
Tag:
Best Love novels
மின்சார பாவை-22
written by Competition writers
மின்சார பாவை-22
“நிலா நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நெனச்சேன் இப்படி ஆகும்னு நினைக்கலடி “ என்று கமலி அழ,
” நீ ஏன் மா அழற? அதான் நீ நெனச்சதெல்லாம் நடந்துருச்சு இல்ல.” என்று அழுகையும், ஆத்திரமுமாக வெண்ணிலா வினவ.
”கண்ணு இப்படி பேசாதடா. நீ விரும்புன பையனை தானே கட்டிக்கிட்ட. அவர் இப்படி கோபப்பட்ட நாங்க என்ன பண்ணடா? நீ கொஞ்ச நாள் பட்டுவோட நம்ம வீட்ல வந்திருடா. மாப்பிள்ளை தம்பிய கோபம் குறையவும், நாங்க போய் சமாதானப்படுத்தி உன்னை விட்டுட்டு வரோம்டா. அதுவரைக்கும் அம்மா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன்டா. உன்னையும் குட்டிமாவையும் நல்லா பாத்துக்குறேன் டா” என்று அவளை வீட்டுக்கு அழைக்க,
“ இனி மேல் அவரை சமாதானப்படுத்தி என்ன பண்ண போறீங்க. என் யுகா, என்னை விட்டு போயிட்டான். என் வாழ்க்கையை இப்படி சின்னாபின்னமாக நீங்க தான் காரணம். உங்களோட நான் வரமாட்டேன்.”
“பாப்பாவை உன்னால சமாளிக்க முடியாது. நம்ம வீட்டுக்கு வா.” என்று குழந்தையை சாக்காக வைத்து, மகளை தங்களோடு அழைத்துச் செல்ல முயன்றால் கமலி.
ஆனால் வெண்ணிலாவோ,” உங்க கூட பாப்பாவ வச்சு பிளாக் மெயில் பண்ற மாதிரி தானே சொல்றீங்க. பாப்பா நான் பார்த்துப்பேன். நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க.”என்று நிலா எடுத்தெறிந்து பேசினாள்.
கமலியோ, “அம்மாடி! நான் தப்பு பண்ணிட்டேன் தான். இப்ப நான் உணர்ந்துட்டேன். ஆனா நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற. நான் என்ன சொன்னாலும் தப்பா தான் எடுத்துக்குற. என்னைக்காவது உன் கோபம் குறைஞ்சு, நான் செய்த தப்பை மன்னிச்சா, நம்ம வீட்டுக்கு வாடா.” என்றுக் கூறியவர், தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றார்.
முகுந்தனோ மகளது ஃபோனை அவளது கையில் திணித்து விட்டு மகளையும், பேத்தியும் திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றார்.
கோபத்தில் அந்த போனை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலாவிற்கு தோன்றியது.
ஆனால் யுகித் அவளிடம் பேச வேண்டும் என்றால் இந்த நம்பருக்கு தானே அழைப்பான் என்று எண்ணியவள், ஃபோனை கையில் வைத்துக் கொண்டு அழுதாள்.
கண்ணில் நீர் வழிய இருந்த வெண்ணிலாவை ஆதரவாக அனைத்தார் மித்ரா.” அம்மாடி நிலா நீ தான் என் வீட்டு மருமக. அவன் தான் என்ன அம்மாவா நினைக்கல. ஆனா நீயாவது என்னை அத்தைனு நினைச்சா, என் கூட வா. பட்டுவையும், உன்னையும் பாத்துக்குறேன்.” என்று கூற அவளால் மறுக்க முடியவில்லை.
யுகித்தோடு சந்தோஷமாக அந்த வீட்டில் வாழணும் என்று நினைத்திருக்க, விதியோ தனியாக அவனது வீட்டில் அவளை கால் எடுத்து வைக்கச் செய்தது.
அவன், அவளுக்காவது வீட்டிற்கு வருவான், வருவான் என்று அவள் விழி மேல் வழி வைத்து காத்திருக்க, அவன் வரவே இல்லை ஏமாற்றமே அவளுக்கு பரிசாக கிடைத்தது.
தனக்குள் அழுத வண்ணம் இருக்க,
அதற்குக் கூட அவளது பட்டுக்குட்டி விடவில்லை. தாயின் அரவணைப்பை தேட ஆரம்பிக்க,
மித்ரா, “குழந்தையை பார்த்துக்கிறதுக்காவது நீ தைரியமாக இருக்கணும் வெண்ணிலா.” என்று அதட்டினார்.
தீரனும், “அம்மா சொல்றது சரி தான். நீ சும்மா வீட்லயே இருந்தா சரிப்பட்டு வர மாட்ட. எக்ஸாம் வரப்போகுதில்ல காலேஜுக்கு போ.” என்றுக் கூற.
“இல்ல… நான் காலேஜுக்கு போகலை.” என்று மறுத்து விட்டாள் நிலா.
தீரனும், மித்ராவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. “எனக்கு அங்க போனா யுகித் ஞாபகம் தான் வரும் அத்தை! ப்ளீஸ் என்ன கட்டாயப்படுத்தாதீங்க!” என்றாள்.
மித்ராவுக்கு வெண்ணிலா படிப்பை பாதியில் விடுறது பிடிக்கவில்லை. அது அவளோட எதிர்காலத்துக்கு நல்லதிலையே, அதனால் தன் பெரிய மகனிடம் அவளது படிப்பை பற்றி பேச.
“கொஞ்ச நாள் போகட்டும்மா. அடுத்த வருஷம் கூட எழுத வச்சுக்கலாம். அதற்கு என்ன புரோசிஜர்னு நான் பார்க்கிறேன். இப்பொழுது கொஞ்சநாள் நிலா அவ விருப்பப்படி இருக்கட்டும்.” என்றுக் கூற.
அவளோ அழுதுக் கொண்டே இருந்தாள்.
இது சரி வராது என்று அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தான் தீரன்.
அங்கு சென்றதும் அவளுக்கும் நல்ல மனமாற்றமாக இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாய் இயல்பானாள் நிலா.
வெண்ணிலா அலுவலகத்திற்கு செல்லும் போது குழந்தையை மித்ராவும், மிதுனாவும் பார்த்துக் கொண்டனர்.
தீரன் சொன்னது போலவே அவளை அடுத்த வருடம் தேர்வு எழுத வைத்து விட்டான். ஆனால் அவளது நண்பர்களோடு டச் விட்டு போனது.
‘தான் கஷ்டப்பட்ட போதெல்லாம் கூட இருந்து, என் கஷ்டங்களை பார்த்த தீரன் மாமா, இப்ப தம்பிய பார்க்கவும் எப்படி ஈசியாக மன்னிக்க சொல்லிட்டு போறாரு. எங்க மாமாக்கு தம்பின்ற பாசம் கண்ணை மறைக்குது போல. எங்க அம்மாவை கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இவருக்கு மன்னிப்பே கிடையாது.’ என்று எண்ணியவள், யுகித்தை முறைத்துக் கொண்டே நகர
அவனோ அவளை கைப்பிடித்து நிறுத்தினான்.
கையை வெடுக்கென்று உதறினாள் வெண்ணிலா “என்ன ஆச்சு நிலா ஷாக் எதுவும் அடிக்கிறதா? எப்பவும் நீயாக தொட்டால் மட்டும் இனிக்குதா. அதே நான் தொட்ட ஷாக் அடிச்சது போல உதறுற” என்று கேலி பேச.
அவனை முறைத்த வெண்ணிலாவோ, “இப்படி எல்லாம் பழசு ஞாபகப்படுத்த நீங்க பேசினா நான் உடனே சமாதானம் ஆயிடுவேன் நினைக்கிறீங்களா. நான் அனுபவிச்ச வலி அதிகம் தெரியுமா?
எத்தனை பேருக்கு தான் காதலிச்ச பெண்ணை கல்யாணத்தன்று மணமேடையில் அனைவரோட சம்மதத்தோட கரம்பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்? ஏதோ தீரன் மாமா நல்லவராகவும்,உங்க அண்ணனாக இருந்ததால் நமக்கு கிடைச்சது.
ஆனால் அதை ஈஸியா தூக்கிப் போட்டுட்டுட்டு போயிட்டுங்க. பட்டுவ பத்தி உங்ககிட்ட சொல்லனும்னு எவ்வளவோ முயற்சித்தேன். ஆனா அத கேட்க கூட நீங்க தயாரா இல்லை. பட்டுவை விட்டுட்டு நான் எப்படி உங்களோட வர முடியும். அதுக்காகத் தயங்கினா, நீங்க தப்பா நினைச்சுட்டு போயிட்டீங்க.
அன்னைக்கு நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும் எப்படியும் எனக்காக வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா என்ன விடவும் உங்களுக்கு உங்களுடைய ஈகோ தான் முக்கியமா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு சாரினு ஒரு வார்த்தையில் எல்லாத்தையும் மறக்க முடியுமா? என்னால முடியாது.” என்றவள் அங்கிருந்து செல்ல முயல.
அருகே இருந்த நகுலனிடம், “நகுல்! நீயாவது உன் ப்ரெண்டுக்கு எடுத்து சொல்லேன். எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லு.” என்றுக் கூற.
அவன் பதில் சொல்வதற்குள் அவர்களுக்கிடையே ரகுலன் நுழைந்தான்.
“வெண்ணிலா மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன்டா!” என்றான் ரகுலன்.
“நீ ஏன்டா என்ன மன்னிக்க மாட்ட? உனக்கும், எனக்கும் என்ன பிரச்சனை? எதுக்கு லூசு மாதிரி உளறுற?” என்றான் யுகித்.
“ எனக்கு என்ன பிரச்சனையானானு கேட்குறியா? கல்யாண ஆன பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணாத, பிரச்சனை பண்ணாத நான் தடுக்கும் போதெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டிய நான் எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னியே. அப்போ அவதான் என் பொண்டாட்டின்னு ஒரு வார்த்தை சொன்னானீயாடா? துரோகி என்ன லூசாவே நெனச்சுட்டல்ல.” என்று பொறுமை இழந்து கத்த.
“சாரி மச்சி வெண்ணிலாவே கோவமா இருக்கும் போது அவளை பத்தி சொல்ல வேணாம்னு தான் நான் விட்டுட்டேன். வெண்ணிலாவை முதல்ல சமாதானம் செய்வோம் பிறகு காலேஜ் முழுக்க அவ தான் என் பொண்டாட்டின்னு சொல்லலாம்னு நினைத்தேன்.” என்றுக் கூற.
அவளோ இருவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தனியே சென்று அமர்ந்த நிலா அருகே வந்த சபரிகாவும், மஹதியும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.
”நீங்க மட்டும் ஏன்டி அமைதியா இருக்கீங்க? என்னை ஏதாவது திட்டணும்னா நன்றாக திட்டுங்க” என்றாள் வெண்ணிலா.
“என்னத்த சொல்ல ஆனால் இதுதான் உன் பேமிலியான்னு விசாரிச்சப்பக் கூட ஆமாம்னு சொன்னவ, யுகித்தை பத்தி மட்டும் எதுவுமே எங்க கிட்ட சொல்லலையே. உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்பட்டுருக்கோம் தெரியுமா?” என்று சபரீகா கூற.
“அதானே…” என்றாள் மஹதி.
‘இவளுங்க வேற காமெடி பண்ணிட்டு இருக்காங்க.’ என்று தனக்குள் புலம்பியவள், “ஏன்டி நான் என்னமோ சீனியரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தின மாதிரியும், உங்கக் கிட்ட சொல்லாமா நாலைஞ்சு, பிள்ளைங்க பெத்த மாதிரில கேட்கிறீங்க. கல்யாணம் பண்ண அன்னைக்கே அவன் என்னை விட்டுட்டு போயிட்டான். இதுல அதை வேற நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க முடியுமா?” என்று புலம்ப.
அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தீபிகா முறைத்துக் கொண்டிருந்தாள்.
தீபிகாவை பார்த்த வெண்ணிலா வோ,” பேபி! இன்னமும் உனக்கு உன்
ஃப்ரெண்டு தான் முக்கியம் இல்ல. இப்பவும் நீ அவனுக்கு தானே சப்போர்ட் பண்ற”. என்றாள்.
“நிலா! உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது. ஆனால் உன்ன உங்க அம்மா வீட்டுல கூட்டிட்டு போன கொஞ்ச நாள்ல யுகித்துக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆனது.” என்றாள் தீபிகா.
”என்ன சொல்ற பேபி”என்று வெண்ணிலா பதற,
“பத்து நாளுக்கு மேல கோமாவுல இருந்தான். அப்புறமும் எழுந்து நடக்கிறதுக்கு ரொம்ப நாள் ஆனது ஆனால் நீதான் அவனோட வைஃப்னா, அந்த உரிமையில ஒரு தடவையாவது நீ அவனுக்கு போன் பண்ணியா. அவன் கோபமா போனா அப்படியே விட்டுடிவியா. அடிப்பட்டு கிடந்தவனுக்கு ஏன்னு கேட்க கூட ஆள் இல்லைத் தெரியமா?.”என்று கூறி கண் கலங்க.
“ நான் அப்படி எல்லாம் இல்லை பேபி. என்னை ஏன் விட்டுட்டு போனேனு சண்டை போட போன் பண்ணினேன். ஆனா ரீச் ஆகல.” என்று நிலா கூற,
“ஆமா ஆக்சிடென்ட்ல ஃபோன் நொறுங்கி போச்சு. உடனே விட்டது தொல்லை இருந்துட்டியா நீ ?”என்று நிலாவை குற்றம் சாட்ட,
“பேபி இப்படி எல்லாம் பேசாதே. அவன் போன் ரீச்சாகல்லைன்னதும், என்னோட தன்மானத்தை விட்டு ரகு அண்ணாவுக்கு மட்டும் போன் பண்ணி யுகாவை பற்றி விசாரிச்சேன். அவர் தான் சொன்னாரு வேலை கிடைச்சு யுகி வெளிநாட்டுக்கு போயிட்டான்னு. அது வரைக்கும் இங்கே என்னை தேடி யுகா வருவான், இல்ல மெசேஜ் பண்ணுவான், போன் பண்ணுவான்னு அந்த போனை வெறிச்சு, வெறிச்சு பார்த்துக் கிட்டே இருந்த நான் கோபத்துல அந்த சிம்மை உடைச்சு போட்டுட்டேன். எனக்கு யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருந்தேன்.” என்றுக் குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.
“அடப்பாவி நீ என் நண்பனாடா? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணினேனு வெண்ணிலா கிட்ட வெளிநாட்டுக்கு போயிட்டேனானூ பொய் சொல்லி இருக்க.” என்று யுகித்தின் குரல் ஒலிக்க.
அனைவரும் திரும்பி பார்த்தனர்.
யுகித்தோ கோபத்துடன் அவன் சட்டையைப் பிடிக்க.
ரகுலன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
நிலாவோ யுகித்தைப் பார்த்ததும் ஓடிக் சென்று கட்டிப்பிடித்தவள், “யுகா! சாரி யுகா! சாரி! உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? இல்லனா என்ன பாக்க வந்திருப்பீங்க தானே என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டிங்க தானே.” என்று அவள் சிறு குழந்தை போல வினவ,
அவள் கன்னத்தை பிடித்து முதல்ல கோவத்துல விட்டுட்டுப் போயிட்டேன். ஆனால் மனசுக் கேட்காமல் உன்ன கூட்டிட்டு போகலாம்னு வரும் திரும்பி வந்து போது தான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஆனா எனக்கு ஞாபகம் வந்து போது எனக்கு போன் பண்ணி என்னை பத்தி யாராவது விசாரிச்சாங்களான்னு கேட்டேன். வீட்லயும் யாரும் விசாரிக்கல, நீயும் விசாரிக்கவில்லை என்று தெரிந்ததும் ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டேன்டி. எப்பயும் போல எனக்கு யாரும் இல்லைன்னு கோவமா வந்தது. வெளிநாட்டுக்கு தான் போகலாம்னு நினைச்சேன் ஆனா உன் நினைவை விட்டுவிட்டு போக எனக்கு மனசு இல்ல. உன்ன நெனச்சுக்கிட்டே இருக்கணும்னு தான் நம்ம காலேஜ்லயே ப்ரொபஸராக வேலைக்கு சேர்ந்தேன் என்று கூறி, அவனும் அவளை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டான்.
ஆனா நீ போன் பண்ணினதையும், நான் வெளிநாட்டுக்கு போனதாக இவன் ரீல் விட்டதையும், இந்த துரோகி என்னிடம் சொல்லலடா” என்று கூறியவாறே ரகுலனை அடிக்கப் போக “டேய்! நான் என்னடா பண்றது அப்போ வெண்ணிலாக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டிருந்தோம். அவ உன்ன பத்தி விசாரிச்சா உனக்கு அடிபட்டுருச்சுன்னா தெரிஞ்சு அவ இங்கே வந்தா, அவ லைஃப் ஸ்பாயில் ஆயிடுமே. அதான் நீ வெளிநாட்டுக்கு போயிட்டேன்னு சொன்னேன். எனக்கு என்ன தெரியுமா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது” என்று கூற.
”உன்னை” என்று கத்தியபடி காலால் எட்டி உதைத்தான் யுகித்.
“நல்லதுக்கே காலமில்லை.” என்றவாறே ரகுலன் அங்கிருந்து நகர,
வெண்ணிலாவோ அவனை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இறுகக் கட்டிக்கொண்டாள்.
அங்கு அந்த நேரம் வந்து மதன் சாரோ,” என்ன நடக்குது இங்க? இன்னும் நீங்க தங்குற இடத்துக்கு போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?” என்றவர், அப்பொழுது தான் இருவரும் இருக்கும் நிலையை பார்த்து,” யுகி வாட் இஸ் திஸ்?” என்று கத்தினார்.
“சார்…” என்று யுகித் ஏதோ கூற முயல.
“ நீங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் இப்போ ஒரு கவுரமான போஸ்ட்ல இருக்க. இந்த மாதிரி பண்ணுறது தப்பு.” என்றுக் கூறி கண்டித்தார்.
“ புரோபஸரா இந்த காலேஜ்ல வொர்க் பண்ணா, வைஃபை கட்டிப்பிடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா?” என்று இடக்காக வினவினான் யுகித்.
“வாட்? வெண்ணிலா உன் வைஃபா?” என்று வினவியவரின் முகம் சந்தோஷத்தில் விகசித்தது.
“ ஆமாம் சார், நான் தான் இவளோட ஹஸ்பண்ட். எங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு.”என்றவாறே அவரின் காலில் விழ, அவளும் சேர்ந்து விழுந்தாள்.
