Home Novelsமதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 03 (On Going Story)

மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 03 (On Going Story)

by Thivya Sathurshi
4.6
(9)

அத்தியாயம் : 03

அன்றைய தினம் காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக காத்திருந்தாள் சுதர்ஷினி. மாலை நேரம் என்றபடியால் பஸ் கூட்டமாக இருந்தது. அதனால் சுதர்ஷினி அதில் ஏறாமல் அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தாள். அப்போது ஒருவன் உடம்பில் காயத்துடன் வேகமாக ஓடி வந்தான். அவனைத் துரத்திக் கொண்டு பின்னால் வேகமாக வந்தான் வீரேந்திர ப்ரசாத். அவனைப் பார்த்த சுதர்ஷினி. ‘இவன்தானே இன்னைக்கு காலேஜ்ல ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடிச்சது… இப்போ என்ன இவன் இன்னொருத்தனை துரத்திட்டு போறான்… இவனுக்கு யாரையாவது அடிக்கிறதான் வேலையா….?’ என நினைத்தவள், பஸ் வந்ததும் அதில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். 

இங்கே வீரேந்திர ப்ரசாத் துரத்திக் கொண்டு வந்தவன், வீதி ஓரத்தில் இருந்த இளநீர் வைத்திருந்த தள்ளு வண்டியைப் பார்த்தான். அவன் ஓடி வந்த வேகத்திலே அந்த வண்டியில் இருந்த இளநீர் குலை ஒன்றை எடுத்து முன்னால் ஓடியவன் மீது வீசினான். கனமான இளநீர் குலை அவனின் முதுகில் பட கீழே விழுந்தான். கீழே விழுந்தவன் எழ முயலும் போதே அவனை பிடித்தான் வீரேந்திர ப்ரசாத். அவன் முதுகில் முட்டுக்காலைப் ஊன்றி, அவனின் கையை முதுகுப் புறம் கொண்டு வந்தான். அதில் அவன் அலறினான்.

அவன் வாயிலையே ஒன்று போட்டு, “ஏன்டா உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா என் ஸ்டேஷனுக்கு வந்து… லாக்கப்ல இருக்கிற அந்த பொறுக்கிய கூட்டிட்டு போக பாத்திருப்ப…? நீ எப்பவுமே வெளிய வராத மாதிரி பண்றேன் வாடா ஸ்டேஷனுக்கு….” என்று அவனை இழுத்துக் கொண்டு செல்ல, அவன் முன்னால் ஒரு ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து எட்டிப் பார்த்தான் பரத். 

“ஹாய் மச்சான்…”

“நீ எங்கடா இங்க…? என் பின்னாடில நீ ஓடி வந்த…?”

“மச்சான் நீ சொல்றது கரெக்ட்… உன் பின்னாடிதான் நான் ஓடி வந்தன்.. ஆனால் நீ ரொம்ப வேகமாக ஓடின.. என்னால ஓட முடியல.. அதுதான் ஸ்டேஷன் போயிட்டு ஜீப்பை எடுத்துட்டு வந்தன் இவனை பிடிக்க… எப்படி மச்சான் என்னோட ஐடியா…?”

“ரொம்பபபபபப சூப்பர்… நீ எல்லாம் போலீஸ்னு வெளியில சொல்லிடாத மச்சான்…”

“ஏன் மச்சான்…?”

“ம்ம்ம்ம் உன்னோட அறிவைப் பாத்து யாராவது கண்ணு வச்சிப் போறாங்க…”

“ஓ.. சரிடா சரி… நீ ஜீப்ல ஏறு.. இவனை ஸ்டேஷன் கொண்டு போயிட்டு லாக்கப்ல வச்சி நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்…”

“அப்படியே பண்ணிடலாம்….” என்றவன் அவனை ஜீப்பில் ஏற்றி விட்டு அவனும் ஜீப்பில் ஏறினான். 

…………………………………………………. 

வீட்டுக்கும் வாசலிலுக்குமாய் நடந்து கொண்டு இருந்தார் சுமதி. சோபாவில் இருந்து காப்பி குடித்துக் கொண்டு இருந்த சரவணன் இவர் அங்கும் இங்கும் நடப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டார். 

