சேர்த்து மூர்க்கத்தனமாக பஞ்சிங் பேகில் குத்தினான் அவன் வேகமாக குத்தியதில் பஞ்சிங் பேகில் அவனை நோக்கி நகர்ந்து வர ” ஏன் ?” என கர்ஜித்தபடி அதை தன் காலால் ஓங்கி உதைத்தான். அவனது நெற்றி நரம்பில் தொடங்கி வெற்று தேகத்தின் தசைகள் உட்பட அணைத்து நரம்புகளும் புடைத்திருந்தது .
அவன் ஆழ்ந்து இழுத்துவிட்டு மூச்சில் அவனது திண்ணிய மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது.. வெற்று தேகம் வியர்வையில் குளித்திருக்க கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஏதோ தன் எதிரியை துவம்சம் செய்வது போல பஞ்சிங் பேகை அடித்து துவைத்தவனின் மனம் இப்பொழுதும் சமாதானம் அடையவில்லை.
” ஏன் ?” என்ற ஒரே ஒரு கேள்வி அவனை படுத்தி எடுத்து. அடித்து அடித்து தளர்ந்து போனவனின் கைகளில் உள்ள மேல் தோல்கள் அணிந்திருந்த க்ளோவ்சையும் தாண்டி கிழிந்திருக்க. மேல் சட்டையை கழற்றி இருந்தவன் ஆறாய் வழியும் வியர்வையோடு அப்படியே தரையில் படுத்தான்.
அவனிடம் என்ன இல்லை ? அவனுக்காகவே வாழும் தாய் !பாசத்தை வாரி வாரி வழங்க அன்பான தங்கை !கேட்டால் உயிரை கொடுக்கும் நண்பன் ! யாருக்கும் கிடைக்காத பதவி ! இதற்கு மேல் ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் ?? எல்லாம் இருந்தும் ஏன் இந்த வெறுமை ?? இதெல்லாம் இல்லாமல் பார்த்தால், ஆதித்யா என்பவன் யார் ?
சிறு வயதில் இருந்து ,எத்தனை வலிகள்.? எத்தனை போராட்டங்கள் ?
தாகத்தோடு சில நாட்கள் ! பசியோடு பல நாட்கள் ! உறக்கம் இன்றி எத்தனை நாட்கள் ?
அன்று அடிப்படை தேவைகளுக்காக தொடங்கிய அவனது போராட்டம் இன்று வரை ஏதோ ஒன்றிற்காக நீடித்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் சில விஷயங்களை அடைந்து விட்டான். ஆனால் பல விஷயங்கள் இன்னும் அவனுக்கு மறுக்கப்பட , ஒவ்வொரு கணமும் கனமாக தான் அவனுக்கு கழிகின்றது .
இப்பொழுது அவனுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவன் நினைத்தால் நொடிக்கு ஒரு பெண்ணுடன்.. மது மாது என்று உல்லாசமாக இருக்கலாம்.
ஆனால் அது அவன் அல்லவே.!
தனது இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு நொடி கூட அவன் மனம் அதற்கு ஆசை கொண்டதில்லை!
இனியும் அப்படி தான் ! அது தான் அவன் ! ஆதித்யா சக்கரவர்த்தி. !
தனிமை. வலிகள். உதாசீனங்கள் என அனைத்தையும் போராடி, கடந்து வந்தவனால் , மதியின் வெறுப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காதல். குடும்பம். மகிழ்ச்சி இதெல்லாம் தனக்கு எட்டாத கனி என்று நினைத்திருந்தவன் மனதில், என்றாவது ஒருநாள் உனக்கும் எட்டும் என்று நம்பிக்கை கொடுத்தது மதுமதியுடனான சந்திப்பு , ஆனால் இன்று அவன் மீது அவள் காட்டிய வெளிப்படையான வெறுப்பு அவனது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து , அதெல்லாம் உனக்கு எட்டவே எட்டாது என்பதை ஆணித்தனமாய் கூற சிலுவையில் அறைந்தது போல ஆதியின் மனம் புண்பட்டது.
வலிகளை தாங்க முடியாத மனிதன் ஒன்றும் அவன் இல்லையே. தனது குழந்தை பருவம் தொடங்கி எவ்வளவு வலிகளை அனுபவித்திருப்பான். ஆனால் அது அனைத்தையும் நொடி பொழுதில் கடந்து சென்ற இரும்பு மனிதன் அல்லவா அவன் !
