யட்சனின் போக யட்சினி – 13

5
(4)

போகம் – 13

 

காந்தனானவன் தன் வெண்பனி வீச்சால் உலகில் உள்ள மங்கையர்கள் அனைவரின் மனதினை கொள்ளையடித்த வண்ணம் இருக்க…

நம் தலைவியும் வேறொரு காந்தனுக்கு மனதை தந்துட்டுவிட்டு காத்துக் கொண்டு இருந்தாளாம்…!

 

ரகசியா வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு முற்பகல் வேலை போல் பாட்டியுடன் கதையளந்து கொண்டிருந்த நேரம் ருத்ரன் வரும் சத்தம் கேட்டது.

 

தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கீழேயே அவளுக்கென திருமணத்திற்கு முன் தந்த அந்த ஒரு அறையில் சென்று ஒளிந்து கொண்டவள்…

 

ஜன்னலின் வழியாக ருத்ரனின் வதனம் கண்டு இவளின் வதனம் எங்கும் புன்னகைபூ பூத்து குலுங்கியது காதலின் வித்தையினால்…!

 

அவன் தன்னைத் தேடியதையும்… எங்கே என்பதை கேட்டவன்…

வேலையாக உள்ளாள் என்பதை தெரிந்ததும் சோர்ந்து போன அவன் முகம் கண்டவளின் செவ்விதழ்களோ, “அச்சோ அமுலுஉஉ பையா…!”, என்று தன்னிச்சையாக முடங்கியது.

(ஆமாம்மா பால்பவுடர் வாங்கி குடும்மா சமத்தா சாப்டுவாப்ல…)

 

ருத்ரன் இந்த அறை நோக்கி வருவதை கண்டுவிட்டு, 

“ஹோ நோ…நெவர்ர்ர்….”,என்றவாறு ஓடிச் சென்று தன் மேக்புக்கை மடியில் வைத்து கொண்டு வேலை பார்ப்பது போல சமத்தாக அமர்ந்துக் கொண்டாள்.

 

ருத்ரன் அறைப் பக்கம் வந்து தன் மணாளியின் முகத்தை கண்டு விழி நிரப்பிக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து அவள் பார்த்துவிடுவாளோ என உண்ண சென்றுவிட்டான்.

 

மோனா வந்து,”அண்ணி…அண்ணி…”, என்று கத்துவது கூட கேட்காமல் அவன் வந்து நின்று சென்ற அந்த ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.

 

“மேஏஏஏஏம்ம்ம்ம்…” , என்று மோனா அவளின் கையை தொடவும்தான் விழித்தாள் தன் கனவு லோகத்திலிருந்து ரகசியா…!

 

“ஹா…ன் ஹான் எஸ் வாட் ஹேப்பன்ட்…?

என்னாச்சுஉஉஉ மோனா…?!

வை மேம்…?!இங்க நார்மலாதான இருக்க சொல்லிருக்கேன் ம்ம்…?!” , 

என்று ஸ்டிர்க்ட் ஆஃபிஸராக கேட்க…

 

மோனாவோ, “இல்லை அண்ணி அப்படிதான் கூப்பிட்டேன்…

நீங்க பார்க்கலையா…

வர்க் டைம்னால மேம் கூப்பிட்டாதான் பார்பீங்ளோனு நினைச்சுஉஉஉ… ஹிஹி…”,என்று இளித்து வைத்தாள்.

 

ரகசியாவிற்கு ‘அச்சோ என்னடா இப்படி செய்து வச்சோமே… பார்த்திருப்பாளோ…’ என்று வெட்கம் ஆகிவிட மாணசிகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

 

ஆனாலும் ‘ம்ம்…ம்ம்…சமாளி..சமாளி…

அவனைப் பார்த்தது தெரியாம பேசி வைக்கனும்… கெத்தவிடாத…பேப்…கெத்தவிடாத…’,என்று தனக்குள் கூறிக் கொண்டவள்…

 

பின் மோனாவிடம் தனக்கெனவே இருக்கும் மிடுக்குடன்,

“அய்யோடா… 

அதுலாம் ஒன்னும் வேண்டாம்…

இது வீடுதான் ஆஃபிஸ் இல்ல… 

சொல்லு மோனா வாட் இஸ் த மேட்டர்…?”, என்று கேட்க…

 

மோனா முகத்தில் பற்கள் தெரிய சிரிப்புடன்,

“நம்ம கம்பெணி பத்தி வந்த நியூஸ் எல்லாம் பொய்னு வந்திட்டு மேம்…

கேஸ் வாப்பஸ் பண்ணியிருக்காங்க…!

