
Tag:
Anti hero love story
வாழ்வு : 33
தீஷிதன் டாக்டரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். தீக்ஷிதனின் கார் சத்தம் கேட்டதுமே அறைக்குள் இருந்த சம்யுக்தா வேகவேகமாக கீழே ஓடி வந்தாள். பரந்தாமனும் தமயந்தியும் சம்யுக்தாவைப் பார்த்து சிரித்தனர். ஆனால் சம்யுக்தா அதைக் கவனிக்காமல் வாசலுக்கு ஓடினாள். அதே நேரத்தில் உள்ளே வந்த தீக்ஷிதன் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டான்.
“என்ன யுக்தா.. கார் சத்தம் கேட்டு ஓடி வந்தியா?”
“ஆமாங்க, நீங்க சீக்கிரமா வந்திடுறன்னு சொல்லிட்டு இப்போதான் வர்றீங்க.. ரொம்ப பயந்திட்டேன்..”
“சரி அதுதான் நான் வந்திட்டேன்ல.. உள்ள வா போகலாம்.” என்று அவளது தோளில் கையைப் போட்டு உள்ளே அழைத்து வந்தான்.
“தீஷி எங்கதான் போன? ஒரு நாள் ஃபுல்லா நீ இல்லை.. எங்க போன எதுக்கு போனனு நாங்க பயந்துட்டோம்.” என்றார் பரந்தாமன்.
“டாடி ரொம்ப இம்போர்ட்டான வேலை.. அதனாலதான் போனேன்.”
“அப்படி என்ன வேலை?”
“அதெல்லாம் இப்போ சொல்ல மாட்டேன்.. டைம் வரும் போது சொல்றன். அத்தை எனக்கு பசிக்குது.. சாப்பாடு எடுத்து வைங்க நான் ஃப்ரெஷாகிட்டு வர்றேன். யுக்தா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி கொண்டு வா.” என்றவன் உள்ளே செல்ல, சம்யுக்தா காபி போடச் சென்றாள்.
“தமயந்தி தீஷியோட நடவடிக்கை சரியில்லையே.. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு.”
“என்ன அண்ணா இப்படி சொல்றீங்க?”
“தீஷிதன் ஏதோ பண்றான்னு மட்டும் புரியுது பாக்கலாம்.”
“அவன் எது செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் அண்ணா. நீங்க எதையும் போட்டு குழப்பிக்க வேணாம். நான் போய் அவனுக்கு சாப்பாட்டை ரெடி பண்றன்.”
“சரிமா..” என்றவர் அமரேந்திரனுடன் வெளியே இருந்த வேலையைப் பார்க்கச் சென்றார்.
அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து பால்கனியில் நின்றான். அப்போது அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது. அதன் ஓசைக்கு சொந்தக்காரியான சம்யுக்தா கதவை திறந்து உள்ளே வந்தாள்.
“எங்க இருக்கீங்க?”
“நான் பால்கனியில இருக்கேன் யுக்தா இங்க வா” என்றான்.
அவளும் காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து விட்டு, அங்கே நின்றிருந்த சம்யுக்தாவை தனது கையணைப்பில் கொண்டு வந்தான். தீக்ஷிதனின் ஒரு கரம் அவளது இடையை இறுகப் பற்றியது. மறு கையோ அவளது நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கியது. சம்யுக்தா கண்களை மூடிக் கொண்டு நின்றாள். அவளது முகத்தைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா..” என்றான்.
“ம்ம்ம்..”
“யுக்தா என்ன பயந்துட்டயா?”
“ம்ம்ம்..” என்றவள் கண்களைத் திறக்க, அவள் கண்கள் குளமாகின.
“என்னாச்சிமா? எதுக்காக இந்த அழுகை? நான் தான் சொல்லியிருக்கேன்ல இப்படி நீ அழவே கூடாதுனு..”
“நான் ரொம்ப பயந்துட்டேன்.. நைட் போனீங்க.. ஈவ்னிங்காச்சு லேட்டாகவும் பயந்துட்டேன்.. உங்களுக்கு அந்த பிரகாஷால ஏதாவது நடந்திடுமோனு பயந்துட்டே இருந்தேன்..”
“என்னை அவனால ஒண்ணும் பண்ண முடியாது.. அப்பிடி எனக்கு எதுவும் நடந்தாலும் உன்னை இங்க இருக்கிற எல்லோரும் நல்லா பாத்துக்குவாங்க..” என்று தீஷிதன் சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயில் தனது கையை வைத்து அவனின் பேச்சை நிறுத்திய சம்யுக்தா, “உங்களுக்கு ஏதாவது நடந்தா, சத்தியமா சொல்றேன் அதுக்கு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுங்க. அதை மட்டும் மறந்திடாதீங்க.” என்றாள்.
உடனே தீஷிதன், “யுக்தா இப்போ நீ என்ன சொன்ன?” என்றான் ஒருவிதமான பதட்டத்துடன். அவனைப் பார்த்தவள், “அவனிடம் தான் சொன்னதை மறுபடியும் சொன்னாள். நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாதுங்க.” என்று அவள் மறுபடியும் சொன்னதைக் கேட்ட தீக்ஷிதன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் இறுக்கம் அதிகமாகியது.
“யுக்தா அப்போ உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு தானே அர்த்தம். என்னை மனப்பூர்வமாத்தானே கல்யாணம் பண்ணிக்கிற. உன்னோட வாயிலிருந்து வந்த இந்த வார்த்தை… இந்த வார்த்தை மட்டும் போதும் எனக்கு. என்ன நடந்தாலும் அதை சமாளிக்க என்னால முடியும்.”
