
Tag:
tamil romantic novel
14. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 14
எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.
கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான். இரவெல்லாம் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி தாலி கட்டியவள் புறம் மனம் சாய நினைத்தாலும், அவள் கொடுக்கும் வார்த்தையின் வீரியம் அதைத் தடுக்கிறது. பெரிதாக நேசம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மனையாள் என்ற உணர்வு லேசாக மனத்தின் ஓரம் ஒட்டி இருக்கிறது.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவள், திரும்பிப் படுக்க முயல வலி பின்னி எடுத்தது. நேற்று விழும் பொழுது கூட இவ்வளவு வலிக்கவில்லை ரிதுவிற்கு. அந்த அசட்டுத் தைரியத்தில் அதைக் கவனிக்காமல் உறங்கி விட்டாள். இப்போது அது வேலையைக் காட்டுகிறது.
“அப்பா!” என்ற ஓசைக்கு அவன் திரும்ப, இடுப்பைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி துடித்துக் கொண்டிருந்தாள்.
என்னவென்று கேட்க விருப்பமில்லாததால் அவன் அப்படியே இருக்க, “ஓ காட்!” எழ முயற்சித்து முடியாது படுத்து விட்டாள்.
“என்னாச்சு?”
“ரொம்ப வலிக்குது!”
“எங்க?”
“இங்கப்பா…”
முதல்முறையாக, மரியாதையாக அழைக்கும் அவள் அழைப்பில் ஒரு நொடி கவனம் சிதறினாலும், “நேத்து விழுந்ததா?” விசாரித்தான்.
“அப்படித்தான்பா நினைக்கிறேன். வலில ஒன்னும் முடியல. எந்திரிக்கவே கஷ்டமா இருக்கு.”
“அப்படியே படுத்துரு.”
அறையை விட்டு வெளியேறியவன் சிறிது நல்லெண்ணையோடு உள்ளே வர, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது தனக்கு வேண்டாம் என்பது போல், சிறிதும் அவள் முகத்தைப் பார்க்காதவன் திரும்பிப் படுக்கக் கூறினான். கருடன் காட்டும் பாராமுகம் புரிந்தாலும் கணக்கில் கொள்ளாது திரும்பிப் படுத்தாள்.
மேல் சட்டையை நடு முதுகுக்கு மேல் வரை உயர்த்தி விட, “டேய்! என்னடா பண்ற?” பதறிச் சட்டையை இறக்கி விட முயன்றாள்.
“ப்ச்! கைய எடு.” எனத் தட்டி விட்டுச் சட்டையை மேல் உயர்த்தி, “எனக்கு என்னமோ உன் முதுகைப் பார்த்தும் கூட ஃபீலிங்ஸ் வரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல பயம் வேற வருது.” எனச் சிடுசிடுத்துவிட்டு எண்ணெயை இடுப்பில் ஊற்றினான்.
“அப்போ உன்கிட்டத் தான்டா ஏதோ கோளாறு இருக்கு.”
எண்ணெயில் தளதளத்துக் கொண்டிருக்கும் இடுப்பில், தப்பென்று ஒரு அடி வைக்கக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது ரிது சதிகாவிற்கு. அதில் அவளின் திருவாய் தன்னால் மூடிக்கொள்ள நீவி விட்டுச் சுளுக்கை எடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும், அவன் இரு கட்டை விரலால் அழுத்தும் பொழுது படக்கூடாத வேதனையைப் பட்டுக் கதறினாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, சரியாகிடும்.”
தன் கடமை முடிந்ததென்று எழுந்தவன் கையைப் பிடித்தவள், “தேங்க்ஸ் பா!” என்க, “ம்ம்!” என்றான்.
“காலைலயே சூடா இருக்க போல.”
“இல்ல.”
“என்னைப் பார்த்துச் சொல்லு.”
“வேலை இருக்கு, விடு.” கையை உதறி விட்டு வெளியேறினான்.
சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கம் அவளை ஆட்கொண்டது. வந்து பார்த்தவன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவளை அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தான். மனத்திற்குள் சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்க, அவள் மீது கரிசனமோ, காதலோ தெரியவில்லை. உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகச் சூரியன் கொடுத்த அனைத்து வெளிச்சத்தையும் மறைத்தான்.
அவள் பக்கத்தில், கணவன் போல் உறவாடிக் கொண்டிருந்த போனை சைலண்ட் மோடில் போட்டு ஓரம் ஒதுக்கி வைத்தான். அறையின் குளிரை அதிகம் கூட்டி வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்டு வெளியேற, அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவள் விழிகளைத் திறந்தாள். அவன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிதுவின் இதழ்கள் மட்டுமல்ல, கண்களும் சிரித்தது.
***
ஓயாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். ஏதாவது அதிசயம் நடந்து தன் பெற்றோர்கள் இங்கு வரக்கூடாது என்ற வேண்டுதலோடு அவன் இருக்க, எண்ணத்தைத் தோற்கடித்து ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரும் வாய் பிளந்து மருமகளின் வீட்டைக் காண, இப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் கடுஞ்சொற்களால் நோகடிப்பாளே எனக் கவலை கொண்டான்.
“இவ்ளோ பெரிய வீட்டுலயா என் மருமகள் இருக்கா?”
“அதான் பாரு சரளா.”
“இவ்ளோ பெரிய வீட்ல வாழுற பொண்ணு, நம்ம வீட்ல எப்படிங்க வந்து வாழும்.”
“இந்த வீட்டப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.”
பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு மனம் நொந்தவன், மௌனமாக அவர்கள் முன் நிற்க, “வாங்க…” என வரவேற்றார் பொன்வண்ணன்.
மகனைப் பார்க்காத சரளா உள்ளே செல்ல, “எல்லாம் சரியாகிடும்டா.” என்றார் தந்தை.
வார்த்தைகள் இன்றித் தலையசைக்கும் பிள்ளையின் கவலையைப் புரிந்து கொண்ட சத்யராஜ், ஆதரவாகத் தோள் மீது கை போட்டுத் தட்டிக் கொடுக்க, வாசல்வரை அழைத்துச் சென்றவன்,
“உள்ள போங்கப்பா…” என்றான்.
“நீ வரலையா?”
“நீங்க போங்கப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.”
தன் சம்பந்திகளை மகிழ்வாக வரவேற்றவர், மரியாதையாக உபசரிக்க ஆரம்பித்தார். வெளியில் நின்று வாய் பிளந்தவர்கள் உள்ளே வந்ததும் திகைத்தனர். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திகைப்பைக் கொடுத்தது. ஏதோ பெரிய பணக்கார விழாவிற்குச் சென்றது போல் அவ்வளவு தோரணையாக இருந்தது அந்த வீடு.
“காபி எடுத்துக்கோங்க.”
“என்ன சார், நீங்க போய் எடுத்துட்டு வந்துட்டு.”
“இதுல என்ன இருக்கு? என் மருமகனோட பெத்தவங்களுக்கு நான் போட்டுத் தராம வேற யார் போட்டுத் தருவா?”
“இருந்தாலும் சங்கடமா இருக்கு சார்.”
“இன்னும் என்ன சார்னு…”
வெள்ளந்தியாகச் சரளாவும், சத்யராஜும் புன்னகைக்க, “சம்பந்தின்னு கூப்பிடலாமே. எனக்குன்னு இருக்கற ஒரே சம்பந்தி நீங்க மட்டும் தான்.” என்றவர் முகத்தில் இந்த உறவிற்காக ஏங்கும் ஏக்கம் தென்பட்டது.
அதை எதிரில் இருக்கும் இருவரும் உணர்ந்தாலும், பணம் என்னும் கௌரவம் உரிமையை வெளிக்காட்ட விடாமல் தடுத்தது. இந்த நொடி வரை மருமகளும் சரி, அவளின் பெற்றவரும் சரி, எட்ட முடியாத ஏணியாகத்தான் தெரிகிறார்கள்.
“உங்க தயக்கம் புரியுது. இருந்தாலும்…”
“விடுங்க சார், இனி நாங்க அப்படியே கூப்பிடுறோம். நீங்க சங்கடப்படாதீங்க.”
மனநிறைவாகப் புன்னகைத்தவர், மகளை அழைத்து வரச் சென்றார். அவர் சென்ற பின், தங்குத்தடை இன்றி அந்த வீட்டை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். மனம் முழுவதும் சங்கடம் எனும் பேய் ஆட்டிப் படைத்தது அவனை.
மகளைத் தட்டி எழுப்பியவர் வந்திருப்பவர்களின் விவரத்தைக் கூற, “நீங்களே பேசி அனுப்புங்க.” என்றாள்.
“அது மரியாதையா இருக்காது ரிது.”
“எனக்குப் பிடிக்கல.”
“நீ ரொம்பத் தப்புப் பண்ற.”
“டார்ச்சர் பண்ணாதீங்கப்பா, பிடிக்கலைன்னு சொன்னா விட்டிடுங்க. எனக்கு அவங்ககிட்டச் சகஜமாப் பேச முடியல.”
“பேசவே முயற்சி பண்ணாம, சகஜமாப் பேச முடியலன்னு சொன்னா எப்படி? ஒழுங்கா ரெடி ஆகிட்டு வந்து எப்ப வந்தீங்கன்னு கேளு.”
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குளியலறை சென்று வந்தவள் கடுகடுவென்று கீழ் இறங்க, “வாம்மா…” அன்பாக அழைத்தார் சரளா.
வழக்கம்போல் அவரைப் புறக்கணித்தவள் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள, “எப்படிம்மா இருக்க?” மாமனார் நலம் விசாரித்தார்.
“ம்ம்!” என்றதோடு நிறுத்திக் கொண்டு இருவரையும் சங்கடத்திற்குத் தள்ளினாள்.
மருமகளின் உதாசீனத்தை வழக்கம்போல் ஒதுக்கி வைத்தவர்கள், பணத்தை மேஜை மீது வைத்து, “நீங்க கொடுத்த பணம் இதுல இருக்கு. சரியா இருக்கான்னு எண்ணிப் பார்த்துக்கோங்க.” என்றனர்.
மகளை ஒரு பார்வை பார்த்தவர் அந்தப் பணம் வேண்டாம் என்று மறுக்க, அவர்களோ உறுதியாக இருந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் பொன்வண்ணன் அமைதியாக, “கல்யாணம் ஆகி ஒரு மாசம் முடியப் போகுது. ரெட்டைல தாலிக்கயிறு மாத்தக் கூடாது. அதனால, முடியுறதுக்குள்ள தாலி பிரிச்சிச் கோர்த்துடலாமா?” என்பதற்குப் பொன்வண்ணன் தலையசைப்பதற்கு முன்,
“அதெல்லாம் தேவையில்லை.” என்றாள் சத்தமாக.
“ரிது!”
“நீங்க சும்மா இருங்கப்பா. என்னால இதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க முடியாது. இவன் கட்டின தாலியவே எப்போ தூக்கிப் போடப் போறோம்னு இருக்கேன். இதுல தங்கத்துல போடுறது தான் கேடு.”
“அப்படி இல்லம்மா, மஞ்சள் கழுத்தோட எத்தனை நாளைக்கு இருப்ப. நாலு இடம் போயிட்டு வர பொண்ணு. நீ இருக்க வசதிக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணல.”
“அது என்னோட பிரச்சினை. இது என் கழுத்துல இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுதுன்னு தெரியல. இதுக்கெல்லாம் இவ்ளோ இம்பார்டன்ட் கொடுக்க முடியாது.”
“கொஞ்சம் பொறுமையாப் பேசு ரிது. அவங்க உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்லிட்டு இருக்காங்க.”
“என்னோட நல்லதை முடிவு பண்ண இவங்க யாரு? வந்த வேலைய மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லுங்க.”
“இன்னும் மனசால நீ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலன்னு நல்லாப் புரியுது. இருந்தாலும் செய்ய வேண்டிய கடமை இருக்கு. உன் அம்மா நல்லபடியா இருந்திருந்தா, என்ன பண்ணி இருப்பாங்களோ அதைத்தான் நாங்க பண்ண ஆசைப்படுறோம். ஒரு நல்ல நாளாப் பார்த்து இந்த வீட்டுக்குள்ளயே கூட பண்ணிக்கலாம். நம்ம எல்லாரும் சேர்ந்து இருந்தாலே உன் மனசு கொஞ்சம் மாறும்.”
“ஓஹோ!” எனக் கால் மீது கால் போட்டவள், “இப்பத்தான் உங்க திட்டம் புரியுது. புள்ளைய முன்னாடி அனுப்பி வச்சிட்டுப் பின்னாடியே நீங்க வந்து செட்டில் ஆகலாம்னு பார்க்குறீங்க. இதுக்கு இந்தத் தாலி ஒரு சாக்கு. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு? என்னடா ரோஷம் வந்து பணத்தைக் கொடுக்குறாங்களேன்னு யோசிச்சேன். பத்து லட்சத்தைக் கொடுத்துட்டு, பத்துக் கோடியைச் சுருட்டப் பிளான் பண்றீங்க. இப்படி ஒரு பொழப்புக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம்.” என்றிட, வெளியில் நின்றிருந்தவனின் ரத்த நாளங்கள் சூடானது. பாறை போல் விறைத்த மனத்தில், பொங்கி எழுந்தது ஆத்திரம். பற்களைக் கடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் ‘பளார்!’ என ஓங்கி அறைந்தான்.
அடித்தவன் ஆங்கார மூர்த்தியாக நின்றிருக்க, அங்கிருந்த மற்ற மூவரும் எழுந்து விட்டனர். அடி வாங்கியவள் மட்டும் அழுத்தமாக அதே இருக்கையில் அமர்ந்து இருந்தாள். கருடேந்திரன் என்ன செய்தான் என்பது புரியச் சில நொடிகள் தேவைப்பட்டது அந்தப் பெரியவர்களுக்கு.
“பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா? உலகத்துலயே உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கா? இந்த வீட்டுக்கு நெருப்பு வச்சேன்னு வச்சிக்க, இருக்கற அத்தனையும் பொசுங்கிப் போயிடும். எதையும் உன்னால மீட்டு எடுக்க முடியாது. அப்படி அழிஞ்சு போற ஒன்னுக்கு ஏன்டி இவ்ளோ ஆணவத்தோடு ஆடுற. இவ்ளோ பாவத்தையும் பண்ணிட்டு, நீயே உயிரோட இருக்கும்போது என் பெத்தவங்க எதுக்காகச் சாகனும்?”
“கருடா!”
“சும்மா இருங்கம்மா. இவளை இவ்ளோ நாள் விட்டு வச்சதே தப்பு. எப்படி நாக்குல நரம்பு இல்லாமல் பேசுறா பாருங்க. இவ அம்மா இவளை ரத்தமும், சதையுமாத் தான் பெத்தாங்களா? இல்ல கருங்கல்லா பெத்தாங்களான்னு தெரியல. இவளை மாதிரி ஈனப்பிறவிங்களை அனுசரிச்சுட்டுப் போறத விட ஒரு தப்பு இந்த உலகத்துல இருக்காது.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா, அவ பேசுனது சரின்னு நான் சொல்லல.” எனப் பொன்வண்ணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
“தயவு செஞ்சு நீங்க பேசாதீங்க. பெண்ணை எப்படி வளர்க்கக் கூடாதோ, அப்படி வளர்த்து வச்சிருக்கீங்க. இந்த அடியை நியாயமா நீங்க அடிச்சு இருக்கணும். அப்படி அடிச்சிருந்தா, இந்த மாதிரிப் பார்க்குற எல்லாரையும் அவமானப்படுத்திட்டு இருக்க மாட்டா…” என்றிட, அவமானத்தில் தலை குனிந்தார்.
“போதும்டா, அவ கூடச் சண்டை போட உன்னை இங்க அனுப்பி வைக்கல. எப்படியாவது மனசு மாறி நல்லபடியா வாழணும்னு தான் அனுப்பி வச்சேன்.”
“வாழுறதா?” எனத் தாடைகளைத் தடதடக்கக் கடித்தவன், அவள் அமர்ந்திருந்த சோபாவை எட்டி உதைக்க அது நான்கடி பறந்து போனது.
“எப்படி அழுத்தமா உட்கார்ந்து இருக்கான்னு பாருங்க. இப்படி ஒருத்தி கூட எவனாவது வாழ முடியுமா? தாலியைக் கழற்றி வீசின அப்பவே இவளுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போச்சு. நல்லது பண்றேன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இவ கழுத்துல தாலி கட்டின நாள்ல இருந்து நான் நானா இல்ல. நிம்மதியா மூச்சுவிட்டு எத்தனை நாள் ஆகுது தெரியுமா?
இந்த வீடு நரகமாய் தெரியுது. இங்க இருக்க சாப்பாடு விஷமா இருக்கு. உங்களுக்காகத் தான் பல்லக் கடிச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போ உங்களையே அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டாளோ, இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன். இவளுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் கட்டின தாலிய நானே கழற்றிட்டுப் போறேன்.”
விருப்பமில்லாது அணிவித்த மாங்கல்யத்தை உருவச் சென்றான் கருடேந்திரன். அப்போதும் கூடச் சிறு சலனம் இல்லாமல் அழுத்தமாக, இருக்கையில் பசை போட்டு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவன் பெற்றோர்கள் ஓடிச் சென்று தடுத்தார்கள். தலை குனிந்திருந்த பொன்வண்ணன் கூடத் தடுத்தார்.
தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் மூவரையும் தாண்டி அவளை நெருங்கியவன், ஆடைக்குள் மறைந்து நெஞ்சுக்குள் உறவாடிக் கொண்டிருந்த அந்த மாங்கல்யத்தை உள்ளங்கையில் பற்றினான். தடுத்துக் கொண்டிருந்தவர்கள் பலத்தை அதிகரித்து அவன் செயலை நிறுத்தப் பார்க்க, அலுங்காது குலுங்காது விழி உயர்த்தினாள்.
“விடுங்கம்மா!” என அந்த மாங்கல்யத்தை இழுக்க, இரு முறை உண்டான பந்தம் அவ்வளவு எளிதாக அவிழுமா! அவள்தான் அவன் இழுப்பிற்கு அசைந்தாள். தன்னோடு வர மறுத்த மாங்கல்யத்தின் மீது கோபம் கொண்டவன், சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் இழுக்க, ரிது அவனோடு மோதி விலகினாள். அதுவரை ஆத்திரத்தில் இருந்தவன் விழிகள் அவளிடம் தாவியது.
இப்படியான தருணத்தில் கூட ஒரு பெண் அசராமல் நிற்க முடியுமா? என்ற கேள்வி தான் அவளை ஆராய்ந்தபின் தோன்றியது. சிறுதுளிப் பதட்டம் இல்லை. பொதுவாகவே, கட்டியவனை விட அவன் கட்டிய தாலிக்குத் தான் பெண்கள் அதிகம் மரியாதை கொடுப்பார்கள். அப்படியான அதி தீவிர பயம் தென்படுவதாகத் தெரியவில்லை.
வெறுமையாக இருந்தது அவள் விழிகள். அந்த விழிகளை அவளவனாக ஆராய்ந்தான். இன்று வரை இந்த மாங்கல்யத்தை, அவள் மாங்கல்யமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன் கைகள் தளர்ந்தது. கட்டியவள் மீது எண்ண முடியாத அளவிற்குக் கோபம் இருந்தாலும், மாங்கல்ய பந்தமும், கணவன் என்ற உரிமையும், இத்தனை உதாசீனங்களை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை.
ஆண் என்ற கர்வத்திற்குள், அவன் கட்டிய மாங்கல்யத்தை ஒளித்து வைத்தவனால் இதை வெறும் மஞ்சள் கயிறாக நினைக்க முடியவில்லை. பெற்றோர்கள் சம்மதத்தோடு, நல்ல நாள் பார்த்துக் கோவில் சன்னிதானத்தில் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டு நாள்கள் பல ஆகிவிட்டது. வேண்டாம், வேண்டும் என்ற இரு வேறு மன நிலையில் அவன் இருக்க, என்ன மனநிலையில் இருக்கிறாளோ ரிது.
“விடுடா!” எனப் பெரும் சத்தம் போட்ட சரளா, மகன் கையில் குடி கொண்டிருந்த மாங்கல்யத்தை விடுவித்து மருமகள் மார்போடு சேர்த்தார்.
“கல்யாணம்னா, உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா இருக்கா? காலங்காலமா இதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை அசிங்கப்படுத்தாதீங்க. உங்க கல்யாணம் உங்க விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. ஆனா, இது கல்யாணம் தான். நீங்களே இல்லைன்னு சொன்னாலும், உங்க வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்து முடிஞ்சிருச்சு. இனி நீங்க எத்தனைக் கல்யாணம் பண்ணினாலும் இதான் தொடக்கம்.”
மூச்சு விடாது பேசிய சரளா சற்று மூச்சு வாங்கி, “உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம் வருது? இந்தக் கோபத்தால தான் நீயும் நாங்களும் இங்க வந்து நிற்கிறோம். இப்பக் கூட அதை மாத்திக்க மாட்டேன்னு சொல்றியே. உன்ன நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு கருடா.” என்றார் தன்மையாக.
கருடேந்திரன், அன்னையின் முகம் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, சூறாவளியே சுழற்றி அடித்தாலும், கடலை பொரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல் சாதாரணமாக இருந்தாள் அவனின் வீட்டுக்காரி. அவளைக் கண்டவன் கண்கள் கலங்கியது. அதுவரை கல்லாக இருந்தவள் உயிர் பெற, தொடத் துடித்தான்.