இன்று போல அவன் ஒருநாளும் தோய்ந்து அமர்ந்ததே கிடையாது. அனைத்தையும் போனால் போகட்டும் என கடந்துவிடுபவனால். ஏனோ மதுமதியை மட்டும் அப்படி விட்டுவிட முடியவில்லை .
“காசுக்காக போராடினேன் ! பாசத்துக்காக போராடினேன் ! உணவுக்காக போராடினேன் ! அனைத்திலும் போராட்டம் அனைத்துமே போராட்டம். இறுதியில் இதிலும்(காதலும்) போராட்டம் என்றால் எப்படி ? எங்கே சென்றாலும் அடைக்கப்பட்ட கதவு , அதுக்குள் ஒளிந்திருக்கும் மறுக்கப்பட்ட பாசம். இதுக்காக மட்டும் எத்தனை இழப்புகளை நீ சந்தித்து விட்டாய். !இன்னுமா உனக்கு புத்தி வரவில்லை! மனம் திட்டாமல் இல்லை. ஆனாலும் அடிபட்ட மனம் ஏங்கியது.
இப்பொழுதும் அவன் விரும்புவது ஒன்று தான் அவன் விரும்பும் பெண் அவன் எப்படி இருக்கிறானோ அவனை அப்படியே நேசிக்க வேண்டும், என்ன ஆனாலும் அவனை நம்பி, காலம் முழுக்க அவனோடு வர வேண்டும். அதுவும் அந்த பெண் மதுமதியாக இருக்க வேண்டும். இங்கு வந்த பிறகு அவளுடனான நெருக்கம் அவள் மேல் அவனுக்கு இருக்கும் நேசத்தை அவனது மனதில் ஆழமாகவும் உறுதியாகவும் வேறுன்ற செய்திருக்க எப்படி? எப்படி அவனால் மதுவை விட முடியும்? முடியவே முடியாது !
” என்ன ஆனாலும் சரி , நீ என்னை தவிர வேறு யார் பெயரையும் சொல் அளவில் கூட உச்சரிக்க கூடாது. உன் மனசு முழுக்க நான் தான் இருக்கணும் இருக்க வைப்பேன்” என்று சூளுரைத்த ஆதித்யா, தேடி சென்றது மதியின் அறைக்கு.
போராடி வெல்ல பெண்ணின் மனம் ஒன்றும் யுத்த களம் இல்லையே ! அதை இந்த போராளி உணர்வானா?
– காதல் சொல்வான்
அத்தியாயம் 15
“அடேய் அதுக்காக அவளை நான் லவ் பண்ணனுமா என்ன” என்ற திலீப் கோபமாக சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த பல்லவியால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை அழுது அழுது கரைந்தாள் பல்லவி.
அழுது அழுது அவளுக்கு காய்ச்சல் வந்தது தான் மிச்சம். இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து பார்த்தவள் நான் என் காதலை அவன் கிட்ட சொன்னால் என்ன. அவன் எப்போதும் போல என் கிட்ட விளையாடி இருக்கிறான் அதற்கு ஏன் கோபம் பட்டு அவனை அடித்தேன் என்று யோசித்தாள் அவனிடம் தன் காதலை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கல்லூரிக்கு வந்தாள் பல்லவி.
“திலீப்” என்று அவள் அழைத்திட , “என்ன” என்றான் திலீப் கோபமாக. “உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற பல்லவியிடம், “என்ன பேசப் போற” என்றான் திலீப் வர்மன்.
“ஸாரி அன்னைக்கு நான் உன்னை அடிச்சுருக்க கூடாது” என்ற பல்லவியிடம், “அதை அடிக்கிறதுக்கு முன்னே யோசிச்சுருக்கனும் கையா இது உலக்கை அதை வச்சு இப்படித் தான் அடிப்பியா டீ” என்று அவன் சிரித்திட, “கோபம் போயிருச்சா டா” என்றாள் பல்லவி. “போயிருச்சு டீ பெங்களூர் தக்காளி” என்றவன், “சரி சொல்லு என்ன விஷயம்” என்ற திலீப்பிடம் , “ஐ லவ் யூ திலீப். அன்னைக்கு நீ சொன்னது ப்ராங்கா இல்லாமல் உண்மையா இருக்க கூடாதா என்று மனசு கிடந்து அடிச்சுக்குது எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் திலீப் ஐ லவ் யூ” என்றாள் பல்லவி.
