
Tag:
Best Love novels
மின்சார பாவை-12
written by Competition writers
மின்சார பாவை-12
அன்று காதல் பண்ணியது.
தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா.
ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை.
மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான்.
யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர்.
அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள்.
இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப் பார்த்தது.
இவர்களது கல்லூரியின் அனைத்து கிளைகளுக்கும் சேர்த்து கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் அனவுன்ஸ் செய்யப்பட்டது. முதலில் கல்லூரி அளவில் தேர்வு செய்வார்கள்.
பிறகு ஏதாவது ஒரு கல்லூரியில், அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்ந்தவாறு போட்டி நடக்கும்.
இந்த முறை அனைத்து கல்லூரிக்கான போட்டி பெங்களூரில் நடப்பதாக இருந்தது.
அதற்கான மாணவ, மாணவியர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்க, வகுப்புகள் பெரிதாக நடக்கவில்லை.
பஞ்சபாண்டவ அணியும் வகுப்பில் ஆசிரியர் வராததால் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
“ நம்மளோட எல்லா காலேஜுக்கும் சேர்ந்து கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் நடக்கப் போகுதாம். யார் , யார் பேர் கொடுத்திருக்கீங்க.” என்று சபரீகா வினவ.
“டான்ஸ், பாட்டு இதெல்லாம் சுட்டு போட்டாலும் எனக்கு வராது. அதனால நான் எதுலையும் கலந்துக்கல. வெண்ணிலா நீ தான் நல்லா பாடுவியே. டான்ஸும் ஆடுவ…பேர் கொடுத்தியா? இல்லையா ?” என்று மஹதி வினவ.
“ப்ச்! பேர் கொடுக்கல.” என்றாள் வெண்ணிலா.
“ஏன் டி பேர் கொடுக்கலை? நீ கண்டிப்பா செலக்டாகிடுவடி.” என்று சபரீகாவும் கூற.
“அதான் கொடுக்கல.”
“என்ன வெண்ணிலா சொல்ற? ஒன்னும் புரியல.” என்று மஹதி வினவ.
“நான் கண்டிப்பா செலக்டாகிடுவேன். இங்க செலக்டானா, பெங்களூர் போகணும். எங்க வீட்ல எப்படியும் விட மாட்டாங்க. அதான்.” என்ற வெண்ணிலாவின் முகம் உணர்ச்சிகளற்று இருக்க.
“உங்க அம்மா ஏன் தான் இப்படி இருக்காங்களோ தெரியல. எங்கேயும் விடமாட்டேங்கிறாங்க.சரி விடுடி. இப்போ நமக்கு க்ளாஸ் நடக்கலையே! எவ்வளவு நேரம் தான் இப்படி பேசிட்டே இருக்குறது. ரொம்ப போரடிக்குது. நீ ஏதாவது பாடு.” என்று சபரீகா கூற.
“டபுள் ஓகே. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்னு கேளுங்க. நான் பாடுறேன்.” என்றவள், அவளது நண்பர்கள் கேட்ட பாடல்களை வரிசையாக பாடினாள்.
அவள் குரல் வளத்தில் எல்லோரும் மெய் மறந்து நின்றிருக்க. அவர்களது பேராசிரியர் மதன் வந்ததைக் கூட கவனிக்கவே இல்லை.
பாட்டு முடிந்ததும், மதன் கை தட்ட.
எல்லோரும் சத்தம் கேட்ட பக்கம் திரும்பிப் பார்த்தனர். அங்கே மதன் நின்றிருந்தார்
அவரைப் பார்த்ததும் பயத்துடன், “சார்.” என்று தயக்கமாக அழைத்தாள் வெண்ணிலா.
“வெண்ணிலா பாலோ மீ!”என்றவாறே வேகமாக நடக்க.
“ அடியே. நான் பாட்டுக்கும் சிவனே தானே இருந்தேன். பாட சொல்லி என்னை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே. உங்களால தான் எல்லாம்…” என்று தோழமைப் பட்டாளத்தைப் பார்த்து முறைத்த வெண்ணிலா, வேகமாக அவரை பின்தொடர்ந்தாள்
அவரோ ஆஃபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்று, வெண்ணிலாவின் பெயரையும் போட்டிக்குச் சேர்த்தார்.
“சார் !” என்று வெண்ணிலா தயங்க.
“மூச்! எதுவும் பேசக் கூடாது. உன் வாய்ஸ் சூப்பரா இருக்கு. ஜோடி பாட்டுல யுகித்தோட சேர்ந்து பாடுற. நாளைக்கு பத்து மணிக்கு ஆடிஷன். ஆடிட்டோரியம் வந்துடு.” என்றுக் கூற.
அவளால் மறுக்க இயலாமல் பேர் கொடுத்தாள்.
அங்கு இருந்த யுகித்துக்கோ, மதன் சார் அவளைப் பாராட்டுவதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
“ சார்! ஏற்கனவே நானும், ரம்யாவும் பேர் கொடுத்திருக்கோம்.” என்று கூற.
“ரம்யா கிட்ட நான் பேசுகிறேன் ரம்யா சோலா சாங் பாடட்டும் நீங்க ரெண்டு பேரும் ஜோடி பாட்டு பாடுங்க. உங்க கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பாடினா இந்த கேட்டகரில நம்ம காலேஜுக்கு தான் கப் கன்பார்ம்.” என்று உறுதியாக மதன் கூறி விட.
“ஓகே சார்.” என்ற யுகித்தோ, ‘நாளைக்கு தானே ஆடிஷன் நடக்கும். அதுக்குள்ள அவளை கலந்துக்க முடியாதது போல செய்யணும்.’ என்று எண்ணி திட்டம் தீட்டினான். அதை செயல்படுத்த தீபிகாவை தேடினான்.
“தீபு…” என்றவாறே அவளருகே செல்ல.
ரகுலன், “என்ன மச்சி! தீபுவுக்கு மட்டும் ஸ்பெஷலா என்ன வச்சிருக்க.” என்று யுகித்தின் கையிலிருந்த பார்ஸலை பிடுங்க
முயற்சிக்க.
“ப்ச்! அவளுக்கு இல்லை.” என்றான் யுகித்.
“முதல்ல இது என்ன?” என்று தீபிகா வினவ.
“தீபு! உன் ப்ரெண்ட் வெண்ணிலாவுக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம்.” என்று அந்தப் பார்ஸலை நீட்டினான்.
“அவளுக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்.” என்று தீபிகா வினவ.
“நீ தானே சொன்ன. எங்கெல்லாமோ உன் ஃப்ரெண்ட்டுக்காக வெண்ணிலா ஐஸ்க்ரீம் தேடி அலைஞ்சேன்னு சொன்ன. இன்னைக்கு வெளியே போனேன். இந்த ஐஸ்கிரீமைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. அதான் வாங்கிட்டு வந்தேன்.” என்று நீட்ட.
“ஆமாம். அவளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.” என்ற தீபிகா, வெண்ணிலாவைத் தேடி சென்றாள்.
“பேபி! என்னாச்சு இந்த நேரம் வந்திருக்க. என்னாச்சு? அந்த நெடுமரம் உன் கிட்ட சண்டை போட்டுச்சா?” என்று வெண்ணிலா வினவ.
அவள் தலையில் லேசாக குட்டிய தீபிகா,” என் ஃப்ரெண்ட்டை வம்பிழுக்கலைன்னா உனக்குத் தூக்கமே வராது.
“பேபி! நான் ஒன்னும் உன் ஃப்ரெண்ட்டை வம்பிழுக்கலை. இந்த நேரம் வரமாட்டியேன்னு தான் கேட்டேன்.” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு கூறினாள் வெண்ணிலா.
“கோச்சுக்காதே நிலா. எனக்கு நீயும் முக்கியம். அவனும் எனக்கு முக்கியம். இரண்டு பேரும் சண்டை போடக்கூடாது சரியா?” என்று தீபிகா வினவ.
“உனக்காக சண்டை போடாமல் இருக்கேன் போதுமா?”
“என் செல்லக்குட்டி. இந்தா உனக்காக ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திருக்கேன்.”என்று அவள் ஐஸ்கிரீமை நீட்ட.
ஆவலாக வாங்கிய வெண்ணிலா அதை உண்ண ஆரம்பித்தாள்.
“ஹே! நாளைக்கு ஆடிஷன் இருக்குல்ல…” என்று சபரீகா தடுக்க.
“அதெல்லாம் என்னை ஒன்னும் பண்ணாது.” என்றவள், யாருக்கும் தராமல், அந்த ஃபேமிலி பேக் முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள்.
அதைப் பார்த்த யுகித்தோ புன்னகையுடன் நகர்ந்தான்.
அந்தப் புன்னகையெல்லாம், மறுநாள் புத்துணர்ச்சியுடன் வந்த வெண்ணிலாவை கண்டதும் மறைந்தது.
வெண்ணிலா உள்ளே நுழைந்ததும் அவளது நண்பர்கள் பட்டாளம், அவளை சுற்றிச் சுற்றிப் பார்த்தனர்.
“எதுக்கு என்ன இப்படி பார்க்குறீங்க?” என்று வெண்ணிலா வினவ.
“இல்லை… நேத்து நீ சாப்பிட்ட ஐஸ்கிரீமுக்கு படுத்து கிடப்பேன்னு நினைச்சேன்.”என்று நகுலன் கூற.
“என்ன நகுல் நீயும் இவங்களோட சேர்ந்துட்டு கிண்டல் பண்றியா?”
“பின்னே சும்மா விடுவாங்களா? ஒரு முழு ஃபேமிலி பேக்கை எங்களுக்கு தராமல் ஒரே ஆளா முழுங்கிட்டு கேள்வியை பாரு.” என்று அவளது தலையில் லேசாக குட்டினான் நகுலன்.
“கேட்டு இருந்தா கொடுத்திருப்பேன்.”
“ என்னது கேட்டு வாங்கணுமா? கேக்காமலே கொடுக்கணும் எருமை.” என்று சபரீகாவும் அவளது தலையிலே தட்ட.
“சாரி! ஐஸ்கிரீமை பார்த்ததும் நீங்க யாருமே என் கண்ணுக்கு தெரியல. இந்த பச்ச புள்ளையை மன்னிச்சிடுங்க.” என்று அவர்களை சமாதானப்படுத்தினாள் வெண்ணிலா.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த யுகித்தோ,’ச்சே! ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கணும்னு பார்த்தா கொஞ்சம் கூட குரலில் பிசிரு இல்லையே.”என்று எண்ணியவனின் முகம் இறுகியது.
‘நேத்ரா மேடம்க்கு பர்ஃபெக்க்ஷன் முக்கியம். ஆடிஷனுக்கு அவளை எப்படியாவது வரவிடாமல் பண்ணனா போதும்.’ என்று எண்ணியவனின் முகம் மலர, ரகுலனை அழைத்தான்.
“என்ன மச்சி எதுக்கு கூப்பிட்ட.”
“ஒன்னும் இல்லடா! அந்த வெண்ணிலாவை ஸ்போர்ட்ஸ் ரூம் பக்கம் வர சொல்லு.”
“டேய் என்னடா பண்ற?”
“மச்சி! பாட்டு ரிகர்சல் பண்ணனும். அங்க தான் டிஸ்டர்பன்ஸ் இருக்காது. அதான்.”
“ஓ! அப்போ சரி. நான் போய் வெண்ணிலாவை கூட்டிட்டு வர்றேன்.” என்று வெண்ணிலாவை அழைக்கச் சென்றான்.
“என்ன ரகுண்ணா இந்த பக்கம். எங்களை ராகிங் பண்ண வந்திருக்கீங்களா?” என்று வெண்ணிலா வினவ.
“ உனக்கு என்ன வம்பு இழுக்கலைன்னா தூக்கமே வராதே.”
“ சரி… எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க.”
“ பாட்டு ரிகர்சல் பண்ணனுமாம். யுகி உன்னை ஸ்போர்ட்ஸ் ரூம் பக்கம் வர சொன்னான்.”என்றுக் கூற.
அவளும், யுகித்தை நம்பி சென்றாள்.
ஸ்போர்ட்ஸ் அறைக்குள் நுழைந்தவள், யுகித்தை தேட.
அங்கோ யாருமில்லை.
“சீனியர்!” என்று அழைத்தவாறே பார்வையை சுழற்றினாள்.
அதற்குள் கதவை மூடும் சத்தம் கேட்க. பதறிய வெண்ணிலாவோ வேகமாக கதவைத் தட்டினாள்.
“ஹலோ யாருங்க டோர் லாக் பண்ணுனது. நான் உள்ள இருக்கேன்.
ப்ளீஸ் ஓபன் த டோர்.”என்று கத்தினாள் வெண்ணிலா.
அவளது நல்ல நேரமாக, மதன் சார் அந்தப் பக்கம் வந்தார்.
யாரோ அந்த அறையில் இருந்து கத்துவது கேட்க.
கதவை திறந்தார்
அங்கோ முகமெல்லாம் வியர்த்து இருக்க. பயத்துடன் இருந்தாள் வெண்ணிலா.
“வெண்ணிலா என்னாச்சு? யார் உன்னை உள்ளார வச்சு கதவை சாத்துனா?என்று அவர் வினவ.
“தெரியலை சார்.” என்றாள்.
அதற்குள் கல்லூரியில் விஷயம் தெரிந்து எல்லா மாணவர்களும் அந்த இடத்திற்கு வந்து விட்டனர்.
“பயப்படாதே வெண்ணிலா. யார்னு சொல்லு பார்த்துக்கிறேன்.” என்று கோபத்துடன் மதன் வினவ.
“லாஸ்ட்டா வெண்ணிலாவ ரகுலனோட தான் சார் பார்த்தேன்.” என்று என்று ஒரு மாணவன் கூற.
“ஐயோ! நான் இல்லை.” என்று ரகுலன் பதற.
“ரகு அண்ணாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யுகித் கூப்பிட்டார்னு சொன்னார். அவரும் ஆடிஷனைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. அதைப் பத்தி யோசிச்சிகிட்டே இந்தப் பக்கம் வந்துட்டேன். இந்த ரூம் தொறந்திருந்துச்சு. ஏன் திறந்து இருக்குன்னு லைட்டை போட்டுட்டு பார்த்தேன். திடீர்னு கதவு லாக் ஆயிடுச்சு. தன்னால லாக்காகிருக்கும். விடுங்க சார்.” என்றாள் வெண்ணிலா.
‘அவசரத்தில் தான் செய்த காரியத்தால் சாரின் முன்பு தலைகுனிந்து நிற்க வேண்டி இருக்குமோ!’என்று உள்ளுக்குள் பதறியே யுகித்திற்கு இப்பொழுது தான் உயிரே வந்தது.
“சரி! சரி! எல்லோரும் கிளம்புங்க. எதுவா இருந்தாலும் முதல்ல மேனேஜ்மெண்ட் சொல்லி இந்த இடத்திலே ஒரு சிசிடிவி கேமரா வைக்கணும். ஸ்போர்ட்ஸ் விளையாடறவங்களுக்கு டிஸ்டர்ப் இருக்க கூடாதுன்னு பார்த்தா, அது இனி சரி வராது.” என்றவர், அங்கு நின்றுக் கொண்டிருந்த வெண்ணிலாவிடம், “வெண்ணிலா! உன்னால ஆடிஷன்ல கலந்துக்க முடியுமா?”என்று அக்கறையாக வினவ.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சார். நான் ரிலாக்ஸாகிட்டேன்.” என்று புன்னகைத்தாள் வெண்ணிலா.
“தட்ஸ் குட் …”என்று அவளை பாராட்டி விட்டுச் சென்றார் மதன்.
எல்லோரும் கலைந்து செல்ல. வெண்ணிலாவும் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.
“வெண்ணிலா! “ என்று மென்மையாக அழைத்தான் யுகித்.
“என்ன சாரி சொல்லப் போறீங்களா? உங்க சாரி எனக்குத் தேவையில்லை.”
“நான்…” என்று யுகித் தடுமாற.
“நீங்க செய்யலைன்னு மட்டும் சொல்லாதீங்க. நீங்கதான் இதை செஞ்சீங்கன்னு எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். நான் ஏன் சார் கிட்ட இந்த உண்மைய சொல்லைன்னா பேபிக்காகத் தான். ரெண்டு பேரும் சண்டை போட்டா எனக்கு வருத்தமா இருக்குன்னு சொல்லிருக்கா. அதான் நானும் ஒதுங்கி போக நினைக்கிறேன். என்னோடு சேர்ந்து பாட உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தெரியுது. நீங்க ரொம்ப கவலை பட வேண்டாம். எப்படியும் செலக்ட் ஆனாலும் நான் வரமாட்டேன். அதனால நீங்க சின்னப்புள்ள தனமா இனிமேல் நடந்துக்காதிங்க.” என்று விட்டு அங்கிருந்து சென்றாள் வெண்ணிலா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் யுகித். முதல் முறையாக அவள் மேல் கோபம் இல்லாமல், வியப்புடன் பார்த்தான்.’
பழைய நினைவில் இருந்து வெளியே வந்தவனது கண்கள் அவளையே வட்டமிட.
அவளோ அன்று போல் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல பார்த்துவிட்டு அங்கிருந்து நகர.
“ திமிர் பிடித்தவள்.” என்று திட்டினான் யுகித்.
மின்சார பாவை-11
written by Competition writers
மின்சார பாவை-11
பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது.
‘திமிர் பிடித்தவன்! என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே
அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.
அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா.
இன்னும் உட்காராமல் நின்றுக் கொண்டிருந்தவளை, இழுத்து உட்காரச் செய்தாள் சபரிகா.
“எருமை! உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அப்ப எப்படி ஆட்டம் போட்டியோ, அப்படியே இப்பவும் ஆட்டம் போட்டுட்டு இருக்க.” என்றாள் சபரிகா.
“ கல்யாணமானா நம்மை குணத்தை மாத்திக்கணுமா என்ன? யாரு அந்த ரூல்ஸை போட்டது? நான் எப்பவும் இப்படித்தான். ஏன் அடுத்தவங்களுக்காக நாம நம்ம குணத்தை மாத்திக்கிட்டா, நமக்கு என்ன அவார்டா குடுக்கப் போறாங்க? இல்லைல… அப்புறம் என்ன? நம்ம நம்மளாவே இருந்துட்டு போகலாம். அதுல கிடைக்குற சந்தோசம் வேற லெவல்.” என்றாள் வெண்ணிலா.