“என்ன சுமதி வீட்டை அளந்துட்டு இருக்க…?”

“வீட்டை ஒண்ணும் அளக்கல.. நம்ம பொண்ணை காணோம்னு நேரத்தை பாக்குறதும் வாசலை பாக்குறதுமா இருக்கேன்…. ஆபிஸ் வேலைக்கு போற நீங்களே வந்துட்டீங்க… இவ இன்னும் வீடு வந்து சேரல….” என்று சத்தம் போட்டார். 

“சுமதி அவ ஒண்ணும் ஸ்கூல் படிக்கிற சின்னப் பொண்ணு இல்லை… காலேஜ்ல பாடம் படிப்பிக்கிற டீச்சர்… நீ இன்னும் அவளைச் சின்னப் பொண்ணுனு நெனச்சிட்டு இருக்காத சுமதி…”

“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா…? நேரம் போயிட்டு இருக்கு… மழை வேற வர மாதிரி இருக்கு… எனக்கு பயமா இருக்கு…” என்றார். 

“பயப்படாத சுமதி… உன் பொண்ணு தைரியமானவ… அவ வந்திடுவா… ஒருவேள பஸ் வர லேட்டாயிருக்கும்…” 

“என்னை சமாதானப்படுத்துறத விட்டுட்டு போய் ஒரு எட்டு அவளைப் பாத்துட்டு வாங்க…” என்றார். 

“யாரைப் பாக்க போகணும்…..?” என்றவாறு வந்தாள் சுதர்ஷினி. 

அவளைப் பார்த்த பிறகுதான் சுமதிக்கு உயிரே வந்தது. 

“காலேஜ் விட்டு எம்புட்டு நேரம்… உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா….?” என்றார். 

“அப்பா அம்மாக்கு என்ன லூசா….?” என்றவாறு வந்து அங்கிருந்த மேசை மீது பாக்கை வைத்து விட்டு தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். 

“கொழுப்பெடுத்த கழுத என்னை லூசுன்றயா…?” என்று அவளிடம் வந்தார். 

“பின்ன என்னம்மா… நான் காலேஜ்க்கு படிக்க போகும்போதும் நேரத்துக்கு வந்திடணும்னு சொல்லுவ அது சரி… ஆனா நான் இப்போ காலேஜ்ல படிச்சிக் குடுக்கிற டீச்சர் மா… இந்த சாரிய கட்டிட்டு கூட்டமான பஸ்ல வர்றது கஷ்டமா இருக்கு… அப்பா நான் என்னோட ஸ்கூட்டில காலேஜ் போகட்டுமா…?”

“அதெல்லாம் முடியாதுடி ஒழுங்கா பஸ்ல போயிட்டு பஸ்ல வா…”

“அப்பா பாருங்க அம்மாவை… அம்மா ஸ்கூட்டிய வாங்கினா ஓடணும்மா… ஆனா இந்த ஸ்கூட்டி வாங்கினதுல இருந்து ஒரு நாலு தடவைதான் அதை ஓட விட்டுருப்ப…”

“நீ சாப்பிடாம அழுது அடம்பிடிச்சதனாலதான் நான் அந்த ஸ்கூட்டிய வாங்கிக் கொடுத்தன்… அதுல போறது உனக்கும் ஷேஃப்டி இல்ல… உனக்கு முன்னால வர்றவங்களுக்கும் உன்னால ஷேஃப்டி இல்ல…”

“அம்மா என்னமா நீ…. அங்க காலேஜ் படிக்கிறவங்க எல்லாம் ஸ்கூட்டில வர்றாங்க… படிப்பிக்கிற நான் பஸ்ல போறன்… ப்ளீஸ் மா… நான் பத்திரமா போயிட்டு பத்திரமா வருவன்மா… ப்ளீஸ் மா… அப்பா அம்மாக்கிட்ட சொல்லுங்கபா….”

“சுமதி…. அவதான் ஆசப்படுறால்ல போயிட்டு வரட்டுமே….” என்று ஒருவாறு மனைவியை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் சுமதி, “சரி பாத்து பத்திரமா போகணும்… வேகமாக போகக்கூடாது…” என்றார். 