இருவரையும் ஆசீர்வாதம் செய்தவர் “எனக்கு இப்பதான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. எப்பவுமே உங்க ஜோடி பொருத்தம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு நினைப்பேன். ஆனா உண்மையிலேயே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, ரொம்ப ஹேப்பியா இருக்கு . நீங்க ரெண்டு பேரும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்.”என்று கூற. அவரது நண்பர்களும் வாழ்த்தினர்.
என்றும் அவர்கள் மன நிறைவுடன் சந்தோஷத்தோடு இருப்பார்கள் என்று வாழ்த்தி விடைப் பெறுவோம்.
இரண்டு வருடங்களிற்கு பிறகு.
யுகித் மற்றும் வெண்ணிலாவின் நண்பர்கள் குழுமியிருக்க. அரட்டைக் கச்சேரி களைக்கட்டியது.
உடனே மறுபடியும் ரீயூனியன் பங்ஷன் என்று நினைக்க வேண்டாம்
யுகித்தின் குட்டித் தங்கைக்கு தான் திருமணம்.
அதில் கலந்துக் கொள்ள தான் நண்பர்கள் குழு வந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் உறங்க சென்றிருக்க. இவர்கள் நண்பர்கள் குழு மட்டும் அரட்டை அடித்துக் கொண்டிருந்து.
அதில் தூங்க போகணும்னு நினைத்திருந்த மாப்பிள்ளையை போக விடாமல் பிடித்து வைத்திருந்தனர்.
ஆம் மாப்பிள்ளை, அவர்கள் நண்பர் குழுவில் உள்ள அதி முக்கியமானவன். அதுவும் காதல் திருமணம்.
தீபிகா தான், மாப்பிள்ளை தலையில் லேசாக தட்டி, “மிது எப்படிடா உன்னை செலக்ட் பண்ணா?”என்று கிண்டல் அடிக்க.
“எங்க வாழ்க்கையில எந்த விஷயத்தை வைத்து கும்மி அடிச்சானோ, அந்த ஒரு காரணமே என் தங்கச்சியோட மனச அசைச்சுடுச்சு.” என்றான் யுகித்.
“என்ன சீனியர் சொல்றீங்க புரியவில்லையே.” என்று சபரீகா வினவ.
“அதுவா, வெண்ணிலாவோட வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக ரகுலன் போராடினதைப் பார்த்து என் தங்கச்சிக்கு பிடிச்சிடுச்சுடு. அதுவும் ப்ரெண்டை விட ஒரு பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு நினைக்கிறாரார்னா, அவர் ரொம்ப நல்லவருன்னு சொல்லிட்டா எங்க மிதுனா.
சரி தான் நம்ம ப்ரெண்டுக்கு நம்மளே வாழ்க்கை கொடுக்கலைன்னா எப்படின்னு வாழ்க்கைக் கொடுத்துட்டேன்.” என்று யுகித் கூற.
“ஐயோ! யுகா! என்ன சொல்றீங்க?” என்று அலறினாள் வெண்ணிலா.
“ஹான்! என்ன சொன்னேன்னு இப்படிக் கத்துற?” என்று யோசித்தவனுக்கு, தான் சொன்ன வார்த்தை புரிய, “ ஐயோ! ச்சே கருமம். என் தங்கச்சி வாழ்க்கை கொடுத்திட்டான்னு சொல்ல வந்தேன். டங் ஸ்கிப் ஆயிடுச்சு. ஆனாலும் நிலா என்னை நீ இப்படி சந்தேகப்பட்டு இருக்க கூடாது.” என்றுக் கூற.
எல்லோரும் நகைத்தனர்.
நிலாவும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நகைக்க
எங்கிருந்தோ வந்த ஒரு பெண்,”நிலா! இப்படியேலாலாம் சிரிக்கக் கூடாதாம். முதல்ல போய் உன்னை போய் படுக்க சொன்னார் உங்க மாமா.” என்றுக் கூறி புன்னகைத்தாள்.
அவள் தான் அனன்யா. இந்த வீட்டின் மூத்த மருமகள். அனன்யாவுக்கும் தீரனுக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
அவர்களுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகிறது.
தீரனுக்கு ஏத்தாற் போலவே அனன்யா பொறுப்பானவள். அந்தக் குடும்பத்தையே அன்பால் கட்டிப்போட்டு வைத்திருந்தாள்.
“அண்ணி! அண்ணன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க . காலையிலிருந்து வந்தவங்கள கவனிச்சுக்கிட்டு ஓடி ஆடிட்டே இருக்கீங்க. இப்பவும் ஓய்வெடுக்காம அவன் சொல்றான்னு எதுக்கு வர்றீங்க.” என்று கடிந்துக் கொண்டாள்.
“உங்க அண்ணன் சொல்றது நல்லதுக்கு தானே யுகி. இந்த மாதிரி நேரத்தில் சிரிச்சா இடுப்பு புடுச்சுக்கும்.” என்றவள், வெண்ணிலாவிடம் திரும்பி,” நீ போய் படு வெண்ணிலா. எவ்வளவு நேரம் தான் நின்னுட்டே இரூபாப. அப்புறம் கால் வலிக்கும்.”என்று நிறைமாதத்தில் இருக்கும் வெண்ணிலாவை பார்த்து கூறினாள்.
“ குட்டீஸ் ரெண்டு பேரும் என்ன பண்றாங்க அக்கா?” என்று வெண்ணிலா வினவ.
“யாழினி எப்பவும் போல நைட் டியூட்டி பார்க்க ஆரம்பிச்சுட்டா. கத்திட்டு இருக்கா. அவளைப் பாத்துக்கிறதை தீரன் தலையில் கட்டிட்டேன். பட்டுவ கமலி அம்மா தூங்க வைக்கிறேன்னு கூட்டிட்டு போய்ட்டாங்க. பாட்டியே பார்த்ததும் எங்களை விட்டுட்டு ஓடிட்டா.” என்று கூறி அனன்யா புன்னகைக்க.
“ஆமாம் அவளுக்கு அவங்க பாட்டிய பாத்துட்டான் போதும், நாமெல்லாம் ஒரு ஆளே கிடையாது.”என்று பல்லைக் கடித்தாள் வெண்ணிலா.
அதற்குள் யுகித்துக்கு கோபம் வர,” ஏன் கோபப்படுற? அவக் குழந்தை. யார் பிரியமா இருக்காங்களோ, அவங்க கிட்ட பிரியமா இருப்பாங்க. எல்லாரும் உன்ன மாதிரியே இருப்பாங்களா? “ என்று திட்ட.
“ ஆமாம் உங்க பொண்ண சொன்னா மட்டும் போதும், சண்டைக்கு வந்திருங்க.” என்று அவளும் அவனிடம் மல்லுக்கட்ட.
“அடடா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையே நிறுத்திட்டு போய் தூங்குங்க” என்றவள், அங்கு அமர்ந்து இவர்கள் போடும் சண்டையே வாய்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களைப் பார்த்து, “நாளைக்கு பேசலாம். நீங்களும் போய் படுங்க. காலைல சீக்கிரம் முகூர்த்தம்.”என்று அவர்களையும் விரட்டினாள் அனன்யா.
ரகுலனோ, அனன்யாவை பார்த்து மிரண்டு போனான்.
அடடே! மாப்பிள்ளை நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? உங்களுக்கு தூங்குற ஐடியா இல்லையா? இப்படியே முழிச்சிட்டிருந்தா, நாளைக்கு கல்யாணம் மேடையில் தூங்கிடப் போறீங்க.” என்று கேலியாக கூற.
“ஐயையோ! அப்படி எல்லாம் ஆகுமா? இல்ல, இல்ல நான் போய் தூங்குறேன்.” என்று பதறிய ரகுலன் வேகமாக அந்த இடத்தை காலி பண்ண.
அனன்யாவும், வெண்ணிலாவும் வாய் விட்டு நகைத்தனர்.
இவர்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா வேகமாக அங்கு வந்து,” எதுக்கு இப்படி சத்தம் போட்டு சிரிக்கிறீங்க. யார் கண்ணாவது பட்டுடப் போகுது.” மருமகள்களை கடிந்துக் கொண்டவர், “ ஒரு நிமிஷம் இருங்க.” என்று விட்டு சமையலறைக்குச் சென்று உப்பு எடுத்து வந்து மருமகள் இருவருக்கும் சுற்று போட்டார்.
“இதெல்லாம் நம்பிக்கை இருக்காத்தை.” என்று வெண்ணிலா கேலி செய்ய.
அவள் தலையில் லேசாக குட்டிய மித்ராவோ,“உங்களுக்கு இல்லைன்னா என்ன, எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி போய் படுங்க.” என்று அதட்டி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதெல்லாம் தனது அறை வாயிலில் இருந்து பார்த்த கமலிக்கு ஏக்கமாக இருந்தது.
தன் மகள் தன்னிடமும் இது போல் விளையாட மாட்டாளா என்று ஏக்கத்துடன் பார்த்த கமலிக்கு, இந்த அளவுக்கு அவள் தன்னிடம் மூஞ்சி கொடுத்து பேசுவதே வேறு பெரிய விஷயம் என்பது புரிய, பெருமூச்சு விட்டுக் கொண்டே அறைக்குள் சென்று விட்டார்.
மறுநாள் காலை பொழுது அழகாக விடிய, அந்த வீட்டின் இளவரசியின் கையை, ரகுலனின் கையில் பிடித்துக் கொடுத்தனர்.
ரகுலன் பூரிப்புடன் மிதுனாவை பார்க்க, மிதுனாவோ வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ஹே ரகுலனும் குடும்பஸ்தன் ஆகிட்டான். அடுத்தது நம்ம நகுலுக்கு தான்.” என்று குரல் ஒலிக்க.
அந்த இடமே நண்பர்களால் கலகலத்தது.
“முஸ்தபா… முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா…” என்றுப் பாடி ஆட்டம் போட…
இந்தப் பாட்டைக் கேட்டதும் வெண்ணிலாவும், யுகித்தும் கண்ணால் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
அவர்களுக்கு அந்தப் பாடல் பல பசுமையான நினைவுகளையே தந்து, சந்தோஷத்தில் திளைக்க வைத்தது.
கல்லூரி வாழ்க்கை எல்லோருக்கும் சந்தோஷத்தையே கொடுக்கும் என்பது இல்லை.
சிலருக்கு துக்கத்தையும், சிலருக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும்.
அந்த வாழ்க்கையை மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே கொடுத்தது.
அதுவும் யுகித்திற்கு வெண்ணிலா கிடைத்தது வரமே.
அவளது மின்சார பாவையை மீண்டும், தீண்டும் இன்பத்தை அவன் ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ்ந்தான்.
அதற்காக இருவருக்கும் சண்டையே வராது என்பது இல்லை.
சண்டை வரும். கொஞ்ச நேரத்திலேயே சமாதானமாகிடுவான். சண்டை வரும் போது, “ என் மின்சார பாவை.” என்று அழைத்து சீண்டுவான்.
அதைக் கேட்டதும் அவள் முகம் குப்பென்று சிவக்கும் இல்லையென்றால், “ஷாக் அடிக்குது மீனா!” என்ற பாடி அவளை வம்பு இழுப்பான்.
வெண்ணிலா கோபமாக இருக்கும் போதே இவ்வளவு கலாட்டா பண்ணுபவன், மகிழ்ச்சியில் இருக்கும் போது கேட்கவா வேண்டும்.
“என் வெண்ணிலா ஐஸ்கிரீம் டி.” என்று அவனும் உருகி அவளையும் உருக வைப்பான்.
யுகித்தின் வாழ்க்கையில் வந்த மின்சார பாவை வெண்ணிலா.
அவர்கள் வாழ்க்கையில் இனக என்றும் வசந்தமே.
முற்றும்.
மின்சார பாவை-21
written by Competition writers
மின்சார பாவை-21
வெண்ணிலா வலிக்க வலிக்க அந்த நினைவுகளில் ஆழ்ந்தாள்
கல்லூரியில் இருந்து எல்லோர் முன்பாக அடித்து இழுத்துச் செல்லும் போது, அழுகையும், ஆத்திரமுமாக வீட்டிற்கு சென்றாள் வெண்ணிலா.
அவளுக்கு மேலும் அடியாக அக்காவின் இறப்பு, அதைத் தொடர்ந்து குழந்தையையும் கையில் வைத்துக்கொண்டு அவளால் வேறு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
ஆனால் யுகித்தை தவிர வேற யாரையும் மணப்பதற்கு பதிலாக உயிரை விடலாம் என்று எண்ணியவளுக்கு அதற்கு கூட வழியில்லாமல் போனது.
கையில் குழந்தை இருக்க, கல்யாணத்துக்கு தலையாட்டுவதை தவிர வேறு வழி இல்லாமல், திருமணத்திற்கு சம்மதம் சொன்னவள், இறுதி முயற்சியாக மாப்பிள்ளையிடம் பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினாள்.
ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட வீட்டில் காண்பித்துக் கொள்ளவில்லை.
குழந்தைக்காக ஒத்துக் கொள்வதாக தலையாட்டியவள், இன்னொருவருடன் திருமண ஏற்பாடு நடப்பதை தாங்க முடியாமல் தவித்தாள்.
இதற்கு எல்லாம் காரணம் அந்த யுகி தான். ‘அவன் மட்டும் அன்றைக்கு ஃ
நான் பார்ட்டிக்கு வராததுக்கு கோபப்படாமல் இருந்தால் வீட்ல மாட்டி இருக்க மாட்டேன்.
போன் என் கைல இருந்திருக்கும். அவன் கிட்ட என்னோட சூழ்நிலையை சொல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கும். ‘ என்று தனக்குள் புலம்பியவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க.
குலத்தெய்வ கோவிலே கதியேன்று கிடந்தாள்.
திருமணத்திற்கு முதல் நாள் தீரன், எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று கவனிப்பதற்காக வந்தவன், வெண்ணிலா ஏதோ யோசனையுடன் கண்கலங்க கோவிலில் இருப்பதை பார்த்து விட்டு அவள் அருகே சென்றான்.
கோவிலுக்கு என்பதால் உறவு பெண்ணோடு அனுப்பி இருந்தார் கமலி.
அந்தப் பெண்ணோ, மாப்பிள்ளையை பார்த்ததும் வெட்கப்பட்டு கொண்டு, “ நீங்க பேசுங்க. நான் வெளியில வெயிட் பண்றேன்.” என்று சென்று விட.
“நிலா!” என்று மென்மையாக அழைத்தான் தீரன்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவனைப் பார்த்ததும் பதறி எழ.
“ரிலாக்ஸ் நிலா.” என்றான்.
அவளோ கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.
“என்னாச்சு நிலா? ஏன் அழறீங்க? உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே.” என்று வினவ.
அவளோ,” ப்ளீஸ் சார் ! நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“முதல்ல கையை கீழே போடுங்க. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா?” என்று வினவ.
“ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை சார்.” என்று தயக்கத்துடன் கூறினாள் வெண்ணிலா.
“வாட் என்ன சொல்றீங்க நிலா? கல்யாணத்துல விருப்பமான்னு உங்கக் கிட்ட போன்ல எத்தனை முறை கேட்டிருந்தேன்.”
“ எங்க அம்மா, அப்பா பக்கத்துல இருந்தாங்க. உங்கக் கிட்ட உண்மையை சொல்ல முடியலை. இப்பவும் என்னால அவங்களை மீற முடியாது. இந்த கல்யாணம் நடந்தாலும் நான் நடைப்பிணமா தான் இருப்பேன். சாகக் கூட முடியாத சூழ்நிலைல இருக்கேன். என்னை நம்பி ஒருத்தி ஒரு ஜீவனை விட்டுட்டு போயிருக்கா.” என்று அழுதுக் கொண்டே கூற.
“ரிலாக்ஸ் வெண்ணிலா! முதல்ல நீங்க என்ன சொல்றீங்கன்னு பொறுமையா சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“ அது வந்து நான் லவ் பண்றேன். எங்க அம்மா, அப்பா ஒத்துக்கலை. வீட்டை விட்டு போகலாம்னா எங்க அக்கா குழந்தை இருக்கு. நான் தான் பார்த்துக்கணும். அதுவும் இல்லாமல் நான் என் லவ்வரோட பேச முடியாத சூழ்நிலை இருக்கேன். என் ஃபோனையும் வாங்கிட்டாங்க. இப்போ என்னோட நிலைமையை என் யுகா கிட்ட சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறேன்.” என்று வெண்ணிலா அழ.
“ முதல்ல அழுகையை நிறுத்துங்க. யுகானா அவரோட முழு பெயர்?” என்று தீரன் வினவ.
“யுகித்.” என்றாள்.
“கொடைக்கானல்ல எந்த காலேஜ்ல படிச்ச? யுகித் உன் செட்டா?” என்று பரபரப்பை அடக்கிக் கொண்டு வினவினான் தீரன்.
“இல்லை! யுகித் என்னோட சீனியர்.”
“ யுகித்தைப் பத்தி வேற ஏதாவது தெரியுமா?” என்று கேட்க.
“ அவங்க ஃபேமிலி திண்டுக்கல்ல இருக்குன்னு தெரியும். அவ்வளவு தான். வேற எதுவும் தெரியாது.” என்று கூற.
படபடப்புடன் தனது ஃபோனை எடுத்து, “இவனான்னு பாரு.” என்று யுகித்தின் ஃபோட்டாவை காண்பிக்க.
அதைப் பார்த்தவளுக்கு அழுகை நின்று, வியப்பு ஏற்பட்டது.
“உங்களுக்கு யுகாவைத் தெரியுமா? ப்ளீஸ் யுகா கிட்ட பேசணும். ஒரே ஒரு தடவை பேசணும். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. உங்க ஃபோனை தர்றீங்களா?” என்று வெண்ணிலா கெஞ்சினாள்.
“ஏன் உங்கக் கிட்ட போன் இல்லையா ?”
“இல்லை! என் ஃபோனை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க.”
“ வேற யார் கிட்டேயாவது ஃபோனை வாங்கி பேச வேண்டியது தானே.” என்று எரிச்சலுடன் தீரன் கூற.
“ எனக்கு நம்பர் தெரியாது.” என்று தலை குனிந்தாள் வெண்ணிலா.
“ஓ காட்! இப்ப போன்லயே கால் பண்றதால நம்பரை தெரிஞ்சு வச்சுக்காமல் இருக்குறாங்க.
இப்போ பாருங்க, ஆத்திர, அவசரத்துக்கு நம்பர் தெரியாமல் அவஸ்தைப்பட்டுட்டு இருக்கீங்க.” என்றவன், ஃபோனை எடுத்து தன் தந்தைக்கு அழைத்தான்.