“ஆரம்பத்துல நீங்க எல்லாம் சொல்றீங்கனுதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் நீங்க எப்படி என் மனசுக்குள்ள வந்தீங்க, உங்களை எப்படி எனக்கு பிடிச்சதுனு எனக்கு தெரியாதுங்க.. ஆனா, இப்போ இந்த நிமிஷம் சொல்றேன், நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாது. அது மட்டும் நிஜம். ப்ளீஸ் என்னை விட்டு எப்பவுமே போகமாட்டீங்க தானே” என்று அவனைப் பார்த்து ஏக்கமாகக் கேட்டாள்.
“ஏய் உன்னை விடுறதுக்காடி நான் இவ்வளவு பாடுபடுறேன். உன்னை எப்பவுமே இப்படியே என் கைக்குள்ளேயே வச்சிக்குவேன். யுக்தா ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
பதிலுக்கு சம்யுக்தாவும், “ஐ லவ் யூ மோர் தான் யூ” என்றாள் சிரிப்புடன்.
“ஏய் கேடி…”
“சரிங்க நான் ஒன்னு கேட்கட்டுமா, நீங்க எங்க போனீங்க?”
“கண்டிப்பா சொல்லுவேன். உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன். நாளைக்கு நான் எங்க போனேன் எதுக்கு போனேன்னு எல்லாமே உனக்கும் மற்றவங்களுக்கும் தெரிய வரும். நீ ஒன்னும் வொரி பண்ணாத.”
“சரிங்க வாங்க சாப்பிடலாம்” என்று கீழே அவனை அழைத்துக் கொண்டு வர, தமயந்தி சாப்பாடு எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் நலங்கு, மெஹந்தி பங்ஷனுக்கான ஏற்பாடுகள் வீட்டில் ஆரம்பித்தன. வண்ண வண்ண விளக்குகளால் அந்த மாளிகையே ஜொலித்தது. வரும் விருந்தினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் தோட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. டிஜே ஒரு பக்கம், சாப்பாடு ஒரு பக்கம், மெஹந்தி ஒரு பக்கம் என்று அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.
சம்யுக்தா அருகே வித்யாவும் மதுராவும் நின்று கொண்டு அவளை கேலி செய்து கொண்டிருந்தார்கள். பியூட்டிஷியன் பெண்ணிடம் சம்யுக்தா தான் வரைந்த ஒரு டிசைனை காட்டி இதை போட்டு விட முடியுமா என்று கேட்க, அவளும் சிரித்துக் கொண்டே, “சரிங்க மேடம்” என்றாள்.
விக்ராந்த் தீஷிதனுடன் சேர்ந்து கொண்டு அங்கு நடைபெற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிஸியாக இருந்தாலும் அவன் கண்களை அடிக்கடி வித்யாவிடம் சென்று வந்தது. வித்யாவும் அடிக்கடி விக்ராந்தை பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் மதுரா தனது போனை எடுத்து புகழுக்கு அழைத்தாள்.
புகழ் தனது வீட்டில், கிருபாகரன் மற்றும் துர்க்காவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது போன் அடிக்க எடுத்துப் பார்த்த புகழ், போனை எடுக்காமல் வைத்து விட்டான். துர்க்கா, “போன் எடுக்கல புகழ்” என்றார்.
“இல்லம்மா மதுரா தான் கால் பண்றா. இன்னைக்கு தீஷி வீட்டில் நலங்கு ஃபங்ஷனும் மெஹந்தி பங்ஷனும் இருக்கு. நான் இன்னும் போகல இல்ல அதான் கால் பண்றா.”
“அதுக்கு என்னப்பா நீ போயிட்டு வரவேண்டியது தானே.”
“இல்ல அம்மா உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எப்படி போறது?”
“ஐயோ பரவால்ல புகழ் நாங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக மாட்டோம். வீட்லதான் இருப்போம் பயப்படாம நீ போய் என்ஜாய் பண்ணிட்டு வா.”
“இல்லம்மா நான் உங்க கூடவே இருக்கிறேன். நான் அப்புறமா மதுராவை சமாதானப்படுத்திக்குவேன்.”
“இல்ல புகழ் இதெல்லாம் எப்போவாவது வர்றது தானே. நீ போயிட்டு வா” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்போது புகழுக்கு தீஷிதன் கால் பண்ணினான்.
“சொல்லு தீஷி” என்றான் போனை எடுத்த புகழ்.
“என்ன பண்ணிட்டு இருக்க புகழ்?”
“இங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“அப்படியா சரி நீ வரலையா இங்க?”
“நான் எப்படி தீஷி வர்றது? அம்மா அப்பா இருக்காங்களே அவங்கள பார்த்துக்கனுமேடா”
“அதுவும் சரிதான் ஆனா புகழ், இங்க உன்னை எல்லாரும் தேடறாங்க. யுக்தா வேற புகழ் அண்ணா வரலையா? என்று கேட்டுட்டு இருக்கா நீ ஒன்னு பண்ணு அத்தையையும் மாமாவையும் நீ இங்க கூட்டிட்டு வர்றியா?” என்றான்.
“என்ன சொல்ற தீஷி?” என்றான்.
அதற்கு தீஷிதன், “அவங்க வந்தா நல்லா இருக்கும். ஆனா என்ன பண்றது எனக்கு அவங்க இங்க இருக்கணும் போல இருக்குடா” என்றான்.
“தீஷி புரிஞ்சிதான் பேசுறயா? ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு அவங்க அங்க வரட்டும். இன்னைக்கு வந்து ஏதாவது பிரச்சினை வந்தா எல்லாமே எதிர்பாக்காத மாதிரியாயிடும் தீஷி” என்றான்.
“நீ சொல்றது சரிதான் புகழ்” என்று தீஷிதன் பேசிக் கொண்டிருக்கும்போது, புகழிடமிருந்து போனை வாங்கினார் துர்க்கா.
