Tag:
#srivinithanovels #besttamilnovels
மையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 1
written by Aazhi Thendral
பெங்களூருவின் ஒரு பிரபலமான ஐ.டி அலுவகத்தில், மாலை ஆறு மணி அளவில் முகத்தில் சோகமும், கோபமும், ஏமாற்றமுமாக தன்னுடைய மடி கணினியை மூடி வைத்தாள் சம்யுக்தா.
இருபத்தி ஐந்து வயது அழகிய பதுமை அவள். அரிதாரம் பூசாமலே அழகாய் மின்னும் கலங்கமில்லாத சருமம். நிலவின் ஒளியை தனதாக்கி கொண்ட சருமத்திற்கு அவள் எந்த ஒப்பனையும் செய்து கொள்வதில்லை.
மயில் இறகை போன்ற நெருக்கமான இமை முடிகளை கொண்ட விழிகளுக்கு மட்டும் அஞ்சனம் தீட்டி கொள்வது அவள் வழக்கம்.
அஞ்சனத்தை தீட்டி முடித்து ஒப்பிட்டு பார்க்கையில் அழகிய ஓவியமும் அவள் விழி அழகின் முன்பு தோற்று போகும்.
மனதில் நினைப்பதை மறைக்க தெரியாமல் கண்ணாடியாய் காட்டிடும் முகம் அவளுடையது. அப்படி அவள் மனதில் உள்ள வாட்டத்தை முகம் காட்டிட, காதலன் மீதுள்ள அளவு கடந்த கோபத்தில் அவனை காலையிலிருந்தே திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
தனியாக புலம்பி கொண்டிருப்பவளை பார்த்த
அவளது தோழி வித்யாவோ, இவளுக்கு சமாதானம் கூறியே சோர்ந்து போனாள். எங்கே.. அவள் கேட்டால் தானே?
“வித்யா.. இன்னைக்கு மட்டும் அவன் தனியா என் கைல சிக்கட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு.” என்றாள் மாறாத கோபத்துடன்.
“பாவம் டி. ஏதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்பாரு.”
“உடனே அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்துடுவியே. நீ எனக்கு ஃப்ரெண்டா இல்லை அவனுக்கு ஃப்ரெண்டாடி?” என்று சிறு பிள்ளை போல் கோபித்து கொள்பவளிடம் என்னதான் சொல்வது?
“சரி.. நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீ வரியா இல்லையா?”
“எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நீ கிளம்பு. நான் வர லேட் ஆகும்” என்றதும்,
“சரி, சீக்கிரம் வந்துடு” என்றவள் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.
அதே தருணம்,
“என்னடா காலைல இருந்து உன்னோட ஆளு உன்னை திரும்பி கூட பார்க்காம இருக்கா? இந்நேரத்துக்கு இரண்டு பேரும் பார்வையாலேயே டூயட் பாடி இருப்பீங்களே..?” என்றான் பிரதீப்.
“அதுவா.. இன்னைக்கு அவளோட பர்த்டே. மேடம் நான் மறந்துட்டதா நெனச்சுட்டு இருக்காங்க. அதான் கோபம் என்றான் ஆதிசேஷன்.
எதையும் விரைவாகவே கற்றுக்கொள்ளும் புத்தி கூர்மை உடையவன். தலைமை பண்பும், காண்போரை ஈர்க்கும்படியான அழகும் உடைய இருபத்தி எட்டு வயதான ஆண்மகன்.
சம்யுக்தாவிற்கு தன் மீதான கோபத்தினை ஆதிசேஷன் தன் நன்பனிடன் விளக்கி கொண்டிருக்க,
“ஓ.. ஓ ஓ ஓ.. அதான் விஷயமா. அப்படீனா நீ மறக்கல. அப்புறம் என்ன? போய் விஷ் பண்ண வேண்டியது தானே?”
“அதெல்லாம் முடியாது. ஒரு சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணிருக்கேன். கொஞ்ச நேரம் அவ வெயிட் பண்ணட்டும்.”
“சரி டா. அவளை ரொம்ப டென்ஷன் பண்ணாம சீக்கிரம் சர்ப்ரைச ஓபன் பண்ணிடு.”
“வேலை முடிஞ்சுதுல. வெளில போனதும் அதுதான் முதல் வேலை.” என்றவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்றான்.
“சம்யுக்தா தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்து கொண்டு தான் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செல்ல, தன்னுடைய பைக்கில் அவளை பின்தொடர்ந்தான் ஆதி.
அவன் பின் தொடர்வதை தெரிந்தும் தெரியாதது போல் வண்டியை ஓட்டி கொண்டு முப்பது நிமிடங்களில் தன்னுடைய வீட்டை அடைந்தவள் எந்த திசையிலும் தன்னுடைய பார்வையை திருப்பாமல் தன் வீட்டை நோக்கி அதே கோபத்துடன் நடந்து சென்றாள்.
சம்யுக்தாவின் குடும்பம் தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தது. வேலை காரணமாக பெங்களூரில் தன் தோழி, வித்யாவுடன் சேர்ந்து ஒரு வீட்டினை வாடைகைக்கு எடுத்து தங்கி இருக்கிறாள்.
ஆதிசேஷனுக்கும் தமிழ்நாடுதான் சொந்த மாநிலம். ஆனால் பெங்களூரில் தன்னுடைய தாய் தந்தையருடன் செட்டில் ஆகிவிட்டான்.
சம்யுக்தாவோ கோபத்துடன் தான் தங்கி இருக்கும் அறை கதவின் பூட்டினை திறந்து கொண்டு உள்ளே நுழைய, வீடு வண்ண வண்ண மின்விளக்குகளால் பிரகாசித்தது.
தரையின் நடைபாதையில் சிவப்பு வண்ண ரோஜா இதழ்கள் பரப்பப்பட்டு மற்றைய இடங்களில் இதய வடிவிலான சிவப்பு வண்ண பலூன்களால் நிரப்பப்பட்டு இருந்தது.
ஹால் சுவற்றில் எல்லாம் அவளுக்கு பிடித்த பூக்கள் கொண்டு அலங்கரிக்கபட்டிருக்க, அறையின் நடுவே ஒரு கண்ணாடி மேஜையின் மீது சிறிய கேக் ஒன்று தயார் நிலையில் இருந்தது.
இவை அனைத்தின் மீதும் சம்யுக்தாவின் பார்வை ஒரு முறை படிந்து மீள, அவளின் காதருகே வந்து “ஹேப்பி பர்த்டே சம்யூ..” என்றான் மெல்லிய குரலில்.
கலங்கிய விழிகளுடன் அவன் புறம் திரும்பியவள்,
“ஏன்டா இப்படி பண்ணின? நீ மறந்துட்டேன்னு நெனச்சு நான் காலைல இருந்து எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” என்றவள் அவன் மார்மீதே செல்ல அடிகளை கொடுக்க, அதை புன்னகையுடனே வாங்கி கொண்டவன், அதே மாறாத புன்னகையுடன்,
“அது எப்படிடி மறப்பேன்? உள்ள வா. உனக்காக ஒரு சார்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு” என்றான்.
“அதான் இவ்வளவும் பண்ணி வச்சிருக்கியே. இதுவே பெரிய சர்ப்ரைஸ்தான். இன்னும் என்ன?”
“நீ முதல்ல உள்ள வா சம்யூ..” என்றதும்
“சரி” என்று அவன் பின்னாலேயே செல்ல, அவளுடைய அறை கதவை திறந்ததும் அவன் ஒரு ரிமோட் பட்டனை அழுத்த, அதில் அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து நேற்றைய தினம் வரை அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் அழகான காட்சியாக விரிந்தது.
அவளுடைய கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்தையும் அழகாக படம் பிடித்து வைத்திருந்தவன், தன்னுடன் சேர்ந்து இருந்த அழகிய தருணங்களையுவும் படமாக்கி அதில் இணைத்திருந்தான்.
முகம் கொள்ளா புன்னகையுடன் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தவள், மகிழ்ச்சி மிகுதியில் அவனை அணைத்திருந்தாள்.
“தேங்க் யூ சோ மச் ஆதி.. ஐ லவ் யூ டா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.
“ஐ லவ் யூ சம்யூ.. உன்னோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
கடந்த இரண்டு வருடமாக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் தங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. ஆதிசேஷன்தான் தற்போதைக்கு யாரிடம் வெளிப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தான். தேவையற்ற வதந்திகள் பரவும் என்பது அவனது எண்ணம்.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவர் இன்னொருவரை விட்டுக்கொடுத்ததே இல்லை. இருவருமே நல்ல வேலையில், நல்ல ஊதியத்தில் பணியாற்றுகிறார்கள்.
வேலையில் அடுத்த நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்வதாக முடிவும் எடுத்திருந்தனர்.
சம்யுதாவின் மனம் முழுவதும் நிறைந்து இருந்தான் ஆதிசேஷன். இருவரின் மனதிலும் அத்தனை காதல்.
ஆதிசேஷனுக்கும் சம்யுக்தாவே உலகம். எப்போதும் அவளுடைய விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுப்பவன்.
இருவருமாக சேர்ந்து கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஊட்டி விட்டு, மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாட, ஆதி தன் பாக்கெட்டிலிருந்து சிறிய அடர் சிவப்பு வண்ண பெட்டியை வெளியே எடுத்தவன் அதிலிருந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அவள் முன்பு ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்து,
“நோ சாய்ஸ் மை கேர்ள்.. சே எஸ்..” என்றான் குறும்பு புன்னகையோடு.
சம்யுக்தாவின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன. சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க, “எஸ்” என்றவள், தன்னுடைய வெண்டை பிஞ்சு விரல்களை அவன் முன்பு நீட்ட, அதில் மோதிரத்தை அணிவித்தான் ஆதிசேஷன்.
எழுந்து நின்று மீண்டும் இன்னொரு சிறிய பெட்டியை தன்னுடைய பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவன் அதிலிருந்த மோதிரத்தை எடுத்து அவளிடம் கொடுத்து, இதை எனக்கு போட்டு விடு சம்யூ என்றான்.
அவளும் அதை போலவே செய்ய, இதுதான் நம்ம எங்கேஜ்மெண்ட் ரிங். பத்திரமா வச்சுக்கோ. நம்ம இரண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் வாங்கி ஊரறிய இதை உன் கைல திரும்பவும் போட்டு விடணும் என்றான்.
முகம் முழுவதும் புன்னகையாக சரி என்றவள்,
“ஆதி.. நம்ம லவ் மேட்டரை வீட்ல சொல்லிடவா? இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. எனக்கும் இப்போதான் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு.”
“கொஞ்சம் பொறு சம்யூ.. ஆஃபீஸ்ல எனக்கு ப்ரமோஷன் கிடைக்க போகுது. உனக்கே தெரியும்தானே. கிடைச்ச அடுத்த நாளே என்னுடைய அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து உங்க வீட்ல பொண்ணு கேக்குறேன்” என்றான்.
“ஹ்ம்ம்ம்.. சரி. எங்க வீட்லயும் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். எனக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் அவனுக்கு பண்ணனும்னு வீட்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.
இப்போ நீ இருக்க வேலைக்கு என்னடா குறைச்சல்? இப்போவே வந்து எங்க வீட்ல பேச வேண்டியதுதானே.” என்றாள் ஒருவித எதிர்பார்போடு.
“கொஞ்சம் பொறு மா. கொஞ்ச நாள்தானே. நான் நல்ல பொசிஷன்ல இருக்கும்போது உங்க வீட்டுக்கு வந்து பேசினா இன்னும் கெத்தா இருக்கும்ல?”
“என்னவோ சொல்ற. கொஞ்ச நாள்தான் பார்ப்பேன். இல்லனா..”
“இல்லனா..?”
“எங்க வீட்ல பேச மாட்டேன். நேரா உங்க வீட்டுக்கு வந்துடுவேன் பார்த்துக்கோ.”
“அம்மா தாயே.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதமா. அப்புறம் எங்க அம்மாவும் அப்பாவும் என்னை கொன்னே போட்டுடுவாங்க. நம்ம இரண்டு பேர் வீட்டுலையும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ அமைதியா இருந்தா மட்டும் போதும்.
உன்னுடைய அடுத்த பர்த்டேவ நம்ம இரண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபாதான் செலிப்ரேட் பண்ணுவோம். ஓகே..?”
“அதையும் பாக்கலாம்..”
“என்ன பார்க்கலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு என்னோட பர்த்டே பேபி ஹேப்பியா இருக்கணும். அதுக்கென்ன செய்யணுமோ அதை பத்தி மட்டும் பேசுவோம்.”
“அதெல்லாம் நீ செஞ்ச வரைக்குமே நான் ரொம்ப ஹேப்பிதான். டைம் ஆகிடுச்சு. நீ வீட்டுக்கு கிளம்பு.”
“வெளில மழை வேற பெய்யுதுடி. கண்டிப்பா நான் போகணுமா? இங்கேயே இருந்துட்டு நாளைக்கு போகட்டுமா?”
“என்னது நாளைக்கா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மழை நின்னு ரொம்ப நேரம் ஆச்சு. நீ முதல்ல கிளம்பு.”
“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைடி உனக்கு.”
“அதெல்லாம் நிறையவே இருக்கு. நீ முதல்ல பத்திரமா உன்னோட வீட்டுக்கு போற வழிய பாரு” என்று அவனை வெளியே அனுப்பி வைக்க, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான் ஆதிசேஷன்.
விடியல் – 18
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்து கொறித்துக் கொண்டிருந்த நந்தினியை கவலையோடு பார்த்தார் நிர்மலா.
அவருடைய மனமோ நந்தினியை நினைத்து பதறிக் கொண்டிருந்தது.
பின்னே திருமணம் முடித்துக் கொடுத்த சில நாட்களிலேயே கணவனுடன் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால் எந்தத் தாய்தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என அந்தத் தாயின் உள்ளம் தவித்தது.
நிர்மலாவின் மனநிலைக்கு எதிராக இருந்தார் ராமகிருஷ்ணன்.
அவரைப் பொறுத்தவரை மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சிறிதும் யோசிக்காமல் இந்த வாழ்க்கையிலிருந்து முழுதாக அவளை அழைத்து வந்துவிடும் மனநிலையே அவருக்கு.
ராமகிருஷ்ணனைப் பற்றி தெரிந்ததாலேயே நிர்மலாவின் மனதின் அச்சம் இன்னும் அதிகரித்தது.
சிறிய பிரச்சனையை பெரிதாக எண்ணி கோபித்துக் கொண்டு வந்த மகளுக்கு புத்தி சொல்லி மீண்டும் அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பி வைக்காமல் மகளுடன் சேர்ந்து மருமகனைத் திட்டிக் கொண்டிருந்தால் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?
தன் மகளிடமாவது பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையோடு அவளை நெருங்கினார் நிர்மலா.
“நந்து..”
“என்னம்மா..” என்றவள் கொய்யாப் பழத்தைக் கடித்து விட்டு தன்னுடைய அன்னையின் முகத்தை என்னவென்பது போலப் பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர்.
“நீ இங்க வந்து முழுசா ஒரு நாள் முடிஞ்சிடுச்சு..”
“என்னம்மா.. என்னை துரத்தி விட பாக்கறீங்களா..”
“புரியாம பேசாதடி.. வாழ்க்கைல சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாமே..”
“அம்மா.. எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல.. கல்யாணத்தன்னைக்கே அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. ஆனா இப்போ வரைக்கும் அவர் பண்ணது சரிதான்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு.. அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு திரும்பி வந்தவரு என்கிட்ட எதுக்கு போனேன்னு காரணத்தைக் கூட சொல்லல..”
“அடியே.. மா�ப்பிள்ளையோட வேலை அந்த மாதிரிடி..”
“எனக்கும் புரியுது.. அன்னைக்கு அவர் போனதாலதான் சைக்கோகிட்ட மாட்டிருந்த பசங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.. அவர நான் போக வேணாம்னு எல்லாம் சொல்லலம்மா.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்னன்னுதான் கேட்கிறேன்.. எப்பவுமே தான் பண்றது மட்டும்தான் சரின்னு நடந்துக்கிறாரு..” என்றாள் நந்தினி.
“அம்மாடி நந்து.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.. உன் மேலயும் தப்பு இல்ல.. அவர் மேலயும் தப்பு இல்ல.. அவரோட டியூட்டியைப் பண்ணத்தானே போயிருக்காரு.. அதை நாம தப்பு சொல்ல முடியாது..”
“அம்மா.. நீங்களும் அப்பாவும் கூட என்னை அடிச்சதே இல்லை.. தப்பு பண்ணாம அடி வாங்கியிருக்கேன்..” அவள் குரல் நடுங்கியது.
“உன்னை அடிச்சதுல எனக்கும் வருத்தம்தான்.. எதுவா இருந்தாலும் பேசி புரிய வச்சிருக்கலாம்.. சரி விடு.. நீ எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்போல.. அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு..”
“என்னம்மா.. நீங்களும் இப்படி பேசுறீங்களே..” என்றாள் நந்தினி.
“அடியேய் அவர் என்ன குடிச்சிட்டு வந்து அடிச்சு கொடுமைப்படுத்துறாரா.. இல்ல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா.. இல்ல வேற எந்த பொண்ணு கூடவும் தப்பான உறவுல இருக்காரா.? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனுஷன்டி.. எங்க தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது..” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க தான் மெச்சுக்கணும்..” என முணுமுணுத்தாள்.
“என்னடி.. என்னை திட்றியா..”
“சே சே இல்லம்மா.. அவரைத்தான் திட்டுவேன்..” என்றாள் நந்தினி.
“அப்படிலாம் திட்டக் கூடாது நந்து… இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது கூட இல்ல.. இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு வாரம் கூட ஆகல.. நீங்க ரெண்டு பேரும் பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உங்களுக்கு டைம் தேவை.. அவருக்கான டைமை நீ கொடுமா.. எல்லாம் சரியாயிடும் நந்து..”
