அத்தியாயம்-19
மைத்ரேயிக்கு ஏதோ அவனை பார்க்க பார்க்க அவ்வளவு ரசனையாக தான் தோன்றியது.. அவள் மனதை நினைக்க நினைக்க அவளுக்கு கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது. “ஏன் தான் இந்த தாஸை நமக்கு இவ்ளோ பிடிக்குதோ…” என்று நினைத்துக் கொண்டவளோ அவனை ஓர விழிகளால் ரசனையாக பார்ப்பது.. அவன் எங்கேயாவது தூரத்தில் நின்று கொண்டிருந்தால் ஒழிந்துக் கொண்டு அவனை ரசித்துக் கொண்டிருப்பதும் இதுவே தான் அவளது வேலையாக இருந்து கொண்டிருந்தது..
மார்ட்டினுக்கோ அவள் தன்னை ஒழிந்துக்கொண்டு பார்ப்பது தெரியாமலா போகும்…அவனோ தன்னுடைய கழுகு விழிகளாலேயே எப்போதும் அவள் இடத்தையே அளந்து கொண்டிருப்பவன்.. அப்படி இருக்கும் போது அவள் ஒழிந்துக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணவளை பார்க்காமல் இருப்பானா என்ன… அவனுக்கும் அனைத்தும் தெரியத்தான் செய்தது.. அவள் தன்னை ரசித்துப் பார்ப்பதும் தெரியும்.. ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் இறுகிய முகத்துடனே சுற்றிக் கொண்டிருந்தான்..
ஒரு கட்டத்தில் அவளது பார்வை அவனுக்குள் கிளர்ச்சியை உண்டாக்கியது என்னவோ உண்மைதான்.. ஆனால் அதற்காக அந்த சிறு பெண்ணிடம் பாயும் அளவிற்கு அவன் ஒன்றும் கொடூரன் கிடையாது.. அவளால் தோன்றும் உணர்வுகளை உடற்பயிற்சியின் மூலமாக குறைத்துக் கொண்டிருந்தவனுக்கு அதுவும் ஒரு நாள் எல்லை மீறும் என்று அவனுக்கு தெரியாமல் போனது..
இங்கு மைத்துவின் தந்தையும், சித்தியும் அவனது தம்பியும் ஏகப்பட்ட குஷியில் சுத்திக் கொண்டிருந்தனர்.. மைத்துவை அந்த நிவாஸுடன் அனுப்பிவிட்டு இந்த பக்கம் காஞ்சனாவோ பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியவர் தனக்கு தலை முதல் கால் வரை என்னென்ன தங்கத்தில் அணிவார்களோ அனைத்து ஆபரணங்களையும் வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்.. இத்தனைக்கும் அவருக்கு மகள் கூட கிடையாது.. ஒரே ஒரு தறுதலை மகன்தான்.. ஆனாலும் தன்னை அங்க அங்கமாக நகைகளை போட்டு அழகு பார்த்துக் கொண்டே இருந்தார்..
மாணிக்கவாசகமோ அந்த ஊரிலேயே இருக்கும் நிலங்களை விலை பேசி வாங்கிக் கொண்டு தனது பணக்கார பகட்டை அந்த ஊரில் அனைவரிடத்திலும் காட்டிக் கொண்டு இருந்தார்.. ராகவோ வழக்கம்போல சூதாட்டத்தில் நிறைய நிறைய பணத்தினை இழந்து கொண்டு இருந்தான்.. இத்தனைக்கும் நடுவில் காதல் வேறு செய்து கொண்ட அந்தப் பெண்ணிற்கு தேவையான நகைகள் புடவைகள் என்று அனைத்துமே வாங்கி குவித்துக் கொண்டிருந்தான். அவளும் ஒன்றும் சாதாரண இடமெல்லாம் கிடையாது… மிகப்பெரிய இடம் தான் அப்படி இருக்க அவளை இப்படி நகைகளையும், புடவைகளையும் வாங்கி கொடுத்து தானே அவன் கவிழ்க்க முடியும்… அதனால்தான் அவளை இப்படி வாங்கிக்கொடுத்து மயக்கிக் கொண்டே இருந்தான்.