 

அதுவும் இல்லாம…

நம்ம கூட சீக்கிரமே கான்ஃப்ரென்ஸ்கு ரெடி பண்ணுறோம்னு சொல்லி

தட் ஹாலிவுட் ப்ரடகக்ஷன் ஹவுஸ் மெயில் அனுப்பியிருக்காங்க…!

 

அன்ட் இதை எல்லாம் விட பெரிய ஹேப்பியான நியூஸ் அண்ணி…

நாம அப்ளை செய்யாமலே அவங்களா ஃப்ரான்ஸ்ல நடக்க போற நெக்ஸ்ட் இயர் ஃபேஷன் ஃபன்க்ஷன்கு நீங்கதான் டிஸைனிங் ஜட்ஜ் அன்ட் மென்டார்…!

கன்கிராட்ஸ் அண்ணி…”,என்று கூறி அவள் கையை நீட்டினாள் கொள்ளை மகிழ்ச்சி முகத்தில்.

 

ரகசியாவோ எல்லாம் சரி என நினைத்து கடைசியாக சொன்னதை நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் பரவசமாக,

“ரியலிஇஇஇஇ…ஆர் யூ ஷ்யூர் மோனா…?! 

ரியலிஇஇஇஇ….?!!!”, என்று குஷியில் கத்தினாள்.

 

மோனா ஆம் என்பதாக சிரிப்புடன் தலையை வேக வேகமாக அசைக்க…!

 

“வாவ்… மோனாஆஆஆஆ…

இட்ஸ் எ க்ரேட் நியூஸ்… ஹேப்பியா இருக்கு…

ஐ ஆம் ஸோ ஸோ ஹாப்பிஇஇஇ…”, என்று அவளை ஒரு சுற்று சுற்றி அணைத்துக் கொண்டாள் ரகசியா.

 

ஏனோ ரகசியாவிற்கு கடைசியாக சொன்ன விஷயத்தை உடனே ருத்ரனிடம் சொல்லி சந்தோஷத்தைப் பரிமாற தோன்றியதுதான் விந்தை…!

எல்லாம் காதல் செய்யும் மாயை…!

 

ருத்ரன் சொன்னதை செய்துவிட்டான் என்ற நல்லெண்ணமும் ரகசியாவின் மனதில் வந்து ஒட்டிக் கொள்ள…

ஆம் அவன் நினைத்தால் காதலன்றி தாம்பத்தியத்தையும் டீலிங் பேசி முடித்திருக்கலாம்… அப்படியும் மனிதர்கள் உண்டே….

எங்கே அப்படி செய்துவிடுவானோ என்ற எண்ணம் அவளை கேட்டு பயமுறுத்தி கொண்டிருந்தது.

 

அந்த பயம் தன் கற்பையோ காதலையோ குடுக்க கட்டாயம் வருமே என்பதனால் அல்ல…

ருத்ரனை அதனால் தான் பெரிதும் வெறுத்து விடுவோமே என்ற பயம் ரகசியாவிற்கு. 

 

அவன் கெட்டவனாக தனக்கு தெரிய வேண்டாமே என்ற எண்ணம் அவளுக்கு…!

 

அவள் மனம் நல்லவேளையாக ருத்ரன் அப்படி ஏதும் டீலிங் கேட்டு விடவில்லை என்று நிம்மதியில் அவனை மெச்சிக் கொள்ள…!

அதுவாக அவளின் இதழ்கள் தன்னவன் பெயரை,”ருத்துஉஉஉ…”, என உச்சரித்தது…!

 

ருத்ரன் அவ்வப்போது எப்டிப் பார்ப்பது தெரிந்து தனக்குள் பட்டாம்பூச்சி பறக்க புன்னகையுடன் வேலையை பார்த்தவள்…

அவன் வெளியே சென்றதும்தான் இவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். புதிய தோழியாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டதே அதன் காரணம்…!