“இப்போ என்னம்மா சொல்ல வர்றீங்க.. என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு போகச் சொல்றீங்களா..”
“இனி அதுதான் உன்னோட வீடு.. உங்க அப்பாவும்தான் நிறைய பிரச்சனை பண்ணுவாரு.. அதுக்காக நான் என்ன கோவிச்சுக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போறேனா.. இல்லைல்ல.. புரிஞ்சுக்கோடி.. இதுதான் உன்னோட வாழ்க்கை.. இனி இத மாத்த முடியாது..”
“சரிம்மா.. கொஞ்ச நாள் இருந்துட்டு நானே போயிடுறேன்..” எனக் கூறிவிட்டு எழுந்தவள் கையில் இருந்த கொய்யாப் பழத்தை அப்படியே அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள்.
என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளுடைய மனதிலும் வேதனை இருக்கத்தான் செய்தது.
அன்றைய நாள் இரவு தன்னுடைய சம்மதம் இல்லாமல் அவன் தன்னை எடுத்துக் கொண்டதை அவளால் இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதைப் பற்றி எல்லாம் தன் அன்னையிடமோ தந்தையிடமோ சொல்லிவிட முடியாது.
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கினாள்.
இந்தத் திருமண வாழ்க்கையை முறித்துவிடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
வர்மாவின் மீது கோபத்தில் இருந்தவள் தந்தையைக் கண்டதும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது மீண்டும் அங்கே செல்வதற்கு சங்கடமாக இருந்தது.
அதுவும் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவில் வந்ததும் அவள் முகம் சிவந்து போனது.
அதே கணம் தன் மீது கோபமும் வந்தது.
எப்படி அவனுடைய முத்தத்திற்கு ஒத்துழைத்தோம்..?
அவனைத் தள்ளி அல்லவா விட்டிருக்க வேண்டும்..
தன்னை அடித்துவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்காமல் முத்தமிட்டவனின் முத்தத்தில் உருகி குழைந்திருக்கின்றோமே என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஓ மை காட்.. இந்த போலீஸ்காரனோட போராடணும்னுதான் என் தலைல எழுதியிருக்கு போல.. இவன் மாறுவானா என்னனு கூட தெரியலையே..” என புலம்பியவாறு தன் நெற்றியை அழுத்தமாக வருடினாள் அவள்.
****
மூன்று நாட்களுக்குப் பிறகு..
நந்தினி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்திருந்தன.
வர்மா அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைக்கவும் இல்லை.
அவளும் அவனுடைய வீட்டிற்கு கிளம்பி வரவும் இல்லை.
இவர்களுடைய பெற்றோர்கள்தான் அவர்களை எண்ணி தவித்துக் கொண்டிருந்தனர்.
அன்று காலையில் பிரதான சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலரின் உயிர் பறிபோயிருந்தது.
ஒன்று கூடிய மக்களை விலக்கி நிறுத்தி உயிருக்கு போராடியவர்களைக் காப்பாற்றி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளை அங்கே நின்று மேற்பார்வையிட்டு வழங்குவதற்கே வர்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
முடிந்த அளவிற்கு பலரின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்கள்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
சிலர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிராஃபிக் போலீஸின் உதவியுடன் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி அந்த வீதியைக் கிளியர் செய்து தனக்குக் கீழே இருந்த காவல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியது.
மதிய நேரம் தொடங்கிய பணி அன்று மாலை வரை நீடித்தது.
வர்மாவோ தண்ணீர் கூட அருந்தவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரி அல்ல அவன்.
“சார்.. நீங்க போங்க.. இனி நாங்க பார்த்துக்குறோம்..” என்றார் கான்ஸ்டபிள்.
“இல்ல கணேசன்.. இப்போ வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லை.. சம்டைம் பிரச்சனை வேற மாதிரி கூட போகலாம்.. லாரி டிரைவர் மேல நிறைய பேர் செம கோவத்துல இருக்காங்க.. முதல்ல அவருக்கு பாதுகாப்பு கொடுங்க..” என்றான் யுகேஷ் வர்மா.
சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்த அவனுடைய டீம் மெம்பர்களான ரகு சரவணன் மதன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க..?”
“பிழைச்சவங்களை விட இறந்தவங்கதான் அதிகம் சார்..” என சற்று கவலையுடன் கூறினான் சரவணன்.
வர்மாவிடமோ பெருமூச்சு.
“இது ரொம்ப பெரிய இழப்பு சார்..” என்றான் மதன்.
“யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால எத்தனையோ உயிர் இப்படி பரிதாபமா போகுது.. ஷிட்.. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என் தன் தலையை அழுத்தமாக வருடினான் அவன்.
“சார்.. நாங்களாவது இருபது நிமிஷம் பிரேக் எடுத்தோம்.. நீங்க மதியத்துல இருந்து இப்போ வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சார்.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..?” எனக் கேட்டான் ரகு.
“வீட்டுக்கு போயிட்டு வரவே ரெண்டு மணி நேரம் ஆகும் டா..”
“அப்போ ஏதாவது ஹோட்டல்ல ஃபிரஷ் ஆகலாமே..”
“பாக்கலாம்..” என்றவன் தனக்கு அருகே வந்து நின்ற காரைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான்.
காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் நந்தினியின் தந்தை ராமகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை..” என அழைக்க வந்தவர் அவன் யூனிஃபார்மில் இருப்பதைப் பார்த்து “சார்..” என்று தொடங்கினார்.
“வாங்க..” என்றான் வர்மா சோர்வான குரலில்.
அவனுடைய கம்பீரமான குரல் இப்படி சோர்ந்து ஒலிப்பதைக் கண்டதும் அவருக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் இவ்வளவு நேரமும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலை செய்தி மூலம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஏதாவது தன்னாலான உதவியைச் செய்து கொடுக்கலாம் என தன்னுடைய கம்பனியில் இருந்து தன் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
“ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க.. நியூஸ்ல பார்த்தேன்.. அதுதான் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“நான் கொஞ்சம் பிரெஷ் ஆகணும்.. இங்க பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச ஹோட்டல் ஏதாவது இருக்கா..?”
“நம்ம வீடு இருக்கே மாப்பிள்ளை.. ஹோட்டல் எதுக்கு..?”
உணர்ச்சிவசப் பட்டு மாப்பிள்ளையென அழைத்து விட்டார் அவர்.
சரவணன் ரகு மதன் மூவருக்கும் அதிர்ச்சி.
“சார்.. உங்க மாமனாரா இவரு..?” சிரித்தபடி கேட்டான் சரவணன்.
சரவணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்புறம் என்ன.. பக்கத்திலேயே வீடு இருக்கு.. நீங்க அங்க போய் பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் ரகு.
“வாங்க மாப்பிள்ளை.. போகலாம்..” என்றவாறு ராமகிருஷ்ணன் கார் கதவையே திறந்து விட,
“இட்ஸ் ஓகே.. நானே ஓப்பன் பண்றேன்..” என்றவன் முன்புற கார்க் கதவைத் திறந்தவாறு சட்டென நின்றான்.
“எல்லார் மேலயும் ஒரு கண் வச்சிருங்க.. ரகு, சரவணன் நீங்க ரெண்டு பேரும் இந்த ஸ்பாட்லையே நில்லுங்க.. மதன் நீ கணேசனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்..” எனக் கூறி விட்டு காருக்குள் அமர்ந்தான் வர்மா.
ராமகிருஷ்ணனோ தானும் முன்புறம் அமர்ந்தவர் காரைச் செலுத்தத் தொடங்கினார்.
காரினுள் இருந்த ஏசி வர்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“உங்களால வீட்டுக்கு வர முடியலன்னாக் கூட ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை.. குடிக்கிறதுக்கு ஜூஸ் ஆவது கொண்டு வந்து கொடுத்திருப்பேனே..” என்ற தன்னுடைய மாமனாரை வியந்து பார்த்தான் அவன்.
இதுவரை அவன் அவருடன் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வரவேற்றது கூட இல்லை.
ஆனால் தனக்காக இவ்வளவு தூரம் சிந்திக்கின்றாரே என நினைத்தவன் “டென்ஷன்ல எனக்கு எதுவுமே தோணல..” என்றான்.
சற்று நேரத்தில் நந்தினியின் வீடு வந்திருந்தது.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை..”
முதல் முறையாக அவர்களுடைய வீட்டுக்குள் செல்கிறான்.
அவனுடைய தோற்றமோ படுமோசமாக இருந்தது.
உடல் முழுவதும் வியர்வை.
யூனிஃபார்மில் ஆங்காங்கே ரத்தக்கறை வேறு அப்பியிருந்தது.
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவன் வரவேற்பறையின் சோபாவில் எக்குத்தப்பாக அமர்ந்திருந்த நந்தினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.
செம்பாவும், கோகியும் வீட்டிற்குள் வர சந்திரா, ராசாத்தி மட்டும் வெளியே அமர்ந்து பேசியபடி இருந்தனர். நல்ல சிவத்தை காணவில்லை.
கோகியை பார்த்ததும் “ஏய் என்னடி இது தலையில் கட்டு” என்றார்.
“அதுவா அத்தை தலையில் கட்டுபோட்டா, தங்கநாணயம் பரிசா தர்றதா சொன்னாங்க, அதான் போட்டுருக்கேன்.”
“தங்கத்தை எங்கடி?” என ராசாத்தி கேட்க,
“நீயெல்லாம் தாயா? ஒரு பேச்சிற்கு சொன்னால் உண்மையா கேக்குற?”
“நீதான்டி சொன்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலை சொல்லு” என்றார் ராசாத்தி.
“வேலை முடிந்து வெளியே வரும்போது கால் இடறி கீழே விழுந்துட்டேன். தலையில் அடிபட்டுடுச்சி அத்தை” என்றாள் கோகி.
“பார்த்து வரக்கூடாதா” என சந்திரா சொல்ல,
“தரையை பார்த்து நடக்கனும் மேலே பார்த்து நடந்தால் இப்படிதான் ஆகும்.”
“ம்மா…” என ராசாத்தியை முறைக்க…
“ராசாத்தி சும்மா இரு, பிள்ளைகிட்ட சண்டை இழுக்குறதே உனக்கு வேலையா போய்டுச்சி” என்றதும் இருவரும் அமைதியாகினர்.
“ம்மா அப்பா எங்கே?” என செம்பா கேட்க…
“உங்க அப்பா நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து படுத்துட்டாருடி”
“சாப்பிட்டாறாம்மா”
“கொடுத்தேன் கொஞ்சம் சாப்பிட்டார். தூக்கம் வருதுன்னு சொல்லி படுத்திட்டார். நீ போய் குளிச்சிட்டு துணிய மாத்திட்டு வாங்க, சாப்பிடுங்க நேரம் ஆயிடுச்சு. வர வர ரொம்ப நேரம் தாண்டி வர்றீங்க, வேற ஹாஸ்பிடல்ல வேலை இருந்தால் பார்க்க கூடாதா?”.
“அம்மா எங்க போனாலும் இப்படித்தான் இருக்கும். ஒரு நாள் முன்ன பின்ன ஆகலாம். எல்லா நாளும் நாங்க லேட்டாவா வர்றோம். அது மட்டும் இல்லாமல், நம்ம ஊரு பக்கத்துல கிளினிக்தான் இருக்கு. வேற ஹாஸ்பிடல் இல்லமா.”
“என்னமோ சொல்றீங்க, படிச்ச புள்ளைங்க பார்த்து நடந்துக்கோங்க” என்றார் ராசாத்தி.”
இரவு மணி 11 தாண்டியது. மெதுவாக எழுந்து அமர்ந்தார் நல்ல சிவம். சந்திரா தூங்கிவிட்டார். செம்பா தூங்காமல் சமருடன் மெஸேஜ்ஜில் பேசிக் கொண்டிருந்தாள்.
நல்ல சிவம் எழுந்து அமர்வதை பார்த்ததும் சமரிடம் பேசிவிட்டு தன் தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.
“அப்பா சாப்பாடு கொண்டு தரவா” என கேட்ட தன் மகளை வாஞ்சையுடன் பார்த்தவர் “எனக்கு ஒன்னும் வேண்டாம் ஆத்தா எனக்கு பசிக்கலை”
“என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?”
“தெரியலை ஆத்தா. மனசு ஒரு மாதிரியா இருக்கு,” அப்போது நல்லசிவம் லேசாக நெஞ்சில் கை வைத்து முக சுழிப்பை காட்ட,
“என்னப்பா ஏதாவது பண்ணுதா” என கேட்க…
“ எனக்கு என்னடா பண்ணப்போகுது ஒன்னும் பண்ணலை, இப்படி உட்காரு” என தன் மகளை பார்த்தபடி இருந்தார்.
“என்னப்பா அப்படி பாக்குறீங்க?”
“இனிமே என்னால பார்க்க முடியுமா முடியாதோ?” என சிவம் சொல்ல…
“ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஏதாவது பண்ணுதா ஹாஸ்பிடல் போகலாம், வாங்கப்பா” என பதறிய மகளை தோளோடு அணைத்தவர். “எனக்கு ஒன்னும் பண்ணாது. நீ பக்கத்துல இரு போதும்” என்றார்.
தந்தையும் மகளும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு கண்களை திறந்தார் சந்திரா.
“என்னாச்சு, நடு சாமத்துல உட்க்கார்ந்து, அப்பனும் மகளும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கிங்க” என்றார்.
“அம்மா, அப்பா பேசுறது எனக்கு பயமா இருக்கு, என்னனு கேளுங்க”
“என்னடி சொல்ற” என எழுந்து நல்லசிவத்திடம் வந்தவர் “ஏங்க என்னாச்சி?” என்றார்.
“எனக்கு ஒன்னும் இல்ல சந்திராம்மா, நீ பயப்படாதே”
நல்லசிவத்திற்கு லேசாக இதயத்தின் வலி அதிகமாகியது. பாராங்கல்லை வைத்து அழுத்துவது போல இருக்க, ஆனால் அதை மறைத்தபடியே தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“ஆத்தா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இதை உனக்கு சர்ப்ரைஸா வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனால் முடியாது போல இப்பவே சொல்லிடவா?” என ஒரு மாதிரியாக பேச…
“அப்பா முதல்ல ஹாஸ்பிடல் போலாம். அதுக்கப்புறம், நீ என்ன வேணாலும் பேசு” என செம்பா அழைக்க பிடிவாதமாக அமர்ந்தவர். “நீ என் பக்கத்துல உட்க்கார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என சொன்னதையே சொன்னார்.
“சரி சொல்லுப்பா, என்ன?” என கேட்க…
“நான் சொன்னா நீ கோபப்பட மாட்டியா ஆத்தா”
“நான் ஏன்ப்பா? உன்மேல கோபப்பட போறேன் என் அப்பா பற்றி எனக்கு தெரியாதா!”
“உனக்கு ரஞ்சியை பிடிக்குமா?”
“என்னப்பா இப்படி கேக்குறீங்க. எனக்கு அம்மாவா இருந்து பாதினால் வளர்த்தவள். அவளை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்.”
“இல்லை ரஞ்சி. நம்மளை எல்லாம் அவமானப்படுத்தி ஓடி போயிட்டாளேன்னு உன் மனசுல வருத்தம் இருக்கு தானே”
“வருத்தம் இல்லாம எப்படிப்பா இருக்கும். வருத்தம் இருக்கு. ஆனால், அவ மேல எனக்கு கோபம் இல்லப்பா, அந்த வருத்தம் கூட சம்பந்தமே இல்லாமல் ஏழுமலை மாமா அசிங்கப்பட்டு நின்னாங்கல்ல, அது மட்டும் தான் எனக்கு வருத்தம்” என்றாள் செம்பா.
“ரஞ்சி ஓடி போய்டுவான்னு ஏழுமலைக்கு ஏற்கனவே தெரியும்”
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமா ஆத்தா, ரஞ்சி என்கிட்ட இரண்டு நாளுக்கு முன் பேசினாள்”.
“அக்காவா?”
“ஆமா ஆத்தா. ரஞ்சி கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே ஏழுமலைகிட்ட அவள் காதலிக்கிற விஷயத்தை பற்றி பேசி இருக்காள். ஆனால் அவங்க ரெண்டு பேரோட கல்யாண விஷயத்துல, நானும் ராசாத்தியும் ரொம்ப பிடிவாதமா இருக்குறோம்ன்னு தெரிந்ததால், எங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாமல் இரண்டு பேரும் இந்த முடிவு எடுத்து இருக்காங்க. ராசாத்திகிட்ட மறைமுகமாக ஏழுமலை “இந்த கல்யாணம் இப்போ வேணுமாம்மா, பிறகு வைக்கலாமே” என பேச, அவரோ “இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா என்னை உயிரோட பார்க்கமுடியாதுன்னு சொல்ல” அதனால் ஏழுமலை, ரஞ்சிகிட்ட “கல்யாணத்து முன்னாடி நீ விருப்படுறவங்ககூட போய்டு, இதை தவிர வேற உன்னாலயும் க்ஷ, என்னாலயும் எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லி இருக்கான். அதனால வேற வழி இல்லாமல்தான் ரஞ்சி நம்ம வீட்டை விட்டு வெளியே போய் இருக்காள்” என்றார்.
“நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேப்பா”
“எப்படிம்மா சொல்ல சொல்ற, நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுல அதிகமா இழந்தது உங்க அம்மாதான். நான் என் குடும்பத்தோட சேர்ந்துட்டேன். ஆனால் அவளால் இப்போ வரை அவளோட அம்மாகிட்ட கூட பேசமுடியாமல் அவ தவிக்கிற தவிப்பு என் கண்ணால் நான் பார்த்திருக்கேன். அதை பார்த்த ரஞ்சி, எங்ககிட்ட சொன்னால் கண்டிப்பா சம்மதிக்க மாட்டோம்னு நினைச்சி அவ விரும்புனவனோடயே கிளம்பி போய்ட்டாள்.