“நீ சொல்றதும் சரி தான். உன்னை இப்படி பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று வெண்ணிலாவின் தோளில் கைப் போட்டுக் கொண்டு சபரிகா கூறினாள்.
“போதும் டி! சென்டிமென்ட்ஸெல்லாம் நமக்கு செட்டாகாது.”என்று புன்னகைத்தாள் வெண்ணிலா.
“சரி எவ்வளவு நேரம் இங்கே இருக்கிறது. ப்ரோக்ராமை ஃபுல்லா பார்க்க போறீங்களா? எனக்கு போரிங்கா இருக்கு.” என்று மஹதி முணுமுணுக்க.
“இப்போ தானே வந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம்.” என்ற வெண்ணிலாவைப் பார்த்து முறைத்தாள் மஹதி.
“நீ கொஞ்ச நேரத்துக்கு மட்டும் வந்துட்டு போற ஆளு. ஆனா அவ எப்பவும் இந்த மாதிரி ப்ரோக்ராம்னா முதல் ஆளாக வந்துட்டு கடைசி ஆளா தானே கிளம்புவ.” என்று ஹரிஷ் கேட்க.
“ஹி! ஹி!” என்று சிரித்தவள், ஹரிஷ் கூறுவது உண்மை தான் என்று சொல்லாமல் சொன்னாள்.
அன்றைய பொழுது மதியம் வரை ஆட்டம், பாட்டம் என்று ஆடிட்டோரியம் களை கட்டியது.
“இதுக்கு மேல முடியாது. பசிக்குது.நாங்க போறோம்.” என்று எல்லோரும் கிளம்பவும் தான் அரைக்குறை மனதுடன் கிளம்பினாள் வெண்ணிலா.
வந்ததிலிருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த யுகித்துக்கு சினம் பெருகியது. கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவள் அங்கிருந்து கிளம்பவும் தான் அவனால் இயல்பாக மூச்சு விட முடிந்தது.
இவ்வளவு நேரம் ஆடிட்டோரத்தை அதக்களம் பண்ணியவள், இப்பொழுது கேண்டினை இரண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.
அவளை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றானது அவளது நட்பு வட்டாரத்துக்கு.
“இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது?” என்று பப்ஸை வாயில் திணித்துக் கொண்டே வெண்ணிலா வினவ.
“ஏன் உனக்கு இங்கே இருக்குறதுல எதுவும் பிரச்சனையா?” என்று ஹரிஷ் கேலி செய்ய.
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உன் பர்ஸ் தான் காலியாகும் பரவாயில்லையா?”
“அச்சோ! ஆளை விடுத் தாயே. முதல்ல இந்த இடத்தை விட்டு காலி பண்ணலாம். எல்லோரும் எந்திருங்க.” என்று அவசரப்படாமல் ஹரிஷ்.
“டேய் ஹரி பயப்படாதே. நான் பார்துக்குறேன்.” என்று நகுலன் கூற.
“ஹப்பாடா!” என்றவாறே நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஹரிஷ்.
“நீயெல்லாம் ஒரு நண்பனாடா?” என்று அவனது தோளில் சபரீகாவும், வெண்ணிலாவும் மொத்த.
புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹதி.
“பாவம் டி ஹரி. அவனை விடு.” என்று வக்கலாத்துக்கு வந்தாள் வெண்ணிலா.
“போதும் தாயே! நீதான் பிள்ளையார் சுழி போட்டதே. இப்போ சப்போர்ட்டுக்கு ஒன்னும் வரத் தேவையில்லை.” என்று ஹரிஷ் முறுக்கிக் கொள்ள.
“நான் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட்யா. இப்படி எல்லாம் சொல்லக் கூடாது.” என்று அவனது தோளில் கைப் போட்டு சமாதானம் செய்தாள் வெண்ணிலா.
அதற்குள் அடுத்தப் போட்டி ஆரம்பிப்பதாக அறிவுப்பு வர.
அங்கு சென்றது பஞ்சப் பாண்டவ அணி.
அங்கு காம்பியரிங் செய்துக் கொண்டிருந்த பெண்ணோ,” ஹாய் கைஸ். இப்போ ஜாலியா ஒரு விளையாட்டு விளையாடப் போறோம். கலந்துக்க ஆர்வம் உள்ளவங்க, அவங்க பேரை எழுதி அந்த பவுல்ல போடுங்க.” என.
‘பாட்டுத் தானே பாட சொல்லுவாங்க.’ என்று எண்ணிருந்த வெண்ணிலா, எப்பவும் போல முதல் ஆளாக பேரை எழுதி போட்டாள்.
ஆனால் யுகித் அவளை நக்கலாக பார்த்தான்.
‘இவன் ஏன் இப்படி பார்க்குறான். எதுவும் வில்லங்கத்தை இழுத்து விட்டேனோ.’ என்று குழம்பிப் போனாள் வெண்ணிலா.
அவள் நினைத்ததுப் போலவே, வில்லங்கமான கேள்வித் தான் வந்தது.
“ஹாய் காய்ஸ் இந்த போட்டி பாட்டுக்கு, பாட்டு நிகழ்ச்சி மாதிரி இருக்காது. சம்திங் டிப்ரண்ட்.
உங்ககிட்ட இரண்டே இரண்டு கேள்வி தான் கேட்கப்படும்.அதுக்கு நீங்க ஹானஸ்டா பதில் சொல்லணும். உங்க காலேஜ் டைம்ல உங்களோட ஆம்பிஷனா எதை நினைச்சிருந்தீங்கன்றதையும், இப்போ அதை அச்சீவ் பண்ணிட்டீங்களாங்குறதும் தான் அந்த கேள்வி.” என்று காம்பியரீங் பண்ண பெண் கூற.
“ஆத்தி! நல்லா வசமா வந்து சிக்கிக்கிட்டோமே.”என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
போட்டி ஆரம்பமானது.
ஒவ்வொரு சீட்டாக எடுத்து பெயரை அழைக்க.
ஒவ்வொருவராக வந்து கல்லூரி படிக்கும் போது அவர்களது கனவையும், இப்பொழுது இருக்கும் நிலைமையும் கூற சிரிப்பு தான் வந்தது.
நூற்றுக்கு ஒன்னு ரெண்டு பேர் மட்டுமே அவர்கள் நினைத்ததை நடத்தி இருக்க. மற்றவர்கள் எல்லோரும் நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றாகவுமாக இருந்தது.
படிக்கும் போது சீன் போட்டவர்கள் படித்து முடித்து விட்டு வேலையில் இல்லாமல் இருக்க.
அரியர்ஸ் வைத்தவர்கள், எல்லாம் நல்லா பொசிஷன்ல இருந்தார்கள்.
வெண்ணிலாவின் பேரும் வர.
அவளோ அவளது கனவாக வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்தை கூறியவள், தற்போது ஃபேமிலி பிசினஸ் பார்க்கிறேன் என்று கூறி விட்டு பார்க்க.
அவளுக்கு எதிரே அவள் பார்வை படும் இடத்தில் நின்றுக் கொண்டிருந்த யுகித் நக்கலாக அவளைப் பார்த்து சிரித்தான்.
அவனது பார்வையில் முகம் கன்றிய வெண்ணிலாவிற்கு அதற்கு மேல் நிகழ்ச்சியில் ஈடுபட ஆர்வம் இல்லை.
“என்ன ஆச்சு ? ஏன் டல்லாகுற? சும்மா இது ஃபன்னுக்குத் தானே.” என்று சபரீகா அவளை சமாதானம் செய்ய.
“ப்ச்! எனக்கு தலை வலிக்குது. வாங்க போகலாம்.” என்று அழைத்தாள் வெண்ணிலா.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நிலா. நாங்களும் பேர் கொடுத்திருக்கோமே.என்றாள் மஹதி.
“ நீங்க முடிச்சிட்டு வாங்க. நான் வெளியே வெயிட் பண்றேன்.”என்று அவள் கிளம்ப.
“ஹேய்! நிலா! நில்லுடி.” என்று எல்லோரும் அழைத்தனர்.
“ கொஞ்ச நேரம் தனியா இருந்தா அவள் சரியாகிடுவா. அவ போகட்டும்.” என்று நகுலன் கூற.
“சரி.” என்ற மற்றவர்களோ போட்டியில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
வெண்ணிலாவோ ஆடிட்டோரியத்தை விட்டு விலகி செல்ல.
அவளை பின் தொடர்ந்து வந்த யுகித்தோ, “வெண்ணிலா! தங்க வெண்ணிலா …”என்று கூப்பிட.
அவனைத் திரும்பிப் பார்த்த வெண்ணிலாவின் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.
“வாவ்! முகத்துல வர்ணஜாலம் கோலம் போடுதே.” என்று யுகித் ராகம் பாட.
“இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்கிட்ட வம்பு பண்ற?”
“நான் ஒன்னும் வம்பு பண்ணலையே. ப்ச் பாவம். உன் கனவு நிறைவேறவில்லையே ஆறுதல் சொல்லுவோம்னு வந்தேன். அன்னைக்கு நான் கூப்பிடும் போதே வந்து இருந்தா இன்னைக்கு நீ நெனச்சது போல வெளிநாட்டில செட்டிலாயிருப்ப.” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே கூறினான் யுகித்.
அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்ததும் அவள் முகத்தில் இப்பொழுது கேலி சிரிப்பு வந்தது.
“ என்னோட ஆம்பிஷனை வேணாம்னு நான் தான் தூக்கிப் போட்டேன். இன்னைக்கு நினைச்சாலும் எங்க மாமா என்ன வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவாங்க. இன்னும் சொல்லப் போனால் எனக்காக அங்க ஒரு கம்பெனியே ஆரம்பிப்பாங்க. நான் தான் வேண்டாம்னு விட்டுட்டேன். நான் எடுத்த முடிவு தப்புன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கலை.” என்று நக்கலாக கூற.
முகம் கறுக்க அங்கிருந்து வெளியேறினான் யுகித்.
ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிந்த நண்பர்களும் இவளோடு வந்து சேர்ந்து கொள்ள. அங்கிருந்து நகுலனின் வீட்டிற்கு கிளம்பினர்.
மறுநாள் கல்லூரிக்கு வருவதற்கே வெண்ணிலாவிற்கு விருப்பமே இல்லை. ஆனால் அவளது மதன் சார் அன்று தான் வருகிறார். அவருக்காக கிளம்பி வந்தாள் வெண்ணிலா.
சார் வரும்போது வெளியில் இருந்தே அவரை வரவேற்கும் விதமாக மாணவ, மானவியர்கள் பூங்கொத்துடன் இருக்க.
இவர்களும் அவர்களுடன் கலந்துக் கொண்டனர்.
மதன் சார் காரில் வந்து இறங்க.
அங்கு குழுமிருந்த மாணவ, மாணவிகளை பார்த்ததும் ஆனந்தத்தில் திக்கு முக்காடினார்.
சற்று தள்ளி புன்னகையுடன் நின்றிருந்த வெண்ணிலாவை பார்த்ததும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
“ வெண்ணிலா!” என்று அவர் அழைக்க.
தன்னை இன்னும் நினைவில் வைத்திருக்கும் சாரின் அன்பை நினைத்து கண்கள் பணிக்க முன்னே வந்தவள், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க.
எங்கேயோ இருந்த யுகித்தும் அவர்
காலில் வந்து விழுந்தான்.
இருவரையும் எழுப்பி தோளில் தட்டியவர், “ ரெண்டு பேரும் மாறவே இல்லை. இன்னும் போட்டிப் போட்டுட்டுத் தான் இருக்கீங்களா?” என்று வினவ.
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே கடந்த காலத்திற்கு சென்றனர்
மின்சார பாவை-10
written by Competition writers
மின்சார பாவை-10
நிகழ்வுக்கும், கனவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யுகித்தின் கவனத்தை கலைப்பது போல் அவனது ஃபோன் இசைத்தது.
பிரகாஷ் தான் அழைத்து இருந்தான்.
கடமை அவனை அழைக்க, தலையை உலுக்கிக் கொண்டு அங்கு சென்றான் யுகித்.
கேண்டினுக்கு சென்ற வெண்ணிலாவோ,” ஹலோ! பஞ்ச பாண்டாவாஸ் எதுக்கு இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க.
அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து முறைத்தனர்.
“ஆமாம் இப்ப எதுக்கு எல்லோரும் கோரஸ்ஸா முறைக்கிறீங்க?”
“வாங்க மேடம் வாங்க. ஒரு வழியா உங்க பேபியை கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்தாச்சா?” நக்கலாக வினவினாள் சபரிகா.
“ப்ச்! ஒன்னும் வேலைக்கு ஆகலை.” என்று உதட்டைப் பிதுக்கினாள் வெண்ணிலா.
“அப்புறம் ஏன் நிலா இவ்வளவு லேட்டா வர்ற? உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம் தெரியுமா?” நகுலன் முறைக்க.
“சாரி டா! ஏதோ நினைவுல அப்படியே உட்கார்ந்துட்டேன். அதான் உங்க அண்ணன தூது விட்டியா?” என்று வினவியவாறே நகுலனின் அருகில் அமர்ந்தாள் வெண்ணிலா.
“அண்ணனையா? காலைலப் பார்த்தது தான். அதுக்கப்புறம் அவனை ஆளையேக் காணோம். அப்புறம் எப்படி அவனை தூது விட முடியும்? என் அண்ணனை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்குத் தூக்கம் வராதே.”என்று பல்லைக் கடித்தான் நகுலன்.
“ உங்கண்ணனை வம்பிழுக்க,
எனக்கு என்ன வேண்டுதலா? அவரு தான் வாண்டடா வர்றாரு. வாட் கேன் ஐ டூ.” என்றாள் வெண்ணிலா.
“என்னமோ பண்ணித் தொலை. இப்போ உனக்கு டீ சொல்லவா? வேண்டாமா?” என்று நகுலன் வினவிக் கொண்டிருக்கும் போதே, ஆவி பறக்க டீயை கொண்டு வந்து நீட்டினான் ஹரிஷ்.
“நண்பன்டே!” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தவளோ,டீயை வாங்கி பருக ஆரம்பித்தாள்.
டீ குடித்து முடிக்கும் வரை, வேறு எதிலும் கவனத்தை செலுத்தாதவள்,
“ஓகே டியர்ஸ் வாங்க… எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. இன்னைக்கு ஓல்டு ஸ்டூடெண்ட்ஸ வெல்கம் பண்றதுக்காக ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். வாங்க ஆடிட்டோரியம் போகலாம்.” என்று வெண்ணிலா கூற.
“இவ மாறவே இல்லை. கல்ச்சுரல்ஸ்னா போதும் முத ஆளா போய் உட்கார்ந்துப்பா.” என்று அவளது தலையில் லேசாக தட்டினாள் சபரிகா.
“ப்ச்! வளர்ற பிள்ளையை தலையில் அடிக்காதடி.” என்றாள் வெண்ணிலா.
“எது வளர புள்ளையா நீ? அடியே எவ்வளவு நாளானாலும் இதுக்கு மேல வளர மாட்டே.” என்ற சபரிகா கேலி செய்ய.
அவளை முறைத்தாள் வெண்ணிலா.
சரியாக அப்பொழுது, “முஸ்தபா! முஸ்தபா!” என்ற பாட்டு கேட்கவும்.
எல்லோரும் வெண்ணிலாவைப் பார்க்க.
“எதுக்குடா என்னையப் பார்க்குறீங்க” என்றவளுக்கும் பழைய நினைவு லேசாக எட்டிப் பார்க்க, முகத்தில் புன்னகை வந்தது.
“ ஒன்னும் இல்லையே?” என்று கோரஸாக கூறியபடி அவளை நக்கலாகப் பார்க்க.
“எல்லாம் அந்த நெடுமரத்தால வந்தது.”என்று மெல்லிய குரலில் கூற.
“ஹேய் நிலா! யுகி அண்ணா பாவம். அவர் பாட்டுக்கும் சிவனேன்னு வெளிநாட்டுல இருக்காரு. அவரை ஏன் இழுக்குற?” என்று சபரீகா யுகித்திற்காக வக்காலத்து வாங்கினாள்.
“என்னது உங்க அண்ணன் வெளிநாட்டுல சிவனேன்னு இருக்காராமாம். அவரை இப்ப தான் பார்த்தேன். ஐய்யனாராட்டம் முறைச்சிட்டு திரியுறாரு.” என்ற வெண்ணிலாவை, அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“ எதுக்கு இவ்வளவு ஷாக்?”என்று பொதுவாக வினவினாள் வெண்ணிலா.
“ உண்மையாலுமே யுகி அண்ணா வந்திருக்காங்களா நிலா. இல்லை கனவு கினவு கண்டியாடீ?” என்று சபரீகா தயக்கத்துடன் வினவ.
“கொன்றுருவேன்.” என்று அவளது கழுத்தை நெறிக்க போனாள் வெண்ணிலா.
“ ஹேய் நிலா! டென்ஷனாகதடி… யுகி அண்ணா பாரின்ல இருக்குறதா நிகில் தான் சொன்னான். வேணும்னா நிகிலையே கேளு.” என்று மஹதி, வெண்ணிலாவை அமைதிப்படுத்த முயன்றாள்.
‘வெளிநாடு என்ன, சந்திர மண்டலத்தில இருந்தா கூட மதன் சாருக்காக அந்த நெடுமரம் வருவான். நான் தான் யோசிக்காமல் விட்டுட்டேன்.” என்று முணுமுணுத்தாள் வெண்ணிலா.
“உன் கிட்ட எதுவும் யுகி அண்ணா வம்பு பண்ணாறா?” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே, நிகிலன் வினவ.
“அதெல்லாம் இல்லை.” என்றவாறே பார்வையை தாழ்த்திக் கொண்டாள் வெண்ணிலா.
“எங்கண்ணன் தான் யுகி அண்ணா வர மாட்டாங்கன்னு சொன்னார். ஆனால் இப்போ யுகி அண்ணா வந்துருக்காங்க. அதுவும் இல்லாமல் உன்னை வம்பிழுக்குறது போல இந்தப் பாட்டு வேற ஸ்டூடண்ஸ் பாடுறாங்க. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று யோசனையாக நகுலன் கூற.
