திடீரென்று வந்த ஒருவன் காளையனை அண்ணா என்று கட்டிப்பிடிப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளியனும் தன்னை அணைத்துக் கொண்டவனை அணைத்து கண்கள் கலங்கினான். பின்னர் எல்லோரையும் பார்த்து, “இது என்னோட தம்பி ஹர்ஷவர்த்தனன்.” என்று சொல்லி அறிமுகப்படுத்தினான். அவர்களை இங்கே அழைத்து வந்த பெரியவரை காட்டி, “இதுதான் என்னோட அப்பா நீலகண்டன்” என்று சொல்லி அவரையும் அறிமுகப்படுத்தினான்.
இதை கேட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இருக்காதா பின்ன, ஊரில் தேவசந்திரன், நேசமதியே காளையனின் தாய் தந்தை என்று அனைவரும் அறிவார்கள். அப்படி இருக்கும்போது இப்பொழுது இங்கு ஊட்டியில் புதிதாய் ஒரு தந்தையையும் தம்பியையும் காளையன் அறிமுகப்படுத்தும் போது இவர்கள் ஆச்சரியப்படுவதில் தவறில்லையே.
துர்க்கா, “என்ன காளையா சொல்ற? இவர் உன்னோட அப்பா, இவங்க உன்னோட தம்பின்னு சொன்னா, அப்போ ஊர்ல இருக்கிறவங்க யாரு?” என்று கேட்டார். அதற்கு காளையன், “அத்தை உங்களுக்கு நான் சொன்னால் எதுவும் புரியாது. அப்பாவே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லுவாரு” என்று சொன்னான். நீலகண்டனும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு,” நான் சொல்றேன் எல்லாரும் கேளுங்க” என்று சொன்னார்.
“என்னோட மனைவி குமுதாவும் நானும் என்னோட மூத்த பையன் ஒரு வயசாக இருக்கும்போது வேண்டுதல் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்திருந்தோம். அப்போது எங்களது மகனை நாங்கள் தொலைத்து விட்டோம். அவனைத் தேடாத இடமில்லை. கேட்காதவர்கள் இல்லை. எல்லோரிடமும் அவனைத் தேடித் தேடி நாங்கள் உடைந்து போய் விட்டோம். நாள் தோறும் அவனை நினைத்து, எனது மனைவி வருந்தாத நாள் இல்லை. கொஞ்சம் காலம் போனதும், எங்களுக்கு அடுத்த மகன் ஹர்ஷவர்த்தனன் பிறந்தான்.
ஹர்ஷவர்த்தனன் ஒருமுறை சென்னைக்கு வரும்போது அவனுக்கு மிகப்பெரிய ஒரு ஆக்சிடென்ட் நடந்தது. அந்த ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் இருந்த காளையன் தான் அவனை அழைத்து ஹாஸ்பிடலில் சேர்த்தான். அதுமட்டுமில்லம்மா நான் ஊட்டியில் இருந்து அங்க ஹாஸ்பிடல் வர வரைக்கும் அவனே கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டான்.
ஹர்ஷாவுக்கு நிறைய இரத்தம் போயிருந்தது. அதனால் அவனுக்கு இரத்தம் தேவைப்பட்டது. என்னோட இரத்தமும் அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆபரேஷன் உடனடியாக செய்ய வேண்டும் என்ற நிலை வேறு. நான் கலங்கிக் கொண்டு நின்ற வேளையில்தான் காளையன் என்னிடம் வந்து, “நான் முடிந்தால் இவருக்கு இரத்தம் கொடுக்கலாமா?” என்று சொல்லிக் கேட்டான். அதற்கு நானும், “நீ டாக்டர்கிட்ட கேட்டு பாருப்பா” என்று சொன்னேன்.
காளையனின் பின்னாடி டாக்டரை சந்தித்தேன். அவரிடம் தனது இரத்தத்தை கொடுத்து பரிசோதனை செய்தான். காளையனுடைய இரத்தம் ஹர்ஷவர்த்தனுக்கு நன்றாக பொருந்தியது. எனக்கு ஏனோ தெரியவில்லை, காளையனை பார்த்ததிலிருந்து அவன் மீது ஒரு தனிப்பட்ட பாசம் வந்தது. இரத்தம் கொடுத்து விட்டு வந்த காளையன் தனது சட்டையின் கைகளை உயர்த்திக் கொண்டு இரத்தம் கொடுக்க ஊசி குத்தியிருந்த அந்த இடத்தில் பஞ்சை வைத்து தேய்த்தவாறு இருந்தான்.
அப்போது தான் நான் கண்டேன். காளையனின் முழங்கையில் ஒரு பெரிய அரச இலையில் மச்சம் இருந்தது. அதே பெரிய மச்சம் என்னுடைய தொலைந்து போன மகனுக்கும் இருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. ஏன் காளையன் நம் மகனாக இருக்கக் கூடாது என்று எனது உள்ளம் தவித்தது. காளையன் இரத்தம் கொடுத்ததும் ஹர்ஷாக்கு ஆபரேஷன் நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை.