 

பின் பாட்டியிடம் பேசிக்கொண்டு புதுப் மனபெண்ணல்லவா இந்த சிலையழகி…

திருமணத்திற்கு வரமுடியாத உறவுகள் வந்து அவளை காண செல்ல எல்லரிடமுமே புன்னகையே பதிலாக தந்தவள், 

தன்னவன் முகம் காண காத்திருந்தாள்.

 

பின் தாத்தாவின் மொபைல் அலறவும் ஆர்வமாக பார்க்க…

அவனோ தாத்தாவிற்கு அழைத்துக் கூறியதை கேட்டதும் சிறிது ஏமாற்றம்தான் காதல் பூக்க தொடங்கிய புதுமனையாளுக்கு…! 

 

‘ப்ளாக்காண்டா….ஹர்னால்டு… 

வில்லேஜ் வினிகர்… வரட்டும் இருக்கு…’, என்று நினைத்துவிட்டு அவர்களுடன் சந்தோஷமாகவே உண்டாள்.

 

பின் அவர்கள் அறைக்குச் சென்று…

ஒரு குளியலைப் போட்டுவிட்டு டீஷர்ட் லாங் ஸ்கர்ட் எடுத்து அணிந்துக் கொண்டு நிலவனைப் பார்த்து தன் தலைவனை பற்றி முறையிட்டபடி நின்றுக் கொண்டிருந்தாள் தலைவி.

 

பெண்ணின் மனது அரியவகை பொக்கிஷமானது…!

அந்த பொக்கிஷத்தை திறக்கும் மந்திரமான அக்காரிகையின் காதல் என்பது …

தாயுமானவனாக தந்தையுமானவனாக எவன் ஒருவன் அப்பெண்ணை உணர வைக்கிறானோ அந்த மன்னவன் கையில் அடுத்த நொடி…!

காதல் பூக்க பல யுகமேதும் தேவை அல்லவே அது ஒரு நொடி மின்னல்…!

 

வெட்கம் கொண்ட மாது…

தன் காதலை வாய் திறவாமல் சாதுவாக உணரவும் 

நூலிழையில் உணர்த்தவும் தொடங்கிவிட்டாள்…!

மனாளன் இவளை கொள்ளையிட அவனாக உணர வேண்டுமாம் இவளுக்கு…!

ஆனாலும் அவனை சீண்டி சண்டையிட வேண்டுமாம் இந்த மாயவளுக்கு…!

(ஆமா நம்ம ஆளு செம கற்பூரம் பாரு பேப்…)

 

ஆக இரண்டு பேரும் அவனாக அவளாகன்னு இருந்த நாங்க என்ன செய்றதாம்…!?

ஹோ மை காட்ஜ்…!

 

**********************************

 

ருத்ரன் தள்ளாடிய படியே பாட்டு பாடிய வண்ணம் தன்னறையை நோக்கி மாடிபடி மேலே ஏறி வந்தவன்,

“முத்துழு….மயிலுஉஉஉ…மாமன்ட பேசுழுடிஇஇஇ…

என்னைய கொஞ்சுழுடிஇஇ…!”, என்ற தனக்குத் தானே புலம்பிக் கொண்டு வந்தவன்…

 

கதவை ஆடிக் கொண்டே திறக்க…

கொஞ்சம் தள்ளாடி விழ போனவன் அப்படியே கரகாட்டம் ஆடியபடி எப்படியோ ஒருவாறு சமாளித்து நின்று கொண்டான்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டு மங்கையவள் ஆசையாக ஆவலுடன் திரும்ப…

அவன் விழப்போவதை பார்த்து ஓடிச் சென்று அவன் கையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். 

 

ஏதோ உடல் உபாதையோ என்று நினைத்துக் கொண்டாள் அப்பாவியாய்…!

 

“ஹய்ய்…என்ற முத்தேஏஏஏ…

முத்துழு..மயிலுஉஉஉ…

வந்துழு..ட்டியாஆஆ…மாமன்ட….,”,என்றவாறு ருத்ரன் புன்னகையுடன் அவளை அணைக்கப் போனான்.

