மலர்னிகாவையும் நிஷாவையும் அழைத்துக் கொண்டு தனது பிறந்த வீட்டை விட்டு, நெஞ்சு முழுதும் பெரும் கவலையோடு வெளியே சென்றவர்களை நிறுத்தினார் விசாகம் பாட்டி. இவர்கள் திரும்பி அழைத்தார். “துர்க்கா உன் பொண்ணோட கழுத்தில இருக்கிறது என்னோட பேரன் கட்டின தாலி. அதை கழட்டி வைச்சிட்டு அவளை கூட்டிட்டு போ. நாங்க காளையனுக்கு நல்ல எப்படி நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறம்.” என்றார்.
இதைக் கேட்ட துர்க்கா பதற்றத்துடன் மலர்னிகாவைப் பார்த்தார். அவளோ நடப்பதை பார்த்தாலும், என்ன நடக்கிறது என்று உணர்ந்தாலும் அதற்கு பதில் குடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் நின்றிருந்தாள். அப்போது மேலே இருந்து பையுடன் வந்தான் காளையன்.
இதைப் பார்த்த ராமச்சந்திரன், “என்ன காளையா இது பை? ஓஓ.. இவங்க மறந்து விட்டுட்டாங்களா?” என்றார். அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தடுமாறியபடி நின்ற மலர்னிகா அருகில் சென்று, நிஷாவை விலக்கி விட்டு மலர்னிகாவின் தோளைப் பிடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளும் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். இதைப் பார்த்த துர்க்கா, நிஷா, கதிர், காமாட்சிக்கு நிம்மதியாக இருக்க, ஏனையவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.
பெருந்தேவனார், “காளையா நீ என்ன பண்ற? பாட்டி சொன்னது காதில விழலை? இவளோட போனா உனக்கு என்ன மரியாதை? மரியாதையாக இந்தப் பக்கம் வந்திடு” என்றார். அவரையும் மற்றவர்களையும் பார்த்தவன் பேச ஆரம்பித்தான்.
“நீங்க இப்படி பண்ணுவீங்கனு தெரியும். அதனால்தான் நான் யாருக்கும் சொல்லாமல் மலர் கழுத்தில தாலி கட்டினேன். ஏன் பாட்டி ஒரு பொண்ணை பற்றி தப்பாக யாரும் சொன்னா, உடனே அவ தப்பானவ இல்லை. பொண்ணுங்க கழுத்தில இருக்கிற தாலியை எப்போ கழட்டுவாங்க? அவங்க புருஷன் செத்ததுக்கு அப்புறமா அப்படித்தானே. மலரோட புருஷன் நான் இங்க உங்க எல்லோருக்கும் முன்னாடி உயிரோட தானே நின்னுட்டு இருக்கிறன்.
அப்படி இருக்கும் போது, என்னோட பொண்டாட்டி கழுத்தில இருக்கிற தாலியை எதுக்காக கழட்ட சொன்னீங்க? உங்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி உறுத்தலயா? அத்தையை காணோம்னுதானே இத்தனை நாளாக நீங்க எல்லோரும் கவலைப்பட்டுட்டு இருந்தீங்க? ஆனால் இப்போ மலர் செய்யாத தப்புக்காக அவங்களை வீட்டை விட்டு போக சொல்றீங்க.
ரொம்ப சந்தோசம். என்னோட பொண்டாட்டியை வேணாம்னு சொன்ன யாரும் இனிமேல் எனக்கும் வேணாம். இதற்கு காரணம் யாருனு எனக்கு தெரியும். இத்தனை நாள் பாசமான காளையனைத்தானே பார்த்திருப்பீங்க.. இனிமேல் இந்த காளையனோட மறுமுகத்தை பார்ப்பீங்க. நான் அவங்ககூடவே போயிடுறன். அத்தை வாங்க போகலாம்.” என்றவனை தடுத்தது காமாட்சியின் குரல்.
அவனருகில் வந்து கையை பிடித்தவள்,” அண்ணா, என்னை விட்டுட்டு போறியா? நானும் உன்கூடவே வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு காளையன்,” நீ காலேஜ்ஜை முடி குட்டிமா. அப்புறம் அண்ணா வந்து கூட்டிட்டு போறன். இங்கேயோ இல்லை, காலேஜ்லயோ உனக்கு எதாவது பிரச்சனைனா சொல்லு, அங்க இந்த அண்ணா வந்து நிற்பேன். வர்றன் டா” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, கண்ணீரை துடைத்து விட்டு சென்றான். அவன் பின்னால் துர்க்காவும் நிஷாவும் செல்ல, இவர்களுடன் கதிரும் வந்தான்.