“அக்கா என்ன சொன்னாலூம் நம்ம பட்ட அவமானம் மறையாதுல்லப்பா”
“அதுக்காக அவளை உங்க அம்மா மாதிரியே தவிக்க விட சொல்றியா ஆத்தா”.
“இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லப்பா. அத்தை சொல்லனும். நம்மைவிட அதிகமா அவமானப்பட்டது அவங்க தானே.”
“நான் பேசிட்டேன் ஆத்தா. என் தங்கச்சியும் “அவள் பண்ணது தப்புதான் அண்ணா. அவளுக்கு நம்மளைவிட்டால் யார் இருக்காள் வர சொல்லுண்ணாண்ணு சொல்லிட்டாள்” செம்பா.
“உண்மையா அத்தை அக்காவை வர சொல்லிட்டாங்களா”
“ஆமாடா!”
“அக்கா எப்போ வர்றதா சொன்னால் அப்பா.”
“நம்ம எல்லாரையும் பார்க்க அவ புருஷனோடு வர்றதா சொல்லிருக்காள்”.
“அக்காவுக்கு குழந்தை இருக்காப்பா”…
“எல்லாத்தையும் நான் நேர்ல வரும்போது பாருங்கன்னு சொல்லிட்டாள். ஆனால் எப்போ வர்றேன்னு சொல்லலை” என்றவருக்கு நெஞ்சு வலி அதிகமானது.
“ஆத்தா…!”
“என்னப்பா..?”
“நீ மனசார உன் அக்காவை ஏற்றுக்குவல்ல…”
“நான் ஏன்ப்பா அவளை வேண்டாம்னு சொல்ல போறேன். நம்ம வீட்ல ஒரு சந்திரா போதும்ப்பா” என்றவளை அணைத்தவர் “தன் மகளிடம் எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை”
“என்னப்பா..?”
“உன் முகத்துல சிரிப்பை பார்க்கனும் தங்கம்”.
“ப்பா.”
“நீ வாய்விட்டு சிரிச்சி, பல வருஷம் ஆகுது. எனக்காக சிரிக்கிரியா”
“ப்பா… ஏன்ப்பா இப்படியெல்லாம் கேக்குற, எனக்கு பயமா இருக்கு” என செம்பா அழ…
“ஏங்க இப்படி கஷ்டபடுத்துறிங்க உங்களுக்கு ஏதாவது செய்யிதா? வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என சந்திரா சொல்ல… செம்பா உடனே தன் போனை எடுத்து சமருக்கு அழைப்பை விடுத்து உடனடியாக வீட்டிற்கு வர சொல்ல, அவளின் பதட்டம் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பதை உணர்ந்தவன் பாலாவையும் அழைத்துகொண்டு கிளம்பினான்.
அதற்குள் கோகி, ராசாத்தி வந்துவிட்டனர்.
“ஆத்தா சிரியேன். அப்பா கடைசியாக உன் சிரிச்ச முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் உனக்கு நல்ல அப்பனா இல்லை. ஆனால் இனிமே உன் கூடவே இருப்பேன். ஒவ்வொரு நிமிஷமும் உன்னை சுத்தி வருவேன் சிரி ஆத்தா” என்றார் அவரும் சிரித்தபடியே.
சந்திரா கண்ணிர் விட “ஏன் சந்திரா அழற.. என்னால் நீ இழந்தது ரொம்ப அதிகம். எனக்கு என்னைக்குமே ராணி. உன் உண்மையான நேசத்துக்கு முன்னாடி என் காதல் எல்லாம் கால் தூசுக்கு சமம்தான். நான் உன்னைவிட்டு போனாலும் நீ இப்படியேதான் இருக்கனும். எனக்காக இனிமே நீ எதையும் இழக்க கூடாது” சந்திரா சத்தமாக அழ ஆரம்பித்தார்.
“அண்ணே ஏன்னே இப்படி பேசுற. நீயில்லாமல் நாங்க என்ன பண்ணுவோம். வாண்ணே ஹாஸ்பிடல் போலாம். சிவம் வரமாட்டேன் என அடம்பிடிக்க “செம்பா அண்ணணை தூக்கும்மா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றார் ராசாத்தி. கோகி, செம்பா இருவரும் தூக்க போகவும் சமர், பாலா இருவரும் உள்ளே வந்தனர்.
சமர் சிவத்தை சோதித்து பார்த்தவன் உடனே அட்மீட் பண்ணணும். ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. “பாலா காரை ஸ்டார்ட் பண்ணு” என சிவத்தை தூக்க போக அந்த நிமிடமே தன் மகளை மனைவியை பார்த்தபடியே உயிரை விட்டார் சிவம். நான்கு பெண்களும் கதறி அழ அதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செம்பா “அப்பா நான் சிரிக்கிறேன் பாரு, அப்பா பாருப்பா சிரிக்கிறேன்” என அழ,… சந்திரா சிவத்தின் கையை பிடித்து அவரின் முகத்தை பார்த்தபடி ஏங்கி ஏங்கி அழுதவர், நெஞ்சை பிடித்தபடி அப்படியே சிவத்தின் மீது சாய்ந்தார்.
செம்பா அம்மா, அம்மா என எழுப்ப அவரிடம் எந்த அசைவும் இல்லை. தன் கணவனின் கையை கோர்த்தபடி அவருடனே தன் பயணத்தை தொடங்கிவிட்டார் சந்திரா.
செம்பாவிற்கு என்ன நடந்தது என புரியவே சில நிமிடங்கள் எடுத்தது. ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் பறிகொடுத்துவிட்டு அவள் முகத்தில் தெரிந்த கலக்கம் சமரின் மனதை பிசைந்தது. அவள் அருகில் சென்று ஆறுதல் சொல்லகூட முடியாமல் தள்ளி நின்றவனின் மனம் வெதும்பியது. பாலாதான் செம்பாவை சமாதானம் படுத்தினான். கோகி ஒருபுறம் ராசாத்தி ஒருபுறமென அழுதபடியே இருந்தனர். யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லமுடியாத நிலை. ராசாத்திக்கே தன் அண்ணனைவிட சந்திராதான் எல்லாம். கணவனின் தங்கையாக நினைக்காமல் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து வாழ்ந்தவர். இன்று இருவரும் ஒரே நேரத்தில் தங்களை விட்டு சென்றதை நம்பமுடியாமல் கலங்கி போய் இருந்தனர்.
விஷயம் கேள்விபட்டு குகன், பாலாவின் நண்பர்கள் ஊரில் சிலர் வந்துவிட்டனர். ஊரில் உள்ளவர்கள் சடலங்களை எடுப்பதற்கான வேலையில் இறங்கினர்.
செம்பாவின் மனதை இருளாக்கி சூரியன் மெல்ல உதயமானான். வீடு முழுவதும் அழுகை சத்தமாய் இருக்க… வாசலில் வந்து நின்றனர் நாராயணன், சோலையம்மாள் இருவரும். காலையில்தான் விஷயத்தை பாலா அவர்களிடம் கூறினான். தெரிந்ததும் வீட்டில் இருந்து கிளம்பினர். கற்பகம் வரவில்லை.
சோலையம்மாள் நடக்க முடியாமல் வந்தவர். தன் மகளின் சடலத்தை கண்டு மயங்கி விழுந்தார். அவர் முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பி வைக்க, “ஐயோ என் தங்கமே ஒரே பொண்ணுணு தரையில் நடக்கவிடாமல் செல்லம் கொடுத்து வளத்தேனே. இப்படி என்னை விட்டு இடையில் போறதுக்கா. என் தங்கமே, பெத்த வயிறு பத்தி எறியிதே, நான் இருக்கேனே நீ என்னை விட்டு போய்ட்டியே, என் ராசாத்தி என்கிட்ட பேசலைன்னாலும் என் கண்ணுமுன்னே இருக்கியேன்னு நினைச்சேனே, இப்படியே என் வாயில் மண்ணை அள்ளி போட்டு நீ போய்ட்டியே’ என ஒப்பு வைத்து அழ நாராயணன் அங்கேதான் நின்றிருந்தார். அவர் மனதிலும் அதுதான் ஓடியது. வெளியே எங்கே பார்த்தாலும் கற்பகம் இல்லையென்றால் அவளை பார்த்து சிரித்து “நல்லாயிருக்கியா” என கேட்பார் நாராயணண். அதற்கு சிரித்தபடியே பதில் சொல்லிவிட்டு செல்வார், ஒருநாளும் சிரிப்பு இல்லாமல் பார்த்தது இல்லை. இன்று தன் தங்கை இல்லை என்பதை அவரால் தாங்கமுடியவில்லை. ஆண்பிள்ளை என்பதால் அழ முடியாமல் நின்றார் நாராயணண்.
அழுது அழுது ஓய்ந்து ராசாத்தியின் மடியில் படுத்திருந்தாள் செம்பா. சிவத்தின் உறவினர்கள் தான் எல்லா வேலையும் பார்த்தனர்.
மாலையும் கையுமாக ஊர் ஆட்கள், உறவினர்கள் வந்து கொண்டிருக்க, அப்போது ஒரு கார் வந்தது. அங்கிருந்தவர்கள் அந்த காரை பார்க்க, அதிலிருந்து இறங்கினாள் ரஞ்சி.
செம்பா நீ வேலைக்கு போகலையா?” என சந்திரா கேட்க…
“கிளம்பனும்மா”
“என்ன ஆச்சுடி உடம்பு முடியலையா”
“நான் நல்லாத்தானே இருக்கேன்ம்மா. மதிய டியூட்டி தானே போகனும். நம்ம ஊர்ல மெடிக்கல் கேம்ப் நடக்குதுல்ல உன்னையும் அத்தையையும் கூப்பிட்டு போகலாம்னு யோசிக்கிறேன்”.
“எங்களையா?”
“ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.”
“வேற வேலை இருந்தா பாறேன்டி”.
“அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க, உங்களை டாக்டர்கிட்ட காமிச்சிட்டு அதுக்கப்புறம் தான் நான் வேலைக்கு போறேன்” என்றாள் செம்பா.
செம்பா சொன்ன பின் அதை மாற்றிக் கொள்ள மாட்டாள். என்பதால் இருவரும் கிளம்பி அவர்களோடு மெடிக்கல் கேம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
கோகியை பார்த்து கண்ணை காட்டினால் செம்பா.
“என்னடி” என கண்களால் கோகியும் சைகை செய்ய,
“ஜித்துவை பார்க்கனும்” என சைகையால் சொல்ல…
“முடியாது” என கோகி தலையசைக்க, “கொன்னுடுவேன்” என்றாள் செம்பா.
“அம்மா, அத்தை நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, உங்களுக்கு எந்த டாக்டர் பாக்கணும்னு நாங்க போய் விசாரிச்சுட்டு வந்துடுறோம்” என்றதும் ராசாத்தியும் சந்திராவும் அங்கே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்தனர்.
இருவரும் அவர்களை விட்டு கொஞ்சம் துயரம் தள்ளி வந்து “கோகி நீ அம்மாவையும் அத்தையும் பாத்துக்கோ, நான் போய் ஜித்துவை பார்த்துட்டு வந்துடறேன்” என்றாள் செம்பா.
“சீக்கிரம் வந்துடு செம்பா. அம்மா கேட்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது”
“வந்துடறேன்” என்றவள் சமர் இருக்கும் இடத்திற்கு செல்ல, இங்கே கோகியோ அப்படியே நடந்தவள் கோகுல் செல்வதை பார்த்து அவனை பின் தொடர்ந்தாள்.
“ஓய் டாக்டரே” என்க… இந்த காந்த குரலை எங்கேயோ கேட்டு இருக்கிறோமே” என திரும்பினான் கோகுல்.
“அட குள்ள கத்திரிக்கா நீ இங்கே என்ன பண்ற”
“உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட வந்தேன் டாக்டரே”
“நான் உன்னை கூப்பிடவே இல்லையே”
“நீ கூப்பிட்டு தான் நான் வரனுமா?”
“அது சரி. கையை வீசிட்டு வந்திருக்க எங்கே சாப்பாடு”
“ரொம்ப ஆசைதான் உனக்கு. உன்னை பார்த்தேன், அதான் பின்னாடியே வந்தேன்”
“அதானே பார்த்தேன். நீ வாயாலே வடை சுடுவியே, நீ எப்படி எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு கொண்டு வந்து இருப்பேன்னு”
“ரொம்ப பேசாதைய்யா”
“சரி நீ இங்கே என்ன பண்ற? நீங்களே பெரிய நர்ஸம்மா நீங்க டாக்டரை தேடி வந்திருக்கீங்க”
“என்ன நக்கலா”
‘இல்லை கத்திரிக்காய் சும்மா கேட்டேன்.”
“போயா, போய் உன் டாக்டர் வேலைய பாரு”
“அது எங்களுக்கு தெரியும் நீங்க தான் என்ன வேலை செய்ய விடாமல் டிஸ்டர்ப் பண்றீங்க”
“இல்லனா மட்டும் சார் எல்லாத்தையும் காப்பாத்திட்டுதான் சோத்துல கையை வைப்பாரு”
“ரொம்ப பேசுற, ஊசி எடுத்து உன் வாயை தைக்க போறேன் பாரு”
“முதல்ல ஒழுங்கா வந்திருக்கிற நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க, என்கிட்ட வாயை கொடுத்து வீணா புண்ணாக்குக்காதிங்க”, என முகத்தை வெட்டிய படி சென்று விட்டாள்.
“சரியான பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன் போல” என நோயாளிகளை பார்க்க சென்றான் கோகுல்.
செம்பா சமர் இருக்கும் அறைக்கு முன் வந்தாள்.
உள்ளே சமர் நோயாளியை பார்த்துகொண்டு இருக்க, உள்ளே இருந்த நபர் வெளியே வரவும் உள்ளே நுழைந்தாள்.
தன்னவளை பார்த்ததும் முகம் பிரகாசித்தது.
“மேடம் என்ன இந்த பக்கம்”
“உங்கள பாக்கணும்னு தோணுச்சு அதான் கிளம்பி வந்துட்டேன்”
“ப்பா… உடம்பெல்லாம் புல்லரிக்குது.” மேடம் வாயால் என்னை பார்க்க வந்திருக்கேன்னு சொல்றதை கேக்குறதுக்கு”
“இப்படி பேசுனிங்க நான் வெளியே போய்டுவேன்.”
“ சரிங்க மேடம் நான் எதுவும் பேசலை. நீங்க ரொம்ப பிஸியான ஆள். என்னை எல்லாம் மீட் பண்ண உங்ககிட்ட நாங்க அப்பாயின்மென்ட்ல வாங்கணும். நீங்க வந்ததும் ஆனந்த அதிர்ச்சியாகிடுச்சி”
“போதும் கிண்டல் பண்ணது.”
“சரி வா அங்கேயே நிற்குற… இங்கே உட்கார்.”
“அங்கே இருந்த மரபெஞ்சில் இருவரும் ஒன்றாய் அமர்ந்தனர்.”
இருவருக்கும் இடையில் இன்னொருவர் உட்காரும் அளவிற்கு இடைவெளி இருந்தது.
அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொள்ள செம்பா நெளிந்தாள்.
“என்ன ஆச்சி…”
“அ…அது ம்ம்ம் ஒன்..ஒன்னும் இல்லை…”
“என்ன இவ்வளவு தடுமாற்றம்”
“தெரியலை ஜித்து. உங்க பக்கத்துல இருந்தாலே மனசெல்லாம் படபடன்னு இருக்கு, லேசாக வியர்வை அவள் முகம், கழுத்து, கைகளில் பூக்க ஆரம்பித்தன.”
“ஏன் இவ்வளவு பயம். நான் உன்னை என்ன பண்ண போறேன் பட்டாசு”
“பயம் இல்லை ஜித்து.”
“புரியிது…. சரி நீ என்ன பார்க்க மட்டுமா வந்த”
“இல்லை ஜித்து, அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் பலவீனமா இருக்கு, அதான் டாக்டரை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். வெளிய எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டாங்க. ஏதாவது மூலிகை மருந்து காய்ச்சி குடிச்சிட்டு வீட்ல படுத்துடுறாங்க. சரி நம்ம ஊர்லதானே அதனால நம்மளே கூப்பிட்டு காமிச்சுட்டு போகலாம்னு வந்தேன்.”
“அம்மா எங்கே?”
“அம்மா வெளியே தான் உட்கார்ந்து இருக்காங்க, நான்தான் உங்களை பார்க்கலான்னு இங்கே வந்தேன்.
சரிங்க நான் கிளம்புறேன்.”
“இப்போதானே வந்த பட்டாசு, உடனே போகணுமா” என்றவனின் பார்வையில் ஒருவித ஏக்கம்”
“நீங்க வேலை செய்ற இடம். நான் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கிறது நல்லா இருக்காது. நான் கிளம்புறேன் என எழுந்தாள். சமர் இன்னும் அவள் கரங்களை விடவில்லை”.
“சரி பட்டாசு நைட் உனக்கு வேலை எப்போ முடியும்”
“ஏழு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும் ஜித்து”.
“சரி அப்போ நான் வழக்கமா, மீட் பண்ற இடத்துல வெயிட் பண்றேன் நீ மறக்காம வந்துடு.”
“சரிங்க என்றவளின் பார்வை சமரின் கரங்களின் மீது படிய, அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவன் ஒவ்வொரு விரல்களாய் விருப்பம் இல்லாமல் விடுவித்தான்.”
செம்பா வெளியே வர பாலா அவள் முன் வந்தான்.
செம்பா பேசாமல் அப்படியே நிற்க… பாலா அவளை பார்த்து சிரித்தவன் “என்ன பாப்பா சமரை பார்க்க வந்தியா”, என ஒரு சிரிப்புடன் கேட்க…
அவனைப் பார்த்து முழித்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும் பாப்பா சமர் என்கிட்ட சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷம். என் பாப்பாக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது, சமர் ரொம்ப நல்லவன் உன்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்.”