 

ருத்ரன் அருகில் இவள் வந்தவுடனேயே அவனின் வாசத்தை உணர்ந்தவளுக்கு வித்யாசம் கொஞ்சமே கொஞ்சம் வர…

பின் அவள் கையைத் தானே பிடித்தாள் அணைக்கவா செய்தாள் வித்யாசம் இவள் நன்றாக உணர…!

 

அந்த டவு(ப்)ட் ருத்ரனின் குழறிய பேச்சில் படு உறுதியாகவிட..

கோபம் தலை முதல் கால் வரை வந்துவிட்டது அவன் மனைவிக்கு. 

 

அவனை பிடித்திருந்த கையை உதறிவிட்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு புஸு புஸுவென மூச்சைவிட்டு தன் பவளபூக்கள் ஏறி இறங்க ருத்ரனை முறைத்தாள் காளியாக.

 

அப்போதுதான் அவனை மேலிருந்து கீழ் வரை கவனித்தாள்.

அவன் குத்தாட்டம் ஆடிக் கொண்டு வந்ததில் மடித்துவிட்ட சட்டையின் ஒரு பக்கக் கை சட்டை முழு கையாக மாறியிருக்க…

தலையெல்லாம் கலைந்து…

சிவப்பேறிய விழிகளுடன்…

திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் முழியைப் போல பேந்த பேந்த முழியும்…

அந்த முழிக்கு சிறிதும் சம்மந்தமே இல்லாத புன்னகையாக நின்றிருத்த தன் கணவனை…!

 

மூக்குநுனி முதல் கன்னக்கதுப்பு சிவக்க அவனை முறைத்துக் கொண்டே,”குடிச்சிருக்கியா… நாட்டுக்காட்டான்…?!”, என்று அழுத்தமாக கேட்டாள்.

 

அவனோ தலையை சொரிந்துக் கொண்டே,

“ஹிஹி…ஆமாஆஆ முத்தேஏ…ஒரு பெரிழ புட்டிழிஇஇஇ ஃபுல்லா குடி…ழ்…சேன்… 

இன்னும் இருந்தா நல்ழா இருக்கும்…ப்ச்…இல்லைழேஏஏ…”, என்று உதட்டைப் பிதுக்கி கையை இல்லை என்பதாக விரித்தான்.

(அய்யோ பாவம் புள்ள கிகிகி…)

 

முட்டை முழி வெளியே வந்து விழுமளவுக்கு விரிந்தது ரகசியாக்கு.

 

தன்னவள் கோபம் கொள்கிறாள் என்று எப்படியோ உணர்ந்தவன் அறிவுக் களஞ்சியமாக, “கோவிச்சுக்காதழ…முத்தேஏ…

மாமன் உனக்கும் அடுத்தமுழ வாங்கிழிட்டு வரேன்டிஇஇ…

மாமன்…மோர்ழு குடிக்குழும்போது…சரியாஆ…!”, என்றவாறு அவள் கன்னத்தை கிள்ளி கொஞ்ச ஆசையோடு கையை கொண்டு அவளிடம் நீட்டினான்.

 

வேகமாக அவன் கையை தள்ளிவிட்டவள், 

“ஹே… டோன் டச் மீ மிஸ்டர்.ருத்ரன்…

குடிகாரா…குடிகாரா…!

 

பொய் சொல்லாத மேன் மோர் குடிச்சேனுஉஉ…

இடியட் ஸ்டுப்பிட்…

பொய் சொன்னாக்க எனக்கு கோபம் ஹைப்பரா வரும் சொல்லிட்டேன்…!”என்று கூறி விழியை உருட்டோ உருட்டென உருட்டினாள்.

 

பயந்து போன சிறு பிள்ளை ருத்ரனோ,

“ம்ஹூக்கும்…ம்ஹுக்கும்…

பொய் சொல்ழலடிஇஇ நானுஉஉ…

தாத்தோவ்வ்வ் பாருழு இவ என்னைய திட்டுழ்றாஆஆ…!”,என்றுவாறு சினுங்கி கொண்டு கதவை திறக்க சென்றான்.

(அட தெய்வத்த…)

 

ரகசியாவோ,”ஹேய்…ஹேய்…மேன்…என்ன செய்யப் போற..?!”,என்று கத்திக் கொண்டு நடந்தவள்… 

எங்கே அவர்கள் தூக்கம் இவனால்  கெட்டுவிடக் கூடுமோ என்று எண்ணியவளாக அவன் முன்னால் சென்று கதவை மறைத்து நின்றுக் கொண்டாள்.