“காலேஜ் பாட்டுன்னாலே இந்தப் பாட்டு தான் பாடுவாங்க. இதுக்கப்புறம் எவ்வளவோ பாட்டு வந்திருச்சு. ஆனாலும் இந்த அளவுக்கு எதுவுமே இல்லை. சரி வாங்க நம்ம போய் வைப் பண்ணி, ஆடிட்டோரியத்தை கலக்குவோம்.” என்றாள் வெண்ணிலா.
“நாம போறதுக்குள்ள பாட்டே முடிஞ்சிடும்.” என்று மஹதி கூற.
“சோ வாட்? ஒன்ஸ்மோர் கேட்குறோம். ஆடுறோம். அளப்பரையைக் கூட்டுறோம்”என்றாள் வெண்ணிலா.
அதேப் போல முஸ்தபா, முஸ்தபா பாட்டை மறுபடியும் பாட சொல்லி, இவர்களும் பாடியவாறே ஆடினர்.
அப்பொழுதுதான் உள்ளே வந்த யுகித்தோ, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலாவைப் உணர்ச்சியற்ற பார்வை பார்த்து விட்டு ஸ்டேஜுக்கு பக்கத்தில் நின்ற, பிரகாஷிடம் சென்றான்.
வெண்ணிலா ஆடிக் கொண்டிருந்தாலும், யுகித் அங்கு வந்ததை கவனித்தவள், அவன் நேராக ப்ரோக்ராம் ஆர்கனைஸ் செய்துக் கொண்டிருந்த மாணவனிடம் சென்று பேசுவதையும் கவனித்து விட்டாள்.
‘அடப்பாவி! அப்போ நீ தான் அவன்கிட்ட போய் இந்தப் பாட்டை போட சொல்லியிருக்கியா? இதுத் தெரியாமல் உனக்கு சப்போர்ட் வேற பண்ணியிருக்கேன். நீ திருந்தவே மாட்ட.’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள், பழைய நினைவில் ஆழ்ந்தாள்.
அன்று (காதல் பண்ணியது)
யுகித்தின் கோபத்தில் வெண்ணிலா பயந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்களே.
அதற்குப் பிறகு சுதாரித்தவளோ, “ஹலோ! சீனியர்ங்குறதுக்காக நீங்க என்ன பண்ணாலும் சும்மா இருப்பேன்னு நினைக்காதீங்க. இப்போ நான் என்ன பண்ணேன்னு இப்படி மிரட்டுறீங்க. நானும் பொறுமையா இருக்கணும்னு நினைக்கிறேன். விட மாட்டேங்குறீங்களே.”
“ஓஹோ! இது தான் பொறுமையா இருக்குறதா?” என்று நக்கலாக வினவினான் யுகித்.
“ஆமாம் நா பொறுமையா இருக்குறதால தான்,நீங்க ரேகிங் பண்ணதைக் கூட மேனேஜ்மெண்ட் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணாமல் இருக்கேன். ஆனால் எப்பவும் இதேபோல் இருப்பேன்னு நினைக்காதீங்க.”என்று விரல் நீட்டி எச்சரித்தாள் வெண்ணிலா.
“ஏய் பொண்ணுன்னு கை நீட்டாமல் பொறுமையா இருக்குறேன். என்னமோ நல்லவ மாதிரி பேசுற. அதான் ஏற்கனவே மதன் சார் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்ட தானே. அப்புறம் என்ன?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவினான் யுகித்.
“நீங்க என்ன சொல்றீங்க சொல்றது ஒன்னும் புரியல.”
“பாப்பாவா நீ நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியாமலிருக்கா.”
“ப்ச்! நான் போறேன். நீங்க உளறுறதைக் கேட்க எனக்கு டைமில்லை.”
“நடிக்காதே!”
“ நான் ஒன்னும் நடிக்கல சீனியர். என்ன விஷயம்னு சொல்லுங்க இல்லன்னா ஆள விடுங்க.”
“மதன் சார் என்னைக் கூப்பிட்டு, ரேகிங் பண்ணியான்னு கேட்டு வார்ன் பண்ணாரு.” என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்த வெண்ணிலாவோ, “அப்படியா? ஒரு சாரா, அவரோட கடமையை தான் செஞ்சிருக்காரு.” என்றாள் வெண்ணிலா.
“ஹேய்! செய்யறதையும் செஞ்சுட்டு சிரிக்க வேற செய்றியா! உன்னை…” என்றவாறு அடிக்க கையை ஓங்கினான்.
அங்கு வந்த தீபிகாவோ, “யுகா! என்ன பண்ற?” என்று அவனைத் தடுத்தாள்.
யுகித்தோ வெண்ணிலாவை முறைத்தவாறே, “ அவளை முதல்ல இங்கிருந்து போ சொல்லு. கண்ணு முன்னே இருந்தா அடிச்சிடுவேன்.”என்றான்.
“கோபப்படாதே மச்சி! கொஞ்சம் பொறுமையா இரு.” என்று யுகித்தை சமாதானம் செய்தவள், வெண்ணிலாவிடம் திரும்பினாள்.
“ நிலா உன் கிட்ட என்ன சொன்னேன்? யுகா கிட்ட இருந்து ஒதுங்கியிருக்க தானே சொன்னேன்.”
“ப்ச்! பேபி! நீ சொன்ன மாதிரி ஒதுங்கி போகத்தான் பார்த்தேன். உங்க ஃப்ரெண்ட்டு விடல. என்னைத் தொரத்தி வந்து வம்பு பண்றார்.”
“ஹேய் ! பொய் சொன்ன பல்லைப் பேர்த்துடுவேன்.”என்று யுகித் எகிற.
“யுகா! பேசிட்டு இருக்கும் போதே எதுக்கு இவ்வளவு கோபப்படுற?” என்று தீபிகா கண்டிக்க.
மூச்சை உள்ளிழுத்து கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான் யுகித்.
“நான் ஒன்னும் பொய் சொல்லலை பேபி. வம்பு வேணாம்னு தான் சீனியரைப் பார்த்ததும் அங்கிருந்து எழுந்து வந்துட்டேன். ஆனால் பின்னாடியே வந்து…” என்றவள் தயக்கத்துடன் யுகித்தை பார்க்க.
அவனுக்கு படபடப்பு வந்துவிட்டது. ‘எங்கே தான் அவளை கீழ் விழாமல் தடுப்பதற்காக அணைத்ததை தீபிகாவிடம் சொல்லிவிடுவாளோ?’ என்று பதறியவன் வேகமாக,
“தீபு! மதன் சார்ட்ட போய் என்னைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கா.” என்றான்.
“நான் என்ன சின்ன பிள்ளையா, சீனியர் என்னை வம்புழுக்கிறாரு. என்னென்னு கேளுங்க சார்னு கண்ணைக் கசக்கிக் கிட்டு அவர்க்கிட்ட போய் நிக்க.” என்றாள் வெண்ணிலா.
“அப்புறம் சாருக்கு எப்படி தெரியும் என்னைக் கூப்பிட்டு அவர் வார்ன் பண்ணாரு” என்று யுகித் மீண்டும் ஆரம்பிக்க.
“ அது எனக்கு எப்படி தெரியும். நான் சொல்லலை பேபி.”
“பொய் சொல்றா! நம்பாதே தீபு.” என்று இருவரும் மாறி மாறி தீபிகாவிடம் முறையிட.
இருவர் பக்கமும் திரும்பித், திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த தீபிகாவுக்கு கழுத்து வலிக்க ஆரம்பித்தது.
“ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்திருங்களா?” என்று தீபிகா கத்தினாள்.
இருவரும், ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே வாயை மூடினர்.
“நிலா! நீ சார் கிட்ட சொல்லலை தானே.” என்று தீபிகா வினவ.
“ பேபி ; நான் கம்ப்ளைன்ட் பண்ணலை.திரும்ப எந்த பிரச்சினைலையும் இன்வால்வாகாமல் இருக்கணும்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னைப் படிக்கவே விடமாட்டாங்க. படிச்சு நல்ல வேலைல சேர்ந்து பாரின்ல செட்டிலாகணும்னு ஏகப்பட்ட கனவுகள் இருக்கு. அதுக்கு இடைஞ்சல் வர மாதிரியான காரியம் எதுவும் செய்ய மாட்டேன். உங்க ப்ரெண்டோட எந்த வம்புத்தும்புக்கும் நான் போக மாட்டேன். அதேப் போல அவரையும் என் லைன்ல க்ராஸ் பண்ண வேண்டாம்னு சொல்லிடுங்க.” என்றவள் நண்பர்களை தேடிச் சென்றாள்.
“எங்க நிலா போன? எங்களோட தானே பேசிட்டு இருந்த?” என்று நகுலன் வினவ.
“அது… அந்த சீனியர் முறைச்சுப் பார்த்துட்டே வந்தார். வம்பு வேணாம்னு ஒதுங்கி போகலாம்னு பார்த்தேன். ஆனால் துரத்தி வந்து சண்டை போட்டுட்டு போறார்.”
என்று சற்று முன் நடந்ததைக் கூற.
“யுகா அண்ணா ரொம்ப நல்ல டைப். ஆனால் உன் கிட்ட மட்டும் ஏன் கோபப்படுறார்னு தெரியலை.” என்றான் நகுலன்.
“சரி விடு நகுல். வேற டாஃபிக் பேசலாம். அந்த சீனியரைப் பத்தி பேசினாலே இரிட்டேடாகுது.”
“ஓகே!” என்று பேச்சை மாற்றினான் நகுலன்.
நாட்களும் வேகமாக ஓட,கல்லூரி தொடங்கி பத்து நாட்களாகிருந்தது.
புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக வெல்கம் பார்ட்டி நடைபெற்றது.
“ஹேய்! எவ்வளவு நேரம் அந்த ப்ரோக்ராமை பார்க்குறது. போரிங்கா இருக்கும். நம்ம எங்கேயாவது வெளியே போகலாமா?” என்று மஹதி வினவ.
“நமக்காகத் தான் இந்த பார்ட்டியே. நம்மளே அவாய்ட் பண்ணா எப்படி? வாங்க ஆடிட்டோரியம் போகலாம்.” என்று எல்லோரையும் இழுத்துக் கொண்டு சென்றாள் வெண்ணிலா.
இவர்கள் போன நேரம், நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த பெண்ணோ, “ நம்ம கல்லூரிக்கு வந்திருக்கும் புதிய மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக நம் கல்லூரி இசைப் புயல் யுகித் பாட வருகிறார்.” என்றுக் கூற.
தலையை கோதிக் கொண்டு புன்னகையுடன் துள்ளிக் குதித்து மேடை ஏறினான்.
“பில்டப்லாம் ஓவரா இருக்கே.” என்று கிண்டலடித்துக் கொண்டே வந்து அமர்ந்தாள் வெண்ணிலா.
ஆனால் அவன் பாடப் பாட இவள் தன்னை மறந்து ரசித்தாள்.
அவன் பாடி முடித்ததும் விடாமல் கைத் தட்டினாள்.
“ஹே! யுகாண்ணாவை கிண்டல் பண்ண? இப்ப கைத்தட்டுற?” என்று நகுலன் வினவ.
“ப்ரோக்ராமை தொகுத்து வழங்கியவர் பண்ண பில்டப் அப்படி. ஆனால் நல்லா பாடுறாரு. பல்லவி, சரணம் எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கு.” என்றாள் வெண்ணிலா.
“ஹேய் பாட்டைப் பத்தி இவ்வளவு விஷயம் தெரியுமா?” என்று ஆச்சரியமாக சபரீகா வினவ.
“ம் பாட்டு, டான்ஸ் எல்லாமே அத்துப்படி.”
“சூப்பர். சகலகலாவல்லி தான் போ.” என்று அவளை பாராட்டினாள் சபரீகா.
அதே நேரத்தில் இவர்களை தாண்டி யுகித் செல்ல.
“ சீனியர்!’ என்று அவனை அழைத்தாள் வெண்ணிலா.
“ என்ன?” என்பது போல் யுகித் பார்க்க.
“ சூப்பரா பாடினீங்க. அதுவும் இந்த பாட்டு எங்களுக்காகவே பாடுற மாதிரி இருந்தது. தேங்க்ஸ்.” என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள் வெண்ணிலா.
“குட் ஜோக்! உங்களுக்காகலாம் நான் பாடல.”
“அப்படியா? ஆனால் நீங்க பாடுன முஸ்தபா முஸ்தபா பாட்டுல உள்ள ராகிங் பண்றது நட்புக்காக தானேங்குற வரி எங்களுக்கு தூது விட்ட மாதிரி தானே இருக்கு.” என்று விடாமல் வினவினாள் வெண்ணிலா.
“அதுக்காக தான் பாடினேன். ஆனால் உங்களுக்கு இல்லை. மதன் சாருக்கு புரியணும்ன்றதுக்காக பாடுனேன்.” என்று கேலியாக பார்த்து விட்டு செல்ல.
“இந்த அசிங்கம் தேவையா?” என்று நண்பர்கள் கேலி செய்ய.
“இதெல்லாம் கல்லூரியில் வாழ்க்கையில் சகஜமப்பா.” என்று தோளைக் குலுக்கி சிரித்தாள் வெண்ணிலா.’
அதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
“ஹேய்! நிலா பாட்டு முடிஞ்சு ரொம்ப நேரமாச்சு. இன்னும் என்ன ஆடிட்டு இருக்க.” என்று மஹதி அவளை உலுக்க.
பழைய நினைவுகளில் இருந்தவள் நிகழ்விற்கு வந்தாள் வெண்ணிலா.
Episode – 11
திடுமென உள்ளே வந்தவர், “அம்மாடி நிறுத்தும்மா.” என ஒரே சொல்லில் சொர்ணாவை தடுத்து நிறுத்தினார்.
அவளும், “யாரு இது இந்த நேரத்தில?” என திகைத்துப் போய் ஆரண்யனை விட்டு விலகித் திரும்பிப் பார்க்க,
அங்கே ஆரண்யனை முறைத்துப் பார்த்தபடி, அறுபதுகளின் முதிர்வுடன் கூடிய கம்பீரத்துடன் நின்று கொண்டு இருந்தார் அவனின் தந்தை.
ஆரண்யனோ, தலை முடியைக் கோதிய படி,
“நீங்க என்ன இந்த நேரத்தில இங்க?, நான் தான் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொல்லி இருந்தனே. அப்புறம் என்ன?” என கேட்டான்.
அவனின் பேச்சில், பல்லைக் கடித்தவர்,
“ஏன் உனக்கு நான் இப்ப வந்தது பிரச்சனையா இருக்கோ?, இல்ல உன்னோட திட்டம் பாழாய்ப் போச்சுதுன்னு கோபமா இருக்கோ?” என அவனது ஸ்டைலிலேயே கேட்க,
அவரின் பேச்சில், “என்ன இவர் இந்த ஹிட்லர் கிட்ட இவ்வளவு தைரியமா பேசுறாரு. அப்போ இவர் யாரா இருக்கும்?” என எண்ணிக் கொண்டவள்,
அவரை சற்று கூர்ந்து பார்த்தாள்.
பார்த்தவளுக்கு அவரின் ஜாடை புரிய,
“ஓஹ்…. ஹிட்லரோட அப்பாவா இவரு…. முகத்தை பார்த்தா அப்படி தான் தெரியுது. ஆனா இந்த பெரிய மனிதரோட முகத்தில கம்பீரம் கலந்த சாந்தம் தெரியுது. ஆனா இந்த ஹிட்லர் டோட்டலா வேற மாதிரி இருக்கானே. சரியான சிடு மூஞ்சி.”
“என்னவோ இவரால தான் இப்போதைக்கு நான் தப்பிச்சு இருக்கேன். பேசாம இங்க இருந்து கிளம்பிடுவம்.” என எண்ணியவள், தனது போனை மெதுவாக மேசையில் இருந்து எட்டி எடுக்க,
அவளை அனல் பறக்க பார்த்தான் ஆரண்யன்.
அதே நேரம், அவளைக் கருணையுடன் பார்த்தவர்,
“ஹாய் மிஸ் சொர்ணாம்பிகை என்னோட பெயர் ஆதித்ய சக்கரவர்த்தி. நான் உன்னோட பாஸ் ஆரண்யனோட அப்பா. உன்ன பத்தி எல்லாமே எனக்கு தெரியும்மா.
அதனால நீ என்னைப் பார்த்தோ…. என் மகனைப் பார்த்தோ பயப்பிட வேண்டிய அவசியமே இல்ல. உன்ன பத்தி எல்லாமே தெரியும்…. ஐ மீன் நீ என்னோட மகனை அடிச்சதுல இருந்து இப்போ அவன் உன்னை காலுல விழ சொல்லும் வரைக்கும் நடந்தது எல்லாம் எனக்கு தெரியும்.” என அவர் கூற,
சொர்ணா, அவரை அதிர்ந்து போய் பார்த்தாள் என்றால்….
ஆரண்யனோ, ஏற்கனவே எனக்கு தெரியும். என்பது போல, ஒரு தோரணையில் அசால்டாக நின்று கொண்டு இருந்தான்.
சொர்ணாவோ, “சார்…. அது வந்து….” என இழுக்க,
“அம்மாடி, சொர்ணா நீ இப்படி பயந்து போக வேண்டிய அவசியமே இல்லை. என்ன நீ உன்னோட அப்பா மாதிரி நினைச்சுக்கோ. உனக்கு ஏதும் உதவி தேவைன்னா கூட தயங்காம என்ன கேளு. நான் கண்டிப்பா செய்றேன். எவனும் எந்தக் கேள்வியும் என்ன கேட்க முடியாது.” என கூற,
ஆரண்யனின் கை முஷ்டிகள், இறுகிப் போனது தந்தையின் பேச்சில்.
அவனது முகமும் இறுகி கறுத்துப் போனது. அவனுக்கு இதை விட ஒரு அவமானத் தருணம் இல்லை என்பது போல நின்று கொண்டு இருந்தவனின் கோபம் முழுவதும் திரும்பியது என்னவோ தந்தையின் அருகே வாயைப் பிளந்து நின்று கொண்டு இருந்த சொர்ணா மீது தான்.