“தீக்ஷி புகழ் இரண்டு பேரும் எதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க? எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நாங்க இங்க இருக்கோம் புகழ் அங்க வந்துட்டு வரட்டுமே. இதுல என்ன இருக்கு, அவனும் அங்க இருக்கத் தானே வேணும். புகழ் நீ போ நாங்க இங்க பத்திரமா இருப்போம். நாங்க காலையில வரோம்” என்றார் துர்க்கா.
“அத்தை நீங்களும் மாமாவும் ஏதும் நினைச்சிக்காதீங்க. தப்பா எடுத்துக்காதீங்க அத்தை ப்ளீஸ்” என்றான்.
“ஐயோ தீஷி, இதுல என்ன தப்பா நினைக்க இருக்கு? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியுது சரியா? நாளைக்கு காலைல உங்களை இங்க கூட்டிட்டு வர புகழையும் காரையும் அனுப்பறேன். நீங்க புகழ் கூடவே வந்துடுங்க” என்றான் தீஷிதன்.
“சரி தீஷி” என்றவர் போனை வைத்து புகழிடம் திரும்பி, “நீ சாப்பிட்டு போயிட்டு வாப்பா” என்றார்.
அப்போது கிருபாகரனும் புகழிடம் விளையாட்டாக, “ஆமா ஆமா சீக்கிரமா கிளம்பு, எங்களுக்கும் கொஞ்சம் பிரைவசி வேணுமில்ல புகழ்” என்றதும் அவரைப் பார்த்து பொய்யாக அதிர்ச்சி அடைந்தவன், “அடப்பாவி அப்பா அப்போ நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் என்னை அனுப்புறீங்களா?” என்றதும் துர்க்கா, “ஐயோ நீங்க வேற ஏங்க என் மானத்த வாங்குறீங்க?” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
புகழ் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் வீட்டுக்குச் சென்றான்.
ஆட்டம் பாட்டம் என்று அங்கே தீஷிதன் வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடி கொண்டிருந்தது. புகழும் வந்துவிட தீஷிதன், புகழ், விக்ராந்த் மூவரும் நன்றாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தனர். ஸ்டேஜில் விக்ராந்தும் வித்யாவும் ஒரு பக்கமாக ஆட, மதுராவும் புகழும் இன்னொரு பக்கம் ஆடினார்கள். தீக்ஷிதன் சம்யுக்தா அருகே உட்கார்ந்து இருந்தான்.
“அக்கா நீயும் வா” என்று வித்யா அவளை அழைக்க, “இல்ல நான் வரல, நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றாள்.
“அட வாக்கா” என்று அவளையும் பிடித்து இழுத்தார்கள் வித்யாவும் மதுராவும். அப்போது அவளுக்கு துணைக்கு வந்தான் தீக்ஷிதன்.
“யுக்தா வா என்கூட” என்றவன் அவள் கையைப் பிடித்து ஸ்டேஜிக்கு அழைத்துச் சென்றான். மெல்ல மெல்ல அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தாள் சம்யுக்தா.
அங்கே வந்திருந்தவர்கள் எல்லோரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். இப்படியாக நலங்கு ஃபங்ஷன் மெஹந்தி பங்க்ஷனும் இனிதே நடைபெற்று முடிய, புகழ் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.
“சரி சரி சீக்கிரமா நீங்க எல்லாம் போய் தூங்குங்க. நாளைக்கு நேரத்துக்கு எந்திரிக்கணும்ல. இப்ப தூங்கினால் தான் காலையில முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்” என்று ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் சிறுசுகளை அனுப்பி வைத்தார் தமயந்தி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 29
“குருஜி… குருஜி… என்னோட துர்கா கண்ணு முழிச்சிட்டா, வந்து பாருங்க குருஜி..” என்று பதட்டத்துடன் ஓடிவந்தவர் சிவலிங்கத்தின் முன்னால் இருந்த குருஜியின் கால்களைப் பிடித்தார். கண்களை விழித்துப் பார்த்த குருஜி, அவன் கூறியது கேட்டு, “கிருபாகரா உண்மையிலேயே துர்கா கண்விழித்து விட்டாளா?” என்று கேட்டார்.
“ஆமாம் குருஜி. நான் சொல்றது நிஜம்தான். நீங்களே வந்து பாருங்களேன். என்னோட துர்கா கண்ணுமுழிச்சிட்டா. வாங்க குருஜி வந்து பாருங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக துர்காவிடம் ஓடி வந்தார்.
குருஜி வந்து துர்க்காவின் அருகில் அமர்ந்தார். அவரது உதவியாட்கள் அங்கே வந்து நின்றிருந்தார்கள். துர்க்காவிற்கு ஒரு புறம் கிருபாகரன் வந்து அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “துர்கா… துர்கா.. என்னைத் தெரியுதா துர்க்கா” என்று தவிப்புடன் கேட்டார் கிருபாகரன். குருஜி அவரைப் பார்த்து, “கிருபாகரா கொஞ்சம் அமைதியா இருப்பா. நான் துர்காவை கொஞ்சம் பாக்கணும்” என்றார். அவரும், “சரி குருஜி” என்று அமைதியானார். அவரின் கைகளோ துர்காவின் கைகளை பற்றியபடி இருந்தது. குருஜி மெதுவாக துர்காவிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் துர்கா நன்றாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். துர்காவின் அருகில் இருந்த கிருபாகரனை காட்டிய குருஜி, “அம்மாடி துர்கா இவரை உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். கிருபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்த துர்க்கா, “தெரியும் குருஜி. இவரு என்னோட வீட்டுக்காரர்.” என்றாள்.
கிருபாகரனிடம் திரும்பிய, “என்னங்க நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்?” என்று கேட்டாள். அதற்கு அவளை பார்த்த கிருபாகரன், “நாம ஒரு ஆச்சிரமத்தில் இருக்கிறம். இங்கே இருக்கிறவங்க தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கிறாங்க.”