“சரி மாமா நான் வரேன் அம்மா வெயிட் பண்றாங்க” என செம்பா வர கோகி அவள் முன் வந்தாள்.
“என்னடி, உன் ஆளை பார்த்துட்டியா?”
“ஆமா”
“அண்ணா என்ன சொன்னார்?”
“ஒன்னும் சொல்லலை’
“ஒன்னும் சொல்லலையா? இதை போசத்தான் போனியா. உங்க ரெண்டு பேரையும் 10 வருஷமா லவ் பண்றாங்கன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க.”
“வாயை மூடிட்டு வா. எனக்கு எல்லாம் தெரியும். அம்மா எந்த டாக்டர்கிட்டே போய்ருக்காங்க”
“ஆத்விகா”
“ஆத்விகாவா?”
“ஆமா அந்த டாக்டர் தான்”.
“அம்மா, அத்தையும் பார்த்துட்டாங்களா.?”
“இல்லை செம்பா வரிசையில் உட்கார்ந்து இருக்காங்க.”
“ சரி வா என இருவரும் சந்திரா ராசாத்தி இருக்குமிடத்தில் வந்து அமர்ந்தனர்.”
“எங்கடி போனிங்க.?”
“போனிங்களாவா? இவ இங்கே இல்லையா” என சந்தேகமாக செம்பா கோகியை பார்க்க…
“நா..நான் உன்னை தேடி வந்தேன் செம்பா.”
“நம்புற மாதிரி இல்லையே உன் கண்ணுல திருட்டுத்தனம் தெரியிதே”
“ஆஹ் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல செம்பா”
“ஒருநாள் மாட்டுவடி, அப்போ இருக்கு உனக்கு”
“அது அப்போ பார்க்கலாம்”
“அப்போ திருட்டுவேலைதான் பார்த்திருக்க” என செம்பா சொல்ல
“ஐயோ இல்லடி’ என இருவரும் மாற்றி மாற்றி பேச, சந்திரா பெயரை அழைத்தனர். செம்பாதான் உள்ளே அழைத்து சென்றாள்.
ஆத்வி செம்பாவை பார்த்ததும் எதுவும் பேசவிலை. சந்திராவிற்கு என்ன செய்கிறது என விசாரித்தாள். அவரை செக் செய்தவள் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லம்மா. நல்ல சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க. இரத்ததில் ஹிமோகுளோபின் அளவுதான் கம்மியா இருக்குற மாதிரி இருக்கு. உடம்பை கவனிச்சிக்கோங்க. குறிப்பிட்ட வயது தாண்டியதும் பெண்கள் உடம்பு ரொம்ப பலகினமாகிடுது. மனசுளவுல தைரியமாக இருந்துதாலும் உடம்பால இருக்க முடியலையே. நல்லா சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்க சரியாகிடும்” என்றாள் ஆத்வி.
“சரிம்மா” என்றார் சந்திரா.
“ நீங்க வெளியே இருங்கம்மா, நான் மாத்திரை எழுதி தர்றேன்” என்றதும் செம்பா சந்திராவை வெளியே அனுப்பிவிட்டு மருந்து, மாத்திரை ரசிதை வாங்கிவிட்டு வெளியேற போக “ஒரு நிமிஷம்” என்றாள் ஆத்வி.
செம்பா திரும்ப, “உங்ககிட்ட நான் ரொம்ப திமிராவே நடந்துருக்கேன். அப்போ அது தவறா தெரியலை. பணத்திமிர்ல என்ன பேசுறதுன்னு தெரியாமல் பேசிருப்பேன். என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் ஆத்வி.
சமர் செம்பாவிடம் ஆத்வி குகனை விரும்புவதை பற்றி சொன்னது நியாபகத்தில் வந்தது.
ஆத்வி பேசியதை பெரியதாக எடுக்காமல் “பரவாயில்லங்க, எங்க குகன் மாமாவை கல்யாணம் பண்ணி எங்க வீட்டு மருமகளா வரப்போறிங்க. உங்க மேல கோபப்பட முடியுமா?” என்றதும் ஆத்வியின் முகம் செவ்வானமாய் சிவந்தது.
“இப்போ வரை உங்க மாற்றம் என்னால் நம்ப முடியலைங்க ஆச்சரியமாய் இருக்கு என்றாள் செம்பா. உண்மையிலேயே செம்பாவிற்கும் ஆச்சரியமதான்.
“என்னாலயே நம்ப முடியலைங்க… ஆனால் நான் அவரை விரும்புறது உண்மை. அவர் என்னை கிணற்றில் இருந்து காப்பாற்றும் போதுகூட அவரோட கைகள் என்மீது தவறா படலை. அந்த நிமிஷம் எனக்கு சுயநினைவு இருந்தது.” அதை நினைக்கும்போது இன்னும் அவர்மீது காதல் அதிகமானதே தவிர குறையலைங்க.”
ஆத்வியின் முகத்தில் குகனை பற்றி பேசும்போது முகம் முழுவதும் பூரிப்பு. அதுவே அவளின் காதலின் அளவை சொன்னது. செம்பாவிற்கும் இனிமே குகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை துளிர்த்தது.
ஆத்வி சிரித்த முகமாக “அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க, ஹிமோகுளோபின் ரொம்ப குறைவான இருக்கு. ட்ரிப்ஸ் மூலமா ஹொச்.பி அதிகமாகும் மருந்து போடுற நிலைமைதான். நீங்க ஹாஸ்பிடல் வேர வொர்க் பண்ணுறிங்கல்ல, அங்கே வாரத்திற்குள் ஒரு மருந்துன்னு நாலு வாரத்துக்கு ஒரு ட்ரிப்ஸ் ஏற்றுங்க, அவங்களுக்கு எல்லாம் சரியாகிடும். அதை கவனக்குறைவாக விட்டால் இதயம் பலவீனமாகிடவும் வாய்ப்பு இருக்கு.
“சரிங்க நான் பார்த்துக்கறேன்.”
என ராசாத்தியையும் ஆத்விகாவிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். நேரம் கடந்ததும் கோகி, செம்பா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.
நல்லசிவம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்க, அவரை பார்த்த கற்பகம் “ஏய் இங்கே வா” என்றார். முதலில் நல்லசிவம் கவனிக்காமல் செல்ல அடுத்த வார்த்தை “ஓடுகாலியை கட்டின பிச்சைகாரா” என அழைத்ததும் இவளுக்கு வேற வேலை இல்லை என கண்டும் காணாமலும் செல்ல, “இப்போ நீ இங்கே வரலை, இதைவிட மோசமா பேசுவேன் எப்படி வசதி.” என்றதும்
“ச்சை இவளாம் என்ன ஜென்மமோ” என அவளிடம் வந்தார் சிவம்.
“என்ன கூப்பிட கூப்பிட!, எட்டிப் பார்க்காமல் போற அவ்வளவு திமிராயிடுச்சா?”
“நீ கூப்பிட்டதும் வரதுக்கு நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா. இல்ல உங்களுக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? எதுவுமே கிடையாது, அப்புறம் எதுக்கு நீ கூப்பிட்டு நான் வரணும்”
“ஓஹ் குடிக்கலையா ரொம்ப தெளிவா இருக்க போல, அதான் இப்படி பேசுற”
“எதுக்காக கூப்பிட்டீங்கன்னு சொன்னால் நல்லா இருக்கும்”
“ஏன் வெட்டியாதான குடிச்சிட்டு ஊரை சுத்திட்டு திரியிற? ஏதோ வேலைக்கு போய் சம்பாதிக்கிற மாதிரி சலிச்சிக்கிற”
“நான் எப்படியும் இருப்பேன். எதுக்கு கூப்பிட்டிங்க அதை சொல்லுங்க”
“எங்க உன் மகள் ரெண்டாவது மினுக்கி”
“என் ஆத்தாவை ஏன் நீங்க தேடுறீங்க?”
“அந்த ஆளுமயக்கி எங்க இருக்கான்னு தெரியுமா?”
“என் பொண்ண பத்தி தவறாக பேசுற வேலை வச்சுக்காதீங்க, இல்லை இங்கே நடக்கிறதே வேற”
“என்ன பண்ணுவ, உன் மூத்த பொண்ணு எவன் கூட போனாளோ, எங்க இருக்காளோ, இருக்காளா செத்தாலா எதுவுமே உங்களுக்கு தெரியாது. இதோ இவ நல்ல பணக்கார பையனா பார்த்து வளைத்து போட்டுட்டாள். கொஞ்சம் அழகா இருந்ததும் உடனே அவர்களும் மயங்க தானே செய்றாங்க”
“தேவையில்லாமல் என் பொண்ணை பற்றி பேசுறீங்க…”
“யாரு தேவையில்லாம பேசுறா? உன் பொண்ணு உடம்புக்கு ஏதாவது வியாதியா?”
‘என் பொண்ணு உடம்புக்கு என்ன? அவ நல்லாதான் இருக்காள்”
“அப்புறம் எதுக்கு மெடிக்கல் கேம்ப்ல இருக்கிற டாக்டரை போய் தனியா உன் பொண்ணு பாக்குறாள்”
“அது என் பொண்டாட்டிய கூப்பிட்டு போனாள். உனக்கு கண்ணு தெரியலன்னா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது”
“உன் பொண்டாட்டிய பார்த்தது வேற டாக்டர். உன் பொண்ணு பார்த்தது வேற டாக்டர். சொன்னா நம்ப மாட்டல்ல, இரு என தன் போனை எடுத்து செம்பா சமரின் அறைக்குள் சென்றதையும் சிறிது நேரம் கழித்து வெளியே வருவதையும் வீடியோவாகவே எடுத்து வைத்திருந்தார் கற்பகம்.
அவர் ஏதேச்சையாக கேம்ப் நடக்கும் இடத்திற்கு வர, அங்கே செம்பா சமர் அறைக்கு செல்வதை பார்த்தவர் தன் போனில் வீடியோ எடுத்திருந்தார்.
“நல்லா பாரு அவ மட்டும்தான் உள்ள போறாள். 15 நிமிஷம் கழிச்சு வெளியே வறாள். அதுவும் ஆம்பள டாக்டர். என்ன காரணமா இருக்கும் சிவம். போகும்போது உன் பொண்ணு முகத்தை பாரு இத்தனை நாள்ல உன் பொண்ணு முகத்துல இப்படியொரு பிரகாசத்தை பார்த்திருப்பியா. அதிலையே தெரிய வேண்டாம், அந்த பையனை மயக்கி இவ முந்தானையிலே முடிச்சு வச்சுக்கிட்டாள். அவனும் நல்ல வசதியான வீட்டுப் பையன். அதுவும் ஒரே பையன். அப்படிங்கிறப்போ சொத்து எல்லாம் இவளுக்கு தானே வரும்னு தெரிந்து மயக்கிட்டாள் போல” என வாய்க்கு வந்த படி பேச…
“என் பொண்ணு அப்படிப்பட்டவை இல்ல” என்றார் நல்லசிவம்.
“இவ்வளவு தூரம் விவரமா சொல்றேன். நம்ம மாட்ற, சரி பரவாயில்லை. வேணும்னா பாரு இவளும் உன்னை ஏமாத்தி வீட்டை விட்டு ஓடி தான் போக போறாள். நீதான் நினைச்சுட்டு இருக்கணும் என் பொண்ணு என்னைய ஏமாத்திட்டு போக மாட்டான்னு, நீ கல்யாணம் முடிவான பொண்ணை மனசாட்சியே இல்லாமல் இழுத்துட்டு போனல்ல, அதே மாதிரி இவளும் ஓடி போவாள். என் சாபம் உங்களை சும்மா விடவே விடாது. உன் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒழுங்காவே நீ கல்யாணம் பண்ணி பார்க்க மாட்ட, வேணும்னா பாரு நான் சொன்னது நடக்குதா இல்லையா என்று ஓடுகாலிக்கு பிறந்தவள் ஓடு காலியாதானே இருப்பாளுங்க. நல்ல தாய்க்கு பிறந்திருந்தாள் நல்ல எண்ணம் இருக்கும். அவ எப்படி எங்களை அவமானபடுத்தினாளோ அதே மாதிரி உன் ரெண்டு பொண்ணுங்களும் உங்களை நடுரோட்ல நிற்க வைப்பாங்க, ஊரே பார்த்து சிரிக்கும். எங்களுக்கு நடந்தப்போ எப்படி வலிச்சிருக்கும், அதே வலியை நீங்க அனுபவிக்க வேணாமா? நீ ஏன் அனுபவிக்க போற, உன் பொண்டாட்டி மூலமா சொத்து, பணம் வரும், வேலைக்கு போகாமல் பொண்டாட்டி வீட்ல உட்கார்ந்து சாப்பிடலாம்னு எதிர்பார்த்து இருந்திப்ப, அது வராமல் போயிடுச்சு. இப்போ உன் பொண்ணு மூலமா நீ ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கபோகுது. வாங்கி நல்லா குடிச்சு கூத்தடி, அதுக்குத்தானே ரெண்டு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்க” என அவரின் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் வார்த்தையால் கொட்ட,
“போதும்” என கையெடுத்து கும்பிட்ட சிவம் அங்கிருந்து கிளம்பி விட்டார். கற்பகம் சொன்னதை அவர் நம்பவில்லை. செம்பா மீது தான் அவருக்கு நம்பிக்கை அதிகம். “அவளை இப்படி பேசிவிட்டாரே” என அவரின் மனம் வெம்பியது இன்றைக்கு குடிக்க வேண்டாம் என நினைத்தவர் மூக்கு முட்ட குடித்தபடி வீட்டிற்கு சென்றார்.
இங்கு தாரிக்கா தன்னுடைய வீட்டிற்கு சென்றவள் தோல்வியை ஏற்க முடியாமல் தனியாக கத்தி கதறி அழுது கொண்டிருந்தாள். ‘இந்த பாலாவை நம்பி ஹர்ஷாவை விட்டு வந்து பெரிய தவறு செய்துவிட்டோமே’ என்று அவளது மனம் அடித்துக் கொண்டது.
அதிலும், ‘அம்ருதா இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது நான் வாழ வேண்டிய வாழ்க்கைதானே? எப்படி இதை நான் தவற விட்டேன்?’ என்று தாரிக்கவின் மனமோ ஆதங்கத்தில் அலறி கொண்டிருந்தது.
அதே நேரம் யாருக்கும் தெரியாமல் தாரிக்காவின் வீட்டிற்குள் நுழைந்தான் பாலா. அழுது கொண்டிருப்பவளை பார்த்து ‘நீ இப்படி அழறதை பார்த்தா கேஸ்ல தோத்து போய்ட்ட போலயே?’ என்றதும் தாரிக்காவிற்கு எரிச்சல் மேலிட்டது.
“நீ எப்படி இங்க வந்த? யாராவது பார்த்திருந்தா என்ன ஆகுறது? ஏன் வந்த?” என்று கேட்க,
“அதெல்லாம் யாரும் என்னை பார்க்கல. அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியவனுக்கு தெரியவில்லை ஏற்கனவே ஒருவர் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டார் என.
“சரி சொல்லு. உன்னோட விஷயம் என்ன ஆச்சு? மொத்தமா ஊத்திகிச்சா?”
“வேண்டாம் பாலா.. நானே கடுப்புல இருக்கேன். எதுவும் பேசாத”
“கடுப்பா..? சரி இருந்துட்டு போ.. எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. மொத்ததிக்கும் எங்கயாவது போய் தலை மறைவாகிடலாம்னு இருக்கேன்.உன்கிட்ட இருக்க பணத்தை கொடு” என்றதும்,
“பணமா..?? என்கிட்ட எங்க இருக்கு பணம்? நான் இருக்க நிலைமைக்கு நீ வேற..”
“நான் ஒன்னும் சும்மா கேக்கல. கொஞ்ச காலமா நான்தான் உனக்கு மொத்த செலவையும் பார்த்திருக்கேன். அதை முதல்ல கொடு” என்றதும்,
“முடியாதுடா. போயும் போயும் நீ ஒரு ஆளுன்னு உன்னை நம்பி ஹர்ஷாவை விட்டுட்டு வந்தேன் பார்த்தியா? எனக்கு இது தேவைதான். அவன் தகுதி என்ன? உன் தகுதி என்ன?” என்று மனதில் இருப்பதை கொட்ட துவங்கினாள் தாரிக்கா.
“வேண்டாம் டி.. என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பேசாத” என்றான் மிரட்டும் குரலில்.
“அப்படித்தான்டா பேசுவேன். நல்லா வாழ வேண்டிய என்னுடைய வாழ்க்கையை கெடுத்து நாசம் பண்ணினவனே நீதானே? இப்போ நான் வாழ வேண்டிய வாழ்க்கையை அந்த அம்ருதா வாழ்ந்துட்டு இருக்கா. நான் உன்னை மாதிரி ஒரு ஆள் கூட சேர்ந்து என் வாழ்க்கையை நானே கெடுத்துக்கிட்டேன்.” என்றதும்
பாலாவிற்கு இவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அது புரியாமல் தோற்று போன ஆத்திரத்திலும் ஹர்ஷா, அம்ருத்தா மீதான வன்மத்திலும், கத்தி கொண்டிருந்தாள் தாரிக்கா.
முன்பு ஆசை காதலனாக தெரிந்த பாலா இன்று ஒன்றுக்கும் உதவாதவனாக தெரிந்தான். பாலாவுக்கோ கோபம் எல்லையை கடக்க இப்போது வந்த காரியம்தான் முக்கியம் என்று எண்ணியவன்,
“இப்படியெல்லாம் பேசாத தாரிக்கா. எனக்கு ஆத்திரமா வருது. பணத்தை கொடு நான் போயிடுறேன். தேவையில்லாம பேசாத” என்றான்.