ஐவரும் பஸ்க்காக காத்திருந்தனர். அப்போது கதிரை பார்த்த காளையன்,” சரி கதிர் நீ இங்க இரு. நாங்க போயிட்டு உனக்கு கால் பண்றம்.” என்றான். இதைக் கேட்ட கதிர், “என்ன அண்ணே, என்னை போக சொல்ற? எனக்கு இங்க யாரு இருக்கிறா? உன்கூடவே தானே இருப்பேன். இப்போ என்னை மட்டும் தனியாக விட்டுட்டு போறன்னு சொல்ற? நான் உங்களை விட்டு போகமாட்டேன். நீங்க எங்க போனாலும் நானும் வருவேன்.” என்றார்.
அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டான் காளையன். கதிரும் அவனை நன்றாக அணைத்துக் கொண்டு கண்கலங்கினான். பின்னர் துர்க்காவிடம்,” அத்தை எங்க போகலாம்னு இருக்கிறீங்க? ” என்று கேட்டான். அதற்கு அவர்,” பிறந்த வீட்டிலே இடமெ இல்லைனு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல போறதுக்கு இடம் இல்லாதவயா இந்த அத்தை.” என்று அழுதார். அப்போது ஊட்டி செல்லும் பேரூந்து அந்த பக்கம் வர எதையும் யோசிக்காமல் எல்லோரையும் அதில் ஏறச் சொன்னான். அவர்களும் காளையன் சொன்ன மாதிரியே அதில் ஏறினர்.
அவர்களுக்கு இருக்கை கிடைத்ததும், கதிர், துர்க்கா, நிஷா ஒரு பக்கமும் காளையனும் மலர்னிகாவும் இரண்டு சீட் இருக்கும் பக்கத்திலும் இருந்தனர். காளையன் நெஞ்சில் சாய்ந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள் மலர்னிகா. களைப்பில் அனைவரும் தூங்கினார்கள். ஆனால் காளையனுக்கு இதற்கு பிறகு, தெரியாத ஊருக்கு சென்று, என்ன செய்வது? எங்கே தங்குவது? ” என்ற யோசனையில் வந்தவனுக்கு ஒருவர் ஞாபகம் வந்தது. உடனே அவருக்கு அழைத்து பேசினான். அவரும் இவர்களை தாராளமாக அங்கு வரச் சொன்னார். பஸ் நிலையத்திற்கு வந்ததும் போன் பண்ணச் சொன்னார். இவனும் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அப்போதுதான் காளையனுக்கு நிம்மதியாக இருந்தது.
இங்கே வீட்டில் யாரும் காளையன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. சபாபதி இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து பேசினான். “பாருங்க, நல்லா பாருங்க நீங்க தலையில தூக்கி வைச்சிக் கொண்டாடின காளையன், எப்படி உங்களை உதறித் தள்ளிட்டு போறான்னு பார்த்தீங்களா? உங்க எல்லாருக்கும் இது வேணும்” என்றான். அவர்களும் அவனின் பேச்சிற்கு ஆமோதித்து பேச, காமாட்சிக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை. அங்கிருந்து தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
காளையன் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் அறிந்த கேசவனும் முகேஷ்ஷூம் ரொம்ப சந்தோசப்பட்டனர். அவர்கள் நினைத்து நடந்து விட்டது
இனிமேல் அவர்கள் பிளான் பண்ணியவாறு ஒவ்வொன்றாக செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டனர்.
ஊட்டியில் இருந்த பெரிய வீட்டில் இரவு நேரத்திலும் அந்த வீடு பரபரப்பாக இருந்தது. விருந்தினர்கள் வந்தால் தங்கும் அறைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய திரைச்சீலை, புதிய பெட்சீட், தலையணை எல்லாம் மாற்றி அறைகளை அழகுபடுத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது வீட்டிற்கு வந்தவன், தனது வீடு இருக்கும் நிலையை பார்த்து குழம்பினான். அவனது தோளைத் தொட்டவர், சொன்னதை கேட்டவன் சந்தோசத்தினால் அவரைத் தூக்கிச் சுற்றினான். அவனால் இதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இருவரும் மிகுந்த சந்தோசத்துடன் இருப்பதைப் பார்த்து, அங்கு வேலை செய்பவர்களும் சந்தோசப்பட்டனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்