“ஹேய் பவி என்ன அன்னைக்கு நான் உன்னை ப்ராங்க் பண்ணினேன்னு ரிவெஞ்ச் எடுக்கிறியா என்னை ப்ராங்க் பண்ணி நான் ஏமாற மாட்டேன் டீ” என்று சிரித்தான் திலீப் வர்மன்.
“திலீப் சத்தியமா ப்ராங்க் இல்லை டா உண்மையை தான் சொல்கிறேன் ஐ லவ் யூ” என்றாள் பல்லவி. “என்ன சொல்லுற பவி நிஜமாகவே நீ என்னை லவ் பண்ணுறியா” என்றான் திலீப் வர்மன்.
“ஆமாம்” என்று அவள் கூறிட , “ஸாரி பவி எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸுமே கிடையாது” என்று கூறினான் திலீப் வர்மன். “திலீப்” என்று அவள் ஏதோ சொல்ல வர , “சத்தியமா சொல்றேன் பல்லவி உன் மேல நீ என் ஃப்ரெண்ட் அதை தான்டி எந்த ஃபீலிங்ஸுமே கிடையாது” என்று கூறினான் திலீப்.
“அதான் ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா?” என்ற பல்லவியிடம், “உன்னை எனக்கு பிடிக்கும் டீ நீ என்னோட ஃப்ரெண்ட் அதனால் பிடிக்கும். ஆனால் லவ் எல்லாம் உன் மேல எனக்கு எப்பவுமே வராது பல்லவி” என்றான் திலீப் வர்மன்.
“எப்பவுமே வராதுனா எனக்கு புரியவில்லை” என்ற பல்லவியிடம், “ஐ யம் ஸாரி பல்லவி நீ எனக்கு அக்கா மாதிரி இருக்க உன்னை லவ் பண்ணி உன் கூட ஊரை சுத்தினால் கண்டிப்பா எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க. உன்னை பாடி சேமிங் பண்ணவில்லை நீ ரொம்ப குண்டா இருக்க நான் நேர் ஆப்போசிட் பென்சில் மாதிரி இருக்கேன் நீயே புரிஞ்சுக்கோ எப்பவுமே எனக்கு உன்னை பிடிக்கும் அது வெறும் ஃப்ரெண்ட்டா மட்டும் தான்” என்றவன் கிளம்பிட, பல்லவிக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.
அவளால் நிதர்சனத்தை உணர முடிய வில்லை. தான் குண்டாக இருப்பதை நினைத்து முதல் முறையாக வருந்தினாள். எத்தனையோ முறை சாம்பவி அவளை கிண்டல் செய்து இருக்கிறாள் அப்போது எல்லாம் அவள் கவலையே பட்டது இல்லை. முதல் முதலாக தான் நேசித்த ஒருத்தன் தன் உடலை ஒரு குறையாக கூறி தன்னை நிராகரித்தது அவளுக்கு ரொம்பவே வலித்தது.