“பேசினா என்னடா பண்ணுவ? கொன்னுடுவியா? உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? பிச்சக்கார பயலே” என்று கூற,
“என்னடி.. விட்டா ரொம்ப பேசுற? நான் கொஞ்சம் நல்லா பேசினதும் கட்டின புருஷனை விட்டுட்டு என்கூட வந்தவதான நீ? என்னமோ பத்தினி மாதிரி பேசுற?”
“என்னடா எப்போ பார்த்தாலும் இதைவே கேக்குற? நீ மட்டும் என்ன யோக்கியமா? அடுத்தவன் பொண்டாட்டிய பேசி பேசியே மயக்கி கூட்டிட்டு வந்தவன் தானே நீ? அதோட விட்டியா? அந்த நிரஞ்சனாகிட்ட தப்பா நடந்துக்க பார்த்துதானே இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிட்டு திரியுற? நான் பத்தினி இல்லைதான். ஆனா நீ என்ன உத்தமனா?” என்றதும்,
ஆத்திரத்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடியை எடுத்து தாரிக்காவின் தலையிலேயே பலமாக அடித்துவிட்டான் பாலா. அடித்த வேகத்தில் சுருண்டு விழுந்தவள் தான். பேச்சு மூச்சின்றி அப்படியே கிடந்தாள். கோபம் தலைக்கேறி போயிருந்தவன் இதை முதலில் கவனிக்கவே இல்லை.
“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படியெல்லாம் பேசுவ?” என்று ஆத்திரத்தில் அவன் கத்திக் கொண்டிருக்க, மடமடவென உள்ளே நுழைந்தனர் போலீசார். பாலாவோ அதிர்ச்சியில் விழிகள் விரிய பார்க்க, இரண்டு காவலர்கள் அவனை பிடித்து கொள்ள ஒருவர் மட்டும் சென்று கீழே மயங்கி விழுந்து கிடந்த தாரிக்காவை எழுப்ப பார்க்க அவள் எழவே இல்லை.
தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்த காவலரோ உடனடியாக அவளை மருத்துவ மனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவரோ தாரிக்காவின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என்று கூற, பாலாவிற்கோ உச்ச பட்ச அதிர்ச்சி.
பாலாவிடம் தாரிக்கா பற்றி விசாரிக்க அவளுக்கு யாரும் இல்லை என்பதால் வேறு வழி இன்றி ஹர்ஷாவின் குடும்பத்தினரிடமே விடயத்தை தெரிவித்தனர். அவர்களுக்கும் அதிர்ச்சியே. என்னதான் அவள் தங்களுக்கு கேடு செய்தவளாகவே இருந்தாலும் அவளது இறப்பு செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
உடனடியாக ஹர்ஷாவும் அவன் குடும்பத்தினரும் மருத்துவமனை சென்றவர்கள் அவளது இறுதி காரியத்தை செய்து முடித்தனர். தாரிக்கா செய்த வினை அவளையே சுட்டெரித்தது இன்று.
பாலாவை இழுத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்ற போலீசார் அவன் மீது தடை செய்யப்பட்ட போதை பொருள் உபயோகித்தது, கற்பழிப்பு முயற்சி, கொலை பழி, என மூன்று விதமான வழக்குகளை பதிவு செய்தனர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
வெயில் உச்சியில் இருந்தது. சிறைச்சாலையில் கையில் பெரிய அளவு சுத்தியல் கொண்டு பெரிய கல்லை ஓங்கி ஓங்கி அடித்து இரண்டாக பிளந்து கொண்டிருந்தான் பாலா. அவனது முகத்தில் உடைந்த மண் துகள்கள் பட்டு எரிச்சலை ஏற்படுத்தி கொண்டிருந்தது.
கைகளில் சிராய்ப்புகள், அதிலிருந்து எட்டிப் பார்த்த இரத்தம், அதனால் ஏற்பட்ட எரிச்சல் என அவதிக்கு உள்ளாகி இருந்தாலும் கல் உடைப்பதை நிறுத்த முடியவில்லை. அருகில் ஒரு காவலர் பாலாவை கண்காணித்து கொண்டே இருந்தார்.
“கல்லை உடைச்சது வரைக்கும் போதும். உடைச்ச கல்லையெல்லாம் எடுத்துட்டு போய் அங்க கொட்டு போ..” என்றதும் பாலாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.
உடல் உழைப்பிற்கு பழக்கப்படாத உடல் முழுவதும் கடுமையான வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பாலாவின் குற்றங்கள் அனைத்தும் நிரூபணம் ஆனதால் பாலாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதித்து, ஆயுள் தண்டனையும் விதித்து இருந்தார் நீதிபதி.
வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த போது வராத அறிவு, இன்று சிறைச்சாலையில் கல் உடைக்கும்போது வந்திருந்தது.
‘ஏன்தான் நான் இப்படி புத்திகெட்டு போனேனோ? அடுத்தவன் மனைவி மேல் அசைப்படாமல் ஒழுக்கமாக வாழ்ந்து இருந்தால் இந்நேரம் நானும் குடும்பம், குழந்தை என நன்றாக வாழ்ந்து இருக்கலாமே?’ என்று காலம் கடந்து வருந்தியவன் விழிகளில் இருந்து உருண்டு திரண்டு விழுந்தது உவர் நீர்.
நிரஞ்சனா தன்னுடைய படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.
அம்ருதாவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைந்து இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு தர்ஷன் என்று பெயர் சூட்டி இருந்தனர்.
ஆத்யா முன்மழலையர் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள். தன்னுடைய தம்பியின் மீது அளவு கடந்த அன்பும், அவ்வபோது கொஞ்சுகிறேன் என்ற பெயரில் வம்பும் செய்து கொண்டு இருந்தாள். இருவரும் சேர்ந்து வீட்டையே ரணகளம் ஆக்கி கொண்டிருந்தனர்.
ஹர்ஷாவின் ரெஸ்டாரண்ட் பெரிய அளவில் பெயர் பெற்றிருந்தது. அம்ருதா உருவாக்கி கொடுத்த இன்டீரியர் டெகரேஷனின் மாதிரி வடிவத்தை பயன்படுத்தி சிறிதும் மாற்றமின்றி அப்படியே உருவாக்கி இருந்தான் ஹர்ஷா. ஒரு மாத காலம் முன்புதான் திறப்பு விழா ஏற்பாடு செய்து அம்ருதாவின் கைகளால் ரிப்பன் வெட்டியவர்கள் திறப்பு விழாவை சிறப்பாக செய்து முடித்திருந்தனர். ரெஸ்டாரண்ட் இப்போது முன்பை விட நிறைய வாடிக்கையாளர்களை பெற்று சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு வேலையில் ஹர்ஷாவின் குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர். காரணம் இன்று விடியற்காலை நிரஞ்சனாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் இரவு வேளை கூட பகல் போல கலகலவென இருந்தது.
அம்ருதா புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து அழகாக தாயாராகி கொண்டிருக்க, ஹர்ஷாவும் வேட்டி சட்டையில் தயாராகி நின்றிருந்தான். அம்ருதாவின் பின்னாலிருந்து வெற்றிடையில் கரம் பதித்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்,
“தங்கத்தை விட உன் முகம் ஜொலிக்குதே. நீ இரண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு சொன்னா யாருமே நம்பவே மாட்டாங்க தெரியுமா?” என்று கேட்டிட,
“நீங்க மட்டும் என்னவாம்? ஏதோ நீங்கதான் கல்யாண மாப்பிள்ளை மாதிரி பார்க்க அவ்வளவு அழகா இருக்கீங்களே..!!” என்றதும் அவளை தன்னை பார்க்க செய்தவன்,
அவளது கன்னம் இரண்டிலும் தன் கரத்தை பதிக்க, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்தவள்,
“வேண்டாம் ஹர்ஷூ.. கஷ்ட்டப்பட்டு ரெடியாகி இருக்கேன். தள்ளிபோங்க..”
“இவ்வளவு அழகா இருந்தா எப்படி தள்ளி போறதாம்? ஒரே ஒரு கிஸ் மட்டுமாவது பண்ணிக்கிறேன்டி. என்னை பார்த்தா பாவமா இல்லயா?” என்று கேட்டிட,
“யாரு நீங்க பாவமா? கிஸ் பண்ண விட்டா அப்புறம் மொத்ததிற்கும் நான்தான் பாவமாகி போவேன்” என்றவள் விலக பார்க்க,
‘இவளிடம் அனுமதி கேட்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவன், விலக பார்த்தவளை இழுத்து அணைத்து பட்டென அவளது இதழை கவ்வி கொண்டான்.
நீண்ட நேர முத்தத்திற்கு பின்னர் ஆத்யா அப்பாவென அறைக்கு வெளியில் நின்று அழைக்கும் சத்தம் கேட்ட பின்னரே மனமே இன்றி அவளை விட்டு விலகினான் ஹர்ஷ மித்ரன். அம்ருதா சிரித்து கொள்ள, “என் மகளால இப்போ நீ தப்பிச்சுட்ட. சிரிக்கிறியா நீ? இரு உன்னை அப்புறமா பாத்துக்கிறேன்” என்றவன் வெளியில் சென்று ஆத்யாவை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தான்.
தினேஷ், நிரஞ்சனா திருமணத்தை அருகில் இருந்த முருகன் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தனர். விடியற்காலை பொழுதில் நடக்கும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தினர்.
மணமகன் தினேஷ் ஐயர் கூறும் மந்திரங்களை திரும்ப கூறியப்படி பட்டுவேட்டி பட்டு சட்டையில் அமர்ந்து இருக்க, மணமகள் நிரஞ்சனா பட்டுப்புடவையில் அழகே உருவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நாணத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். தினேஷின் அருகில் அமர்ந்ததும் இருவர் மனதிலும் நீண்ட காலம் எதிர்பார்த்து காத்திருந்த திருமணத்திற்கான நாள் வந்ததில் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.
மந்திரங்கள் உச்சரிக்கப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, மங்கள நாணை நிரஞ்சனாவின் கழுத்தில் பூட்டி அவளை தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான் தினேஷ்.நெற்றியில் குங்குமம் வைத்து தன்னுடைய சரிபாதியாக ஏற்று கொண்ட பின்னர் இருவரும் சேர்ந்து அக்கினியை வலம் வந்தனர்.
தினேஷின் பெற்றோர், நிரஞ்சனாவின் பெற்றோர் காலில் விழுந்து மணமக்கள் இருவரும் ஆசி பெற்று கொண்டவர்கள் அடுத்ததாக ஹர்ஷாவின் பெற்றோரிடமும் ஆசி வாங்கி கொண்டனர்.
ரிசெப்ஷன் ஹர்ஷாவின் ரெஸ்டாரண்ட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவீன காலத்திற்கு ஏற்ப மேடை அமைத்து, பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, மணமக்கள் இருவரும் மேடையின் மீது நிறுத்தப்பட்டிருக்க, ஆட்டம் பாட்டத்துடன் சொந்தங்கள், நண்பர்களின் முன்னிலையில் மிகப்பெரிய அளவில் சிறப்பாக நடந்தேறியது.
ஹர்ஷாவும், அம்ருதாவும் மணமக்களை விட அழகாக இருந்தனர். இருவரும் பொறுப்பான தாய், தந்தையராக, அன்பான கணவன் மனைவியாக, ஒவ்வொரு நாளும் கூடி கொண்டே இருக்கும் காதலுடன் வாழ்ந்து வந்தனர். மூன்று குடும்பத்தினரும் மேடையில் ஒன்றாக நிற்க, ஆத்யாவை ஹர்ஷாவும், தர்ஷனை அம்ருதாவும் தூக்கி வைத்தபடி, மணமக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் இல்லை.
அனைவர் மனதிலும், முகத்திலும் புன்னகை நிறைந்து இருந்தது.
இன்று போல அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி இவர்களுடன் சேர்ந்து நாமும் விடைபெறுவோம். கதையுடன் சேர்ந்து பயணித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..
சுபம்..
அந்தியில் பூத்த சந்திரனே – 16
written by Competition writers
சில தினங்களுக்கு முன்பு அம்ருதாவிடம் வம்பிழுத்த அதே நபர்தான் தன் நண்பர்களுடன் மீண்டும் அம்ருதாவை பற்றியும் அவளது கடந்த காலத்தை பற்றியும் மோசமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசியதை கேட்டவர்கள்,
“அப்படீங்குற? ஒருவேளை இருக்குமோ?” என்றதும், “ஆமாம் டா” என்று சிரித்தபடியே அவர்களுக்குள் மேலும் பேச தொடங்க,
‘இன்னும் இங்கேயே நின்றால் தேவையில்லாத வார்த்தைகளை கேட்க நேரிடும். அம்ருதாவின் கடந்த காலத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டலோ அல்லது சண்டையிட்டாலோ, ஒருவேளை அது அம்ருதாவிற்கே அவமானமாக திரும்பிவிட்டால் என்ன செய்வது?’ என்று எண்ணியவன், ஐஸ் கிரீம் வாங்கியதும் வேகமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றான்.
அவனால் அம்ருதாவை பற்றி கிஞ்சித்தும் தவறாக நினைக்க முடியவில்லை. ஆனால் அவன் மனமோ ‘இது என்னடா பெரிய தலைவலி?’ என்று எண்ணி கொண்டது. எவ்வளவு முயன்றும் அவர்கள் பேசிய வார்த்தைகளில் இருந்தும் அதனால் ஏற்பட்ட குழப்பத்திலிருந்தும் வெளிவரவே முடியவில்லை. தன்னை சாதாரணமாக காட்டி கொள்ள முயன்று அதில் தோற்று போனான் ஹர்ஷா.
ஆத்யாவிடம் ஐஸ் க்ரீமை கொடுத்தவன் அமைதியாக அமர்ந்து கொள்ள, இவ்வளவு நேரம் நன்றாக பேசி, சிரித்து விளையாடியபடி இருந்தவன் திடீரென அமைதி ஆனதும் அம்ருதாவிற்குதான் என்னவோ போல் ஆனது. அவனது குழப்பமான முகம் அப்பட்டமாக தெரிய, ‘வேலையில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமா?’ என்று எண்ணி கொண்டவள் அவன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“நேற்று வரை நல்லாதானே இருந்தான்? இப்போது கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் கூட பிள்ளையுடன் மகிழ்ச்சியாக இருந்தானே? என்று எண்ணியவளுக்கும் முகம் வாடி போனது. கடலையே வெறித்தவாரு அமர்ந்திருந்தவன், பிறகு ஆத்யாவின் “அப்பா..” என்ற அழைப்பில் சுயம் அடைந்தான்.
சிறிது நேரம் ஆத்யாவுடன் செலவழித்த பின்னர் அம்ருதாவை பார்த்து, “கிளம்பலாமா?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு கேட்க, அவளுக்கோ அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
‘இது என்ன வேதனை? இப்போதான் ஏதோ கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். இந்த விதிக்கு அது பொறுக்கலையா?’ என்று எண்ணியவள் ஆத்யாவை தூக்கி கொண்டு அவன் பின்னாலேயே நடந்தாள்.
காரினுள் ஏறி வீடு செல்லும் வரைக்கும் கூட அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மனம் வாடி போனாள் அம்ருதா. ஆத்யா வெளியே வேடிக்கை பார்த்தப்படியே கேள்விகள் கேட்டு கொண்டே வர, அதற்கு அம்ருதா பதில் சொல்லவும் சில நிமிடங்களிலேயே வீடு வந்து சேர்ந்தனர். இன்னமும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரவு உறங்கும் நேரமும் வந்துவிட்டது. இன்றும் காவேரி ஆத்யாவை தூக்கி கொண்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். இருவரும் தனித்திருக்க அவனது பாரா முகம் அம்ருதாவிற்கு கோபத்தையே வரவழைக்க, வேகமாக அவனை நெருங்கியவள்,
“இப்போ என்னதான் உங்களுக்கு பிரச்சனை? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று கேட்டேவிட்டாள்.
“ஒன்னும் இல்ல அம்ருதா. நீ போய் தூங்கு” என்றிட அதில் மேலும் மேலும் கோபமே துளிர்த்தது.
“இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?” என்றதும்,
“இன்டீரியர் மாத்தனும்னு சொன்னேன்ல? எதுவுமே செட் ஆகலமா. அதான் கொஞ்சம் டென்ஷன். வேற ஒன்னும் இல்ல” என்று கூறி சமாளிக்க,
“ஊஃப்.. அவ்வளவுதான..? சரி அதனால என்ன? பொறுமையா யோசிச்சா கிடைக்க போகுது. இப்போ வந்து தூங்குங்க. காலைல எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”
“சரி” என்று எழுந்தவன் “நீயும் வா தூங்கலாம்” என்று அவளை படுக்கைக்கு அழைத்து சென்று அவளை அணைத்த படியே உறங்கி போனான். அவன் உறங்கி விட்டானா? என்று உறுதி செய்தவள் அவனுடைய உறக்கம் கலையாதவாறு மெல்ல அவனிடமிருந்து விலகி சென்றாள்.
அவளது லேப்டாப்பில் இணையதளத்தின் உதவியுடன் உள் கட்டமைப்புகளை மாற்றுவது பற்றி அறிந்து கொண்டவள் ஏ.ஐ உதவியுடன் அதனை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டாள்.
நேரம் விடியற்காலை நான்கு மணியை தொட அப்போதே தனது வேலையை முடித்தவள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஹர்ஷாவின் கை வளைவுக்குள் சென்று அவனது அணைப்புக்குள் நிம்மதியாக உறங்கி போனாள்.
அடுத்த நாள் காலை பொழுது அழகாக விடிய, தன் கை வளைவுக்குள் உறங்கி கொண்டிருப்பவளை பார்த்தவன் விழிகளோ அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தன. அவனையும் மீறி தானாக அவளது நெற்றியில் முத்தம் பதித்தன அவனது தடித்த அதரங்கள்.
