தேனிலும் இனியது காதலே 07

5
(2)

காதலே -07

வித்யாவோ அலைபேசியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நிதீஸ் மெசேஜ் பார்த்ததற்கான அறிகுறியாக இரண்டு நீல நிற அடையாளம் காட்டியது.” குட் நைட் மெசேஜ்” ஆவது நிதிஸுடமிருந்து வரும் ஆனால் இன்று எதுவும் வரவில்லை யோசனையுடனே வித்தியா தூங்கி போனாள்.

எங்கேஜ்மென்ட் மூடியே சஹானாவின் வீட்டுக்கு வந்தனி தனது  கல்லூரித் தோழிகளுடன் இணைந்தது கொண்டாள்.சகானாவுடன் அவளது அத்தையும், அத்தை மகளும் தங்கிக் கொள்ள, கனி தோழிகளுடன் தங்கிக் கொண்டாள். தாயிடனும் கனி பேச தவறவில்லை

வீட்டுக்கு வந்தனர் ராமும் நிதிஸும், அம்மா சாப்பாடு வேணாம் என்ற நிதீஸ்  தனதறைக்கு நுழைய  ராம் மட்டுமே உணவை உண்டான் “என்னாச்சு அவனுக்கு” என தாய் கேட்க “ஏதோ டென்ஷனாக இருக்குமா” என்றவன் அவரை சமாளித்துவிட்டு அறைக்குள் சென்றான்.

தனது இறங்கி வந்த நீதிஸ் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் “ஹனி வாய்ஸை தேடி எடுக்க” அதுவோ காதலில் குழைந்து,வழிந்து அவன் செவியை அடைய அவன் முகத்திலும் சோகம் மட்டுமே ‘எங்கடி இருக்க’என் மனதில் வருந்தியவன் நேரம் சென்றே தூங்கினான்.

யாருக்கும் காத்திராமல் அடுத்த நாளும் இல்லை புலர திருமண வீடா களைகட்டியது. அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் திருவிழா நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கோயிலுக்கு செல்ல வேலைகளும் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திற்கு வந்த ராம் தனது பிஏ ரூபியை அழைத்தவன் “புதுசா ஜாயின் பண்ணுவங்கட டீடைல்ஸ் மெயில் பண்ணுங்க என்றான்.

‘லீவ் நாளில் இருக்க விட மாட்டார் போல’ என தனக்குள் பேசி ரூபி அவர்களின் தகவல்களை தனது லேப்டாப்பில் தேடியவள் அது இல்லாது போகவே ராமுக்கு அழைத்தவள் “சார் ஆபீஸ்லயா இருக்கீங்க?” “ஆமா” ” நம்ம சிஸ்டத்துல   டீடைல்ஸ் எல்லாம்    ஆட் பண்ணி இருக்கு” என்றாள் “ஓகே தேங்க்ஸ்”  நான் பாத்துக்குறேன் என ஆழைப்பைத்  துண்டித்தான்.

சிஸ்டத்தை  திறந்தவன் அதில் கனிமலரின் தகவல்களைப் பார்த்து அதில் அவளின் அலைபேசி எண்ணை எடுத்து அவளுக்கு அழைப்பை எடுக்க அவள் அழைப்பை ஏற்கவேயில்லை திருமண வீட்டில் போஃனை எங்கனம் எடுப்பது போஃனும் அடித்தடித்து  ஓய்ந்து போனது தான் மிச்சம்.

திருமணமும் நல்லபடியாக முடிய தோழிகளிடமும் சகானாவின் தாய், தந்தை அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தனது தம்பியுடன் ஹாஸ்டலிற்குப் புறப்பட்டாள் கனி.

வெளியூரில் இருந்து வந்த வேலை செய்யும் பெண்களும் மற்றும் கல்லூரி மாணவர்களுமே அங்கு தங்கியிருந்தனர் பாதுகாப்பான இடமே அது.