“அவ பேசுன எதுவும் அவ மனசுல இருந்து வரல. அதனாலதான், அதோட பாதிப்பு இப்ப வரைக்கும் அவ கண்ணுல தெரியல. வலுக்கட்டாயமா தாலி கட்டுன உன்னை எப்படி எல்லாம் பழி தீர்க்க முடியுமோ, அப்படி எல்லாம் பழி தீர்த்துட்டு இருக்கா. நீ தாலியப் புடிச்ச அப்பக்கூட அவ தடுக்காம இருந்ததுக்குக் காரணம் இதுதான்.” என்றிட அப்போதுதான் பொம்மை போல் இருந்தவள் உடலில் உணர்வுகள் உருவானது.
அசையாத சிலையாக இருந்தவள் கண்களில் உண்டான உணர்வைப் புரிந்து கொண்டவர், தன் பக்கம் பார்வை வருவதை அறிந்து அவள் அருகே சென்றார். மாமியாரைப் பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள். எண்ணற்ற கேள்விகளை நொடிப்பொழுதில் தன்னிடம் இடமாற்றும் மருமகள் கன்னத்தைப் பிடித்தவர்,
“உன் மனசு எனக்குப் புரியாம இல்ல. உன்னை மருமகளா பார்க்குறதை விட மகளாப் பார்க்கிறேன். அதனாலதான், இவனை என்ன வேணா பண்ணிக்கன்னு இப்ப வரை அமைதியா இருக்கேன். இனியும் அமைதியாக தான் இருப்பேன். ஏன்னா, இந்த வயித்துல நானும் ஒரு பொண்ணைப் பெத்திருக்கேன். உன் இடத்துல என் பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் என் வீட்டு ஆம்பளைங்க மீசைய முறுக்கிக்கிட்டுத் தாலி கட்டுனவன் கையக் கால உடைச்சிருப்பாங்க. தன் வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம், அடுத்த வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நானும் சராசரியா யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுட்டேன்.” என்றவரை இது நாள் வரை பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தாள்.
“உன்ன நான் ஒரு அயோக்கியனுக்குக் கட்டிக் கொடுக்கல. அந்த ஒரு தைரியத்துல தான் பிடிக்காத ரெண்டு பேரைச் சேர்த்து வச்சிருக்கேன். உன் மனசுல எவ்ளோ கோவம் இருக்கோ, அவ்ளோ கோபத்தையும் கொட்டு. ஆனா, கடவுள் கொடுத்த இந்த உறவை வெட்டி விடணும்னு மட்டும் நினைக்காத. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இந்த வாழ்க்கை உனக்குப் பிடிக்கும். இந்தத் தாலி உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். காரணம் இல்லாம, ஏணி வச்சா கூட எட்ட முடியாத ஒருத்தனை, உன் வாழ்க்கைக்குள்ள அந்தக் கடவுள் நுழைச்சு இருக்க மாட்டான்.”
“என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.”
“நியாயமா நாங்கதான் சார் மன்னிப்புக் கேட்கணும். இவ மனசைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, விருப்பம் இல்லாத தாலிய இன்னும் அழகுபடுத்த நினைச்சது எங்க தப்பு.”
“இதுக்கு மேலயும் சேர்த்து வைக்க யோசிக்காதீங்கம்மா. இவளுக்கும், எனக்கும் ஒத்து வராது. தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். இவளுக்கு நான் பண்ணது துரோகம் தான். அதுக்கு ஜெயில்ல கூடப் போடச் சொல்லுங்க. இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம்.”
“இதுக்கு மேல எதுவும் பேசாத கருடா. அம்மா இவ்ளோ சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. அம்மா கூட இருக்க உன்னாலயே புரிஞ்சிக்க முடியாத அப்போ, எடுத்துச் சொல்ல ஆள் இல்லாத இவ எப்படிப் புரிஞ்சிப்பா? சரியோ தப்போ, நான் என் மருமகளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன். இன்னொரு தடவை அவளை அடிக்காத. அப்புறம் மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்.” என்ற பெற்ற தாயின் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியாது, யாரும் அமராமல் காலியாக இருந்த இருக்கையை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான்.
கோபமாகச் செல்லும் மகனை சத்யராஜ் பாவமாகப் பார்க்க, பிள்ளையின் மனம் புரிந்தாலும் பெண்ணாக யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மீண்டும் ஆளாக்கப்பட்ட சரளா, “நாங்க போனதுக்கப்புறம் இவளை எதுவும் சொல்லாதீங்க சார். எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருச்சுன்னா, அதைப் பேசிக் கிளறாம கொஞ்சம் ஆறப் போட்டாலே போதும், தன்னால சரியாகிடும்.” என்று விட்டுத் தந்தை, மகள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் சரளா.
கிளம்புவதற்கு முன் மருமகளிடம் சென்றவர், “என் புள்ள அடிச்சதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” என்று விட்டு இரு நொடி அமைதியாக அவள் முகத்தை ஆராய்ந்து,
“நீயே நினைச்சாலும், என் குடும்பத்துக்கும் உனக்குமான பந்தம் அறுந்து போகாது. இந்த ஜென்மத்துல நான்தான் உனக்கு மாமியார்! என்னைக்கா இருந்தாலும் மாமியார் கொடுமையைக் காட்டாமல் விடமாட்டேன்.” என்றதைக் கேட்டதும் சிட்டிக்கு உயிர் வந்தது போல் முகத்தில் லேசான சிரிப்பு உதயமானது.
அதை அங்கிருந்த ஆண்கள் இருவரும் அறியாது போக, “நீயும் கொஞ்சம் மருமகள் கொடுமையைக் காட்டலாம். ரெண்டு பேரும், வேலைய முடிச்சுட்டு வர என் பிள்ளைகிட்டப் பஞ்சாயத்து வச்சு அவனுக்கு யாரு முக்கியம்னு தெரிஞ்சுக்கலாம்.” என்று விட்டு அவளைப் போல் வெளிவராத புன்னகையை அவளுக்கு மட்டும் காட்டிவிட்டு வெளியேறினார்.
என் தேடலின் முடிவு நீயா – 31
written by Competition writers
தேடல் 31
ஐந்தாறு நிமிடங்களிலே அவனது அந்த துடிப்பு குறைந்து விட்டது…
இசிஜி மெஷினை பார்த்த தாதி அவனையும் நன்றாக சோதித்து விட்டு, “மகிமாவை பார்த்து நீங்க டென்ஷன் ஆகாதீங்க… உங்க ஹஸ்பெண்ட் கான்சியன்ஸ்க்கு வந்துட்டு இருக்கிறார்… எந்த பிரச்சினையும் இல்ல அவருக்கு” என்று கூற…
அவர் சொல்வதை அவளால் நம்ப தான் முடியவில்லை…
ஆனா அவன் எதற்காக இவ்வாறு துடித்தான் என்று அவளுக்கு புரியவில்லை…
அதை வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை…
அவள் முக உணர்வை வைத்து அவள் மனதை கணித்திருக்க வேண்டும் அவர்…
இந்த ஆறு மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார், “எல்லாரும் நார்மலா எந்திரிக்க மாட்டாங்க… கோமால இருந்து எழுபும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிம்டம்ஸ் காட்டும். உங்க புருஷனுக்கு இந்த மாதிரி காட்டி இருக்கு பயப்படாதீங்க” என்று சிரித்தபடி படி அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே…
மெதுவாக கண்களை திறந்தான் அபின்ஞான்…
அவனுக்கோ கண்கள் கூசின…
கண்ணை திறந்து மூடி… அவன் இந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து கொண்டிருந்த இருட்டு உலகத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வர தன் கண்களை பழக்கிக் கொண்டிருந்தான்…
கண்களை நன்றாக திறந்து பார்த்தான்…
அவன் அருகே அவனை அன்பொழுக பார்த்த படி அன்னபூரணி அம்மாள் நின்றிருந்தார்…
அவரை பார்த்து, “அம்மா” என்று வாயாசைத்தான்.
அவன் வாயெல்லாம் வறண்டு போய் இருந்தது.
அவன் தலையை வருடியவர், “எங்கள ரொம்ப பயமுறுத்திட்ட அபி” என்றார் பெருமூச்சுடன்…
மகிமாவும் மெதுவாக அவனை நோக்கி வர, அவள் தன் அருகில் வருவதை கண்டு புருவம் சுருக்கி பார்த்த அபின்ஞான், அன்னபூரணி அம்மாளை பார்த்து, “யாரும்மா இந்த பிரக்னெட் லேடி” என்று கேட்டானே பார்க்கலாம்…
அன்னபூரணி அம்மாளுக்கோ அவன் கூறியதை கேட்டு மயக்கம் வராத குறை தான்…
அவனை அதிர்ந்து பார்த்தபடியே ஓரடி பின்னே சென்றாள் மகிமா…
அவளை மறந்து விட்டானா அவளவன்??
அதேநேரம் வைத்தியரும் வந்துவிட்டார்…
வயிற்றில் கையை வைத்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அவனை சோதித்துப் பார்த்தவர், “மிஸ்டர் அபி இது யாருன்னு உங்களுக்கு தெரியுதா?” என்று அன்னபூரணி அம்மாலை சுட்டிக்காட்டி கேட்க,
“என் அம்மாவ எனக்கு தெரியாத டாக்டர்… எதுக்கு என் கிட்ட இப்படி எடக்கு மொடக்கா கேள்வி கேக்குறீங்க?” என்று அவரிடம் அவன் திருப்பிக் கேட்க,
அந்த வைத்தியரும் பல கோமா நோயாளிகளை பார்த்து அனுபவப்பட்டிருந்ததால் அதைக் கண்டு கொள்ளாது மகிமாவை காட்டி, “இவ யார்ன்னு தெரியுமா?” என்று கேட்டார்…
“திடீர்னு ஒரு பொண்ண காட்டி யாருன்னு கேட்டா எனக்கு எப்படி தெரியும் டாக்டர்” என்று அவன் இடக்காக கேட்க,
அவனை வெறித்து பார்த்த படி நின்றவள் முகத்திலோ தாங்க முடியாத வேதனை நிலவியது…
“நீங்க இப்ப எந்த வருஷத்துல இருக்கீங்க” அவர் மீண்டும் கேட்க,
அவரை லூசா என்பது போல் பார்த்தவன், “2024” என்று கூற மகிமா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்….
ஒரு வருடம் முழுவதும் நடந்ததை மறந்து விட்டானா…
வைத்தியரும் அன்னபூரணி அம்மாளை வெளியே அழைத்து வந்தவர், “பொதுவா கோமால இருந்து எழுந்தா சிலருக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்… சிலருக்கு ஒண்ணுமே ஞாபகம் இருக்காது… அப்படி இருந்தாலும் ஒரு சில நாட்களில் எல்லாம் ஞாபகம் திரும்பிடும்… சிலாக்களுக்கு லைப் லாங் ஒண்ணுமே ஞாபகம் வராது… இப்ப அவர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்… ஃபுல் பாடி செக்கப் ஒன்னு பண்றது பெட்டர்…” என்று கூறிவிட்டு சென்றார்…
அவன் எழுந்து விட்டதை கேள்விப்பட்ட உடனே பசுபதியும் வந்து விட்டார்…
அபின்ஞானின் அறையில் தான் மகிமா அன்னபூரணி அம்மாள் பசுபதி மூன்று பேரும் இருந்தனர்…
அந்த பெரிய மனிதருக்கும் இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று புரியவில்லை…
அவன் மறந்திருந்தாலும் இது மறைக்கக் கூடிய விஷயமா என்ன…
பசுபதி சங்கடமாக மகிமாவை பார்த்துவிட்டு அபின்ஞானை பார்த்தவர்… “அபி நீ இவள யாருன்னு கேட்டுட்டு இருந்தல்ல… இவதான் உன் பொண்டாட்டி” என்றார்.
அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தவன், “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று நம்ப முடியாமல் கேட்டான்…
“ம்ம்… கல்யாணமாகி உனக்கு குழந்தையும் பொறக்க போகுது” என்றவர், அருகில் இருந்த நாட்காட்டியை காட்டி, “நீ இப்ப 2025ல இருக்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே… ரிலாக்ஸா இரு…” என்றார்.
அவனால் தனக்கு திருமணம் முடிந்ததை ஏற்கவே முடியவில்லை. அருகே இருந்த மகிமாவை அவன் துளைப்பது பார்க்க, அவளும் அவன் பழுப்பு நிற விழிகளை ஆறு மாதங்களுக்கு பிறகு உயிரை கையில் வைத்துக் கொண்டு பார்த்தாள்.
அவன் புரியாத பார்வையை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை.
அவன் முன் கண்ணீர் வடிக்க விருப்பம் அந்த அறையிலிருந்து வெளியேரி விட்டாள்.
அவள் பார்வை அர்த்தம் அவனுக்கும் புரியவில்லை.
அவனுக்கு தனிமை தேவை என்பதை உணர்ந்த பசுபதி அன்னபூரணி அம்மாளுடன் வெளியே சென்றார்…
வெளியே வந்தவள் சோபாவில் அமைதியாக அமைந்து கொண்டாள்…
பசுபதியுடன் தான் மகாதேவும் வந்திருந்தான்… அவளை அணைத்தபடியே அவள் அருகே அமர்ந்து கொண்டவன், “டென்ஷன் ஆகாதே மகி… அவன் எழும்பினதே பெரிய விஷயம் தான்… இனி கவலைப்படாதே எல்லாமே சரியாகிடும்… நான் இப்ப அபிய பார்க்கல… என்ன மனநிலைல இருக்கான்னோ தெரியல… பொறகு வந்து பார்க்கிறேன்” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்…
ஏன் அவளுக்கு மட்டும் இத்தனை பிரச்சினைகள் என்று தெரியவில்லை…
அவன் எழும்பியதற்கு சந்தோஷப்படுவதா… இல்லை தன்னை மறந்ததை நினைத்து கவலைப்படுவதா என்றும் யோசிக்க முடியவில்லை…
அவள் மனதுக்கு சரியான அழுத்தமாக இருந்தது…
அடுத்த இரு நாட்களும் அவள் அவன் அரை பக்கமே செல்லவில்லை…
அன்னபூரணி அம்மாளும் அவளை புரிந்து கொண்டதால் அவரே அவனை பார்த்துக் கொண்டார்…
அபின்ஞான் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான்…
போசனையான உணவுகளும், ஏற்கனவே அவன் ஆரோக்கியமானவன் என்பதாலும் வேகமாக தேரி வந்து கொண்டிருந்தான்…
வீட்டில் நடமாடுகிறான்… வெளியே செல்கிறான்… தந்தையுடன் பேசுவான்… டிவி பார்ப்பான்…
ஆனால் அவன் கண்ணில் தான் மகிமா படவே இல்லை…
அன்று அவன் தந்தையிடம் கம்பெனியை பற்றி பேசி விட்டு வந்தவன் சாப்பாட்டு மேசையில் அமர அன்னபூரணி அம்மாள் அவனுக்கு உணவை பரிமாரிக் கொண்டிருந்தார்…
மகிமா தன் அறைக் கதவின் ஓரத்தில் நின்று மறைந்து நின்று பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்குத் தெரியாமல் அவன் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவன் முன்னால் சென்று நின்று அவன் பார்க்கும் பார்வையை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை…
அன்னபூரணி அம்மாளை அழுத்தமாகப் பார்த்தவன், “அம்மா உண்மையிலுமே அவ என் பொண்டாட்டி தானா?” என்று கேட்க, ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமா சுவரில் சாய்ந்து நின்று கண்ணை விரித்தாள்.
“ஏண்டா அப்படி கேக்குற” என்று அதிர்ந்து கேட்டார் அன்னபூரணி அம்மாள்…
“கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க… நான் எழும்பி மூணு நாளாச்சு… இன்னும் அவ ஏன் பக்கம் கூட திரும்பி கூட பார்க்கல” என்றான் கராறான குரலில்…
“நீ பழசை மறந்ததினால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணம்ன்னு அப்படி இருக்காப்பா” என்றார் …
“சரி அதுக்குன்னு இப்படி விலகியா இருப்பா… இனி அவ என்ன பார்க்கட்டும்” என்றான் அதிகாரமாக,
திருமணத்தின் பின் கொஞ்சம் மென்மையாக மாறியிருந்தான்…
ஆனால் அவன் பிறவிக் குணம் முழுதாக மாறிப் போய்விடுமா என்ன…
அவரும் மகிமாவை சென்று அழைக்க, அவளும் அவன் அருகே வந்து அவனுக்கு தயங்கியபடியே பரிமாறினாள்…
தலை குனிந்த படி பரிமாறிக் கொண்டிருந்தவளின் கையை பற்ற சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள், “நீயும் சாப்பிடல்ல தானே… என் கூடவே சாப்பிடு” என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினான்.
அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, “என்ன நெனச்சா நீ இவ்ளோ மெலிஞ்சு போய் இருக்க” என்ற அவனது கேள்வியில் விழுங்கிய உணவு அவள் தொண்டையில் சிக்கிக் கொள்ள இரும ஆரம்பித்தாள்.
“சரியா பார்த்தா கோமாவிலிருந்து எழுந்த என்ன நீ தான் கவனிச்சிருக்கணும்… ஆனா நீ என்ன திரும்பி கூட பார்க்காம இருக்க… நான் தான் உன்ன தேடி வந்து கவனிக்க வேண்டியதா இருக்கு” என்றவன் அவள் தலையில் தட்டி நீரை கொடுத்தான்…
அவள் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, “எதுக்கு இவ்ளோ ஷக்காகுற… சாப்பிட்டு முடிஞ்சதும் என் ரூமுக்கு வா… உன் கூட பேசணும்” என்றவன் அறைக்குள் நுழைய, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் பின்னாலே சென்றாள்…
என்ன கதைக்கப் போகிறானோ என்ற பதற்றத்தில் அவள் கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்.
கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் தன் அருகில் அமருமாறு சைகை செய்ய அவளும் அமர்ந்து கொண்டாள்…
“மகிமா தானே உன் பெயர்” என்று கேட்டான்…
“ஐயோடா… மறுபடியும் முதலில் இருந்தா” என பெருமூச்சு விட்டவள், ஆம் என்பது போல் தலையசைத்தாள்…
“வாய தொறந்து பேச மாட்டியா என்ன?” என்று கேட்டான்…
அவளுக்கு பழைய அபின்ஞான் தான் அவள் கண் முன்னால் வந்தான்…
“பழைய படி பொறுக்கியா மாறிடான்” என்று நினைத்துக் கொண்டவள், “என் பெயர் மகிமா தான்” என்றாள் அழுத்தமாக…
“சரி உன்ன பத்தி சொல்லு எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லை…” என்றான் கட்டிலில் சவகாசமாக சாய்ந்தமர்ந்த படி…
இப்போது அவனிடம் எதை சொல்வது… முதலில் அவனை ஏமாற்றியதை பற்றியதா? அல்லது மகாதேவின் தங்கை என்று கூறுவதா? எதை கூறினாலும் அவன் மனதில் அவளை பற்றி நல்ல அபிப்பிராயம் வரப்போவதில்லையே…
எச்சிலை கூட்டு விழுங்கிக் கொண்டவள், “சொல்றது போல பெருசா எதுவும் இல்லை… எனக்கு அம்மா அப்பா இல்ல ஒரு அண்ணா மட்டும் தான்… அவன் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்” என்றாள் பட்டும் படாமல் சமாளிப்பாக…
“ஓஹ்… நாம எப்படி கல்யாணம் பண்ணோம்… லவ் மேரேஜா இல்லன்னா அரேன்ஞ்ச் மேரேஜா?” என்று கேட்டான்…
“ரெண்டும் இல்லடா நீ என்ன மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று நினைத்தவள், “லவ் மேரேஜ்” என்றாள்…
“நான் உன்ன லவ் பண்ணேனா… ஐ காண்ட் பிலிவ் திஸ்” என்றான் அதிர்ச்சியாக…
“தெரியல” என்று வாய் தவறி சொல்லிவிட்டவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்…
“என்னது?” என்று சந்தேகமாக அவளை பார்க்க…
“ஐயோ ஐயோ… நானே உலரி வெச்சிடுவேன் போலிருக்கே” என நினைத்தவள், “நீங்க வேற யாராவது லவ் பண்ணா இல்லையான்னு தெரியல” என்றாள்…
நெற்றியை அழுத்தமாக வருடியவன், “நான் உன்ன லவ் பண்ணான்னு தான் கேட்டேன்… எதுக்கு லூசு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க… நானும் ஆரம்பத்தில் இருந்தே பாத்துக்கிட்டு இருக்கேன்… திருடி மாறி முழிச்சிட்டே இருக்க… ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி என்கிட்ட மறைக்கிறியா என்ன?” என்று புருவம் சுருக்கி வினவ,
“அடப்பாவி… என்ன வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி குழந்தையை குடுத்துட்டு என்ன கேள்வி எல்லாம் கேட்கிறான் பாவி” என்னை நினைத்த வேலைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவனோ அவள் வாய் மூலமாக தனக்கும் அவளுக்கும் இடையில் நடந்ததை கறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஆனால் வெளிப்படையாக அதை அவளிடம் கேட்கத்தான் அவனுக்கு சங்கடமாக இருந்தது.
“நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன், நீ இன்னும் பதில் சொல்லல” என்றான் அதட்டலாக…
“ம்ம்… நீங்க லவ் பண்றேன்னு தான் சொன்னீங்க” என்றாள்…
“அப்ப நீ என்னை லவ் பண்ணலையா?” என்று அடுத்த கேள்வி வர,
“சரியான கேள்விக்கு பொறந்தவனா இருக்கான்” என்று நினைத்தவள், “நானும் உங்கள லவ் பண்றேன்” என்றாள்..
