தேவதை 41
அம்ருதா தர்ஷி தள்ளி விட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தாள்…
எதிர்பாராமல் நடந்த இந்த செயலில் தேவாவே திகைத்து போய் தான் நின்றான்… கீழே விழுந்த அம்ருதாவிற்கு கையில் நல்ல தேய்மானம் ஆகி ரத்தம் கசிய… அதை பார்த்த தேவா, லூசு லூசா டி நீ தர்ஷியை திட்டியவாறு அவளை சென்று தூக்கி விட்டான்….
அமுலு அங்கு நடப்பதை திகைத்து போய் நின்று பார்த்து கொண்டிருந்தாள்…
தர்ஷி பெரு மூச்சி இழுத்து விட்டவள், அவனின் காலரை பிடித்து தன் பக்கம் இழுத்து, ஆமா டா நா லூசு தான் இப்ப என்னன்ற!? மூக்கு விடைக்க அவனை நெருங்கி நிற்க…
ஏய் ச்ச….. என கடுப்படித்து தள்ளி சென்று மீண்டும் அம்ருதாவை பிடிக்க சென்றான்….
தர்ஷி வெறி பிடித்தவள் போல் தேவாவின் புறங்கையை பிடித்து தன் பக்கம் இழுத்தாள்… அவளின் கையை தட்டி விட்டவன்,சுற்றி முற்றி பார்க்க, அங்கிருக்கும் மாணவர்கள் அவர்களை தான் நின்று பார்த்து கொண்டிருக்க, தேவா கண்கள் மூடி திறந்து, தன் பின் தலையை கோதியவன்… போடி எல்லாம் பாக்குறாங்க., இழுத்து பிடித்த மூச்சோடு சொல்ல….
முடியாது என்ன டா பண்ணுவ? என்ன பண்ணுவ அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினால்….
ஏய் மரியாதையா போயிரு டி , இல்லனா அவ்ளோ தான் கை நீட்டிருவேன் பாத்துக்க….
எங்க நீட்டு நீட்டு பாப்போம், என மீண்டும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி கொண்டே செல்லவும், என்னடா நடக்குது இங்க? என புரியாமல் பார்த்த அம்ருதா, அதற்கு மேல் பொருக்க முடியாமல்,,
தர்ஷினியின் கையை பிடித்து இழுத்து, உனக்கென்ன பைத்தியமா? டி அன்னைக்கு என்னனா பைக்க தள்ளி விட்ட, இன்னைக்கு காலேஜ்னு பாக்காம ஒரு பையன நெஞ்சுல கைய வச்சி தள்ளுற… என்ன பெரிய ரவுடியா நீ? அம்ருதா கேட்டு முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தாள் தர்ஷி அதில் நிலை தடுமாறி மீண்டும் அம்ருதா கீழே விழ….
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த தேவா தர்ஷியை திருப்பி சலார் என ஒரு அறை விட்டிருந்தான்….
விழுந்த விசையான அடியில் கன்னம் எரியவும் , தர்ஷிக்கு கண்கள் இருட்டி மயக்கம் வர ஆரம்பிக்க, கீழே சரிய பார்த்தாள், பின்னால் இருந்த ஸ்ருதி அவளை பிடித்து விட்டாள்…
தர்ஷினி கண்களில் கண்ணீருடன் தேவாவை அடிபட்ட பார்வை பார்க்க, அவன் அம்ருதாவை தூக்கி எழுந்து நிற்க வைத்து , அவளின் கைகளை துடைத்து விட்டவன்… வா என அவளை பிடித்து மெதுவாக அழைத்து செல்ல, தர்ஷி ஆத்திரத்தோடு அவர்களை பார்த்தாள்..
தேவா பாட்டிலில் தண்ணீர் பிடித்து, அவள் கைகளில் உள்ள சிராய்ப்பு ரத்தத்தில் ஊற்றி கழுவி விட…. பாவம் அம்ருதா எரிச்சலில் துடித்து விட்டாள்…
தர்ஷி , சுருதி எவ்வளவோ தடுத்தும் மீண்டும் பிடிவாதமாய் அவர்கள் அருகில் சென்றவள், உனக்கு என்ன விட இவ தான் முக்கியம்ல! என கேட்க தேவாவிடம் பதில் இல்லை…
சொல்லு டா, உன்ன தான கேக்குறேன்.. உனக்கு நா முக்கியமா? அவ முக்கியமா? என கத்த தேவா அவளை சட்டை கூட செய்யவில்லை….அம்ருதா கையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதிலேயே குறியாக இருந்தான்…
அம்ருதா, தர்ஷி வெறி பிடித்தவள் போல் கத்துவதை பார்த்தவள், அர பைத்தியம் உனக்கென்ன பிரச்சனை இப்போ? எதுக்கு கத்திகிட்டே இருக்க? உன் மேல ரிப்போர்ட் குடுக்க போறேன் பாரு… பதிலுக்கு வாயாட…
ஏய் ச்சி வாய மூடு, நா உங்கிட்ட பேசலல, பொத்திக்க… எங்க வேணும்னா போய் ரிப்போர்ட் பண்ணிக்க, அத பத்தி எனக்கு கவலை இல்ல… ஆமா நீ என்ன ஓவரா பேசுற? வாங்குன அடி பத்தலையோ! உன்னலாம் வாய உடைக்கணும் அப்போ தான் சரி வருவ…
ஏய் வண்டு இங்க இருந்து போ முதல்ல… என கண்டிப்புடன் தேவா சொல்ல….