“ அப்பா யுகி கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னானா?” என்று வினவினான்.
யுகித் அவர் ஒருவரிடம் மட்டும் தான் அரைகுறையாக பேசுவான்.
“கல்யாண வேலையை பார்க்கணும்
கண்டிப்பா இரண்டு நாளைக்கு முன்னாடி வரணும்னு சொல்லியிருந்தேன். ஆனால் அவன் இப்போ தான் கிளம்பி வந்துட்டு இருக்கானாம். லொகேஷன் கேட்டான். அனுப்பி விட்டுருக்கேன். வந்துடுவான். பாவம் உனக்குத் தான் அலைச்சல். எல்லாத்துக்கும் நீயே போற மாதிரி இருக்கு.” என்று அவர் புலம்ப.
“அப்பா! அவனப் பத்தி தான் தெரியும்ல. பரவால்ல விடுங்க.” என்றவன் யோசனையானான்.
“சார்! யுகா வரானா?” என்று விழிகளில் சிறு புள்ளியாக நம்பிக்கை தெரிய வினவினாள் வெண்ணிலா.
அவளை ஆதுரமாக பார்த்த தீரனோ,
இங்க பாரு நிலா! யுகி என் தம்பி தான்.”என்றுக் கூற.
“ என்னது யுகாவோட அண்ணனா நீங்க. அவருக்கு ஒரு தங்கச்சி மட்டும் தான் இருக்குறதா சொன்னார்.” என்று கூற.
அவளை வலியுடன் பார்த்தவனோ,” அப்பா ஒன்னு. அம்மா வேற, வேற. நான் அவனை என் கூட பொறந்த தம்பியா தான் நினைக்கிறேன். அவனுக்கு என் மேல கொஞ்சம் கோபம். அதெல்லாம் விடு வெண்ணிலா. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட பொறுப்பு. நீ அழுறதை நிறுத்திட்டு சந்தோஷமா இரு.” என்ற தீரனை, குற்ற உணர்வோடு பார்த்தவளோ,”சாரி சார்! உங்கள வேற கல்யாணம் வரைக்கும் இழுத்துட்டு வந்துட்டேன்.” என்றுக் கூற.
“அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் கல்யாணத்துக்கு முன்னாடி எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்க கூடாதுன்னு நினைச்சிருக்கேன். சோ நோ இஸ்யூஸ். ஆனால் இதுவே வேற யாராவது மாப்பிள்ளையா வந்திருந்தா எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்திருக்கும். காதலிச்சவங்க ஒன்னு கல்யாணம் பண்ணிக்கணும். இல்லையா வேண்டான்னு முடிவு பண்ணிட்டு நம்பிக்கையோடு அடுத்தவனுக்கு கழுத்தை நீட்டனும்.
சூழ்நிலைக்காக நீங்க சரின்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல கல்யாணம் வேணாம்னா அவங்களோட நிலைமையை யோசிச்சு பாத்தீங்களா? வேணான்னு சொல்றதுக்கும் ஒரு நேரம் இருக்கு. புடிக்கும் பிடிக்கல என்றது தைரியமா சொல்லி இருக்கலாம். கல்யாணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே.
குழந்தையை வச்சிட்டு தனியா பாத்துக்குறேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம். சரி விடுமா. இனியாவது தைரியமா இருக்கணும் புரியுதா? இதுக்கு அப்புறம் தான் இன்னும் நிறைய பிரச்சனைகள் வரும்.” என்று பூடகமாக தீரன் கூற.
“என்ன சொல்றீங்க சார்?” என்று பயத்துடன் வினவினாள் வெண்ணிலா.
“முதல்ல சார்னு கூப்பிடுறதை நிறுத்து. உன் வீட்டுக்காரரோட அண்ணன் தானே. அதனால மாமான்னே கூப்பிடு.” என்றுக் கூற.
நன்றியுடன் அவனைப் பார்த்தவளோ, “என்ன சொல்றீங்க மாமா. எனக்கு ஒன்னும் புரியல.”
“ உனக்கும், யுகிக்கும் கல்யாணம் நடந்தாலும், சின்ன சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு
நான் உன்னை விட்டுக்கொடுத்தேங்குறதை அவனால ஜீரணிக்க முடியாது. சோ கோபப்படுவான். கொஞ்சம் பொறுத்துக்கோ. ஏதோ சின்ன வயசுல காயப்பட்டு இருக்கான். அது மாற கொஞ்ச நாளாகும்.” என்று தீரன் கூற.
‘எப்படியோ யுகியுடன் திருமணம் ஆனாலே போதும்.’என்று நினைத்தாள் வெண்ணிலா.
ஆனால் யுகித்தின் கோபத்தால், உயிர் போகும் வலியை அனுபவிக்கப் போவதை அப்பொழுது அவள் அறியவில்லை.
மண மேடையில் கல்யாண பொண்ணாக வந்த வெண்ணிலாவை பார்த்து யுகித் அதிர்ச்சியில் இருக்க.
அவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் வேகமாக ஓடி வந்து அவனை அனைத்து, “ யுகா!”என்று அழுது கரைந்தாள்.
அங்கு நடப்பதைப் பார்த்த இரு வீட்டுபெரியவர்களும் அதிர்ச்சியில் சமைந்து நிற்க.
தீரன் தான் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதை கூறினான்.
அங்கிருந்த உறவினர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
“என்ன தீரா சொல்ற?” என்று மித்ரா கண் கலங்க.
“ஆமாம் மா! வெண்ணிலா தம்பி விரும்புன பொண்ணுமா. அவங்க ரெண்டு பேருக்கும் இதே மேடைல கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. பொறுமையா நீங்க எனக்கு நல்ல பொண்ணா பாருங்க.” என்று தீரன் கூற.
அதை எல்லாம் கேட்ட யுகித்திற்கு வேப்பங்காயா கசந்தது.
‘கல்யாணம் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும்.’ என்று எண்ணியவன் பொறுமையாக இருக்க.
கமலிக்கும், முகுந்தனுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நல்ல குடும்பம் என்று பார்த்த குடும்பத்துக்கே தான் தன் மகள் போக போகிறாள். பிறகென்ன அவள் விரும்பியவனையே கல்யாணம் செய்துக் கொள்ளட்டும்
என்ற எண்ணி அமைதியாக இருக்க.
யுகித் வெண்ணிலாவின் கழுத்தில் தாலி கட்டினான்.
வெண்ணிலாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
வெண்ணிலாவிற்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. இருந்தாலும் யுகித்தை கரம் பிடித்ததில் சற்று ஆசுவாசமடைந்தாள்.
ஆனால் யுகித் அடுத்து செய்ததைப் பார்த்து அதிர்ந்துப் போனாள் வெண்ணிலா.
கழுத்தில் இருந்த மாலையை அவிழ்த்து வீசியவன், அவளையும் எடுத்து வைக்க சொல்லி விட்டு, “ வா போகலாம்!” என்றழைத்தான்.
“என்ன சொல்ற யுகா?” என்று வெண்ணிலா புரியாமல் பார்க்க.
“ நமக்கு யாரும் வேண்டாம் நிலா. என்னை நம்பி என் கூட வா. நான் உன்னை நல்லா பாத்துக்கிறேன். எக்ஸாம் முடிஞ்சதும் வேலைல ஜாயின் பண்ணிடலாம்.
வெளிநாட்டில வேலை இருந்தா என் ஃப்ரெண்ட்ஸ் சர்குள்லயும் சொல்லி வச்சிருக்கேன். கிடைச்சிரும். நம்ம போய் அங்க செட்டில் ஆயிடலாம்.” என்று அவனது நீண்ட நாள் கனவைக் கூற.
“அது வந்து…” என்று வெண்ணிலா எதோ கூற முயன்றாள்.
“எதுவும் பேசாத நிலா! ஏற்கனவே டென்ஷனா இருக்கேன். உன்னால என்னோட வர முடியுமா? முடியாதா?”என்று கோபத்துடன் வினவ.
தீரனை தயக்கத்துடன் பார்த்தாள் வெண்ணிலா.
அவன் சொன்னது இப்பொழுது தான் அவளுக்கு முழுமையாக புரிந்தது.
அவனும் கண் மூடி திறந்து அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தான்.
அதை பார்த்த யுகித்திற்கு கோபம் வந்தது.
“ நான் இங்க உன் கிட்ட கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன அங்க பாத்துட்டு இருக்க? அவன் சொன்ன தான் என் கூட வருவியா?” என்று கோபத்தில் யுகித் குதிக்க.
“ஒரு நிமிஷம் நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளேன் யுகி.” என்று வெண்ணிலா மன்றாடினாள்.
வெண்ணிலா அவன் கூப்பிட்டதும் வராமல், பேச முயற்சிப்பதே அவனுக்கு தன்மானத்தை சீண்டிப் பார்ப்பதாக தோன்றியது.
“ கடைசியிலே நீயும் என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட இல்லை. நான் கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேன் சொன்னதெல்லாம் சும்மா தானே. என்ன விட உனக்கும் இவங்கதான் முக்கியமா போயிருச்சு இல்ல.”என்று கசப்புடன் கூறினான் யுகித்.
“ ப்ளீஸ் யுகா! நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு.” என்று அவள் குழந்தையை பற்றி கூற முயற்சிக்க.
அவனோ அதற்கு வாய்ப்பே தராமல் கொதி நிலையில் இருந்தான்.
“உணமையிலே உனக்கு என் மேல அன்பே இல்ல நிலா. நான் மட்டும் இங்கே வராமல் போயிருந்தா, நீ உன் லைஃபை பார்த்துட்டு மூவ் ஆன் ஆகிருப்ப.
உனக்கு நான் முக்கியமா இருந்தா இப்படி மணமேடையில் வந்து நிப்பியா? இப்பவும் அவனை பார்க்கிற,அவன் என்ன சொல்லுவான்னு யோசிக்கிற. ஆனால் நான் கூப்பிட்டா மட்டும் என் கூட வர யோசிக்குற.” என்று வார்த்தைகளை தீக்கங்குகளாக தெறிக்க விட்டான் யுகித்.
அவன் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் சமைந்து நின்றாள் வெண்ணிலா. ‘என்னுடைய யுகாவா இப்படி எல்லாம் பேசுறான்.’என்று இருக்கா அவளுடைய அமைதி அவள் திகைத்து இருக்க.
அவனுக்கோ அவளது அமைதி இன்னும் கோபத்தை உண்டு பண்ணியது.
எல்லோரையும் வெறுப்புடன் பார்த்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.
வெண்ணிலாவோ அழக் கூட திராணியற்று நிற்க.
கமலி,” நிலாமா!” என்று தோளைத் தொட்டார்.
விடுக்கென்று தள்ளி விட்ட வெண்ணிலா,” இப்ப சந்தோஷமா அம்மா. நீங்க பார்த்த குடும்பம் தான். நல்ல குடும்பம் சொன்னீங்க. ஆனா நான் லவ் பண்ண பையனைப் பத்தி மட்டும் விசாரிக்க கூட இல்ல. அப்படி விசாரிச்சு இருந்தீங்கன்னா, சம்மதம் சொல்லி இருப்பீங்க.இல்லை! இல்லை! அப்பவும் உங்களுக்கு, உங்க ஈகோ தான் முக்கியம்னு எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்க மாட்டீங்க. உங்களுக்கு உங்க பொண்ணோட வாழ்க்கையை விட, உங்க ஈகோ தானே முக்கியம்.
இதோ கல்யாணம் அன்னைக்கே நான் தனி மரமா நிற்கிறேன் சந்தோஷப்பட்டுக்கோங்க. ஒருத்தி தான் போய் சேர்ந்துட்டா. நானும் இப்படி இருக்கேன்.” என்று கதறி அழ.
அங்கிருந்த எல்லோருக்கும் அவளை நினைத்து நெஞ்சில் ரத்தம் கசிந்தது.
மின்சார பாவை-20
written by Competition writers
மின்சார பாவை-20
தீரனின் கேலி பார்வையில் குழப்பமாக யுகித் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க
வெண்ணிலாவோ கையில் இருந்தக் குழந்தையை அவனிடம் கொடுக்காமல், வெடுக்கென்று அவனைத் தள்ளி விட்டாள்.
இருவரையும் மாறி மாறி பார்க்க. அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ‘ இவன் ஏன் இப்படி பார்க்குறான்.’என்று குழம்பிய யுகித், அவனது கேலிப் பார்வையை ஒதுக்கி விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பினான்.
“நிலா!” என்றழைக்க.
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்னால உன்னை மன்னிக்க முடியாது யுகி. அப்புறம் எனக்கு பட்டு குட்டி ரொம்ப முக்கியம். இந்த குழந்தை என்னோட குழந்தை இல்லன்னு உனக்கு தெரியும். ஆனால் இது என் கூட பிறந்த அக்காவோட குழந்தை. நான் தான் இந்த குழந்தையை பார்த்துக்கணும். என்னை நம்பி தான் விட்டுட்டு போயிருக்கா. பட்டுக்கு எல்லாமே நான் தான்.
அவளுக்கு நான் அவளோட அம்மா இல்லைங்குற விஷயம் தெரிய வந்துச்சுன்னா அவ தாங்க மாட்ட. அவளுக்கு சின்ன கஷ்டத்தை கூட தர மாட்டேன்.” என்று வெண்ணிலா கூற.
“என் மேல நம்பிக்கை இல்லையா நிலா! நான் நல்லா பார்த்துப்பேன் நிலா!” என்று கெஞ்சினான் யுகித்.
“எப்படி பார்த்துப்பீங்க? நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்ததால் இரண்டு பிள்ளைகளையும் ஓரே மாதிரி பார்ப்பீர்களா? ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு பிறந்த குழந்தையை அடிச்சா, இல்ல இந்த குழந்தைக்கு நான் அதிகமா சப்போர்ட்டுக்கு வந்தா, ஏன் என்று கேள்வி கேட்க மாட்டீங்க? பெத்தா அம்மாவா இருந்துட்டு உன் பிள்ளையை விட அடுத்த பிள்ளை மேல மட்டும் உனக்கு எப்படி இவ்வளவு பாசம் வருதுன்னு எங்க அத்தையை கேட்ட மாதிரி என்னை கேட்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அவங்களை மாதிரி அதைத் தாங்கிக்கிற சக்தி எனக்கு கிடையாது. என் பட்டுவை, தீரன் மாமா மாதிரி கஷ்டப்படவும் நான் விடமாட்டேன்.” என்றாள் வெண்ணிலா.
யுகித் அதிர்ந்து பார்க்க.
“என்ன ஒன்னும் புரியலையா சரித்திரம் திரும்புது.”என்று தீரன் சிரித்தான்.
அங்கு மௌனமாக மித்ரா கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க. அவர் தோளில் கை போட்ட தீரனும் மறுபுறம் அணைத்தவாறு வெண்ணிலாவும் நிற்க.
அவரை ஏக்கமாகப் பார்த்தான் யுகித்.
தீரனோ,” பிரசவத்தில் அக்கா இறந்துட்டாங்கன்னா, அவங்க பிள்ளையை பார்த்துக்கணும் என்பதற்காகவே கல்யாணம் பண்ணி வைப்பதெல்லாம் இருபது, முப்பது வருஷத்துக்கு முன்பு சர்வசாதாரண விசயம்டா.அப்படி பண்ணிக்கிட்டவங்க அந்த குழந்தை மேல உயிரை வைக்க மாட்டாங்களா? இல்ல அவங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா சுயநலமா இருக்கணுமா? அந்த மாதிரி சூழ்நிலையில் அம்மா என்னை வளர்க்கணும்னு விதி போல.
அதனால என் மேல அம்மா பிரியமாக இருந்தாங்க. ஏன் நீயும் தானே என் மேல பிரியமா இருந்த. ஆனா என் அம்மா இவங்க இல்லன்னு தெரிஞ்சதிலிருந்து உனக்கு ஏன் என் மேல அவ்வளவு கோபம் வருது? ஏன் பெத்தா தான் அம்மாவா? வளர்த்தா பாசம் இருக்கக் கூடாதா? அன்றைய சம்பவம் நடக்கிற வரைக்கும் அம்மா நம்ம இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தானே பாசத்தையும். கண்டிப்பையும் காட்டி வளர்த்தாங்க. நானும், நீயும் ஒன்னா விளையாடி, ஒன்னா சாப்பிட்டு,ஒன்னாவே சுத்துவோமே. ஞாபகம் இருக்கா. அதுல எப்பவாவது வேறுபாடு பார்த்திருக்கியா?”என்று தீரனின் கேள்வி ஒவ்வொன்றும் அவனை சாட்டையடியாக அடித்தது
கண்ணை மூடியவனுக்கு முன் தன் தாய், தந்தையையும் அண்ணனையும் வருத்திய காட்சியெல்லாம் கண் முன்னே வந்தது.
டீனேஜ் வரைக்கும் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் தான் தீரனுடன் சண்டை நடக்கும். ஆனால் அந்த வீட்டில் எல்லோரும் எப்பொழுதும் தீரனுக்கே சப்போர்ட் பண்ண,”எல்லாரும் எப்பவும் அண்ணனுக்கே சப்போர்ட் பண்ணுங்க” என்று அடிக்கடி வருத்தப்படுவான் யுகித்.
அவன் செய்கின்ற தவறை, பிடிவாதத்தை உணரவே இல்லை. சிறு பிள்ளை என்று தீரன் விட்டுக்கொடுப்பதை பெற்றவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் தீரனுக்கு துணையாக நின்றார்கள்.
எப்போதாவது ஊரிலிருந்து வரும் அவர்களடைய பாட்டியும்,” என் ராசா! வாடா தங்கம்!” என்று தீரனை கொஞ்சுவதை கண்டிருக்கான் யுகி.
அவனுக்கு அதுவும் ஏக்கமாக தான் இருக்கும். ‘எல்லோர் வீட்டிலும் இளைய பிள்ளையை தான் எல்லோரும் கொஞ்சுவாங்க. நம்ம வீட்டில் மட்டும் நம்மள கண்டுக்க மாட்டாங்குறாங்களே.என்ற எண்ணம் எப்போதும் யுகி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.
அன்றைக்கு ஸ்போர்ட்ஸ் விளையாடும் போது , யுகித் வீசிய பால் தவறுதலாக, தீரனின் மண்டையை பதம் பார்த்திருக்க.
“ என்ன? எது?” என்று எதுவும் விசாரிக்காமல்,யுகித்தை திட்ட ஆரம்பித்தனர்.
“அண்ணன் மேல உள்ள கோபத்துல வேணும்னு அடிச்சியா?” என்று மித்ரா அவனது முதுகில் ஒன்று போட.