“அப்ப ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்க” என்று இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை பார்த்து கேட்டானே பார்க்கலாம்.
“இன்னும் ஒண்ணுமே ஞாபகம் இல்ல, ஆனா குசும்ப பாரேன்” என நினைத்தவள் ஒன்றும் பேசாமல் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
அவள் தொளில் கையை போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டவன், தன் பழுப்பு நிற விழிகளால் அவளை நோக்கி, “நான் ஒரு பொண்ண லவ் பண்ணுவேன்னு நினைச்சு கூட பார்க்கல” என்றவன்… “சரி அத விடு… இனி நீ தான் என் கூடவே இருந்து என் வேலய பார்த்துக்கனும்” என்றான் அதிகாரமாக…
‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்…
அந்த நேரம் மீனாட்சியும் அபின்ஞானை வந்தார்…
மகிமா அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
அவன் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவர், “அபி… நீ இப்போ ஓகே தானே” என்று அவன் அருகில் வந்தவர் கேட்க, “ஓஹ் அத்தை… இப்ப எல்லாம் சரியாயிடுச்சு… சஞ்சனா எப்படி இருக்கா” என கேட்டான்.
“ம்ம் அவளுக்கு என்ன அவ நல்லா இருக்கா… நீதான் எங்கள நல்லா பயமுறுத்திட்ட… ஆமா நீ இந்த சிறுக்கிய மறந்துட்டியாமே” என்று மகிமாவை இகழ்ச்சியாக பார்த்து கேட்க,
“ம்ம்…” என்றான் அபின்ஞான்…
“இவ உனக்கு பொருத்தமே இல்ல… எதுக்கு இவள கூடவே வெச்சிருக்க” என்று அவர் தன் வழமையான பல்லவியை ஆரம்பிக்க…
“அண்ணி” என்று அழைத்த அன்னபூரணி அம்மாள், “உங்கள உங்க அண்ணா பேசுறார்” என்று கூற,
பசுபதி அங்கே இருப்பதை அறிந்து சத்தமில்லாமல் சென்று விட்டார்…
அன்று இரவு நீண்ட நாட்களில் பின் சேர்ந்து மகிழ்ச்சியாக உண்டானர்…
சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவள் படுக்க ஆயத்தமாக… அவள் அருகே சென்றவன்… அவள் வயிற்றைத் தொட்டு பார்த்து, “ட்வின்சா” என்று அவள் வயிற்றை வருடியபடியே ஆர்வமாக கேட்டான்…
மகிமாவும் புன்னகையுடன் “ம்ம்” என்றாள்.
வெளியே அவள் புன்னகைத்தாலும் அவன் தன்னை புரியாது பார்க்கும் ஒவ்வொரு பார்வைகும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் அருகருகே படுத்துக் கொண்டனர்.
நடு ஜாமத்தில் எழும்பி அவனை பார்த்துக் கொண்டிருப்பாள்.
இவ்வளவு நாளும் அவளுக்கு நிம்மதியான உறக்கம் என்பதே இல்லை.
அவனை நினைத்து அவள் மனம் எப்போதும் நிலையில்லாமல் துடித்துக் கொண்டே இருக்கும்.
அவன் எழும்பியதன் பின்னரும் அதே நிலைதான்.
ஆனால் இன்று தான் அவன் அருகே நிம்மதியாக உணர்ந்தாள்.
4. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 4
எவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருந்தாலும், என் கோபத்திற்கு முன்னால் துச்சம் எனக் காட்டிக் கொண்டிருக்கிறாள் ரிது. விஷயத்தைக் கேட்டதும் தான் தாமதம்… பளிங்குக் கற்கள் உடைந்தது. பளபளக்கும் கண்ணாடி அறை தான் வேண்டும், இங்கிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் கடற்கரை அப்படியே தெரிய வேண்டுமென்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கிறது.
மகளிடம் பேச முடியாத தந்தை தடுமாறி ஒதுங்கி நிற்க, “ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா பேசிட்டு வந்திருக்கீங்க? என் கல்யாணத்தை முடிவெடுக்குற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. எவனோ ஒரு பொறுக்கி தாலி கட்டுவான், அவன் கூடச் சேர்ந்து வாழச் சொல்லுவீங்களா? என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க முடியாது. கடைசி வரைக்கும் அவன் ஜெயில்ல தான் இருப்பான். ரவிய என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். உங்க வேலைய மட்டும் பாருங்க.” தையத்தக்காவென்று குதித்துக் கொண்டிருக்கிறாள்.
“கோபத்துல எந்த லாபமும் கிடைக்காது. எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு கொஞ்சம் காது கொடுத்துக் கேளு.”
மிச்சம் இருந்த அலங்காரப் பொருள் ஒன்றைக் கையில் எடுத்தவள், “நான் எதுக்குக் காது கொடுத்துக் கேட்கணும்? படிச்ச பைத்தியக்காரனா நீங்க வேணா நடந்துக்கோங்க, என்னை நடக்கச் சொல்லாதீங்க.” என அதைத் தூக்கிப் போட்டு உடைத்தாள்.
“இப்ப எதுக்கு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இருக்க?”
“உங்களையும், அவனையும் ஒன்னும் பண்ண முடியல. அதான் இதுங்களைத் தூக்கிப் போட்டுட்டு இருக்கேன்.”
“உன் கோபத்தால தான் உனக்கு இந்த நிலைமை.”
“சோ வாட்!”
“நீ அவனை அவ்ளோ கேவலமாய் பேசாம இருந்திருந்தா, அவன் அதைச் செஞ்சிருக்கவே மாட்டான்.”
அதுவரை தந்தை என்று கோபத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தவள், “இப்படிப் பேச அசிங்கமா இல்ல உங்களுக்கு. இவனை மாதிரி எத்தனைப் பேரைப் பார்த்திருப்பேன் தெரியுமா? ரிது இப்படி இருந்ததாலதான் இன்னும் பாதுகாப்பா இருக்கா. ஆம்பளத் திமிர்ல ஒருத்தன் வருவான், நான் அடங்கிப் போறன்னு மண்டியிடனுமா?” எனக் கடிபடும் பற்களுக்கு நடுவில் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.
“என்ன இருந்தாலும், நீங்களும் ஒரு ஆம்பள தான. அதான் ஆம்பளப் புத்தி வெளிப்படுது.”
“நான் ஆம்பளையா பேசல, உனக்கு அப்பாவா பேசுறேன்.”
“அப்படியா! சரி, நீங்க ஒரு நல்ல அப்பாவா தாலி கட்டுனவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கறீங்க. நாளைக்கு இன்னொருத்தன் வந்து திரும்பத் தாலி கட்டுனா, அவனுக்கும் என்னைக் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? ஒரே வீட்ல ரெண்டு புருஷனோட வாழ்ந்துக்கவா…”
“எதுக்குமா இப்படிப் பேசுற? அவன் பண்ணது தப்புதான். அதை என்னைக்கும் நான் சரின்னு சொல்ல மாட்டேன். ஆனா, அவன் ரொம்ப நல்லவன். உன்ன மாதிரிக் கண் மூடித்தனமான கோபத்துல இப்படி ஒரு தப்பைச் செஞ்சுட்டான்.”
“நீங்க என்ன சொன்னாலும் என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க முடியாது.”
“அப்போ அவன் மேல கொடுத்த கேஸையாவது வாபஸ் வாங்கு.”
“வாட்! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குப்பா.”
“இங்க பாரு ரிது, நீ எனக்கு எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி அந்த இன்ஸ்டிடியூட்டும் ரொம்ப முக்கியம். அதுதான் என்னோட அடையாளம். உன்ன மாதிரி அவனும் ஒரு கேஸ் கொடுத்து நாளைக்குப் பிரஸ், மீடியான்னு விஷயம் வெளிய தெரிய வந்தா அதோட பேர் கெட்டுப் போகும். மீடியா முன்னாடி உன்கிட்டதான் பணம் கொடுத்தேன்னு ரவி சொல்லிட்டா, மொத்தமா எல்லாமே முடிஞ்சிடும். இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாதுன்னா அவனைச் சமாதானம் பண்ணனும்.
அவ்ளோ சீக்கிரம் சமாதானம் ஆகுறவன் அவன் கிடையாது. அதனால அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும். பொண்டாட்டிய நிச்சயம் காட்டிக் கொடுக்க மாட்டான். அப்படியே நினைச்சாலும், அவன் வீட்ல இருக்குறவங்க விட மாட்டாங்க. அதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்கேன். உனக்குப் பிடிக்குதோ, இல்லையோ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்.”
“இந்தக் கட்டாயக் கல்யாணம், மிரட்டல் கல்யாணம்லாம் என்கிட்ட நடக்காது. உங்களால என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கோங்க.”
“ரது!”
“சாரிப்பா…”
“அவனை நான் வெளியில எடுப்பேன்.”
“என்னை மீறி எடுக்க முடியாது.”
“நான் உன்னோட அப்பா…”
“அதுக்காகத் தப்புக்குத் துணை போக முடியாது.”
“அவன் தப்பானவன் இல்லை.”
“அது எனக்குத் தேவை கிடையாது.”
“கடைசியா கேட்கிறேன், கல்யாணத்துக்குச் சம்மதிப்பியா மாட்டியா?”
“எத்தனைத் தடவை கேட்டாலும் நோ தான்.”
“அப்போ நீதான் பணத்தை வாங்கிட்டன்னு நானும் சாட்சி சொல்லுவேன்.” என்றதும் அதிர்ச்சியோடு பார்த்தாள் தந்தையை.
“நீ இவ்ளோ பிடிவாதமா இருக்கும் போது எனக்கு வேற வழி தெரியல ரிது. எனக்கு என் பொண்ணை விட அந்த இன்ஸ்டிடியூட் ரொம்ப முக்கியம். அது என் கைய விட்டுப் போறதை விரும்பல. நீதான் வாங்குனன்னு சாட்சி சொல்லிட்டா உன்னோட இந்தப் பிரச்சினை முடிஞ்சிடும்.”
“அப்பா!”
அப்பட்டமான அதிர்வோடு அழைக்கும் மகள் மீது, கருணை ஏற்பட்டாலும் காட்டிக் கொள்ளாது, “சாரி!” என வெளியேற,
“நான் உங்களுக்கு ஒரே பொண்ணு. நான் இல்லாம அந்த இன்ஸ்டிடியூட் வச்சு என்ன பண்ணுவீங்க?” கேள்வி எழுப்பினாள்.
“நீ எனக்கு ஒரே பொண்ணா இருக்கலாம். ஆனா, அந்த இன்ஸ்டிடியூட் நான் பெற்றெடுக்காத பல ஆயிரம் பிள்ளைங்களை உருவாக்கி இருக்கு. நாளைக்கே எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா தூக்கிப் போட அவங்க வந்து நிப்பாங்க.”
“இதுதான் உங்க முடிவா?”
“உன் முடிவுல மாற்றம் வரலன்னா, இதான் என்னோட முடிவு.”
“நீங்க என்னைக் கார்னர் பண்றீங்க.”
“பண்ண வைக்கிறது நீ தாம்மா…”
“அவனோட என்னால வாழ முடியாது.”
“அது உன்னோட விருப்பம்.”
“எனக்கு அப்பாவா, கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?”
“ஒரே ஒரு ஆப்ஷன் தரட்டுமா?” என்றவரைப் புருவம் நெளிய ரிதுசதிகா பார்க்க, “உனக்கும், ரவி சொன்னதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு ப்ரூஃப் பண்ண அடுத்த நிமிஷம், அவன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கித் தரேன். அவனை உன் வாழ்க்கையில இருந்து அனுப்பிட்டு எப்பவும் போல வாழ்ந்துக்கலாம். அனேகமா அவனுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்காது. சோ, விட்டால் போதும் சாமின்னு ஓடிடுவான். உன் பிரச்சினையும் முடிஞ்சிடும். என் பிரச்சினையும் முடிஞ்சிடும்.” என்றார்.
“கல்யாணத்துக்கு நாள் பாருங்க.”
“ரிது!”
“நான் காசு வாங்கலன்னு ப்ரூஃப் பண்ண அடுத்த செகண்ட் அவன் மட்டும் இல்ல, நீங்களும் என் லைஃப்ல இருக்க மாட்டீங்க. எனக்குத் தாலி கட்டுனானே, அவனாவது பரவால்ல. நேர்ல நின்னு எதிர்த்துத் தோத்துப் போய் முதுகுல குத்துனான். இத்தனை வருஷம் என்கிட்ட வேலை பார்த்த அந்த நாயும், அப்பாவான நீங்களும் பச்சத் துரோகத்தைப் பண்ணிட்டீங்க. என்னை ஜெயிச்சுட்டதா நினைக்கிற உங்க மூணு பேரையும் மொத்தமா தோற்கடிச்சு இந்த ரிது யாருன்னு காட்டுறேன்.”
“ஆல் தி பெஸ்ட் ரிது!”
“தேங்க்ஸ் ப்பா.” என அவள் அறையை விட்டு வெளியேற, மகளுக்காக எடுத்த முடிவு ஒரு பொழுதும் தவறாகப் போகக்கூடாது என்ற வேண்டுதலோடு நின்றார் பொன்வண்ணன்.
***
ஐந்து நாள்கள் கழித்து எதிரில் நிற்கும் மகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை சரளா. காரணத்தை அறிந்தவன் தலைகுனிந்து கொண்டு நிற்க, நதியா ஆரத்தி சுற்றினாள். உள்ளே செல்லாமல் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தோளைத் தட்டிக் கண்ணைக் காட்டியவர், “இப்பத்தான் வந்திருக்கான் சரளா.” மனைவியிடம் பேசினார் தன்மையாக.
அவருக்கு எவ்விதப் பதிலையும் கொடுக்காதவர், உள்ளே சென்று ஒரு மூலையில் அமர்ந்து கொள்ள, பார்த்தவன் மனதெல்லாம் சங்கடம். மிகவும் கண்டிப்பான அன்னையின் வளர்ப்பில் வளர்ந்தவன் கருடேந்திரன். அப்படிப்பட்டவன் செயலை எப்படி ஏற்றுக் கொள்வார் சரளா. சொத்து, சுகங்களை விடத் தன் பிள்ளைகளே செல்வம் என்று ஒழுக்கமாக வளர்த்தவருக்கு இது பெரும் இழுக்கு.
மெல்ல நகர்ந்து அன்னைக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவர் கைகளைத் தொட முயற்சிக்க, இடம் கொடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மனபாரத்தோடு வீடு திரும்பியவன் இன்னும் நொந்து போய், “சாரிம்மா, நான் வேணும்னு அப்படிப் பண்ணல.” என்றதும் ‘பளார்!’ என்ற சத்தம்தான் அங்குக் கேட்டது.
ஆரத்தியைக் கொட்டி விட்டு நிமிர்ந்த நதியா அந்தச் சத்தத்தைக் கேட்டு அவசரமாக உள்ளே ஓட, “என் பிள்ளையாடா நீ. எப்படிடா இப்படி ஒரு வேலையைச் செய்யத் தைரியம் வந்துச்சு. பெத்தவ வளர்ப்பைக் களங்கப்படுத்திட்டு வந்து நிக்கறியே. இதுக்கு நீ கொலை பண்ணிட்டுக் கூட, ஜெயிலுக்குப் போயிருக்கலாம். உனக்கு ஒரு தங்கச்சி இருக்காடா. நீ பண்ண பாவம் அவ தலைலதான் வந்து விழும். பொண்ணப் பெத்தவரு என் பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன பதில்னு கேட்டு நிக்கிறாரு. கஷ்டப்படும்போது கூட இவ்ளோ வலிச்சது இல்ல கருடா. என் புள்ள போல யாருமே இல்லன்னு ஒவ்வொரு தடவையும், மார்தட்டிப் பெருமைப்பட்டு இருக்கேன். அந்தப் பெருமையைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு வந்திருக்கியே.” என்ற சரளாவிற்கு ஆத்திரம் குறையாததால் மீண்டும் போட்டு அடிக்க ஆரம்பித்தார்.
சத்யராஜும், நதியாவும் தடுத்துக் கொண்டிருக்க, “இனி நீ என் பிள்ளையே இல்லை. உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முகத்துல முழிக்காம எங்கயாவது போயிடு.” கத்தினார்.
“அண்ணா வீட்டுக்கு வரணும்னு ராத்திரியெல்லாம் புலம்பிட்டு, இப்ப எங்கயாவது போன்னு சொல்ற. அதான் சொல்லுதுல்ல, வேணும்னு பண்ணலன்னு. நம்ம வீட்ல என்ன நடந்துச்சுன்னு நீயும் பார்த்துட்டுத் தான இருக்க. அது மட்டும் என்னம்மா பண்ணும்.”
“வாய மூடுடி! ஒரு பொண்ணா இருந்துட்டு இவன் பண்ண தப்புக்குக் கொடி பிடிக்காத. ஒழுங்கு மரியாதையா அந்தப் பொண்ணு கழுத்துல திரும்பவும் தாலி கட்டி வாழச் சொல்லு.”
“அம்மா!”
“என்னை அம்மான்னு சொல்லாத. இப்படி ஒரு புள்ள என்னை அம்மான்னு சொல்றதைக் கேட்க அசிங்கமா இருக்கு. அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுனா மட்டும்தான், உனக்கும் எனக்குமான உறவு நிலைக்கும். இல்லனா ஒரு புள்ள ஹாஸ்பிடல்ல இருக்க மாதிரி இன்னொரு புள்ள தொலைஞ்சு போயிட்டான்னு மனசைத் தேத்திக்கிறேன்.”
“அவளைப் போய் எப்படிம்மா கல்யாணம் பண்ணுவேன்?”
“பண்ணித் தான்டா ஆகணும். அந்தப் பொண்ணு இடத்துல நான் இருந்திருந்தா இவ்ளோ சீக்கிரம் மனசு மாறி உன்னை வெளிய எடுத்திருக்க மாட்டேன். அந்தப் பொண்ணோட நல்ல மனசுக்காகத் தாலி கட்டி தான் ஆகணும். இந்த வீட்டோட மூத்த மருமகள் அவதான்.” என மருமகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மாமியாருக்குத் தெரிய வாய்ப்பில்லை, வருபவள் மருமகளாகவே வாழப் போவதில்லை என்று.
***
இன்று சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம். சிங்கமும், புலியும் எப்போது பாயலாம் என்ற நோக்கோடு காத்திருக்க, இவர்கள் எண்ணம் அறியாத குடும்பத்தார்கள், திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டனர். பெரிதாக யாரையும் கூப்பிடாமல் இரு வீட்டாரோடு மட்டும் திருமணத்தை முடிக்கிறார்கள்.
காலையிலிருந்து மௌன விரதம் இருக்கிறான் கருடேந்திரன். இப்படியே இருந்துகொள் என்று கோவிலுக்கு அழைத்து வந்த சரளா, மணமேடையில் அமர வைத்தார். தேவையில்லாமல் திருமணத்தை நடத்தி வைக்கும் அய்யர், அக்னி குண்டத்தைக் கொளுத்தி விட்டார். இவன் பார்வையால் தன்னால் பற்றி எரிந்திருக்கும். அப்படியான அனல் பார்வையோடு அமர்ந்திருந்தவன் கழுத்தில் மாலை போட்ட சத்யராஜ்,
“மருமக இன்னும் வரலைங்களா?” தனி ஒரு ஆளாக நின்றிருந்த பொன்வண்ணிடம் விசாரித்தார்.
“இதோ… இதோ வந்துடுவா.”
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாலி கட்டணும். கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்றீங்களா.”
“சரிம்மா…” என ஓரமாக ஒதுங்கி வந்தவர் மகளை அழைத்தார். வேண்டுமென்று எடுக்காமல் அவரைச் சோதித்தவள், “வரும்போது தான் வருவேன், வெயிட் பண்ணுங்க.” குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள்.
அதைப் படித்தவர் கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு தடுமாறி நின்றிருக்க, அவர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவை எதையும் கவனிக்காதவன் யாருக்கோ நடக்கும் திருமணம் என்று அமர்ந்திருந்தான்.
“என்ன சார், சொன்னாங்க?”
“ரொ..ரொம்ப டிராபிக்கா இருக்காம். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னு சொன்னா…”
“கல்யாணப் பொண்ணை இப்படித் தனியாவா வரவைக்கிறது.”
“என்னமா பண்றது? சிட்டுவேஷன் அந்த மாதிரி. எல்லாரையும் கூப்பிட்டு வச்சுப் பண்ண முடியல. கல்யாணம் முடியட்டும், பெருசா ரிசப்ஷன் வச்சிடலாம்.”
“அதுக்கு இல்ல சார், யாராவது ஒருத்தரைக் கூடக் கூட்டிட்டு வர வச்சிருக்கலாம்னு சொல்றேன்.”
“வேற யாரையும் இப்போதைக்குக் கூட வச்சுக்க முடியல.”
சங்கடத்தோடு பேசும் பொன்வண்ணன் வார்த்தைகள் அனைத்தும், அவன் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. இவரால் தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்ற செய்தி விழுந்ததிலிருந்து அவனுக்குள் எப்படி என்ற கேள்வி தான் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. நியாயமாக என்னைத் தண்டிக்க வேண்டியவர் பெண் கொடுக்கிறார். ஏன்? இதற்குப் பின்னால் என்ன சதி வேலை இருக்கிறது என்ற சந்தேகம் அவனுக்கு.
“ஐயோ சார், சங்கடப்படாதீங்க. என் மனைவி மருமகள் மேல இருக்கற அக்கறையில தான் கேட்டா.”