ஆனால் அதற்கு அனைத்திற்கும் ஆப்படிப்பது போல அடுத்த வாரத்தில் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுவிட்டான் நிவாஸ்.. அவனை அந்த நேரம் எதிர்பார்க்காத மூவரும் கொஞ்சம் அதிர்ந்து போக..
“அட என்ன இந்த நேரத்துல இங்க வந்துருக்கான்..…”என்ற காஞ்சனா நினைத்தவள் ஒருவேளை இன்னும் ஏதாவது தங்களுக்கு கிடைக்குமோ என்று பேராசையில்… “அட வாங்க வாங்க மாப்ள உள்ள வாங்க… இது உங்க வீடு வாங்க…” என்று விமர்சையாக வரவேற்று கொண்டு இருக்க…
நிவாஸோ கையில் கட்டுடன் அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவர்… தன்னுடைய அடியாளிடம் கண்ணை காட்ட அவனோ ஓடிவந்து ராகவையும், மாணிக்கவாசகத்தையும் இருவரையும் மாறி மாறி அடிக்க தொடங்கிவிட்டான்… இதனை பார்த்து காஞ்சனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை..
“அய்யோ என் புள்ள… என் புருஷன்… அய்யோ எதுக்காக அவங்களை அடிக்கிறீங்க…” என்று அவர்கள் இருவரின் நடுவில் வந்து கதறிக்கொண்டு இருக்க.. ஆனால் நிவாஸோ அதனை காதில் கூட வாங்காமல் அவர்களை இருவரையும் அடி பின்னி எடுக்க கூற… அதன்படி அந்த அடியாளும் அடி நகர்த்தி எடுத்தான்..
“ஆஆஅ அம்மா… அய்யோ எதுக்காக அடிக்கிறீங்க விடுங்க விடுங்க..” என்று ராகவோ அடி வாங்க முடியாமல் கதற… மாணிக்கவாசகமும் ஒரு பக்கம் கதற ஆரம்பித்தார்…
ஆனால் அவர்களின் கதறலை கேட்காதவாறு அப்படியே நின்ற நிவாஸோ கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் வரை அவர்களை அடித்த பின்பு தான் ஓரளவுக்கு சாந்தமடைந்தான். ஏனென்றால் மார்ட்டின் தன்னை அடித்ததற்கு சேர்த்து வைத்து அவர்களை பழிவாங்கினான் அவன்..
“எவ்வளவு தைரியம் உன் பொண்ணுக்கு.. என்னை ஏமாத்திட்டு அந்த மார்ட்டினோட ஓடிப்போவா…” என்று கத்த…
அதனை கேட்ட காஞ்சனாவிற்கு மணிவாசகத்திற்கும் ராகவிற்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை.. “என்ன மாப்ள சொல்றீங்க… அவளை நீங்க தானே கூட்டிட்டு போனீங்க… இப்போ வந்து ஏதோ கதை கட்டுறீங்க…” என்று கேட்ட காஞ்சனாவை முறைத்த நிவாஸோ…
“ம்ம் நான் உண்மையதான் சொல்றேன்… இங்க இருந்து நான் கூட்டிட்டு போனதுலாம் உண்மை தான்… ஆனா உன் பொண்ணு என்கிட்ட இருந்து தப்பிச்சு வேற இடத்துக்கு அதுவும் வேற ஒருத்தவனோட ஓடிட்டா.. அதுவும் நான் நெருங்க முடியாத இடத்துக்கு..” என்று நிவாஸும் கத்திக்கொண்டு இருக்க…
அதனை கேட்டு மொத்த குடும்பத்திற்கும் ஒன்றுமே புரியவில்லை.. “நீங்கள் யார சொல்றீங்கன்னு எங்களுக்கு புரியல மாப்ள… நீங்க இங்க இருந்து அவளை கூட்டி போனது வரைக்கும் தானே எங்களுக்கு தெரியும்… இப்ப திரும்ப வந்து எங்கள அடிச்சிட்டு இருக்கீங்களே.. இதை கேட்க யாருமே இல்லையா.. நியாயம் இல்லையா..” என்று காஞ்சனா தன்னுடைய கர்ண கொடூரமான குரலை திறக்க..