அவளோ, ஒரு கணம் அங்கே முகம் கறுக்க நின்று கொண்டு இருந்த, ஆரண்யனைப் பார்த்து விட்டு,
“இவனுக்கு இவர் தான் சரியான ஆள். கடவுள் இருக்கான் குமாரு. இவன் இப்படி நிக்கிறத பார்க்க அவ்வளவு ஆனந்தமா இருக்கு.” என எண்ணிக் கொண்டவள் முகம் மலர,
“நன்றி சார், இனி மேல் ஏதும் தேவைன்னா கண்டிப்பா கேட்கிறேன்.” என கூறியவள்,
ஒரு பார்வை ஆரண்யனை நோக்கி வீசி விட்டு, தனது உடைமைகளை அவசரமாக எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,
அவளின் பார்வையும், அவனுக்குள் இருந்த எரிமலையை இன்னும் ஊதி பெரியது ஆக்கியதே தவிர, கொஞ்சமும் குறைக்கவில்லை.
சொர்ணா கதவைத் திறக்க போக, “கொஞ்சம் பொறும்மா. இந்த நேரத்தில நீ தனியா கிளம்பிப் போறது சேப்டி இல்லம்மா. நான் உன்ன ட்ரோப் பண்ண சொல்றேன்.” என கூற,
அதற்கு மேலும் அடக்க முடியாது ஆரண்யன்,
“டாட்….” என கத்த,
அதே நேரம், “இல்ல…. இல்ல…. அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார். நான் தனிய போய்க் கொள்ளுவன்.” என அவசரமாக கூறினாள் சொர்ணா.
அப்போதும் விடாது, “என்னம்மா நீ?, இந்த நேரத்தில எப்படி தனிய போவாய்?, உனக்கு ஏதும் நடந்தா அப்புறம் உன்னோட அப்பாக்கு யாரு பதில் சொல்லுவாங்கம்மா?, நீ வேற தங்க சிலை மாதிரி இருக்காய். இந்த நேரத்தில போறது சேப் இல்லம்மா.” என கூற,
அவர், சொர்ணாவை அழகு என கூறியதை தாங்க முடியாது மேசையில் ஒரு முறை ஓங்கி அடித்தவன், “ஷிட்” என கத்தினான்.
அதோடு நிறுத்தாது, “இவ பெரிய உலக அழகி. இவளுக்கு பாதுகாப்பு ஒன்னு தான் குறைச்சல். இவளப் போய் எவன் கடத்துவான். தயிர் சாதம்.” என சத்தமாக கூறியும் கொண்டான்.
அவனின் சத்தத்திற்கு பயப்பிட அவர் என்ன சாதாரண ஆளா?, அவனுக்கே தந்தை அல்லவா அவர்.
“என்ன பிரச்சனை உனக்கு?, எதுக்கு இப்போ கத்துறாய்?, எனக்கு அந்தப் பொண்ணோட சேப்டி முக்கியம். உனக்கு எதைப் பத்தியும் அக்கறை இல்லை. பழி வாங்குறது தான் முக்கியம். ஆனா எனக்கு உன்ன போல நடக்க தெரியல. என்ன கடவுள் அப்படி படைச்சிட்டார் போல. என்ன செய்வம்?, என்னோட டிசைன் அப்படிப்பா.” என அவனை விடவும் கேலிக் குரலில் கூற,
ஆரண்யன் மேலும் முகம் கறுத்துப் போனான்.
அவனின் முகக் கன்றல் ஒரு விதத்தில், சொர்ணாக்கு ஆறுதலைக் கொடுத்தது.
அவளோ, “சார் ப்ளீஸ். ஏன் நீங்க இரண்டு பேரும் இந்த சின்ன விஷயத்துக்கு வாக்கு வாதப் படுறீங்க?” என மென் குரலில் கூற,
ஆதித்ய சக்கரவர்த்தி, அப்போதும் விடாது,
“அம்மாடி, நீ கிளம்பும்மா நானே உன்னை ட்ரோப் பண்ணுறேன்.” என கூறிவிட்டு,
அவளின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்க,
அவளோ, கடைக் கண்ணால், ஆரண்யனை ஒரு பார்வை பார்த்தவள்,
அவன் கையைக் கட்டிக் கொண்டு விறைத்துப் போய் நிற்கவும்,
அவனைப் பார்க்கப் பயந்து அங்கிருந்து இழுபட்டு செல்ல ஆரம்பிக்க,
தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாது, அப்படியே நின்று கொண்டு இருந்தவன் மனம் மூர்க்கத் தனம் கொண்டது தான் உண்மை.
ஆரண்யனின் தந்தையோ, சொர்ணாவை காரில் அழைத்துக் கொண்டு கிளம்பியவர், அவளிடம் இயல்பாக பேசியதோடு, அவளையும் தன்னுடன் இயல்பாக பேச வைத்தார்.
ஒவ்வொருவரும் பழகும் விதம் தானே அவர்களுக்குள் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அடிப்படையாக இருக்கும். அந்த வகையில் அவளது மனதில் அவரும், அவரின் மனதில் அவளும் தந்தை மகள் போல பதிந்து போனார்கள்.
அவளை அவளது வீட்டு வாசலில் இறக்கி விட்டவர், அதோடு நிறுத்தாது, கூடவே தானும் இறங்கி, தன்னை சொர்ணாவின் கம்பெனி முதலாளி என அறிமுகப் படுத்திக் கொண்டு,
சொர்ணாவின் தந்தையிடம், தாமதம் ஆனதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அவரது செய்கையில், சொர்ணாவின் தந்தையின் முகம் தெளிந்தது என்றால், அவளின் முகமும், மனமும் நிறைந்து போனது.
அவரும் சற்று நேரத்தில் கிளம்பு விட,
சொர்ணாவும், மன நிம்மதி உடன், தந்தையுடன், உரையாடி விட்டு, சாப்பிட்டு விட்டு தூங்க ஆய்த்தம் ஆனாள்.
கடந்த சில வாரங்களாக ஆரண்யனால் உருவான இறுக்கம், மன உளைச்சல் எல்லாம் இல்லாது போய் இருந்தது.
முகத்தில் ஒரு வித மென் புன்னகை உடன், அவள் உறங்க எண்ணி கண் மூடும் நேரம், அவளின் போன் வழக்கம் போல கரடி வேலை பார்த்தது.
“யாரு இது இந்த நேரத்தில?”, என யோசித்தவள், போனை எடுத்துப் பார்க்க, தொடுதிரையில் ஹிட்லர் காலிங்க் என ஒலிர்ந்தது.
அதுவும் நார்மல் கால் அல்ல. வீடியோ கால்.
அதனைக் கண்டதும், முகத்தில் இருந்த புன்னகை யாவும் வடிந்து போக, போனை வெறித்துப் பார்த்தவள், அப்படியே அமர்ந்து இருந்தாள்.
ஆனால் போன் மீண்டும் மீண்டும் அடிக்கவும், என்ன செய்வது எனப் புரியாது, அப்படியே அவள் அமர்ந்து இருக்க, போன் கட் ஆகி அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அந்த மெசேஜ் ஓபன் பண்ணப் படவில்லை என்றதும், மீண்டும் மீண்டும் அவளுக்கு மெசேஜ் வர,
அதற்கு மேலும் முடியாது, மெசேஜ்ஜை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.
கண்டிப்பாக அந்த மெசேஜ் ஜில் நல்ல விடயம் வந்து இருக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தாலும், எதையும் தாங்கும் இதயத்துடன் ஒரு வித பெரு மூச்சுடன், அதனை ஓபன் பண்ணிப் பார்த்தாள் அவள்.
அதிலே, “இப்போ வீடியோ கால் நீ அட்டென்ட் பண்ணல ன்னா…. அடுத்த நிமிஷம் உங்க வீட்டு முன்னாடி நான் வந்து நிற்பன். அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல.” என அனுப்பப் பட்டு இருந்தது.
அதற்கு மேலும் போனை ஆன்ஸர் பண்ணாமல் இருக்க மனம் வருமா அவளுக்கு?
அடுத்து ஒரே ரிங்கில் போனை எடுத்தவள் கண்டது.. ஆபீசில் அவனது ரூமில், சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு, அவள் கண்ட அதே ஆடையுடன், கோர்ட்டை கழட்டி எறிந்து விட்டு,
ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தவனைத் தான்.
“என்னடா இது எப்படி ஆபீஸ் ரூம் திடீர்னு ஜிம்மா மாறிப் போச்சு?, என்னாச்சு இவருக்கு?” என யோசிக்க, சொடக்கிட்டு கூப்பிட்டவன்,
“என்ன எப்படிடா என்னோட கேபின் இப்படி ஜிம்மா மாறிச்சுதுன்னு யோசிக்கிறீங்க போல மேடம், நான் நினைச்சா எதுவும் என்னால செய்ய முடியும். ஆனா உன்னோட விஷயம் தான்….” என ஓடிக் கொண்டு இருப்பதை நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தபடி கூறியவனின் கண்களில் அனல் தெறித்தது.
அவனின் உடல் முழுவதும் வியர்வையில் குளித்து இருந்தது.
அந்த வியர்வையின் அளவு சொன்னது, அவனது கோபத்தை.
“உன்னால என்னோட நிம்மதி போச்சு. ஆனா நீ நிம்மதியா தூங்க ரெடியாகுறாய் போல. உன்ன அப்படி தூங்க விட நான் என்ன முட்டாளா?, இல்ல மடையனா?, அதான் கால் பண்ணேன். என்னோட அப்பாவையே என்ன எதிர்க்க வைச்சிட்டாய் இல்ல. இவ்வளவு நாளும் உன்ன என்னோட எதிரின்னு தான் சிம்பிளா நினைச்சேன். ஆனா இன்னையில இருந்து நீ தான் என்னோட பரம எதிரி. உன்ன நான் எந்தக் காரணம் கொண்டும் நிம்மதியா இருக்க விட் மாட்டேன்டி. உன்னால எனக்கு தொடர் அவமானம் மட்டும் தான். இத சொல்லத் தான் கால் பண்ணேன்.”
“உனக்கு என் அப்பாவால நல்ல காலம்னு நினைச்சுக் கொண்டு இருந்தாய்னா…. அந்த நினைப்பை அடியோட தூக்கிப் போடு. இனி மேல் தான் இன்னும் நிறைய கெட்ட காலம், பாடங்கள் நீ என்கிட்ட இருந்து படிக்கப் போறாய் புரிஞ்சுக்கோ. என் கண்ணு இனி மேல் உன்ன மட்டும் தான் போகஸ் பண்ணும்.” என போனுக்கு அருகில் முகத்தை கொண்டு போய் கண்ணை சுட்டிக் காட்டியவன், அவள் அதிர்ந்த முகத்தை திருப்தி யாக பார்த்துக் கொண்டே போனை பட்டென கட் பண்ணினான்.
அவன் போனை வைத்ததும், “இந்த சைத்தான், சைக்கோ ஒரு நாளும் திருந்தாது. என்னையும் நிம்மதியா இருக்க விடாது. ஒருமையில கதைக்கிற அளவுக்கு தான் இருக்கு இவனோட செய்கை. இவனுக்கு எதுக்கு மரியாதை எல்லாம்.” என தலையில் அடித்துக் கொண்டவள், அமைதியாக உறங்கிப் போனாள்.
ஆனால் உறக்கமும் வராது, கோபமும் அடங்காது ஆபீஸ் லேயே தங்கி இருந்தவன் ஆரண்யன் தான்.
அவனுக்கு இப்போது தனது தந்தையின் மீதும் கோபம் வந்தது தான்.
ஆனாலும் அடக்கிக் கொண்டு திரும்ப பாயும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தான்.
அதே போல ஆதித்ய சக்கரவர்த்திக்கும் மகனைப் பற்றிய எண்ணத்தில் தூக்கம் வர மறுத்தது தான்.
அவனது பிடிவாதமும், கோபமும், வன்மமும் அவர் அறிந்தது ஆயிற்றே.
அவனுக்கு தந்தை அல்லவா அவர்.
“அவனை
எப்படித்தான் மாற்றப் போகிறோமோ தெரியலயே.” கல்யாணம் பண்ண கேட்டாலும் மாட்டேன்னு அடம் பண்றான்.”
“ஒருத்தரை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இறங்கிப் போய் வேலை செய்றான்?, இவனோட குணம் எப்போ மாறுமோ?, இன்னும் எத்தனை பேர் இவனால பாதிக்கப் பட போறாங்களோ?” என மனதிற்குள்
அங்கலாய்த்துக் கொண்டவருக்கும் அன்று இரவு தூக்கம் பறிபோனது தான் உண்மை.
பாயக் காத்து இருக்கும் சிறுத்தையாக இருப்பவன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
சொர்ணாக்கு தொடர்ந்தும் ஆதித்ய சக்கரவர்த்தியின் ஆதரவு கிடைக்குமா?
மின்சார பாவை-9
written by Competition writers
மின்சார பாவை-9
“யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா.
“ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித்.
‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி இருக்குற இடம் தெரியாம வந்து நான் பேசுறதை ஒட்டு கேட்டுட்டு வந்து ஓட ஓட என்னை விரட்டுறீயே .’ என்று மனதிற்குள் புலம்பியவள், “அது வந்து சீனியர்…” என்று ஏதோ கூற வர.
“சீனியர்! பரவாயில்லை… அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா?” நக்கலாக வினவினான் யுகித்.
“நான் எதையும் மறக்கல.” அழுத்தமாகக் கூறினாள் வெண்ணிலா.
“ நல்லது! அப்ப நான் மட்டும் மறப்பேன்னு நினைச்சியா? ஈசியா என்ன பத்தி பேசுற?”
‘ஜயோ! விட மாட்டேன் போலயே இந்த நெட்டைக்கொக்கு.’ என்றவாறே அவனை, பார்த்தவள்,”சாரி சீனியர்! “ என்றாள்.
“சாரி எல்லாம் எனக்கு தேவை இல்லை. உன்னோட சாரிக்கு வேல்யூவே கிடையாது. நீ தப்பிக்கிறதுக்காக சொல்ற ஒரு வெப்பன்.” என்று அவளை இளக்காரமாக பார்த்துக் கொண்டே கூற.
“ப்ச்! ஆமா… ஆனால் உங்கக் கிட்ட உணர்ந்து தான் சொல்றேன். பேபி என்னமோ நான் தான் உங்களை தொரத்தி, தொரத்தி லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதுல டென்ஷாகி, வாய்க்கு வந்ததை உளறிட்டேன்.”என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். தான் தான் இப்பொழுது உளறிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய அவனை தயக்கத்துடன் பார்க்க.
அவனது முகம் கருத்துப் போனது. நொடியில் அதை மறைத்த யுகித்தோ, “ நான் தான் உன்னை தொரத்தித் தொரத்தி லவ் பண்ணேன். அதனால தானே ஈசியா என்னை விட்டுட்டு போயிட்ட… இப்ப நான் தனியா கிடந்து தவிக்கிறேன். ஆனா மேடம் நீங்க சந்தோஷமா குழந்தைக் குட்டின்னு இருக்கீங்க.”
“அதுக்கு நான் காரணமில்லை.” என்று குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.
“அப்போ நான் காரணம்னு சொல்றியா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் யுகித் வினவ.
“ப்ச்! எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.” என்று வெட்டுவது போல வெண்ணிலா கூற.
“முடிஞ்சு போன கதையை கூட கமா போட்டு தொடரலாம்.” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
“யெஸ் தங்கம்.” என்றவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.
“அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறதே!”
என்றவாறு நெஞ்சை தட்டினான்.
அவனது மயக்கும் குரலில் இளகிய மனதை முயன்று கடிவாளம் இட்டவள், “ நீங்க பாடவும் மயங்கி போறதுக்கு பழைய வெண்ணிலான்னு நெனச்சீங்களா சீனியர்?” என்று கிண்டலாக வினவினாள்.
“இல்லையே! அப்போ நீ மிஸ் வெண்ணிலா! இப்போ நீ மிஸஸ் வெண்ணிலா.”என்று யுகித் கூறிக் கொண்டிருக்கும் போதே,
“வெண்ணிலா!” என்று அருகே ரகுலனின் குரல் ஒலித்தது.
மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவள், என்ன என்பது போல் திரும்பி ரகுலனை பார்த்தாள்.
“உன்னை நகுல் தேடுகிறான் நிலா.”என்றுக் கூற.
விட்டால் போதும் என்பது போல் அங்கிருந்து ஓடிய வெண்ணிலாவோ, கேன்டினுக்கு செல்வதற்கு முன்பு, ஒரிடத்தில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
இப்பொழுதுக் கூட யுகித்தின் குரல் காதருகே கேட்டது போலிருக்க. அவளது உடல் சிலிர்த்தது. அவனது நிழல் கூட அவளருகே நெருங்கவில்லை. ஆனால் அவன் தந்திரக்காரன். அவளுக்கு பழைய நினைவுகளை, ஒரு நொடியில் நினைவுப்படுத்தி விட்டானே. அவளது மனதோ மீண்டும் ஒருமுறை படபடத்தது.
‘நோ! நிலா பீ ஸ்டெடி. பட்டுவை நினைச்சு பாரு. பட்டுவோட லைப் தான் உனக்கு முக்கியம்.”என்று தனக்குள்ளே மந்திரம் போல ஜபித்தவள், மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டாள்.
‘அவனைப் பார்த்தா என்னையே மறந்துடுறேன். அது நல்லதுக்கில்லை. முடிஞ்ச வரை அவனது கண்ணில் படாமல் இங்கிருந்து செல்ல வேண்டும். அது தான் எனக்கும், என் பட்டுவுக்கும் நல்லது. என்று எண்ணியவள், அங்கிருந்து எழுந்து நண்பர்களை தேடிச் சென்றாள்.
அதற்கு மாறாக யுகித்தோ, ‘ வர்றே வா! நிலா மேடத்துக்கு இன்னும் என் மேல கொஞ்சம் காதல் இருக்கு. ஒரு நானோ செகண்ட்ல காண்ப்பிச்சிட்டா. இது போதும். இங்கிருந்து போறதுக்குள்ள, நான் அவளுக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்ல வைக்குறேன்.’ என்று மனதிற்குள் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தான்.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ரகுலனோ, “யுகா!” என்று அழைக்க.
அவனோ வெண்ணிலாவைப் பற்றி கனவு கண்டுக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி!”என்று யுகித்தின் தோளில் கை வைத்து உலுக்க.