அவனுக்கோ அழுகை வந்தது. “இல்லமா நான் வேணும்னே அடிக்கலை. தெரியாமல் பட்டுடுச்சு…” என்று யுகி சொல்ல.
அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இவர்களது பாட்டியோ, “இவன் எப்பவுமே இப்படித்தான் உன்னை பார்த்தாலே இவனுக்கு ஆகாது. உங்க அம்மா உயிரோட இருந்திருந்தால் இப்படி ஒரு அநியாயம் இந்த வீட்டில் நடந்திருக்குமா”.என்று அழ.
அந்த வார்த்தைகளை கேட்ட யுகித்தும், தீரனும் அதிர்ந்தனர்.
நிரஞ்சன் எவ்வளவோ தடுக்க பார்த்தும் முடியவில்லை. அவரது மாமியார் வார்த்தைகளை விட்டிருந்தார்.
“அம்மா! என்னம்மா பண்ற?” என்று மித்ராவும் கத்த.
“ நீயும் உன் மகனுக்குதான் சப்போர்ட் பண்ற. என்ன இருந்தாலும் அவன் உன் அக்கா பையன் தானே. பாரு இன்னும் கொஞ்சம் பலமாக தலையில் அடிப்பட்டு இருந்தால் அவன் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். இல்ல இனி தீரன் இங்கிருந்த நீங்க எல்லாரும் சேர்ந்து கொன்னாலும் கொன்னுடுவீங்க. நான் எம் பேரன என்னோட கூட்டிகிட்டு போறேன்.” என்று அவர் கூச்சலிட.
அந்த இடமே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.
மித்ராவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ‘பெத்த தாயே என்ன நம்பலையே. இனி பசங்க என்ன நினைப்பாங்க…”என்று எண்ணியாவாறே கண்களில் கண்ணீரோடு பிள்ளைகளை பார்க்க,
‘இவன் நம்ம அண்ணா இல்லையா?’ என்று தீரனை பார்த்து யுகித் இறுகிப் போயிருந்தான்.
“நீங்க! என் அம்மா இல்லையாமா?” என்று ஏக்கத்தில் அழுதவாறு வினவினான் தீரன்.
“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை. நீ என் பிள்ளை தான். அப்படித்தானே தீரனப்பா… சொல்லுங்க… ஏன் எதுவும் பேசாமல் இருக்கீங்க.” நிரஞ்சனை ஆதரவுக்கு அழைத்தார் மித்ரா.
யுகித்தோ,”அம்மா! உண்மையை சொல்லுங்க. இவன் உங்க வயித்துல பொறக்கலை தானே. என்கூட பிறந்த அண்ணன் இல்லை. அப்படித் தானே.” என்று கூற.
“அப்படி எல்லாம் சொல்லாதேடா” என்று மித்ரா பதற.
“அப்ப இவன் உன் வயித்துல பிறந்தானா சொல்லுமா… சொல்லுமா…” என்று ஹிஸ்டரியா வந்தவன் போல் யுகித் கத்த.
தீரனோ, “அம்மா நான் உங்க பையன் தானே! இல்லன்னு சொல்லாதீங்கம்மா…” என்று கண் கலங்க கூற.
அவளுக்கு அப்படியே உயிரை விட்டுவிடலாமா என்று இருந்தது.
தன் தாயை கோபமாகப் பார்த்தவர், “வந்த காரியம் முடிஞ்சதுல. இத்தன வருஷமா நான் கட்டிக்காத்த உண்மைய சொல்லி என் குடும்பத்தையே அழிச்சிட்டிங்களே! இப்போ சந்தோஷமா?” என்று அவரிடம் கோபமாக பேசினாள் மித்ரா.
அவர் சொன்னதே உண்மையை உணர்த்தி விட, யுகித் ,”அப்ப அவனைப் பாட்டியோட போக சொல்லு மா” என்றான்.
உடனே மித்ரா, “என்னடா விளையாடுறியா நீ ? தீரன் தான் இந்த வீட்டுக்கு மூத்த பையன்.” என்று படபடத்தார்.
“அப்ப நான் போறேன். இனிமே இங்க நான் இருக்க மாட்டேன். நான் எங்கேயாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்.”என்றவன் அதற்குப் பிறகு அவர்களிடம் பேசுவதையே குறைத்து கொண்டான்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க. கொடைக்கானல் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிப்பதற்கு வந்தவன், அதற்குப் பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை.’அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு, அம்மாவின் மனநிலை புரிய செய்தது. அறியா வயதில் தான் கொடுத்த தண்டனை எண்ணி குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்தான்.
“என்ன மன்னிச்சிடுங்கமா” என்று தன் தாயை கட்டிப்பிடித்து அழுதான்.
அவருக்கும் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“யுகித் எங்ககிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாது. உன் அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு” என்று மித்ரா கூற,
“ என்னை மன்னிச்சுடு!” என்று எங்கோ பார்த்து கூறினான் யுகித்.
“இதெல்லாம் ஏத்துக்க முடியாது. என் கண்ண பாத்து சொல்லு. அப்புறம், அண்ணா மன்னிச்சிடுங்க அண்ணான்னு சொல்லு. அப்ப தான் உன்னோட மன்னிப்பை கன்ஸிடர் பண்ண முடியும்.” என்று தீரன் அவனை கேலி பண்ண.
யுகித் கோபத்துடன் அவனை முறைக்க.
”பாருங்க மா! யுகி என்னைப் பார்த்து முறைக்கிறான்.” என்று தன் தாயிடம் குறை சொல்ல,
“ ஏன்டா ! “என்று மித்ரா யுகியை பார்த்தார்.”
“நா முறைக்கவே இல்ல! நீங்க அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க.” என்று சிறுவயதில் செய்தது போல சண்டையிட.
அதை ரசித்துக் கொண்டிருந்தார் மித்ரா.
நிலாவையும் பேச்சோடு பேச்சாக இழுக்க.
“அத்தை! உங்க அளவுக்கு எனக்கு பரந்த மனப்பான்மை இல்ல.
என்னால பழசு எதையும் மறக்க முடியாது அத்தை. கல்யாணத்தன்னைக்கு, மணக்கோலத்துல என்ன தவிக்க விட்டுட்டு எங்கோ போனது என் மனசுல ரணமா இருக்கு. என்ன சமாதானம் சொன்னாலும் அது அவ்வளவு ஈஸியா ஆறாது.
அன்னைக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு ஒரு நிமிஷம் கூட கேட்க அவருக்கு மனசு இல்லை. என் மனதுப்பட்டபாடு, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இவர் திரும்பி வருவார், இல்லை போனாவது பண்ணுவார்னு காத்திருந்தேனே. என் கனவெல்லாம் கானல் நீராகவல்லவா போயிடுச்சு.” என்று கதறி அழுதாள்.
அவளை ஏதோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றார் மித்ரா .
அவரை அமைதியாக இருக்குமாறு தீரன் தடுத்து விட்டு,
“இங்க பாரு நிலா! அன்னைக்கு உன்னை பேச விடாம அவன் தப்பு பண்ணான். இன்னைக்கு நீ அதையே தான் செய்யுற. மன்னிக்கிறது தான் மனித இயல்பு. என் தம்பிக்காக சப்போர்ட் செய்கிறேன் நினைக்காதே நான் கமலி அத்தைக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். பாவம் நிலா அத்தை. நீ அவங்க செஞ்ச தப்பையும் மன்னிக்க மாட்டேன் இருக்க. அவங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா? காசு பணம் இருந்தாலும்,வயசான காலத்துல தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அவங்க செஞ்ச தப்ப மனதார உணர்ந்தாலே போதும். அவங்களை நீ மன்னிச்சுடு நிலா. நீ இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும்.
நிலா நாங்க அத்தையை பார்த்துட்டு தான் வர்றோம்.
பட்டுவைப் பார்த்து அவ்வளவு வேதனைப்படுறாங்க .என் மேல உனக்கு மரியாதை இருந்துச்சுன்னா நாளைக்கு பங்க்ஷன் முடிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போய் அவங்களை சமாதானப்படுத்து. அப்புறம் என் தம்பிக்கும் முடிஞ்சா ஒரு சான்ஸ் கொடுக்கலாம் நிலா. அவன் என்ன சொல்ல வராங்குறதையும் கேளு” என்று கூறி விட்டு,
“டேய் தம்பி! அண்ணன் உனக்காக சிபாரிசு பண்ணி இருக்கேன். நிலாவும் எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா. “ என்று கண்சிமிட்ட கோபப்படுவதற்கு பதிலா யுகித்திற்கு புன்னகை தான் வந்தது.
அண்ணனை இறுக அணைத்துக் கொண்டான்.
இவர்கள் பாச மழை பொழிய
வெண்ணிலாவோ கடந்த காலத்திற்கு சென்றாள்.
மின்சார பாவை-19
written by Competition writers
மின்சார பாவை-19
மதன் சாருக்கான பாராட்டு விழா இனிதே முடிந்தது. நாளை ஃபேர்வேல் பார்ட்டியோடு விழா முடிவுறும்.
ஆகவே யாருமே மாணவ, மாணவிகள் யாரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல ஆர்வம் காட்டாமல் கல்லூரியிலேயே குழு, குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மதனும் வெண்ணிலாவையும், யுகித்தையும் அழைத்தார்.
“சொல்லுங்க சார்!” என்று இருவரும் வினவ.
“இந்த ஃபங்ஷன் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. அதுவும் வெண்ணிலா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா ஒரே, ஒரு குறை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்காக பாடலை.” என்றுக் கூற
“அதற்கு என்ன சார்? இப்போக் கூட பாடிட்டா போச்சு.” என்று யுகித் உற்சாகமாக கூற.
‘இவன் ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகிறான். சரி இல்லையே!’ என்று மனதிற்குள் எண்ணினாள் வெண்ணிலா.
“என்ன வெண்ணிலா? நீ ஒன்னும் சொல்லாமல் இருக்க?” என்று மதன் வெண்ணிலாவைப் பார்த்து வினவ.
“அது வந்து சார்!” என்று வெண்ணிலா தயங்கினாள்.
“கமான் வெண்ணிலா! சாருக்காக இது கூட செய்ய மாட்டியா?” என்று யுகித் அவரை முந்திக் கொண்டு வினவ.
அவளால் மறுக்க முடியவில்லை. அவனை முறைத்துக் கொண்டே,” சரி!” என்று தலையாட்டினாள்.
‘என்ன பாட்டு பாடலாம்.’என்று வெண்ணிலா யோசிக்கிறதுக்குள்ளே, “நம்ம ஃபேவரைட் சாங் தான் நிலா.” என்றவன் வேண்டுமென்றே அவளை பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தான்.
“ அன்று கண்ணம் கிள்ளியது…” என்ற பாட.
அவளோ அவனது குரலில் தடுமாற ஆரம்பித்தாள்
அவனோ வேண்டுமென்றே அவளைப் பார்த்துக் கொண்டு எப்பொழுதும் போல் கண்சிமிட்டியபடி பிசிறில்லாமல் பாட, கடைசியில் அவள் தான் ஒரு வித தடுமாற்றத்துடன் பாடி முடித்தாள்.
” இது போதும் பா. ரெண்டு பேரும் எப்பவும் போல சூப்பரா பாடினீங்க. உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். இப்போ தான் சந்தோஷமா இருக்கு.” என்று விட்டு அவர் கிளம்ப.
அதற்கு மேல் வெண்ணிலாவால் தாங்க முடியவில்லை.
அங்கிருந்து ஓடியவள் மரத்தின் மீது சாய்ந்து கண் கலங்கி நிற்க.
அவள் பின்னே வந்த யுகித் கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்
அவளது கண்கள் மூடியிருக்க, கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“என்ன நிலா! பழசெல்லாம் மறக்க முடியலையா?” என்று யுகித் மென்மையாக கேட்க.
விழி, விழித்துப் பார்த்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.
“இல்ல எப்ப பார்த்தாலும் நம்ம தனிமையில் இருக்கும் இடத்திற்கே வர்றியே அதான் கேட்டேன்.” என்று நக்கலாக கூறினான்.
அப்பொழுது தான் அவள் வந்த இடத்தை பார்த்தவள், தன்னையே நொந்து கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க.
அவள் கையை பிடித்து இழுத்தான் யுகித்.
அவளோ அவனது கையை உதற
“ ரொம்ப பண்ணாத நிலா! உண்மைக்கே நான் தான் உன் மேல கோபப்படணும். ஈசியா என்னை தூக்கி போட்டுட்ட.” என்று அவன் கூற,
“இங்க பாருங்க யுகித்! மத்தவங்களுக்கு வேணா நம்க்குள்ள என்ன நடந்ததுன்னு எதுவும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. நீங்க தான் நான் வேணாம்னு முடிவு பண்ணிங்க. எத்தனை முறை மெசேஜ் பண்ணி இருப்பேன். ஒரு முறையாவது பார்த்தீங்களா?”என்று எகிறினாள் வெண்ணிலா.
அந்த நாளின் நினைவில் முகம் இறுக நின்றான் யுகித். பிறகு தலையை உலுக்கிக் கொண்டு,”என் பக்கம் எதாவது நியாயம் இருக்குன்னு நினைக்கவே மாட்டியா நிலா.” என்று வினவ.
“எந்த விளக்கமும் தேவையில்லை யுகித். காலம் கடந்துருச்சு… நீங்க உங்க வழிய பாத்துக்கோங்க. நான் என் வழியை பார்த்துக்கிறேன்.”
“ப்ளீஸ்டா! ஒரு தடவை எனக்கு சான்ஸ் கொடு. நான் விளக்கம் கொடுக்கிறேன்.” என்று அவள் கையைப் பிடித்து மன்றாடினான் யுகித்.
“ ப்ளீஸ் கையை விடுங்க யுகா. யாராவது பார்க்க போறாங்க.” என்றவளுக்கு படபடவென நெஞ்சம் துடித்தது.
“யார் பார்த்தா எனக்கு என்ன? எனக்கு எதைப் பத்தியும் கவலைப்படுற அவசியம் இல்லை.”
“அப்படியா? எனக்கும் உங்க விளக்கத்தை எனக்கு கேட்கணும்னு அவசியம் இல்ல. நான் அன்னைக்கு எவ்வளவோ பேச முயற்சி செஞ்சேன். நீங்க ஒத்துழைச்சிங்களா? எனக்கான வாய்ப்பு நீங்க கொடுக்கவே இல்லல. எல்லாம் முடிஞ்சிடுச்சு. யார் மேல உள்ள கோபத்தையோ என் மேல காமிச்சிட்டீங்க. நான் அன்னைக்கே செத்துப் போயிட்டேன் ஏற்கனவே செத்துப்போன பிணத்து கிட்ட போய் விளக்கம் சொல்லுவீங்களா?” என்று ஆக்ரோஷமாக வெண்ணிலா கூற.
அவளது வார்த்தையில் விக்கித்து போனவன், அவளை இறுக அணைத்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இவ்வளவு நேரம் அவன் மேல் கோபத்தில் இருந்தவளோ அவன் அழுவதைப் கண்டு தாள முடியாமல் அவளும் கண்ணீர் வழிய அவனை இறுக அணைத்தாள்.
“அன்னைக்கு என் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்து இருக்காதில்ல யுகா. எல்லாம் உன்னால தான்…” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்.
“நிலா!” என்ற தீரனின் கர்ஜிக்கும் குரலில் பதறி விலகியவளோ, “மாமா!” என்று குற்ற உணர்வோடு அவனருகே செல்ல முயல.
அவள் கையைப் பிடித்து தடுத்தான் யுகித்.
வெண்ணிலாவின் குடும்பம் நாளைக்கு தான் வருவதாக இருந்தது. ஆனால் அவள் குரல் சரி இல்லாதது போல் உணர்ந்த மித்ரா அன்றே கிளம்பலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
வந்ததற்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
“டேய்! கைய விடுடா!” என்றான் தீரன்.
“ இனி மேல் அவளை நான் விட முடியாது.” என்று மல்லுக்கட்டினான் யுகித்.
“நீ யாருடா அவளுக்கு? அவ கைய விடலைன்னா நடக்கிறத வேற.” என்று கொதித்தான் தீரன்.
“ ப்ளீஸ் மாமா! சண்டை போட வேண்டாம்.”என்று வெண்ணிலா, தீரனிடம் மன்றாட.
யுகித்திற்கு வந்ததே கோபம்.
“ ஹே! நிலா… அவன் கிட்ட ஏன் கெஞ்சுற.”என்று யுகித்எகிற.
இங்க என்ன நடக்கிறது என்பது போல அவர்களது நண்பர்கள், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இந்த யுகி கிட்ட எத்தனை முறை சொன்னேன். வெண்ணிலா கல்யாணம் ஆனவ அவக் கிட்ட எந்த வம்பு வச்சுக்காதேன்னு சொன்னா கேட்குறானா! எப்ப பார்த்தாலும் அடுத்தவன் பொண்டாட்டிய நான் எதுவும் பண்ண மாட்டேன், பண்ண மாட்டேன் சொல்லிட்டே இப்படி செஞ்சுட்டானே… பாவம் இனி அவள் வாழ்க்கை என்னாகுமோ?’ என்று கவலைப்பட்டான் ரகுலன்.
எல்லோருமே அங்கு நடப்பதை அச்சத்துடன் பார்க்க.
சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவர் மட்டும் அச்சம் என்பதை அறியாமல் ஒருவரை, ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.
“ப்ளீஸ் மாமா கோபப்படாதீங்க! பாருங்க பாப்பா பயப்படுறா.” என்று அவனது கையில் இருந்து குழந்தையை வாங்கியவள், அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு செல்ல முயல.
அவனோ, “ இன்னொரு முறை வெண்ணிலா பக்கம் வந்த தொலைச்சிடுவேன்!” என்று யுகித்தை எச்சரிக்க .
சட்டை கையை மடக்கி விட்டப்படி,” அவ இனி மேல் என்னோட தான் இருப்பா, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா!” என்றான் யுகித்.
“அவளுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? நீ யாருடா அவளுக்கு … “என்று தீரன் சினத்துடன் வினவ.
“ நான் யாருன்னு தெரியாதா? வெண்ணிலா கிட்ட கேளு. ஹேய் வெண்ணிலா நான் யாருன்னு சொல்றியா? இல்லையாடீ ? “என்று அவளிடம் கத்த .
அவளோ முகம் இறுக அவனைப் பார்த்தவள்,” உங்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று விட்டு தீரனின் கையைப் பிடித்தாள்.
தீரன் கர்வமாக பார்க்க.
அவளை பிடித்து தன் பக்கம் இழுத்தவன்,” கொன்னுடுவேன்! சொல்லுடி, நான் தான் உன் புருஷன்னு எல்லார் கிட்டயும் சொல்லு.” என்று கத்த.