என்ன டா என்ன அனுப்புறதுலேயே குறியா இரு.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், நீ எனக்கு கிடைக்கல நா கண்டிப்பா செத்துருவேன்,
ஏய் இப்டிலாம் பேசாத டி….
நா வாழுவேன்னு மட்டும் நினைக்காத… என்றவள் விறு விறுவென அங்கிருந்து நடந்து செல்ல…
தேவா பின்னால் நின்று வேடிக்கை பார்த்த ஸ்ருதியிடம், அவளை கூப்டு போ என கண்ணை காட்டினான்… அவளும் சரி என தர்ஷி பின்னாலேயே சென்று விட்டாள்…
ப்ரோ யாரு ப்ரோ இந்த லூசு இப்படி பிஹேவ் பண்ணுது? புறங்கையை இதழ் குவித்து ஊதியப்படி கேட்டாள் அம்ருதா….
சாரி மா, அந்த அரைவேக்காடு நா லவ் பண்ற பொண்ணு தான் என்றதும், அம்ருதா அதிர்ச்சி யுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்…
ஓஹ் அப்போ இது லவ்வர்ஸ் சண்டையா? சரி இடையில நா என்ன பண்ணேன்? ப்ரோ எனக்கு எதுக்கு இந்த அடி?
ஹ்ம் அந்த அரைவேக்காடு நா உன்ன லவ் பண்றன்னு நெனச்சி பொஸசிவ்ல இப்டி பண்ணிட்டா….
ஓஹோ அப்டியா? நல்லா யோசிச்சிட்டிங்களா? இத தான் லவ் பண்ணனுமா?
ஹ்ம்ம் சிரித்த படி தலையாட்ட…
ப்ரோ உன்ன பாத்தா பாவமா இருக்கு ப்ரோ, சரி உன் லைஃப் உன் விருப்பம், அப்புறம் என தேவாவின் தோளில் வலியுடன் கை போட்டவள், அவன் காதருகே சென்று… இந்த அழகா இருக்குற பொண்ணுங்கள்ட சுத்தமா மூளை இருக்காதுன்னு சொல்லுவாங்க கரெக்ட் தான் ப்ரோ என ஓத…. அவளை செல்லமாய் முறைத்து வைத்தவன்…
நல்ல வேலை அவ காதுல விழற மாதிரி சொல்லல… வாயில ஏறி மிதிச்சிருக்கும் அந்த லூசு… சரி வா போய் ஒரு இன்ஜெக்க்ஷன் போட்டுட்டு வந்துரலாம் என அழைக்க…
அதெல்லாம் வேணாம் ப்ரோ.. அந்த அளவுக்குலாம் அடி இல்ல, சின்ன அடி தான்.. என்ன கொஞ்சம் வலிக்குது… உங்க லவ்வர்ன்ட்றதால சும்மா விடுறேன்.. இல்லனா நானும் ரவுடி தான்… சரி ப்ரோ நீங்க வாங்க ஒரு பிரியாணியும், ஐஸ் க்ரீமும் வாங்கி குடுத்தீங்கனா சரியா போயிரும் ஈஈஈஈஈ என இழித்து கேட்டவளை… தலையில் கை வைத்து ஆட்டியவன்.. சரி வா வாங்கி தரேன் என அழைத்து சென்றான்…
ஸ்ருதி, தர்ஷியை வழுக்கட்டாயமாக தான் ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றாள்.. ஒரு பார்க்கில் ஆட்டோவை நிறுத்தி விட்டு உன்கிட்ட பேசணும் கொஞ்சம் கீழ இறங்கி வா என தர்ஷியை அழைக்க… அவள் வேண்டா வெறுப்பாய் தான் இறங்கி சென்றாள்…
இருக்குற கடுப்புல நீ வேற ஏண்டி… என்ன விஷயம் சொல்லு…
இங்க பாரு சொல்றத முழுசா கேளு, அவசரப்படாத, அப்புறம் உனக்கு தான் நஷ்டம்….