இனிய கனவை கலைத்த எரிச்சலில், “என்னடா உனக்கு பிரச்சனை?” என்று பல்லைக் கடித்தான் யுகித்.
“நான் என்னடா பண்ணேன். நகுல் ரொம்ப நேரமா வெண்ணிலாவை தேடினான். அதான்…” என்று ரகுலன் கூற.
“அதான்! உன் தம்பியோட ஃப்ரெண்டை என் கிட்ட இருந்து பொய் சொல்லி காப்பாத்தியாச்சுல. அப்புறம் ஏன் டா இங்கே இருந்து என் உயிரை வாங்குற?” என்று அவனது இனிய கனவை கலைத்த எரிச்சலில் ரகுலனிடம் பாய்ந்தான் யுகித்.
“அது வந்து… சாரி மச்சி! நல்ல நண்பனுக்கு அழகு, அவன் தவறு செய்யாமல் பார்த்துக்குறது தான். சரி வா! ஆடிட்டோரியம் போகலாம்.”
“ப்ச்! நீ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.” என்றவன், அங்கிருந்த திட்டில் உட்கார்ந்தவாறே கண்களை மூடினான்.
“டேய் பிரகாஷ் உன்னைத் தேடிட்டு இருக்கான் டா.”
“நான் பிரகாஷுக்கு ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ண சொல்லி மெசேஜ் போட்டுட்டேன். நீ கூட இருந்து கைட் பண்ணு. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்.” என்றவனை கவலையாக பார்த்தவாறே அங்கிருந்து கிளம்பினான் ரகுலன்.
உண்மையிலே அந்த ஆடிட்டோரியத்தை போய் பார்க்கும் மனநிலையில் யுகித் இல்லை. ஒரு காலத்தில் அந்த இடத்தில் ஒருத்தியை பார்வையாலே பாடாய் படுத்திய நினைவுகள், இனிமையாக மனதில் வந்துப் போனது.
அன்று(காதல் பண்ணியது)
யுகித்தின் மன்னிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக பேசிய வெண்ணிலா, திரும்பிப் பார்க்க. அங்கோ அவன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து திடுக்கிட்டதெல்லாம் ஒரு நொடி தான்.
பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டு, அவனைக் கடந்துச் செல்ல முயன்றாள்.
ஆனால் அவள் முன்னே கைகளை நீட்டி தடுத்த யுகித்தோ, “ லுக் வெண்ணிலா! உனக்கு வேணும்னா சாரிங்குறது ஜஸ்ட் ஒரு வார்த்தையா இருக்கலாம். பட் நான் உணர்ந்து தான் சொன்னேன்.” என்றான்.
“உனர்ந்து சொன்னீங்களோ, உணராமல் சொன்னீங்களோ அது மேட்டர் இல்லை. தினமும் நான் காலேஜ் விட்டதும் உடனே வீட்டுக்கு போறத நீங்க நோட் பண்ணியிருக்கீங்க இல்லையா?. கொஞ்சம் லேட்டானாலும் நான் பதறுறதையும் நோட் பண்ணியிருக்கீங்க தானே. சோ தெரிஞ்சுச்சு தான் நீங்க என் கிட்ட வம்பு பண்ணியிருக்கீங்க. அப்புறம் எதுக்கு மன்னிப்பு கேட்கற பாவ்லா?”
என்றவள் அவனைச் சுற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
‘ப்பா! செம்ம ஷார்ப்! கரெக்டா கண்டுப்புடுச்சிட்டா.”என்று அவளைப்
பார்த்துக் கொண்டிருந்தான் யுகித்.
“ என்ன யுகா? இன்னும் என்ன ப்ராப்ளம்? எதுக்கு அந்தப் பொண்ணையே பார்த்துட்டு இருக்க?” என்று தீபிகா வினவ.
“ப்ச்! பாவம்டா அந்த பொண்ணு. ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு போல. நான் இந்த விசயம் இவ்வளவு சீரியஸாகும்னு நினைக்கலை.” என்று சற்று வருத்தமாக யுகித் கூற.
“சரி விடு யுகா! அதான் சாரி கேட்டுட்டியே.” என்று நண்பனை சமாதானம் செய்ய முயன்றாள் தீபிகா.
“ம்! நான் சாரி கேட்டா போதுமா? அந்த பொண்ணு என்னோட சாரியை அக்சப்ட் பண்ணலை.”
“விடு மச்சி! நீயே யாரையும் ரேகிங் பண்ண மாட்ட. உனக்கே கோபம் வர மாதிரி அந்த பொண்ணு தான் நடந்துக்குச்சு. அதான் நீ வச்சு செஞ்சுட்ட. அந்த வெண்ணிலா பண்ணதுக்கும், நீ பண்ணதுக்கும் சரியா போயிடுச்சு. அப்புறம் அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை விட்டுத் தள்ளு.” என்று மித்ரன் கூற.
“மித்து சொல்றது சரி தான்டா. இனி நம்ம வேலையை நம்ம பார்க்கலாம்.” என்று ரகுலன் கூற.
“சரி!”என்று தலையாட்டிய யுகித்தின் முகம் தெளியவில்லை.
இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டே சென்றார் அவர்களது ப்ரபஸர் மதன்.
நண்பனின் முகத்தைப் பார்த்த தீபிகாவோ, அவனுக்காக வெண்ணிலாவிடம் பேச சென்றாள்.
“ஹாய் வெண்ணிலா!” என்றாள் தீபிகா.
‘ஓ காட்! யப்பா இந்த பிரச்சனைக்கு ஒரு என்டு கார்டே இல்லையா. இவங்க வேற எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே, “சொல்லுங்க அக்கா.” என்றாள் வெண்ணிலா.
“என்னது அக்காவா? என்னையப் பார்த்தா அக்கா மாதிரி தெரியுதா?” என்று படபடத்தாள் தீபிகா.
“ஓ! இதைக் கேட்க தான் வந்தீங்களாக்கா.” என்று நமட்டு சிரிப்புடன் வினவினாள் வெண்ணிலா.
“ப்ச்! மறுபடியும் அக்கானு சொல்ற. கால் மீ சீனியர்.”
“சீனியர்னா கொஞ்சம் கெத்தா இருக்கணும். உங்களைப் பார்த்தா க்யூட்டா பேபி மாதிரி இருக்கீங்க. பேபின்னு வேணும்னா கூப்பிடவா?” என்று பெரிய ஐஸ்பாரை தீபிகாவின் தலையில் வைக்க.
முகமெல்லாம் புன்னகை மலர, “உன் விருப்பம் வெண்ணிலா. நான் வந்ததே உன் கிட்ட மன்னிப்பு கேட்குறதுக்காகத் தான்.” என்ற தீபிகாவை அயர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.
‘இன்னும் இந்த மன்னிப்பு கேட்கும் படலம் எவ்வளவு நாள்தான் தொடருமோ? ‘ என்று எண்ணியவாறு நீங்க என்ன பண்ணீங்க பேபி.” என்று வினவினாள் வெண்ணிலா.
“சீரியஸ்லி அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு நான் தான் காரணம். நான் தான் அவசரப்பட்டு அந்த நோட்ஸை யுகி கிட்ட இருந்து வாங்கிக் கொடுத்தேன்.
எங்க யுகிக்கு மதன் சார்னா அவ்வளோ பிடிக்கும். நீ பாட்டுக்கும் எழுதி அவகிட்டே போய் கொடுத்துட்ட. அவர் யுகி கிட்ட உன்னால செய்ய முடியலன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானேன்னு சொல்லிட்டாரு. அதை அவனால டாலரேட் பண்ணிக்கவே முடியலை. அந்த கோவத்துல தான் உன்னை மறுபடியும் காலேஜ்லேயே நோட்ஸை எழுத வச்சான். இப்போ ரொம்ப ஃபீல் பண்றான்.”
“அதுக்கு நான் என்ன பண்றது?” என்று தீபிகாவை பார்க்க.
“அது வந்து யுகியை பார்க்குறதை அவாய்ட் பண்ணிடு. உன்னைப் பார்த்தாலே கில்டியா ஃபீல் பண்றான்.” என்ற தீபிகாவை ஆச்சரியமாக பார்த்தாள்.
‘ஓ காட்! இப்படியும் ஒருத்தி நண்பனுக்காக யோசிப்பாளா?’ என்பது போல் பார்த்தவள்,” ஓகே பேபி! உங்க ஃப்ரெண்ட் பக்கமே நான் வரல போதுமா!” என்றாள் வெண்ணிலா.
“தேங்க்ஸ் வெண்ணிலா!”என்றவள் சிட்டாக பறந்தாள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் எதற்கு? இவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா? விதி வலியது.
ஏற்கனவே யுகித் அவனது நண்பர்களுடன் பேசியதைக் கேட்டுச் சென்ற மதனோ, அன்றைய வகுப்பில் பாடம் நடத்தி முடித்ததும் யுகித்தை அழைத்தார்.
தலையை கோதியவாறே அவரைத் தொடர்ந்து சென்றான்.
ஆஃபிஸ் ரூமுக்கு செனாறவர், அவனை கூர்மையாக பார்த்தவாறே,” உன் கிட்ட இதை எதிர்பார்க்கல யுகித்.” என்றார்.
“என்ன சார் சொல்றீங்க?” என்று புரியாமல் வினவினான் யுகித்.
“நம்ம காலேஜ்ல சில ஸ்டூடன்ட் தெரிஞ்சும் தெரியாமல் நியூ ஸ்டுடென்டை ரேகிங் பண்றாங்கன்னு தெரியும். ஆனா என்னோட ஸ்டூடெண்டா இருந்து நீ பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை.”
“ சார்!” என்று அதிர்ச்சியாக மதனை பார்க்க.
“லுக் யுகித்! நம்ம காலேஜ்ல நீ தான் ரோல் மாடல். படிப்பு, விளையாட்டு, எக்ஸ்ட்ராகரிகுலர்னு எல்லாத்துலையும் டாப்ல இருக்க. இந்த சின்ன விஷயத்தால உன் நேமை ஸ்பாயில் பணாணிக்காதே. உன்னோட வெல்விஷரா உனக்கு அட்வைஸ் பண்றேன்.”
“சாரி சார்! இனிமேல் இப்படி நடக்காது” என்று கூறியவன், முகம் கருக்க வெளியே வந்தான்.
அங்கு நண்பர்களுடன் சேர்த்து பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவை பார்த்ததும் கோபம் பெருகியது.
‘இந்த சின்ன விஷயத்தை சார் வரைக்கும் எடுத்துட்டு போகணுமா?’ என்று அவளிடம் நேருக்கு நேராக கேட்க எண்ணி செல்ல.
அவளோ, ‘இவனைப் பார்த்ததும் எதுக்கு வம்பு.’ என்று நினைத்து அங்கிருந்து நழுவினாள்.
தன்னைப் பார்த்து தான் ஓடுகிறாள் என்று புரிய, கோபத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான்.
ஆஃபிஸ் ரூமிலிருந்து, லைஃப்ரரிக்கு செல்லும் வழியில் வரிசையாக மரங்கள் இருக்க.
அங்கே அவளுக்கு முன்பு நின்று கைகளை நீட்டி தடுத்தான்.
திடீரென்று தன் முன்னே நீண்ட கரத்தைப் பார்த்து பயந்த வெண்ணிலா, அங்கு யுகித்தைப் பார்த்ததும், “ நீங்களா சீனியர்? பயந்தே போயிட்டான்.”
“கொஞ்சாமாவது சீனியர்னு பயம் இருக்கா, இருந்திருந்தா என்னைப் பத்தி சார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருப்ப?” என்று கோபத்துடன் அவளை நோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தான்.
பயத்துடன் பின்னே நகர்ந்தாள் வெண்ணிலா.
அவளது கண்களில் பயத்தைப் பார்த்ததும், “ப்ச்!” என்று அப்படியே நின்றான் யுகித்
அதற்குள் அவள் மரத்தில் இடித்து கீழே விழ முயன்றாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்து விழாமல் தடுத்தணைத்தான் யுகித்.
அவளது இதயத்துடிப்பை உணர, பதறி விலகினான் யுகித்.’
அதே உணர்வு இப்பொழுதும் உடல் முழுவதும் வியாபிக்க, பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த யுகித்தின் கண் முன்னே சாட்சியாய் அந்த மரம் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது.
மான்ஸ்டர்-12
written by Competition writers
அத்தியாயம்-12
இங்கோ மார்ட்டின் தனது குறுகுறுத்த நெஞ்சையே வருடியவரே தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருந்தான்… “என்ன நேத்துல இருந்து என் நெஞ்சே சரியில்லையே…..” என்று வருடியவரை இருக்க… அப்போது தான் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே தான் இருந்தது
“ம்ச் இது என்ன வித்தியாசமா…”என்று தன்னையே நொந்துக்கொண்டவனுக்கோ அந்த வித்தியாசமான உணர்வு பிடிக்கவே இல்லை.. “ம்ச் இங்கையே இருந்தா கண்டதையும் யோசிப்போம்…”என்றவன் கிளம்பி வெளியில் வர…
“அந்த நெக் லாக்கெட் மட்டும் நம்ம திருடி கொடுத்தோம்னா கிட்டத்தட்ட எவ்வளவு மில்லியன் கணக்குல நமக்கு லாபம் வரும் தெரியுமா பாஸ்…. இதுவரைக்கும் பல கேங்ஸ்டர் க்ரூப்புக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டுச்சு… ஆனா அவங்க யாராலயுமே இதை செஞ்சு முடிக்க முடியல… ஏன்னா அந்த நிவாஸ் வீடு ஃபுல்லா எப்போதும் செக்யூரிட்டி நிறைஞ்சி தான் இருக்கும்… அதும் அந்த நிவாஸ் வேட்டை நாய் மாதிரி தன்னோட லாக்கெட் யாரு எடுத்தாங்களோ அவங்கள சும்மா விடமாட்டான்…. அதனால இது நமக்கு கூட கொஞ்சம் கஷ்டமா தான் பாஸ் இருக்கும்…” என்று கபீர் அந்த லாக்கெட்டை எப்படி திருடுவது என்பதை பற்றி சின்ன பிளானை ஒன்று போட்டு தன்னுடைய பாஸிடம் விளக்கிக் கொண்டிருந்தான்.
இதனை எல்லாம் கேட்டவாறு கம்பீரமாக உட்கார்ந்து இருந்த மார்ட்டினுக்கோ இன்னும் அவனது மார்பு குறுகுறுத்துக் கொண்டே இருப்பது போல தான் இருந்தது… அவன் நேற்று இரவு நேரத்தில் பப்பில் அந்த இளம் பெண்ணின் மீது மோதினானோ அன்றிலிருந்து அவன் நிலைப்பாடு இப்படித்தான் இருந்தது… “ஏன் இப்படி இந்த இடம் குறுகுறுத்துட்டே இருக்கு….” என்று தன்னுடைய மார்பினை வருட…
கபீரோ தான் விளக்குவதெல்லாம் விளக்கி விட்டு குனிந்து தன்னுடைய பாஸை பார்க்க அவனது முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளை பார்த்த கபீருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை… “பாஸு சரி இல்லையே… எங்கையோ இருக்குற மாதிரில இருக்கு..”என்று நினைத்தவன்…. “பாஸ் பாஸ்..” என்று அவன் தன்னுடைய பாஸினையே அழைத்துக் கொண்டு இருந்தான்.
மார்ட்டினோ ஏதோ பலவித சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தான். அவன் உடல் ஏதோ ஒரு போதைக்கு அடிமையானது போல அந்த பெண்ணவளின் மென்மையான உடல் பாகத்தில் குறுக்குறுத்து கொண்டே இருக்க… அது எதனால் என்று தான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. அன்று இரவிலிருந்து கூட அவனுக்கு அப்படித்தான் இருந்து கொண்டே இருக்கிறது…
இப்படியே நாட்கள் ஓட… அந்த பெண் அவனின் மீது மோதி கிட்டதட்ட ஒரு வாரம் ஓடிவிட்டது… ஆனாலும் இந்த ஒரு வாரம் அவனின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்… இரவு நேரத்தில் இப்போது எல்லாம் அவன் பம்பில் சென்று குடிக்கும்போது அந்த தன் மீது வந்து மோதிய பெண்ணவள் இருக்கிறாளா என்றுதான் அந்த இடம் முழுவதும் அலசி ஆராய்ந்து கொண்டே இருந்தான்.
“ம்ம்ம்ச்ச் அவ எப்படிடா இங்க இருப்பா… அவள தான் அன்னிக்கி தூக்கிட்டு போக சொல்லிட்டியே..” என்று அவனுடைய மடத்தனத்தை அவனது மனம் எடுத்துரைக்க… அதில் முதலில் யோசனையுடன் சுத்திக் கொண்டிருந்தவன் பின்பு தோளை உலுக்கியவாறே…
“ஏற்கனவே நமக்கு நிறைய பிரச்சனை இதுல இந்த பிரச்சனை வேறையா…” என்று தன்னை நிதானித்தவன்… “முதல்ல அவள விட்டு வெளியில வாடா…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்…. ஆனால் உண்மையிலே, சத்தியமாக இந்த உணர்வுகள் எல்லாம் அவனுக்கு புதிதாக தான் தோன்றி கொண்டே இருந்தது. ஏதோ புது வகையான ஒரு போதைக்கு அவன் உடல் ஏங்குவது போல ஒரு பிரம்மை… அவனின் இத்தனை வருட பிரம்மச்சரிய வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணை பார்த்தும் அவனுக்கு இப்படி தோன்றியது இல்லை… இத்தனைக்கும் அவன் மீது எந்த பெண்ணும் வந்து உரசாமலோ, மோதாமலோ இல்லை.. ஆனால் அப்படிப்பட்டவர்களை தன் கண் கொண்டு அனல் கக்க முறைத்தவாறு அவர்களை துரத்தி விடுபவனுக்கு அன்று எதார்த்தமாக தன் மீது மோதியவளையோ, தன்னை பின்னால் இருந்து அணைத்த அந்த பெண்ணவளை தான் அவனால் மறக்கவே முடியவில்லை…
“ஏதோ அவக்கிட்ட வித்தியாசமா இருக்கு…” என்று அவன் தன் எண்ணத்தை மாற்ற நினைத்துக் கொண்டே இருந்தாலும் முடியவில்லை…
தான் கேட்கும் கேள்விக்கோ.. தான் பேசுவதையோ தன்னுடைய பாஸ் கவனிக்காமல் இருப்பதையும், கிட்டதட்ட ஒருவாரமாக ஏதோ யோசனையிலையே இருப்பவனை பார்த்து கபீருக்கு ஒன்றுமே புரியவில்லை… அந்நேரம் பார்த்து கபீரின் போன் வேறு…
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று…
அது ஏனோ…. அது ஏனோ…
உன்னிடம் இருக்கிறது…
அதை அறியாமல் விடமாட்டேன்..