அந்த இடமே ஒரு நிமிடம் அமைதியானது. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை
எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க.
தீரன் மட்டும் கடகடவென நகைத்தான்.
“அவளை அம்போன்னு விட்டுட்டு போகும்போது உன் பொண்டாட்டின்னு தெரியலைய இப்ப வந்துட்டான்… இத்தனை வருஷமா அவ எவ்வளவு கஷ்டப்பட்டா எங்களுக்கு தான் தெரியும். இன்னைக்கு பொண்டாட்டின்னு ஈஸியா உரிமை கொண்டாடிகிட்டு வந்து நீ கூப்பிட்டா அவ வந்துருவாளா? அவ உன்ன கடந்து வாழ பழகிட்டா. அவளுக்கு இப்ப குழந்தை இருக்கு.
பட்டுவ விட்டுட்டு வரமாட்டா.” என்றான் தீரன்.
“பட்டுவை விட சொல்லலையே.
அவ எனக்கும் குழந்தை தான். நான் பார்த்துப்பேன்.”
“ ஆஹா! அப்படியா? ஆனா நாளைக்கு உனக்குன்னு ஒரு குழந்தை வந்தால் எப்படி பாத்துப்ப?” என்று எகத்தாளமாக வினவினான் தீரன்.
“எங்களுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும், இவ தான் எங்களுடைய முதல் குழந்தை போதுமா?” என்றவாறே அவன் கையில் இருந்து குழந்தையை வாங்க முயன்றான் யுகித்.
அவனை கேலியாக பார்த்து சிரித்தான் தீரன்.
மின்சார பாவை-18
written by Competition writers
மின்சார பாவை-18
மதன் சார் வெண்ணிலாவிடம்,”உன் பேமிலிய பார்க்கணும்!” என்றுக் கூறியதும், ஏற்கனவே அவர்களை அழைத்து இருந்த வெண்ணிலா மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதற்காக வீட்டிற்கு அழைக்க தனியாகச் சென்றாள். அவளது கால்கள் இயல்பு போல அவளும், யுகித்தும் சந்தித்துக் கொள்ளும் இடத்திற்கு அழைத்துச் செல்ல.
அங்கு சென்றவளோ தீரனுக்கு போனில் அழைத்திருந்தாள்.
“மாமா நாளைக்கு எப்ப கிளம்புறீங்க?” என்று வினவ.
“எங்க ?” என்று புரியாதது போல் தீரன் வினவ,
“தீரன் மாமா விளையாடாதீங்க!” என்று செல்ல கோபத்துடன் வெண்ணிலா கத்தினாள்.
“இதை சொல்லத்தான் போன் பண்ணியா”
“ஆமாம் மாமா! நீங்க அவசியம் வரணும். எங்க மதன் சார் வேற நம்ம ஃபேமிலிய பாக்கணும்னு சொன்னாரு. ப்ளீஸ் மாமா. பாப்பு வேற கண்ணுலே நிக்குறா. உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்.”
என்றுவளது கண்கள் கலங்க முயன்றது.
“சும்மா சொல்லாத! நீ அங்க போனதுல இருந்து ஒரு போன் பண்ணல. நாங்க பண்ண போனையும் நீ அட்டெண்ட் பண்ணல. இதுல நீ எங்கள மிஸ் பண்றியா? இல்ல இந்த கதை தானே இங்க வேணாங்கிறது .”
“அப்படிலாம் இல்லை மாமா. ஃப்ரெண்ட்ஸ பார்த்ததுல கொஞ்சம் மறந்துட்டேன்.” என்று அசடு வழிய சிரித்தாள் வெண்ணிலா.
” சிரிச்சே சமாளி.சரி நாளைக்கு நாங்க வரோம். திரும்ப எங்கக் கூடத்தானே வர்ற?” என்று தீரன் வினவ.
“அது இங்க ரெண்டு நாள் தங்கி சுத்தி பார்த்துட்டுத்தான் கிளம்பிறதாக பிளான் மாமா.”
“என்ன இரண்டு நாளாகுமா? ஆனால் நாளைக்கு ஈவினிங் அத்தையை பார்க்க என் கூட வர்ற. அப்புறமா உன் ஃப்ரெண்ட்ஸோட ஜாயின்டாகிக்கோ.”
“ மாமா! அது வந்து…” என்று வெண்ணிலா ஏதோ மறுத்து கூற வர.
”ஷ்… மேல எதுவும் பேசக்கூடாது. நாளைக்கு ஈவினிங் அத்தையை பார்க்க வர. இது தான் என் முடிவு.” என்று விட்டு தீரன் ஃபோனை வைக்க.
“மாமா! மாமா!” என்றவள், அந்தப் பக்கம் பதில் இல்லாமல் போக, கடுப்புடன் திரும்பினாள்.
அங்கோ அவளுக்கு மிக நெருக்கமாக யுகித் நின்றிருக்க, அவள் மேல் முட்டிக் கொள்வது போல் சென்று, இடித்துக் கொள்ளாமல் ஒரு வழியாக சமாளித்து பின்னே நகர.
அவனும் அவள் அருகே நெருங்கி வந்தான்
“மாமா! மாமான்னு எத்தனை முறை சொல்லுற.”
“அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று எரிச்சலுடன் வினவினாள் வெண்ணிலா.
“நான் உன்னை எத்தனை தடவை மாமான்னு கூப்பிடுன்னு கேட்டு இருப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னியே . ஒரு தடவையாவது மாமான்னு கூப்பிட்டியா?” என்று அவன் கோபத்துடன் வினவ.
“கண்டவங்களை எல்லாம் அப்படி கூப்பிட முடியாது “என்றாள் வெண்ணிலா.
“நான் கண்டவனா டீ “என்றவன் அவளை நெருங்கி கழுத்தைப் பிடிக்க.
“ யுகி!” என்ற குரல் பின்னே ஒலித்தது.
திரும்பினால் இந்த முறை ரகுலன் நின்று இருந்தான்.
‘ அண்ணன், தம்பி ரெண்டு பேருக்கும் வேலையே இல்லை போல!’ என்று எண்ணிய யுகித்,
எரிச்சலுடன், “உனக்கு என்னடா பிரச்சனை ?”என்று வினவ,
ரகுலன் வந்ததுமே கிடைத்த இடைவெளியில் அவனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் வெண்ணிலா.
“டேய்! யுகி! இதெல்லாம் ரொம்ப தப்புடா. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு”என்று ரகுலன் கூற
“அதெல்லாம் எனக்கும் தெரியும்”என்றான் யுகித்.
“அப்புறம் ஏன்டா இப்படி எல்லாம் நடந்துக்குற, நீங்க பிரிஞ்சது எனக்கும் வருத்தம் தான். அவ உன் வாழ்க்கைல கடந்து போயிட்டா, நீயும் அவளை மறக்க முயற்சி செய்யுடா. திரும்ப அவ வாழ்க்கையில குறுக்க போகாத யுகித். அது உங்க ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கும் நல்லதில்ல” என்று ரகுலன் அட்வைஸ் பண்ண, அவனை முறைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் யுகித்.
வெண்ணிலாவுக்குமே கோபம்தான், “மாமான்னு சொல்லனுமாமே அன்னைக்கு எத்தனை முறை அவனுக்கு சாரி மாமான்னு மெசேஜ் போட்டேன். கொஞ்சமாவது இறங்கி வந்தானா? அவன் மட்டும் அன்னைக்கு சமாதானமாகிருந்தால
மறுநாள் எங்க அம்மாக் கிட்ட நான் மாட்டிருக்க மாட்டேன். அவங்களும் என்ன அடிச்சு இழுத்துட்டு போய் இருக்க மாட்டாங்க. அதுக்கு பிறகு நடந்த அனர்த்தங்களும், நடக்காமலிருந்திருக்கும்.”என்று எண்ணியவளின் கண்களில் அந்த நிகழ்வு வந்துப் போனது.
(அன்று காதல் பண்ணியது)
வீட்டில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட வெண்ணிலாவிற்கு வீட்டிற்கு சென்றதும் அதற்கு மேலும் இடி போல் செய்தி காத்திருந்தது.
”இந்த காதல் கன்றாவி எல்லாம் வேணான்னு சொன்னா எவளாவது கேக்குறீங்களா” என்று நடுவீட்டில் அம்மா ஒப்பாரி வைத்தார்.
“அம்மா! யுகா! ரொம்ப நல்லவர் மா.” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெண்ணிலா கூற.
“ஆமாம்! உன் அக்காவும் அப்படி சொல்லிட்டு தான் ஓடிப்போனா. இன்னைக்கு அவ நிலைமை என்னன்னு தெரியுமா? ஹாஸ்பிடல்ல சாகக் கிடக்கிறா.பெத்து வளர்த்த என்ன பாக்க மாட்டலாம். உன்ன தான் பாக்கணும்னு உயிரைப் பிடிச்சிட்டு இருக்கா. அதுக்காக உன்ன கூப்பிட வந்தா, நீ காலேஜ்னு கூட பார்க்காமல் அவனை கொஞ்சிட்டு இருக்க. உனக்கு எவ்வளவு தைரியம்?”என்று அவள் அம்மா மீண்டும் அடிக்க முயல.
முகுந்தன் தான் தடுத்தார்.
“என்ன சொல்றீங்க மா?அக்காக்கு என்னாச்சு?” என்று பதறினாள் வெண்ணிலா.
“உங்க அக்கா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணிட்டு இப்போ ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்குறதா தகவல் வந்தது. அவளைப் பார்க்க போனா எங்களை பார்க்க மாட்டேன்னுட்டா” என்று மீண்டும் அழ தொடங்க,
”எப்படி அவ உங்கள பார்ப்பா, உங்களுக்கு கொஞ்சமாச்சும் இரக்கம் இருக்கா? அன்னிக்கு கஷ்டம்னு வீடு தேடி வந்தவளை அரவணைச்சிங்களா? எவ்வளவு துன்பமோ அதை தாங்க முடியாமாதானே தன்னை மீறி நம்ம வீட்டுக்கு வந்தா?அவளை என்ன ஏதுன்னு ஏதாவது கேட்டிங்களா?காதலிக்குறது அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா? இதே அவள் காதல் வாழ்க்கை நல்லபடியாக எந்த பிரச்சனையும் இல்லாமல், அவள் காசுபணத்தோட இருந்தா, கஏத்துக்கிட்டிருப்பீங்க தானே. இல்ல ஒருவேளை நீங்க பார்த்து வைச்ச வாழ்க்கை இது போல மோசமாக அமைஞ்சிருந்தா இப்ப மாதிரி அவ சாகட்டும்னு அவள விட்டுருப்பீங்களா? அப்படி என்ன உங்களுக்கு கெளரவம், பிடிவாதம் நீங்க பாசத்தோட வளர்த்த பிள்ளைகள் தானே நாங்க…
கேட்ட பொருளெல்லாம் வாங்கி கொடுத்த நீங்க, எங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கக்கூடாதா?” என்று கதறியவள், “நான் மட்டும் லூசு மாதிரி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். முதல்ல அக்கா எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான்னு
சொல்லுங்க.”என்று கேட்டு, அங்கு ஓட.
அங்கோ இவளிடம் பேசுவதற்காகவே உயிரை பிடித்துக் கொண்டிருந்த அவளது அக்கா, “பட்டுவ நீதான் பாத்துக்கணும் சின்னு” என்று கைக்குழந்தையாய் இருந்த மூன்று மாத குழந்தையை காண்பிக்க, அந்த குழந்தையும் இவளை பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.
ஓரே எட்டில் நர்ஸிடம் இருந்து குழந்தையை வாங்கியவள், நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
அந்தக் காட்சியை ஒருவித மனநிறைவுடன் பாரத்துக் கொண்டிருந்த சகோதரியை கண்டவள்,”அக்கா அப்படிலாம் பார்க்காதே. உனக்கு ஒன்னுமாகாது. நீ சீக்கிரம் நல்லாகிடுவ. தைரியமா இரு கா. ப்ளீஸ் எப்படியாவது நல்லப்படியாக வந்துடுடீ. குழந்தைய பத்திக்கூட கவலைப்படாம இப்படி ஒரு முடிவு எடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது?”என்று தொண்டை அடைக்க வினவினாள் வெண்ணிலா.
“என் பட்டுவோட நல்லதுக்காகத்தான் இந்த முடிவு எடுத்தேன் நிலா. படிக்கும் போது லவ் பண்ணுது எவ்வளவு தப்புன்னு எனக்கு இப்ப தான் புரியுது. அம்மா அப்பாவோட ப்ரின்ஸஸாக வளர்ந்த என்னால சாதாரண வாழ்க்கையை ஒரு நாள் கூட வாழ முடியலடா. வசதிகள் மட்டுமல்ல, அடிப்படை தேவைகளைக் கூட அவனால நிறைவேற்ற முடியலை.
என்னால, சமைச்சு துணி துவைச்சு, குடும்பத்தை பார்த்துக்கிறதுன்னு எதிலையும் அவனை திருப்திபடுத்த முடியல.
ஆரம்பத்தில் நண்பர்கள் உதவினாலும், காதலின் வேகத்திலும் எங்களை நாங்களே சமாளிச்சுக்கிட்டோம். படிப்பை முடிக்காததால் எங்களுக்கு வேலையும் கிடைக்கல. குழந்தையும் இல்லைன்னு எங்களுக்குள்ள சண்டை வர ஆரம்பிச்சிடுச்சு. மூன்று வருஷத்துக்கு அப்புறம் பட்டு வயித்துல வளர ஆரம்பிச்சா.
சின்ன சின்ன சண்டைகள்,பெரிய சண்டையாக மாற ஆரம்பிச்சது.
அம்மா, அப்பாவ சமாதானப்படுத்தலாம்னு நினைச்சு வந்தேன். என்ன அவங்க உள்ள விடவே இல்ல.அவங்க மனசு மாறும்னு நம்பிக்கையும் இழந்துட்டேன்.குழந்தை பிறந்தப்பிறகு எங்களால் ஒன்றுமே சமாளிக்க முடியல.
அவன் வட மாநிலத்துப்பக்கம் வேலை தேடி போனவன் போனவன் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்ல. அவனோட போனும் நாட் ரீச்சபிள்னு வருது. ஒருமாதம் சமாளிக்க முடிந்த என்னால் மனசலயும் உடம்பிலயும் தெம்பில்ல.பட்டுவ அனாதையாக விட மனசு வரல.நான் வாழ்ந்த வாழ்க்கையை என் பிள்ளைக்கும் கிடைக்கணும்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். எந்த சூழ்நிலையிலும் நீ பட்டுவ கைவிடமாட்டேன் நான் முழுமையாக நம்புறேன் நிலா.பட்டுவ பத்திரமா பார்த்துக்கோ “என்று மூச்சு வாங்க பேசியவள்,தங்கை கையில் இருந்தஷகுழந்தையை பார்க்க,நிலா பட்டுவ நெஞ்சோட அணைத்து “இனி மேல் இவ என்னோட குழந்தை” என்றவள் முத்தமிட,அந்த நிம்மதியுடன் அவளது அக்காவின் உயிர் பிரிந்தது.
வீட்டிற்கு வந்த வெண்ணிலாவோ குழந்தையை யாரிடமும் கொடுக்காமல் அடைக்காத்தாள்.
கமலி, முகுந்தன் இருவருக்கும் பெரிய பொண்ணு இறந்தது வருத்தம் தான்.
ஆனால் இவளுக்கு கல்யாணம் பேசி இருக்கும் நிலையில் குழந்தை இருப்பது தெரிந்தால் என்ன ஆகும் என்று அது வேறு கவலை. குழந்தையை கேட்டால் யாரிடமும் கொடுக்க மாட்டேன் என அடம் பிடித்தாள் நிலா.
“இங்க பாரு வெண்ணிலா! உங்க நல்லதுக்காக தான் நாங்க எல்லாம் பண்ணோம். ஆனா அவ தான் புரிஞ்சுக்கலை. நீயாவது புரிஞ்சுக்கோ. இப்படி இருக்காத. உனக்கு பார்த்திருக்க குடும்பம் நல்ல குடும்பம். இன்னும் பத்து நாளிலேயே கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. ஆனா உன் கிட்ட மாப்பிள்ளை பேசணும் என்கிறார்.
“ நீ இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடு. இல்லைன்னா குழந்தையை ஏதாவது ஆசிரமத்துல விட்டுடுவேன்.”என்று கமலி மிரட்ட.
“நீ எல்லாம் ஒரு அம்மாவா? உன் பேத்தி தானே. இப்படி பேசுறீங்களே.” என்று வெண்ணிலா அழ.
“என் பேத்தி நல்லத்துக்காகத் தான் சொல்றேன். நான் பார்த்திருக்குற குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். கல்யாணம் முடியவும் குழந்தை இருக்கிற விஷயத்தை பத்தி சொல்லிக்கலாம் .அவங்க நல்லா பார்த்துப்பாங்க. வேற யார நீ கல்யாணம் பண்ணாலும் குழந்தைய பாத்துக்க விட மாட்டாங்க.” என்று குழந்தையை காட்டி கார்னர் பண்ணினார் கமலி.
அதற்குப் பிறகு வெண்ணிலாவிற்கு வேறு தெரியாமல் கல்யாணத்துக்கு தலையாட்டினாள்.
ஏற்கனவே அவளது போனை எல்லாம் எடுத்து மறைத்து வைத்தவர், ஹாஸ்பிடல்ல இருந்து வந்த அன்னைக்கே அவர்கள் குலதெய்வம் இருக்கும் ஊருக்கே வெண்ணிலாவை கிளப்பி கூட்டிட்டுப் போனார்கள்.
அங்கே தான் கல்யாணம் ஏற்பாடும் செய்திருந்தார்கள். அதனால் தான் இவளைத் தேடி நண்பர்கள் வந்த போது எந்த தகவலும் தெரியவில்லை.
குழந்தைக்காக என்று தலையாட்டிய வெண்ணிலாவோ யுகித்தை மறக்க முடியாமல் தவித்தாள்.
குழந்தையை உறவினர்களின் வீட்டில் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு திருமண ஏற்பாட்டை பார்த்தனர்.
அவர்கள் பெற்றோர் நினைத்தது போல் குலதெய்வ கோவிலில் வெண்ணிலாவுக்கு திருமணம் நடந்தேறியது.
கண்ணில் நீர் வழிய தன் கழுத்தில் ஏறிய தாலியை பார்த்தாள் வெண்ணிலா.
அந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தவளுக்கு கோபம் தான் வந்தது.