நல்ல வேளையாக அடுத்து வந்த நாட்கள் ஸ்டடி ஹாலிடே வந்ததால் அவள் கல்லூரிக்கு செல்லவில்லை. அவனை பார்க்க வில்லை. எங்கே அவனைப் பார்த்தால் மானம் கெட்ட மனது அவனை மீண்டும் காதலிக்க ஆரம்பித்து விடுமோ என்று பயந்தாள் பல்லவி. பரீட்சை நடக்கும் பொழுதும் அவனை பார்க்காமல் தவிர்த்து வந்தவள் தன் தந்தையிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லி கல்லூரியை விட்டு விலகி தன் அத்தை வீட்டில் தங்கி அங்கிருந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
என்னால அவனை பார்க்க முடியலை அபி மனசு ரொம்ப வலிக்க ஆரம்பித்தது. என் உடம்பு தான் பிரச்சினைனு நினைச்சு டயட், எக்சர்சைஸ் எல்லாமே பண்ணினேன். விரதம் இருந்து சாப்பிடாமல் இருந்தேன். உடம்பை குறைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன் ஆனால் இது என் ஃபேமிலி ஜீன் குறையவில்லை. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி வலிப்பு வந்தது தான் மிச்சம். அப்போ தான் என் அத்தை ஒரு விஷயம் சொன்னாங்க, “யாருக்காக பவி நீ உடம்பை குறைக்கனும் அதுவும் பட்டினி கிடந்து. நீ எக்சர்சைஸ் பண்ணு, வாக்கிங் போ அதெல்லாம் நான் தடுக்க மாட்டேன் ஆனால் உடம்பு குறைய வில்லை என்று பட்டினி கிடக்காதே. நீ குண்டா இருக்கிறது உன்னை நேசிக்கிற உன் அப்பா, அத்தை, சங்கவி யாருக்கும் குறையா தெரியவில்லை. குறையா தெரியுற ஒருத்தவங்க உன் வாழ்க்கைக்கு தேவை இல்லாதவங்க அவங்களை பற்றி யோசிச்சுட்டு எங்களை தவிக்க விட்டுடாதே” பவின்னு என் அத்தை சொன்னாங்க அந்த விசயம் நிஜமாகவே எனக்கு புரிஞ்சுது. என்னை என் குறைகளோட ஏத்துக்கிற ஒருத்தன் வருவான். வரவில்லை என்றால் கூட என் அப்பாவுக்கு மகளாவும், என் அத்தைக்கு மருமகளாவும் இருந்தாலே போதும்னு முடிவு பண்ணிட்டேன்.
“அப்போ என்னை பிடிக்கலைனு சொன்னவன் இப்போ பிடிச்சுருக்குனு சொன்னதும் நான் ஏத்துக்கனுமா? சத்தியமா என்னால முடியலை அபி. அவன் திரும்பவும் பெட் கட்டி என்னை ப்ராங்க் பண்ணிருவானோன்னு பயம் தான் மனசு முழுக்க இருக்கு.
அவன் என்னை நெருங்கும் போது எல்லாம் நீ எனக்கு அக்கா மாதிரி இருக்க பல்லவினு அவன் சொன்னது தான் என் காதில் கேட்டுட்டே இருக்கு என்னை என்ன பண்ண சொல்லுற” என்று அழுதாள் பல்லவி.
“என்னை முதல் முதலாக பிடிக்கலைன்னு அவன் தான் சொன்னான். அந்த வார்த்தை என்னோட இருபத்தி ஆறு வயசு வரைக்கும் என்னை விரட்டிட்டே தான் இருக்கு. அந்த வார்த்தை கூட எனக்கு பழகிருச்சு” என்று அவள் அழுது கொண்டே இருக்க அபிநயாவிற்கு தான் தோழியை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை.
“நான் பண்ணினது தப்பு தான் டா நான் மறுக்கவே இல்லை அன்னைக்கு என்னோட வயசு வெறும் பத்தொன்பது தானே டா. அன்னைக்கு எனக்கு என்ன மெச்சுருட்டி இருந்துச்சு சொல்லு காலேஜ் லைஃப் ரொம்ப ஜாலியா என்ஜோய் பண்ணினேன். அப்போ எனக்கு பல்லவியோட காதல் புரியவில்லை அது ஒன்னும் தப்பு இல்லையே ஆனால் அன்னைக்கு நான் ரிஜெக்ட் பண்ணுனதை இன்னமும் மறக்காமல் என்னை வேண்டாம்னு அவள் சொல்லுறது தான் எரிச்சலா இருக்கு” என்றான் திலீப் வர்மன்.
“எனக்கு புரியுது பவி கொஞ்சம் எமோஷனல் டைப் எதையும் ரொம்ப யோசிப்பால் ரொம்ப சென்சிடிவ்வா எடுத்துப்பா ஆனால் அவள் என்ன குழந்தையா இருபத்தி ஆறு வயசாகிருச்சு இன்னமும் ஏழெட்டு வருசத்துக்கு முன்னே நடந்த விஷயத்தை நினைச்சுக்கிட்டு என்னை ரொம்ப காயப் படுத்திட்டு இருக்கிறாள்” என்று புலம்பினான் திலீப்.
“நீ காயப்படுத்தலையா அவளை உன்னால தான் அவள் காலேஜ் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போனாள் அதை மறந்து விடாதே” என்ற ரஞ்சித்தை முறைத்தவன், “அடேய் அதுக்காக நான் எவ்வளவு தான் மன்னிப்பு கேட்பது” என்றான் திலீப் வர்மன்.