“இங்கேயா ஆமா எனக்கு என்ன பிரச்சனை? நம்ம குழந்தை…. நம்ம குழந்தை…. ஏங்க நம்ம குழந்தை..” என்றவர் அழ ஆரம்பித்தார். அவளை அணைத்துக் கொண்டார் கிருபாகரன்.
குருஜி துர்காவிடம், “நீ இப்பதான் மா கண்ணு முழிச்சிருக்க. உடனே நீ இப்படி பதட்டப்படக் கூடாது. அப்புறம் திரும்பவும் நீ உன்னோட சுயநினைவை இழந்திருவ, முன்னாடியும் இப்படித்தான், உனக்கு நினைவு திரும்பினப்போ அழுது புலம்பி பழையபடி நினைவிழந்திட்ட, இப்போ மறுபடியும் நீ சுயநினைவு வந்திருக்க, இதோ இங்க உன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே என் புருஷன், அவரோட அன்பு தான் உன்னை திரும்ப இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்கு. நீ பிழைக்கிறது கஷ்டம்னு இங்க எல்லாருமே சொன்ன போதுகூட, அவர்தான் இல்ல என் பொண்டாட்டி எனக்காக கண்விழிப்பாள் என்று உனக்காகவே காத்திருந்தார். அந்த மனுஷனுக்காக நீ பழையது எதையும் யோசிக்கக் கூடாது. உனக்காகவே உன் கூடவே இருக்கிற உன்னோட புருஷனை பற்றி மட்டும் யோசிம்மா. கிருபா துர்காவை பாத்துக்கோ, இன்னொரு தடவை இப்படி சுயநினைவு இழந்துட்டானா அப்புறம் அது யார் கையிலயுமே இல்லை.. அதனால இவ பதட்டப்படாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு.. மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அவ நல்லாவே குணமாயிட்டா..” என்றார் குருஜி. இருவரையும் காலையில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து தனது உதவியாளர்களுடன் சென்றுவிட்டார். துர்கா கண்விழித்த செய்தி அந்த ஆச்சரியமும் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அந்த ஆசிரமத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது போனை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காமல் சென்று கால் பண்ணினார்.
லேப்டாப்பில் இருந்து தனது வேலையைச் செய்து கொண்டிருந்த தீஷிதனுக்கு போன் வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புருவங்கள் சுருங்கின. ‘என்ன இந்த நேரத்துல போன் பண்றாங்க’ என்று நினைத்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ…”
“ஹலோ சார் நான் ராமசாமி பேசுறேன்.”
“சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி என்ன விஷயம்?”
“சார் ரொம்ப முக்கியமான விஷயம்.அதுதான் இந்த நேரத்துல கூப்டேன்”
“அப்படியா என்ன விஷயம்”
“சார் நீங்க என்னை பாத்துக்க சொன்ன அந்த அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க சார்.”
“வாட் கண்முழிச்சிட்டாங்களா? இப்போ அவங்க எப்படி இருக்கிறாங்க?”
“ரொம்ப நல்லா இருக்காங்க சார். அவங்க வீட்டுக்காரரை கூட சரியா அடையாளம் சொல்லிட்டாங்க. குருஜி அவங்களை பாத்துட்டு, அவங்க பூரணமா குணமாயிட்டாங்கனு சொல்லிட்டாங்க சார்.”
“அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் உடனே அங்க வரேன்.”
“சரிங்க சார்” என்றவர் போனை வைத்தார்.
தீஷிதனும் போனை வைத்துவிட்டு தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர, அங்கே ஹாலில் பரந்தாமன் உட்கார்ந்திருந்தார்.
“டாடி நீங்க இன்னும் தூங்கலையா?”
“இல்ல தீஷி தூக்கம் வரல. உன் கல்யாண நல்லபடியா நடக்கணும்னு அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றார்.
“டாடி எல்லாம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லபடியா கல்யாணம் நடக்கும்.”
“அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் தீஷி. ஆமாம் இந்த நேரத்துல நீ எங்க கிளம்பிட்ட?”
“அதுவா டாடி, ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்துடறேன்.”
“தீஷி விளையாடுறயா? நாளை கழிச்சு கல்யாணத்தை வச்சுட்டு நீ இந்த நேரத்துல வெளில போறது சரியில்ல.”
“இல்ல டாடி நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும். நான் சீக்கிரமா வந்துடுவேன்.”
“அப்படி எங்க தான் போற தீஷி?”
“டாடி அதை இப்போ என்னால சொல்ல முடியாது நான் போயிட்டு வந்து சொல்றேன். ஆனா நான் போற இடம் உங்களுக்கு தெரிஞ்ச இடம் தான்.”
“என்ன எனக்கு தெரிஞ்ச இடமா? அப்படி எங்க போக போற?”
“அதை வந்து சொல்றேன் டாடி. நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குங்க.” என்றவன் அங்கிருந்து சென்றான்.
கார் அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்தது. காரை ஓட்டிக்கொண்டே புகழுக்கு போன் அடித்தான். புகழும் நல்ல தூக்கத்தில் இருந்தான்.
“ஹலோ புகழ்..”
“சொல்லுடா, என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க. எனி ப்ராப்ளம்?”
“ப்ராப்ளம் இல்ல புகழ், நீ சீக்கிரம் கிளம்பி இரு, நாம் ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.”
“இந்த நேரத்துல ஏன்டா இப்படி படுத்துற?”
“ரொம்ப ரொம்ப முக்கியம் புகழ். நீ சீக்கிரம் வா நான் உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.”
“டேய் அவசரத்துக்கு பொறந்தவனே இருடா நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்.”
“நாம ஒன்னும் உனக்கு பொண்ணு பாக்க போகல ஃப்ரெஷாகிட்டு போக, அப்படியே எழுந்திரிச்சு வந்து வெளியே நில்லு” என்றவன் போனை கட் பண்ணினான்.