“ஐஐஐஐஐ ஜாலி… அம்மா, அப்பா லவ் யூ சோ மச்…. அம்மா நான் போய் ஃப்ரெஷாகிட்டு வந்திடுறன்… எனக்கு ஒரு காப்பி போட்டு வைங்க…” என்றவள் பாக்கை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள். 

போகும் மகளைப் பார்த்த சுமதி சரவணனிடம், “இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா போதும்ங்க…”

“இப்போதானே சுமதி அவ காலேஜ்க்கு போறா… கொஞ்ச நாள் போகட்டுமே…”

“இப்படி சொல்லிச் சொல்லித்தான் அவள மேலும் மேலும் படிக்க வச்சீங்க… இப்போ இப்படி சொல்றீங்க… பாருங்க சீக்கிரமா வரன் பாக்குற வேலையை பாருங்க…” என்றவர் மகளுக்கு காப்பி போடச் சென்றார். 

…………………………………………………

வீராவும் பரத்தும் ஜீப்பில் ஏற்றியவனை கொண்டு வந்து சர்வேஷின் லாக்கப்லயே போட்டனர். 

“உங்க ஙொய்யாவோட பையனை காப்பாத்தி வெளில கூட்டிட்டுப் போகத்தானே வந்த… இப்போ அவன்கூட ஒரு லாக்கப்ல இருந்து கம்பி எண்ணு….” என்றான். அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தவன், “இங்க பாருங்க இவனுக்கு டைம்க்கு சாப்பாடு குடுங்க… ஆனால் யாரையும் இவனை பாக்க விட வேணாம்… நான் வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வந்திடுறன்…”

“சரிங்க சார்…”

“மச்சான் வா வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்…”

“இல்லடா நீ போ… நான் இன்னொருநாள் வர்றேன்…”

“பரத் சொன்னா கேளு…”

“இல்லடா நான் வரல… ஆஸ்ரமத்துல இருந்து மதர் கால் பண்ணி என்னை வரச்சொன்னாங்க…”

“அப்டியா சரி நீ போய் மதரை பாரு… நானும் அவங்கள கேட்டதா சொல்லு…”

“கண்டிப்பா சொல்றேன் மச்சான்….” என்று சொல்லிவிட்டு பரத் அவனின் புல்லட்டில் செல்ல, வீரா அவனது ஜீப்பில் சென்றான். 

வீரா வீட்டிற்கு வந்ததும், அவனைப் பார்த்த அவனின் பைரவ் (நாய்க்குட்டி) அவனிடம் ஓடி வந்தது. “பைரவ்…” என்று அதைக் கொஞ்சியபடி தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான். அவனது தாய் சுபத்ரா அவனிடம், “வீரா…” என்று அழைத்து கண்ணைக் காட்டினார். 

“பாத்து கண்ணைக் காட்டி கண்ல சுழுக்கு வந்திடப் போகுது. நான் இங்க இருக்கிறது உன் பையனுக்கு நல்லாவே தெரியும்… நீ ஒண்ணும் சொல்லாத…”

“ஆமா போலீஸ்கார குடும்பத்துல இருந்திட்டு நான் படுற பாடு இருக்கே…”

“அம்மா, இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை…?”

“வீரா உன்னோட அப்பாதான் வீட்ட வந்துல இருந்து சத்தம் போட்டுட்டு இருக்கிறாரு…”

“அம்மா உண்மைய சொல்லுங்க அப்பா சத்தம் போட்டாரா இல்ல என்னை திட்டினாரா…?” என்று வீரேந்திர ப்ரசாத் கேட்க, சுபத்ராவோ, “அது வந்து வீரா….”

“சும்மா இரு சுபா… வீரா நீ பண்றது எதுவும் சரியில்லையே….”

“எதுப்பா சரியில்லை…?”