ஹ்ம்ம் இமை மூடி பெருமூச்சி விட்டவள், சரி சொல்லு… என்றாள் தர்ஷி…
ஹ்ம்ம் சரி நீ எப்போலேந்து தேவாவ லவ் பண்ற? என ஸ்ருதி அவளிடம் கேட்க…
தெர்ல.. ஆனா அவன் என்கூட பேசாத இந்த கொஞ்ச நாள் தான், நா அவனை தான் விரும்புறேன்னு என் மனசு சொல்லுச்சு…
இந்த கொஞ்ச நாள் லவ்வுக்கே உனக்கு இவ்ளோ வலிக்குதே! அவன் யார்கிட்டயாச்சும் பேசுனா உன்னால தாங்க முடியலையே! நீ சின்ன வயசா இருக்குறதுல இருந்தே ஒருத்தன் உன்ன லவ் பண்றான்… ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே உயிருக்கு உயிரா நெனச்சிட்டு இருக்கான்… அவன் கண்ணு முன்னாடி தான் நீ இன்னோருத்தன லவ் பண்றனு சொல்லிட்டு திரிஞ்ச… அவனுக்கு எப்டி வலிச்சிருக்கும்.? எவ்ளோ வேதனையில வாழ்ந்திருப்பான்., என கேட்க…
தர்ஷிக்கு ஒன்றும் விளங்கவில்லை… அவளை புரியா பார்வை பார்த்தாள்…
அவளின் பார்வையை புரிந்து கொண்டவள், நக்கலாக புன்னகைத்த படி புரியலையா? என கேட்க…
இல்ல என்பது போல் தலையசைத்தாள்., தர்ஷி….
உன் பிரச்சனையே இது தான் பக்கத்துல இருக்குற அன்ப நீ என்னைக்குமே உணரவோ, தெரிஞ்சிக்கவோ இல்ல.. அவனை நீ ஒரு மனுஷனா கூட மதிக்கல..? அப்புறம் எப்டி அவன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்ப? சற்று கடுப்புடன் ஸ்ருதி கேட்க… தர்ஷிக்கு கோவம் வந்து மூக்கு விடைக்க, இடுப்பில் கை வைத்து நின்றவள்..
அந்த நாய்க்கு இப்டி ஒரு ஆசை இருக்கா? நா அவனை பிரெண்டால பார்த்தேன்… அவள் திட்ட திட்ட ஸ்ருதிக்கு முகம் மாறியது… என்ன இந்த பைத்தியம் இப்டி பேசுது?! இப்போ தான அவனை லவ் பண்றேனு இல்லாத அட்டூழியம் பண்ணிட்டு வந்துச்சு புரியாமல் விழித்து கொண்டே நிற்க…
அந்த பரதேசிக்கு நா தேவாவ லவ் பண்றனு தெரியும்ல! இதுல உன்ன வேற லவ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்துச்சி.. இப்போ என்ன லவ் பண்றேன்னு சொல்லிருக்கு… எவ்ளோ தைரியம் அவனுக்கு….
எம்மா எம்மா எம்மா ஏய் நிறுத்து மா… இரு இரு நீ யாரை பேசுற…?
வேற யாரு அந்த ஜெய் நாய் தான? அவனை நான் பிரெண்டால நெனச்சேன்…
ஸ்ருதி, அவளின் அறியாமையை பார்த்து சிரிப்பதா? அழுவதா என தெரியாமல் தலையில் கை வைத்து உட்காந்து விட்டாள்…
நீ கவலை படாத ஸ்ருதி நா பாத்துக்குறேன்… நீ அவனை ட்ரூவா லவ் பண்றனு எனக்கு தெரியும்…. உன்ன அந்த நாயோட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு…
நாசமா போச்சி…. நீ உண்மையாவே பைத்தியமா இல்ல நடிக்கிறியா? டி லூசு லூசு….
அவள் திட்டுவத்தில் குழப்பம் அடைந்தவள், எதுக்கு டி என்ன திட்ற..? என அப்பாவியாய் கேட்டு வைத்தாள்…
பின்ன திட்டாம! அரைவேக்காடு நா இவ்ளோ நேரம் சொன்னது ஜெய்ய பத்தி இல்ல முண்டம் ….
தர்ஷி வாயை பிளந்தவள், பின்ன….