“உன்னோட கடந்த காலம் என்னனு எனக்கு சுத்தமா புரியல அம்மு. ஆனா அது என்னவா இருந்தாலும் கண்டிப்பா உன்மேல எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்புறேன். உனக்கு நான் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் துணையா இருப்பேன்” என்றவனோ, மீண்டும் அவளுக்கு ஒரு முத்தத்தை வழங்கியதும் உறக்கத்திலும் புன்னகையித்தாள் அம்ருதா.
அதை கண்டு தானும் புன்னகையித்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய வேலையை பார்க்க தயாராகி இருந்தான். இரவு தாமதமாக உறங்கியதால் இன்னும் அவள் எழாமல் இருக்க,
‘இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே? உடம்பு எதுவும் சரி இல்லையா?’ என்று அவள் நெற்றியை தொட்டு பார்க்கவும் அவன் தொடுதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் அவன் தயாராகி நிற்பதை பார்த்ததும் உடனே கடிகாரத்தை பார்த்தாள்.
“அச்சச்சோ.. இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?” என்றவள் அவசர அவசரமாக எழ முயல,
“ஹேய்… ஏன் இவ்வளவு அவசரமா எழுந்திரிக்கிற? தூக்கம் வந்தா தூங்கு. உனக்கும் உடம்பு சரி இல்லையோனுதான் பார்த்தேன்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் இருங்க” என்றவள் முகம் கழுவி விட்டு வந்ததும் தன்னுடைய மடி கணினியை எடுத்து அவள் தயார் செய்த இன்டீரியர் டெகரேஷன் ஐடியாவை ஹர்ஷாவிடம் திறந்து காண்பித்தாள்.
அதை பார்த்ததும் மிரண்டு போனான் அவன். அம்ருதாவை பற்றிய குழப்பம் ஒரு புறம் இருந்தாலும் ரெஸ்டாராண்டிற்கு சரியான ஐடியா கிடைக்கவில்லையே என்பதிலும் சற்று தலைவலியாகத்தான் இருந்தது அவனுக்கு. ஆனால் அவன் பிரச்சனைக்கு தீர்வுடன் வந்தவளை ஆச்சரியமாக பார்த்தவன்,
“அம்மு.. இதை நீயா ரெடி பண்ணின? எப்படி பண்ணின?” என்று வியப்பாக கேட்டான்.
“உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று தனது கைகளை பிசைந்தபடி அவன் பதிலுக்காக அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள் அம்ருதா. அவன் இமை சிமிட்டாமல் அவள் தயார் செய்த டிசைன்னையே ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க,
“உங்களைத்தான் கேக்குறேன். பிடிச்சிருக்கா? சொல்லுங்க” என்று அவள் மீண்டும் கேட்க,
“பிடிச்சிருக்காவா? ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… இட்ஸ் அமேசிங்..” என்றவன் மறுநொடியே அவளை இழுத்து அணைத்திருந்தான். மகிழ்ச்சியின் மிகுதியில் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன், லேப்டாப்பை எடுத்துகொண்டு வெளியே வந்தான்.
அதை காவேரியிடமும், ஆறுமுகத்திடமும் அம்ருதாவை பாராட்டியப்படியே காண்பிக்க, இருவருக்குமே தன் மகளின் செயலிலும் மருமகனின் பாராட்டிலும் மனம் நெகிழ்ந்து போனது.
“நல்லாருக்கு மாப்ள, உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிதான்” என்றார் ஆறுமுகம். காவேரியும் அதற்கு ஆம் என்பதுபோல் தலையசைக்க இவை அனைத்தையும் ஒரு ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்த நிரஞ்சனாவை திரும்பி பார்த்தான் ஹர்ஷா.
நிரஞ்சனாவிற்கோ, ‘என்னவோ சொன்ன? அம்ருதாவுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு. இப்போ பார்த்தியா? என்பது போல் தோன்றியது அவனது பார்வை. உண்மையும் அதுவே. அதில் வெறுப்பாக முகத்தை சுழித்தவள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள். அம்ருதாவிற்கு அங்கே ஒரே பாராட்டு மழைதான்.
பின்னர் அவளை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றவன் அம்ருதாவிடம் “இதே டிசைன்தான் நம்ம ரெஸ்டாரண்ட்ல வைக்க போறேன்” என்றான். அவளும் “சரி” என்பது போல் தலையாட்ட,
“ஆனா அம்ருதா, ஃபெஸ்டிவல் டேஸ் வருது, இதை நான் சீக்கிரமே செஞ்சு முடிச்சாகனும். உங்க வீட்டுக்கும் ரெஸ்டாரண்ட்க்கும் தூரம் அதிகமா இருக்கு. டைம் ரொம்ப வேஸ்ட் ஆகுது அம்மு. நான் வீட்டுக்கு போகவா? நீ வேணும்னா இன்னும் இரண்டு நாள் கூட இரு. நான் அப்புறமா வந்து கூட்டிட்டு போறேன்” என்றதும் அவனை பார்த்து முறைத்தவள்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாங்களும் உங்க கூடவே வரோம்” என்றதும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்,
“நீ இருக்கணும்னு ஆசைப்பட்டா இருந்துட்டு வா அம்மு” என்றான் அவளது ஆசைக்காக மட்டும்.
“இல்ல.. நாங்களும் வரோம்” என்றவள் அதற்கு மேலும் அவனது பதிலுக்காக காத்திராமல் தன்னுடைய உடைமைகளை அவசர அவசரமாக எடுத்து வைத்துவிட்டு தானும் தயாராகி ஆத்யாவையும் தயார் படுத்தியவள், தன் அன்னையிடம் கூற சென்றாள்.
“அம்மா… அவருக்கு முக்கியமான வேலை இருக்காம். அவரால இவ்வளவு தூரம் வந்துட்டு வந்துட்டு போக முடியல. அதனால நாங்க இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்பறோம்” என்றதும் காவேரிக்கு திடீரென கூறுவதால் முகம் வாடி போனது.
ஆனாலும் தன் மகள் “எங்கள் வீட்டுக்கு போகிறோம்” என்று உரிமையாக கூறியதில் அவருக்கு மகிழ்ச்சிதான்.
“சரிம்மா.. மாப்ள அவசர வேலை எல்லாம் முடிஞ்சதும் இன்னொரு நாள் கண்டிப்பா வந்து இரண்டு பேரும் ஒரு வாரம் தங்கிட்டுதான் போகணும்” என்றதும் ஹர்ஷாவும் சரி என தலை ஆட்டினான்.
மூவரும் கிளம்பி செல்ல ஆறுமுகத்துக்கும், காவேரிக்கும் முகம் வாடினாலும், நிரஞ்சனாவோ, “ஹப்பாடா.. சனியனுங்க போய் தொலைஞ்சதுங்க” என்று நிம்மதி அடைந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது. இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த கணவன் மனைவியாய் மாறி போயினர். ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு அவரவர்களுக்கு தேவைப்பட்ட தனிப்பட்ட சுதந்திரத்தையும், இடைவெளியும் கொடுத்து நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வு காதல், கூடல் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
ஆத்யாவிற்கு இன்னும் இரண்டு நாட்களில் பிறந்த நாள் என்பதால் அன்று அம்ருதாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தான் ஹர்ஷா. ஆத்யா அவள் விருப்பத்திற்கு ஜாலியாக ஓடி கொண்டிருக்க இருவரும் அவள் பின்னாடியே சென்றனர்.
அதே தருணம் தாரிக்காவும் அங்கு வந்தவள் ஹர்ஷாவை பின்னிருந்து பார்க்கும்போதே அடையாளம் கண்டுகொண்டாள். அவனுடன் இருக்கும் அவனது மனைவியை இன்று எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று அவர்கள் கண்ணில் படாமல் அவர்களை பின் தொடர, அம்ருதா திரும்பியதும் தாரிகவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் வராத குறைதான்.
‘இ.. இது… அவள்தானே.? அ.. அம்ருதா தானே?’ என்றவள் மீண்டும் ஒரு முறை நன்றாக உற்று நோக்க,
“ஓ… மை.. காட்.. இது அவதான்.. அவளேதான்’ என்றவளது முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் என பலவாறான பாவனைகள் தோன்றி மறைந்தது.
‘ஹர்ஷாவின் நிம்மதியை கெடுக்க அவன் மனைவி என்ற அங்கீகாரத்திலேயே ஒருத்தி கிடைத்து விட்டாளே. இதை விட வேறு எந்த விஷயத்தால் அவனை காயப்படுத்திவிட முடியும்?’ என்று எண்ணியவள் வில்லத்தனமாக சிரித்து கொண்டாள்.
அந்தியில் பூத்த சந்திரனே -15
written by Competition writers
அம்ருதா குளித்து முடித்து வெளியே வந்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் எதிர் புறம் திரும்பி எதையோ வெறித்த வண்ணமே நின்றிருந்தான். இரவு நடந்த விடயங்களை எண்ணி பார்த்தவளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்கவே முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.
கூந்தலை பின்னலிட்டு, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அழகாக தயாராகி முடித்ததும் அவன் புறம் திரும்பி பார்க்க, அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல தெரிந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியேறியவள் ஆத்யாவை காண காவேரியின் அறைக்கு சென்றிருந்தாள்.
குழந்தை இன்னும் உறங்கி கொண்டிருக்க, அழகாக உதடு பிரித்து தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை கண்டதில் அம்ருதாவின் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. அதில் ஆத்யாவின் அருகில் படுத்துக்கொண்ட அம்ருதா அவளின் கன்னத்தை வருடியபடி இருந்தாள்.
“தூங்குற குழந்தையை ரசிக்க கூடாது அம்ருதா. உனக்கு எத்தனை முறை சொல்றது? ” என்றபடியே உள்நுழைந்தார் காவேரி. “என் பிள்ளை தூங்கும் போது கூட அவ்வளவு அழகு. எப்படி ரசிக்காம இருக்குறது?” என்றதும்,
“சரி நீ பார்த்த வரைக்கும் போதும், மாப்பிள்ளைக்கு போய் காபி போட்டு கொடு போ. அப்படியே அவருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ. அதைவே சமைச்சுடலாம்.” என்றார். “சரிமா. நீங்க ஆத்யாவை பார்த்துக்கோங்க நான் இதோ வந்துடுறேன்” என்றவள் சமையலைறைக்கு சென்று அவனுக்கான காபியை தயாரித்தாள்.
பின் அதை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றவள் இன்னும் அவன் அசைவின்றி அப்படியே நிற்பதை பார்த்ததும் சற்றே குழம்பி போனாள். அவனிடம் நெருங்கி, “என்னாச்சுங்க? என்னவோ தீவிரமா யோசிச்சுட்டே இருக்கீங்க?” என்றதும் தனது எண்ணவோட்டத்திலிருந்து வெளி வந்தவன் “அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்ருத்தா” என்றவனது குரலிலும் சிறிய வித்யாசம் இருந்தது. அதை கவனித்தவள் “நிஜமா ஒன்னும் இல்லையா?” என்று கேட்க,
“நிஜமா ஒன்னும் இல்ல அம்ருதா.” என்று அவளை பார்த்து புன்னகையித்தான். “அதன் பிறகே நிம்மதி அடைந்தவள் அவனிடம் கொண்டுவந்த காபியை நீட்டினாள். அதை வாங்கி கொண்டதும் “உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்னு சொல்லுங்க. காலைல டிபன் பண்ண அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க” என்றாள்.
“எனக்காக எதுவும் ஸ்பெஷலா செய்யறேன்னு கஷ்டபட்டுக்க வேண்டாம். சிம்பிளா சமைச்சா போதும். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். எனக்காக லஞ்ச் எதுவும் செய்ய வேண்டாம். ரெஸ்டாரண்ட்ல வேலை இருக்கு நான் அங்கேயே சாப்ட்டுக்குவேன்.” என்றதும்
“அப்படியா..? ம்ம்ம்… சரி.” என்றவள் அவன் முகம் பார்த்து,”ஈவினிங் நாம வெளில போவோமா.? ஆத்யாவை வெளில கூட்டிட்டு போய் ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. உங்களுக்கு வேலை இருந்தா வேண்டாம்.” என்றவளை காதலுடன் பார்த்தவன்,
“வேலை முடிஞ்சதும் சீக்கிரம் வந்துடுறேன். நீங்க ரெடியா இருங்க நாம போலாம்” என்றான். அவள் முகம் மலர “சரி” என்றதும் அவளை ஒரு முறை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தவன் குளியலறை நோக்கி சென்று விட்டான்.
அதில் முகம் சிவந்தவள், ஒரு நிமிடம் அவன் முத்தத்திலும் அணைப்பிலும் லயித்து இருந்தாள். பிறகு அவனுக்கான உணவை காவேரியும், அம்ருதாவும் சேர்ந்து சமைத்து முடித்து அவனுக்கு பரிமாற, காலை உணவை முடித்து கொண்டு ஆத்யாவுடன் சிறிது நேரம் செலவழித்தவன் பிறகு அனைவரிடமும் கூறிவிட்டு ரெஸ்டாரண்டிற்கு கிளம்பினான்.
வழக்கம் போல் தன்னுடையை வேலைகளை தொடங்கியவன். ‘அம்ருதா முதல் முறையா வெளில கூட்டிட்டு போக சொல்லி கேட்டிருக்கா. முடிஞ்ச வரைக்கும் வேகமாக வேலைய முடிக்கனும்.’ என்று ஓய்வின்றி தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
இங்கு தாரிகாவோ தன்னுடைய காதலன் பாலாவுடன் நெருக்கமாக இருந்த தருணம், “என்ன ஆச்சு? உன்னோட முன்னாள் புருஷன்கிட்ட நேத்து மிரட்டி பணம் வாங்க போறேன்னு சொன்ன? இதுவரைக்கும் அதை பத்தி எதுவுமே பேசலையே?” என்று கேட்க, அதில் அவள் மனதில் ஹர்ஷாவின் கடுமையான முகமும் தன் கன்னம் பழுக்க அறைந்ததும் தன் மனக்கண் முன்னே தோன்றி மறைய, அவனை விட்டு விலகியவள்,
“அவன் முன்ன மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்டன்.” என்றாள் எரிச்சலாக,
“மாறிட்டனா? என்ன அர்த்தம். அப்போ உன்னால அவன்கிட்ட இனிமேல் பணம் வாங்க முடியாதுன்னு சொல்ல வரியா?” என்று கோபமாக கேட்டிட,
“இப்போ அதுல உனக்கு என்ன பிரச்சனை? கோபமெல்லாம் வருது. அவன் ஜீவனாம்சமா கொடுத்த ஐம்பது லச்சத்தையும் உன்கிட்டதானே கொடுத்தேன். இப்போ எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இன்னும் அவன்கிட்ட போய் நிக்க சொல்ற?”
“ஏய்.. நிறுத்து, நிறுத்து. என்னவோ நான் மட்டும் எல்லாத்தையும் செலவு பண்ணின மாதிரி பேசுற? மேடம் பியூட்டி பார்லர் போயே பாதி பணத்தை காலி பண்ணிட்டீங்க. மீதி பணம், ஷாப்பின், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டின்னர்னு காலி ஆச்சு” என கூறி கொண்டிருக்கும்போதே சலித்து கொண்டவள்,
“சரி நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியதுதான?” என்றாள்.
“எதே..! நான் வேலைக்கு போகணுமா? நான் வேலைக்கு போய் உன்னை காப்பாத்த நான் என்ன உன் புருஷனா? நம்ம லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். யாரோட காசுலையை யாரும் வாழ கூடாது. பிடிச்ச வரைக்கும் வாழுவோம், பிடிக்கலைன்னா யாரும் இன்னொருத்தரை தொந்தரவு பண்ண கூடாது. இதுதான நம்ம டீல்? நீ என்ன அதையெல்லாம் மறந்த மாதிரி பேசுற?” என்று கேட்டிட,
“ப்ச்.. என சலித்து கொண்டவள். எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ போய் உன் வேலையை பாரு” என்றதும் அவளிடமிருந்து விலகியவன் தனது ஆடையை எடுத்து அணிந்தவரே,
“இதோ பாரு தாரிகா, அடுத்த மாசத்துல இருந்து இரண்டு பேருமே செலவுகளை ஷேர் பண்ணிக்கணும். இந்த மாசமே நான் பார்க்க வேண்டியதா போச்சு. நீ அவன் கிட்ட காசு வாங்குவியோ இல்ல, நீயே வேலைக்கு போவியோ அது உன் இஷ்ட்டம். ஆனா கண்டிப்பா உன் தேவையை நீதான் பார்த்துக்கணும்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.
இதுவரை அவனுடனான இந்த வாழ்வு இனித்திருக்க தன்னிடம் பணம் இல்லை என்றதும் அவன் பேசும் விதமும், நடந்து கொள்ளும் முறையும் மாறுபடவே முதன் முறையாக கசந்து போனது.
இதற்கு எல்லாம் ஹர்ஷா மீது அர்த்தமற்ற கோபம் தோன்றியது அவளுக்கு. ‘நான் நெனச்சது மட்டும் சரியா நடந்திருந்தா, இந்நேரம் இவன் இப்படியெல்லாம் பேசுவானா? நான் இங்க இப்படி கஷ்ட படுறேன், நீ மட்டும் உன் புது பொண்டாட்டியோட சந்தோஷமா இருப்பியா? விடமாட்டேன் ஹர்ஷா.. உன் வாழ்க்கையை நரகம் ஆக்காம விடமாட்டேன்’ என்று வன்மத்தை மனதிற்குள் வளர்த்து கொண்டாள்.
இங்கு அம்ருதாவோ ஹர்ஷா சென்றதிலிருந்து அவன் நினைவாகவே இருக்க ‘எப்போது மாலை பொழுது வரும்? எப்போது அவனை காண்போம்?’ என்று அடிக்கடி கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம்தான் நகரவே மாட்டேன் என்பது போல இருந்தது. எப்படியோ பொழுதை கடினப்பட்டு நகர்த்த, நேரம் ஐந்தை நெருங்கியதும் ஹர்ஷாவின் கார் வாசலில் நிற்கும் அரவம் கேட்டது. உடனே மனம் துள்ளி குதிக்க அறையை விட்டு வெளியேறியவள், அவனை தேடி ஆசையாக வாசல் வரை ஓடி சென்றாள்.