“அது எனக்கு நல்லாப் புரியுது சம்மந்தி.” என்றவர் மகள் வருவதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, “அதோ! என் பொண்ணு வந்துட்டா…” அனைவரையும் அவள் வரும் பக்கம் பார்வையை மாற்ற வைத்தார்.
கருடேந்திரனின் அன்னை முதல் முறை பார்க்கிறார். பொதுவாகவே பணக்கார வீட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, தங்கள் மருமகளின் அழகைக் காணத் திரும்பிய சரளா அதிர்ந்தார்.
“என்னம்மா, உன் மருமகளுக்கு முடியக் காணோம்.”
“நானும் அதைத் தான்டி தேடிக்கிட்டு இருக்கேன்.”
“இவங்க ஹேர் கட்டே இவங்க எப்படின்னு சொல்லுதும்மா. மாமியாரா அதிகாரம் பண்ணலாம்னு நினைக்காம அவங்களுக்கு அடங்கிப் போய் பிழைச்சுக்க.”
“நீ வேற சும்மா இருடி.”
“ரெண்டு பேத்துக்கும் சரியான பொருத்தம்ல.”
“நீங்களும் ஏங்க இவளை மாதிரியே பேசுறீங்க. முடி இல்லன்னா பொண்ணு நல்ல குணவதியா இருக்க மாட்டாளா? அதெல்லாம் நல்ல பொண்ணா தான் இருப்பா. அப்படியே முரண்டு பிடிச்சாலும், கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம எல்லாரும் சேர்ந்து மாத்திடலாம்.”
“ஆத்தாடி! இந்த விளையாட்டுக்கு நான் வரலம்மா.”
“நான் கூட வரல சரளா…”
“ப்ச்! மனசுக்கும், அழகுக்கும் சம்பந்தமில்லை. அவ குணம் என்னன்னு தெரியுறதுக்கு முன்னாடி நீங்களே ஒரு பட்டத்தைக் கொடுக்காதீங்க. எனக்கு என் மருமகள் மேல நம்பிக்கை இருக்கு. அவள் நிச்சயம் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா…”
“ஆல் தி பெஸ்ட் அம்மா” என்ற மகளை அடக்கியவர், “வாம்மா…” என அன்பொழுக அழைத்தார்.
அவர் பக்கம் சிறிதும் பார்வையைத் திருப்பாதவள், “எங்க உட்காரனும்?” தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“கருடா பக்கத்துல உட்காருமா.” என்றவரை அப்போதும் பார்க்காதவள் தன்னை முறைத்துப் பார்ப்பவனை முறைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
“மருமகளுக்கு மாலை போட்டு விடு சரளா.”
“சரிங்க.”
வாய் நிறையப் புன்னகையோடு, மாலையை எடுத்து மருமகள் கழுத்தில் போடச் செல்லும் நேரம், “நானே போட்டுக்கிறேன்.” என முகத்தில் அடித்தது போல் அதை வாங்கிக் கொண்டாள்.
அன்னையின் ஏமாந்த முகத்தைக் கண்டவன் பற்களைக் கடிக்க, “சரிமா” என உடனே முகத்தை மாற்றிக்கொண்டு புன்னகைத்தார் சரளா.
“ஏண்டி, இவ்ளோ கெத்து காட்டுறவ எதுக்கு இங்க வந்த?”
“நீ எதுக்குடா வந்த?”
“சாவ…”
“நானும் அதுக்குத் தான்டா வந்துருக்கேன்.”
“வராம ஓடி இருந்தா என் வாழ்க்கை தப்பிச்சிருக்கும்ல.”
“அந்த அறிவு தாலி கட்டும்போது இருந்திருக்கணும்.”
“என் கையே எனக்குச் செய்வினை வைக்கும்னு கனவா கண்டேன்?”
“கனவு கண்டாலும் இனிப் பலிக்காது!”
“உன் கூட வாழப் போறனே, எப்படிப் பலிக்கும்?”
“அவ்ளோ கசக்குதாடா உனக்கு. அப்புறம் என்ன டேஷுக்கு என் அப்பாவைக் காக்கா பிடிச்சி இங்க வந்து உட்கார்ந்திருக்க.”
“யார் காலயும் பிடிக்க வேண்டிய அவசியம் இந்தக் கருடனுக்கு இல்லை.”
“போடா மானங்கெட்டவனே…”
“உன்ன விடவா?”
“எனக்கென்ன?”
“எப்படியும் உன்னை ஒருத்தனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். தெரியாத்தனமா வந்து சிக்குன என்னை இதுதான் சாக்குன்னு கட்டிக்கப் பார்க்குற.”
“நாலு பேரு முன்னாடி சிரிக்க வேண்டாம்னு பார்க்கிறேன். இப்ப நினைச்சா கூட உன்னை மாதிரி ஆயிரம் பேரை கியூல நிக்க வைக்க முடியும்.”
“ஆயிரம் பேர நிக்க வைக்கலாம். இந்த கருடேந்திரன் மாதிரி ஒருத்தனை நிக்க வைக்க முடியாது.”
“இப்படிப் பேசுற உன்னைத்தான், தாலியக் கட்டுன்னு பக்கத்துல உட்கார வச்சிருக்கேன்.”
“எல்லா நேரமும் நீயே ஜெயிக்க மாட்ட.”
“ஜெயிக்கிறதுக்காக மட்டும் தான் நான் பிறந்திருக்கேன்.”
“அது நான் வரதுக்கு முன்னாடி வரைக்கும்.”
“நீ இல்ல, எவன் வந்தாலும் இதுல எந்த மாற்றமும் இல்லை. அதனாலதான் அஞ்சு நாள் ஸ்டேஷன்ல இருந்துட்டு வாழ்க்கை முழுக்க எங்கிட்டச் சிறைப்பட பட்டுவேட்டி சட்டைல வந்து உட்கார்ந்திருக்க.”
“யார் யாரைச் சிறைப்பிடிக்கப் போறாங்கன்னு பார்த்திடுவோம்.”
“பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தப் பலியாடு நீதான்.”
“சரிதான் போடி, களவாணி!”
“தட்டுல இருக்க தேங்காவ எடுத்து மண்டைய உடைச்சிடுவேன்.”
“அதுவரைக்கும் பார்த்துட்டு இருப்பன்னு நினைச்சியா?”
“நீ பார்த்துட்டு இரு, இல்ல படுத்துத் தூங்கிட்டு இரு. இன்னொரு தடவை டி போட்டுப் பேசுன, செவுலு திரும்பிடும்.”
“இங்கப் பாருடா, அம்மணி மிரட்டுறதை.”
“ச்சீ! மூடிட்டுத் தாலியக் கட்டு. உன்ன மாதிரி நான் ஒன்னும் தெருப் பொறுக்குறவ இல்ல. கோடில பிசினஸ் பண்றவ. டைம் வேஸ்ட் பண்ண எனக்குப் பிடிக்காது.”
“என் முன்னாடி ஒருத்தி இப்படிப் பேசுறது கூடத்தான் எனக்குப் பிடிக்காது.”
“பிடிக்கலைன்னா எந்திரிச்சுப் போடா…”
“வெட்கங்கெட்டு நீயே உட்கார்ந்து இருக்கும்போது எனக்கு என்ன? உனக்கு வேணும்னா நீ எந்திரிச்சுப் போ…”
“உன்னப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. போயும் போயும் நீ என் புருஷனா வந்திருக்க பாரு.”
“உன்னப் பார்த்தா அப்படியே மத்தாப்பு வெடிக்குது எங்களுக்கு. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உன்ன மாதிரிப் பிறவிய நான் பார்க்கவே கூடாது.”
“இந்த ஜென்மத்துலயே ஏன்டா பார்த்த?”
“என்ன பண்றது? உன் கழுத்துல ஒரு தடவை தாலி கட்டினாலே விளங்காது. ரெண்டாவது தடவையா கட்டி என்னை நானே அழிச்சுக்க வந்திருக்கேன்.”
“ரொம்பப் பேசாத. திரும்பவும் ஸ்டேஷன்ல உட்கார வச்சுருவேன்.”
“கூடவே நீயும் வந்து உட்காரனும். உன் மேல தான் பலமான கேசு.”
“நீ ஒரு ஆளுன்னு உன்கிட்டப் பேசுறேன் பாரு.” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஏண்டி! மண்டையில கொஞ்சம் மசுர வளர்க்கக் கூடாது. பூ வைக்க இடம் இல்லாம மொட்டையா இருக்கு. யாராது பின்னாடி இருந்து பார்த்தா ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் கல்யாணம் பண்றதா நினைச்சுக்கப் போறாங்க.”
“அவ்ளோ ஆசை இருந்தா உன் தலை சும்மாதான இருக்கு, வச்சிக்க.”
“எனக்கு என்ன தலையெழுத்து?”
“அப்போ மூடிக்கிட்டு உட்காரு. இதுக்காக எல்லாம் என்னால முடி வளர்க்க முடியாது.”
“நடு மண்டையில் ஒரு ஆணி அடிச்சுப் பூவைச் சுத்தி விட்டு உட்கார வச்சிருக்கணும். கவலப்படாத, இனி என் வீட்லதான இருக்கப் போற. தினமும் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நடு மண்டைல ஆணி அடிக்குறது தான் என் வேலை.”
அவன் வார்த்தைக்கு எந்தப் பதிலும் உரைக்காதவள், இடது பக்கமாக இதழை வளைத்து நக்கலாகச் சிரித்தாள். அதற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் தெரியாது, ஐயர் கொடுத்த தாலியைக் கையில் வாங்கியவன் தன் அன்னையைப் பார்த்தான். அவரோ அமைதியாக அச்சதையோடு நின்றிருக்க,
“கட்டுப்பா” என்றார் சத்யராஜ்.
“என் வாழ்க்கையை அழிச்ச உன்னைப் பழி வாங்காம விடமாட்டேன்டா” தாலி கட்ட நெருங்கி வந்தவன் காதில் ரகசியமாக ரிதுசதிகா உரைக்க,
“உன் திமிரை அடக்குறதுக்கு முதல் முடிச்சு. திருட்டுப் புத்திய அடக்க ரெண்டாவது முடிச்சு. என் குடும்பத்தைக் கஷ்டப்படுத்துனதுக்கு மூணாவது முடிச்சு. இந்த மூணு முடிச்சால நீ துடிக்கப் போறதைப் பார்க்க ரொம்ப ஆவலா காத்திருக்கேன்.” என்று மூன்று முடிச்சையும் போட்டு இரண்டாவது முறையாகத் தன்னவளோடு தன் வாழ்வைத் தொடர்புபடுத்திக் கொண்டான் கருடேந்திரன்.
அதன் பின்னால் நடத்த வேண்டிய சடங்குகள் கோவில் முறைப்படி நடந்து கொண்டிருக்க, கண் கலங்க நின்று கொண்டிருந்தார் பொன்வண்ணன். அவருக்கு ஆறுதலாக சத்யராஜ் உடன் நிற்க, இந்தத் திருமணத்தோடு அனைத்துப் பிரச்சினைகளும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார் சரளா.
“முதல்ல எங்க வீட்டுக்குப் போயி விளக்கேத்திச் சாமி கும்பிட்டுட்டு, அப்புறம் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் சார்.” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாலையைக் கழற்றி வீசியவள் கடகடவென்று நடையைக் கட்ட,
“நில்லு ரிது…” கத்தினார் தந்தை.
“இவனைக் கல்யாணம் பண்ணச் சொன்னீங்க, பண்ணிட்டேன். அவ்ளோதான் டீலிங். இதுக்கு மேல அவன் யாரோ, நான் யாரோ…”
என் தேடலின் முடிவு நீயா – 16
written by Competition writers
தேடல் 16
சஞ்சனா முன்னாள் நின்றிருந்த அபின்ஞான், “அத்த… உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இது எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் தான்… உனக்கு பிடிக்குமான்னு பாரு… பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாம்…” என்று தன் அலைபேசியில் இருந்த ஒரு பையனின் புகைப்படத்தை காட்டி கூறிக் கொண்டிருக்க,
ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ கோபம் பொத்திக் கொண்டு வந்தது. “நாசமா போனவன் குட்டய குழப்ப பார்க்குறான்” என நினைத்துக் கொண்டாள்.
சஞ்சனாவோ கைகளை பிசைந்து படி நின்றிருக்க, “எதுக்குடி… புட்டு விக்கின மாதிரி வாய தொறக்காம இருக்க… ஏதாவது பேசுடி” என்று மகிமா அவளை மனதிற்குள் வைது கொண்டிருக்க…
“மகி நீ வெளியே இருக்கிறது எனக்கு தெரியும்… உள்ள வா…” என்று அறைக்குள் இருந்த படியே அபின்ஞான் சத்தமாக சொல்ல…
“ஆத்தி… பார்த்துட்டானா…” என நினைத்தவள் சமாளிப்பாக சிரித்தபடி “இப்பதான் கதவ தட்ட வந்தேன்… அதுக்குள்ள என்ன பார்த்துட்டீங்க” என்றாள் திரு திருவென முழித்தபடி…
அவளை அழுத்தமாக பார்த்தவன், “சஞ்சனா கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருந்தோம்… எனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சி… இனி அவள இப்படியே வெச்சு பார்த்துட்டு இருக்க முடியாது” என்று கூற,
“மல மாடு… மல மாடு… அது உனக்கு இப்ப வாடா தெரியுது… பண்றதெல்லாம் சிறப்பா பண்ணிட்டு இப்ப அக்கற உள்ளவன் மாதிரி என்னமா நடிக்கிறான்…” என நினைத்துக் கொண்டவள், அவன் பின்னாலிருந்து சஞ்சனாவை பார்த்து, “திருமணம் வேண்டாம்” என்று கூறும் படி சைகை செய்தாள்…
“நான் கேட்கிறது உனக்கு சங்கடமா இருக்கும்… நானே அடுத்த கட்ட விஷயங்கள பாக்குறேன்” என்றவன் விசில் அடித்த படி தன் அறைக்குச் சென்றான்…
அபின்ஞான் சென்றதும் சஞ்சனா அருகே வந்த மகிமா, “மக்கு… மக்கு… வடிகட்டின முட்டாள்” என அவள் தலையில் கொட்டியவள், ” என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசு… உன் அத்தான் உனக்கு ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வைப்பான்… அவனோட போய் வாழு” என்றவள் அவள் பேச வந்ததை கேட்காமல் அங்கிருந்து சென்றாள்…
“எல்லாரும் சேர்ந்து என்ன என் தேவ் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா? இனி நான் இப்படி சைலண்டா இருந்தா சரியே வராது… இனி இந்த ஆட்டத்துக்கு அதிரடிதான் சரி” என நினைத்தவள் வேகமாக தேவ் அறைக்கு முன்னாள் சென்று நின்றவள் தனக்கு இருந்த எல்லா கோபத்தையும் சேர்த்து அவன் அறைக் கதவை பட படவென தட்டினாள்…
“எந்த பைத்தியம் விவஸ்தயே இல்லாம இப்படி கதவை தட்டுது” என நினைத்தபடி கதவை திறந்தான் மகாதேவ்.
சஞ்சனா தான் வெளியே நின்று இருந்தாள் …
“ஓஹ்… இந்தப் பைத்தியமா… இது எதுக்கு நம்மள தேடி வந்திருக்கு” என நினைத்தபடி அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், “என்ன விஷயம்?” என கேட்டான்…
அவனை ஆழ்ந்து பார்த்தபடி, அவன் கண்களுடன் தன் விழிகளை கலக்க விட்டவள்,” ஐ லவ் யூ தேவ்” என்றாள் எடுத்த எடுப்புக்கே…
“ஓஹ்… அப்படியா” என்றவன்அறைக்குள் செல்ல பார்க்க,
“நான் இவன் கிட்ட என் காதல சொன்னா கத சொன்ன மாதிரி கேட்டுட்டு போறான்” என நினைத்தபடி எட்டி அவன் கையைப் பிடித்தவள், “பதில் சொல்லிட்டு போங்க தேவ்” என்றாள்…
“நீ என்ன லவ் பண்ற… ஓகே அது உன் விருப்பம்… அதுல தலயிட எனக்கு எந்த உரிமயும் இல்ல… ஆனா நானும் உன்ன லவ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லயே” என்று கூற,
சஞ்சனாவுக்கு சப்பென்றாகி விட்டது…
அவனை முறைத்துப் பார்த்தவள், “நான் உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன் தேவ்” என்றாள் அழுதபடி…
“சரி என்ன லவ் பண்ணு… ஆனா நல்ல மாப்பிள்ளயா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.
“என்னடா ஆளாளுக்கு என்னோட விளயாட பார்க்குறீங்களா… அதெல்லாம் முடியாது… நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள் விடாப்பிடியாக…
“சும்மா ஏதாவது உளறிட்டு இருக்காம போய் உன் வேலய பாரு” என்று அவன் அவளை விரட்ட பார்க்க,
“என் கூட பழகினா என்ன லவ் பண்ணிடுவேன்னு உனக்கு பயம்… அதுமட்டுமில்லாம அத்தானுக்கு முன்னால என் கூட பழகவும் பயம், அதுக்குத்தானே ஏதேதோ சாக்கு சொல்லிட்டு இருக்க” என்று அவனது வீக் பயிண்ட்டை பார்த்து அடிக்க…
“ஏய் பார்த்து பேசுடி… எனக்கு ஒரு பயம் இல்ல… எனக்கு உன்ன பிடிக்கல… தட்ஸ் ஆல்… இப்போ எனக்குத்தான் சந்தேகமா இருக்கு… என்ன ஒத்துப்பார்க்க சொல்லி உன் அத்தான் உன்ன அனுப்பி வெச்சானா… அதுக்காக தானே வந்து என்னென்னமோ பேசிட்டிருக்க” என்று அவன் கேட்க,
“சும்மா உன்ன மாதிரியே மத்தவங்களயும் நெனச்சி பேசாதே… அத்தானுக்கு பயந்துதானே என் கூட பேசாம இருக்க” என்று அவள் அதிலே நிற்க,
அபின்ஞானுக்கு அவன் பயப்படுகிறான் என்று கூறியதை, அவன் ஈகோவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
“ஓஹ் எனக்கு பயமா?” என்று நக்கலாக கேட்டவன், “ஒகே டீல்… நான் உன்னோட பழகுறேன்… ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றான் ஆரம்பத்திலே உஷாராக…
“முதல்ல பழகி காட்டு… அதுக்கப்புறம் மத்தத பார்க்கலாம்” என்றாள் இருமாப்புடன்…
“அதயும் பார்க்கலாம்டி… நான் ஜெயிச்ச நீ என்ன பண்ணுவ” என்று மகாதேவ் கேட்க,
“இனி உங்க பக்கமே வர மாட்டேன்… அதே மாதிரி அத்தானுக்கு பயந்துட்டு என்கிட்ட பேசாம இருந்தன்னா நீ என்ன கல்யாணம் பண்ணிக்கனும்” என்றாள்.
“நீ அதிலேயே நில்லு” என நினைத்துக்கொண்டவன், “எனக்கும் இந்த டீல் புடிச்சிருக்கு” என்றவன்… “சரி… நாம நாளையிலிருந்து பழக ஆரம்பிக்கலாம்” என்றான் ஸ்டைலாக கதவில் சாய்ந்து நின்றபடி…
“எல்லாத்தையும் டீல்லாவா பார்க்குற… இந்த டீல் தான் நீ போட்ற, முதலும் கடைசியுமான டீலா இருக்கும்” என நினைத்தபடி அங்கிருந்து சென்றாள் சஞ்சனா…
சஞ்சனா உடன் பேசி விட்டு வந்த அபின்ஞான் தன் வேலைகளை தன் பாட்டுக்கு மகிமாவை கண்டு கொள்ளாது செய்து கொண்டிருக்க, அவனருகே சென்றமர்ந்தவள், “நீங்க எதுக்காக பசிபிக் ஒஷனுக்கு போறீங்க” என்று கேட்க…
“உன் அண்ணா எதுக்காக வந்தானோ நானும் அதுக்குத்தான் வந்திருக்கேன்… ஏன் தேவ் உன் கிட்ட சொல்லலயா?” என்று கேட்க,
“அவனுக்கு தொழில் விஷயத்துல நான் தலையிடறது பிடிக்காது… அதனால அது சம்பந்தமா நானும் அவன் கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்…” என்றாள் தோள்களை குலுக்கிய படி…
“ஓஹோ…” என்றவன் தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க… அவன் அருகில் இருந்த ஃபைலில் உள்ளதை எட்டிப் பார்த்தபடி நீங்களும் பசிபிக் ஓஷன்ல ரிசெர்ச் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க…
அவள் அருகில் இருந்த ஃபைலை பட்டென்று மூடியவன், “மூடிக்கிட்டு போய் படு… சும்மா தொன தொனன்னு பேசிட்டு இருக்காம” என்று அவள் மேல் எரிந்து விழ…
“ரொம்ப தான் பண்றான் காலைல கெஞ்சிட்டு… இப்ப பேசினா கணக்கே எடுக்க மாட்டான்” என்று நினைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் படுத்துக் கொண்டாள்…
விடியற்காலையில் எழுந்தவள் தயாராகிக் கொண்டு சஞ்சனாவை தேடி செல்ல, அவளோ அறையில் இருக்கவில்லை.