தலையில் அடித்துக் கொண்ட புகழ், “உலகத்துல ஆயிரம் ப்ரெண்ட்ஸ் வைச்சிருக்கிற எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு ப்ரெண்ட வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே, அப்பா முருகா நீ தான் என்னை காப்பாத்தணும். இந்த நேரத்துல எங்க கூப்பிடறான்னு தெரியலையே” என்றவன் முகத்தை கழுவி விட்டு வெளியில் வர அங்கே தீஷிதனின் கார் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து முன்னால் ஏறிய புகழ், என்னவென்று கேட்கும் முன்னரே கார் வேகமாக சென்றது.
“டேய் மெதுவா போடா.. ஏன்டா இப்படி பாடா படுத்துற? அப்படி என்ன தலை போற காரியம் இவ்வளவு அவசரமா போறதுக்கு?”
“தலை போற காரியம் தான் மச்சான். அங்க போனா உனக்கு விஷயம் விளங்கும் அதுவரைக்கும் அமைதியா இரு. அப்படியா சரி அப்ப நான் கார்ல தூங்குறேன் நீ போக வேண்டிய இடம் வந்ததும் என்னை எழுப்பி விடு.”
“மவனே என்ன ஆனாலும் நீ இன்னைக்கு தூங்கவே கூடாது.”
“தீஷி இது உனக்கு நியாயமா தெரியுதா? நைட் வரைக்கும் கான்பிரன்ஸ் மீட்டிங்ல என்ன கலந்துக்க வச்சுட்டு, அப்போதான் போய் தூங்கினேன். அந்த நேரம் பார்த்து என்ன கூட்டிட்டு வர்ற ஏண்டா டேய் என்னால முடியலடா” என்றான் புகழ்.
“சரி… சரி கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்புறம் எழுப்பி விடுறேன்.”
“நன்றி நண்பா… நன்றி நண்பா..” என்றவன் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்கினான்.
…………………………………………………
கிருபாகரனின் அணைப்பில் இருந்தாள் துர்க்கா. எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி தனது கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்து, கிருபாகரனின் இடது கை துர்க்காவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க..”
“என்னம்மா..”
“நீங்க ஏங்க என் கூடவே இருந்தீங்க? என்னால உங்க வாழ்க்கையும் பாளாப் போச்சு. என்னை விட்டுட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு சந்தோஷமா இருந்திருக்கலாம்ல.”
“ஏய் என்ன துர்க்கா பேசுற? இன்பத்திலேயேயும் துன்பத்திலேயும் உன்கூட இருப்பேன்னு தான் உன் உன் கழுத்துல தாலி கட்டி, உன் கையை பிடிச்சேன். இப்போ இப்படி ஆயிட்டனு நான் உன்னை விட்டுட்டு போயிருவேன்னு நினைச்சியா? ஏன் துர்க்கா எனக்கு இப்படி நடந்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிருப்பியா?”
“என்னங்க சொல்றீங்க? உங்களை விட்டுட்டு எப்படிங்க என்னால இருக்க முடியும்?”
“அப்படித்தான் நானும், என்னால் மட்டும் எப்படி நீ இல்லாம இருக்க முடியும்” என்றவரை இறுக அணைத்துக் கொண்டார் துர்க்கா. “என்னங்க எனக்கு எங்க அண்ணா, தங்கச்சி எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. ஆமா எங்க அண்ணன் என்னை தேடி வரலையா?”
“வந்தாரு மா ஒரு நாள், ஆனா எனக்கு அவங்க கூட போக விருப்பம் இல்ல. அதான் உனக்கு குணமாகட்டும்னு உன் கூடவே இருந்திடுறன்னு சொல்லிட்டு நான் இங்கே இருந்துட்டேன்.”
“எனக்கு அவங்களை பாக்கணும் போல இருக்குங்க.”
“கண்டிப்பா பாக்கலாம். உனக்கு குணமாயிட்டுன்னு தெரிஞ்சாலே மச்சான் ஓடி வந்துருவாரு.”
“அண்ணனோட பசங்க, தங்கச்சியோட பசங்க எல்லோரும் வளர்ந்திருப்பாங்க இல்ல.”
“ஆமா துர்க்கா ரொம்பவே வளர்ந்து இருப்பாங்க”
“ஏங்க நம்ம குழந்தைய மட்டும் ஏன்ங்க அந்த கடவுள் பறிச்சிக்கிட்டாரு?”
“துர்கா எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான். நீ அந்த குழந்தையை பத்தி பேசி உனக்கு ஏதாச்சும் இன்னொரு முறை ஆயிடுச்சின்னா, அப்புறம் நீ கண்முழிச்சாலும் என்னை பார்க்க முடியாத இடத்துக்கு நான் போயிடுவேன். எனக்காக அதை நீ மறந்து தான் ஆகணும் துர்க்கா.”
“ஐயோ என்னங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க மட்டும் போதுங்க.” என்று இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 26
பிரகாஷ் சம்யுக்தாவை எதிர்பார்த்து வந்திருந்தான். ஆனால் சம்யுக்தா பிரகாஷை அங்கே எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவள் தன்னை பார்த்து எதுவித உணர்ச்சியையும் காட்டாதது பிரகாஷிற்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் அவனைப் பார்த்து பயப்படும் சம்யுக்தா எங்கே? இவள் அவனை சரிசமமாய் உட்கார்ந்து கொண்டு, பயம் சிறிதும் இன்றி இருக்கும் இவள் மீது கோபம் வந்தது. ஆனால் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான்.
அங்கே நிலவிய அமைதியை கலைத்தான் தீஷிதன். “யுக்தா பேபி, இவங்க தான் நம்மளோட புது ப்ரொஜெக்டை பண்ணப்போறாங்க. அதுமட்டுமல்ல, இந்த ப்ரொஜெக்டுக்கு நீதான் லீடர். உனக்கு கீழேதான் இவங்க வேலை செய்யணும்.” என்பதை அழுத்தி சொன்னான். அவனை திரும்பி பார்த்தாள் சம்யுக்தா.