தர்சனுடன் வரும் போது தான் அலைபேசியை பார்த்தால் அதில் தவறவிட்ட அழைப்புகள் பல  ஹாஸ்டலும் வரவே அவளை விட்டுவிட்டு புறப்பட்டான் தர்சன். ஹாஸ்டலுக்கு வந்தவள் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து ஹாப்பி என்று கலந்து எடுத்துக்கொண்டு முதலில் தாய்க்கு அழைப்பெடுத்தவள் “ஹலோ அம்மா”….” சத்தத்துல விளங்கல கல்யாணம் நல்லபடியா  முடிஞ்சது,” என்றாள் “அப்பா எங்க?”…” அம்மா நியூஸ் பாக்கிறார்,” “ஓகே ஓகே வார கிழமை வாரேன்” எங்க தாயுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அப்போது  புதிய எண்ணில் இருந்து  அழைப்பு வர அழைப்பை ஏற்று “ஹலோ” என்றதும் “கனிமலர் ஐம்  ராம்” “சொல்லுங்க சார்” அவனுக்கும் எப்படி கேட்பது என்று தயக்கம் தயக்கத்தை விடுத்து “வெட்டிங் எல்லம் எப்படி” என கேட்க, ‘இவர் என்ன வெட்டிங் பத்தி கேட்கிறார்’,,,” நல்லா போயிட்டு இப்பதான் சார் ஹாஸ்டலுக்கு வந்தேன்’ என்றாள் ஓகே கனிமலர் “வெட்டிங்ல்  மியூசிக்  குரூப்   யார்டா ? “தெரில சார்” சரி கனிமலர் வீட்ட பங்க்ஷனுக்கு மியூசிக் அரேஞ்ச் பண்ணுவம்னு நினைச்சன்  அதான்” என்றான்.  “தெர்ல சார் ப்ரண்ட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்றாள். ‘ஓகே மா குட் நைட்” என அழைப்பை   துண்டித்தான்.

அன்று  நிதிஸ் சாப்பிடக் கீழே வந்ததுடன் சரி தனது அறையிலேயே தஞ்சமடைந்து கொண்டான். “கல்யாணி இவனுக்கு என்ன ஆச்சு ரூம விட்டு வெளிய வாரானே இல்ல” “தெரியல அத்தை அவன் முகம் இரவு வரும் போது சரியில்ல ராம் கிட்ட தான் கேட்டு பாக்கணும்” தேவ்  எப்ப வாரான்” “நாளைக்கு வருவாரத்தை என்றார் கல்யாணி தேவ் தொழில் விடயமாக ஹைதராபாத் சென்றுள்ளார்.

இங்கு கனியோ தனது  காந்தக் குரலில்” கனவில் உன்னோடு என்ன பேசினால் என்னை நினைவில் யோசிக்கிறேன்” என  தொடங்கியவள். “முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்”என் பாடலை சில வரிகளை பாடியவள் இன்னைக்கு வெட்டிங் உனக்கு போன இன்ஸ்டாரின் நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா எப்படி இருக்குனு எண்ணாமல் இருக்க முடியல, என அக்கானொளியையும் அழகாக எடிட் செய்து பதிவேற்றம் செய்தவள் அதனைத் தொடர்ந்து தூங்கியும் போனாள்.

அவள் குரலியே இரவு பகலா கேட்கும் நிதிஸுற்கோ  அவளின்  யூடியூப் சேனலில் இருந்து புதிய பதிவு வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர அதனை அவன் திறக்க அவன் இதழ்களில் அழகான புன்னகை, உருங்கே வலியும் சேர்ந்து எழுந்தது.

மறு நாள் நடைபெறவிருந்த  மியூசிக் கன்சன்டை கேன்சல் செய்திருந்தால் நிதிஸ். இதெல்லாம் அவனுக்கு நஷ்டம் தான் ஏற்பாட்டுக் குழுவிற்கும் அவனின் வரவை  எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் இது ஏமாற்றம். ஏற்பாட்டுக் குழுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை உடல்நிலை சரியில்லை என்று அறிவித்திருந்தான் நிதிஸ் உடல் நன்றாகத்தான் இருந்தது மனது தான் சரியில்லை.

“டேய் ஏன்டா இப்படி ஆயிட்ட மியூசிக் கன்சென்ட்டையும்   கேன்சல் பண்ணி வச்சிருக்க” என ராம் திட்ட,  நிதிஸோ ராமை கண்டு கொள்ளாது தனது அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். “இவன” என்ன ராம் அவனது அலைபேசியை பறித்தான் அதில் கோபமடைந்த நிதிஸ் ராம் “அவுட்” என்றான். மறு நொடியே ராம் அவனையே வெறித்துப் பார்த்த ராம்  அலைபேசியை அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

ஓஓஓஓ “சிற்”என தலையைக் கோதியவன் “நிதிஸ் யூ  இடியட்  போல பிஹேவ் பன்ற” என தண்ணி திட்டிக் கொன்டான் .