“மன்னிப்பு கேளு மச்சி தப்பே இல்லை” என்று கூறிய ரஞ்சித் , “எனக்கு வேலை இருக்கு டா நான் கிளம்புறேன் என்றிட என்னை விட உனக்கு உன் வேலை தானே முக்கியம்” என்றான் திலீப்.
“ஆமாம் டா வேலைக்கு போனால் தானே ஓனர் சம்பளம் கொடுப்பான். நானும் நிம்மதியா சோறு திங்க முடியும்” என்ற ரஞ்சித்திடம், “எப்போ பாரு சோறு, சோறு, சோறு சரியான சோத்து மூட்டைடா நீ” என்றான் திலீப் வர்மன்.
“உனக்கு தெரியாதா மச்சி ஒரு ஜான் வயித்துக்காக தான் இந்த உலகமே ஓடி ஓடி சம்பாதிக்குது” என்றான் ரஞ்சித்.
“இவரு பெரிய கருத்து கந்தசாமி வந்துட்டாரு கருத்து சொல்ல மூடிக்கிட்டு என் பவியை எப்படி கரெக்ட் பண்ணுவது ஐடியா கொடு” என்றான் திலீப் வர்மன்.
“திரும்ப ,திரும்ப அவள் காலில் விழு வேற வழியே இல்லை. நீ கொஞ்சம் ஓவராவே பேசி இருக்க அதனால் அவள் காலில் விழு அதுவும் தினமும் அப்போ தான் உன் பாவங்களுக்கு விமோச்சனம் கிடைக்கும்” என்று ரஞ்சித் கூறிட , “நேரம் டா எல்லாம் என் நேரம்” என்ற திலீப், “சரி போயி வேலையை பாரு என் ஆளை கரைக்ட் பண்ணிட்டு வரேன்” என்று கிளம்பினான்.
“ஐடியா கொடுன்னு திரும்ப வந்துறாதே டா மங்கி” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.
“எங்கே போன” என்று ராகவ் கேட்டிட, “திலீப் வந்திருந்தான் அவனைப் பார்த்து பேசிட்டு வரேன் டா” என்றான் ரஞ்சித். “என்ன விஷயம் என்ற ராகவ் விடம் சும்மா பல்லவி பற்றி தான் பேசினான். அவளை சினிமாவுக்கு அழைச்சிட்டு போனானாம்” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். ராகவ்விற்கு தான் வேலை ஓடவில்லை.
மனதில் வேதனை குடி கொண்டு விட்டது. அந்த நேரம் சாம்பவி அவனுக்கு ஃபோன் செய்தாள். அதை அட்டன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசனையுடன் மொபைலையே பார்த்துக் கொண்டு இருந்தான். கால் கட் ஆனது.
“இவனுக்கு என்ன ஆச்சு ஏன் நம்ம ஃபோன் பண்ணியும் எடுக்காமல் இருக்கிறான்” என்று யோசித்தவள் கடுப்புடன் மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்தாள். இந்த முறை அவன் அட்டன் செய்து பேசினான்.
“என்ன சாம்பவி” என்ற ராகவ் விடம், “உங்களை பார்க்கனும்” என்றாள் சாம்பவி. “எனக்கு வேலை இருக்கு இப்போ வர முடியாது” என்று அவன் கூறிட , “என்ன ராகவ் இது நான் கூப்பிட்டு நீங்க வர மாட்டீங்களா” என்றாள் சாம்பவி.
“அதான் சொல்றேனே சாம்பவி வேலை இருக்கு நாளைக்கு பார்ப்போம்” என்று கூறி விட்டு ஃபோனை கட் செய்தான் ராகவ்.
(…அடியே…)
அத்தியாயம் 14
“இப்போ என்ன” என்ற பல்லவியிடம், “சினிமாவுக்கு போயிட்டு வந்துட்டோம் அடுத்து ஷாப்பிங் போக வேண்டாமா?” என்றான் திலீப் வர்மன். “திலீப் உனக்கு என்ன பைத்தியமா ஏன் என்னை படுத்தி எடுக்கிற ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு நான் வீட்டுக்கு போகனும் என்னை விடு” என்றாள் பல்லவி.
“இதோ பாரு தக்காளி அதெல்லாம் உன்னை விட முடியாது இன்னைக்கு நீ என் கூடவே தான் இருந்தாகனும். நைட்டு எட்டு மணிக்கு உன்னை உன் வீட்டில் விடுகிறேன்” என்றான் திலீப்.