“நீ வொரி பண்ணாத டார்லிங். உனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதுக்கு இவங்கதான் பொறுப்பு. அதனால உன்னை எந்த தொந்தரவும் பண்ணமாட்டாங்க.”
“எனக்கு உங்களை மீறி எந்த பிரச்சனையும் வராதுனு தெரியும்ங்க.” என்ற சம்யுக்தாவை அள்ளி அணைக்க துடித்தன தீஷிதனின் கரங்கள்.
“யுக்தா பேபி நீ என் மேல ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கனு எனக்கு நல்லாவே தெரியும்டா. என்னைக்குமே என்னை மீறித்தான் தான் உனக்கு எந்த துன்பமாவது வரும் சரியா. சோ டோன்ட் வொரி.” சம்யுக்தா நிமிர்ந்து பிரகாஷைப் பார்த்து, “மிஸ்டர் பிரகாஷ் டாக்குமென்டைப் நல்லா படிச்சுப் பாருங்க. நான் திரும்பவும் சொல்றன் உங்களுக்கு இதுல எனக்கு கீழே ஒர்க் பண்ண உங்களுக்கு ஓகேனா மட்டும் சைன் பண்ணுங்க. அப்புறம் வந்து என்னால முடியாது. இந்த ப்ரொஜெக்ட் வேணாம்னு நீங்க சொல்லக்கூடாது”என்று ஸ்ட்ரிக்ட் ஆகவே சொன்னாள் சம்யுக்தா. தீக்ஷிதன் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
பிரகாஷூம் சம்யுக்தா கொடுத்த டாக்குமென்டே வாங்கிப் படித்தான். பின்னர் எனக்கு இதுல ஒரு பிரச்சனையும் இல்ல மிஸ் சம்யுக்தா. நான் சைன் பண்ண ரெடி” என்றான்.
“உங்க தைரியத்தை நான் ரொம்பவே பாராட்டுறேன் மிஸ்டர் பிரகாஷ்” என்ற தீஷிதன், “ஃபர்ஸ்ட் நீங்க சைன் பண்ணுங்க அப்புறம் என் ஃபியான்சி இதுல சைன் பண்ணுவாங்க.”
“சரி” என்ற பிரகாஷ் அதை வாங்கி கையெழுத்துப் போட்டான். பின் அதை தீக்ஷிதனிடம் கொடுக்க, அவன் வாங்கி சம்யுக்தாவிடம் கொடுத்து, “யுக்தா இதுல சைன் பண்ணு. இனிமே இவங்க செய்ற ப்ரொஜெக்டை நீதான் லீட் பண்ற” என்றான். அவளும் சரி என்று சொல்லி அந்த ப்ராஜெக்ட் அக்ரிமெண்டில் சைன் பண்ணினாள்.
“வெல் நல்லபடியாக இந்த ப்ராஜெக்ட் சைட் பண்ணி முடிஞ்சுது. பிரகாஷ் இந்த ப்ராஜெக்டை நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். அடுத்தது, எங்களுக்கு ரெண்டு நாள்ல கல்யாணம். கண்டிப்பா நீங்க உங்க பேமிலியோட வரணும். இத நான் பர்சனலா கூப்பிடல. எங்க கம்பெனியோட ப்ரொஜெக்ட்ல சைன் பண்ணி இருக்கிற ஒரு கம்பெனியோட எம்டியை அழைக்கிற அழைப்பு” என்றவன்,
அடுத்து நம்ம கொஞ்சம் பர்சனலா பேசலாமா? என்றான். பிரகாஷிம், “சொல்லுங்க மிஸ்டர் இங்க பர்சனலா பேச என்ன இருக்கு?”
“பிரகாஷ் இதுக்கு முன்னாடி எப்படியோ, இனிமே யுக்தா என்னோட வைஃப். நீங்க பார்க்கிற இடத்துல எல்லாம் அவங்கள அவமானப்படுத்தவோ இல்ல உங்களை சார்ந்தவங்க அவளை அவமானப்படுத்துவதோ நடக்கக்கூடாது. அப்படி இல்ல நாங்க அப்படித்தான் பண்ணுவோம்ன்னா அதற்கான பின் விளைவுகள் ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு. இதை நான் ஆர்டரா சொல்றதா கூட நீங்க எடுத்துக்கலாம். ஐ டோன்ட் கேர், பட் யுக்தா விஷயத்துல நீங்க இனிமே தலையிடவே கூடாது.”
அதைக் கேட்ட பிரகாஷ், “மிஸ்டர் தீக்ஷிதன் நீங்க பர்சனலா பேசுறேன்னு சொன்னதனால நானும் பர்சனலாவே பேசுறேன். இவக்கிட்ட என்ன இருக்குன்னு நீங்க இவளை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா இவளால நீங்க ரொம்ப அவமானப்பட போறீங்கனு மட்டும் தெரியும். ஓகே நீங்க எங்கள இன்வைட் பண்ணதால அந்த அழைப்புக்கு மரியாதை கொடுத்து நானும் வரேன். கண்டிப்பா என் குடும்பத்தோடு இந்த கல்யாணத்துல கலந்துப்பேன்.
ஆனா பாருங்க இந்த கல்யாணத்துல உங்க கூட உங்க குடும்பம் இருக்கும், எங்களோட குடும்பம் இருக்கும், எல்லாரும் குடும்பத்தோட வந்து இருப்பாங்க, ஆனா கல்யாணப் பொண்ணோட குடும்பம்னு சொல்லிட்டு அங்க யாருமே இல்ல. அது தான் ரொம்ப கஷ்டமான விஷயம்.”
“நீங்க அத பத்தி கவலைப்பட தேவையில்லை மிஸ்டர் பிரகாஷ். அத நான் பாத்துக்குறேன். இப்ப நீங்க போகலாம் ஓகே மிஸ்டர்.”