“அடச்சே வாய மூடு…” என்று அதட்டிய நிவாஸோ… “ம்ச் எனக்கு தெரியாது உன் பொண்ணு என்ன விட்டுட்டு ஓடிப் போயிட்டா… ஆனா நான் அவளை விடுறதா இல்ல எப்படியா இருந்தாலும் அவளை நான் என் காலடியில் வந்து விழ வைப்பேன்… ஆனா அதுக்காக உங்களையும் சும்மா விட முடியாது இல்லையா..” என்றவனோ… “நான் அவளுக்காக கொடுத்த பணம் எனக்கு வேணும்… அதோட சேர்த்து அந்த இடமும் எனக்கு வேணும்…” என்று கர்ஜனையாக கூற…
அதைக் கேட்டு ஒவ்வொருவரும் திருத்திருவென விழித்துக் கொண்டிருந்தனர்… ஏனென்றால் நிவாஸ் கொடுத்த பணத்தில் பாதி கரைந்து காணாமல் போனது. “என்னது கொடுத்த பணம் வேணுமா… ம்ச் என்ன மாப்ள இப்டி பேசுறீங்க… நாங்க அவள உங்களோட அனுப்புனதோட எங்க வேல முடிஞ்சிது.. அதுக்கு அப்புறம் நீங்க தானே அவள பாத்திருந்திருக்கனும்… அத விட்டுட்டு இங்க வந்து கொடுத்த பணத்த கேட்றீங்க… அதெல்லாம் எங்க கையில ஒத்த பைசா இல்ல… நீங்க குடுத்தது மொத்தமா காலி ஆயிடுச்சு… இப்ப வந்து அதை பத்தி கேக்குறீங்களே நாங்க எப்படி அந்த பணத்த குடுக்குறது…” என்று காஞ்சனா கேட்க..
நிவாஸோ “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு என் பணம் எனக்கு வந்தாகணும்… அந்த மைத்ரேயி பேருல இடமும் என் பேருல ரிஜிஸ்டர் ஆகணும். எப்படியாவது அதை எடுத்து என் பேர்ல எழுதி கொடுங்க… இல்லனா உங்க மூணு பேரையும் நான் உயிரோட விடமாட்டேன்… என்ன பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்… ஏற்கனவே என்னால பல பேரு செத்துப் போய் இருக்காங்க… இப்ப நீங்களும் செத்துறாதீங்க…” என்று கூறியவனை கண்டு அரண்டே போனார்கள் அந்த மூவரும்…
“பாதகத்தி இப்டி எவனோடவோ ஓடிப்போய் என் குடிய கெடுத்துட்டாளே…”என்று காஞ்சனா பொருமியவாறே நிற்க…
“இந்த ஒரு வாரம் கழிச்சு வருவேன்… அந்த இடத்தை எப்படியாச்சும் உன் பொண்ண கண்டுப்பிடிச்சி எழுதி வாங்கி எனக்கு எழுதி வை… இல்லன்னு வச்சுக்கோயேன் அவ்வளவுதான்..” என்று நிவாஸ் கத்தி விட்டுப் போக..