 

“அப்படியே கதவுக்கு மேலே இருக்க வெப்பன்ஸ் எடுத்து உன் மண்டைய உடைக்க போறேன் மேன்…!

போதைக்காரா… ஏன்டா இப்படி செய்ற…?!

இட்ஸ் ஆல் ஃபேட்… 

தலை எழுத்து…

சரி நம்பித் தொலைறேன்… 

உள்ள போ மேன்…!

பப்பி ஷேமாகிப் போகும் போல… ஹோ காட்…!”,என்று முறைத்தபடி கூறியவள் தலையில் கையே வைத்துவிட்டாள்.

(போடு பேப் நல்லா சாத்து நாலு…கிகிகி…)

 

அதற்கும் மண்டையை ஆட்டிக் கொண்டவன், 

“ஹும்…ஹும்…

பாருழு பொண்டாட்டிஇஇஉஉ நீ திட்டுழற…

 

பாருழு அந்த கண்ணை… 

என்னைய பார்த்துழு எப்படிஇ முறைக்கிழ…

நீனுஉஉ போ போயிழிட்டுஉஉ என்ற முத்துமயில வர சொல்லுஉஉ…

நீ போ வேணாம்…ஹூம்…”, என்றவாறு கட்டிலில் சென்று இவளைப் பார்த்து கழுத்தை திருப்பியபடி ருத்ரன் அமர்ந்துவிட்டான்.

 

பெண்ணவளுக்கு முத்துமயிலென்பது வேறு யாரோ போல என்று நினைத்து இவளை போ என்று சொன்னதும் சேர்ந்து போய் மனதை தைக்க…

பூமுகம் சோர்ந்துவிட்டது…!

 

ஏற்கனவே இவன் குடித்திருக்கிறான் என்று தெரிந்து வருந்தியிருக்க…

கோபம்கூட தன்னவனிடத்தில் தானே என்று உரிமையாக கோபம் கொண்டாள்.

 

‘இப்போது ஏதேதோ வேறு உளறுகிறானே…! 

ஒருவேளை முன்னாள் காதலியாக இருக்குமோ…?! 

அந்த நியாபகத்தில்தான் என்னையும் கூட சம்டைம்ஸ் முத்…னு ஆரம்பிப்பானே…

எஸ் சில நேரம் முத்துனுகூட சொல்லிருக்கான்…!’, என்று எண்ணத்தில் வந்த அந்த நினைப்பே இதயமெங்கும் வலித்தது புதிதாத முளைவிட்டிருந்த ஆசைக் காதல் மனதில்…!

 

‘இருந்தும் இவனைப் பற்றி பிறர் பேசியவரை வைத்துப் பார்த்தால்…

 இந்த பழக்கம் இவனுக்கு இல்லை என்பது போல்தானே இருந்தது.

ஒரு வேளை தன்னால்தான் குடித்துள்ளானோ…

இல்லை அப்பெண்ணை மறக்க இயலாமலோ…?!’,என சிறு பெண்ணின் மனம் பலதை சம்மந்தம் இல்லாமல் நினைத்து பிணைத்து கொண்டது.

 

மனம் வலித்தாலும் நீண்ட மூச்சொன்றை இழுததுவிட்டுக் கொண்டவள்…

இவனை தூங்க வைக்க வேண்டுமே குழந்தையாக உள்ளான் பாவம் என நினைத்தாள் ரகசியா…!

 

ருத்ரன் அருகில் சென்றவள்,”ஓகே…ஓகே…ஃபைன்… 

திட்டமாட்டேன் ஷ்யூர்…

 

ஹிஹிஹி…பாரு சிரிக்கிறேன்ல…

நீங்க கூட்ஜு பாய் ச்சமத்து தானே… 

அதுனால என்ன செய்வீங்களாம்…!

சமத்தா போகிட்டு ஷவர்ல நின்னுட்டு வருவீங்களாம்… சரிங்களா…!

எந்திரிங்க…போங்க பார்ப்போம்…!”, என்று கோபத்தை மறைத்து அவனை குளிக்க அனுப்பினாள்.