“உனக்கு அறிவு இருக்கா இல்லையா டா எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்ணுற நான் தான் சொல்றேன்ல எனக்கு உன்னை பிடிக்கவில்லைனு அப்புறமும் ஏன் என் பின்னாடியே வர” என்றாள் பல்லவி.
“அடியே சும்மா காதுக்குள்ளே வந்து கத்தாதேடீ காது வலிக்குது” என்று காதை குடைவது போல செய்தவன், “இப்போ என்ன உனக்கு என்னை பிடிக்கலை அதானே பரவாயில்லை. அதுக்காக எல்லாம் உன்னை விட்டுற முடியாது இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி, நான் மட்டும் தான் உனக்கு புருஷன் அதை யாராலும் மாற்ற முடியாது அதனால நம்ம கல்யாணம் முதலில் நடக்கட்டும் அதற்கு பிறகு நீ என்னை அடி, திட்டு , சண்டை போடு நான் சந்தோஷமா ஏத்துக்கிறேன்” என்றான் திலீப் வர்மன்.
“திலீப் நீ ஏன் இப்படி என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமல் பேசிட்டு இருக்க” என்ற பல்லவியிடம், “இதோ பாரு பவி எனக்கு நல்லாவே தெரியும் உன் மனசுல என்னைத் தவிர வேற யாருக்குமே எப்பவுமே இடம் இல்லைன்னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு உனக்கும், ராகவ்க்கும் நடக்க இருந்த என்கேஜ்மென்ட் நின்று போனப்ப நீ அதை ஒரு விஷயமாவே நினைக்க வில்லை அப்படித்தானே” என்றான் திலீப் வர்மன்.
“அதுக்காக நான் உன்னை காதலிக்கிறேன்னு அர்த்தமா” என்ற பல்லவி, “என்னால எந்த காயத்தையும் மறக்க முடியலை திலீப் என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு நீ விலகி போயிரு” என்றாள் பல்லவி.
“பவி” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் ப்ளீஸ்” என்று அவள் கையெடுத்து கும்பிட்டாள் பல்லவி. அவன் ஒரு முறை கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், “சரி பல்லவி வா உன்னை உன் வீட்டில் விடுகிறேன்” என்றான்.
“இல்லை எனக்கு போயிக்க தெரியும்” என்ற பல்லவி கிளம்பிட அவன் செல்லும் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன பல்லவி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட” என்ற அபிநயாவிடம், “ஸாரி அபி” என்றாள் பல்லவி. “ஏய் நான் சும்மா கிண்டலுக்கு தான் கேட்டேன் எங்கே நீ மட்டும் வர உன் ஹீரோ எங்கே” என்றாள் அபிநயா.
“அவன் ஒன்றும் என் ஹீரோ இல்லை” என்றாள் பல்லவி. “பவி என்னாச்சு டீ உன் குரலே ஒரு மாதிரியா இருக்கு” என்ற அபிநயாவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் பல்லவி.
“பவி ஏன் அழற” என்ற அபிநயா விடம், “என்னால முடியலை அபி அவனை மறக்கவும் முடியலை, நினைக்கவும் முடியலை மனசு ரொம்ப பாரமா இருக்கு” என்றாள் பல்லவி.
“என்ன நாயே என் வேலையைக் கெடுக்க தான் வேலை நேரத்தில் வரச் சொன்னீயா” என்ற ரஞ்சித்திடம், “ஆமாம் இவரு பெரிய கலெக்டர் அப்படியே ஆஃபீஸ்ல வெட்டி முறிச்சுட்டு இருக்காரு உண்மையை சொல்லு நாயே கம்ப்யூட்டரில் சீட்டு தானே விளையாடிட்டு இருந்த” என்றான் திலீப் வர்மன்.
“சரி, சரி கம்பெனி சீக்ரெட்டை இப்படி பப்ளிக்கா சொல்லாதே” என்ற ரஞ்சித், “என்ன விஷயம் மறுபடியும் பல்லவி சண்டை போட்டாளா?” என்றான்.
“எப்படி மச்சி” என்ற திலீப்பிடம் , “அவள் துரத்தி விட்டால் தானே உன் கண்ணுக்கு நான் தெரிவேன்” என்ற ரஞ்சித்தை திலீப் முறைத்தான்.