காஞ்சனாவோ வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டிருந்தாள்… “அய்யோ அய்யோ பணத்த திருப்பி கேட்குறானே… அது எவ்வளவு பணம்.. எல்லா பணத்தையும் காலி பண்ணிட்டோமே… இந்த படுபாவி வேற இப்படி பண்ணிட்டாளே.. எவனோடவோ ஓடிட்டாளாமே.. ஏன்யா உன் பொண்ணால ஒருத்தனோட ஒழுங்கா வாழ முடியாதா..” என்றவள் மணிவாசகத்தை பிடித்துக் கத்திக்கொண்டே இருக்க… மணிவாசகத்திற்கோ ஒற்றுமை புரியவில்லை…
“இவ எப்டிமா மத்தவனோட போனானே தெரியலையேம்மா…” என்று ராகவ் புலம்பிக்கொண்டே தன்னுடைய அடி வாங்கிய உடம்பை பற்றிக்கொண்டு முனகிக் கொண்டு இருந்தான்… “அய்யோ அம்மா இப்போ வந்துட்டு போனானே அவன் நல்லவனே கிடையாதும்மா… சீக்கிரமா எப்படியாச்சும் அவள கண்டுபிடிச்சு அந்த இடத்தை வாங்கி கொடுத்து… அவளை கொண்டு வந்து இவன்கிட்ட தள்ளி விட்டா தான் அவன் நம்மள உயிரோடவே இருக்கவிடுவான்…” என்று பயத்துடன் அவன் கூற..
அவனை போல மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை… “இப்ப என்னடா பண்றது…” என்று மாணிக்கவாசகம் கேட்க…
“மும்பை தான்பா போனும்… அங்க போய் அவள கண்டுப்பிடிச்சி இவங்கிட்ட ஒப்படைப்போம்…”என்றான் ராகவ்,…
“அட அவ்ளோ பெரிய ஊருல அவள எப்டிடா தம்பி கண்டுப்பிடிக்கிறது…”என்று கேட்ட காஞ்சனாவை பார்த்த ராகவோ…
“வேற வழி இல்லமா…இவங்கிட்ட தான் நாம உதவி கேட்டாகனும்… இந்த நிவாஸுக்கு அவ எங்க இருக்கான்னு தெரிது… சோ இவன தான் புடிக்கனும்.. இவன் அட்ரேஸ் எனக்கு தெரியும்… நாம முதல மும்பை போவோம்..”என்று கூற… மற்றவர்களுக்கும் அதுதான் சரி என்று பட மூவரும் கிளம்பிவிட்டனர் மும்பைக்கு…
இங்கு மைத்ரேயியோ வழக்கம் போல மார்ட்டினுக்கு விதவிதமாக காலை உணவுகளை சமைத்து வைத்தவள்.. அதனை எடுத்து வந்து டைனிங் டேபிள் வைத்தாள்.. இப்போதெல்லாம் சமையல்காரர்கள் நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.. பெண்ணவளின் உணவின் ருசிக்கு அடிமையாகியவன் இப்போதெல்லாம் அவளே பரிமாறினாலும் அமைதியாக அப்படியே உணவினை ரசித்து உண்ண ஆரம்பித்து விட்டான்.
ஆதலால் இனி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பணியாளர்களும் விலகி விட்டார்கள்… இப்போது அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டு இருக்க… “ஹாய்மா எப்படி இருக்க…” என்றவாறே வந்தான் கபீர்..