“நான் வரேன்” என்ற பிரகாஷ் சம்யுக்தாவை நக்கலான பார்வை பார்த்துவிட்டு இங்கிருந்து சென்றான்.
பிரகாஷ் அங்கிருந்து சென்றதும் தீக்ஷிதன் சம்யுக்தாவிடம், “என்ன பேபி வந்த வேலை சிறப்பா முடிஞ்சிட்டு போலாமா?”
சரி என்று தலை அசைத்தாள்.
“இங்க பாரு உன்னை என்ன சொல்லி, நான் கூட்டிட்டு வந்தேன்? என்ன நடந்தாலும் அதை போல்டா ஹாண்டில் பண்ணனும்னு சொன்னேனா இல்லையா? அவனோட கோவத்தை அவன் இப்படி பேசி காட்டிட்டு போயிட்டான். அதுக்கு நாமளும் பதிலுக்கு ஏதாவது பேசி அந்த தவறையே செய்யணும்னு இல்லையே.. நம்ம வேலையை நாம பார்த்துட்டு போவோம். அதுவே அவனுக்கு நம்ம கொடுக்கிற பதிலடி. அவன் சொல்றதை எல்லாம் நினைச்சி கவலப்பட்டுட்டு இருந்தா அது உன்ன ரொம்ப பலவீனமாக்கும்.
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ பேசினபோ என்மேல இருந்த நம்பிக்கை உன்னோட வார்த்தை மூலம் வெளிவந்தது. அந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.”
“இல்ல அப்போ எனக்கு அப்படி தோணுச்சு அதை அப்படியே பேசிட்டேன்” என்றாள் சம்யுக்தா.
“அப்போ உனக்கு அப்படி தோணுதுனா என்ன அர்த்தம்? என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குனுதானே அர்த்தம். அந்த நம்பிக்கை தான் நான் எப்பவுமே காப்பாத்துவேன். நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கலங்கவும் கூடாது சரியா?” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு புகழிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். அங்கே கட்டிலில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சீமா. பிரகாஷ் போன எடுத்து உமேஸ்வரனுக்கு போன் பண்ணினான். முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்த அவர் பிரகாஷின் ஃபோனை பார்த்ததும் அவர்களிடம் எக்ஸ்க்யூஸ்மி சொல்லிவிட்டு வெளியே வந்து, “என்ன பிரகாஷ் என்னாச்சு போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா?”
“ஆமா டாடி வேலை நல்லா முடிஞ்சுது. ஆனா அதுல ஒரு சின்ன பிராப்ளம் இருக்கு.”
“என்னது ப்ராப்ளமா? என்ன பிராப்ளம்?”
“டாடி அது வந்து…. நம்மளோட கம்பெனிக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைச்சிட்டு. ஆனா நாம வந்து அந்த ப்ரொஜெக்டை அந்த கம்பனியோட எம்டிக்கு கீழே தான் வொர்க் பண்ணனும். அதோட நம்மளோட கம்பெனியில கண்டிப்பாக இருபது வீதம் ஷேர் குடுத்தாகணும். நான் ஓகேன்னு சொல்லி சைன் பண்ணிட்டேன் டாடி.”
“அதெல்லாம் பிரச்சனை இல்லை. எனக்கு அந்த ப்ரொஜெக்ட் ரொம்ப முக்கியம். அதனாலதான் உன்னை நான் அந்த ப்ரொஜெக்டை என்ன பண்ணியாவது சைன் பண்ணி எடுக்க சொன்னேன். சரி அந்த கம்பெனி எம்டி தீஷிதன் தானே?”
“ஆமா டாடி பட் இப்போ அவரோ ஒரு பார்ட்னர் புதுசா ஜாயின் பண்ணி இருக்காங்க அவங்க தான் நம்மகூட சேர்ந்து இந்த ப்ரொஜெக்டை செய்வாங்க.”
“அப்படியா யாரது?”
“அது வேற யாரும் இல்ல அந்த சம்யுக்தா தான்.”
“என்ன சொல்ற பிரகாஷ் சம்யுக்தாவா? அவ எப்படி அங்க? அவளுக்கும் தீஷிதனுக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன சொல்ற பிரகாஷ்? எனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்லு.”
உடனே பிரகாஷ் ஊட்டி வந்தது, சம்யுக்தாவும் தீஷிதனும் ஹோட்டலில் பேசிக்கொண்டது, பின்னர் ப்ராஜெக்ட்டில் சைன் பண்ணது என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.
இதைக் கேட்ட உமேஸ்வரன் கோபத்தில் கத்த ஆரம்பித்தார். “என்ன வேல பண்ணி இருக்க பிரகாஷ்? நீ இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே. இப்ப பாரு அந்த வீணாப்போனவ கீழ நம்ம வேலை பார்க்க வேண்டிய நிலைமை. இது எனக்கு தெரிஞ்சிருந்தா இந்த ப்ரொஜெக்டே வேணாம்னு சொல்லி இருப்பேன்.”
“டாடி நீங்க தானே சொன்னீங்க என்ன செஞ்சாவது இந்த ப்ரொஜெக்டை எடுத்துட்டு வான்னு. இப்ப இப்படி சொல்றீங்க?”
“அதுக்காக அவளுக்கு கீழ எல்லாம் வொர்க் பண்ண முடியுமா?”
“சரி டாடி விடுங்க பாத்துக்கலாம். இன்னொரு விஷயம் சொல்லவா சம்யுக்தாக்கும் அந்த தீஷிதனுக்கும் ரெண்டு நாள்ல கல்யாணம். நம்மள குடும்பத்தோட இன்வைட் பண்ணி இருக்கான். கண்டிப்பா வரணும்னு வேற சொல்லி இருக்கான், என்ன பண்றது டாடி?”