“காலையிலே இவ எங்க போனா?” என்று யோசித்தபடி அவளைத் தேடிச் செல்ல, அவளுடன் வந்து இணைந்து கொண்ட அபின்ஞான், “யார தேட்ற” என்று கேட்டான் கூலாக சிரித்தபடி…
“இவன் பம்முறது சரியா படலயே… ஏதோ பண்றான்… ஆனா என்னன்னு தான் புரியல” என நினைத்தபடி சஞ்சனாவை தேடிச்சென்றாள்…
எல்லா இடமும் தேடி விட்டாள்… ஆண்கள் ஜிம்மை தவிர…
அங்கே சென்றவளது கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
ஏனென்றால் மகாதேவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, அங்கிருந்த இருக்கை அமர்ந்து, முகத்தில் கைகுற்றி அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் சஞ்சனா…
“அதுக்குள்ள கரெக்ட் பண்ணிட்டாளா… ஆனா நம்ம ஆளு லேசுல மடங்க மாட்டானே” என்று நினைத்தபடி அவள் அருகே வந்து கொண்டிருந்த அபின்ஞானை பார்த்தாள்…
அவனோ கூலாகவே சஞ்சனா அருகே செல்ல, இப்போது பயத்துடன் எழுந்து கொள்வது சஞ்சனாவின் முறையாகிப்போனது…
“நீ இங்கு என்ன பண்ற… உன் ரூமுக்கு போ” என்றபடி சஞ்சனாவின் கையை பிடித்து தன்னருகே அபின்ஞான் இழுக்க…
“சரி சாத்தான் வேதம் ஓத ஆரம்பிச்சிட்டான்…” நினைத்துக் கொண்டாள் மகிமா…
சஞ்சனாவின் மற்றய கையைப் பிடித்து அவளால் அசைய முடியாதவாரு தன் அருகே நிறுத்திக் கொண்டான் மகாதேவ்…
“டேய் மரியாதையா அவ கைய விடுடா” என்றான் அபின்ஞான்…
“விட முடியாதுடா… அவ என் கூடத்தான் இருப்பா” என்றான் மகாதேவ்…
“உன்கிட்ட ஒரு செகண்ட் கூட அவள விட மாட்டேன்” என்று அபின்ஞான் கூற,
அவனை முறைத்துப் பார்த்த மகாதேவ், “ஒரு செகண்ட் என்னடா என் லைப் முழுக்க அவள என் கூடவே வெச்சிருப்பேன்…. முடிஞ்சா தடுத்து பாருடா” என்று எகிறக் கொண்டுவர…
“அட… பையன் விழுந்துட்டான்… ஆனா சரியா தான் சொல்லியிருக்கான்” என்று மகிமா மனதுக்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“சஞ்சனா… நான் சொன்னத கேப்பா” என்று உறுதியுடன் சொன்னவன், “வா.. நாம போகலாம்” என்று அவளைப் பார்த்து கூப்பிட்டான் அபின்ஞான்.
அவனை தயக்கமாக பார்த்தவள், “அத்தான் நான் தேவ் கூடவே இருக்கேன்” என்று கூற…
“லாஸ்ட்டா கேட்கிறேன், உன்னால வர முடியுமா? முடியாதா” என்று கேட்டான் அபின்ஞான்.
சஞ்சனாவும் உறுதியாக முடியாது என்று கூறி விட அபின்ஞானை பார்த்து கண் சிமிட்டிய மகாதேவ், “நீ வா சஞ்சு… நாம போகலாம்… இங்க சரியான டிஸ்டர்பன்ஸ் நமக்கு” என்று அபின்ஞான் பார்ப்பதற்காகவே அவள் தோல் மேல் கையை போட்டுக் கொண்டு சென்றான்…
அவன் போகும் வரை இறுகிப்போயிருந்த அபின்ஞானின் முகம் இப்போது சாதாரணமாக மாறியது…
அவனையே ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த மகிமாவின் முகமோ இப்போது சுருங்கியது…
“இவனுக்கு கோபம் வந்த மாதிரி விளங்களயே… நடிக்கிறானா? இல்லன்னா ஏதாவது பிளேன் போட்டிருக்கானா?” என்று அவள் தான் தலையடித்துக் கொண்டு யோசிக்க ஆரம்பம்பித்தாள்…
மகிமாவுக்கு சஞ்சனா இல்லாமல் அலுப்பாக இருந்தது…
கடந்த சில நாட்கள் முழுக்க முழுக்க அவளுடன் அல்லவா நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்…
சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அபின்ஞானோ எதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தான்…
அதை முடித்துவிட்டு அவள் அருகே அமர்ந்தவன், “ஸ்விம்மிங் பண்ண வரியா?” என்று கேட்டான்…
“நீங்க போங்க நான் இப்ப வரல” என்றாள் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி.
“உன் கூட்டாளி தான் உன்ன விட்டுட்டு போய்ட்டாளே… இனி எப்படி அவளோட சேர்ந்து ஸ்வீம் பண்ணுவ…” என்று இதழ்களுக்குள் சிரித்தபடி கேட்டவன், அவளை நோக்கி குனிய…
அவனை எரிச்சலாக பார்த்தவள், “இப்போ என்ன சொல்ல வர்றீங்க” என்று கேட்டு கொண்டிருந்தவளது பேச்சோ இடையில் நிற்க… அவன் கழுத்தை பிடிமானமில்லாமல் இறுக்கப் பற்றிக் கொண்டவள், “டேய் இப்ப எதுக்கு என்ன தூக்கின… என்ன கீழ விடுடா” என்று அவள் அவன் கைகளில் அவள் திமிர… அவள் விழுந்து விடமால் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டியவன், “ஸ்விம் பண்ண வரேன்னு சொல்லு… இப்பவே உன்ன கீழ விட்றேன்” என்றான்.
“முடியாது… எனக்கு இப்ப ஸ்விம் பண்ற மூட் இல்ல” என்று அவள் கத்தியதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை…
“டேய் விடுடா… மலமாடு மாதிரி வளர்ந்து இருக்க… நான் சொல்றது புரியலயா” என்று அவன் வெற்றுமார்பில் அடித்தபடி கூறினாள் மகிமா…
அவனுக்கோ அந்த அடியெல்லாம் பொருட்டே இல்லை…
அவனோ அவன் வேலயிலே கண்ணாக இருக்க… கோபத்தில் அவன் கழுத்தை அவள் ஊன்றிக் கடித்து வைக்க, வலியில் “ராட்சஷி” என கத்தியவன் அப்படியே அவளை நீச்சல் தடாகத்தினுள் போட்டவன், அடுத்த கணமே அவனும் டவ் அடித்து நீரினுல் பாய்ந்தான்…
நீரில் மூழ்கி எழுந்தவன் தன் தலையில் இருந்து வடிந்த தண்ணீரை ஒற்றை கையால் துடைத்த படி அவளை பார்க்க,
அவளோ அவனை உக்கிரமாக முறைத்த படி நின்றிருந்தாள்.
மகிமா பழுப்பு நிற டி-ஷர்ட்டும்… ட்ரவுசரும் அணிந்திருந்தாள்…
அவள் டி-ஷர்ட் நீரில் நனைந்ததால் அவள் மேனியுடன் ஒட்டி அவள் அழகை அவனுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தது…
அவளைப் பார்த்து எச்சிலை விளங்கிக் கொண்டவனுக்கு, தன் கண்ணை அவளிடம் இருந்து அகற்றத்தான் முடியவில்லை…
அவன் பார்வை மாற்றத்தை அறியாதவள் அவன் அருகே வந்து, “நனைய கூடாதுன்னு பார்த்தேன்… முழுசா நனஞ்ச அப்புறம் முக்காடு எதுக்கு?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டவள், “நாம ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வைப்போமா” என்று ஆர்வமாக கேட்க,
பெருமூச்சுடன் அவளைப் பார்த்து, “ம்ம் ஒகே… நான் ஜெயிச்சா என்ன தருவ” என கண்கள் மின்ன கேட்டான்.
“என்ன வேணும்” என்று அவன் புரியாது கேட்டாள் மகிமா.
“ஜெயிச்சுட்டு சொல்றேன்” என்றான் அவன்.
“அவ்ளோ நம்பிக்கையா… பார்க்கலாம் யாரு ஜெயிக்கிறாங்க” என்று உதடு சுழித்துக் கூறியவள், அவன் கேட்க போவதை அறியாது “சரி” என்று சொல்லியவள், தான் ஜெயித்தால் டிவோஸ் கேட்க நினைத்திருந்தாள்…
4. யாருக்கு இங்கு யாரோ?
written by Competition writers
அத்தியாயம் 4
என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான்
அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும் வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி
“ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. அதனால் மீண்டும் அதே இடத்தில் அவன் அமர, தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட அமுதினி தனக்குள் இருக்கும் ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டி, தேவ்வின் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டவள்.
“தேவ் உங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னீங்க..” என்று தயக்கத்தோடு அவள் கேட்க
“ ஆமா… சொன்னேன் அதுக்கு இப்போ என்ன?” என்று அவன் சாதாரணமாக கேட்க
“என்ன தேவ் சாதரணமா உங்களுக்கு கல்யாணம்னு சொல்றிங்க? அப்போ என்னோட நிலைமை என்ன தேவ்?” என்று கண்களில் கண்ணீர் தேங்க அமுதினி கேட்க
“உன் நிலைமையா? இல்லை நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல” என்று தேவ் கூற
“தேவ் அப்போ அன்னிக்கு நமக்குள் நடந்தது எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று அமுதினி சற்று பயத்தோடு கேட்க
“என்னைக்கு நடந்தது?” என்று எதுவும் தெரியாதவன் போல அவன் கேட்க
“தே…… தேவ்… ப்ளீஸ் விளையாடாதீங்க… அன்னைக்கு நைட் பார்ட்டி… பீச் ஹவுஸ்ல நீங்களும் நானும் ஒன்னா… இரு… இருந்தோமே.. அ.. அது… உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று அமுதினி திக்கி திணறி கேட்க
“ஓஹ்…. அதுவா?” என்று தேவ் சாதாரணமாக பேச
“தே… தேவ்… அப்போ அது உங்களுக்கு ஞாபகம் இருக்க?” என்று ஒரு வித சந்தோசத்தோடு அவள் கேட்க
“ஓஹ்…. நல்லாவே ஞாபகம் இருக்கே, அது எப்படி மறக்க முடியும்? சொல்ல போன இட் வாஸ் குட் எக்ஸ்பீரியன்ஸ்” என்று தேவ் கூற
“என்ன தேவ் நீங்க பேசுறீங்க? அன்னைக்கு நடந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குது அப்படின்னா அப்றம் ஏன் இது?” என்று தேவ்வின் திருமண பத்திரிகையை அவன் முன் நீட்டி அமுதினி கேட்க
“ஏன்னா?” என்று தேவ் கேட்க
“அதை தான் நானும் கேட்குறேன் ஏன் இது? அன்னைக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கு அப்றம் என்ன? நீங்க உங்க வீட்டுல பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே?” என்று அமுதினி கூற
“அம்மு பர்ஸ்ட் நீ என்ன பேசுறேன்னே எனக்கு புரியல, அண்ட் நான் ஏன் மொத இந்த கல்யாணத்தை நிறுத்தணும்?” என்று தேவ் கேட்க
“ஏன் நிறுத்தணுமா? தேவ் ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த விசயத்துல விளையாடாதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குது…” என்று ஆடவனின் கையை இருக்க பற்றிக் கொண்டு அமுதினி கூற
“ஏய்… அமுதினி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சி இருக்கு? மொத நீ எது பேசுனாலும் கொஞ்சம் தெளிவா பேசு, அன்னைக்கு நான் உன் கூட இருந்ததும் இப்போ நான் என்னோட கல்யாணத்தை நிறுத்தறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று தேவ் கேட்க
“சம்மந்தம் இருக்கு தேவ்…. ஏன்னா நான் உங்களை லவ் பண்றேன். உங்க மேல இருந்த லவ்வாலா தான் அன்னைக்கு என்னையே உங்களுக்கு முழுசா கொடுத்தேன்…” என்று அமுதினி தன் மனதில் இருந்த அவனிடம் கூற,
“என்ன நீ என்னை லவ் பண்றியா?” என்று கேட்ட தேவ் சிரிக்க
“இப்போ நான் என்ன சொன்னேன்னு நீங்க இப்படி சிரிக்கிறீங்க தேவ்” என்று அமுதினி மிகுந்த வலியோடு கேட்க
“நீ சொல்ற ஜோக் கேட்டு சிரிக்காமல் வேற என்ன அம்மு பண்ண சொல்ற?” என்று தேவ் கேட்க
“தேவ் என்னோட லவ் உங்களுக்கு ஜோக் மாதிரி தெரியுதா? உங்கள் மேல இருந்த லவ்னாளையும் நம்பியாளையும் தானே அன்னைக்கு உங்களுக்கு என்னை கொடுத்தேன்.” என்றவள் திக்கி திணறி கூற அவளை புரியாமல் பார்த்தவன்.
“அம்மு நீ என்ன பேசுறேன்னு தெரிந்து தான் பேசுறியா? ஆர் யூ மேட்? அன்னைக்கு நடந்தது அன்னையோட முடிஞ்சிடுச்சு… என்னை பொறுத்த வரைக்கும் அது ஜஸ்ட் ஆக்சிடென்ட், உன்னையும் என்னையும் இல்ல இல்ல… அது என்னை அறியாம நடந்த ஒரு விஷயம், அன்னைக்கு நான் ஃபுல்லா ட்ரிங்ஸ் பண்ணி இருந்தேன். ஒத்துக்குறேன் நான் தான் உன்கிட்ட வந்து அப்ரோச் பண்ணுனே, ஆனா நீ நினைச்சிருந்தா இதை வேண்டாம்ன்னு சொல்லிட்டு அப்போவே அங்கிருந்து கிளம்பி போயிருக்கலாம். ஆனா நீ போகல இன்பாக்ட் நான் உன்னை கம்பெல் கூட பண்ணல நீயே விருப்பப்பட்டு தான் வந்தா… உன் சம்மதத்தோட தான் நமக்குள்ள எல்லாம் நடந்துச்சு…” என்று தேவ் கூற
“ஆமா.. அன்னைக்கு நீங்க ட்ரிங்ஸ் பண்ணி இருந்திங்க தான், நீங்களா தான் என்கிட்ட வந்து அப்ரோச் பண்ணீங்க, நானும் அதை இல்லைன்னு சொல்லவே இல்லையே, ஆனா நீங்க கேட்டதுக்கு நான் சம்மதிச்ச ஒரு காரணம் நான் உங்க மேல வெச்சு இருந்த லவ் மட்டும் தான்… உங்க மேல இருந்த கண் மூடி தனமான காதலா தான் நான் அன்னைக்கு உங்க கூட இருந்தேன்” என்று அமுதினி கூற
“ஆனா அது எனக்கு எப்படி தெரியும் அம்மு? நான் இது வரைக்கும் உன்னை லவ் பண்றேன் அப்படின்னு ஒரு தடவை கூட சொன்னதே இல்ல, அதோட அன்னைக்கு அந்த பார்ட்டில வெச்சு தான் நான் உன்கிட்ட மொத தடவை பேசுனேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட இதுவரைக்கும் நான் பேசி இருக்கேன்னா என்ன? உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது… அன்னைக்கு நைட் நான் கொஞ்சம் ஓவரா ட்ரிங் பண்ணிட்டேன். போதையில எதோ தெரியமா உன்னை கிஸ் பண்ணிட்டேன். அதுக்கு அப்றம் என்னைய என்னால கண்ரோல் பண்ண முடியாமல் உன்கிட்ட கேட்டேன், நீயும் ஓகே சொன்னா… அவ்வளவு தான் நமக்குள்ள இருக்குற உறவே, என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான்” என்று தேவ் தன் தோள்களை குலுக்கி அசால்ட்டாக கூற, அவன் கூறியது எல்லாம் கேட்டு அதிர்ந்து போன அம்முவோ
“என்ன தேவ் சொல்றீங்க ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட்டா? அப்போ நீங்க என்னை லவ் பண்ணலையா?” என்று அவள் கண்களில் கண்ணீரோடு கேட்க
“உனக்கு என்ன பைத்தியமா? நான் இவ்வளவு தூரம் உனக்கு எக்ஸ்பிளான் பண்ணிட்டு இருக்கேன். நீ என்னடான்னா திரும்ப மொதலா இருந்து ஆரம்பிக்குறே? நான் எப்ப உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன்? அன்னைக்கு நைட் நான் ஒன்னும் உன்னை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் கூட இருந்துட்டு உன்னை கழட்டி விட்டுட்டு போகல… அன்னைக்கு உனக்கும் அது தேவைப்பட்டுச்சு எனக்கும் தேவைப்பட்டுச்சு இரண்டு பேரும் ஒண்ணா இருந்தோம்… அவ்வளவு தான்” என்று தேவ் சற்று கோபத்தோடு கூற
“தேவ்…. வேண்டாம் தேவ் இப்படி பண்ணாதீங்க, என்னால நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை யோசிச்சி கூட பார்க்க முடியாது.. ப்ளீஸ் தேவ் என்னை ஏத்துக்கோங்க.. நான் இப்போ உங்களை மட்டும் தான் முழுசா நம்பி இருக்கேன்” என்று அவள் அவன் காலில் விழுந்து கெஞ்ச
“ஏய்… அம்மு… என்ன பண்ற? மொத எழுந்திரு… யாராவது பார்த்த என்னை என்ன நினைப்பாங்க?” என்றவன் அவளை எழுப்பி அவள் இடத்தில் அமர வைக்க, அம்முவோ மீண்டும் அவன் கைகளை பிடித்து கொண்டு கெஞ்சினாள்.
“இங்க பாரு அம்மு…. என்கூட இருந்த உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா, இந்நேரம் எனக்கு எத்தனை கல்யாணம் ஆகி இருக்குன்னு எனக்கே தெரியாது, உனக்கு வேணா அது பர்ஸ்ட் டைம் இருக்கலாம்… பட் எனக்கு அது பர்ஸ்ட் டைம் கிடையாது உன்ன மாதிரி எத்தனையோ பொண்ணுங்க கூட நான் இருந்திருக்கேன். அது எதுவுமே லவ் கிடையாது. ஜஸ்ட் லாஸ்ட் என்னை பொறுத்த வரைக்கும் என்னோட ஒரே லவ் என்னோட லட்சுமி மட்டும் தான்… அவளை இது நாள் வரை நான் என் பொண்டாட்டியா தான் நினைச்சுட்டு இருக்கேன். அப்படி இருக்கும் போது அவள விட்டுட்டு கூப்பிட்ட உடனே என் கூட படுத்த உன்ன மாதிரி ஒருத்தியா நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீ எப்படி எதிர்பார்த்த? உங்கள மாதிரி பொண்ணுங்களை எல்லாம் ஜஸ்ட் ஒரு தடவை சந்தோஷமா இருந்தோம் போனமான்னு இருக்கனும்.. அதை விட்டுட்டு காதல் கல்யாணம் எல்லாம்” என்றவன் மேலும் ஏதோ கூற வர, இவ்வளவு நேரம் கண்களில் கண்ணீரோடு அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள். இறுதியாக அவன் அவள் கேரக்டரை பற்றி தப்பா பேச ஆரம்பித்ததும் கோபத்தில் ஓங்கி அவனை ஒரு அரை விட்டவள்.
“ச்சீ… போயிம் போயிம் உன்னை நம்பி என்னை நான் முழுசா உனக்கு கொடுத்தேன் பாரு.. என்னை சொல்லணும், சொல்ல போன இது எல்லாம் என்னோட தப்பு… அகல்யா அப்போவே உன்னை பத்தி சொன்னா… ஆனால், நான் தான் உன் மேல இருந்த மயக்கத்துல அவள் சொன்னதை சரியா காது கொடுத்து கேட்கல… உன்ன மாதிரி ஒரு கேவலமானவனை காதலிச்சேன்னு நினைக்கும் போதே எனக்கு என்னை நினைச்சு அருவருப்பா இருக்கு…” என்றவள் மேலும் கதறி அழ அதில் கடுப்பான தேவ்.. தன் முன் இருந்த அந்த டேபிளை ஓங்கி ஒரு தட்டு தட்டியவன்.
“ஜஸ்ட் ஷட் அப் யுவர் இடியட்… உன்ன மாதிரி எமோஷனல் ஃபூல் எல்லாம் இப்படித் தான் லவ் அது இதுன்னு வந்து நிப்பீங்கன்னு நான் நெனச்சேன் அதே மாதிரி வந்து நிக்கிறே, வேணும்னா அன்னைக்கு என் கூட இருந்ததுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு தரேன்…” என்று தேவ் தன் வார்த்தைகளை முடிக்க, அதில் மேலும் கோபமடைந்த அமுதினி…
“என்ன டா சொன்ன?என்ன சொன்ன? என்னை பார்த்த உனக்கு எப்படி இருக்குது? சொல்லு டா சொல்லு” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் கண்களில் கண்ணீர் வழிய கேட்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அனைவரும் தங்களை தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதை உணர்ந்த தேவ்.
“ஏய்…. அம்மு என்ன பண்ற? மொத என் மேல இருந்து கையை எடு… எல்லாரும் நம்பலை தான் பாக்குறாங்க” என்று அவன் எவ்வளவு கூறியும் கேட்காமல் அமுதினி கத்தி கொண்டு இருக்க அதில் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்த தேவ்.. பெண்ணவளை அறைந்து விட, அவளோ ஆடவனின் பலம் தங்க முடியாமல் கீழே விழுந்தால்.. உடனே அவளை தூக்கி அமர வைத்தவன்.