இந்த இடைப்பட்ட நாட்களில் கபீருக்கும், மைத்துவிற்கும் ஒரு நல்ல சகோதரத்துவ உறவு ஏற்பட்டிருந்தது… மைத்து அவனை பார்த்து புன்னகைத்தவள்… “ஹாய்ண்ணா… வாங்க உட்காருங்க.. சாப்டலாம்…” என்று கூப்பிட…
கபீரும் சிரித்தவாறு டைனிங் டேபிள் உக்காந்து விட்டான்.. கபீரின் மனைவி இப்போதுதான் இரண்டாவது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதால் அவன் பெரும்பாலும் வெளியில் தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான். அதனை முதல் நாள் கேட்டு தெரிந்து கொண்ட மைத்துவோ… “அட எதுக்குண்ணா தேவையில்லாம வெளியில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குறீங்க.. அண்ணி வரவரைக்கும் இங்கே சாப்பிடுங்க..” என்று உரிமையாக கூறியவளை கண்டு கபீருக்கு அவளை அவ்வளவு பிடித்துப் போனது…
அதுவும் தன் மனைவியை அண்ணி என்று உரிமையுடன் அழைக்கும் பெண்ணை அவனுக்கு பிடிக்காமல் போகுமா என்ன… அதனால் சரி என்று தலையாட்டியவன் அன்றிலிருந்து காலை உணவு வீட்டில் தான் உண்கின்றான்.. “உண்மைக்குமே உன் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமா… எப்படிடா சமையல்காரங்க கையால தவிற வேற யாரு கையாலையும் சாப்பிடாத நம்ம பாஸ் உன் கைல சாப்பிடறாருனு நானும் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்… இவ்வளவு சூப்பரா ருசியா சமைச்சா யார் தான் சாப்பிட மாட்டாங்க… உன் சாப்பாட்டு ருசில கல்லு கூட கரையும் பாஸ் கரைய மாட்டாங்களா என்ன…” என்று எப்போதும் கபீர் அவளை பாராட்டி தள்ளி இருந்தான்…
இதனைக் கேட்டவாறே மாடியிலிருந்து வந்துக் கொண்டிருந்த மார்ட்டினோ கபீரை முறைத்தவாறே வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான்… கபீர் “ஹாய் பாஸ்…”என்று கூறியவனோ அப்போது தான் தன்னுடைய பாஸ் தன்னை முறைப்பதை பார்த்தவன்… “வொய் பாஸ் வொய்… முறைக்கிறீங்க…”என்றவனுக்கோ அப்போது தான் மார்ட்டின் எதற்காக தன்னை பார்த்து முறைக்கின்றான் என்பது தெரிந்து போக… “பாஸ் தங்கச்சி உண்மையாவே அவ்ளோ அருமையா சமைக்கிறாங்க பாஸ்… நீங்க இல்லன்றிங்களா…”என்று அவனை போட்டுக்கொடுக்க…
மைத்துவோ சட்டென்று நிமிர்ந்து மார்ட்டினை கேள்வியாக பார்க்க.. அவனோ முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சாப்பிட ஆரம்பித்துவிட்டான்… அதில் மைத்துவின் முகம் சுருங்கி போக… “நல்லா இருக்குனு சொன்னாதான் என்ன…”என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனுக்கு சாப்பாட்டினை பரிமாற…
“என்ன கபீர் ரொம்ப தான் தங்கச்சி தங்கச்சினு தாங்குற… என்னமோ இவ உன்கூட பிறந்த தங்கச்சியாட்டமே பீல் பண்ற…” என்று எகத்தாளமாக கேட்ட மார்ட்டினோ மைத்துவை பார்த்து நக்கலாக சிரித்தான்… ஏனோ அவளை இப்படி மனம் புண்படும்படி பேசி தன்னிடம் நெருங்கவிடாமல் பார்ப்பதிலையே குறியாக இருந்தான் மார்ட்டின்..