அப்படியே நாட்களும் செல்ல வித்தியாவை இயன்றளவுக்கு தவிர்க்கத் தொடங்கி விட்டான் நிதிஸ். வெளியே கிளம்பிய நிதிஸைத் தடுத்தது அன்னையின் குரல் ” என்னம்மா “…..

”  இங்க வா, உட்காரு என்றார். தேவி பாட்டியோ கோயிலுக்கு சென்றிருந்தார் பிரதாப் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் ராம் இன்னும் வீட்டுக்கு வரவில்லை.

“நீ ரொம்ப மாறிட்ட”…..” ப்ச் அப்படி ஒன்னும் இல்லம்மா ஓகே உனக்கு ஏதோ பிராப்ளம் நீ சொல்ற இல்ல என்னும் போது பிரதாப் அவ்வளவும் வர பரவால்ல நாங்க உனக்கு அவ்வளவு தூரமா போயிட்டேன் போல தரங்கிணி வீட்டை இருந்து பேசினாங்க ராம் உனக்கு முடிய தா வெட்டிங் பண்றதா சொல்றது நியாயம் தனி. வயசு வந்த பிள்ளை எவ்வளவு நாள் தான் அவங்க வச்சிருக்கறது என  கல்யாணி பேச

அங்கு வந்த பிரதாப் “நிதிஸ்” “எஸ் டாட் மியூசிக் கன்சன்ட்ட கேன்சல் பண்ணிருக்க ஆர்கனைசர் டேவிட் ரொம்ப கவலைப்பட்டா என்று அவனுக்கு செம லாஸ்”என்றார்.

“சாரி டாட் கொஞ்சம் டல்லா ஃபீல் பண்ண வாய்ஸ்ஸும் கட்டின போல இருந்துச்சு, டேவிட் சார் லாஸ்ஸ செட்டில் பண்ணிடுறேன் என்றான் நிதிஸ்  “ஓகே தட்ஸ் குட் என்றார் பிரதாப்.

அப்போது தேவி பாட்டியும் பூக்கூடையும் உள்ளே நுழைந்தவர் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு பேரனுக்கு மட்டும் அவன் நெற்றியில்  விபூதி வைத்து விட்டவர்.”என்னவாம் உன் பையனுக்கு” என்றார் அவர் கல்யாணிடம்” நீங்களே கேளுங்க அத்தை” என்றார் கல்யாணி.

தரங்கணி   விட்டு இப்ப என்ன சொல்ல, உனக்கு பொண்ணு பார்ப்போமா? எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்க போற? அரசல் புரசசலாக ஹனி வாய்ஸ் பற்றி தேவி பாட்டிக்கும் கல்யாணக்கும் தெரிந்திருந்தது.

கொஞ்ச நாள் டைம் தாங்க என்றால் கல்யாணியைப் பார்த்த பாட்டியோ “சரிப்பா “என்றதோடு எதுவும் சொல்ல வில்லை .

வார இறுதியில் வீட்டுக்கு வந்த கனிக்கோ  இடியாக வந்திருங்கிய செய்தி  ‘நாளைக்கு     பொண்ணு பார்க்க    வருவாங்க’ என்னும் செய்தி தான், “அம்மா என்னமா இது, ஒரு வார்த்தை புடிச்சிருக்காக்கானாவது  கேட்டீங்களா? உங்க அப்பா பற்றித்  தெரியும் தானே. அவருக்கோ      கணவன்  தன்னிடம் கூட  சொல்லாதது கவலையை தந்தது.

வாணி சுந்தரம் அண்ணாட பையனுக்கு மலர  கேட்டாங்க,நல்ல பையன் கை நிறைய சம்பாதிக்கான்,சென்னைலான் பேங்ல  வேலை செய்றான். நானும் சரினு சொல்லிட்டேன்.வார கிழமை பொண்ணு பார்க்க வருவங்க என மேகநாதன் இதை ஒரு அறிவிப்பாக மனைவியிடம் சொன்னார்.