“ஏதோ போன போகுதே அப்படின்னு உனக்கு பேசி புரிய வைக்க ட்ரை பண்ண, நீ என் மேலையே கை வைப்பியா… இப்போ சொல்றேன் கேட்டுக்கோ டி… நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல…. நான் டேட் பண்ற 10 பொண்ணுங்கள நீ 11 பொண்ணு அவ்வளவு தான்… மொத உன்ன மாதிரி ஒருத்தி கூட பேசறதே வேஸ்ட் ஆப் டைம் எனக்கு உன்னை விட முக்கியமான வேலை எல்லாம் நிறைய இருக்கு… சோ நான் கிளம்புறேன். முடிஞ்சா நமக்குள்ள நடந்ததை மறந்துட்டு போய் வேலையை பாரு அப்படி இல்ல போய் சாவு” என்று கூறியவன் அவளை சற்றும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான் அவன் சென்றதும் கண்களில் கண்ணீரோடு ஏதோ நடப்பினம் போல் நடந்தே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தால்.
இனி அமுதினி என்ன செய்ய போகிறாள்? தேவ் தன் செய்த தவறை உணருவனா? அப்படி உணர்ந்து மீண்டும் அமுதினியிடம் வந்தால் அவள் அவனை ஏற்றுக்கொள்வாளா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க…
யாருக்கு இங்கு யாரோ?
Episode – 07
மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.
சொர்ணாக்கு, போன் அடித்ததும்,
“ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,
இறுதியாக, முடிவு பண்ணி, போனை எடுக்காது குளித்து விட்டு வந்து தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவளது போன் விடாது தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் போன் ஒலி ப்பதை நிறுத்தவும்,
பெருமூச்சு ஒன்றை வெளி விட்டவள்,
“எல்லாரும் சொல்றது போல, இது தொலைபேசி இல்ல தொல்லை பேசி தான். சில நேரங்கள்ல.” என முணு முணுத்தவள்,
வேகமாக கிளம்பி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பும் நேரம் மீண்டும் அவளது போன் அடிக்க ஆரம்பித்தது.
அதே நம்பரிலிருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்கள் வந்து இருந்தது.
“இது கண்டிப்பா அந்த சாத்தானா தான் இருக்கும்.” என நினைத்தவள்,
அதனை அப்படியே வைத்து விட்டு பஸ் ஸ்டாண்ட்ற்கு சென்றாள்.
அங்கு பஸ்ற்காக காத்து இருக்கும் போது, அவளது ஃபோனில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ஒன்று கேட்டது.
உடனே போனை எடுத்து பார்த்தாள் சொர்ணா.
அதே நம்பரில் இருந்து தான் குறுஞ்செய்தியும் வந்து இருந்தது.
“இந்த குறுஞ்செய்திய ஓபன் பண்ணிப் பார்க்கிறதும், நம்ம நிம்மதிக்கு கேடுதான்.” என எண்ணியவள்,
போனை அப்படியே வைத்திருக்க அதே நம்பரில் இருந்து வாய்ஸ் மெசேஜ் ஒன்று அதிரடியாக வந்து சேர்ந்தது.
“என்னடா இது நமக்கு வந்த சோதனை?” என எண்ணியவள் அதனையும் கண்டுகொள்ளாது பேக்கில் போனை வைத்து விட்டு நிமிர புயல் வேகத்தில் அவளின் அருகே வந்து நின்றது அவனது கார்.
காரிலிருந்து இறங்காமலே, கார்க் கண்ணாடியைத் திறந்தவன்,
அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
அவள் பக்க கார்க் கதவை திறக்க அவளுக்கு புரிந்து விட்டது.
இப்போது அவள் காரில் ஏறவில்லை என்றால் அங்கு அனைவர் முன்பாகவும் அவள் அவமானப்பட நேரிடும் என்பது.
அதனை சரியாக புரிந்து கொண்டவள் உடனடியாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பியவன் சற்றுத் தூரம் போனதும்,
ஆள் நடமாட்டம் இல்லாத வீதியின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு,
“மேடமுக்கு நான் போன் பண்ணா…. மெசேஜ் பண்ணினா…. பார்க்க கஷ்டமாக இருக்குது. என் மேல இருந்த பயம் இல்லாம போச்சுது இல்ல. அப்படித்தானே…. அது சரி நான் உனக்கு என்ன மெசேஜ் பண்ணி இருக்கேன்னு இப்போ ஓபன் பண்ணிப் பாரு.” என அவளைப் பார்க்காது நேராக ரோட்டினைப் பார்த்தபடியே அவன் பேச,
அவளோ பயத்தில் எச்சில் விழுங்கியவள் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க,
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவன்.
அந்தப் பார்வையின் அர்த்தம் “நான் சொன்னதை நீ இப்போது செய்தே ஆக வேண்டும் என்பது தான்.”
சொர்ணா அதற்கு மேலும் தயங்குவாளா என்ன?
அவசரமாக போனை எடுத்து ஓபன் பண்ணிப் பார்த்தாள்.
அதிலே, அவள் ஆசையாக வாங்கித் தொலைத்திருந்த அந்த லவ் பர்ட்ஸ்சின் சிலை தான் போட்டோவாக அனுப்பப் பட்டு இருந்தது.
அதனைப் பார்த்து விட்டு அவனை திகைத்துப் போய் பார்க்க,
“வாய்ஸ் மெசேஜ் இருக்கு தானே. அதையும் ஓபன் பண்ணிக் கேள்.” என்று சொன்னான்.
அவசரமாக அதனையும் ஓபன் பண்ணிக் கேட்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அதில், “என்ன சொர்ணா மேடம், உங்களுக்கு உங்க லவ் பர்ட்ஸ் வேணாம் போலயே. நானும் பாவம்னு கொடுக்க, வரச் சொன்னா நீங்க ஆரண்யனுக்கே டப் கொடுக்கிற அளவு பிஸி போல. சோ, இனிமேல் உங்களுக்கு அந்த சிலை இல்லை.” என அந்த வாய்ஸ் மெசேஜ்ஜில் கூறப்பட்டு இருந்தது.
அவளோ, அதனை கேட்டு விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க,
“சோ சாட்….” என கூறி விட்டு,
அடுத்த நொடி கையில் சிலையை தூக்கி காட்டிவிட்டு ஜன்னலைத் திறந்து சிலையை அப்படியே போட்டு ரோட்டில் உடைத்திருந்தான் அவன்.
அவள் விக்கித்துப் போய் அமர்ந்து இருக்க,
அவனே, “உன்னோட கண்ணு முன்னாடியே இத ஏன் செய்தன் தெரியுமா?, உனக்கு என் மேல பயம் இருக்கணும். எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும்னு தெரிஞ்சிருக்கணும். இது வெறும் சாம்பிள் தான். இதே மாதிரி உன்னோட வாழ்க்கையும் நொறுங்கிப் போகாம இருக்கிறது உன்னோட கையில தான் இருக்கு. ஒரு நாள் இருக்கு. ஒழுங்கா, நான் சொன்ன படி என்னோட கம்பெனியில வந்து ஜாயின் பண்ணுறாய். “ என கூறியவன்,
“கெட் அவுட்.” என கத்தினான்.
அவனது செய்கையில் உண்மையில் ஆடித்தான் போனாள்அவள்.
அவனது மரியாதை இல்லாத பேச்சு, அவமானப் படுத்தும் விதம், அவளை இழிவாக நடத்தும் விதம் எல்லாமே அவளுக்குள் பிரளயம் ஒன்றை உண்டாக்கியது.
ஆனாலும் வெளியே அதனைக் காட்டாது, கீழே இறங்கியவள்,
விலகி நிற்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை கிளப்பிக் கொண்டு சென்றான் அவன்.
அவன் போனதும், அங்கு உடைந்து சிதறிப் போய் இருந்த சிலையைக் கண்டவளுக்கு கண்ணீர் துளிர்த்தது.
கண்களை துடைத்து விட்டு, அந்த சிலையின் சிதறிய பாகங்களை எடுத்து உடைந்து போன மனதுடன், ஓரமாக போட்டவள் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு வேலையகம் நோக்கி பயணித்தாள்.
அவளது வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என அவளுக்கே புரியவில்லை.
ஆனால், அவனது இடத்தில் மட்டும் வேலை செய்வது இல்லை என திடமாக முடிவு எடுத்து இருந்தாள் அவள்.
அடுத்த நாளும் தன் பாட்டில் ஓடிப் போக, அந்த நாள் இரவு அவளுக்கு மீண்டும் அவனிடம் இருந்து ரிமைண்டர் என போட்டு ஒரு மெசேஜ் வந்து இருந்தது.
அதில், “மறு நாள் காலை அவனது ஆபீஸ்ற்கு அவள் வர வேண்டும் எனவும், இல்லை எனில் மதியம், அவளாகவே அவனை சந்திக்க செய்யும் படி செய்வேன்.” என அனுப்பி இருந்தான்.
அந்த மெசேஜ்ஜை படித்தவளுக்கு, உள்ளுக்குள் திக்கென இருந்தாலும், எதுவும் ரிப்ளை அனுப்பாது, அவள் அமைதியாக உறங்கி விட்டாள்.
ஆனால் ஆரண்யனோ, அதற்கு நேர் எதிர் மாறாக, அவள் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை பண்ணாது இருப்பதைக் கண்டு, மேலும் கடுப்பாகிப் போனவன்,
“உனக்கு அவ்வளவு திமிர் ஏறிப் போச்சுது இல்ல. நாளையோட எல்லாத்தையும் அடக்குறேன். உன்ன என் காலில விழுந்து கெஞ்ச வைக்கிறேன். அப்போ தெரியும் இந்த ஆரண்யன் பத்தி.” என பல்லைக் கடித்தவன்,
அப்படியே கோபத்துடன் உறங்கிப் போனான்.
மறு நாள், சொர்ணா எந்த வித பதட்டமும் இன்றி, வழக்கம் போல வலைக்கு சென்றாள்.
அங்கு எதுவித உறுத்தலும் இன்றி வேலையும் செய்தாள்.
ஆனால் எல்லாம் மதிய நேரம் வரை மட்டும் தான்.
மதிய நேரம் சாப்பிட சென்றவள், சாப்பிட்டு விட்டு அருணாவுடன் பேசியபடி அவள் வேலை செய்யும் தளத்திற்கு லிப்ட்டில் ஏற,
அங்கு இருந்தவர்கள், அனைவரும்,
“என்ன திடீர்னு மீட்டிங்ணு கால் பண்ணி இருக்காங்க. என்ன விஷயமா இருக்கும்?, எல்லாரும் பரபரப்பா வேற இருக்காங்க.” என தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டு இருக்க,
காரணமே இல்லாமல் சொர்ணாவின் மனது தட தடக்க ஆரம்பித்தது.
“என்னவோ…. நடக்க கூடாதாது ஏதோ ஒன்று நடக்கப் போவது.” போன்ற உணர்வு அவளுக்குள்.
அதே எண்ணத்துடன், தனது
தளத்திற்கு வந்து சேர்ந்தவளுக்கு, அடுத்த நொடி மீட்டிங்கிற்கு வர சொல்லி அழைப்பு வர,
சொர்ணாவோ, “என்ன அருணா சடனா மீட்டிங் ஹால் வரட்டாம். அதுவும் எல்லா டிபார்ட்மென்ட்டும் சேர்த்து…. என்னவா இருக்கும்?, பிளான் பண்ணின ஸ்செடுல் மீட்டிங் மாதிரி இல்லையே.” என கூற,
அருணாவும், “விடு சொர்ணா. இது ஏதும் சும்மா டார்கெட் அச்சீவ் பண்றதுக்கான மீட்டிங்கா இருக்கும். வா போய்ட்டு வருவம். வழமை யானது தானே. என்ன இன்னைக்கு கொஞ்சம் டைம் வித்தியாசம் அவ்வளவு தான்.” என கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அங்கு ஏற்கனவே வேலை செய்யும் அனைவரும் கூடி இருந்தனர். இருவரும் போய் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.
“மீட்டிங் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பம் ஆகும்.” என கூறப்பட,
சொர்ணாவும் அங்கு நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அங்கு அந்த சாப்ட்வேர் கம்பனியின், மேனேஜ்ஜிங் டைரக்டர் உட்பட அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து நின்று,
“ஹாய் கைஸ். ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டு இருக்கம். அது என்னன்னா…. இன்னையில இருந்து இந்த சாப்ட்வேர் நிறுவனம் எங்க பொறுப்பு கிடையாது. எங்களோட எல்லா பங்குகளையும் நாங்க வேற ஒருத்தருக்கு கொடுக்கிறதா இருக்கம். இனி மேல் அவர் தான் இந்த நிறுவனத்தோட ஷேர் மென். ஷேர் ஹோல்டர் எல்லாம். நிறுவன மொத்தப் பங்குகளும், அவரோட பேருக்கு மாத்தப்படுது. அவரே விரும்பி வாங்கியும் இருக்கார். எங்கள விட அவர் தான் இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர். அவருக்கு இந்த நிறுவனத்தை கொடுக்கிறதுல எங்களுக்கு பெருமை தான்.”
“அவர் வேற யாரும் இல்ல.தி பேமஸ் பிசினஸ் மேன், சாப்ட்வேர் பிஸ்னஸ்ல கிங் மேக்கர்னு பேர் வாங்கிய மிஸ்டர் ஆரண்யன்.” என கூற,
சொர்ணாவோ, “என்னது….” எனஅதிர்ந்து போனாள்.
அதே நேரம் அவளது போனுக்கு.
“என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் யாரும் தப்ப முடியாது.” என மெசேஜ் வந்தது.
அதனை படித்து விட்டு திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்த நடை உடனும், சிறு புன்னகை உடனும் அந்த இடத்திற்குள் நுழைந்தான் ஆரண்யன்.
வந்தவனின் பார்வை அனைவரையும் ஒரு கணம் கூர்ந்து பார்த்தது.
அதிலும் சொர்ணா மீது அழுத்தமாக படிந்தது.
ஆனால் அது யாருக்கும் தெரியாத அளவு கூலிங் கிளாஸ் போட்டு மறைத்து இருந்தான் அவன்.
அங்கு இருந்த இளம் பெண்களுக்கு அவனை இனி தினமும் சைட் அடிக்கலாம் என்ற சந்தோஷம்.
இளம் ஆண்களுக்கோ, இனி பொண்ணுங்க நம்ம பக்கம் திரும்பவே மாட்டாங்க என்கிற ஆதங்கம்.
அவனைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவனின் ரூல்ஸ்ற்கு கீழே எப்படி வேலை செய்வது என்கிற எண்ணம்.
சிலருக்கும் அவனது ஆளுமையைக் கண்டு பிரமிப்பு.
சிலருக்கு அவனின் மீது பயம்…. இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு உணர்வுகளில் அமர்ந்து இருக்க,
“இவன் எதுக்கு இப்போ இங்க வந்து இருக்கான்?, எதுக்காக இந்த கம்பெனிய வாங்கி இருக்கான்?, ஒரு வேள…. இது என்ன சிக்க வைக்க எடுக்கிற ப்ளானா…. அப்படி இல்லன்னா ஏன் இந்த மெசேஜ்?…. ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் பழி வாங்க யோசிக்க முடியுமா?, நமக்கு சோதனைக் காலம் ஆரம்பம் போல.” என பலதும் எண்ணிய படி நொந்து போய் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.
அதே நேரம், அவளது வெளிறிய முகத்தைப் பார்த்து விட்டு,
தனக்குள், “நான் நினைச்சத முடிக்க எந்த எல்லைக்கும் போக கூடியவன் நான். என் கிட்டயே நீ எதிர்ப்பு காட்டு றீயா?, இனி பார்க்கிறன். எப்படி என்கிட்ட இருந்து நீ தப்பிக்கிறாய்னு?” என வன்மத்துடன் எண்ணிக் கொண்டான் ஆரண்யன்.
நம்ம ஹீரோ ஒரு வன்ம குடோன் மக்காஸ். அவன ஒண்ணும் செய்ய முடியாது போலயே.
அடுத்து என்ன நடக்கும்?
சொர்ணா எங்கணம் அவன் பார்வையில் இருந்து தப்பிக் கொள்வாள்?
ஆரண்யன் சொர்ணாக்கு வைத்திருக்கும் தண்டனை என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி திங்கள் வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
Episode – 06
சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.
முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு,
“விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள்.
அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க,
பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர்.
சொர்ணாக்கு விழுந்த வேகத்திற்கு எழுந்து ஓட, கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால், கால்களைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழும்ப,
மீண்டும் அந்தக் கூடடம் அவளை சுற்றிக் கொண்டது,
“என்ன திமிரடி உனக்கு?, எங்களயே அடிச்சிட்டு ஓடுறாய் என்ன?, உன்ன….” என அவளின் கையைப் பிடித்து முறுக்க,
புயல் வேகத்தில் அவர்களுக்கு அருகில் வந்து நின்றது ஒரு கார்.
அடுத்த நொடி காரில் இருந்து இறங்கினான் ஆரண்யன்.
அவனது கண்களில் கோப அனல் வீச, இருந்த கோபத்துக்கு அங்கு இருந்தவர் களை அடித்து நொறுக்கி ஆரம்பித்தான் அவன்.
அவனின் வேகத்திற்கும், ஒவ்வொரு அடிக்கும், தாக்குப் பிடிக்க முடியாது திணறிப் போயினர் அங்கு இருந்தவர்கள்.
முடிந்த வரையிலும், அவனிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர் அவர்கள்.
ஒவ்வொரு பக்கம் ஆளுக்கு ஒருவராய், பாய்ந்து தப்பிக்க முயல,
ஆரண்யனோ, விடாது துரத்தித் துரத்தி அடித்தவன்,
அவர்கள் உருண்டு புரண்டு “சார்…. சாரி சார்…. மன்னிச்சிடுங்க சார். இனி மேல் இந்தப் பக்கம் வர மாட்டம். தெரியாம வந்திட்டம்.” என கெஞ்சிக் கேட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
ஆரண்யனும், அவர்களை மிரட்டி அனுப்பி வைத்தவன்,
அவர்கள் போனதும் அங்கே வலியில் கையை உதறிக் கொண்டு, நின்று இருந்த சொர்ணாவை ஒரு பார்வை பார்த்தவாறு,
“சரியான இம்சை.”என முணு முணுத்தான்.
“ம்ம்ம்ம்…. கிளம்பு, உன்ன நானே ட்ரோப் பண்ணிட்டுப் போறேன்.” என பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன்,
அவள் அப்படியே நிற்கவும், “இங்க பாரு எனக்கு பொறுமை ரொம்ப ரொம்பக் கம்மி. இப்போ நீ மட்டும் வரலன்னா…. நான் என் பாட்டு க்கு போய்க் கிட்டே இருப்பன். அப்புறம் உன்னோட பாதுகாப்பு உன் கையில.” என அவன் கூறிவிட்டு நகர,
அவன் ஒருவனின் வன்மம் மட்டும் தான், இவ்வளவும் நடக்க காரணம் என எண்ணிப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் அத்துணை ஆதங்கம் உண்டானது.
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், அவளை நரகத்தின் விளிம்புக் கே அழைத்துக் கொண்டு சென்று வந்து விட்டான் அவன்.
அவனிடமே எப்படி உதவி கேட்பது என ஒரு கேள்வி மனதிற்குள் எழுந்தாலும்,
அவளுக்கும் இப்போதைக்கு வேறு வழி இல்லையே. அந்த இரவு வேளையில் அவளது மானத்திற்கு யார் உத்தரவாதம் தருவார்?
எதிரில் நிற்பவன் எதிரியாகவே இருந்தாலும், அவனால் தனது கற்பிற்கு எந்த ஆபத்தும் வராது என உறுதியாக நம்பிய காரணத்தினால் சொர்ணாவும், அமைதியாக அவனது காரில் சென்று ஏறி அமர,
தலையைக் கோதிக் கொண்டு, தானும் ஏறிக் கொண்டவன், புயல் வேகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
இருவர் இடத்திலும் மௌனம் மட்டும் தான் பேசும் மொழியாக இருந்தது.
இடையில் அவளை திரும்பிப் பார்த்தவன், அவள் கண் மூடி அமர்ந்து இருக்கவும்,
ஒரு நொடி, பிரேக்கை அழுத்தமாக அழுத்த கார் குலுங்கிப் பின் பழைய நிலைக்கு வந்தது.
அந்த ஒரு நொடியில் திடுக்கிட்டு அவள் கண் விழித்து தன்னைத் தானே சுதாரிக்கும் முன்பாக,
சீட் பெல்ட் போடாமல் இருந்ததன் விளைவாக, தடுமாறி பேலன்ஸ் இல்லாமல் அதிரடியாக முன்னுக்கு சென்று பின்னுக்கு வந்தாள் அவள்.
அவனோ, அவளது செய்கையில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“என்னாச்சு…. நானும் ரோட கவனிக்கல. அதான் பேலன்ஸ் இல்லாம போச்சுது.” என சீரியசாக கூறும் தொனியில் கிண்டல் செய்ய,
அவன் வேணும் என்றே செய்தான் என தெரிந்தும், பல்லைக் கடித்து அமைதி காத்தவள்,
வேறு புறம் பார்க்க, ஆரண்யனோ,
“உன்ன பழி வாங்கணும்னு எல்லாம் செய்ற நானே கடைசில உன்ன காப்பாத்துற நிலை வந்துடிச்சு. அத தான் என்னால தாங்க முடியல.” என கூறியவன், ஸ்டியரிங் கில் அடிக்க,
அவனது மன நிலையை எண்ணி அழுவதா?, சிரிப்பதா? என புரியாது பெரு மூச்சுடன் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.