அவன் தன்னை நெருங்கியதும் அவனுடைய மடிக்கணினியை தான் வாங்கி கொண்டு அவனுடன் சேர்ந்தே நடந்தாள்.
தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிய, இதுவரை இருந்த கேள்விகள், குழப்பங்கள் அனைத்தையும் மறந்து அவள் குழந்தைதனத்தை ரசித்தவாரு அறையை நோக்கி நடந்தான் ஹர்ஷா.
அறையினுள் சென்றதும் “என்னை ரொம்ப தேடினியா அம்மு?” என்று அவளது முடி கற்றையை காதின் பின்னால் ஒதுக்கி விட்டவாறே கேட்க, “ஆம்” என்று தலையாட்டியவளை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது ஹர்ஷாவுக்கு. ஆனால் ஆத்யா இவர்களை பார்த்தப்படியே இருக்க தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டவன் “நானும்தான்” என்றதும் அம்ருதாவின் மனதிற்குள் அடை மழைதான்.
அவன் ஆத்யாவை நோக்கி சென்றுவிட்ட சிறிது நேரத்திலே தயாராகி மூவரும் வெளியே வர, “பாட்டி.. நான் அப்பா அம்மாகூட வெளில போக போதேன்.. ஜாலி..” என்று காவேரியிடம் ஆத்யா கூறியதும் காவேரிக்கு அவள் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கண்டதும் மனதே உருகி விட்டது.
இத்தனை நாள் ‘அப்பா இல்லாமலே ஆத்யா வளர வேண்டுமா? தன்னுடைய மகளின் வாழ்க்கை என்னாகுமோ?’ என்றெல்லாம் எண்ணி கவலை கொண்ட காவேரிக்கு மனம் மகிழ்ச்சியில் நிறைந்து போனது. அதுவும் ஹர்ஷாவை போன்ற ஒருவன் தன் மகளை திருமணம் செய்ததில் இனி இவர்கள் எதிர்காலத்தை பற்றிய கவலையே இல்லாமல் போனது அந்த தாய்க்கு.
அதில், “போய்ட்டு வாடா செல்லம். பத்திரமா இருக்கணும், அப்பா அம்மாவை தொல்லை பண்ண கூடாது” என்று அறிவுரை கூறி புன்னகையோடு வழி அனுப்பி வைத்தார் காவேரி.
காரினுள் ஏறியதும் “எங்க போகணும் என் பட்டு பாப்பாவுக்கு?” என்று ஹர்ஷா கேட்க,
“அப்பா பீச்க்கு போலாம்பா..” என்றாள் ஆத்யா.
“ஓகே… என் பட்டு பாப்பா இஷ்ட்டப்படியே பீச்க்கே போவோம்” என்றவன் நேராக கடற்கரையை நோக்கி காரை செலுத்தினான்.
கடற்கரையை வந்தடைந்ததும் நடுவில் ஆத்யாவை நடக்க விட்டு அவளின் இரண்டு கரங்களையும் பிடித்து கொண்டவர்கள் அவளுடன் சேர்ந்தே நடக்க தொடங்கினர். கரையை நெருங்கியதும் ஆத்யா மணலில் அமர்ந்து விளையாடி கொண்டிருக்க, அவளுடன் இருவரும் சேர்ந்து கொண்டனர். “அப்பா ஐஸ் கீம்” என்று தன் ஒற்றை விரலை நீட்டி ஆத்யா ஐஸ் கிரீம் கடையை காட்ட, “உடனே வாங்கிட்டு வரேன் இளவரசி” என்றவன் புன்னகை முகமாய் அங்கிருந்து எழுந்து சென்றான்.
அவன் கடையில் ஐஸ் க்ரீம் வாங்க காத்திருக்க, அவனின் மகிழ்ச்சியான மன நிலையை கலைத்தது அவர்களின் குரல். அம்ருதாவிடம் சில நாட்களுக்கு முன்பு இதே கடற்கரையில் தவறாக பேசி பதிலுக்கு நன்றாக வாங்கி கட்டி கொண்டவன். இப்போதுதான் வந்தான் போலும், அம்ருதாவுடன் இவ்வளவு நேரம் ஹர்ஷா இருந்ததை கவனித்திருக்கவில்லை.
“டேய்.. இவ அன்னைக்கு நீ சொன்ன அதே பொண்ணுதான?” என்றான் ஒருவன்.
அவன் கை காட்டிய திசையை நோக்கி பார்த்தவனோ “ஆமா மச்சி. அவளேதான். அம்ருதா” என்றவன் அவளை ஆராய்ச்சியாக நோக்க, “கல்யாணம் ஆகிருச்சு போலருக்கே. கழுத்துல மஞ்சள் கயிறு இருக்கு. ஹ்ம்ம்ம்.. எந்த இளிச்சவாயன் வந்து மாட்டினானோ?” என்றதும்,
“ஏன்டா அப்படி சொல்ற?”
“அதுவா? அன்னைக்கு பெரிய இவளாட்டம் என்கிட்ட பேசினாள்ல அப்போவே அவளை பத்தி விசாரிச்சேன். அவ புருஷன் ஒரு கே (gay) வாம்டா. அப்புறம் எப்படி குழந்தை? அப்போ வேற எவன்கூடயோ இருந்து புள்ளைய வாங்கிருப்பா. அதான் விஷயம் தெரிஞ்சதும் புருஷன் விவாகரத்து பண்ணி தொரத்தி விட்டுட்டான்.” என்று அவன் பேசியதை கேட்டதும் முகம் இறுகி போனது ஹர்ஷாவுக்கு. ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனை மேலும் மேலும் குழப்பிவிடும் விதமாக இருந்தது அவனுடைய வார்த்தைகள்.
அந்தியில் பூத்த சந்திரனே – 14
written by Competition writers
வீட்டிற்கு வந்ததிலிருந்து நிரஞ்சனா முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. திருமணத்தின் போதும், அதற்க்கு முன்பும் கூட புடவை, நகை வாங்க சென்ற இடத்திலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவளுடைய பிடித்தமின்மையும் அம்ருத்தா மீதான வெறுப்பு பார்வையும் ஹர்ஷாவுக்கு நன்றாகவே புரிந்தது. இருப்பினும் அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை.
இரவு உணவு தயாராக இருக்க, அனைவரும் அமர்ந்து பேசி சிரித்தப்படியே சாப்பிட தொடங்கினர். அப்போது ஹர்ஷாவின் கைப்பேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவன் தன்னுடைய ரெஸ்டாரண்ட் இன்டீரியர் டெகரேஷன் மாற்றுவதை பற்றி மேனேஜரிடம் பேசி முடித்ததும் அழைப்பை துண்டித்து விட்டு அம்ருதாவின் புறம் திரும்பி,
“அம்ருதா, ரெஸ்டாரண்ட்ல இன்டீரியர் மாத்தலாம்னு இருக்கேன். உனக்கு ஏதும் ஐடியா இருக்கா?” என்று கேட்க அவள் பதில் சொல்லும் முன்னரே, வாய்விட்டு சிரித்தாள் நிரஞ்சனா.
“என்ன அம்ருதா இதெல்லாம் உனக்கு தெரியுமா என்ன? உனக்கு இந்த வீட்டை விட்டா வேற எதுவுமே தெரியாது. ஏதோ அரைச்ச மாவையே அரைக்குற மாதிரி அந்த ஐ டி கம்பெனி வேலையை வீட்லருந்தே பார்த்துட்டு இருக்க. இதை விட்டா உனக்கு வேற என்ன தெரியும்?” என்று நக்கல் தோணியில் கேட்டிட, ஹர்ஷாவின் முகமோ கோபத்தில் இறுகியது.
அதை கவனித்த காவேரி நிரஞ்சனாவின் காதருகில் சென்று மெல்லிய குரலில் “வாயை மூடுடி. இல்லனா மாப்பிள்ளை இருக்காருன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். தொலைச்சு கட்டிடுவேன். ஞாபகம் வச்சுக்கோ” என்றதும்
“ம்க்கும்.. உங்க மூத்த மகளை ஒன்னு சொல்லிட கூடாதே. உடனே வந்துடுவீங்க” என்றவள் ஹர்ஷாவின் கோபத்தையும் கவனிக்க தவறவில்லை. அந்த கோபத்தையும் அம்ருதா மீது வெறுப்பு பார்வையாக வீசிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
ஆனால் இன்று அவள் நடந்து கொண்ட விதத்தில் ஹர்ஷாவுக்குதான் சற்றே கோபமும், எரிச்சலும் மேலிட்டது. சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அம்ருதாவின் தாய் தந்தையுடன் பேசி கொண்டிருந்தவன் பிறகு தன்னுடைய வேலையை முடிக்க அறைக்குள் சென்றுவிட்டான்.
அறைக்குள் வந்த அம்ருதாவிடம், “என்னதான் பிரச்சனை உன் தங்கச்சிக்கு? ஏன் எந்த நேரமும் உன்னை பிடிக்காத மாதிரியே பாக்குறா, பேசுறா? என்று கோபம் மேலிட கேட்டவனை பார்த்து,
“எனக்கே தெரியலயே. சின்ன வயசுல நல்லதான் இருந்தா. என்ன காரணமோ தெரியல. அவளுக்கு என்னை பிடிக்கிறதே இல்ல. எதுக்கு வீண் பிரச்சனைன்னு அவ ஏதாவது பேசினாலும் நான் எதுவும் பேசிக்க மாட்டேன்.”
“ஏன் உன்னோட அம்மா, அப்பா இதெல்லாம் என்னனு கேட்டு கண்டிக்க மாட்டாங்களா?”
“கண்டிப்பாங்க. ஆனா அதுக்கும் சேர்த்து என் தலைதான் உருளும். இவளே என்னை திட்டிட்டு, அம்மா எனக்காக சப்போர்ட் பண்ணி ஏதாவது கேட்டாங்கனா, உன்னாலதான்டி வீட்ல எல்லார் நிம்மதியும் போகுதுனு என்னைவே குறை சொல்லுவா. இவ ஏன்தான் இப்படியெல்லாம் பேசுறாளோன்னு எனக்கு அழுகைதான் வரும்.”
“இதோ பாரு அம்ருதா. நீ இப்படியே இருந்தீனா அவ அப்படித்தான் பேசுவா. யாரா இருந்தாலும் பொறுத்து போறேன், சகிச்சு போறேன்னு இல்லாம தப்புன்னு தெரிஞ்சா எதிர்த்து பேசு. ஒரு எல்லைக்கு மேல யாரையும் பேச அனுமதிக்காத. அவ என்ன பேசினாலும் கேட்டுட்டு நீ அமைதியா இருந்தீனா, அவ பேசிகிட்டதான் இருப்பா. நீ எதிர்த்து பேசுற வரைக்கும் இந்த பிரச்சனை முடியாது.
உன்னை அவகூட வேணும்னே சண்டை போடுன்னு சொல்லல. அவளா உன்கிட்ட பிரச்சனை பண்ணினா அதை சரியா கையாள தெரியணும்னு சொல்றேன். நம்ம மன நிம்மதியை கெடுக்கும்படியான எந்த விஷயத்தையும் நம்ம அனுமதிக்கவே கூடாது அம்ருதா. யாரா இருந்தாலும் உன்மேல தப்பு இல்லாத பட்சத்துல எதிர்த்து பேச கத்துக்கோ” என்றதும் புரிந்தது என்பதை போல தலையாட்டினாள்.
தன்மீது அவன் காட்டும் அக்கறையையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் கண்டவளுக்கு ஹர்ஷாவை மேலும் மேலும் பிடித்து போனது. தன் தாய் தந்தையருக்கு பிறகு தனக்காக யோசிக்கும் ஒருவன் என்பதில் அவன் மீது உரிமையும் மரியாதையும் கூடி கொண்டே போனது அம்ருதாவிற்கு.
அவள் சிறு பிள்ளையை போல தலையாட்டுவதை பார்த்து சிரித்தவன், அவள் நெத்தியில் முத்தமிட்டுவிட்டு மீண்டும் அவனுடைய வேலையை தொடர்ந்தான்.
‘என்ன இவன்? எதுக்கெடுத்தாலும் முத்தத்தை கொடுத்துடுறான்?’ என்று எண்ணியவள் ‘ஆனா இதுவும் நல்லாதான் இருக்கு’ என்று சிரித்து கொண்டாள்.
பின் தண்ணீர் பாட்டில் காலியாக இருக்க அதை நிரப்ப சமையல் அறைக்குள் சென்றவளை பிடித்து கொண்டாள் நிரஞ்சனா.
“என்னடி உன் புருஷன் என்னவோ வெறப்பாவே திரியுறாரு. உன்னை ஏதாவது சொன்னா என்னைவே அப்படி மொறச்சு பாக்குறாரு. மனசுல உங்களுக்கு என்ன இளம் ஜோடிகள்ன்னு நெனப்போ?” எணும்போதே,
‘ஆரம்பிச்சுட்டா.. இனி வார்த்தைகள விஷமா கொட்டாம விடமாட்டா’ என்று எண்ணிகொண்டவளுக்கு ஹர்ஷா கூறியது நினைவில் வந்து போனது.
அதை கலைக்கும் விதமாக “நல்லா விசாரிச்சு பாருடி, உண்மையிலேயே முதல் பொண்டாட்டி கூட எந்த பேச்சு வார்த்தையும் இல்லையான்னு. உன்னையும் கல்யாணம் பண்ணிட்டு அவ கூடவும் குடும்பம் நடத்த போறாரு” என்றதும் அந்த வார்த்தைகளை கேட்டவளுக்கு சுர்ரென்று கோபம் வர,
“பளார்..” என்று அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள் அம்ருதா.
“இதோ பாருடி. இத்தனை நாள் என்னை பத்தி பேசின நான் பொறுத்துக்கிட்டேன் ஆனா அவரை பத்தி இனி ஒரு வார்த்தை பேசின.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்று கோபத்தில் விழிகள் விரிந்து, முகம் சிவக்க நின்றவளை பார்த்த நிரஞ்சனா வாயடைத்து போனாள்.
அவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. உண்மையிலேயே ‘இது அம்ருத்தாதானா?’ என்று அடித்த அடியில் நம்பமுடியாமல் பார்த்தாள் நிரஞ்சனா.
அவள் அப்படியே அசைவின்றி நிற்க, தண்ணீரை பாட்டிலில் நிரப்பியவள், நிரஞ்சனாவை தாண்டி போகும்போது “ஜாக்கிரதை” என தனது ஆள்கட்டி விரலை உயர்த்தி மீண்டும் ஒருமுறை எச்சரித்து விட்டு சென்றாள்.
‘இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னைவே அடிச்சிருப்பா. உன்னை சும்மா விட மாட்டேண்டி. இவ்வளவு நாள் பூனை மாதிரி இருந்துட்டு இப்போ என்மேலயே கையை வச்சுட்டல்ல?’ என்று புசு புசுவென கோப மூச்சுக்களை இறைத்தவள் ‘இதுக்கு நீ அனுபவிப்ப அம்ருதா, அனுபவிக்க வப்பேன்’ என்று மனதுக்குள் கறுவி கொண்டவள் வேக எட்டுக்களை வைத்து அறையினுள் சென்று தாழிட்டு கொண்டாள்.
இரவு உறங்கும் நேரம் வந்ததும் காவேரி அம்ருதாவிடம் சென்றவர் “நீங்க இங்க இருக்குற வரைக்கும்தான ஆத்யா எங்ககூட இருப்பா. அதுவரைக்கும் அவளை எங்ககூடவே தூங்க வச்சுகிறோம்.” என்றவர் அம்ருதாவின் பதிலுக்காக காத்திராமல் ஆத்யாவை தூக்கி கொண்டு சென்றுவிட்டார்.
அவளோ திரும்பி பார்க்க ஹர்ஷா அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்றதும் தனது பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டவள் திருத்திருவென விழிக்க அதை பார்த்த ஹர்ஷாவுக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு கதவை தாழிட்டுவிட்டு படுக்கையை பார்க்க அது ஹர்ஷாவின் வீட்டில் இருந்த கட்டிலை போல பெரியது இல்லை. இரண்டு பேர் உறங்க சரியாக இருக்கும்.
அதை பார்த்தவள் என்ன செய்வது என்று கைகளை பிசைந்தப்படி நிற்க, அவளை நெருங்கி வந்தவன் அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்க செய்து, “உனக்கு என்னை பிடிக்கலையா அம்ருதா?” என்றான். அவன் கேள்வியில் அதிர்ச்சியும் குழப்பமுமாய் அவனை ஏறிட்டவள், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே? ஏன் அப்படி கேக்குறீங்க?”
“நீ பண்றதெல்லாம் பார்த்தா அப்படித்தான் தெரியுது. அதான் கேட்டேன்.”
“இல்ல… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றவள் அவனை பார்க்க அவனது பார்வை அவளது இதழை நோக்கி சென்றது. அவளது வரி ஓடிய செவ்விதழை நோக்கியபடியே “அப்போ உனக்கு என்னை பிடிக்குமா அம்மு?” என்றதும் அவனது அம்ருதா என்ற அழைப்பு அம்மு என்று மாறி போனதில் திகைத்து நின்றாள். மீண்டும் ஒருமுறை தாபம் நிறைந்த குரலில் “உன்னைத்தான் கேக்கிறேன் சொல்லுடி. என்னை பிடிக்குமா?” என கேட்க,
அவள் “ம்ம்ம்…” என்றதும் பட்டென அவளது இதழை கவ்வி கொண்டான். அவள் அடுத்து கூற வந்த வார்த்தைகள் அனைத்தையும் தனக்குள் முழுங்கி கொண்டான். இதை சற்றும் எதிர் பாராதவளோ பதறி விலக போக, “அம்மு ப்ளீஸ்..” என்றவன் மீண்டும் அவள் இதழை ஆள துவங்கினான். அவனது ஒற்றை கரம் அவளை இழுத்து அணைக்க மற்றைய கரமோ அவளது கூந்தல் காட்டிற்குள் புகுந்து மேலும் தன்னோடு நெருக்கி கொண்டது.