ஹர்ஷாவுக்கு நல்ல விதமாக ஆபரேஷன் முடிந்த பின்பு அங்கிருந்து செல்ல முயன்றவனை நான் வற்புறுத்தி என்னுடன் இருக்க வைத்தேன். ஹர்ஷா கண் முழிக்கும் வரையில் என்னுடன் இருக்கும் படி வற்புறுத்தினேன். காளையனும் மறுத்து எதுவும் பேசவில்லை. என்னுடன் கூடவே இருந்தான். இரண்டு மணி நேரங்களின் பின்னர் ஹர்ஷா கண் விழித்தான். அதன் பின் தான் எனக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
இருவரும் சென்று ஹர்ஷாவை பார்த்துவிட்டு வந்தோம். அப்பொழுது அங்கிருந்த டாக்டரிடம் ஹர்ஷாவின் உடல்நிலையைப் பற்றி நான் விசாரிக்கச் செல்ல, ஹர்ஷாவுக்கு துணையாக காளையனை இருக்க சொல்லிவிட்டு, டாக்டரிடம் சென்றார். “ஹர்ஷாவைப் பற்றி இனிமேல் பயப்பட ஒன்றும் இல்லை” என்று டாக்டர் சொன்னார். அதைக் கேட்ட பின்னரே என்னோட உயிரே வந்தது.
அதன் பிறகு நான் நான் காளையனைப் பற்றி கூறி, எனது தொலைந்து போன மகனைப் பற்றியும் சொன்னேன். பின் காளையனுடைய டிஎன்ஏ வை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய டாக்டரிடம் கேட்டேன். அவரும் என்னை புரிந்து கொண்டதால் சரி என்று சம்மதித்தார். ஆனால் முடிவு தெரிவதற்கு இரண்டு நாட்கள் செல்லும் என்று சொன்னார். நானும் பரவாயில்லை டாக்டர் என்று சொன்னேன்.
டாக்டரிடம் பேசி விட்டு வந்த நான் காளையனிடம் எதையும் சொல்லவில்லை. ஹர்ஷாவுடன் இருந்து கொண்டேன். காளியன் எங்களிடம் சொல்லிவிட்டு அவன் ஊருக்கு வந்து விட்டான். நானும், “சரி ரிப்போர்ட் வரும்வரை காத்திருக்கலாம்” என்று காளையன் போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு அவன் போக அனுமதித்ததன். அவனும் சென்று விட்டான். இரண்டு நாட்கள் ஹாஸ்பிடல்லேயே கழிந்தது. இரண்டு நாட்களின் பின்னர் டாக்டரை சந்திக்க சென்றேன்.
டாக்டர் முகத்தில் புன் சிரிப்பு. அதனை பார்த்ததும் எனக்கு பாதி புரிந்தது. மீதியை டாக்டரிடம் கேட்கலாம் என்று, அவரிடம் விசயத்தைக் கேட்டேன். அவரும், “கவலைப்படாதீங்க நீலகண்டன். உங்களோட பையன் கிடைச்சுட்டான். காளையன் உங்களோட டிஎன்ஏ 100% மெச்சா இருக்கு. உங்களோட பையன்தான் காளையன் என்றதுல எந்தவிதமான மாற்றுக் கருத்துக்மே இடமில்லை. காளையன் உங்களோட பையன் தான் என்று சொன்னார். இதைக் கேட்ட நீலகண்டனுக்கு கண்கள் கலங்கியது.
எத்தனை நாள் தவம், தன்மகன் கிடைக்க மாட்டானா, கிடைக்க மாட்டானா என நினைத்து அழுது கொண்டிருந்த தன் மனைவி கண் முன்னே வந்து போனார். தான் என்னதான் ஹர்ஷாவை அன்பால் பார்த்துக் கொண்டாலும், அவனுக்கு எந்த குறை இன்றி வைத்திருந்தாலும், அவளுக்கு தன் முதல் மகன் மீது கொள்ளை பிரியம். அவர் இறக்கும் தருவாயில் கூட, “என் மகன் நிச்சயமாக கிடைப்பான்,” என்று சொல்லிவிட்டு தான் சென்றார். என்ன செய்வது மகன் கிடைத்து விட்டான். ஆனால் மனைவி இவ்வுலகத்திற்கு இல்லையே என்று கவலை வந்தது. மனதோடு மனைவியோடு பேசிக்கொண்ட நீலகண்டன் காளையன் தன் இரத்தம் தான் என்று தெரிந்ததும், அவனை கட்டி அணைத்துக்கொள்ள, கைகள் துடித்தன. இருப்பினும் அதனை கட்டுப்படுத்திக் கொண்டார்.
முதலில் காளையனைப் போய்ப் பார்க்கலாம். என்று நினைத்து, ஹர்ஷவர்த்தனின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் பேசினார். டாக்டரும், “ஹர்ஷா பிரயாணம் செய்யலாம்” என்று சொன்னதும், அவனையும் கூட்டிக்கொண்டு முதலில் சென்றது தேன்சோலையூர் ஊருக்குத்தான்.
அங்கு சென்று நேரடியாக அவர் காளையனை சந்திக்கவில்லை. காளையனுக்கு, கால் பண்ணி ஊரின் எல்லைப் பக்கம் வரச்சொன்னார். உடனே தோட்டத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை கதிரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களைக் காணச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super ud