உன் தேவாவா பத்தி தான்….என தலையில் அடித்து கொண்டவள், தேவா நீ இத போய்யா லவ் பண்ற!? கஷ்டம் டா கடவுளே…. என வாய் விட்டே புலம்ப….
ஹி ஹி ஹி சாரி….. ஸ்ருதி என அசடு வழிந்தாள்…
என்ன சாரி, பூரின்னு… ஏண்டி உன் அவசர புத்திய விடவே மாட்டியா? இங்க பாரு உன் நல்லதுக்கு சொல்றேன்… லைஃப்ல நிதானம் ரொம்ப முக்கியம் மா அது இல்லனா கஷ்டம் என சொல்ல… தர்ஷினி பாவமாய் நின்றிருந்தாள்…
எனக்காக ஒரு உதவி செய்வியா? ஸ்ருதி…
என்ன சொல்லு….
இந்த விஷயத்தை ஜெய்க்கிட்ட மட்டும் சொல்லிராத டி,, என்ன ஓட்டியே கொன்றுவான்…
சரி சரி சொல்லல….
தேங்க்ஸ் ஸ்ருதி… அப்புறம் நீ தேவாவ பத்தியா சொன்ன… ஆனா அவன் அம்ருதாவல லவ் பண்றான்னு நெனச்சேன்….
நீ தான் நல்லா நெனைப்பியே! தெண்டம்…. அவ தேவாவ பிரதர்னு கூப்டு பேசிட்டு இருக்கா உன் அவசர புத்தியால என்ன ஏதுன்னு தெரியாம,, அவளையும் புடிச்சி கீழ தள்ளி… அவனை புடிச்சி திட்டி… உன்னோட ரொம்ப கஷ்டம் டி சலித்து கொள்ள….
அனைத்திற்கும் தன் அவசர புத்தியே காரணம் என தன்னையே நினைத்து வெட்கி போனவள்… எப்புடி இனி அவன் மூஞ்சில முழிப்பேன்? என விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள் தர்ஷி….
தர்ஷி, இத நா சொல்லிருக்க கூடாது தான்.., ஆனா நீங்க அடிச்சிக்குறத பாத்தா எனக்கு வேற வழி தெரியல, உன்னால தேவா ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் டி.. இனிமேலாச்சும் அவனை நல்லா பாத்துக்க என்ன புரிஞ்சிதா….
அவன் என்ன லவ் பண்ணிருக்கானு சொல்ற!? எனக்கு எப்டி தெரியாம போச்சு…
நீ நல்லா யோசிச்சு பாரு, அவனோட பார்வையே உனக்கு உணர்த்தி இருக்கும்… நா ஒரு முறை பக்கத்துல இருக்குற அன்பு உனக்கு புரியலன்னு சொல்லி திட்டினேன் தெரியுமா? அது இத வச்சி தான், உனக்காக அவன் சாகவே போய்ட்டான் தெரியுமா?
தே தேவா சாக போய்ட்டானா? கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது…. நீ என்ன சொல்ற? …
ஆமா, நீ வசிய லவ் பண்றனு அவன்கிட்ட அடிச்சி சொன்ன அன்னைக்கே அவன் போய் கடலுல குதிச்சி சாக பாத்திருக்கான்…ஜெய்யோட அப்பா தான் காப்பாத்திருக்காரு…. என்றதும் தர்ஷிக்கு உயிரே இல்லை… தப்பு தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன் என தன்னையே கன்னத்தில் அடித்து கொள்ள, அவள் கையை பிடித்து தடுத்த ஸ்ருதி…
இரு மா இன்னும் இருக்கு, அதுக்கு பிறகு அடிச்சிக்கோ! நீ ஒரு வேலை பண்ணு தேவா வீட்டுக்கு போ, அவன் ரூம்ல ஒரு கப்போர்டுல டைரி இருக்கும், அது உனக்கானது தான்…அவனுக்கு தெரியாம அத படி பிறகு உனக்கே எல்லாம் புரியும் என்றதும். தர்ஷி பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்…
நினைவலைகள் யாவும் அந்த டைரியை சுற்றியும், அவன் ஒவ்வொரு முறை தன்னை காதல் பார்வை பார்த்திருக்கிறான் என்றும் புரிய வர… அவன் வீட்டுக்கு போறதுக்குள்ள அந்த டைரிய படிச்சே ஆகணும் என ஸ்ருதியை பிடித்து இழுத்து கொண்டு சென்று விட்டாள்…..
நைட் மட்டும் வெயிட் பண்ணா நாளைக்கே அவனே குடுத்து படிக்க சொல்லிருப்பான், பய புள்ளைக்கு இதுலயும் அவசரம்… அவசர குடுக்கை….. 🤣🤣
தொடரும்……