தலையை உதறி அவள் கோபத்தை கட்டுபடுத்திய வெண்ணிலா அவளது அத்தைக்கு அழைத்தாள். “பாப்பா என்ன பண்றா அத்தை “என்று கேட்க,
”பாப்பா மிதுவோட விளையாடிட்டு இருக்கா மா. என்ன ஆச்சு நிலா ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு” என்று அவர் பதற
“உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அத்த.” என்றாள் வெண்ணிலா.
“என்னாச்சு டா? ஏன் உன் குரல் ஒரு மாதிரியா இருக்கு.” என்று மித்ரா வினவ.
“இல்லத்தை! சும்மா தான் போட்டேன்.” என்றவள் ஃபோனை வைத்து விட்டாள்.
அவளுக்கு மித்ராவிடம் பேசியதுமே கொஞ்சம் மனம் அமைதியடைந்தது. அதற்குப் பிறகு நண்பர்களுடன் கொட்டமடித்துக் கொண்டிருந்தாள்.
யுகித்தோ, இவளுக்கு நான் என்னைக்குமே முக்கியம் இல்ல போல. ஈஸியா என்ன தூக்கி போட்டுட்டா. அவங்க குடும்பத்திடம் பேசும் போது மட்டும் அப்படியே மாமா,அத்தை னு எப்படி குரல் குழையுது பாரு என்று எண்ணியவனுக்குள் கோபம் பெருகியது.
மின்சார பாவை-17
written by Competition writers
மின்சார பாவை-17
அடுத்து வந்த நாட்களில் யுகித்தும், வெண்ணிலாவும் எந்தவித கவலையுமின்றி காதல் பறவைகளாக சுற்றி திரிய, அதனைக் கண்டு
வெண்ணிலாவின் நண்பர்களுக்கும், யுகத்தின் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.
ஆனால் நகுலனுக்கும், யுகித்துக்கும் மட்டும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும்.
நகுலன் வெண்ணிலாவிடம் உரிமையாக இருந்தால் அதை யுகித்தால் தாங்கிக்கொள்ளவே முடியாது.
வேண்டுமென்றே நகுலனிடம் வம்பு பண்ணுவான்.
வெண்ணிலாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளத் தோன்றும். அன்றும் அப்படித்தான் இருவரும் அடித்துக்கொள்ள தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
அங்கு வந்த தீபிகாவோ,” என்னாச்சு? ஏன் இப்படி இருக்க நிலா?” எனக் கேட்க,
“என்ன விஷயம்னு உனக்கு தெரியாதா பேபி? எப்பவும் போல நகுலனும், யுகித்தும் சண்டை போட்டுட்டு இருக்காங்க. எனக்கு ரெண்டு பேருமே முக்கியம். புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.”
“ஹா! ஹா!” என்று சிரித்தாள் தீபிகா.
“சிரிக்காதே பேபி. எனக்கு டென்ஷனாகுது. ஏன் தான் இந்த யுகித் சின்ன பிள்ளையாட்டம் ரியாக்ட் பண்றான்னே தெரியல.“ என்று வெண்ணிலா புலம்ப.
“அவனுக்கு உன் மேல ரொம்ப பொசசிவ் நிலா. நகுலன் உன் கிட்ட உரிமை எடுத்துக்குறதை அவனால ஏத்துக்க முடியலை. அதான் அவன் கிட்ட சண்டைக்கு போறான். யுகிக்கு நீ மட்டும் தான் எல்லாம். அதே போல உனக்கும் அவன் மட்டும் தான் எல்லாமாக இருக்கணும்னு நினைக்குறான்.”
“ஆமா பாவம் யுகா. அவனுக்கு யாருமில்லைன்னு சொன்னான். ஆனா இவ்வளவு பெரிய காலேஜ்ல எப்படி படிக்கிறான். யாரும் இவனுக்கு ஸ்பான்சர் பண்றாங்களா?” என்று அதி முக்கியமான கேள்வியை வெண்ணிலா வினவ.
அவளை லூசா நீ என்பது போல் பார்த்தாள் தீபிகா.
”ஏன் இப்படி பாக்குற பேபி?”
“ஹே! நிலா… உனக்கு யுகியை பத்தி எதுவுமே தெரியாதா ? அவனைப் பத்தி எதுவும் உன் கிட்ட சொல்லலையா ?
“இல்ல பேபி. அவர பத்தி ஏதாவது சொல்ல வந்தா நான் பேச்சை மாத்திடுவேன். அவருக்கு யாருக்கும் இல்லைன்னு வருத்தப்படுவாரா, அதை என்னால தாங்க முடியாது.”என்று வெண்ணிலா சொல்ல,
“ ஏய்! லூசு! லூசு! யுகிக்கு அம்மா, அப்பா தங்கச்சின்னு ஒரு குடும்பமே இருக்கு. அவங்க வெளியூர்ல இருக்கிறாங்க. அந்த ஊர்ல அவங்க தான் பெரிய பணக்காரங்க. அப்படி இருக்கும்போது பையனா இங்க படிக்க வைக்காம வேற எங்க படிக்க வைப்பாங்க” என்று தீபிகா கிண்டலாக வினவ.
”என்னது யுகாக்கு குடும்பம் இருக்கா? அப்புறம் ஏன் அன்னைக்கு அனாதைன்னு என்கிட்ட சொல்லணும் “ என்று குழப்பத்துடன் வினவினாள் வெண்ணிலா.
“அது ஒரு பெரிய கதை நிலா. அவனுக்கு எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாதது போல் தான். அவன் மேல யாருக்குமே அக்கறையில்லை. அவனுக்கு தேவையான அன்பு அவங்க குடும்பத்துல கிடைக்கல. அதான் அவங்க கிட்ட இருந்து விலகி, இங்கே ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறான்.”
வெண்ணிலா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.
“என்ன நிலா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற? அவன் எப்பவுமே சொல்லுவான் என்னோட வைஃப்புக்கு திகட்ட திகட்ட என் அன்பு முழுவதையும் கொடுக்கணும். அது போல் இதுவரைக்கும் அனுபவிக்காத அன்பு எல்லாவற்றையும் அவக் கிட்ட இருந்து அனுபவிக்கணும். எங்களுக்கு நடுவில் யாரும் வரக்கூடாதுன்னு சொல்லுவான்.
அவ ஆசைப்பட்ட மாதிரி நீ கிடைச்சிட்ட. ஆனா நீ உன் பிரெண்ட்ஸுக்கு முக்கியத்துவம் குடுக்குற. அதை அவனால ஏத்துக்க முடியாமல் உன் பிரண்ட்ஸோட சண்டை போடுறான்.” என்று கூற,
“பேபி! நான் இன்னும் யுகித்தை பற்றி முழுசா தெரிஞ்சுக்காம, அவரை கஷ்டப்படுத்திட்டேன்.” என்று வருந்தினாள் நிலா.
ஆனால் யுகித்திற்கு ஏதுவுமே பிரச்சனையாக தெரியவில்லை. நகுலனுடன் சண்டை போட்டாலும், வெண்ணிலா மேல் கோபமே அவனுக்கு வரவில்லை. அவளை நினைத்தாலே உள்ளம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.
இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக மனிதனாக தன்னை மட்டுமே உணர்ந்தான்.
அதே கல்லூரியில் மேல் படிப்பு படிக்க போவதாக மதன் சாரிடம் யுகித் கூறியதும்,
”இதனால தான் வேலையில கான்சென்ட்ரேஷன் பண்ணலையா யுகி? சாரி பா! நான் உன்ன தப்பா நினைச்சுட்டேன்.” என்று அவனை தட்டிக் கொடுத்துவிட்டுச் செல்ல.
அவனுக்கு இறக்கை இல்லாமல் பறப்பது போல் இருந்தது.
வெண்ணிலாவின் காதல் கிடைத்ததும் அவன் இழந்த எல்லாம் மீண்டும் கிடைத்ததாக எண்ணி பூரித்து, அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.
அவ்வப்போது அவளை சீண்டும் வேலையையும் செவ்வனே செய்தான் யுகித்.
அதுவும் பாட்டு ப்ராக்டிஸ் பண்ணும் போதே எல்லாம் அவளிடம் வம்பு வளர்ப்பான்.
பார்க்க நல்ல பிள்ளை போல் இருந்து கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு திடீரென கண் சிமிட்டுவான்.
வெண்ணிலாவிற்கோ முகம் சிவந்து போய்விடும்.
தினமும் கல்லூரியின் மதிய உணவு இடைவெளியின் போது அவனுடன் பத்து நிமிடமாவது செலவு செய்ய வேண்டும்.
என்றாவது படிப்பு ,அசைன்மெண்ட் வேலையால் வெண்ணிலா அவனை பார்க்க செல்லாவிட்டால் வகுப்பிற்கே வந்து வம்பு செய்வேன்.
அங்கு எந்த பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நல்ல பிள்ளையாக,” சார் வெண்ணிலாவை மதன் சார் வரச் சொன்னார்.” என்றுக் கூறி அழைத்துச் சென்று விடுவான்.
அன்றும் மதன் சார் கூப்பிடுவதாக, வெண்ணிலாவை அழைத்துச் செல்ல.
அவன் கூடச் சென்றவளோ , “என்ன யுகா. இன்னைக்கு அசைன்மென்ட் சம்மீட் பண்ண வேண்டி இருந்துச்சு. அதான் வரல. இப்படி எப்ப பார்த்தாலும் என்ன விளையாட்டு? இது சாருக்கு தெரிஞ்சா அவர் என்ன நினைப்பாரு”. என்று சற்று கோபமாக வினவ.
“சரி போ உன்ன பாக்க முடியலேன்னு கூப்பிட்டா, ரொம்ப தான் பிகுப் பண்ற. காலேஜ் முடிஞ்சாலும் அடுத்த செகண்ட் வீட்டுக்குகெளம்பிடுவ. அப்புறம் உன்னை எப்ப தான் நான் பார்க்கிறது? உனக்கு நான் முக்கியமே கிடையாது” என்றவாறே மரத்தில் சாய்ந்தவன் கண்களை மூடிக்கொள்ள.
”சாரி யுகா. ஆனா மதன் சாருக்கு நம்ம விசயம் தெரிஞ்சா என்ன பண்றதுன்னு தான் கேட்டேன். என்ன பாரேன். ப்ளீஸ யுகா.”என்று கெஞ்ச,
” போ! உனக்கு என்னை விட முக்கியமான வேலை இருக்குல. நீ போ. ”என்று கண்களை திறக்காமலே அவன் கூற.
“யுகா! இப்போ என்னைப் பார்க்க போறியா? இல்லையா?”
“பார்க்க முடியாது போடி.”
“இரு உன்னை எப்படி பார்க்க வைக்கணும்னு எனக்குத் தெரியும். என்ற வெண்ணிலா, அவள் கன்னத்தை பற்றி முத்தமிட்டாள்.
படக்கென்று விழித்தவன்,” நிலா!” என்று தாபமாக அழைக்க.
அவளோ அங்கிருந்து ஓடியே விட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் வேண்டும் என்றே அவள் வரும்போதெல்லாம் “அன்று காதல் பண்ணியது எந்தன் கன்னம் கிள்ளியது… அடி இப்போதும் நெஞ்சில் மாறாமல் இனிக்கிறதே.” என்று பாடி கண் சிமிட்டுவான்.
அவளுக்கு முகம் எல்லாம் சிவந்து போகும்.
அடுத்த இரண்டு வருடங்களும் காதலும், ஊடலுமாகச் செல்ல அந்த வருட இறுதியில் வந்த கேம்பஸ் இன்டர்வியூல இருவரும் ஒரே கம்பெனியில் செலக்ட் ஆனார்கள்.
வெண்ணிலாவும், யுகித்தும்இனி வாழ்வில் பிரிவென்பதே கிடையாது என்று எண்ணி சந்தோஷத்தில் மிதந்தனர் .
“நிலா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கம்பெனில வேலைக் கிடைச்சதுக்காக பிரண்ட்ஸ்ஸெல்லாம் ட்ரீட் கேட்குறாங்க.
வர்ற சண்டே கொடுக்கலாம்னு இருக்கேன் நீயும் வரணும்”. என்று யுகித் கூற,
“சரி!” என்றாள் வெண்ணிலா.
ப்ரெண்ட்ஸோட போறோம்னு சொன்னா எப்படியும் வீட்டில் விட்டு விடுவார்கள் என்று எண்ணினாள்.
ஆனால் வெண்ணிலாவின் அம்மாவோ, இவளது படிப்பு முடிவதால் வரன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நல்ல வரன் அமைய, அவர்களது குடும்பமும் நல்லவிதமாக தெரிய, ஞாயிறன்று கோவிலில் பெண் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
மாப்பிள்ளை வீட்டார் கேஷுவலா சந்தித்தால் போதும் என்று கூறி விட,
கமலிக்கும் அதுவே நல்லது என்று பட இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டாள்.
வெண்ணிலாவுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை என்பது அவருக்குத் தெரியும்.
கல்யாணம் என்றால் எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று எண்ணியவர் சும்மா கோவிலுக்கு போவதாக அழைத்தார்.
“ அம்மா! ப்ரெண்ட்ஸுகளோட பார்ட்டி மா. அவசியம் போகணுமா! ப்ளீஸ்…” என்று கெஞ்ச.
“கோவில்ல வேண்டுதல் வச்சிருக்கேன். இன்னைக்கு அவசியம் போகணும் . உன் ப்ரண்ட்ஸோட இன்னொரு நாள் வெளியே போயிக்கோ.” என்று மறுத்து விட்டார்.
அவளால் வர முடியாத சூழ்நிலையை யுகித்துக்கு மெசேஜ் செய்ய.
அதை பார்த்த யுகித்தோ எந்த ரிப்ளையும் செய்யாமல், கோபத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.
இவளோ கிடைத்த தனிமையில் அவனது போனுக்கு முயற்சி செய்ய போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக வாய்ஸ் வர.
அவளுக்கு படப்பட என்று வந்தது. பெற்றோருடன் கோவிலுக்கு சென்றாலும் அவளது நினைவெல்லாம் யுகித்தையே சுற்றிச் செல்ல நடந்த எதையும் கவனத்தில் வைக்கவில்லை வெண்ணிலா. மாப்பிள்ளையாக வந்த தீரனோ யோசனையுடன் வெண்ணிலாவைப் பார்த்தான்.
வீட்டிற்கு வந்த தீரனிடம்,” பொண்ண பிடிச்சிருக்கா?” என்று நிரஞ்சன் வினவ.
“ எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று மித்ராவும், மிதுனாவும் கோரஸாக கூற.
“உங்களையா கேட்டேனா?” என்ற நிரஞ்சனோ, “நீ சொல்லு தீரன் உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா?”என்று வினவ.
“அப்பா! உங்களுக்கும், அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா போதும். கல்யாணம் வரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் நான் வச்சுக்க விரும்பல . இருந்தாலும் அந்த பொண்ணுக்கு விருப்பமானு கேட்கணும். அந்தப் பொண்ணோட போன் நம்பர் வாங்கி தாங்க. நான் பொண்ணோட பேசடுறேன்.” என்றான் தீர்மானமாக.
“அப்போ வெண்ணிலா தான் இந்த வீட்டு மருமகள். வெண்ணிலாவுக்கு சம்மதம்னு அவங்க அம்மா அடிச்சு சொல்லுறாங்க. நான் வெண்ணிலா நம்பர் வாங்கி தரேன். நீயே கேட்டுக்கோ. என்று மித்ரா உற்சாகமாக கூறினார்.
அங்கோ முகுந்தனும், கமலியும்…
வெண்ணிலாவிடம் தெரிவிக்காமல் கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பித்தனர்.
இதை எதையும் அறியாமல் மறுநாள் யுகத்தின் கோபத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே கல்லூரிக்கு கிளம்பினாள் வெண்ணிலா.
எப்போதடா உணவு இடைவேளை வரும் என்று காத்திருந்து, அவனைத் தேடிச் செல்ல.
அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
”ப்ளீஸ் யுகா! அம்மா திடீர்னு வேண்டுதல்னு கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.என்னால ஒன்னும் செய்ய முடியல. புரிஞ்சுக்கோ யுகித்” என்று அவள் அவன் கன்னத்தை பிடித்து கெஞ்ச.
அவனோ,அவளது கைகளைத் தட்டி விட்டு அங்கிருந்து திரும்பி பார்க்காமல் கிளம்பினான்.
கண்கள் கலங்க வெண்ணிலா நின்றிருக்க. அவள் முதுகிலே ஓங்கி ஒன்று போட்டார் கமலி.
எதிர்பாராத அடியில் கண்கள் கலங்க திரும்பினாள் வெண்ணிலா.
“அம்மா!”என்று பயத்துடன் அழைக்க.
“ என்ன வேலைப் பார்த்துட்டு இருக்க வெண்ணிலா? இதுக்கு தான் உன்ன காலேஜ்ஜுக்கு அனுப்பினோமா, கடைசியா உங்க அக்கா மாதிரியே நீயும் பண்ணிட்டியே.
அவ பண்ண காரியத்துக்கு இன்னைக்கு எந்த நிலைமையில் இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்றவர் அவளை அடித்துக்கொண்டே இருக்க.
முகுந்தன் தான் அவளை தடுத்தார்.
மொத்த கல்லூரியும் இவர்களையே வேடிக்கை பார்க்க.
பார்க்க வேண்டியவனோ கோபத்தில் கிளம்பி விட்டிருந்தான்.
தகவல் தெரிந்து அங்கு வந்த மதன் சார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார்.
கமலி கோபத்தில் கொந்தளிக்க.
முகுந்தன் தான் பொறுமையாக,“சார்! நாங்க வெண்ணிலாவை கூட்டிட்டு போறோம்.” என்றார் .
“ கூட்டிட்டு போங்க.ஆனால் இந்த விசயத்தை கொஞ்சம் பொறுமையா ஹான்டில் பண்ணுங்க. வெண்ணிலா சின்ன பொண்ணு. எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா.”என்றார் மதன்.
யாரையோ நிலா லவ் பண்ணுகிறாள் என்று மட்டும் அவருக்கு புரிந்தது.ஆனால் அந்த பையன் யார் என்பதை விசாரிக்கவில்லை. காதல் ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லையே என்று எண்ணியவர் அத்துடன் அந்த விஷயத்தை விட்டு விட்டார் .
பழைய சம்பவங்களை நினைத்து பார்த்தவர், நிகழ்விற்கு வந்தார்.
வெண்ணிலாவோட அம்மா அவளுடைய காதலுக்கு வேணும்னா தீங்கிழைத்திருக்கலாம். ஆனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தான் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணியவர் வெண்ணிலாவை புன்னகையுடன் பார்த்து, “உன்னோட பேமிலி மெம்பர்ஸ் யாரையும் கூட்டிட்டு வரலையா? எங்களுக்கெல்லாம் அவர்களைஅறிமுகப்படுத்தக் கூடாதா?”என்று வினவ,
“நாளைக்கு பார்ட்டிக்கு வருவாங்க சார். உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.” என்றாள் வெண்ணிலா.