“இப்போ ஏன் முறைக்கிற நான் சொன்னது உண்மை தானே” என்றான் ரஞ்சித். “உண்மை தான் அவளை எப்படி டா சமாதானம் செய்யுறது எட்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம் அதை இன்னும் தூக்கி பிடிச்சுக்கிட்டு எனக்கு புரியுது அவள் அன்னைக்கு நிறையவே காயப் பட்டுட்டாள் ஆனால் அவள் ஒரு விஷயம் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாள். அன்னைக்கு எனக்கு இருந்த மெச்சுரிட்டி ஒரு காரணம் ஆனால் அவள் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாள்” என்று கூறினான் திலீப்.
“பொறுமையா இரு டா எதுனாலும் யோசிச்சு அவளோட மனசை மாத்துவோம்” என்று நண்பனுக்கு நம்பிக்கை கொடுத்தான் ரஞ்சித்.
“என்ன பல்லவி உன் பிரச்சினை என்னன்னு சொல்லாமல் இப்படி அழுதுகிட்டே இருக்க நான் உன்னோட ஃப்ரெண்ட் தானே என்ன ஆச்சு என் கிட்ட சொல்லு துக்கத்தை மத்தவங்க கிட்ட சொல்லும் போது அது பாதியாக குறையும்” என்றாள் அபிராமி.
திலீப், ராகவ், ரஞ்சித், நான் நான்கு பேரும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ். ராகவ் என்னோட ஃபேம்லி ஃப்ரெண்ட் அப்படிங்கிறதால இன்னுமே க்ளோஸ் தான். ராகவ்வை விட திலீப் தான் எனக்கு க்ளோஸ்.
நான்கு பேருமே ஒரே காலேஜ் தான். ஸ்கூல் படிக்கிற வரை ஃப்ரெண்ட்டா இருந்த திலீப் மேல காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு ஃபீலிங் வர ஆரம்பித்தது.
இந்த திலீப் எப்பவுமே ப்ராங்க் பண்ணிட்டே இருப்பான். சின்ன சின்ன விஷயத்தில் என்னை ஏமாத்துறது தான் அவனோட வேலை. அவன் கிட்ட ஏமாந்து போறது எனக்கும் பிடிக்கும். அவன் ரொம்ப அழகா இருப்பான். காலேஜ்ல நிறைய பொண்ணுங்களுக்கு அவன் தான் க்ரஷ் எனக்கும் தான்.
எனக்கு ரொம்ப பயம் எங்கே என் விருப்பத்தை சொல்லி அவன் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டான்னா அதை என்னால தாங்க முடியாது அதனால் தூரத்தில் இருந்தே அவனை ரசிச்சுக்கலாம்னு என்னோட காதலை அவன் கிட்ட நான் சொல்ல விரும்பவில்லை அப்போ தான் ஒரு நாள்..
“ஏய் தக்காளி இங்கே வா” என்ற திலீப்பிடம், “என்னடா” என்றாள் பல்லவி. “உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் டீ ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன் இன்னைக்கு தான் எனக்கே தைரியம் வந்திருக்கு” என்றான் திலீப்.
“தைரியம் வந்திருக்கா என்ன சொல்லுற திலீப் தைரியம் வரும் அளவுக்கு விஷயம் சீரியஸா” என்று பல்லவி கேட்டிட , “ஆமாம் டீ ரொம்ப ரொம்ப சீரியஸ்” என்று கூறிய திலீப், அவளது கையை எடுத்து தன் நெஞ்சினில் வைத்தான்.
“திலீப் என்ன பண்ணுற இது காலேஜ் கேண்டீன் எல்லோரும் நம்மளை தான் பார்க்கிறாங்க” என்றாள் பல்லவி. “பார்த்தால் பார்த்துட்டு போறாங்க எனக்கென்ன” என்ற திலீப், “என் கண்ணை பாரு பவி” என்றான். அவனது “பவி” என்ற அழைப்பில் அவள் உருகி தான் போனாள். அவளது அப்பா, அத்தை, அத்தை மகள் மூவரைத் தவிர அவளை பவி என்று உரிமையாக அழைப்பது திலீப் மட்டும் தான். அதுவும் எப்போதாவது தான் மற்ற நேரங்களில் பெங்களூர் தக்காளி என்று தான் அவளை அழைப்பான்.