அவனது தொடுதலில் மயங்கி, பின் கிறங்கி, அவனுக்குள் தொலைந்து போனவள் தன்னை மறந்து தானும் அவனது முத்தத்தில் பங்கேற்க தொடங்கினாள். அவள் தன்னை ஏற்கிறாள் என்ற எண்ணமே அவனை அவளிடம் முன்னேற சொல்ல, இருவரது ஆடையையும் முத்தமிட்டப்படியே களைந்தவன், இதழை விடுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, அம்ருதாவின் உடல் சிலிர்த்து அடங்கியது. அவனது கரங்கள் தன்னுடைய மேனி படற மொத்தமாக தொலைந்து போனாள் பெண்ணவள்.
உலகம் மறந்து, தன்னை மறந்து அவனது பின்தலை சிகையை அழுந்த பற்றியவள் தன்னுள் மேலும் புதைத்து கொண்டாள். அதில் ஹர்ஷாவின் உடலும் மனமும் இப்போதே அவள் வேண்டும் என்று ஆர்ப்பரிக்க, அம்ருதாவை இரு கரங்களிலும் ஏந்தி கொண்டவன் கட்டிலை நோக்கி சென்று அவளை மெத்தையின் மீது கிடத்தினான். அதனை தொடர்ந்து இருவரும் காதலுடன் கூடிய கூடலை நிகழ்த்தி தங்களது வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்கி இருந்தனர்.
அடுத்த நாள் காலை பொழுது ஹர்ஷா பலத்த சிந்தனையும் குழப்பமுமாக நின்றிருந்தான். நேற்று இரவு நடந்த கூடலில் அவள் கன்னிப்பெண் என்பதை அறிந்து கொண்டவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி ஒரு குழந்தைக்கு தாயானவள் கன்னித்தன்மையுடன் இருக்க முடியும்? என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவள் கடந்த கால வாழ்க்கை பற்றின குழப்பம் மேலிட, மனது பலவாரான சிந்தனைக்குள் மூழ்கி போனது.
‘இது எப்படி சாத்தியம்?’ என்ற எண்ணமே அவனை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘அம்ருதாவிடமே இதைப் பற்றி கேட்டு விடலாமா?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன், தன் தலையை உலுப்பிக்கொண்டான்.
‘வேண்டாம்.. பாஸ்ட் லைஃப் பத்தி பேசக்கூடாதுன்னு நான்தானே சொல்லி இருந்ததேன்? இப்போ எப்படி நானே அதைபத்தி கேட்கிறது? எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்.’ என்று எண்ணி கொண்டாலும் இது அவன் மனதிற்குள் பெரும் குழப்பமாகவே இருந்தது.
அந்தியில் பூத்த சந்திரனே – 13
written by Competition writers
தன்னை மிரண்டு போய் பார்த்தவளை கண்டு, “எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு பொய் சொல்லி, என்னை வார்த்தைகளால எவ்வளவு காயப்படுத்திருப்ப? அதோட விட்டியா? என்னோட அப்பா, அம்மா முன்னாடியே வச்சு ஒரு குழந்தை பெத்துக்குற தகுதி எனக்கில்லைன்னு சொல்லிதான டிவோர்ஸ் வாங்கின?” என்று அதீத கோபத்துடன் அவன் கேட்க,
“ஆ.. ஆமா.. அது உண்மைதானே? மெடிக்கல் சர்டிஃபிகேட் கூட என்கிட்ட இருக்கு.” என்று பயத்தில் திக்கி திணறி கூறி முடிக்கும் முன்னரே அவள் கன்னத்தில் “பளார்..” என அறைந்திருந்தான் ஹர்ஷா. அதில் காதுகள் அடைத்து போனது தாரிக்காவிற்கு.
“ஏய்…. அப்படி சர்டிபிகேட் கொடுத்த டாக்டர் உன்னோட ஃப்ரெண்ட். கொடுக்க சொன்னது நீ. எனக்கு இன்னமும் எதுவுமே தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியா?” என்றதும் விழிகள் அகல அதிர்ந்து பார்த்தாள் அவனை.
“என்ன? இவனுக்கு எப்படிடா எல்லாமே தெரியும்னு அதிர்ச்சியா இருக்கா?” என்றவன் அவளை நெருங்கி “உன்னோட ஹெல்த்த செக் பண்ணின ஒரு ஃபைல் என்னோட வீட்லதான் இருந்துச்சு. இவ்வளவும் பண்ணின நீ முட்டாள் தனமா அதை என்னோட வீட்லயே விட்டுட்டு போய்ட்டியே! அதை எடுத்து பார்த்தப்போதான் தெரிஞ்சுது குறை என்கிட்ட இல்லை உன்கிட்டதான்னு.
அப்போவே வேற ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டேன். உன்னோட கேவலமான பொய் அப்பட்டமா தெரிஞ்சு போய்டுச்சு.
அன்னைக்கே உன்னை தேடி கண்டுபிடிச்சு கொன்னு போடணும் போல ஆத்திரமா வந்துச்சு. அப்போதான் நீ வேற எவன்கூடவோ வாழ்ந்துட்டு இருக்கன்னு தெரிஞ்சது.
நீ என்கூட வாழும்போதே அவன்கூடவும் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்க. அது கூட தெரியாம எவ்வளவு முட்டாள் தனமா நான் இருந்திருக்கேன்? உன்னை பத்தி முழுசா கேள்விப்பட்டதுமே, ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணான்னு உன்னை பார்க்கவே அருவருப்பா இருந்துச்சு.
உன்னை ஒரு ஆளுன்னு மதிச்சு ஏதாவது பண்ணினா எனக்குதான் அசிங்கம். அதனாலதான் போய் தொலைன்னு விட்டுட்டேன்.” என்றவன் அவனது நாற்காலியில் அமர்ந்தவரே,
“எவ்வளவு பேசின நீ? எப்படியெல்லாம் நல்லவ மாதிரி நடிச்ச? இப்போ பேசுடி…” என்று அதட்ட, “வேற எவன்கூடவோ வாழத்தான போன? சொல்லு.” என்றதும்
‘இதுவும் தெரிஞ்சுடுச்சா? எல்லாமே தெரிஞ்சுடுச்சா?’ என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தாள் தாரிக்கா. அதில் தடுமாறியவள், “இ.. இல்ல.. அது வந்து…” என்று இழுக்க,
“எவ்வளவு கேவலமான ஜென்மம் நீ?. உனக்கு அப்படி வேற ஒருத்தனை பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தா நானே டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி உன் மூஞ்சிலயே விட்டெறிஞ்சிருப்பேனே? அதை விட்டுட்டு எதுக்குடி என்மேல பழி சொன்ன? உனக்கு நான் என்ன குறை வச்சேன்? சொல்லுடி.. எதுக்கு இப்படி பண்ணின?” என்று கேட்க, ஹர்ஷா இப்படியெல்லாம் பேசுவான் என்று அவள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
அவள் பார்த்த ஹர்ஷா எவ்வளவு பேசினாலும் பொறுத்து கொள்வான், பதிலுக்கு கோபமாக ஒரு வார்த்தையும் பேச தெரியாதவன். ஆனால் இப்போது இருப்பவனோ என்னுடைய கழுத்தை பிடிக்கிறான்!, இவ்வளவு கடுமையாக பேசுகிறான். இதையெல்லாம் சற்றும் எதிர்பார்த்திராதவள் தடுமாறித்தான் போனாள்.
“சொல்லுடி… ஏன் இப்படி பண்ணின?” என்று நீண்ட நாள் தன் மனதில் அரித்து கொண்டிருந்த கேள்விக்கு பதில் அறியும் நோக்கில் அவன் மீண்டும் கேட்க,
“ஆமா… உன்கூட இருக்கும்போதுதான் எனக்கு அவன் அறிமுகமானான். நீ எப்போ பார்த்தாலும் ரெஸ்டாரண்ட் பத்தியே யோசிக்கிற, இல்லனா நமக்கு பிறக்க போற குழந்தை பத்தி பேசுற. இதை தவிர என்ன தெரியும் உனக்கு? முதல்ல நீ என்னை ஓவரா கேர் பண்ணிகிட்டதே எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் என்ன குழந்தையா? என்னால என்னை பார்த்துக்க முடியாதா?
அவன் எனக்கு எல்லா விதத்திலும் ஃப்ரீடம் கொடுத்தான். என்னை ரசனையோட பார்த்தான். அது எனக்கு பிடிச்சிருந்தது ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டேன். உன்கிட்டருந்து நான் எப்படி விவாகரத்து கேட்டிருந்தாலும் கண்டிப்பா நீ கொடுத்திருக்க மாட்ட. அதான் இப்படி பொய் சொன்னேன்” என்றதும் அவள் கூறிய காரணங்களை கேட்டவனுக்கு தலை சுற்றி போனது.
‘என்ன கூறுகிறாள் இவள்? இவளுக்காக சம்பாதிக்கத்தானே ஓடி ஓடி உழைத்தேன்? அப்போதும் இவளுடன் நேரம் செலவிட தவறவில்லையே? திருமணத்திற்கு பிறகு வரப்போகும் குழந்தையை பற்றி பேசியது இவளுக்கு எப்படி தவறாக தெரிந்தது?
அவன் ரசித்தான், சுதந்திரம் கொடுத்தான் என்கிறாளே. நான் என்ன இவளை அடைத்தா வைத்தேன்? என்னுடன் இருக்கும்போதும் இவள் விருப்பம் போலதானே இருந்தாள்?’ என்றெல்லாம் எண்ணியவன் தன் தலையை உலுக்கிக்கொண்டான்.
‘என்னவாக இருந்தால் என்ன? இப்போது எதற்காக இதை பற்றியெல்லாம் பேச வேண்டும்?’ என்று நினைத்தவன்,
“அப்படியா? சரி. அதான் போய்ட்டல்ல? இப்போ எதுக்கு வந்த? ஓ.. சாரி.. சாரி.. அதான் வந்ததுமே சொல்லிட்டியே. கல்யாணத்துக்கு விஷ் பண்ண வந்தேன்னு. தேங்க் யூ சோ மச்.. இனிமேல் என்னை பார்க்க வர வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் நான் இந்த மாதிரி பேசிகிட்டு இருக்க மாட்டேன். கெட் லாஸ்ட்..” என அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜிக்க,
தனது கைப்பயை எடுத்து தோளில் மாட்டியவள், விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள். வெளியே சென்றவள், ‘புது பொண்டாட்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு மிரட்டி பணம் பறிக்கலாம்னு வந்தா, இவன் ஏற்கனவே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கானே!
வந்ததுக்கு இவன்கிட்ட அடி வாங்கினதுதான் மிச்சம்… ச்சே… ஹர்ஷா.. என்னைவே அடிச்சுட்டல்ல? உன்ன சும்மாவே விடமாட்டேன் டா..’ என்று மனதுக்குள் கறுவி கொண்டவள், அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டாள்.
நல்ல மனநிலையில் வந்தவனுக்கு இவளை பார்த்ததும் பழைய நினைவுகள் அனைத்தும் கண்முன்னே தோன்றி மறைய.. ‘ச்ச… ஏன்தான் இங்க வந்து தொலைச்சாளோ?’ என்று நொந்து கொண்டான். பிறகு நடந்த அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன், தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினான்.
நிரஞ்சனா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு அவள் காதலனுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள். பார்க்கிலே அமர்ந்து இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
“அதுதான் உன்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சே. இப்போ நம்ம ரூட் க்ளியர்.. அப்பா அம்மாவை கூட்டிகிட்டு உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரட்டுமா?” என்று அவன் கேட்க,
“அதெல்லாம் இப்போ எதுவும் வேண்டாம். என்னோட படிப்பு முடியட்டும். இன்னும் ஒரு வருஷம்தான? அப்றமா பார்த்துக்கலாம்.”
“எங்க வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்கடி.”
“அது உன்னோட பிரச்சன. நீதான் பார்த்துக்கணும்.”
“உங்க அக்கா வீட்ல இருக்குறதுதான் பிரச்சனை. இல்லன்னா நம்ம கல்யாணம் நடந்திருக்கும்னு சொல்லுவ?”
“அதுவா… அவளை டார்ச்சர் பண்ண ஒரு வழி கெடச்சுது. அதான் அப்படி சொன்னேன்.”
“உனக்கு அப்படி என்னடி அவங்க மேல கோபம்?”
“பின்ன..? வரவன் போறவன் எல்லாம் உன்னைவிட உங்க அக்கா அழகா இருக்காளே..! உங்க அக்கா பேரு என்னனு கேக்குறதும், அவள் மொபைல் நம்பர் கேக்குறதும், இது பாத்தாதுன்னு சொந்தக்காரனுங்க எல்லாரும் சின்னவளை விட பெரியவ பொறுப்பானவ, நல்ல பொண்ணு அப்படி இப்படீன்னு என் காது படவே பேசுவானுங்க.” என்றாள் வெறுப்போடு.
“இதெல்லாம் ஒரு காரணமா?” என்று சலித்து கொண்டான் அவன்.
“ஓ… சார் வீட்டுக்கு ஒரே பையன்ல? அதான் தெரியல. இரண்டாவதா அதுவும் ஒரு அழகான, பொறுப்பான அக்காவுக்கு தங்கச்சியா பிறந்து பாருடா.. அப்போ புரியும் உனக்கு.”
“என்னவோ போ.” என்றவனது அலைபேசி ஒலிக்க அதை ஏற்று காதில் வைத்து பேச ஆரம்பித்து விட்டான்.
‘இன்னைக்கு மறுவீட்டுக்கு வராளாம். அவ திரும்ப போறதுக்குள்ள ஏதாவது நல்லா மனசு நோகும்படியா செஞ்சுவிட்டு அனுப்பனும். திரும்ப அவ வீட்டுக்கு வரவே பயப்படணும்’ என்று மனதினுள் முடிவாக எண்ணிக் கொண்டவள்,
அவன் பேசி முடித்து அழைப்பை துண்டித்ததும், “சரி காலேஜ் முடியுற டைம் ஆகிடுச்சு. என்னை கூட்டிட்டு போய் பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுடு. நான் கிளம்புறேன்” என்று நிரஞ்சனா கூற,
“சரி வா கிளம்பலாம்” என்றவன் அவளை பைக்கில் அழைத்து கொண்டுபோய் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டான். வீட்டிற்கு வந்ததும் கல்லூரிக்கு சென்று வருவதை போலவே தன்னை காட்டிக் கொண்டவள், களைத்து போய் சோபாவில் அமர்ந்தாள். வீட்டில் வகை வகையான உணவு சமைக்கும் வாசனை வீசியது.
“ஓ.. மூத்த மக வரான்னு தடபுடலா விருந்து ரெடி ஆகுதோ? அவ இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள, ஏன்டா வந்தோம்னு யோசிக்க வைக்குறேன்னா இல்லையா பாரு.” என்று மனதிற்குள் சபதம் ஏற்றவளாக அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா.
“அம்ருதாவோ அனைத்தையும் எடுத்து வைத்தவள் ஹர்ஷாவுக்காக காத்திருக்க தொடங்கினாள். அவளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் எப்போதும் வரும் நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தான் ஹர்ஷா. அறைக்குள் வந்தவன்,
“ரெடியா இருக்கியா? கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே உள் நுழைய “அப்பா..” என்று ஓடி வந்து கட்டி கொண்டாள் ஆத்யா. அவளை தூக்கி கொண்டவன் கொஞ்சியப்படியே அம்ருதாவை பார்க்க,
“எல்லாமே ரெடிங்க. நீங்க வந்தா கிளம்பிடலாம்” என்றாள்.
“ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா? சாரி.. இதோ சீக்கிரம் கிளம்பிடலாம்.” என்றதும்
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க பொறுமையா கிளம்புங்க” என்றவள் காத்திருக்க தொடங்கினாள்.
அனைத்தையும் எடுத்து வைத்து முடித்த பிறகு குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன், “அவ்வளவுதான் ரெடி. வாங்க போலாம்.” என கூறிவிட்டு முன்னோக்கி செல்ல, அவனை இருவரும் பின் தொடர்ந்தனர்.
கீர்த்தனாவிடம் வந்தவன் “ம்மா.. நாங்க கிளம்பறோம். மூணு நாளைல திரும்ப வந்துடுவோம்” என்று கூற,
“மூணு நாளா? அங்க போய் மூணு நாள் தங்கிட்டா, ரெஸ்டாரண்ட் வேலையெல்லாம் யார் பாக்குறது?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் அவங்க வீட்லருந்தே அப்பப்போ போய் பார்த்துப்பேன்” என்று பேசியப்படியே கிளம்ப தயாராக,
“சரி. என்னவோ பண்ணு.” என்றதும் பார்த்திபனிடமும் கூறிவிட்டு இருவரும் வெளியேறினர். மூவரும் காரினில் ஏறி புறப்பட்டு செல்ல, போகும் வழியில் பழங்களையும் வாங்கி கொண்டு சென்றனர்.
வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் அரவம் கேட்க, காவேரிக்கும், ஆறுமுகத்துக்கும் சந்தோஷம் தாளவில்லை. இருவரையும் வரவேற்க வாசலுக்கு சென்றவர்களுக்கு ஒரு நாள் பேத்தியை பிரிந்து இருந்ததே பெரிய பிரிவை போல தோன்றியது.
அவர்கள் வந்ததும் ஆத்யாவை தூக்கி கொஞ்சி தீர்த்தவர்கள், இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து கொண்டு போக நிரஞ்சனா பெயருக்காக ஹர்ஷாவை “வாங்க” என்று கேட்டு வைத்தாள்.
Newer Posts