அதைக் கேட்டதும் முகம் இறுகி நின்றான் யுகித்.
மின்சார பாவை-16
written by Competition writers
மின்சார பாவை-16
அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ.
வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள்.
நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான்.
ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது.
“யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற.
ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும் வெண்ணிலாவும் அவர விரும்புறாருன்னு நமக்கே தோணுச்சு தானே. இல்லன்னு சொல்லாதே.” என்றான்.
“ஆமாம் நீ சொல்றது கரெக்ட்டு தான். ஆனா இப்ப அவளுக்கு பிடிக்கவில்லைன்னா விட்டு விட வேண்டியது தானே.” என்று நகுலன் கூறினான்.
இவர்கள் பேச பேச வெண்ணிலா அழுதுக் கொண்டே இருக்க.
“ முதலில் இநத டாபிக்கை விடுங்க!” என்று அதட்டினாள் மஹதி.
**************
அங்கோ யுகித்தின் கன்றிய முகத்தைப் பார்த்து ரகுலனும் தீபிகாவும் பதற.
அவனோ குரல் கம்ம,”வெண்ணிலா என்னை லவ் பண்ணலையாம். ஃப்ரெண்டா தான் நினைச்சாளாம். அவளை தொந்தரவு பண்ண கூடாதுனு நகுலனும் ஆர்டர் போடுறான். என்னை பார்த்தா எப்படி தெரியுது. பிடிக்காத பொண்ணை டார்ச்சர் பண்ற மாதிரியா தெரியுது. அவளுக்கும் என்னை பிடிக்கும். ஆனால் ஏன் இப்படி நடந்துக்கிறான்னு ஒன்னும் புரியலை. எனக்கு யாருடைய அன்பும் நிரந்தரமா கிடைக்காது போல. நான் ஒரு அன்லக்கி.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான் யுகித்.
தீபிகாவுக்கு தான் அவனை இப்படி பார்க்க மனது வலித்தது
தீபிகாவுக்கும் அவனை பிடிக்கும். ஆனால் யுகித்தும் நிலாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்ததும் தன் மனதை மாற்றிக் கொண்டாள்.
ஆனால் வெண்ணிலா ஈஸியா லவ் பண்ணலைன்னு சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அடுத்து வந்த நாட்கள் யுகித் எதிலும் கவனத்தை செலுத்தாமல் யோசனையுடனே இருந்தான்.
வகுப்பிலும் கவனமின்றி இருக்க
மதன் சாரே இரண்டு தடவை அவனை கண்டித்தார்.
அடுத்தமுறையும் வகுப்பில் கவனமில்லாமல் யுகித் இருக்க.
“யுகித்! என்ன நெனச்சிட்டு இருக்க வர வர உன்னோட ஸ்டடிஸ்ல கான்ஸன்ட்ரேஷன் பண்ண மாட்டேங்குற. கேம்பஸ் இன்டர்வியூவும் ஒழுங்கா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற.வாட்ஸ் அப் யுவர் ப்ராப்ளம் மேன்?” என்று மதன் வினவ.
”நத்திங் சார்” என்றான்.
“எல்லாரும் உன்ன பாராட்டுறாங்கன்னு என்ற
தலைகனம் வந்துடுச்சு.ஐ டோண்ட் லைக் திஸ் பிஹேவியர். கிளாசை ஒழுங்கா கவனிக்கிறதா இருந்தா இரு. இல்லைனா என் கண்ணு முன்னாடி நிக்காத வெளியில போ”என்று மதன் திட்ட.
ஒன்றும் கூறாமல் வெளியே வந்தவனுக்கு வாழ்க்கையே வெறுத்து தான் போனது.
அவனோட ஆஸ்தான இடத்திற்குச் சென்றவன், தன் நிலைமையை நினைத்துப் பார்த்தான்.
‘எல்லாத்துக்கும் அந்த வெண்ணிலா தான் காரணம்.” என்று எண்ணியவனுக்கு கோபம் வர. அங்கிருந்த மரத்தில் கையை குத்திக் கொண்டிருந்தான்
அவன் பின்னே வந்த தீபிகா எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை .
அடக்க முடியாத கோபத்துடன் கிளம்பிய தீபிகா, தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் முன்பு சென்று நின்றாள்.
” உன்னால ஒருத்தவன் பைத்தியக்காரனாட்டம் அங்க கைய ஒடச்சுக்கிட்டு இருக்கான். ஆனால் நீ சந்தோஷமா இருக்க. நல்லா இரு தாயே.” என்று தீபிகா கத்த.
“என்ன சொல்ற பேபி” என்று புரியாமல் வினவினாள் வெண்ணிலா.
“ என்ன புரியலை? நீ லவ் பண்ணலன்னு சொன்னதிலிருந்து அவன் எதிலும் கவனத்தை செலுத்தாமல் அலட்சியமா இருக்கான். இன்னைக்கு மதன் சார் கிட்ட நல்லா திட்டு வாங்கிட்டு,அதை தாங்க முடியாமல் தன்னை தானே தண்டிச்சுக்கிட்டு இருக்கான். கைல ரத்தம் ஒழுகிட்டு இருக்கு நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறான்.” என்று கதறினாள் தீபிகா.
அவளுக்கு மேல் பதறிய வெண்ணிலாவோ வேகமாக அவனைத் தேடிச் சென்றாள்.அங்கு கையில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தான்.
“யுகா ப்ளீஸ் . “என்று அவனது கைகளைப் பிடித்து தடுக்க முயன்றாள்.
அவளை உதறியவன்,
முதல்ல என் கண்ணு முன்னால நிக்காத போயிடு. எனக்கு எதுவுமே கிடைக்காது. நான் அவ்வளவு அதிர்ஷடசாலி. ஆனாலும் உன்னை லவ் பண்ணதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா இன்னைக்கு அனாதை மாதிரி எப்பவும் போல தனியா நிக்கிறேன். சின்ன வயசுல இருந்து நான் எதிர்பார்த்த எதுவும் எனக்கு கிடைச்சதில்ல.
நான் இழந்த அன்பு, பாசம் எல்லாத்தையும் உன் மூலமா திகட்ட திகட்ட அனுபவிக்கணும்னு நினைச்சேன். எதுவும் நடக்காதுனு எனக்கு விதி எழுதி வைச்சிருக்கு போல.” என்று தன்னையே வெறுத்து அவன் பேச
அவளால் தாங்கவே முடியலை.
அவனை இறுகக் கட்டிக் கொண்டு , “இப்படியெல்லாம் பேசாதே. யுகா. நான் இருக்கேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்காகத்தான் நான் விலகி நிற்கிறேன் .” என்றவள் அழுது கரைய.
அவளது வாய் வார்த்தையாக,”உன்னைப் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்பதை கேட்டதுமே அவனது முகத்தில் புன்னகை மலர்ந்தது ,
அவளை அவனும இறுக அணைத்துக் கொண்டவன்,” தட்ஸ் மை கேர்ள்!” என்று அவளது நெற்றியில் முத்தமிட.
பதறி விலகினாள் வெண்ணிலா.
அப்பொழுது தான் அவனுடைய கையை கவனித்தாள் வெண்ணிலா.
ரத்தம் வந்து கொண்டே இருந்தது. அதைப் பார்த்து பதறியவளோ, அதை துடைத்து விட்டு அவனைப் பார்த்தாள்.
“இதெல்லாம் ஒன்னுமில்ல நிலா. நீ என்ன பிடிக்கும்னு சொல்லிட்டல்ல. எனக்கு அதுவே போதும்.”என்றுக் கூறி புன்னகைத்தான் யுகித்.
அவனுக்குக் வலிக்காதவாறு கையில் முத்தமிட்டாள் வெண்ணிலா. அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் காயத்தில் பட்டது.
“என்னாச்சு நிலா? இப்ப எதுக்கு அழுற?” என்று சமாதானம் செய்தான் யுகித்.
“சாரி யுகா. எங்க வீட்ல நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாங்க அதான் அவாய்ட் பண்ண பார்த்தேன்.” என்று வெண்ணிலா கூற.
“எந்த வீட்டில் தான் லவ் பண்ண ஒத்துக்குவாங்க. கல்யாணம் ஆனால் சமாதானம் ஆகிடுவாங்க. நீ கவலைப்படாதே .”
“அப்படியெல்லாம் இல்லை. எங்க அக்கா கல்யாணம் பண்ணிட்டு போய் மூணு வருஷமாச்சு. ஆனா அவங்க இன்னும் அவளை மன்னிக்கவே இல்லை.”
“என்ன ? உனக்கு அக்கா இருக்காங்களா?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் யுகித்.
“ ஆமாம். என்னை விட இரண்டு வருஷம் பெரியவ. அவ ரொம்ப அமைதி. அவ லவ் பண்ணினங்கறதையே எங்களால நம்ப முடியல. ஆனா ஒருநாள் அவ காலேஜ் விட்டு வரும்போது மாலையும் கழுத்துமா வந்து நின்றாள். அம்மா அவளை உள்ள விடவே இல்லை.
அதுக்கப்புறம் வீட்டுக்காரரோட சண்டை போட்டுட்டு ஒரு நாள் வந்தா என்ன ஏதும் என்றுக்கூட கேட்காமல் அதான் நாங்க வேணான்னு போனல்ல, அப்புறம் எதுக்கு நீ இங்க வர, நல்லதோ கெட்டதோ நீ தேடிக் கொண்ட வாழ்க்கை தானே, இத்தனை வருஷம் உன்ன வளர்த்த எங்களுக்கு தெரியாதா உனக்கு எப்படி வாழ்க்கை அமைச்சுக் குடுக்கணும்னு . அவன் தான் வேணும்னு போனல்ல, அப்புறம் எதுக்கு திரும்ப வர்ற. நல்லதோ, கெட்டதோ எதுக்காகவும் எங்கக்கிட்ட வந்து நிக்காதே. எங்களுக்கு நிலானு ஒரு மக தான் இருக்கா. நீ எப்பவோ செத்துட்டேன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டாங்க. எங்க அக்கா பாவம் திரும்பித், திரும்பிப் பார்த்துட்டு போனா.
அப்பக் கூட நான்அம்மாவிடம் உங்களுக்கு இரக்கமே இல்லையா மா? அம்மா அக்கா பாவம்ன்னு சொன்னேன். அதுக்கு என்ன அக்கா மேல கரிசனம் அவளை மாதிரியே நீயும் லவ் பண்ணலாம்னு நினைக்கிறியான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது தான் வினை. எப்பப் பார்த்தாலும் என்னை சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தாங்க
இப்படி பண்ணினா நானும்
எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்க போறேன்னு ஒரு நாள் கோபத்தில் திட்டிட்டேன்.
நல்லா அன்னைக்கு எங்கம்மா என்னை அடிச்சிட்டு,அவள விட்ட மாதிரி உன்ன விட மாட்டேன். நீ எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்றால், உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். நீ இழுத்துட்டு வர்றவனை கொன்னுட்டு, நானும் உங்க அப்பாவும் தற்கொலை பண்ணிக்கிட்டு சாவோம்னு மிரட்டினாங்க யுகி “என அழுதாள் வெண்ணிலா.
“லூசு இத நினைச்சுட்டு தான் என் லவ்வ அக்செப்ட் பண்ணவில்லையா? அப்படி உன் பேரண்ட்ஸால என்ன கொன்னுட முடியுமா.
அவ்வளவு ஈஸியா எல்லாம் என்னை யாரும் நெருங்கிட முடியாது பைத்தியம்.” என்று அவளது தலையை தட்ட.
“நம்ம காதல் கைக்கூடுமா யுகா?நாம எல்லோரையும் போல கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வோமா?” என்று ஏக்கமாக வினவினாள் வெண்ணிலா.
“கட்டாயம் நம்ம சந்தோஷமா வாழுவோம். நீ பயப்படவே பயப்படாதே நிலா.”
“ சரி யுகா இனிமேலாவது இன்டர்வியூ நல்லபடியாக அட்டென்ட் பண்ணி எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்துடுங்க.அதில் உங்க திறமையை வளர்த்து, வெளிநாட்டில் செட்டிலாயிடுங்க.
நானும் படிப்பு முடிச்சு உங்களோட வந்துடுறேன்.” என்றாள் வெண்ணிலா.
“ஹேய்! ரெண்டு வருஷம் உன்ன பாக்காம எல்லாம் என்னால இருக்க முடியாது. நான் இங்க மேல படிக்கலாம் தான் இருக்கேன். நீ படிச்சு முடிச்சதும், ரெண்டு பேரும் வெளிநாட்டில் வேலை தேடிக்கிட்டு போயிடலாம். அது வரைக்கும் உங்க வீடடுக்கு தெரியாமல் பார்த்துக்கலாம்.” என்று திட்டம் தீட்டினான் யுகித்.
ஆனால் மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், பிறகு தெய்வம் எதற்கு?
மின்சார பாவை-15
written by Competition writers
மின்சார பாவை-15
யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.
அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.
அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர்.
“சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்.
“அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி.
பிறகு முகம் சிவக்க, வெண்ணிலா தான் வாயை மூடிக்கொள்வாள்.
ஆனால் ஒரு நாளில் ஒரு முறையாவது அவனை கண்டுவிட்டால் தான் அவளது அன்றைய பொழுது நல்லபடியாக முடியும்
அவனோடு மணி கணக்கில் பேசி பழகவில்லை என்றாலும், அவளது பார்வைகள் அவனுடன் பேசிக் கொண்டே தான் இருந்தன.
கல்லூரியிலும் ஏதாவது ஒரு விழா வந்து கொண்டு தான் இருக்கும்.
இருவரும் சேர்ந்து பாடும் சூழ்நிலை அமைய, அவர்கள் இருவரும் பேசும் சூழ்நிலையும் அமைந்தது.
அவ்வப்போது யுகித் இவளிடம் கோபப்படுவதும், அவனை இவள் சமாதானம் படுத்துவதும் வாடிக்கையானது.
அதுவும் மதன் சார் வெண்ணிலாவை புகழ்ந்தால் போதும், அதை யுகித்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாது..
அந்த நேரத்தில் அவளை முறைத்துப் பார்ப்பான்.
“என்ன யுகா? நான் என்ன பண்ணேன்?” என்று கண்கலங்க அவள் வினவ.
அவனது கோபம் அப்படியே கரைந்துப் போகும்.
தன் மேல் அளவில்லா அன்பை செலுத்தும் வெண்ணிலாவை அவனுக்கு மிகவும் பிடித்தது.
காதலை முதலில் அவள் சொல்ல வேண்டும் என்று யுகித் காத்திருக்க.
அவளோ வாய் வார்த்தையாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவளது கண்கள் ஆயிரம் முறை காதலைச் சொன்னது.
அவனைப் பார்த்தால் அவளது முகம் பூவாய் மலர்வதும், அவன் கோபப்பட்டால் இவள் வாடுவதுமாக இருக்க, அவர்கள்இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்று அவர்களது நண்பர்கள் அனைவருக்கும் புரிந்தது.
இப்படியே காலம் செல்ல
யுகித் நான்காவது வருடத்திலும் வெண்ணிலா இரண்டாவது வருடத்திலும் அடியெடுத்து வைத்தனர்.
யுகித்திற்கு கேம்பஸ் இன்டர்வியூ நல்ல, நல்ல ஆஃபர்ஸ் வந்தது.
வந்த ஆஃபர்ஸ் எல்லாவற்றையும் யுகித் மறுத்துக் கொண்டிருந்தான்.
அந்த விசயம் ரகுலன் மூலம் நகுலனின் காதுக்கு வர. வெண்ணிலாவிடம் தெரியப்படுத்த நினைத்தவன், வெண்ணிலாவை தேடிச் சென்றான்.
” நிலா! வாட்ஸ் யூவர் ஃப்யூச்சர் பிளான்?” என்று வினவ.
“லூசாடா நீ ! நான் காலேஜ்ல சேர்ந்ததிலிருந்து சொல்லிட்டு தானே இருக்கேன். வெளிநாட்டில் செட்டிலாகுறது தான் என் லட்சியம்.”
“அது தெரியும்டி! சீனியர் பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று வினவ
“சீனியர்னா யுகியை பத்தியா கேட்கிற?
“ஆமாம் நிலா.”
“என்ன திடீர்னு யுகியைப் பத்தி கேட்கிற? என்றவளுக்கு உள்ளுக்குள் படபடத்தது.
“உண்மையாகவே நான் என்ன சொல்ல வரேன்னு இன்னும் உனக்கு புரியலையா நிலா?
அவளோ ஒன்றும் கூறாமல் தலை குனிந்து இருக்க.
“நேராவே கேட்கிறேன். நீ சீனியர லவ் பண்றதானே?” என்று வினவ
“ ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லையே” என்று மனது வலிக்க உடனடியாக மறுத்தாள் வெண்ணிலா
“அப்படியா! ஆனா சீனியர் உன்ன லவ் பண்றாரு நினைக்கிறேன். உனக்காக வர நல்ல, நல்ல ஜாப் ஆஃபர் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்காரே.”
“ நீ என்ன சொல்ற நகுல் “ என அதிர்ந்தாள் நிலா
“நான் சொல்றது இருக்கட்டும் நீ முதல்ல யுகா அண்ணா கிட்ட தெளிவா பேசிடு நிலா. இல்லனா. அவரோட லைப்பே ஸ்பாயிலாயிடும்.”
“ அப்படியெல்லாம் சொல்லாதே நகுல்.யுகி நல்லா இருக்கணும். நான் யுகி கிட்ட பேசுறேன்” என்றவள் வழக்கம் போல் யுகியும், அவரது நண்பர்களும் அரட்டை அடிக்கும் இடம் ஆன ஸ்போர்ட்ஸ் ரூம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள மரத்தடிக்கு சென்றாள்.
இன்னும் அந்த இடத்தில் சிசிடிவி கேமரா வைக்காமல் இருக்க அவர்கள் அரட்டை அடிப்பதற்கு அந்த இடம் வசதியாக இருந்தது.
இவள் சென்றதும் அகமும் முகமும் மலர்ந்த யுகித், முதல் முறையாக அவளாகத் தேடி வரவும், ‘காதல் சொல்லத் தான் வந்திருக்கிறாள்’ என்று எண்ணி மகிழ்ந்தான்.
தன்னருகே இருந்த நண்பர்களை பார்க்க. அவர்களோ அங்கிருந்து எழுந்து சென்றனர்.