அதுவரை உன்னை தொட மாட்டேன்…” என்ற ரிங்டோன் வேறு இசைக்க… அந்த பாட்டின் வரியில் சட்டென்று நினைவுக்கு வந்த மார்ட்டினோ நிமிர்ந்து கபீரை முறைப்பாகப் பார்த்தான்…
கபீரோ தன்னுடைய பாஸின் முறைப்பை புரியாமல் பார்த்தவன்… “பாஸ் என் வைஃப் தான் கூப்புடுறா… பேசிட்டு வரேன்…” என்று கூறியவரே போனை காதில் வைத்துக் கொண்டு குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டு இருக்க… இதனை பார்த்தவனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது… அவனுக்கே நிறைய முறை தன்னை நினைத்து சந்தேகமாக தான் இருந்து கொண்டிருக்கிறது… எந்த பெண்ணை பார்த்தும் அவனுக்கு எந்த ஒரு உணர்வுகளும் தோன்றவே தோன்றாது… ஏன் அவன் முன்னால் எந்த பெண் வந்து உடைகள் இல்லாமல் நின்றாலும் அவனால் அதனை ரசனையாகவோ அல்லது அவளை புசிக்க வேண்டும் என்றோ அவனுக்கு தோன்றவே தோன்றாது… ஏன் அது போல் நடந்தும் இருக்கின்றது அவனுக்கு… ஆனால் அப்போதெல்லாம் அனல் தெறிக்க பார்த்து விலகி ஓடி வருவானே தவிர எப்போதும் அவன் பெண்களிடம் நெருங்கியதே இல்லை…
“ஒருவேளை நமக்கு அந்த பிரச்சனையோ…” என்று அவன் மனம் யோசிக்காமலும் இல்லை… ஆனால் அதற்காக மருத்துவமனைக்கு ஓடி சென்று தன்னை பரிசோதிக்கும் அளவுக்கு மார்ட்டினுக்கு இன்னும் அந்த அளவிற்கு தேவை வரவில்லை… “ம்ச் இந்த உலகத்துல பொண்ணுதான் பெருசா… பொண்ணுங்க கிட்ட இல்லாத சுகம் வேற எதிலுமே இல்லையா என்ன… அதெல்லாம் இல்ல அதெல்லாம் சும்மா கட்டுக்கதைங்க…” என்று புலம்பியவன் அதனை அடியோடு ஒதுக்கி விட்டு தான் சுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் இன்று அவனது உணர்வுகளோ தூண்டப்பட்டிருந்தது.. அதுவும் ஒரு சிறிய பெண்ணினால் தூண்டப்பட்டு இருந்தது.. அவளுக்கு தெரியாமல் தான் இது நடந்து இருந்தது.. மார்ட்டின் திரும்ப அந்த யோசனையிலையே இருக்க… “ம்ச் பாஸ் நான் சொல்றத கேக்குறீங்களா…” என்று மறுபடியும் கபீர் கேட்டான்…
அப்போது தான் நிகழ்வுலகத்திற்கு வந்த மார்ட்டினோ தன்னுடைய மூளை யோசிப்பதை நினைத்து கடுப்பானவன்… “சும்மா இருந்தா இப்படித்தான் ஏதாவது யோசனை தோனிக்கிட்டே இருக்கும்…” என்று தோன்றியவாறே,… “ம்ம்ச் சொல்லு கபீர் என்ன நீ தகவல் தரணும்…” என்று கேட்க.
கபீர் மறுபடியும் ஆரம்பத்தில் சொன்ன அனைத்து விஷயங்களையும் இப்போது கூறிக் கொண்டிருந்தான். அதனை எல்லாம் கேட்டவனோ… “ம்ச் இப்ப நீ என்ன சொல்ல வர இந்த ப்ராஜெக்ட் ரொம்ப கஷ்டம் சொல்ல வரியா இல்ல என்னால முடியாதுன்னு சொல்ல வரியா…” என்று வீறுக்கொண்ட சிங்கமாக கர்ஜித்தவாறே கேட்க…
கபீரோ அதில் திருத்திருத்தவன் “ஐயோ பாஸ் நான் அப்படியெல்லாம் சொல்லல…” என்று பதட்டமாக கூறினான்…
“ம்ம் வெல் வேற என்ன சொல்ல வர கபீர்…” என்று கேட்டவனோ… “ஸீ இந்த மார்ட்டினுடைய லைஃப்ல எதுவுமே முடியாதுன்றதே கிடையாது.. இந்த மார்ட்டின் கண்டிப்பா அதை முடிச்சு காட்டுவான்… அந்த நிவாஸ் இல்ல பெரிய டான்னே வந்தாலும் எனக்கு அத பாத்து பயமில்ல.. இந்த ப்ராஜெக்ட்ட நான் முடிச்சே ஆவேன்…”என்று கூறியவனோ… ஏதோ யோசித்தவாறே… “ம்ம்ம் அந்த நிவாஸோட வீட்ல எதுவும் ரீசண்டா பங்க்ஷன் வருதா..” என்று கேட்க.
கபீரோ புருவம் சுருக்கி யோசித்தவன் “ஆமா பாஸ்… அந்த நிவாஸ் இப்போ ரீசண்டா அஞ்சாவது முறையா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க இருக்கான்னு நம்ம அன்டர்க்ரவுன்ட்ல பேசிக்கிட்டாங்க..” என்று கூறினான்…
அதில் நக்கலாக சிரித்த மார்ட்டினோ… “ம்ம்ம் அஞ்சாவதா கல்யாணமா… வாவ் வன்டர்ஃபுல்…”என்று இதழ் சுளித்து சிரித்தவன்… “ம்ம்ம் இந்த ஒரு பங்க்ஷன் போதுமே கண்டிப்பா எப்படி இருந்தாலும் நமக்கு அந்த மேரேஜ்க்கு அழைப்பு வரும்ல…” என்று கபீரிடம் கேட்க…
“எஸ் எஸ் பாஸ்… கண்டிப்பா வரும் அதுவும் இப்போ அவன் ரீசண்டா முடிச்ச நாலு கல்யாணம் வரைக்கும் நம்ம இன்வைட் செஞ்சான்… ஆனா நம்ப தான் இதெல்லாம் தேவையில்லைனு அதுக்கு போகல…” என்று கூற
“ம்ம்ம் அப்ப இந்த முறையும் கண்டிப்பா நமக்கு இன்வைட் வரும்… அப்போ பார்த்துக்கலாம்.. நம்ம ப்ளான..” என்று கூற… கபீருக்கு தன்னுடைய பாஸ் இதில் தீவிரமாக இறங்கிவிட்டது நன்றாகவே தெரிந்து போனது…
“ஓகே பாஸ்…” என்று கூற… இன்னும் பல தகவல்களை கேட்டு தெரிந்துக்கொண்ட மார்ட்டின்.. அந்த சங்கீத்திற்கு தன்னை அழைத்து இன்விடேஷன் எதுவும் வருகிறதா என்று கபீரை பார்க்க சொல்ல… அது போல கபீரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தான்…
இங்கு மைத்துவோ அந்த இருட்டு அறையில் அழுகையில் தேம்பியவாறு இருக்க… திடீரென்று அந்த அறை திறக்கப்பட்டது.. அதில் பெண்ணவள் பயத்துடன் நிமிர்ந்து பார்க்க.. அங்கு 2 பெண்கள் அவளை பார்த்தவாறே வந்தவர்கள்… “ம்ம் மேடம் சார் உங்களுக்கு அளவு எடுத்துக்க சொன்னாங்க… உங்களோட சங்கீத்க்கு தேவையான டிரஸ் தைக்கணும் இல்ல..” என்று கூற மைத்துக்கோ இங்கிருந்து தப்பிக்க அவர்களிடமும் உதவி கேட்க மனம் பிராண்டியது.. ஆனால் இதற்கு முன்னால் தனக்கு உதவி செய்த அந்த பணியாளர் இறந்த குற்ற உணர்ச்சிலேயே இருந்த மைத்ரேயிக்கு இவர்களையும் சாகடிக்க மனமே வரவில்லை… மைத்ரேயி அப்படித்தான் எதற்கும் இளகிய மனம் கொண்டவள்… தன்னால் ஒருவர் துன்பப்படுவதை அவளால் தாங்க முடியாது.. அப்படி இருக்கும்போது தன்னால் ஒருவர் செத்துப் போவது எப்படித்தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியும்,,
அப்படியே அமைதியாக எழுந்து பொம்மை போல நிற்க… அந்த பெண்களோ இருவரும் தங்களுக்குள்ளே பார்த்தவாறே அவளை அங்க அளவுகளை அளந்து எழுதிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்… மைத்ரேயி கடனே என்று அப்படியே உட்கார்ந்து கொண்டவளுக்கு தன்னுடைய நிலையை நினைத்து மனம் வெம்பியது…
“இந்நேரம் அப்பத்தாவுக்கு என்ன ஆகி இருக்குமோ தெரியல… அப்பத்தாவை ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களானும் தெரியலையே…” என்று இப்போதும் அப்பத்தாவினை நினைத்து அழுது கொண்டே இருக்க.. நாளை அவளது வாழ்க்கையை திசை மாறி போகப்போகிறது என்பதனை அவள ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
(கேப்பச்சினோ…)
மான்ஸ்டர்-11
written by Competition writers
அத்தியாயம்-11
மார்ட்டின் தன் நெஞ்சில் பூப்போல வந்து மோதி நின்ற பெண்ணை கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்… மார்ட்டின் வழக்கம் போல அந்த வார இறுதியில் தன்னுடைய பப்பிற்கு வந்தவன் முழுதாக குடித்துவிட்டு தன்னுடைய பிஏ கபீரிடம் சில வேலைகளை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்புவதற்காக தள்ளாடிக்கொண்டே அந்த வராண்டாவில் வந்து கொண்டிருக்க…
அப்போதுதான் அவன் மீது பூப்போல வந்து மோதினாள் அந்த பெண்ணவள்… அவன் மீது மோதிய வேகத்திற்கு தன்னை சமாளிக்க முடியாதவளோ அப்படியே தரையில் விழுந்து விட… மார்ட்டினோ கொஞ்சம் தள்ளாடியவன் தன்னை சமாளித்தவாறே நிற்க… தன் நெஞ்சில் ஏதோ குறுக்குறுக்க… சட்டென்று அவன் கண்கள் கீழே விழுந்தவளையே விரித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒருவிதம் மயக்கம் இருந்தது.. ஏதோ புதுவித உணர்வின் தாக்கத்தில் அவன் முகம் சிவந்து போயிருந்தது..
அவனின் கைகளோ அந்த பெண் மோதிய தன்னுடைய நெஞ்சையே வருடிக் கொண்டிருக்க… ஆனால் அவளோ அதனை கவனிக்கும் சூழ்நிலையில் எல்லாம் இல்லை… அவளின் கண்களோ அந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்து மிரட்சியுடன் பின் தனக்கு பின்னால் திரும்பிப் பார்க்க… அங்கோ அவளை துரத்தி வந்து கொண்டிருந்த அந்த மூவருமே அவளைத்தான் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்…
“ம்ச் என்னடா பாக்குறீங்க.. டேய் போய் தூங்குங்க டா…” என்று ஒருவன் அதட்டலாக கட்டளையிட… அதனைக் கேட்ட மற்ற இருவரும் வேகமாக அவளின் அருகில் நெருங்க பார்க்க… பெண்ணவளோ அவர்களின் முயற்சியில் பயந்தவள் வேகமாக எழுந்தவள் ஓடிப்போய் மார்ட்டினின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.
மார்ட்டினோ அவளது செயலை தலையை மட்டும் திருப்பி கூர்மையான பார்வையுடன் தன்னுடைய கருப்பு நிற கோட்டை விரல்களால் பிடித்து இழுத்தவாறே தனக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு நிற்கும் பெண்ணவளையே திரும்பி ஒரு பார்வை பார்த்தவனுக்கு உடல் எல்லாம் ஏதோ சில்லென்று உணர்வாக இருந்தது.. இது அனைத்துமே புது உணர்வு தான் அவனுக்கு தோன்றியது… இதற்கு முன்னால் இப்படிப்பட்ட ஒரு உணர்வினை அவன் அனுபவித்ததே கிடையாது..
ஏதோ உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சுள்ளென்ற உணர்வு ஏறிக்கொண்டிருந்தது… அதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு தன் இரும்பு நெஞ்சத்தில் வந்து மோதிய பெண்ணவளின் மென்மையான பாகங்கள் அவனுக்கு ஒரு வித கிறக்கத்தை தான் ஏற்படுத்தியது… இது இதற்கு முன்பு வரை கூட “அப்படி என்னதான் இருக்கோ… இப்படி உரசிக்கிட்டு ஆடுறாங்களோ அப்படி அதுல என்னதான்டா இருக்கும்…” என்று தன்னுடைய பிஏவிடம் கேட்டு விட்டு வந்தவனுக்கு இப்போது பெண்ணவள் தன் மீது மோதியதிலிருந்து அந்த உணர்வுகள் அவனுக்கு புதிதாகத்தான் தெரிந்தது…
அவனுக்கு கண்டிப்பாக புதிதாக தான் தெரியும் ஏனென்றால் இதற்கு முன்பு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காமல் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இதற்கு முன்பு எந்த ஒரு சபலத்தாலும் எந்த ஒரு பெண்ணையும் நெருங்காதவனுக்கு இந்த சிறு பெண்ணவள் மோதல் ஒருவித கிறகத்தையும், புத்துணர்வையும் தான் கொடுத்தது… ஆனால் அதனை முகத்தில் காட்ட அவன் ஒன்னும் சாதாரண மனிதன் அல்லவே… தன் இரும்பு கைகளை மடக்கியவாறு அப்படியே நின்றவன் அவனை நோக்கி வரும் இருவரையும் வெறிகொண்டு முறைக்க…
அப்போதுதான் அவர்கள் அவனது முகத்தையே தெளிவாக பார்த்தனர்…. அந்த ஹோட்டலின் காரிடார் முழுவதும் இருட்டாகவே இருக்க.. இதற்கு முன்பு அவர்கள் மார்ட்டினை பார்த்திருப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் தான் இருந்தது… ஆனால் இப்போது நன்றாக மார்ட்டினின் முகம் தெரிய… அந்த இருவருக்கும் அவனை பார்த்த வேகத்திற்கு உடல் தடதடக்க ஆரம்பித்துவிட்டது…
மார்ட்டினை பற்றி தெரியாதவர்கள் அந்த மும்பையில் இருப்பார்களா என்ன… அந்த மும்பையை பாதியை ஆட்சி செய்வதே அவன் தானே.. அதனால் இருவரும் அவனை பார்த்த வேகத்திற்கு கிடுகிடுவென்று ஆடிக் கொண்டிருக்க..
“ம்ச் டேய் என்னடா வந்த வேலைய முடிக்காம இப்படி நின்னுகிட்டு இருக்கீங்க… போய் அவள இழுத்துட்டு வாங்கடா…” என்று பின்னால் இருந்து ஒருவன் கத்த… அவனுக்கு கண்டிப்பாக மார்ட்டினின் முகம் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை… சட்டெப்று இருவரும் திரும்பி அவனை முறைத்து பார்த்தவர்கள்… “இங்க வந்து பாருடா யாருன்னு…” என்று கத்த..
“ம்ச் அப்படி யார்ரா அது..”என்று வேகமாக வந்தவனுக்கு மார்ட்டினை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை… அவனின் இருக்கமான முகம் அந்த அவனுக்கு பீதியை தான் கிளம்பியது…
“ஜீ..” என்று பதறியவனோ சட்டென்று மார்ட்டினின் காலடியில் போய் உட்காந்து விட… இதனை யார் கவனித்தார்களோ இல்லையோ அவனுக்கு பின்னால் கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் பார்வையில் இதெல்லாம் ஆழமாக பதிந்து போனது.
ஒரு நிமிடம் அவளது பூப்போன்ற இதழ்கள் குருவி வாயை போல பிளந்துக் கொள்ள… மார்ட்டினும் இப்போது அவளை தான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்… அவனது கண்கள் அவனையும் மீறி அவளது பிளந்த வாயிலேயே போய் நிற்க.. அவனது உடல் எல்லாம் ஜிவ்வென்று ஏறியது.. ஆனால் அந்த உணர்வினை மார்ட்டின் அடியோடு வெறுத்தான்.
சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டவனோ தனக்கு பின்னால் நின்று கொண்டு உரசிக்கொண்டு நிற்கும் பெண்ணவளை எரித்த பார்வை பார்த்தவன்… “இடியட்… அறிவில்ல…” என்று வேகமாக கத்த..
அதில் அதிர்ந்த பெண்ணோ சட்டென்று அவனை விட்டு பின்னால் நடக்க… ஆனால் ஒரு அடி தான் பின்னால் நகர்ந்து இருப்பாள் முழுதாக அவனை விட்டு நகர அவளுக்கு என்ன பைத்தியமா? இதுவரை அங்கு நடக்கும் அனைத்தையும் அவள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. மார்ட்டினை பார்த்து அந்த மூவரும் மிரண்டு போய் நிற்பதும் அந்த பெண்ணவளின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது….