 

“அப்போஓஓ…திட்டழ மாட்டதானே…பாப்புஉஉஉ…?!”, என்று பற்கள் தெறிய கள்ளம்கபடமில்லாது புன்னகைத்த வண்ணம் ருத்ரன் கேட்டான்.

 

ஒரு நிமிடம் இமைக்க மறந்து இந்திரனின் அச்சிரிப்பை ரசித்தாள் இந்த இரம்பை என்பதே உண்மை.

 

பின் அவனிடம், “ஹாஹா… நோ…மாட்டேன்…!”, என்று கூறியவளின் முகத்திலும் புன்னகைப்பூ தொற்றிக் கொண்டது.

 

“ஹிஹி…அப்போ…சரிழி… 

துண்டுழு… கொடுழு… பாப்புஉஉஉ…”, என்றுவிட்டு தள்ளாடிபடி கட்டிலை வி்ட்டு எழுந்தான்.

 

ரகசியாவும் அவன் அலமாரியை திறக்க,

அங்கே வேஷ்டிகள் சட்டைகள் மட்டுமே இருந்ததை கண்டவள்

ஒரு வேஷ்டியை எடுத்துக் கொண்டு…

பேருக்கென இரண்டு டீஷர்ட் வைத்திருக்க…

அதில் வான்நீல நிறத்தில் இருந்ததை எடுத்துக் கொண்டு டவலுடன் அவனிடம் நீட்டினாள்.

 

ருத்ரனோ வாங்கியவன் ,

“ஹய்யோ…பாப்புஉ… 

துண்டுழு மட்டும்தேன் பாத்ழூம் உள்ள அங்கே…

இது ரெண்டுழும் இங்கே…”, என்ற வேஷ்டியையும் டீஷர்டையும் அந்த உடைமாற்று மறைப்புப் பலகை மேல் போட்டுவிட்டு நின்றவனை இழுத்துக் கொண்டு டவலுடன் பாத்ரூமில் தள்ளிவிட்டு கதவை சாற்றினாள்.

(இவன்ற ரவுசு தாங்கல பேபிஸ்…ஹோ மை காட்ஜ்…)

 

‘ஹப்பா… நல்லவேளை குளிச்சு விடுனு கூப்பிடலை… எஸ்கேப்ட்…’ என்று மனதில் நினைத்தவளுக்கு முகத்தில் கள்ளச்சிரிப்பு.

 

ரகசியா அவன் வந்து உடைமாற்றும் வரையில் பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.

பின்னே என்ன அந்த தேக்கு பலகையில் ஆயிரத்து பதினெட்டு லட்ச குட்டிக்குட்டி ஓட்டைகள் டிஸைன் என்கிற பேரில் இருக்கிறதே…!

 

இரவை ரசித்த ரகசியாவின் மனதில் புதிதாய் தோன்றிய தன்னவனுக்கான உடைமை(பொஸஸிவ்) வந்து குடியேறியிருந்தது.

 

“ஷட்….

ஏன்தான் எனக்கு இவனை கொஞ்சமே கொஞ்சம் பிடிச்சு தொலையுதோ…

என்னாலதான் அப்போ இந்த ருத்துஉஉ குடிச்சிருக்கான் போல…

ஹோ காட்…! 

ஹு இஸ் தட் முத்துமயில்…?!

ஊஃப்…கூல் பேப் கூல்…உஃப்…!”,என்று மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அலைபாயும் தன் மனதை சமாதானம் செய்ய முயன்றாள்.

 

பின் ஏதோ நியாபகம் வர,

“இந்த விஜி பாய் கூடவேதான இருக்காரு…

எப்படி குடிக்க விட்டாருஉஉஉ…?! 

நாளைக்கு இருக்கு அவருக்கும் சேர்த்து …”, என்று மாணசிகமாக தன் அண்ணனாகவே எண்ணும் விஜயனை வறுத்தெடுத்தாள்.

 

ருத்ரன் அவள் சொன்னதற்காக பேருக்கென தண்ணீரில் நின்றவன் போல நிற்க சென்றான்…

நின்றவனுக்கு அதற்குள் உடலெல்லாம் ஏனோ தீப்பற்றியது போல கொதிக்க இந்த இதம் போதவில்லை எனத் தோன்றியது…

வேறு எதையோ தேடியது அவன் உள்ளமும் உடலும்…!