” ஏங்க என்கிட்ட ஒரு வார்த்தை இத பற்றி சொல்லிமிருக்கலாமே,அதான் இப்ப சொல்றன் தானே  “மலரட  சொல்லு”   என்றார்.ஆணதிக்க மனப்பான்மை அதிகம் கொண்டவர் தான் மேகநாதன். ‘கல்யாணம் கட்டப் போரவள் கிட்டயாவது விருப்பம் கேட்டாரா ,என்ன மாதிரியான மனிதன் இவர்’,வாணியால் மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.

” சேலை எல்லாம் எடுத்தாச்சி தைக்கவும் குடுத்துடன் போட்டுப் பார்த்து வாங்கிட்டு  வருவோம் வா”  என மகளையும் அழைத்துக் கொண்டு தையல் காரப் பெண்ணிடம் சென்ற வாணி தைக்கக் கொடுத்த பிளவுசை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

“ம்மா ”

” என்னடி இப்பதானேமா காலேஜ் முடிச்சன் ,என்ன கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்களேன்,என்றாள்.”இத நீயே உங்கப்பாகிட்ட சொல்லு  என்றார்.நாளைக்கு மாலையில் தான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதாக இருந்த்து.

அன்று இரவு “கனி வந்து சாப்பிடு , மதியமும்  சாப்பிடல்  வா ” என அன்னையின் குரலில்  தனது அறையில் இருந்து வபத்வள் ” ம்மா”  என அழும் குரலில் பேச ” நா என்னடி செய்ய ” மகளின் மனநிலை புரிந்தாலும்  அத் தாயால்  என்ன தான்  செய்ய முடியும்.ஆணாதிக்கம் பிடத்த மனிதன்,தான் செய்வது சரி என இருப்பவரிடம்   எப்படி கேட்பது எனும் எண்ணம் தான் தாய்க்கு.

மேகநாதனோ  குடும்பத்துடன் மட்டுமே இப்படி ,வெளியில் , பாடசாலையில் முற்றிலும் அவர் வேற மாதிரி ‘ மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.குடும்பத்துடன்  அன்பு ,அக்கறை இருந்தாலும்  அதை காட்டத் தெரியாதவர் பாடசாலை மாணவர்களுடன் பேசிக் கதைப்பது போல் தான்  பிள்ளைகளுடனும் பேசுவார்.ஒரு நாளில் அதிக நேரம் பாடசாலையில் செலவிடுவதால் அவ் இயல்பே அவருக்கு பழகி விட்டது.

மகளுக்கு மகனுக்கு உணவை கொடுத்தவர் கணவனின் வருகைக்காக காத்திருந்தார். மேகநாதன் நாளைக்கு  பகலகாரங்கள் இனிப்புகள் செய்வதற்கான பொருட்களை வாங்கி வந்தவர் அதனை மனைவியிடம் கொடுக்க அதனை வாணியும் சமையலறையில் கொண்டு வைத்தார்.” கை, கால அலம்பிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கன்” என்றார் வாணி. மேகநாதரும் அதன் படி கை, கால்களை அலம்பி கொண்டு டைனிங் டேபிள் அமர வாணியும் உணவை பரிமாறியபடி பேச்சை தொடங்கினார். “ஏங்க கனிக்கிட்ட ஒரு வார்த்தை மாப்பிள்ளையே பிடிச்சிருக்கா என்று கேட்கலையா? காலம் முழுவதும் வாழ்கிற அவ தானே”

“ஏன் உன்  பொண்ணு காலேஜ்ல லவ் கிவ்னு எதயும் இழுத்துடு வந்திருக்காளா? ” அப்படியெல்லாம் இல்லைங்க என்றார் வாணியோ அவசரமாக அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க” என்றார்.   அவளுக்கு எது நல்லது எது கெட்டதுனு   தெரியுமா? நாம அவளுக்கு நல்லது தான் செய்வோம் என்றார்”முடிவாக இப்படி பேசுவரிடம் என்ன கதைப்பது ஒரு பெருமூச்சு மட்டுமே வாணியிடம்.

கதவு நிலையில் தாயும், தந்தையும் பேசுவதை கேட்டவளுக்கு கவலை தான் வந்தது. எந்த குறையும் இல்லாமல் தானே இதுவரை வளர்த்தனர்

தான்   என்ன  ஆசைப்பட்டாலும் அதைவிட பெஸ்டானத்தையே செய்யும் தந்தை, தாய் இருப்பினும் தான் ஆசைப்பட்ட அப்ப பொருளில் மனம் லயிப்பது. மனித இயல்பு தானே.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!