“ஜீ…” என்று அந்த மூவரும் சட்டென்று அவனுக்கு முன்னால் மண்டி போட… அவர்களை எரிப்பார்வை பார்த்தவன்… “திஸ் இஸ் மை ப்ளேஸ்…. இந்த பப்குள்ள உங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாது… பஸ்ட் அவுட்….” என்று ஆத்திரமாக கத்த… அதில் அந்த மூவரும் மிரண்டே போனார்கள்…
“தெரியாம வந்துட்டோம் ஜி எங்களை மன்னிச்சிடுங்க…” என்று அவர்கள் பயத்துடன் கூற…
“ம்ம்ம்….”என்ற மார்ட்டினோ அங்கிருந்து வேகமாக கிளம்ப முயல…. அதில் சட்டென்று அவனது கோட்டை இறுக்க பிடித்துக் கொண்டாள் அவள்…
“சார் ப்ளீஸ் சார்…” என்று அவள் பாவமாக கெஞ்ச…
அதனைக் கண்ட மார்ட்டினோ முகத்தை கற்பாறையாக இறுக்கியவன் வெடுக்கென்று தன் கோர்ட்டில் இருந்து அவள் கையை தட்டிவிட்டவன் அவளை அனல் பார்வை பார்த்தான்… அவனுக்கோ அவள் மார்ட்டினின் நெஞ்சில் அளவில் மட்டுமே தான் இருந்தாள்…. அவள் கெஞ்சலாக மார்ட்டினை பார்த்துக் கொண்டிருக்க மார்ட்டினோ அவளை நீ யார் என்பது போல பார்த்தவன்…
“உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… எதுக்காக நான் உன்னை சேவ் பண்ணனும் ..”என்று எடுத்தெறிந்து பேசியவன்.. மறுபடியும் அந்த மூவரையும் திரும்பிப் பார்த்து “மறுபடியும் சொல்றேன் இது என்னோட பப்… இங்க வேற சம்பவமும் நடக்கிறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்… எதுனாலும் வெளில வச்சுக்கோங்க…” என்று படார் என்று உரைத்தவன் வேகமாக அந்த சிறு பெண்ணை திரும்பி பார்க்காமலேயே அந்த பப்பினை விட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்து விட்டான்…
“டேய் அதான் சொல்லிட்டாருல.. தூக்குங்கடா அவள…”என்று அந்த மூவரும் அவளை நோக்கி நெருங்க…
மார்ட்டினின் செயலில் அதிர்ந்து போன பெண்ணவளோ அவர்கள் தன்னை நெருங்குவதை பார்த்து மிரண்டவள்… “சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்… காப்பாத்துங்க சார்…” என்று மைத்ரேயியும் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தாள்… ஆனால் அவளால் முடியவில்லை… சட்டென்று அந்த மூவரும் அவளை இறுக்க பிடித்துக் கொண்டவர்கள்….
“டேய் சீக்கிரம் இவள தூக்குங்கடா… இந்த இடத்தை விட்டு சீக்கிரம் வெளியில் போய்டனும்டா…” என்று பரபரப்பாக கத்த…
அதிலேயே மற்றவர்களும் தலையாட்டியவர்கள் பெண்ணவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்…, “அண்ணா ப்ளீஸ்ண்ணா… என்ன விட்டுடுங்கண்ணா… நான் எங்கையாச்சும் ஓடிடுறேண்ணா… என்ன விடுங்கண்ணா…” அவர்களிடம் கெஞ்சி கதறி கூப்பாடு போட… ஆனால் அவர்களோ அதனை கேட்டு மனமிறங்கவே இல்லை..
இங்கு மார்ட்டினோ காரில் ஏறி உட்கார்ந்தவனுக்கு ஏதோ அவனின் நெஞ்சம் குறுகுறுவென்று குறுக்குறுத்தது.. அவன் மனம் படப்படத்து கொண்டே இருக்க அதனை வருடியவாறு இருந்தவனுக்கு கொஞ்சமும் காரினை ஓட்டும் நிதானம் எல்லாம் இல்லவே இல்லை…அவன் வழக்கமாக குடிக்கும் அளவை கூட இன்று குடிக்கவில்லை கம்மியாகத்தான் குறித்து இருந்தான்… ஆனால் ஏதோ ஒன்று அவனின் நெஞ்சை அழுத்துவது போல இருக்க.. அந்த அழுத்தம் தாங்காதவனோ அப்படியே ஸ்டேரிங்கில் தலை வைத்து படுத்துக்கொண்டு இருந்தவனின் கண்களுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தன்னை கெஞ்சலாக பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் முகம் தான் வந்து சென்றது… அதனை கண்டு வேகமாக தலையை குலுக்கியவன்….
“ஓஓஓ சேட்… வாட் ரப்பிஸ் திஸ்… யாருனே தெரியாதவ ஏன் என் கண்ணு முன்னாடி வந்து போறா…” என்று தலையை உலுக்கியவன் வேகமாக காரினை எடுத்துக்கொண்டு தன் வீட்டினை நோக்கி பறந்து விட்டான்…
இங்கு அந்த பெண்ணை மறுபடியும் அந்த அரக்கனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்…
மைத்ரேயியோ தனக்கு முன்னால் வெறி கொண்ட சாத்தானாக முறைத்தவாறே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் அதை நிவாஸினையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்…
அவனோ இவளையே அனல் கக்க பார்த்துக்கொண்டிருக்க… தைரியத்தை வரவழைத்துக்கொன்ட பெண்ணவளோ… “ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க சார் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே சார்.. ஏன் சார் என்ன டார்ச்சர் பண்றீங்க… நான் உங்க பொண்ணு மாதிரி சார்… என்னை விட்ருங்க சார் நான் எங்கேயாவது போய்டுறேன்… உங்க கண்ணுல கூட இனி விழ மாட்டேன்… இந்த ஊரை விட்டு ஓடிடுறேன் சார் ப்ளீஸ்…” என்று அழுதவாறே கெஞ்சி கொண்டே இருக்க…
அந்த நிவாஸோ அதனை எல்லாம் காதில் வாங்குவதாக இல்லை. அவனின் கண்கள் அவளையே படிப்படியாக அளந்து கொண்டிருக்க… அதில் பெண்ணவளுக்கு இன்னும் பயம் ஏறத்தான் செய்தது.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ பாதுகாப்பு போட்டும் இந்த வீட்டை விட்டு வெளில ஓடி இருப்ப…” என்று நிவாஸ் அவளுக்கு முகத்திற்கு நெருக்கமாக தன்னுடைய முகத்தை கொண்டு வந்தவாறே பேச…
அவளோ பயத்தில் தன் முகத்தை பின்னால் நகர்த்தி கொண்டு சென்றவளுக்கு இதன் பிறகு எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்றே தெரியவில்லை… தனக்காக அழகாக ஒரு வாய்ப்பு கிடைக்க அதனையும் அப்படியே கோட்டை விட்டுவிட்டு மறுபடியும் இந்த கொடூரனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நினைத்து பெண்ணவளுக்கு கதறி அழத்தான் தோன்றியது..
“ஏன் பேபி என்ன உனக்கு புடிக்கல…” என்று அந்த நிவாஸ் கோவத்தில் கத்தி கொண்டு இருக்க… மைத்துக்கோ அந்த குரலை கேட்க கேட்க உடல் தூக்கிப் போட்டது… அன்னையும் இல்லாமல் தந்தையும் தன்னை கவனிக்காமல் புத்தம் புதுசாக வாழ்க்கையை அமைத்து போக… ஏனோ தானோ என்று அன்பிற்கு ஏங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு வாழ்க்கை எவ்வளவு மோசமாக அடி கொடுத்திருக்கக் கூடாது என்றுதான் அவளுக்கு இந்த நிமிடம் வரை தோன்றிக் கொண்டே இருக்கிறது…
“ஏன் ம்மா என்ன விட்டுட்டு போன.. பேசாம அப்போவே என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல…” என்று இந்த குழந்தை பெண் இப்போதும் தன் அன்னையை நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்க.. ஆனால் அவளுக்கு முன்னாள் நின்று இருந்தவனுக்கு அவள் ஒரு சதை பிண்டமாக தான் தெரிந்தாள்…
“இங்க இவ்வளவு பெரிய சொத்து இருக்கு… இதுக்கு வாரிசா இருக்கிறதுக்கு ஒரே தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு… கூடிய சீக்கிரம் நமக்கு கல்யாணம் நடந்துரும்… இன்னும் நாளு நாளுல குருஜி டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்காரு நமக்கு மேரேஜிக்கு… அதுக்குள்ள இப்படி வீட்டை விட்டு ஓடிப் போக பாத்திருக்கியே செல்லம்…” என்று அவளின் கண்ணத்தை பிடித்து கிள்ளியவனை கண்டு அருவருத்து போனாள் மைத்து..
“இன்னொரு தடவை இந்த வீட்டை விட்டு ஓடனும்னு நீ நெனச்சனா…” என்று ஒரு மாதிரி மிருகம் போல கண்கள் பளப்பளக்க கத்தியவானோ… பின்னால் திரும்பி தன் ஆட்களை பார்த்து.. “ம்ம்ம் கொண்டு வாங்க அவனை…” என்று ஆக்ரோஷமாக கத்த… அடுத்த நிமிடம் இவளை காப்பாற்றி வெளியில் அனுப்பி வைத்த பணியாளரை நான்கு பேர் அல்லேக்காக அதே நேரம் பிணமாக அந்த ரூமுக்கு எடுத்து வர….
அதனை பார்த்தவளுக்கு அது யாரென்று விளங்கி போனது… “ஆஅ ஐயோ அவரை விட்டுருங்க ப்ளீஸ்…” என்று கதறிக் கொண்ட கிடக்க… அதனை பார்த்த நிவாஸீற்கு குதுக்கலமாக இருந்தது.. பெண்ணவளோ தன்னால் ஒருவன் சாக கிடைப்பதை பார்த்து கண்ணீர் வடிக்க….
ஆனால் அதனை கேட்க தான் மனிதர்கள் என்று அங்கு யாருமே இல்லை… நிவாஸ் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தவர் “இவன்தானே உன்ன காப்பாத்துனவன்…”என்றவனோ… “ம்ச் ஆனா நீ கதறுறத பாக்க பாவம் அவன் உயிரோட இல்லயே..” கூறியவாறு தன் பாக்கெட்டில் இருந்த போதை வஸ்துவை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள…
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவளோ அந்த பணியாளரின் உடலை பார்த்து பார்த்து அலறலாக அலறிக் கொண்டே இருந்தாள்… அவள் வாயை சட்டென்று பொத்திய நிவாஸோ “எனக்கு இப்படி எல்லாம் கத்துனா பிடிக்காது பேபி….” என்று கூறியவன்…
“உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான்… அதுவும் என்னை மேரேஜ் பண்ணிக்கிறது மட்டும்தான்… பேசாம வாய மூடிட்டு அடக்கமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ராணி மாதிரி இந்த வீட்டுல இரு… அத விட்டுட்டு ஓடனும்னு நெனச்ச…” என்று மிரட்டியவனை கண்டு அவளுக்கு அழுகை கதறலாக வந்தது..
“சார் ப்ளீஸ் சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… உங்களுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப ஜாஸ்தி சார் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார்…. உங்க பொண்ணு மாதிரி சார் நானு..” என்று மைத்து கெஞ்ச ஆரம்பிக்க…
அதில் இல்லை என்று தலையாட்டியவனோ அவனின் முடிவில் உறுதியாக இருந்தான்… “எனக்கு பொண்ணும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. சொல்ல போனா எனக்கு வாரிசே கிடையாது.. அதுல எனக்கு எந்த விருப்பமும் கிடையாது…” என்று கூறியவனோ… “உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதுவும் உன்னுடைய இளமையும், அழகும்….”என்று அவளது கன்னத்தில் தன் விரல்களை வைத்து ஒரு கோடு போட அவளின் உடல் அறுவறுத்து போனது.
“என்னை அப்டியே பித்து செய்யிது…“என்றவன்… “நீ எவ்வளவு கெஞ்சினாலும் கதறுனாலும்.. உன்ன காப்பாத்த யாரு வந்தாலும் நீ இங்க இருந்து தப்பிக்கவும் முடியாது.. இங்கிருந்து வெளில போகவும் முடியாது பேபி..” என்று கூறியவனோ “பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ரெடியாகு…” என்று கடைசியில் கூறிவிட்டு அந்த இடத்தினை விட்டு வெளியேறி விட்டான்… அன்றிலிருந்து மைத்ரேயி அந்த இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதவாறு இருப்பதை தவிர வேறு வழியும் அவளுக்கு கிடைக்கவில்லை..
(கேப்பச்சினோ….)
மின்சார பாவை-8
written by Competition writers
மின்சார பாவை-8
அன்னையின் பேச்சு வந்ததும் முகம் இறுகிய வெண்ணிலா ஒரு நொடியில் முகத்தை மாற்றியதும் இல்லாமல், பேச்சையும் மாற்றினாள்.
“ஹேய்! இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. வாங்க உள்ள போகலாம். என் பேபியை வேற சமாதானப்படுத்தணும்.”என்றவாறே அந்த திட்டிலிருந்து குதித்தாள் வெண்ணிலா.
“உன் மேல கோவமா இருக்காங்க போல. அப்புறம் ஏன் நீ அவங்க பின்னாடி போற?” என்று சபரீகா வினவ.
“என் பேபி என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கணும்.”
“ம்! உன் பேபிக்கே பேபி வந்துடுச்சு. காலேஜ்ல டாப்பர் அப்படி, இப்படின்னு சீன் போட்டுட்டு இருந்த மேடம், இப்ப வேலைக்கு போகலை. வீட்ல தான் ஃபேமிலிய பார்த்துட்டு குடும்பஸ்தீரியா இருக்காங்க.” என்று மஹதி கூற.
“ஓ! ஆனால் பேபிக்கு நிறைய கனவுகள் இருந்துச்சே.” என்ற வெண்ணிலாவிற்கு தீபிகாவை நினைத்து சற்று வருத்தமாக இருந்தது.
“தீபிகா போல தான் நிறைய பேர் வேலைக்கு போகல ஆனா ஆவேரேஜா படிச்சவங்க எல்லாம் கம்பெனில ஒரு நல்ல பொசிஷன்ல இருக்காங்க.” என்றாள் சபரீகா.
“ம்! இதுல இருந்து ஒன்னுத் தெரியுது, படிப்பு, படிப்புன்னு காலேஜ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணாதவங்கள விட, ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணவங்க தான் லைஃப்ல நல்லா செட்டிலாயிருக்காங்க. சரி நான் போய் என் பேபிட்ட பேசிட்டு வர்றேன். நீங்களும் வர்றீங்களா?” என்று தனது நண்பர்களிடம் வினவ.
“ஐயோ!அவங்க லெட்ச்சரை கேட்க நான் வரலை. நான் கேண்டினுக்கு போறேன்.” என்று முதல் ஆளாக நகுலன் மறுக்க.
“ஏன் டா! இன்னும் அந்த அக்கா, உன்னைப் பார்த்தா அட்வைஸ் பண்றதே விடவே இல்லையா” என்று அவனது தோளில் தட்டியபடியே ஹரிஷ் வினவ.
“ஆமாம் டா! அந்தக் கொடுமை ஏன் கேக்குற. நான் என்னவோ அவங்களோட குட்டித் தம்பி போலவே ட்ரீட் பண்ணுறாங்க. எங்க அண்ணன் அட்வைஸ் பண்ணாலே நான் கேட்க மாட்டேன்னு அவங்கக் கிட்ட யார் சொல்றதுன்னு நகுலன் புலம்ப.
“சரி விடு மச்சி! நிலா நீ போய் பேசிட்டு வாம்மா. நாம எல்லோரும் கேண்டீன் போவோம். நீ தான் செலவு பண்ணனும். உன்னை காப்பத்த தான் நாம அங்கப் போறோம்.” என்று ஹரிஷ், நகுலனை இழுத்துக் கொண்டே செல்ல.
“டேய் ஹரி! கஞ்ச பிசி! நீ மாறவே இல்லை டா. நீ இப்போ மன்திலி ஒன் லக் இயர்ன் பண்ணுற.அப்புறமும் ஏன் டா இப்படி இருக்க.” என்ற சபரீகா அவன் பின்னே செல்ல.
அவர்களைப் புன்னகையுடன் பார்த்தவாறே, தீபிகாவைத் தேடி கல்லூரிக்குள் நுழைந்தாள்.
வழக்கம் போல லைப்ரரிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய மரத்தடியில் தான் நின்றுக் கொண்டிருந்தாள் தீபிகா.
அவளருகே மித்ரன் கையில் குழந்தையுடன் இருந்தான்.
ரகுலனை காணவில்லை. இவள் அவர்களை நோக்கிச் செல்லும் போதே அவசரமாக அங்கிருந்து நழுவியது போல் தோன்றியது.
“பேபி!” என்றவாறே வெண்ணிலா தீபிகாவின் அருகே செல்ல. அவளோ, முறைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
“வாட் பேபி? உன்னைப் பார்க்க ஆசையா வந்தா, இப்படி முகத்தை திருப்பிட்டு போற? என் மேல என்ன கோவம்?” என்று அவள் முகத்தைப் பிடித்து கொஞ்சியவாறே வினவினாள்.
“நான் கோபமாக லாம் இல்ல. கொலைவெறியில இருக்கேன். பேசாம ஓடிடு.”
“ அப்படி நான் என்ன பண்ணேன் பேபி.”
“நீ என்ன பண்ணேன்னு உண்மையா உனக்குத் தெரியாதா?”
“தெரியாது.” என்பது போல் தோளைக் குலுக்கியவள், அவளுக்கு பக்கத்தில் அழுதுக் கொண்டிருந்த குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மித்திரனை பார்த்து புன்னகைத்தவள், “ஹாய் சீனியர்! எப்படி இருக்கீங்க? இது யார் குழந்தை?” என்று வினவியவள், குழந்தையின் கன்னத்தை கொஞ்ச, அந்தக் குழந்தையோ வெண்ணிலாவிடம் தாவியது.
“ ஹாய் குட்டிமா! எதுக்கு அழறீங்க?” என்று வினவ.
அந்தக் குழந்தையோ அரிசிப்பல் தெரிய சிரித்தது.
“ஸ்வீட் குட்டிமா! நீங்க பேபியோட பேபி தானே. அப்படியே பேபி மாதிரியே இருக்கியே?” என்று அவளே அவளது கேள்விக்கான விடையையும் கண்டுப்பிடித்திருந்தாள்.
மித்ரனும், தீபிகாவும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்த குழந்தையோ, அழுகையை நிறுத்தி வெண்ணிலாவுடன் ஐக்கியமாகிருந்தது.
“குட்டிமா என்னோட வர்றியா? எங்க வீட்ல ஒரு குட்டி அக்கா உன்னை மாதிரி க்யூட்டா இருப்பா. அவளோட விளையாடலாம்.” என்று கொஞ்ச.