“சொல்லு நிலா. ஃபர்ஸ்ட் டைம் நீயா என்ன தேடி வந்திருக்க. என்ன விஷயம்.” என்று வினவியவன் ஒருவித எதிர்பார்ப்புடன் அவளை ஆர்வமாக பார்க்க.
அவனது பார்வை அவளைத் தவிக்க வைத்தது.
முயன்று தன் மனதை கட்டுப்படுத்தியவள் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு, “என்னாச்சு யுகி? ஏன் கேம்பஸ் இன்டர்வியூல வர ஜாப் ஆஃபரை எல்லாம் வேணாம்னு சொல்றீங்க? லூசா நீங்க?” என்று கேட்க.
அவள் காதல் சொல்லுவாள் என்று நினைத்திருந்த யுகித்,அவள் தன்னை லூசா என்று கேட்டதும் சுறுசுறுவென உள்ளுக்குள் கோபம் வர, ”இத சொல்ல தான் வந்தியா நீ? நான் ஏன் வேலையை வேணான்னு சொன்னேன். உனக்கு புரியலையாடி?” என யுகி கர்ஜிக்க,
“புரியல” என்பது போல் தலையாட்ட,
மேலும் அவனுக்குள் கோபம் பெருக, “உன்னை விட்டு பிரிய முடியாம தான்டி நான் எந்த வேலையையும் சேரல.” என்றான்.
“என்ன சொல்றீங்க யுகா?” என்று நிலா தயங்க,
”ம்…நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்டி! போதுமா… நீயா வந்து காதலை சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ சொல்ற மாதிரி தெரியலை. எஸ் ஐ ஸ்டில் லவ் யூ “ என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் காதலைக் கூறினான்.
எந்த வார்த்தையை அவன் வாயிலிருந்து கேட்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாலோ அதை அவன் கூறியே விட்டிருந்தான்.
அவளுக்கும், அவனை பிடிக்கும். ஆனால் இந்த ஜென்மத்தில் அவர்கள் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. அதை நன்கறிந்தும், அவன் மனதை கலைத்ததை எண்ணி தன்னையே நொந்தவள், அதை வெளிக்காட்டாமல்,
“என்ன சொல்றீங்க யுகா? நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் நினைக்கல. அப்படிப்பட்ட எண்ணத்தோட உங்களோட நான் பழகல. நான் என்னைக்காவது உங்களை விரும்புறேன்னு சொல்லியிருக்கேனா? நான் உங்கள ஒரு பெஸ்ட் பிரண்டா தான் நினைக்கிறேன். நீங்க என்னோட பெஸ்டி அவ்வளவு தான்.
இதுக்காகவா வந்த வேலையை விட்டீங்க.
சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு.”என்று சொல்ல.
அந்த வார்த்தையில் காயப்பட்ட யுகித்தோ,” என் காதல் உனக்கு பைத்தியக்காரத்தனமா இருக்கா?” என்று கோபப்பட.
“ நான் உங்கள லவ் பண்ணல. ஜஸ்ட் ஃப்ரெண்டா தான் நினைச்சேன்” என்று வெண்ணிலா மீண்டும் கூறினாள்.
“ஃப்ரெண்டு, பெஸ்டினு சொன்னதையே திரும்ப சொல்லாத நிலா. அந்த வார்த்தையை கேட்டாலே பத்திகிட்டு வருது.”
“ என்ன யுகா! இப்படி சொல்றீங்க… நீங்கதான முதல்ல ஃப்ரெண்டா இருக்கலாம்னு சொன்னீங்க. இப்ப என்னன்னா அந்த வார்த்தையை கேட்டா பத்திகிட்டு வருதுன்னு சொல்றீங்க. இப்படி மாத்தி மாத்தி பேசாதீங்க”
“நிலா உண்மையிலேயே என்னோட லவ் உனக்கு புரியலையா ? இல்ல என்கிட்ட நீ விளையாடுறியா?”
அவளோ ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க.
“ப்ளீஸ்மா! விளையாடதே! நான் உன்னை ரெண்டு வருஷமா சின்சியரா லவ் பண்றேன்”. என்று அவளை இறுக்கிக் அணைத்தான் யுகித்.
அவளோ மனதை கல்லாக்கிக் கொண்டு, அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.
“நான் உங்களை அப்படி எல்லாம் நினைக்கல சீனியர்” என்று அவளது மறுப்பை தெரிவிக்க,
அதை சற்றும் எதிர்பார்க்காத யுகித், அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
“நிலா பொய் சொல்லாதடி! உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு தெரியும்.”
”அதெல்லாம் இல்லை சீனியர். “என நிலா மறுக்க,
”சீனியர் என்று சொல்லாதேடி” என யுகித் அலற,
“ஃப்ரெண்டா நினைச்சு தான் யுகான்னு கூப்பிட்டேன். நீங்க தான் ப்ரெண்டுன்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் சீனியர்னு தானே கூப்பிட முடியும்.” என்று அலட்சியமாக சொல்ல.
“என்னை வெறியேத்தாதடி!” என்றவாறு அவளது கழுத்தை நெறிக்க போக.
அதே நேரம் அவளைத் தேடிக் கொண்டு நகுலன் அங்கு வந்து சேர்ந்தான்.
யுகித், வெண்ணிலாவின் கழுத்தை நெறிப்பதை பார்த்து பதறியவன், வெண்ணிலாவை அவளிடம் இருந்து பிரித்து தன் பக்கம் இழுத்தவன்,”என்ன காரியம் பண்றீங்க யுகிண்ணா?” என.
“அவ என்னை லவ் பண்ணலையாம்.” கலங்கிய கண்களுடன் கூற.
“அவளுக்குப் பிடிக்கவில்லைன்னா விட்டுடுங்கணா.”
“அவ பொய் சொல்றாடா!”
“பொய்யோ, உண்மலயோ, அவ வேண்டாம்னு சொல்லிட்டா, தொந்தரவு பண்ணக் கூடாது.” என்று தோழிக்கு ஆதரவாக நகுலன் கூற.
“அப்படியெல்லாம் விட முடியாது.” ஆக்ரோஷமாக கத்த.
“அதுக்காக அவளை கொலை பண்ணுவீங்களா?” என்று நகுலனும் எகிற.
“ஆமாம் அப்படித் தான் பண்ணுவேன். சும்மா எல்லாம் விட முடியாது. உன்னால என்ன என்ன பண்ண முடியும் “என்றவன் மீண்டும் வெண்ணிலாவிடம் வர.
அவனை தள்ளி விட்டான் நகுலன்.
நகுலனை அடிப்பதற்கு கையை ஓங்கினான் யுகித்.
இருவருக்கும் நடுவில் வந்து கண்ணீர் வழிய நின்றாள் வெண்ணிலா.
“ச்சே!” என்று கையை இறக்கிய யுகித், “என் ஃப்ரெண்டோட தம்பின்னு பார்க்கிறேன். இல்லையென்றால் நடப்பதே வேறு .” என்று மிரட்டினான்.
“நா என் அண்ணனோட ஃப்ரெண்டுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு என் ப்ரெண்டு வெண்ணிலா முக்கியம். அவக் கிட்ட ஏதாவது வம்பு பண்ண நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று அவனை மிரட்டி விட்டு, வெண்ணிலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றான் நகுலன்.
மின்சார பாவை-14
written by Competition writers
மின்சார பாவை-14
ஒரு வழியாக பெங்களூர் செல்லும் நாளும் வர.
அவளது முகமோ பதட்டமாகவே இருந்தது.
“ஹேய் நிலா! அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் கிளம்பப் போற. அப்புறமும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?” என்று மஹதி கேலி செய்ய.
“எனக்கு என்னமோ படபடன்னு தான் வருது மஹி. இதெல்லாம் கனவோனு தோணுதுடி.” என்று கூற.
“ஹேய்! லூசு மாதிரி உளறாமல் நல்லபடியாக போய் நன்றாகப் பாடி, வின் பண்ணிட்டு வர.” என்று ஆறுதல் கூறினாள் மஹதி.
“ஆமாம் டி! மதன் சார் உனக்காக சிபாரிசு பண்ணியிருக்கார். அவர் பேரை காப்பத்தணும். புரியதா?” சபரீகா கூற.
நகுலனோ,” யுகா அண்ணாவுக்காவது பாட்டுல கான்சன்ட்ரேஷன் பண்ணு. வேற எந்த சிந்தனையும் வேண்டாம்.” என்றான்.
எல்லோருக்கும் தலையாட்டியவள், ஒரு வழியாக அவர்களிடம் விடை பெற்று கல்லூரி பேருந்தில் ஏறினாள்.
கல்லூரியில் இருந்து பேருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலே, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களம் பட. இவளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தாள்.
********************
யுகித் டூயட் பாடலுக்கு வித்தியாசமாக ஒரு தீம் மாதிரி ரெடி பண்ணி இருந்தான்.
முதலில் இருவரும் ஒரு போட்டி பாட்டு பாடுவது போலவும், பிறகு காதலில் உருகி யுகித் பாடுவது போலவும், வெண்ணிலா ஏற்றுக் கொண்டு பாடுவது போல் ஒரு பாடலும், பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் மாதிரி ஒரு பாட்டு பாடுவது போலவும் ரெடி செய்து வைத்திருந்தான்.
இந்த தீம் வித்தியாசமாக இருக்க. போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார்கள் இருவரும்.அனைவரும் அவர்களை மனதார வந்து பாராட்டினார்.
யுகித்தின் குரலும் பார்வையும் அவளை என்னமோ செய்தது.
‘ இது நல்லதுக்கல்ல.’ என்று எண்ணியவள்,மனது கட்டுப்படுத்தி, முடிந்த அவனிடமிருந்து விலகிருந்தாள்.
அவளது அம்மா கூறியது போல், வெண்ணிலா முடிந்தவரை மேடம் அருகே இருந்தாள்.
அதோ இதோ என்று போட்டி முடிந்து நாளைக்கு கிளம்ப வேண்டும் என்றிருக்க. அன்று இரவு அவர்கள் தங்கி இருந்த இடத்தில் கேம்ப் பயர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆட்டம், பாட்டம் என்று எல்லோரும் கொட்டமடிக்க. அதில் கலந்துக் கொள்ள முடியாமல், அவஸ்தையுடன் இருந்தாள் வெண்ணிலா.
கொஞ்ச நேரம் அங்கிருந்த அவளால் அதற்குப் பிறகு இருக்க முடியாமல் எழுந்து செல்ல.
அவளை பின்தொடர்ந்த யுகித்தோ,”வெண்ணிலா!” என்றழைக்க.
திடுக்கிட்டுத் திரும்பினாள் வெண்ணிலா.
“நான் தான் வெண்ணிலா! எதுக்கு பயப்படுற. நானும் அப்போதுலிருந்து பார்க்குறேன். ஒரு மாதிரியா இருக்க? என்னாச்சு?” என்று வினவ.
“அது ஒன்னும் இல்ல சீனியர்.”
“என்னன்னு சொல்லு வெண்ணிலா! நாம தான் இப்போ ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோமே.”
“ அது வந்து.” என்று வெண்ணிலா தயங்கிக் கொண்டே இருக்க.
“உனக்கு ஏதோ பிரச்சினைன்னு தோணுது. என்கிட்ட சொல்லலனாலும் பரவாயில்ல. மதன் சாரை வரச் சொல்றேன். அவர் கிட்ட சொல்றியா?” என்று வினவ.
“அதெல்லாம் வேண்டாம்.” என்று வேகமாக மறுத்தாள் வெண்ணிலா .
“ வெண்ணிலா நீ இப்படி அவஸ்தப்படுறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சொல்லு.” என்று கெஞ்சினான் யுகித்.
“ எனக்கு பீரியட்ஸ். எனக்கு இருந்த டென்ஷன்ல ப்ரிப்பேர்டா வரலை. எனக்கு நாப்கின் வேணும்.” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூற.
“இது தானே. நான் வாங்கிட்டு வர்றேன்.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மழை பெய்ய.
எல்லோரும் அவசர, அவசரமாக அவரவர் அறைக்குச் சென்றனர்
“மழையில் நனையாத வெண்ணிலா. உள்ளே போ. நான் வந்ததும் உனக்கு கால் பண்றேன்.”
“ இந்த மழையில நீங்க எங்க எப்படி போவீங்க.” என்று வெண்ணிலா தயங்க.
“ அது பரவால்ல நான் பாத்துக்குறேன்.” என்றவன் அவன் அணிந்திருந்த ஹுடியில் உள்ள குல்லாவை தலையில் போட்டுக் கொண்டு ஓடினான்.
சற்று நேரத்திலே திரும்பி வந்த யுகித்தோ நன்கு நனைந்திருந்தான்.
“அச்சோ! சீனியர்… என்ன இப்படி நனைச்சிருக்கீங்க.”என்று வெண்ணிலா பதற.
“ இதெல்லாம் ஒன்னுமில்லை.” என்ற யுகித், அவளுக்காக வாங்கி வந்ததைக் கொடுத்துவிட்டு நாகரிகமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.
“தேங்க்ஸ் சீனியர்.” என்று சத்தமாக வெண்ணிலா கூற.
திரும்பி பார்த்தவனோ,” தேங்க்ஸ் எல்லாம் வேணாம்.” என்றான்.
“வேற என்ன வேணும் சீனியர்.” என்று கேட்பதற்குள் அவளுக்கு படபடவென நெஞ்சம் அடித்துக் கொண்டது.
“நம்மதான் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல. அதனால என்ன பேர் சொல்லி கூப்பிடணும். எங்க யுகித்துனு கூப்பிடு.” என்று கூற.
“அது நீங்க என்ன விட பெரியவர்…” என்று அவள் தயங்க.
“இந்த கதையேல்லாம் வேணாம்.என்ன பார்த்தா இரண்டு பிள்ளைகள் பெத்த அங்கிள் மாதிரியா இருக்கு?உன்ன விட இரண்டு வருஷம்தான் பெரியவன்.ஸோ இப்பவே நீ என்ன பேர் கூப்பிடுற.”என்று அவளை வற்புறுத்தி யுகித் என்று அழைக்க வைத்தான்.
அவளது மென்மையான குரலில் அவனது பெயரைக் கேட்டதும், அவனது முகமும் மென்மையை தத்தெடுக்க புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
வெண்ணிலாவின் முகமும் விகசித்தது. ஏதோ ஒரு உணர்வு அவளை ஆட்டிப் படைக்க, அரைகுறையாக உறங்கினாள்.
மறுநாள் பேருந்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் யுகித் இயல்பாக இருக்க.
அந்த செயல் அவளுக்கு இதமாக இருந்தது. அவன்பால்சென்ற மனதை தடுக்க இயலாமல் தவித்தாள்.
********************
பெங்களூரில் இருந்து வந்த பிறகு வெண்ணிலா, இரண்டு நாட்களாக அவனைத் தேட.
அவள் கண்ணில் அவன் அகப்படவே இல்லை.
‘ யுகித்துக்கு என்னாச்சு? ஏன் காலேஜுக்கு வரல.மழையில வேற நனைஞ்சாரே. உடம்புக்கு முடியலையோ.’ என்று குழம்பித் தவித்தாள்.
“ஏண்டி இப்படி இருக்க?” என்று கேட்ட தோழிகளிடமும், “ஒன்னும் இல்லையே!” என்றுசமாளித்தாள் வெண்ணிலா.
“பெங்களூருக்கு போறதுக்கு முன்னாடி தான் டென்ஷனா இருந்த. இப்ப என்ன ஆச்சு? நாங்க ஏதும் ட்ரீட் கேட்டு விடுவோம்னு முகத்தை இப்படி வச்சிட்டு இருக்கியா?” என்று கேலி செய்தாள் மஹதி.
“ அதெல்லாம் இல்லடி!”
“அப்புறம் என்ன?” என்றாள் சபரீகா.
“அது வந்து… யுகித்தை இரண்டு நாளா காணுமேடி.” என்று கேட்க.
“என்னது யுகித்தா? எத்தனை நாளாடி இந்த கதை நடக்குது. சீனியர்னு கூப்பிட்டு இருந்தவ
இப்போ பேர் சொல்ற அளவுக்கு டெவலப் ஆயிட்டீயா. நாங்க உன்னை பச்சை புள்ளயா நெனச்சிட்டு இருக்கோம்.” என்று சபரிகா ராகம் பாட.
“ப்ச்! நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லடி. அவர் தான் பேர் சொல்லி கூப்பிடச் சொன்னார். அவ்வளவு தான்.”
“சரி இருக்கட்டும். அப்புறம் எதுக்கு இப்ப அவரை தேடிட்டு இருக்க.”
“அது வந்து பெங்களூர்ல எனக்கு ஒரு ஹெல்ப் பண்றதுக்காக மழையில வெளியே போனாரு. என்னாலதான் உடம்பு சரி இல்லையான்னு கில்டி பீலிங்கா இருக்கு. அவருக்கு ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”
“யுகாண்ணா எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தானே.” என்ற நகுலன் தனது அண்ணனை தேடிச் சென்றான்.
சற்று நேரத்தில் வந்த நகுலன்,“ யுகாண்ணாவுக்கு லேசான ஃபீவர் தானாம். நாளைக்கு காலேஜுக்கு வந்துருவாராம்.” என்றுக் கூற.
வெண்ணிலாவிற்கு கண்கள் கலங்கியது.
“லூஸு ஜுரம் தானே சரியாகிடும். இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க.” என்று அவளது நண்பர்கள் பட்டாளம் சமாதானம் படுத்தினாலும், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
யுகித்தின் நினைவிலே தவிக்க, மறுநாள் அவனைப் பார்த்ததும்,
மூச்சு வாங்க ஓடி வந்து நின்றாள்.
“என்ன வெண்ணிலா?” என்று ஆச்சரியமாக பார்த்தான் யுகித்.
“ ரெண்டு நாளா உங்களை காணும்னு டென்ஷனா ஆயிடுச்சு யூகி.” என்று கூற.
அவனோ புன்னகையுடன்,” என்னை ரொம்ப மிஸ் பண்ணியோ?” என்று வினவ.
“ஆமாம்.” என்பது போல் தலையாட்டினாள் வெண்ணிலா.
“திடிர்னு ஒரு பங்க்ஷன். அதான் வர முடியலை.” என்று சமாதானம் செய்தான் யுகித்.
“பொய் சொல்லாதீங்க யுகி
உங்களுக்கு ஃபீவர் தானே. என்னால தானே உங்களுக்கு இந்த கஷ்டமெல்லாம்.”என்று வெண்ணிலா கண் கலங்க.
“ லேசான ஃபீவர் தான். இதுக்கெல்லாமா வருத்தப்படுவ.” என்றவனுக்கு அவளுடைய அக்கறை இனித்தது.
Newer Posts