அவளது வீடு இருக்கும் தெரு முனைக்கு அவள் வழி சொல்லும் முன்பாக காரை ஓட்டியவனைக் கண்டு புருவம் சுருக்கியவள்,
அவனைக் கேள்வியாக பார்க்க,
அவளைப் பார்க்காது வண்டியை ஓட்டியபடியே, “என்ன இவனுக்கு எப்படி என் வீட்டு அட்ரஸ் தெரியும்னு பார்க்கிறீங்களோ மேடம்?” என கேட்க,
அவள் உதட்டைக் கடித்தபடி முகத்தை திருப்ப,
“ஒருத்தர் என் வட்டத்துக்குள்ள வர்றாங்க ன்னா….அவங்கள பத்தின முழு டீடெயில்ஸ்சும் என்னோட கையில இருக்கும். அதுவும் மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இல்லையா. சோ, கும்பகோணம் வரைக்கும் போய் என்னோட டீம் உன்னப் பத்தி துப்புத் துலக்கி இருக்காங்க. உனக்கு கூட உன்னப் பத்தி சில விஷயங்கள் தெரியாம இருக்கும். ஆனா எனக்கு அத்தனை விஷயமும் அத்துப் படி.” என கூறிய படி,
அவள் இருக்கும் தெருவில் அவளை இறக்கி விட்டவன்,
அவள் இறங்கி, அவனைப் பார்க்காது “நன்றி சார்.” என கூறவும்,
“உன்னோட நன்றி எனக்கு தேவையே இல்ல. என்னோட கம்பெனிக்கு முன்னால எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது. அது எனக்குத் தான் தலை குனிவு. ஏற்கனவே உன்னால வந்த தலை குனிவுக்கு, நான் இன்னும் மீடியா முன்னாடி பதில் சொல்லிக் கொண்டு இருக்கன். இதில இதுவும் வெளில வந்தா எனக்கு தான் இன்னும் பிரச்சனை. அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்ன காப்பாத்தினன். அத புரிஞ்சுக்கோ. அத விட உன் மேல எனக்கு எந்த விதமான பரிதாபமும் இல்லை. பாசமும் இல்லை.” என கூற,
அதற்கு மேலும் அவனிடம் எதுவும் பேச முடியாது அங்கிருந்து விலக எத்தனித்தவளை,
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம்.” என சொடக்கிட்டவன்,
“நான் சொன்ன மாதிரி, இரண்டு நாளுல ஒழுங்கா வந்து வேலையில சேரப் பார். இல்லன்னா உனக்கு தான் சேதாரம் இன்னும் அதிகம் ஆகும். ஏற்கனவே உன் மேல நான் கொலை வெறில இருக்கன். புரிஞ்சு நடந்துக்கோ. எனக்கு வேண்டியது நடக்க, நான் எந்த எல்லைக்கும் போவன்.” என உறுமியவன் மீண்டும் புயல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு போக,
“ஏண்டா இவன் கண்ணில பட் டோம்?” என நொந்து போய் காரை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் சொர்ணா.
அவள் வீட்டு வாசலை நெருங்கும் போதே, அவளுக்காக காத்துக் கொண்டு இருந்த அவளது தந்தை,
“அம்மாடி சொர்ணா, என்னாச்சும்மா, ஏன் இவ்வளவு நேரம்?, உனக்கு நான் எத்தன தடவ போன் பண்ணேன்?, ஏன்மா முகம் ஒரு மாதிரி இருக்கு?, நீ நல்லாத் தானே இருக்காய்?, வழியில யாரும் ஏதும் சொன்னாங்களா?, போன இடத்தில ஏதும் பிரச்சனையா?….” என தொடர் கேள்விகள் கேட்டவர்,
மகளின் கை சற்று வீங்கி இருப்பதை அப்போது தான் கண்டு கொண்டார்.
உடனே பதட்டத்துடன் “அம்மாடி, சொர்ணா இதென்ன கையில இப்படி ஒரு வீக்கம்?, விரல் அடையாளமும் சேர்ந்து இருக்கு போல….” என கூறி அவளது கையை திருப்பிப் பார்க்க,
“ஸ்ஸ்ஸ்ஸ்….”என கூறிய வாறு வலியில் கையை உதறி யவள்,
“இல்லப்பா…. அது கோவில்ல ஒருத்தங்க இடிச்சதுல சுவரோட போய் மோதிட்டன் அவ்வளவு தான். நீங்க பயப்பிடுற மாதிரி ஒண்ணும் இல்லப்பா. அவ கூட பேசிக் கொண்டு இருந்ததுல கொஞ்சம் டைம் ஆகிருச்சு. போன் கொஞ்சம் பிரச்சனை அப்பா. என்னன்னு பார்க்கணும். நீங்க கால் பண்ணினது எனக்கு வரல.” என தந்தையை மேலும் யோசிக்க விடாது கட கடவென கூறியவள், அவரின் முகத்தில் இன்னும் தெளிவு இல்லாததைக் கண்டு,
“அப்பா இங்க பாருங்க, கோவில்ல இன்னைக்கு கூட் டமே இல்லை. எனக்கு நல்ல தரிசனம் கிடைச்சுது. உங்களுக்காக ஸ்பெஷலா வேண்டிக் கிட்டன். இந்தாங்க ப்பா திருநீறு.” என கூறியவள்,
கோவிலில் நடந்த பூஜைகள், அம்மனுக்கு பாடிய ஸ்தோத்திரம், என அனைத்தையும் கூற,
அவளின் தந்தையும் கோவில் பற்றிய கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தந்தையை சமாதானம் செய்து விட்டு, அறைக்குள் வந்தவளுக்கு அப்போது தான், ஆசையாக வாங்கிய சிலையின் நினைவு வந்தது.
“அச்சோ ஆசையா வாங்கின சிலை ஆச்சே. எங்க விழுந்து இருக்கும்…. ரோட்ல விழுந்த மாதிரி இல்லை. ஒரு வேள அந்த ஆளோட காரில விழுந்து இருக்குமோ…. சே…. அமைதியா இருக்கலாம்னு கோவிலுக்கு போனன். ஆனா இருந்த நிம்மதியும் போச்சு. எல்லாம் என்னோட விதி.” என முணு முணுத்துக் கொண்டு தூங்க சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது தான் உண்மை.
அதே நேரம் அவள் ஆசைப்பட்ட அதே சிலையை கையில் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
“சிலை அழகா தான் இருக்கு. லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…. சே…. புல்ஷீட் இந்த வசனங்கள் எல்லாம் எங்க இருந்து கண்டு பிடிக்கிறாங்களோ தெரியல. இடியட்ஸ், இந்த மாதிரி செண்டிமெண்ட் பூல்ஸ் இருக்கிறதால தான் இன்னும் நிறைய காதல் தோல்வி, தற்கொலை நடக்குது. என்னவோ….” என உதட்டை வளைத்தவன்,
“இந்த சிலை கண்டிப்பா எனக்கு யூஸ் ஆகும். பார்த்துக்கலாம்.” என கூறிக் கொண்டு,
அந்த சிலையை பத்திரமாக வைத்துக் கொண்டான்.
அவனைப் பொறுத்த வரைக்கும் கையில் உள்ள உயிர் அற்ற சிலையும், நேரில் உள்ள உயிரான பெண் சொர்ணாவும் ஒன்று தான்.
பொம்மைகள் போல உருட்டி விளையாடலாம் என எண்ணத்தோடு இறுமாப்புக் கொண்டு முடிவுகளை எதைப் பற்றியும் யோசிக்காது எடுக்க ஆரம்பித்தான் அவன்.
அவனது எண்ணங்களின் விளைவு என்னவாக இருக்கும்?
சொர்ணா அவன் சொன்னதற்கு சம்மதிப்பாளா?, இல்லையா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
கொஞ்சம் வேலை மக்காஸ் அதான் எபி ரொம்ப லேட்.. இனி எபிகள் ஒழுங்காக வரும்.
.
Episode – 05
வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.
லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,
வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.
“இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது.
நேராக வீட்டுக்கு சென்றவளுக்கு, நேரடியாக தந்தையை எதிர் கொள்ளவும் முடியவில்லை.
அவரிடம் பேசினால் கண்டிப்பாக உடைந்து அழுது விடுவோம் என கண்டிப்பாக அவளுக்கு தெரியும்.
ஆகவே, அமைதியாக அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
அவன் பேசிய பேச்சுக்களின் தாக்கம், இன்னும் அவளுக்குள் புயலை ஏற்படுத்திக் கொண்டு தான் இருந்தது.
“என்னவெல்லாம் பேசி விட்டான் அவன். எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டு அசிங்கப்படுத்திட்டான். நேரடியா சவால் வேற விட்டு இருக்கான். இன்னும் என்ன எல்லாம் நடக்கப் போகுதோ. அவனோட அந்தக் கண்ணுல இருக்கிற வெறி சாதாரண மானது இல்ல. என்ன பண்ணலாம்?, பேசாம அப்பாவ கூட்டிக் கொண்டு இங்க இருந்து போயிடலாமா?, ஆனா எங்க போறது?, இனி புதுசா வேற இடம் மாறுறதுன்னா அதுக்கு வேலையும் தேடணுமே. எல்லாம் குழப்பமாவே இருக்கே. சே…. அந்த ஒரு நாள் வாழ்க்கையில வராமல் போய் இருக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு என் நிலைமை மாறிப் போச்சு கடவுளே….” என பலதும் யோசித்தவள்,
கடைசியில், “அடுத்த கிழமை முழுதும் எதுக்கும் அமைதியா இருந்து பார்ப்பம். அவன் ஒண்ணும் பண்ணலன்னா ஜாப்ப தொடர்ந்து செய்வம். இல்லன்னா, வேற இடம் மாறிப் போகலாம்.” என முடிவு எடுத்துவள்,
இயன்ற வரையும், இயல்பாக இருக்க முயன்றாள்.
தந்தைக்கு தன் மீது கொஞ்சம் கூட சந்தேகம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் அவள்.
“அப்படி சிறிதாக ஏதும் தெரிய வந்தால் கூட அவர் நிறைய யோசிப்பதோடு, அவளையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊருக்கு பஸ் ஏறி விடுவார். அதன் பிறகு அவரை தடுக்க முடியாது.” என எண்ணியவள்,
கவனமாக தனது உணர்வுகளை வெளியே காட்டாது மறைத்துக் கொண்டு, தந்தையுடன் வழக்கம் போல சந்தோஷமாக நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள்.
அடுத்தடுத்த நாட்கள், எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி நார்மலாக கடந்து போனது.
அந்த வார இறுதி நாளில் கோவிலுக்கு செல்லலாம் என எண்ணியவள்,
மாலை நேரம் தந்தையிடம் சொல்லிக் கொண்டு, அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றாள்.
அங்கு சென்று மனம் உருகி, “எனக்கு காசு பணம் நிறைய வேணும்னு இல்ல தாயே, மன நிம்மதி தான் வேணும் , என்னோட அப்பாவ நான் நல்லாப் பார்த்துக்கணும். நான் யாருக்கும் வேணும்னு தீங்கு செய்தது இல்லை. தெரியாம ஏதும் பண்ணி இருந்தா மன்னிச்சிடுங்க தாயே.” என கண்ணை மூடிக்கொண்டு வேண்டுதல் வைத்தாள்.
அவளின் வேண்டுதலைக் கேட்ட அம்மனோ,
“என்ன செய்ய சொர்ணா, உனக்கு இனி கொஞ்சம் கஷ்ட காலம் தான். அத நீ தாண்டியே ஆகணும். உனக்கு இன்னும் நிறைய சோதனைகள் காத்து இருக்கு.” என கூறிக் கொண்டார்.
கோவிலில் தரிசனம் முடித்தவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு,
நேரத்தைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்து
, அங்குள்ள கடைகளைப் பார்த்தபடி நடந்தாள்.
அப்போது தான் அவளது கண்ணுக்கு அழகான ஜோடி லவ் பேர்ட்ஸ்சின் சிலை கண்களில் பட்டது.
அந்த சிலை குட்டியாக இருந்தாலும், அதில் இருந்த வசனம் தான் அவளை மேலும் கவர்ந்தது.
“லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்.” என எழுதப் பட்டு இருந்தது.
ஏனோ சொர்ணாவின் மனதை அந்த சிலை கவர,
உடனே ஆசையுடன் அதனை வாங்கிக் கொண்டு நடந்தவள்,
அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.
அந்த டிரைவர், “மேடம் எங்க போகணும்?” என்று கேட்க,
சொர்ணாவும், “நல்ல காலம் ஆட்டோ பிடிக்கணும்னு யோசிக்கும் போதே வந்துடிச்சு.” என எண்ணிக் கொண்டு,
தான் தங்கி இருக்கும் இடத்தின் பெயரை சொல்லி விட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.
ஆட்டோ எடுத்த உடனே வேகமாக செல்ல ஆரம்பித்தது.
அதே நேரம் அவள் சொன்ன பாதையை விடுத்து, வேறு பாதையிலும் செல்ல, பயந்து போனவள்,
“ஹலோ, இது நான் சொன்ன ரூட் இல்லையே. நீங்க போற பாதை பிழை. முதல்ல வண்டிய நிறுத்துங்க.” என பதட்டமாக சொன்னாள் சொர்ணா.
ஆனால் ஆட்டோக் காரனோ, முன்பை விட ஆட்டோவை வேகமாக செலுத்தினானே தவிர எந்தப் பதிலும் கூறவில்லை.
சொர்ணாவோ, பயத்தில் வியர்த்து ஒழுக,
“ஹலோ…. ஹலோ…. நிறுத்துங்க…. நிறுத்துங்க…. ஏன் இப்படி வேகமா ஓட்டுறீங்க. யாரு நீங்க?, என்ன எங்க கூட்டிக் கொண்டு போறீங்க?, இப்போ ஒழுங்கா நீங்க நிறுத்தல, நான் போலீஸ்ற்கு போன் பண்ணுவன், இல்லன்னா வண்டில இருந்து குதிச்சிடுவன்.” என கத்தினாள் சொர்ணா.
அவளுக்கு என்ன செய்வது எனவும் புரியவில்லை.
அந்த ஆட்டோக் காரனோ, ஆட்டோவை ஓட்டிக் கொண்டே, ரிங் பண்ணிய தனது கை பேசியை எடுத்துப் பார்த்தவன்,
“அம்மா இது உங்களுக்கு வந்த போன் தான்மா. தயவு செய்து பேசுங்க.” என கூறி, போனை கொடுக்க,
“எனக்கா…. யாரு?, இந்த நேரத்தில எனக்கு எதுக்கு உங்க போன்…. முதல்ல நீங்க வண்டிய நிறுத்துங்க.” என சற்று அழுத்தம் கலந்த குரலில் கேட்டவள்,
ஆட்டோக் காரன் வாய் திறக்காது, போனை நீட்டியபடி ஓட்டவும்,
“சே….” என்ற படி, வேறு வழி இன்றி போனை வாங்கி காதில் வைத்து,
“ஹலோ யாருங்க நீங்க?….” சற்று எரிச்சலான குரலில் கேட்டாள்.
மறு புறம், பதில் எதுவும் இல்லாது போகவே,
“ஹலோ…. ஹலோ…. லைன்ல இருக்கீங்களா இல்லையா?, நேரம், காலம் புரியாம தொல்லை பண்ணிக் கிட்டு….” என கூற,
மறுபுறத்தில் இருந்து, “ம்க்கும்….” என்றகேலி குரலுடன் சிரிப்பு சத்தம் ஒன்று கேட்டது.
அந்த சிரிப்பு சத்தமே சொன்னது எதிரில் இருக்கும் அவன் யார் என?
“நீ…. நீங்க….மிஸ்டர் ஆரண் யன்….” என சொர்ணா தடுமாற,
“என்ன தடுமாற்றம் மேடம்?, சாட்சாத் நானே தான். அப்புறம் என்ன சொன்னீங்க நேரம் காலம் இல்லாமலா…. ஹா…. ஹா…. எல்லாம் நேரம் காலம் பார்த்து தான் நாங்க நடக்கிறம்.”
“சார்…. இப்போ எதுக்கு?, அப்போ இந்த ஆட்டோ டிரைவர்…. இது எல்லாம் உங்க செட் அ ப் தானா?”
“யெஸ், எல்லாத்துக்கும் காரணம் நானே…. சரி உன்னோட கதைக்க எனக்கு நேரம் இல்ல. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நேர்ல வாங்க மேடம் பேசிக்கலாம்.” என கூறி விட்டு வைத்தவனை என்ன செய்வது எனப் புரியாது கண் கலங்கிப் போனாள் சொர்ணா.
அவள் நேரத்துக்கு வீட்டுக்கு போகவில்லை என்றால் தந்தை பயந்து விடுவார். அதோடு, கோவிலுக்கும் தேடி வந்து விடுவார். வயதான காலத்தில் அவரை அலைய வைக்க அவள் விரும்ப வில்லை.
அதே நேரம் என்ன காரணம் தந்தையிடம் சொல்வது. அவரிடம் பொய் பேசாதவள் இப்போது பொய் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறாள்.
எல்லாம் அவன் ஒருவனால் தான் என எண்ணியவள், தந்தைக்கு போன் போட்டு,
“அப்பா, கோவிலுக்கு வந்த இடத்தில என்னோட ஸ்கூல் பிரன்ட பார்த்தன் அப்பா. அவ என்னை அவளோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண கூப்பிடுறா. எனக்கு என்ன பண்ண தெரியல அப்பா. நீங்க என்ன சொல்றீங்க?” என்று பொய் என தெரிந்தும் கேட்க,
“சரியான வெகுளிம்மா நீ. இதுக்கெல்லாம் போய் என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்கணுமா என்ன?, உனக்கு இருபத்து நான்கு வயசு ஆகுது. இன்னும் அப்பா கிட்ட கேட்டு எல்லாம் செய்யனும்னு நினைக்கிறாய் பார். உன்ன மாதிரி பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கணும். நீ போய்ட்டு வாம்மா. ஒண்ணும் அவசரம் இல்லை. என்ன ஒண்ணு கவனமா போய்ட்டு வாம்மா அது மட்டும் தான் மா.” என கூறி விட்டு வைத்தார் அவளின் தந்தை.
தந்தையின் பேச்சில் சொர்ணாக்கு இன்னும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டு போனது.
தேவை இல்லாமல், தந்தையிடம் பொய் சொல்கிறோமே என எண்ணி நொந்து போனாள் பெண்ணவள்.
அதன் பிறகு அவள் ஆட்டோக் காரனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. அவனும் எதுவும் பேசவும் இல்லை.
சரியாக, ஆரண்யனின் சாப்ட்வேர் சோலுஷனுக்கு முன்னாக ஆட்டோவை நிறுத்தியவன்,
அவள் இறங்காது இருக்கவும், “அம்மா, எனக்கு சொன்னத தான் நான் செய்றேன் தயவு செய்து இறங்குங்க. இல்லன்னா எனக்கு தான்மா பிரச்சனை. என்னோட பிழைப் பே ஆட்டோவ நம்பித்தான் இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.” என கெஞ்ச,
சொர்ணாக்கு அவரின் நிலை புரிய,
“சரி நான் இறங்குறன்.” என கூறி விட்டு, இறங்கியவள் அந்த கட்டிடத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு,
பெரு மூச்சு ஒன்றுடன், “ஒரு கிழமைக்கு முதல் தான் இந்த இடத்துக்கு திரும்ப வரக்கூடாதுன்னு வேண்டுதல் வைச்சேன். ஆனா விதி என்ன வைச்சு விளையாடுது.” என முணு முணுத்துக் கொண்டு,
ஆறாம் மாடியில் உள்ள அவனது கேபினுக்கு சென்றவள்,
அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?” என கேட்டாள்.
உள்ளே இருந்து “யெஸ், கம் இன்.” என்ற குரல் கேட்க,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள்,
அங்கே கால் மேல் கால் போட்டுக் கொண்டு லேப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஆரண்யனை பார்த்து விட்டு,
“எதுக்காக இப்போ என்னை இப்படி வர வைச்சீங்க?” என கேட்க,
அவனோ, “ஸ்ஸ்ஸ்…. எனக்கு ஒரு வேலை இருக்கு அப்படி போய் உட்கார், எல்லாம் முடிச்சிட்டு பேசுறேன்.” என திமிராக கூறியவன்,
லேப்பில் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்.
அடுத்து என்ன செய்வது எனப் புரியாது அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவள்,
அடிக்கொரு தரம் நேரத்தை பார்த்துக் கொண்டாள்.
அவனும் அவள் படும் பாடுகளைக் கவனித்துக் கொண்டே, உதட்டைத் தாண்டாத ஒரு வன்மப் புன்னகை உடன், வேலை செய்து கொண்டு இருந்தான்.
அவன் வேணும் எண்டே செய்கிறான் என தெரிந்தும், எதுவும் செய்ய முடியாது அமர்ந்து இருந்தவள்,
ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவன் அசையாது இருப்பதைக் கண்டு,
“சார், டைம் ஆகுது. நான் வீட்டுக்குப் போகணும், அப்பா பார்த்துக் கொண்டு இருப்பார். என்ன விஷயம்னு சொல்லுங்க. இல்லன்னா, நான் கிளம்புறேன்.” என கூறியவள்,
அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் வேலையைப் பார்க்கவும்,
அவளது பொறுமை எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் அரை மணி நேரம் பொறுமை காத்தவள்,
அவன் கல்லுப் போல அசையாது இருக்கவும்,
“சாரி சார்…. நான் இப்போ கிளம்பியே ஆகணும்.” என கூறி விட்டு,
கதவைத் திறக்க, அது திறந்தால் தானே…. இழுத்துப் பார்த்தவள் கதவு திறக்கவில்லை என்றதும்,
திரும்பி ஆரண்யனைப் பார்க்க,
அவனோ, ரிமோட்டை தூக்கிக் காட்டி விட்டு,
“என்னோட அனுமதி இல்லாம நீங்க வெளில போக முடியாது மேடம். ஒரு கிழமை ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்தீங்க போல, என்னோட தொல்லை எதுவும் இல்லாம, அது தான் என் ஆட்டத்தை ஒரு குட்டி டெமொவோட ஸ்டார்ட் பண்ணலாம்னு இப்படிப் பண்ணேன்.” என கூறினான்.