“பவி , பவி” என்ற திலீப்பை பார்த்து, “என்னடா” என்றாள் பல்லவி. “என் ஹார்ட் பீட் உனக்கு கேட்குது தானே” என்ற திலீப்பிடம், “ஹும் ஃபீல் பண்ணுறேன்” என்றாள் பல்லவி.
“அது உனக்காக தான் டீ துடிக்குது, உன்னை நினைச்சு தான் துடிக்குது ஐ லவ் யூ பவி என் காதலை ஏத்துப்பியா” என்று அவன் கேட்டிட, அவளுக்கு ஏனோ இதயம் ஜில்லென்று ஆனது. அவளது மனமோ ரெக்கையின்றி வானில் பறந்தது. அவளுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அவனது கையை பிடித்துக் கொண்டவள் “நிஜமா தான் சொல்றியா திலீப், இதை தான் டா நானும் உன் கிட்ட சொல்ல நினைத்தேன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “நம்பிட்டியா பவி ஹேய் நான் ஜெயிச்சுட்டேன்” என்று அவன் துள்ளி குதிக்க ஒன்றும் விளங்காத பல்லவி அதிர்ந்து போய் அவனைப் பார்த்திட, “டேய் ஆயிரம் ரூபாய் எடு” என்றான் திலீப்.
“என்ன பல்லவி நீ இவனைப் பற்றி தெரிந்தும் அவன் சொன்னதை நம்பிட்டியே வழக்கம் போல அந்த பரதேசி ப்ராங்க் தான் பண்ணினான் அதுவும் இந்த முறை ஆயிரம் ரூபாய் பெட் கட்டி” என்றான் ரஞ்சித்.
பல்லவிக்கு என்ன சொல்வது என்றே ஒன்றும் புரியவில்லை அவன் தன்னிடம் கூறியதை உண்மை என்று நம்பி அவனிடம் தன் காதலை சொன்னவளுக்கு அவனது ப்ராங்க் என்ற ஒற்றை வார்த்தை உயிரை வதைப்பது போல உணர்ந்தாள். அவளது கண்கள் நிற்காமல் கண்ணீரைச் சிந்திட அதைக் கண்ட ரஞ்சித், “டேய் அவள் அழறாள் பாரு” என்றான்.
“ஏய் தக்காளி என்னடீ அழுதுட்டு இருக்க புதுசா நான் என்ன உன்னை ஃபர்ஸ்ட் டைம்மா ப்ராங்க் பண்ணுறேன் அடச்சீ கண்ணைத் துடை” என்று அவன் கூறிட அவளுக்கு இருந்த கோபத்தில், “பளார் , பளார்” என்று அவனது கன்னத்தில் அறைந்து விட்டாள்.
“ஏய் பவி பைத்தியம் ஏன் டீ அடிக்கிற” என்ற திலீப்பிடம் பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தில் இருந்து அழுது கொண்டே ஓடி விட்டாள் பல்லவி.
“அவள் என்ன பைத்தியமா டா தக்காளி இல்லை பரங்கிக்காய் எப்படி அடிச்சுட்டு ஓடுறாள் பாரு” என்ற திலீப்பிடம், “ஐ திங்க் அவள் உன்னை லவ் பண்ணுறாள்னு நினைக்கிறேன் டா” என்றான் ரஞ்சித்.
“என்ன என்னை லவ் பண்ணுறாளா முட்டாள் நீ எதுவும் லூசு மாதிரி பேசாதே” என்று திலீப் கூறிட , “இதுக்கு முன்னாடி எவ்வளவோ ப்ராங்க் பண்ணி இருக்க எப்போவாச்சும் அவள் உன் கிட்ட கோபமா பேசி இருக்காளா? இன்னைக்கு கை நீட்டி அடிச்சுருக்காள் ஐ திங்க் அவள் உன்னை லவ் பண்ணுறாள்” என்றான் ரஞ்சித்.
“எனக்கு அந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸுமே அதுவும் பல்லவி மேல கொஞ்சம் கூட இல்லை” என்றான் திலீப் வர்மன்.
“உனக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவளுக்கு இருக்கும் போல அதனால் தான் நீ ப்ராங்க் பண்ணிட்டனு தெரிஞ்சதும் அவளால் தாங்கிக்கவே முடியலை” என்றான் ரஞ்சித்.
(…. அடியே..)