 

வேகமாக வெளியே தன் இத்யாதிகளையும் வேஷ்டியை மட்டும் கடினப்பட்டு தள்ளாடி மாட்டிக் கொண்டு,சட்டை ஏதுமில்லாமல் ரகசியாவின் பின்னாடி வந்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட நின்றான்.

 

குழந்தை ஸ்டேஜிலிருந்து ஆருயிர்காதல் கணவன் ஸ்டேஜிற்கு பருவப் படிநிலையில் ப்ரமோட் ஆகி நின்றிருந்தான் தலைவன்…!

 

ஏற்கனவே தன்னவளின் சேட்டைகளால் கனவிலேயே காதல் கொண்ட மனது உள்ளத்தாலும் உடலாலும் கொதிக்கும்… 

இதில் நேற்று தன்னவளை முத்தமிட்டது தொடங்கி அவளாக அணைத்தது வரை தூண்டப்பட்டு காட்டுதீயாய்  பற்றிக் கொண்டு எரிந்தது…!

 

இன்னும் அதன்கூடவே அவள் புதிதாக காட்ட தொடங்கியிருக்கும் அன்பு வேறு அதற்கு நெய் மழையாய் பொழிந்து மேலும் கொழுந்துவிட செய்திருந்தது.

 

செம்மை விழிகளில் வஸ்து போதையை விட காதல் போதை பன்மடங்காகி இருக்க…

அவளின் பின்வடிவம் பேரழகு சிலையாய் அவன் விழிகளுக்கு தெரிய…

மயிலிறகாய் கூந்தல் காற்றில் ஆடி அசைய பார்த்தவன் குரலில் காதல் போதை ததும்ப பித்து பிடித்து, “பொண்டாட்டிழிஇஇஇ…”,என்று கரகரத்த குரலில் அழைத்தான்.

 

ரகசியா எங்கே அதை எல்லாம் கண்டுபிடிக்கும் மனநிலையில் இருந்தாள்…

தன்னால்தான் என்ற குற்ற உணர்வும்,காதல் தோல்வி போல என்ற எண்ணமும்…

அதனால் புதிதாய் முளைத்த உணர்வுடன் தவித்தவாறு இருக்கிறாளே…?!

 

“ஆஹ்ன்…ருத்துஉஉ…

நோ நோ…

மிஸ்டர்.ருத்ரன்…வந்தாச்சா…?! 

குட் பாய்ய்ய்ய்ய்ய்யூஊஊஊஊஊஊ நோஓஓஓஓ…”, என்ற வண்ணம் திரும்பியவளுக்க தலையில் ஈரம் சொட்ட மீண்டும் எட்டுபடிக்கட்டு கடோத்கஜ தரிசனம்.

 

புதிதாய் முளைத்த அவன் வந்த அன்பினால் வெட்கம் வேறு வந்து அவளை தொற்றிக் கொள்ள…

 விழியை மூடித் திரும்பி கொண்டாள் காதல் கனவுக் காரிகை…!

 

அந்த 

செவ்வானம் 

கூட

செவ்வந்திப்

பூவான உன்

கன்னத்தின் 

வண்ணத்திடம்தான் 

கடன் வாங்கி

தன்னுடன்

வைத்துள்ளதோ…?!

ஆகாயத்திற்கு 

அன்பை காட்டி 

வண்ணக்கடன் 

கொடுத்தாயே 

அந்த உள்ளத்தில்

பாதியை 

இந்த கள்வனுக்கு

பிழைத்து போகவென 

தருவாயோடி 

என் யட்சினியே…?!

 

(மோருனு நினைச்சு கள்ளை போட்டு வந்து ரவுஸா பன்னுற மேன்…?!

இது மாதிரிதான் யாரும் மோருனு கள்ளை போட்டுட்டு சமாளிக்க நினையாதீர் ஆண்சிங்க சங்கங்களே…

கள்ளை போட்டால் அம்மி கல்லால் மசாஜ் செய்யப்பட்டு மோர்கூட கிடைக்காமல் செய்துவிடுவர் ஹிஹிஹி…

என்னா பேபிஸ் ரைட்டுதானே கிகிகி…?!)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “யட்சனின் போக யட்சினி – 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!