“அட என்ன பாஸ் கூட பொறந்தாதான் தங்கச்சின்னு இல்ல பாஸ் இத மாதிரி அப்பப்ப கிடைக்கிற தங்கச்சிய இப்டி அடாப்ட் பண்ணிக்க வேண்டியது தான்…” என்று கபீர் புன்னகையுடன் கூற…
அதுவரை மார்ட்டின் பேசியதற்கு முகத்தை சுருக்கியவாறே இருந்த பெண்ணவளோ கபீர் கூறியதில் இதழ் விரிய புன்னகைத்தவாறே நின்றகளோ நன்றாக கபீருடன் ஒட்டிக்கொண்டாள்… “அண்ணா நல்லா சாப்புடுங்க…”கபீருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க… மார்ட்டினுக்கோ காதில் புகை வராத குறைதான்…
ஏனோ அவனுக்கு வர வர அதிகமாக மைத்துவின் நெருக்கம் தேவைப்பட்டது… அவளின் கைப்பக்குவமான உணவு ருசிக்கு தான் அடிமையானது கூட இப்போதெல்லாம் அதிகமாக வெறுப்பைதான் ஏற்படுத்தியது… இதற்கிடையில் அவளது உணவினை விட்டொளிய வெளியில் சாப்பிட்டாலும் அவனுக்கு பிடிப்பதே இல்லை,,, “இது என்ன கஞ்சி மாதிரி இருக்கு ஒரு சாப்பாடு… நல்லாவே இல்ல… இதுக்கு வெளி சாப்பாடு எவ்வளவோ பெட்டர்…” என்று மார்ட்டின் மைத்துவின் சாப்பாட்டினை வார்த்தையாக கூறினாலும்… ஏதோ அவளது சாப்பாட்டிற்கு ஆடவன் அடிமையாகித்தான் போனான்…
“இப்படி யாரையும் நம்பி சாப்பிடாதடா என்னிக்கா இருந்தாலும் உன்னை விட்டுட்டு போனாலும் அப்போ நீதான் ஏங்கிப்போவ…” என்று தன்னைத்தானே கூறிக் கொண்டவனுக்கு எதற்காக அவள் தன்னை விட்டு செல்ல போகிறாள் எதற்காக அவள் சென்றால் தான் வருத்தப்பட போகிறோம் என்று நினைக்க மட்டும் தோன்றவே இல்லை.
ஏதோ உரிமை பட்டவள் போல சொல்ல போனால் பொண்டாட்டியை போல அவள் உணவின் சுவைக்கு இவன் அடிமையாகியே போயிருந்தான்.
அதுவே யோசித்து யோசித்து இரண்டு நாட்களாக மார்ட்டினிற்கு உறக்கமே வரவில்லை.. “ம்ச் திடீர்னு இவ இங்க இருந்து போயிட்டானா அப்புறம் நம்ம சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுவோம்…” என்ற அளவிற்கு அவன் யோசித்து விட்டான்…
“ம்ச் அட அவ போய்ட்டா நீ ஏன்டா சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட போற… இவ போய்ட்டா எவ்வளவோ லட்சம் கொடுத்து நமக்கு விருப்பப்பட்ட சாப்பாட்டை செஞ்சு தர்றதுக்கெல்லாம் ஆள் இருக்கு… அதை விட்டுட்டு இவளோட உருப்புடாத சாப்பாட்டுக்கு போய் ஃபீல் பண்றியே…”என்று மார்ட்டினின் மனம் யோசித்துக் கொண்டிருக்க… ஆனால் ஒருவரை கவர வேண்டும் என்றால் முதலில் உணவின் ருசி வழியாக அவர்களை கவர முடியும் என்பது பாவம் அவனுக்கு தெரியாமலே போனது…
இப்போது அதனைப் பற்றி யோசித்தவாறு உணவருந்தியவனுக்கு ஏனோ மைத்ரேயியை பார்க்க கோபமாகத்தான் வந்தது… “ஒரு சாதாரண சாப்பாட்டுல போய் என்னை மயக்கிட்டாளே…” என்ற வார்த்தையே அவனுக்கு அவ்வளவு கோபத்தை ஏற்படுத்த… ஒரு முடிவாக இனி இவள் கையால் சாப்பிடவே கூடாது என்று நினைத்தவாறே அப்படியே பாதி சாப்பாட்டில் எழுந்தவன் நேராக வாசல் படி நோக்கி செல்ல…
அவன் பாதி சாப்பாட்டில் எழுவதை பார்த்தே மைத்து புருவத்தை சுருக்கி யோசித்தவள்…. “ம்ச் என்ன சார் எதுக்கு பாதி சாப்பாட்டுல போறாரு…” என்று நினைத்தவள்.. “ம்ச் தாஸ் தாஸ்…” என்று அழைத்தவாறே அவனது பின்னாலே ஓடினாள்….
மார்ட்டினுக்கோ அவள் தன்னை தாஸ் என்று அழைப்பதிலேயே ஒருவித மோகம் அவனுக்கு கரைபுரண்டோட ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வேகமாக வெளியில் நடந்து சென்றான்….
(கேப்பச்சினோ…)