“அந்த கன்னியப்பன் ரொம்ப மோசமானவன் அவன் பையனையே அரெஸ்ட் பண்ணியிருக்க…”

“அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணச் சொல்றீங்க அப்பா… நான் ஒண்ணும் நாட்டுக்கு நல்லது பண்ணவனை அரெஸ்ட் பண்ணல… அவன் ஒரு பொறுக்கினா அவன் பையன் கேடுகெட்ட பொறுக்கியா இருக்கான்… காலேஜ்க்குள்ள போதைப்பொருள் விக்கிறான்… அவன விடச் சொல்றீங்களா…?”

“வீரா நான் அவன விடச் சொல்லலை… ஆனா அந்த கன்னியப்பன் ஸ்டேஷனுக்கு வந்தப்போ நீ ஏன் சல்யூட் பண்ணல…? அது தப்புத்தானே வீரா…”

“அப்பா ஐ ஆம் சாரி… என்னால அந்த பொறுக்கிக்கு எல்லாம் சல்யூட் பண்ண முடியாது….”

“வீரா அவன் மோசமானவனா இருந்தாலும் அவனோட பதவிக்கு நாம மரியாதை குடுத்துத் தானேயாகணும்…”

“சாரிப்பா என்னால அது முடியாது… நான் முதல் முதலா இந்த காக்கிச் சட்டையை போட்டுட்டு வந்து உங்க முன்னாடி நின்னப்போ நீங்க என்னப்பா சொன்னீங்க…? வீரா இந்த காக்கிச்சட்டை உன்னோட உடம்புல இருக்கிற வரைக்கும் நீ எந்த தப்புக்கும் துணை போகக் கூடாது… எந்த அய்யோகக்கியனுக்கும் முன்னால தலைகுனியக் கூடாதுனு சொன்னீங்கல… அதனாலதான் அந்த பொறுக்கி அமைச்சராவே இருந்தாலும் நான் சல்யூட் பண்ணல…”

“வீரா புரிஞ்சிக்கோ… உன்னோட கோபத்தை குறைச்சிக்க இல்லனா அது உனக்குத்தான் பிரச்சனை….”

“உங்க பையன் உங்களைப் போலத்தானே இருப்பான்…. உங்களோட கோபத்தின் எல்லை எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்…. இப்போதான் நீங்க உங்க கோபத்தை குறைச்சிருக்கீங்க… வீரா நீ போ.. போய் குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறன்… நீங்களும் வாங்க….” என்றவர் உள்ளே செல்ல, வீரா தந்தையைப் பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்றான். 

…………………………………………………

“அம்மா என்ன சமையல்…?” என்றவாறு சமையல் அறைக்கு வந்தாள் சுதர்ஷினி. 

“தோசைதான் சுதர்…”

“ரொம்ப பசிமா குடுமா…” என்றவள் சமையல் அறைக் கட்டில் ஏறி அமர்ந்தாள் தட்டுடன். 

“இன்னைக்கு காலேஜ் எல்லாம் எப்டி போச்சு சுதர்…?”

“ரொம்ப நல்லா போச்சுதுமா… ஆனால் நான் காலேஜ்ல காலை வச்சதும் ஒரு ஸ்டூடண்ட் எங்க இருந்து வந்தான்னு தெரிலமா என் காலடியில வந்து விழுந்தான்மா…”

“என்னடி சொல்ற அம்புட்டு மரியாதையா அந்த ஸ்டூடண்ட்க்கு….?”

“அட நீங்க வேற அம்மா… அவஅவன் மரியாதையில வந்து என் கால்ல விழல… அவனை ஒருத்தன் அடிச்சிருக்கிறான்… அந்த அடியிலதான் வந்து விழுந்தான்மா….”

“ஏன் சுதர் அப்படி அடிதடி நடக்குற காலேஜ் உனக்கு வேணுமா…?”

“அம்மா அதெல்லாம் ஒண்ணும் இல்லமா… இதுக்குப் போய் காலேஜிக்கு போகாம இருக்க முடியுமா…? அதை அப்புறம் பாக்கலாம்.. நீங்க ரெண்டு தோசை வைங்க…”

“சரி சரி எதுக்கும் பாத்து பத்திரமா இருடா மா…” என்றார். 

அவளும் தலையாட்டி விட்டு, சுடச்சுட தோசையை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றாள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி

திவ்ய சதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!