“என்ன பண்றது போய்த்தான் ஆகணும் நீயும் சீமாவும் போயிட்டு வந்துடுங்க. அங்க பெரிய பெரிய விஐபிகள் வருவாங்க. அவங்க கூட பேசிப்பாரு.”
“ஓகே டாடி. நான் இங்க இருந்து அந்த கருமம் புடிச்ச கல்யாணத்தை முடிச்சிட்டு அதுக்கப்புறம் ஊருக்கு வரேன்.”
“சரி பார்த்து பத்திரமா இரு.” என்று போனை வைத்துவிட்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள, இந்தப்பக்கம் இருந்த சீமாவும், “என்ன உங்க முன்னாள் மனைவியோட கல்யாணத்துக்கு போக ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல?”
“ஏன் சீமா நீ வேற இப்படி பண்ற? நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுது உன்னை மட்டும்தான். அவளை ஏதோ சொத்துக்காக கல்யாணம் பண்ணேன். அப்புறம் அதுவும் இல்லைனதும் விரட்டி விட்டாச்சு. இப்போ எதுக்கு அவளோட பேச்சு?”
“நீங்க சொல்றது சரிதாங்க ஆனாலும் இப்போ அவளுக்கு கீழே நீங்க வேலை பார்க்க மாதிரி ஆயிடுச்சு. எனக்கு இப்ப வர்ற கோபத்துக்கு பேசாம அவளை கொன்னுட்டா என்ன?”
“ஏய் என்கிட்ட சொல்லாம எதுவும் பண்ணிடாத, அவளுக்கு ஏதாவது நடந்தா நாமதான் பொறுப்புன்னு வேற சொல்லிட்டான். அவன் நம்மள விட ரொம்ப பெரிய இடம். அப்புறம் நான் ஜெயில்ல களிதான் தின்னனும் உனக்கு சம்மதமா?” என்றான்.
“ஐயோ ஏன் நீங்க இப்படி எல்லாம் சொல்றீங்க? எனக்கு நீங்க தான் முக்கியம். அந்த கேடுகெட்டவ எப்பிடி போனா எனக்கு என்ன? என்னால அந்த கல்யாணத்துக்கு வர முடியாது.”
“சீமா நாம அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா போய்த்தானாகணும் ஏன்னா அவன் கம்பெனியில ஒர்க் பண்ற எல்லாரையும் இன்வைட் பண்ணி இருக்கிறான். சோ நம்ம போய் தான் ஆகணும்.”
“என்ன பண்றது எல்லாம் தலையெழுத்து. சரி நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க நம்ம ஊர சுத்தி பாத்துட்டு வரலாம்.”
“ஓகே சீமா ஒரு பைவ் மினிட்ஸ்” என்ற பிரகாஷ் ஃப்ரெஷாகிவிட்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினான்.
………………………………………………….
இங்கே பரந்தாமன், தமயந்தி மற்றும் அமரேந்திரன் அனைவரும் ஹாலில் அமர்ந்து நாளைய தினம் நலங்கு வைப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். ஊட்டியில் உள்ள மதுராவின் ப்ரெண்ட்ஸை கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவதற்காக மதுராவும் வித்யாவும் சென்றிருந்தார்கள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த விக்ராந்த், “நான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றான்.
“என்னாச்சு விக்கி ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் அமரேந்திரன்.
“இல்ல டாடி பிரச்சனை ஒன்னும் இல்ல. பட் ரொம்ப இம்போர்ட்டான விஷயம். என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது” என்றான்.
“என்ன விக்கி சொல்ற?” என்ற பரந்தாமனிடம், “மாமா அது வந்து நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். என்னன்னு தெரியல பாத்த உடனே அவளை ரொம்ப பிடிச்சு போச்சு. எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அவளோடதான்னு நான் பிக்ஸ் பண்ணிட்டேன்.”
“டேய் என்ன சொல்ற? இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த, இப்போ என்ன திடீர்னு?”
அதற்கு அவன், “மாமா எனக்கு புடிச்ச மாதிரி எந்த பொண்ணையும் இதுவரைக்கும் பார்க்கல. இப்ப பார்த்துட்டேன். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ப்ளீஸ் மாமா நீங்க தான் எப்படியாவது எனக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றான்.
அதற்கு தமயந்தி, “அதுக்கு என்னடா எனக்கு நம்ம வீட்டுக்கு ஒரு மருமக வந்தா போதும். நீ யாரை சொல்றியா அவங்களையே கல்யாணம் பண்ணி வைக்கிறன். பொண்ணு யாரு நீ வரும்போது ஏர்போர்ட்ல வச்சு பேசிட்டு இருந்தியே அந்தப் பொண்ணா?”
“ஐயோ அம்மா அது யாருன்னே தெரியாது. சும்மா பேசிட்டு இருந்தேன். அதுக்காக அந்த பொண்ணை என் வாழ்க்கையில கோர்த்துடுவீங்களா?”
“அப்புறம் பொண்ணு யாருன்னு சொல்லுடா.”
“அந்த பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம மதுராவோட ஃப்ரெண்ட் வித்யாதான். வித்யாவை தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.”
“என்ற வித்யாவா? டேய் அவ வந்து சம்முவோட தங்கச்சிடா. அவ உனக்கு தங்கச்சி முறை வரும்.”
“அம்மா ஏம்மா இப்படி என் வாழ்க்கையில குண்டைத் தூக்கி போடுறீங்க? அவ ஒண்ணும் சம்மு அக்காகூட பிறந்த தங்கச்சி இல்லல்ல. அப்புறம் என்ன அம்மா?”
“இல்ல விக்கி இது சரியா வரும்னு எனக்கு தோணல.”
அதே நேரத்தில், “எது சரியா வராது?” என்றவாறு வந்தான் தீஷிதன் சம்யுக்தாவுடன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
அரிமா – 7
written by Competition writers