அதைக் கேட்டதும், மறுபடியும் தீபிகாவின் முகம் மாறியது.
“அவ எங்கேயும் வர மாட்டா?”என்றவாறே குழந்தையை அவளிடம் வாங்கி மித்ரனிடம் நீட்டினாள் தீபிகா.
“உனக்கு எப்பவும் என்னை விட உன் ஃப்ரெண்டை தான் பிடிக்கும்.” என்று குரல் கம்ம வெண்ணிலா கூற.
“எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான். நீ லைஃப்ல செட்டிலாகிட்ட. அவன் பாவம் உன்னை காதலிச்ச பாவத்துக்கு சிங்கிளா சுத்துறான்.”
“வாட்? உன் ப்ரெண்ட்டு சிங்கிள்னு உனக்கு யாரு சொன்னா?” என்று வெண்ணிலா வினவ.
“ம் அவன் எனக்கு மட்டும் இல்லை, ஊருக்கே சொல்லிட்டிருக்கான். பேஸ்புக்ல எல்லாம் நீ இல்லையா? அதுல சிங்கிள்னு ஸ்டேட்டஸ் போட்டுருக்கான்.” என்று முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு தீபிகா கூற.
“பேபி! சிங்கிள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களை நம்பாதே. யார் கண்டா, உன் தோஸ்த்து ஃபாரின்ல யாரோடனோ ஜோடி போட்டு சுத்திகிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு.”என்ற வெண்ணிலாவின் முதுகிலே மொத்தினாள் தீபிகா.
“வாவ் பேபி! உன் கையால அடி வாங்கி எவ்வளவு நாள் ஆச்சுத் தெரியுமா?” என்று சிரித்தாள் வெண்ணிலா.
“சிரிக்காதே நிலா! நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.”
“இட்ஸ் ஓகே பேபி. நீ சீரியஸா இரு. அதுக்காக நான் சிரிக்காம இருக்க முடியுமா?”
“பாவம் யுகி.” என்று இன்னும் அவளது நண்பனுக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் தீபிகா.
“அவ்வளவு அக்கறை இருக்குறவ, நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.”
“ நான் கேட்டேன். யுகி தான் ஒத்துக்கல.” என்ற தீபிகாவை,
விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
அவள் உண்மையாகத் தான் கூறுகிறாள் என்பது புரிய, “, நல்லவேளை உன் வீட்டுக்காரர் வரலை. இல்லைன்னா அவ்வளவு தான். ஃப்ரெண்ட் மேல நாங்களும் தான் பாசம் வச்சுருக்கோம். ஆனாலும் உன் அளவுக்கு கிடையாது.” என்றவளைப் பார்த்த தீபிகாவோ, “என் வீட்டுக்காரர் வரலைன்னு யார் சொன்னது.”என்றாள்.
“பேபி! அவரு எங்க இருக்கார்? அவரையும் வச்சுக்கிட்டு தான் இப்படி உளறிட்டு இருக்கியா?” என்று வெண்ணிலா கடிந்துக் கொள்ள.
“பயப்படாதே வெண்ணிலா. அடியேன் தான் அவளுக்கு கிடைச்ச அடிமை” என்று குழந்தையையும் வச்சுட்டு இடைவரை குனிந்த மித்திரனைப் பார்த்ததும் விழுந்து, விழுந்து சிரித்தாள் வெண்ணிலா.
“எதுக்குமா இப்படி சிரிக்கிற?” என்று பாவமாக மித்ரன் வினவ.
“சாரி சீனியர்!” என்ற வெண்ணிலாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“ஹேய் எருமை! உதை வாங்கப் போற.”என்று மித்ரனின் முகம் போகும் போக்கைப் பார்த்து, தீபிகா வெண்ணிலாவை அடக்கப் பார்த்தாள்.
“அது வந்து சீனியரை காலேஜ்ல எல்லாரையும் மிரட்டி விரட்டின்னு கெத்தா பார்த்துட்டு, இப்போ உனக்கும், உன் மகளுக்கும் பேக் தூக்கிட்டு இருக்குறதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு.”
“மித்து மட்டும் இல்லை, கல்யாணமாகிட்டா எல்லாரும் அப்படித்தான்.”என்று தீபிகா கூற.
“ அதுவும் சரிதான். எங்க மாமா கூட அப்படித்தான்.” என்றவளது கண்கள் கனிந்தது.
“எப்படி நிலா யுகியை இவ்வளவு ஈஸியா தூக்கிப் போட்டுட்ட அதுவும் தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்தவனை,
துரத்தி துரத்தி லவ் பண்ணிட்டு, இப்போ ஈஸியா கடந்து போயிட்டுருக்க.”
“இந்த உலகத்துல எவ்வளவோ பேர் லவ் பண்றாங்க. ஆனால் எல்லாரோட லவ்வும் சக்ஸஸ் ஆகுறதில்ல. அது போலத் தான் என் காதலும் முடிஞ்சிருச்சு. சரி என் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் வரேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தவளோ, மனதிற்குள் யுகித்தை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
‘எல்லாம் அந்த வளர்ந்து கெட்டவனை சொல்லணும். நான் துரத்தி துரத்தி லவ் பண்ணினேனாம். இந்த உலகம் இப்படித்தான் நம்பிட்டு இருக்கு போல. எல்லாத்துக்கும் அந்த தடிமகடு தான் காரணம்.’ என்று எண்ணியவள், பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.
அன்று (காதல் பண்ணியது)
சீனியர் கொடுத்த நோட்ஸை எழுதி முடித்து விட்டு தாமதமாக வீட்டுக்கு கிளம்பியவளிடம் துணைக்கககூட வருவதாக நகுலன் கூற.
“வேண்டாம்! “ என்று மறுத்து விட்டு கிளம்பிய வெண்ணிலாவை எதிர்கொள்ள அவளது அன்னை கமலி வெளியிலே காத்திருந்தார்.
“அம்மா!” என்று வெண்ணிலா ஏதோ கூற முற்பட.
“ நில்லுடி! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நீயும் என்னை கழுத்தறுக்கணும்னு முடிவு பண்ணிட்டியா?” என்று கமலி ஆங்காரமாக கத்த.
“அம்மா எதுக்கு மா சத்தம் போடுறீங்க. உள்ள போய் பேசலாம்.”
என்று உள்ளே நுழைய முயன்றாள் வெண்ணிலா.
“ஏன் அதுக்குள்ள ஏதாவது பொய் சொல்ல காரணம் தேடலாம்னு பார்க்குறியா?”என்றவரை, அயர்ந்து போய் பார்த்தாள் வெண்ணிலா.
இந்தப் பார்வைக்கெல்லாம் அசர மாட்டேன் என்பது போல் கமலி நிற்க.
வெண்ணிலா தான் இறங்கி வந்தாள்.
“அசைன்மென்ட் இருந்துச்சு மா. முடிச்சிட்டு வர லேட்டாகிடுச்சு.”
“ பொய் சொல்லாதே! எந்த காலேஜ்ல காலேஜ் ஆரம்பிச்ச உடனே அசைன்மென்ட் தரப்போறாங்க.”
“ அம்மா உண்மையா தான் சொல்றேன்.”
“அப்படியா அப்போ நாளைக்கு நீ காலேஜுக்கு போகும் போது நானும் வரேன். உங்க பிரின்ஸிபல் கிட்ட கேட்போம்.” என்று கூற.
“அது வந்துமா…”என்று வெண்ணிலா மென்று முழுங்க.
“நீ பொய் சொல்றேன்னு நல்லாவே தெரியுது. உங்கள பெத்து வளர்த்து படிக்கிறதுக்கு காலேஜுக்கு அனுப்புனா, நீங்க எங்களை ஏமாத்தணும்னு நினைக்கிறீங்க. ஒருத்தி தான், மூஞ்சில கரியை பூசிட்டு போயிட்டா, நீயாவது எங்கப் பேச்சை கேட்பேன்னு பார்த்தேன். ஆனா நீ அவளுக்கு மேல இருக்க. காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்துலேயே ஊர் சுத்த கிளம்பியாச்சு.” என்று படபடக்க
“அம்மா! நான் பொய் சொல்லல. காலேஜ்ல இருந்து தான் வர்றேன். சீனியர் ஸ்டுடண்ஸ் ராகிங் பண்ணாங்க. அவங்க குடுத்த அசைன்மெண்ட்ட எழுதி முடிச்சுட்டு தான் போகணும்னு சொன்னாங்க. அதான் லேட்டாகிடுச்சுமா.”
“மறுபடியும், மறுபடியும் பொய் சொல்லாதே. உங்க காலேஜ்ல ராகிங் எல்லாம் கிடையாதுன்னு நல்லா விசாரிச்சு தானே உன்னை சேர்த்தோம்.” என்று வீட்டுக்கு வெளியிலே ஒரு மணி நேரமாக அவளை நிற்க வைத்து, கமலி அவர் பாட்டுக்கும் பேசிக் கொண்டிருக்க.
அக்கம், பக்கம் உள்ளவர்களின் பார்வையில் கூனிக்குறுகி போனவள், இவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று புரிய, “சாரிமா! இனி மேல் லேட்டா வர மாட்டேன்.” என்று இயந்திரத்தனமான குரலில் கூறினாள் வெண்ணிலா.
உள்ளே
“இனியாவது புத்தியோட நட!” என்று ஒரு வழியாக வெண்ணிலாவை உள்ளே விட்டார் கமலி.
இவ்வளவு நேரம் நடந்த நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தந்தையை வெறுப்புடன் பார்த்தவாறே, தனதறைக்குள் நுழைந்தாள் வெண்ணிலா.
“சாப்பிடுமா!” என்றார் முகுந்தன்.
“பசிக்கலை.” என்று முணுமுணுத்து விட்டு அங்கிருந்து நகர முயன்றாள் வெண்ணிலா.
“ஹேய் நிலா! திமிரா? அப்பா கூப்பிட, கூப்பிட நிற்காமல் போற. முதல்ல சாப்பிடு. அப்புறமா போய் உன் இஷ்டத்துக்கு என்னமோ பண்ணிட்டு இரு.” என்று கமலி திட்ட
கண்கள் கலங்க, வேண்டா வெறுப்பாக அமர்ந்து உணவை வாயில் அள்ளிப் போட்டு எழுந்தாள் வெண்ணிலா.
“சும்மா ஃபோனையே நோண்டிட்டே இல்லாமல் படிக்குற வேலை இருந்தா பாரு. யார் கிட்டையாவது பேசுவது தெரிஞ்சது தொலைச்சிடுவேன். ஃபோன் வாங்கி தர வேண்டாம்னு சொன்னா இந்த மனுஷன் கேட்கல. சூடு பட்ட பூனை கூட திருத்தும். இந்த மனுஷன் திருந்த மாட்டேங்குறார்.” என்று தன் கணவனையும் திட்டிக் கொண்டே கமலி செல்ல.
கண்ணிலிருந்து வரும் கண்ணீரை, தடுத்தவளோ தலையாட்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவளது கண்ணீரையெல்லாம் தலையணை மட்டுமே அறியும். இரவு விடிய, விடிய அழுதவளது முகம் மறுநாள் வீங்கியிருந்தது.
அதைக் கண்டும் காணாமலும், கமலியிருக்க. முகுந்தனுக்கு மனதே தாளவில்லை.
“உடம்பு சரியில்லையா? காலேஜுக்கு வேணும்னா லீவ் போடேன்.” என்றுக் கூற.
“சும்மா தலைவலி தான். நான் காலேஜுக்கு கிளம்புறேன்.” என்று தப்பித்தால் போதுமென்று கிளம்பி கல்லூரிக்கு வந்தவளுக்கு, நண்பர்களைத் தான் சமாளிக்க முடியவில்லை.
எப்பொழுதும் துறுதுறுவென சுற்றுபவளின், வீங்கிய முகத்தைப் பார்த்த அவளது நண்பர்களோ, “என்னாச்சு நிலா? ஜுரமா? ஏன் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. ஹாஸ்பிடலுக்கு போகலாம் வா னு பதற.
“ ஒன்னும் இல்லை!” என்று சமாளிப்பதற்குள் போதும், போதுமென்றானது.
நகுலன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலைக் குனிந்தாள் வெண்ணிலா.
“நிலா! என்னாச்சு உனக்கு? வீட்ல ஏதாவது ப்ராப்ளமா? எத இருந்தாலும் எங்களிடம் சொல்லு நிலா. ப்ரெண்ட்ஷிப்னா சுக, துக்கத்தைப் பகிர்ந்துக்குறது தான். உனக்கு எப்போ எங்கக் கிட்ட ஷேர் பண்ணனும்னு தோணுதோ அப்போ சொன்னாக்கூட போதும்.” என்ற நகுலனை நன்றியுடன் பார்த்தாள் வெண்ணிலா.
வெண்ணிலா வாய் விட்டு எதுவும் கூறாத போதும், அவளுக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்று நகுலனுக்குப் புரிந்தது.
அதுவும் இல்லாமல் அவளது இந்த நிலைமைக்கு தன்னுடைய அண்ணனும், அவர்களது நண்பர்களும் ஒரு காரணம் என்று புரிய, அவர்களைத் தேடிச் சென்றான் நகுலன்.
“என்னடா? மேட்டர்? உன்னை யாரும் ரேகிங் பண்றாங்களா?” என்று அங்கு வந்த நகுலனைப் பார்த்து மித்ரன் வினவ.
“என்ன யாரும் எதுவும் சொல்லலை. ஆனால் வெண்ணிலா பாவம்ணா. அவளையே ஏன் டார்கெட் பண்றீங்க?”
“டேய்! இதுக்கெல்லாம் நாங்க காரணம் இல்லை. யுகி தான் அந்த வெண்ணிலா மேல செம கோவத்துல இருக்கான்.”
“யுகி அண்ணா ! நீங்க தான் வெண்ணிலாவை அசைன்மென்ட் எழுத சொன்னதா.” என்று நம்பாமல் வினவினான் நகுலன்.
“சும்மா அசைன்மென்ட் தானே எழுதச் சொன்னோம்.” என்றான் யுகித்.
“வீட்ல எழுத சொல்லியிருக்கலாம்ணா. லேட்டா போனதால அவங்க வீட்ல பிரச்சனையாகிடுச்சுணா.”
“அச்சோ! அது எங்களுக்கு தெரியாதே. இப்படி நடக்கும் தெரிஞ்சிருந்தால் நாங்க அவளை சீக்கிரம் போ என்று சொல்லியிருப்போம் நகு.அவளும் எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்” என்று யுகித்தோ, தன் நண்பர்களைப் பார்த்து கண்ணடித்தான்.
‘அடப்பாவி! உன்னை நல்லவன்னு என் தம்பி நம்பிட்டு இருக்கான்.’ என்று மனதிற்குள் புலம்பினான் ரகுலன்.
“சரிங்கண்ணா! அவ முகத்தைப் பார்த்து மனசே ஆறலை. அதான் வந்தேன்.” என்று கவலையுடன் செல்லும் நகுலனைப் பார்த்த யுகித், “டேய் ரகு! உன் தம்பி சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் கில்டியா இருக்கு. வாடா அந்தப் பொண்ணுக் கிட்ட மன்னிப்பு கேட்கலாம்.” என்றுக் கூற.
“போடா! இதெல்லாம் சப்ப மேட்டர். இதுக்கு போய் மன்னிப்பு கேட்பாங்களா? நான் வரலை என்று அவன் கூற .
“டேய் மச்சி! நீயாவது வாடா.” என்று மித்ரனை அழைத்தான் யுகித்.
“வாட்? நான் வந்து மன்னிப்பு கேட்கணுமா? நான் தான் கேங்லீடர். என்னால முடியாது.” என்று அவனும் மறுத்து விட.
“நானே போறேன்.” என்று யுகித் மட்டும் கிளம்ப.
“யுகி! நான் வர்றேன்.” என்ற தீபிகா, அவனுடன் சென்றாள்.
அங்கோ வெண்ணிலாவை சிரிக்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தான் நகுலன்.
ஆனால் அவளால் நேற்று நடந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை.
“வெண்ணிலா!” என்ற யுகித்தின் குரல் கேட்க.
வெண்ணிலா பதில் கூறுவதற்குள், நகுலன் பதற்றத்துடன் “என்ன அண்ணா?” என்று வினவ.
“ரிலாக்ஸ் நகுல். நான் வெண்ணிலா கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்திருக்கேன்.” என்றவன், வெண்ணிலாவை ஆழ்ந்துப் பார்த்தவாறே, “என்னை மன்னிச்சிடு வெண்ணிலா.” என்றான்.
“ எதுக்கு சீனியர்!” என்று புரியாமல் வினவினாள் வெண்ணிலா.
“நேற்று நடந்ததுக்கு ரியலி சாரி! நான் வேணும்னு செய்யலை.”என்று மீண்டும் மன்னிப்பு கேட்க.
“இட்ஸ் ஓகே சீனியர்!” என்றவளது கண்களில் வெறுப்பு படர, அதை அவனிடம் காண்ப்பிக்காமல் இருக்கப் படாதபாடுபட்டாள்.
தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் யுகித். அவன் பின்னேயே சென்றாள் தீபிகா.
“நிலா! யுகிண்ணா தான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே அப்புறம் ஏன் இன்னும் கோபமா இருக்க?”
“ப்ச்! தெரிஞ்சே தப்பு செஞ்சுட்டு மன்னிப்புக் கேட்டா உடனே செஞ்சது தப்பு இல்லைன்னாகிடுமா? நான்லாம் செய்யாத தப்புக்கே எங்க அம்மா கிட்ட ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்பேன். அது எனக்கு ஜஸ்ட் ஒரு வார்த்தை. அவ்வளவு தான்.” என்று வெண்ணிலா திரும்ப.
அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் யுகித்.
பழைய நினைவை விரட்டிய வெண்ணிலா, கேண்டினை நோக்கி
இரண்டு எட்டு எடுத்து வைக்க.
அங்கிருந்த மரத்திற்கு பின்புறம் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் யுகித்.
தன் கண்களை நம்ப முடியாமல் கண் சிமிட்டிப் பார்த்த வெண்ணிலாவிற்கு மயக்கமே வருவது போல் இருந்தது
4. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 4