அவனை, என்ன செய்வது எனப் புரியாது திண்டாடிப் போனாள் சொர்ணா.
“என்ன இவன் இப்படி இருக்கான்?, இப்போ நான் என்ன பண்றது?”, என யோசித்தவள்,
“நான் வீட்டுக்கு போகணும் சார், அப்பா ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிடுவார். பாவம் அவர்.” என கூற,
“ஓஹ்…. அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என கேட்டான் ஆரண்யன்.
“சார் நீங்க ஒண்ணும் பண்ண வேணாம், தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க.” என சொர்ணா கேட்கவும்,
அவளின் பதட்டத்தை கண்டு புன்னகை புரிந்தவன்,
“ஓகே, உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அதனால திறந்து விடுறேன். ஆனா அதுக்கு பதிலா நீ ஒண்ணு பண்ணணுமே.” என கூறினான் அவன்.
“என்ன பண்ணனும் சார்….” என சுற்றும் முற்றும் பார்த்தவாறு சற்று பயந்த குரலில் கேட்டாள் அவள்.
சொர்ணாவின் மூளை அதற்குள் எங்கு எல்லாமோ பயணம் செய்து விட்டு வந்தது.
“பெரிசா ஒண்ணும் இல்ல, நீ உன்னோட ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு என் கம்பெனில வந்து ஜோயின் பண்ணு. அப்போ தான் நீ என்னோட கண்ட்ரோலுக்குள்ள நீ இருப்பாய். இல்லன்னா உன் மேல என்னோட போக்கஸ் கொஞ்சம் குறைவா இருக்கு. என்ன நான் சொன்னத செய்றீயா?” என கேட்டான் ஆரண்யன்.
சொர்ணாவோ, “எத உங்க கம்பெனிலயா?, சார், நான் வேலை செய்றது சாப்ட்வேர் கம்பெனி….” என ஆரம்பித்து விட்டு,
தான் பேசுவது தப்பு என தெரிந்து பேச்சை நிறுத்தி விட்டாள் சொர்ணா.
பின்னே, அவள் இப்போது வந்து இருக்கும் அவனது கம்பெனியும் அதே வகை தானே ஆகவே அப்படி ஒரு காரணம் சொல்ல முடியாது. அதனால் தான் பேச்சை முடித்துக் கொண்டாள் அவள்.
அவள் எண்ணியது போலவே,
“அப்போ இது என்ன இரும்பு விக்கிற கம்பெனியா…. ஒழுங்கா இரண்டு நாளுல இங்க வந்து ஜோயின் பண்ணு. இல்லன்னா அதனோட பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அப்புறம் உன் இஷ்டம். இப்போ நீ போகலாம்.” என கூறியவனை ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவள்,
அவன் ரிமோட்டை எடுத்து கதவைத் திறக்கவும்,
“இப்போதைக்கு இங்க இருந்து கிளம்பினா போதும். மிகுதியை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என எண்ணிக் கொண்டு வேகமாக அங்கு இருந்து வெளியேறினாள்.
போகும் அவளையே பார்த்து இருந்தவன்,
“ஓடு…. ஓடு…. இன்னும் எவ்வளவு தூரம் ஓடுறாய்னு நானும் பார்க்கிறன்.” என மனதிற்குள் எண்ணிக் கறுவிக் கொண்டான்.
அவள் போனதும் அவனும் கிளம்பி விட்டான்.
வேகமாக வெளியில் வந்து வீதியில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இராப் பொழுது பயத்தைக் கிளப்பியது.
ஒரு வாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆட்டோ ஒன்றை ஆப்பில் புக் பண்ணி விட்டு,
வாசலில் காத்து இருக்க, அவளைக் கடந்து சென்றது ஆரண்யனின் கார்.
கடந்து போகும் அவனது காரை வெறித்துப் பார்த்தவள், கார்க் கண்ணாடியூடு அவன் தன்னைப் பார்க்கக் கூடும் என உணர்ந்து, அமைதியாக வேறு பக்கம் முகத்தை திருப்பினாள்.
நேரம் ஆக…. ஆக…. ஆட்கள் நடமாட்டம் குறைய, சொர்ணாக்கு நெஞ்சுக்குள் நீர் வற்றிப் போனது.
அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாது, மெதுவாக நடக்க ஆரம்பித்தவள்,
மனதிற்குள், ஆரண்யனை அர்ச்சிக்கவும் மறக்கவில்லை.
ஒரு பத்து அடி கூட நடந்து இருக்க மாட்டாள். அதற்குள் ஒரு குடிகாரக் கும்பல் அடங்கிய வாகனம் ஒன்று அவளை முந்திக் கொண்டு சென்று சடன் பிரேக் போட்டு நின்றது.
அதே நேரம், சொர்ணாவின் தந்தையும் அவளுக்கு அழைப்பு எடுத்தக் கொண்டே இருந்தார்.
அவள், போனை எடுக்க முதல், அந்த வாகனத்தில் இருந்து குதித்த ஒரு கும்பல் அவளை நோக்கி வர ஆரம்பித்தது.
அதற்கு மேலும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்து, அவள் ஓட ஆரம்பிக்க,
அந்தக் கும்பல் சுற்றி வளைத்து அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தங்கள் வாகனத்தை நோக்கி சென்றது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது?
சொர்ணா எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கப் போகிறாள்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 குட்டி எபின்னாலும் வரும் மக்காஸ்…
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
Episode – 04
மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு,
தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு,
“அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு,
அவனின் சாப்ட்வேர் நிறுவனமான ஆரா சாப்ட்வேர் சொல்யூஷனின் முன்னாக போய் இறங்கினாள்.
இறங்கியவள் தனது முந்தானையால், முகத்தில் அரும்பிய வியர்வையை மெதுவாக துடைத்து விட்டு அங்கிருக்கும் வாட்ச்மேனிடம் தனது பெயரைக் கூற,
அவனும் மரியாதையாக கதவைத் திறந்து உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான்.
அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டமே அவளை மிரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.
கால்கள் பின்னப் பின்ன மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உள்ளே சென்றவளுக்கு அந்த ஏசியிலும் வியர்த்து வழிந்தது.
உள்ளே சென்று, அங்கிருந்த ரிசப்சனிஸ்சிடம், “என்னோட நேம் சொர்ணாம்பிகை. எனக்கு இன்னைக்கு ஆரண்யன் சார சந்திக்க அப்பொய்ன்மெண்ட் கிடைச்சு இருக்கு.” என கூற,
அந்தப் பெண்ணும் அவளது ரெஜிஸ்டரில் ஒரு முறை செக் பண்ணியவள்,
“ஒன் செக் மேடம்.” என சொர்ணாவிடம் கூறி விட்டு,
போனை எடுத்து, ஆரண்யன் மெயின் கேபின் தளத்தில் இருக்கும் ரிசப்சனிஸ்ட்ற்கு கால் பண்ணினாள்.
மறு முனையில் பதில் கிடைத்ததும்,
சொர்ணாவிடம், “மேடம் நீங்க போகலாம். ஆறாவது மாடி தான் சாரோட கேபின் இருக்கிற புளோர். அங்க சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருக்காராம் போங்க மேடம்.” என கூறி புன்னகை உடன் கையை லிப்ட்டை நோக்கி காட்ட,
“எத, காத்துக் கொண்டு இருக்காரா?” என உள்ளுக்குள் உதறலுடன் எண்ணிக் கொண்டவள்,
அந்தப் பெண்ணிடம், “தங்கி யூ.” என கூறி விட்டு, லிப்டில் ஏறிக் கொண்டாள்.
அவள் வந்ததில் இருந்து அவளின் ஒவ்வொரு செய்கை களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
அவள் படும் பாடுகள் அனைத்தையும் கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
பொதுவாக ஏதும் பிரச்சனை என்றால் மட்டும், சிசி டீவி பார்ப்பவன் முதன் முறை தனது நேரத்தை விரயமாக்கி சிசி டீவி பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒருவாறு அந்த தளத்திற்கு, வந்து சேர்ந்தவள், அங்கிருந்த ரீசப்சனிஸ்சிடம் விடயத்தைக் கூற,
அந்தப் பெண்ணும், “ஓஹ்…. நேற்று என் கூட பேசினது நீங்க தானா மிஸ். உங்க நேம் சொர்ணாம்பிகை தானே.” என கேட்டவள்,
சொர்ணா, “யெஸ்.” என கூறவும்,
ஒரு புன் சிரிப்புடன், “யூ ஆர் லுக்கிங் கோர்ஜியஸ் மேம்.” என கூறினாள்.
அவளது பாராட்டில் ஒரு கணம் கன்னம் சிவந்து போனது சொர்ணாக்கு.
மறு நொடியே, “தங்கி யூ.” என புன் சிரிப்புடன் கூறியவள்,
அவனது அறையைக் கண்டு பிடித்து அவனின் அறைக்கு முன்னாக சென்று நின்றாள்.
அவனின் பெயரைக் கண்டதுமே,
அதுவரையும், நின்றிருந்த வியர்வை மீண்டும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
அவளின் தவிப்பு உள்ளே இருந்த ஒருவனின் பார்வையில் பட்டு அவனுக்கு உதட்டில் வன்மப் புன்னகையை வரவழைத்தது.
சொர்ணா, ஒருவாறு தனது மனதை சமன் செய்து கொண்டு,
“சார், மே ஐ கம் இன்?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு, உள்ளே இருந்து பதில் வராது போகவே,
மேலும் இரண்டு தடவை கூப்பிட்டுப் பார்த்தவள், எதுவும் வராது போகவே,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே கால் வைத்த அந்த நொடி,
“வாங்க…. மிஸ் சொர்ணாம்பி கை வெங்கட மூர்த்தி குரு க்கள். ஆரண்யனின் பிரமாண்ட அறை உங்களை அன்புடன் வரவேற்கிறது.” என அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு கூறினான்.
சொர்ணா அவனது குரலில், திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க,
அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து, அவளையே பார்த்த வண்ணம், கையில் பேனையை வைத்து சுழற்றிக் கொண்டு இருந்தவன்,
அவள் அவனையே உறைந்து போய் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,
“என்ன மேடம், கதவுக்கு உள்ள வர்ற ஐடியா இருக்கா…. இல்லையா…. எதுக்கு என்ன பார்க்க வந்து இருக்கீங்கன்னு கொஞ்சம் உள்ள வந்து சொல்றீங்களா ப்ளீஸ்.” என கிண்டலாக கேட்டான்.
அவளோ, உதட்டைக் கடித்துக் கொண்டு உள்ளே வந்தவள்,
அவனின் மேசைக்கு முன்னாக வந்து நின்று,
“சார் அது வந்து….” என ஆரம்பிக்க,
கை நீட்டி அவளின் பேச்சைத் தடுத்தவன், அவளை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தான்.
மெல்லிய ஊதா நிற வாயில்ப் புடவையை ஒழுங்காக அணிந்து இருந்தவள்,
முகம் எந்த ஒப்பனையும் இல்லாது சிம்பிளாக இருந்தது.
கரு நிறப் பொட்டும், அவள் அணிந்து இருந்த வெள்ளைக் கல்லு மூக்குத்தியும் அவளுக்கு ஒரு வித அழகை கொடுத்தது.
முகத்தில் அரும்பிய வியர்வை கூட அவளுக்கு அழகு சேர்த்தது.
கூந்தல் அங்கும் இங்கும் பறந்து இருக்க, அவனையே பயப் பார்வை பார்த்தவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு,
“முதல்ல உட்காருங்க மேடம், அப்புறம் பேசுங்க.” என கூற,
அவளுக்கும் கால்கள் சற்றுப் பலம் இழந்தது போல இருக்கவே, அமைதியாக கதிரையில் அமர்ந்து கொண்டவள்,
அவனை நிமிர்ந்து பார்க்காது, சுற்றிப் பார்த்தவாறு,
“நேற்றுக்கு முதல் நாள் நான் ஆரா ஹோட்டலுக்கு வந்து இருந்தேன்.” என ஆரம்பிக்க,
மறு புறம் அவனிடம் இருந்து “ஓகே…. அப்புறம்” என்ற குரல் கேட்டது.
சொர்ணாவும், அவனைப் பார்க்காது,
“அங்க நீங்க பேரரா இருந்தீங்க.” என நலிந்த குரலில் கூறினாள்.
“ம்ம்ம்ம்…. அப்புறம்….”
“நான்…. நீங்க…. சாப்பாடு மாறிப் போச்சுன்னு….”என அடுத்த வார்த்தை வராது தடுமாறிய சொர்ணா,
“……………….”
மறு புறம் அவன் சைலன்டாக இருக்கவும்,
“தெரியாம…. உங்கள அடிச்சிட்டேன்.” என கூறி முடித்தாள்.
“ஓஹ்…. அப்புறம்….”
“அன்னைக்கு இருந்த டென்ஷன்ல என்னால மன்னிப்பு கேட்க முடியல.”
“ஆஹ்…. அப்புறம்….”
“இல்ல…. நீங்க யாருன்னு எனக்கு அப்போ சரியா தெரியல. இப்போ தான் தெரிஞ்சுது. அதான் அன்னைக்கு நடந்த சம்பவம் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அப்படின்னு உங்க கிட்ட சொல்லி….” என அவள் நிறுத்த,
கதை கேட்கும் பாணியில் “ம்ம்ம்ம்…. சொல்லி….” என கிண்டலாக அவனும் இழுக்க,
“மன்னிப்பு கேட்க வந்தன் சார்.” என ஒருவாறு சொல்லி முடித்தாள் சொர்ணா.
சற்று நேரம் அங்கு அமைதியே நிலவியது.
மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள், அவன் அவளையே கூர் விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருக்கவும்,
பட்டென தலையைக் குனிந்து கொண்டு,
“என்ன மன்னிச்சிடுங்க. வேணும்னு நான் எதுவும் பண்ணல. தெரியாம தான் அது நடந்துது. உங்க ரேஞ்ச் வேற…. என்னோட ரேஞ்ச் வேற. இதுக்கு மேல இத வளர்க்க வேண்டாம் சார் ப்ளீஸ்.” என கை எடுத்துக் கும்பிட்டவள்,
அவனை நிமிர்ந்தும் பார்க்காது, பட்டென எழுந்து, கதவிற்கு அருகில் செல்ல,
அவளின் பின்னே சொடக்கிடும் ஒலி ஒன்று கேட்டது.
சொர்ணாவும், சந்தேகமாக திரும்பி அவனைப் நோக்க,
“என்ன மேடம் வந்தீங்க?, நீங்களே பேசிட்டு கிளம்புறீங்க?, கொஞ்சம் இருங்க இனி தானே மேடம் நான் பேசணும்.” என கூறியவன், எழும்பி மேசைக்கு முன்னால் வந்து ஸ்டைலாக சாய்ந்து நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அவனின் ஸ்டைலிற்கும் அவனது பார்வைக்கும் சம்பந்தமே இல்லை.
ஆம், அவன் விழிகளில் தெரிந்தது என்னவோ வேட்டையாடும் அதே புலியின் பார்வை தான்.
அவனின் பார்வையில் உள்ளுக்குள் கிலி பிறந்தாலும்,
வெளியில் காட்டாது மறைத்துக் கொண்டவள்,
“சொல்லுங்க சார். உங்க டைம வேஸ்ட் பண்ண வேணாம்னு தான் மன்னிப்பு கேட்டுட்டு உடனே கிளம்பினன்.”
“ஓஹ்…. மேடம் எனக்காக பார்க்கிறீங்க போல. என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு இல்ல….” என கேலி பேசியவன்,
“அன்னைக்கு நீ அடிச்ச ஒரு அடியால எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?, என் அப்பா முன்னாடி நான் கூனிக் குறுகிப் போய் நின்னன். எத்தனையோ பிசினஸ்களுக்கு ஓனர் நான். எனக்கு வேலை செய்ய எல்லாரும் லைன்ல நிக்கிறாங்க. ஆனா நான் எதுக்காக அப்படி பேரர் வேலை செய்தன்னு தெரியுமா?, உன்னால என்னோட ஒரு பெரிய கனவு வேஸ்ட்டா போயிடுச்சு. எங்க அப்பாக் கிட்ட செஞ்ச சேலஞ்சில மோசமா தோத்துப் போயிட்டேன் நான். அதோட அந்த மீடியாக்காரங்க…. சே…. ” என பல்லைக் கடித்தவன், திரும்பி மேசையில் ஓங்கிக் குத்தி விட்டு,
சொர்ணாவை நோக்கி கை நீட்டி,
“உன்னால தான்…. உன்னால மட்டும் தான் இத்தனையும் எனக்கு நடந்துச்சு. நீ என்னடான்னா சிம்பிளா சாரி சொல்லிட்டு கிளம்புறாய்?” என உறுமிய படி கேட்க,
அப்படியே கதவோடு சாய்ந்து நின்று கொண்டவளுக்கு அவனின் தோற்றம் பெரும் பயத்தைக் கிளப்பியது.
“தெரியாம தான்….” என ஆரம்பிக்க,
“ஸ்ஸ்ஸ்…. நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. இங்க நான் மட்டும் தான் பேசுவன். நான் சொல்றது மட்டும் தான் நடக்கணும்.”
என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூற,
அதனைக் கண்டு மொத்தமாக பயந்து ஒடுங்கிப் போய் நின்றாள் பெண்ணவள்.
வேறு ஒரு ஆண் மகனாக இருந்தால் அவள் நிலையைக் கண்டு கொஞ்சம் இரங்கி இருப்பான்.
ஆனால் இங்கு இருப்பவன் ஆரண்யன் ஆயிற்றே.
அவனுக்கும் இரக்கத்திற்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே.
இரக்கமா…. அப்படி என்றால்
என்ன? என கேட்பவன் தானே அவன்.
“உன்னோட சாரி எவனுக்கு வேணும். சும்மா ஒருத்தன் என்ன முறைச்சுப் பார்த்தாலே பதிலுக்கு வச்சு செய்றவன் நான்.
என்ன நீ அடிச்சு இருக்காய். என்னோட அப்பாவே என்ன இதுவரைக்கும் அடிச்சது இல்ல. நீ யாரு என் மேல கைய வைக்க. வாழ்க்கை முழுக்க நீ நிம்மதி இல்லாம வாழுற மாதிரி பண்ணினா தான் என்னோட மனசுல இருக்குற காயம் ஆறும்.” என அசட்டையாக கூறியவனிடம் எதிர்த்து பேசும் அளவிற்கு தைரியம் சொர்ணாவுக்கு இல்லையே.
அவனின் பண பலம், ஆள் பலம் அனைத்தும் அறிந்தவளுக்கு அவனிடம் இறங்கிப் போவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
அவனை எதிர்த்து அவளால் என்ன செய்து விட முடியும்?
ஆகவே, “சார் கொஞ்சம் என் பக்கம் இருந்தும் யோசிச்சுப் பாருங்க. அவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் எனக்கு வேணாம். நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க அத செய்றன். வேணும்னா நீங்க இங்க வச்சு என்ன திருப்பி கூட அடிங்க. இல்லன்னா அன்னைக்கு மாதிரி அந்த ஹோட்டல்ல வைச்சு திருப்பி அடிச்சுடுங்க.” என கூறியவளை,
இளக்காரமாக பார்த்தவன், “நீ என்ன அடிச்சதும், நான் உன்னை அடிக்கிறதும் ஒன்னா…. உன்ன இந்த ஊர்ல எவனுக்காச்சும் தெரியுமா?, ஆனா நான் அப்படியா?, என்ன இந்த ஊர்ல தெரியாதவன் எவனாச்சும் இருக்கிறானா?, இந்த லட்சணத்தில நீயும் நானும் ஒன்னா?” என கேலியாக மீண்டும் கேட்டவன்,
ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவளைக் குத்திக் குதறி எடுத்தான்.
அவனின் பேச்சுக்களே அவளின் அழுகையை மேலும் அதிகரிக்க போதுமானதாக இருந்தது.
பொறுத்துப் பொறுத்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் இயலாது போகவே,
“இப்போ நான் என்னதான் செய்யணும்னு சொல்றீங்க?” என அழுதபடி ஆற்றா மையுடன் கேட்டு விட்டாள் அவள்.
“ஹே…நீ ஒண்ணும் செய்ய வேணாம். இனி மேல் என் அதிரடித் தாக்குதலுக்கு தயாரா இரு. எந்த நேரமும் என்கிட்ட இருந்து உனக்கு அடி விழலாம். அத சொல்லத் தான் உன்ன சந்திக்கணும்னு சொன்னன். நான் ஒருத்தர அடிச்சாலும், அழிச்சாலும் சொல்லிட்டுத் தான் செய்வன். மீட்டிங் முடிஞ்சுது. நீ போகலாம்.” என கூறியவன், விரல்களால் போகுமாறு சைகை செய்ய,
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, அவசரமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிச் சென்றாள் சொர்ணா.
சொர்ணா எடுக்கப் போகும் முடிவு என்ன?
இனி ஆரண்யன் ஆடப் போகும் ஆட்டம் எப்படி இருக்கும்?
அவன் அவளை ஆட்டுவிப்பானா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும் மக்காஸ்….