அத்தியாயம்-10
மைத்ரேயியோ அந்த இருட்டான அறையிலேயே அரை மயக்கத்திலேயே துவண்ட கொடியாக கிடந்தாள்… கிட்டத்தட்ட நான்கு நாட்களாக அவளது நிலை இதுதான்.. அந்த நிவாஸ் அவளை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தவன் அங்கிருந்து அவனுக்கிருந்த ப்ரைவெட் ஜெட்டில் அழைத்து வரும்போது ஏகப்பட்ட எச்சரிக்கை கொடுத்து தான் அழைத்து வந்தான்..
“சும்மா பிளைட்ல வரும்போது சீன் க்ரியட் பண்ணாத… அது என்னோட ப்ரைவெட் ஜெட்… அதுல உனக்கு உதவி செய்வதற்கு ஒரு நாதியும் இருக்க மாட்டான்.. ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என் கூட குடும்பம் நடத்துறதுக்கு வழிய பாரு…” என்று அவளது உடலில் கண்களை மேய விட்டுக் கொண்டு அவன் பேச… அவளுக்கோ அறுவறுத்து போனது.
“ப்ளீஸ் என்ன விட்ருங்க என்ன உங்க மகளா நினைச்சு விட்ருங்க…” என்று அவள் கெஞ்சி கொண்டிருக்க…
அதில் அட்டகாசமாக சிரித்தவனோ “இதுவரைக்கும் அஞ்சி கல்யாணம் பண்ணி இருக்கேன்… ஆனா ஒருத்திக்கு கூட குழந்தை இல்லை… ஏன்னா நான் பெத்துக்க விடல.. ஏன்னா ஒவ்வொருத்தரும் இந்த மாதிரி டயலாக் என்ன பாத்து பேசினா அப்புறம் நான் நல்லவனா மாறிட்டேனா என்ன பண்றது… அதனாலதான்.. அதும் இல்லாம குழந்தைன்னு வந்துட்டா அவளுங்க பக்கத்துல கூட விடமாட்டாளுங்களே…” என்று கூறியவனோ..
“உன்ன ஊருக்கு கொண்டு போய் சேர்த்த அடுத்த நாளே கிராண்டா ஒரு நிக்காவ ஒன்னு வச்சிட வேண்டியதுதான்… அதுக்கப்புறம் இருக்குடி உனக்கு…” என்றவனின் அரக்கத்தனமான கண்கள் அவளின் மிரண்ட பார்வையில் பளப்பளக்க… அதனைக் கேட்ட பெண்ணைவளுக்கு ஈரக் கொலையே நடங்கியது…
நேராக தன்னுடைய பிரைவேட் ஜெட்டில் வந்து மும்பையில் இறங்கியதற்கு பின்பு போன இடம் அவனது மிகப்பெரிய அரண்மனைக்கு தான்… அவளோ அப்போதும் அவனிடமிருந்து எப்படியாவது தன்னை விடுபட்டு செல்லலாம் என்று தான் துள்ளிக் கொண்டிருந்தாள்… அதில் ஓங்கி அவளை அறைந்த நிவாஸோ “ஒழுங்கா அடங்குடி…” என்றவனோ இவளை கையோடு சென்று இருட்டு அறையில் அடைத்தான்..
அந்த இருட்டு அறையில் அடைப்பட்டு கிடந்த பெண்ணவளோ பயத்தில் முகம் வெளிறி முக்கால் வாசி நேரம் மயக்கத்தில் தான் கிடந்தாள்… நிவாஸோ… எந்த ஒரு காரியம் செய்தாலும் தன்னுடைய குடும்ப ஜோசியரை வரவழைத்து நாள் பார்க்க சொல்லுவான்… இந்த முறையும் கூற…
ஜோசியரோ ஏதோ ஒரு கணிப்பை போட்டவர் “இந்த வாரம் நாள் நல்லா இல்ல நிவாஸ்… அடுத்த வாரம் நாள் நல்லா அமோகமா இருக்கு… அதனால ஒரு வாரம் கழிச்சி கல்யாணத்தை வெச்சுக்கலாம்…” என்று கூற.
அதில் அவனும் பவ்யமாக “சரி சரி குருஜி..” என்று கூறியவனோ… தன்னுடைய மேனேஜரை அழைத்து திருமணத்திற்கான ஏற்பாடை செய்ய சொன்னான்…
“ஊர்ல உள்ள அத்தனை பேரையும் கூப்பிடு… அத்தன பேரும் என் கல்யாணத்துக்கு வந்தாகனும்…“என்று வெட்கமே இல்லாமல் தன் ஐந்தாவது திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருந்தான்… அதுப்படி பிரமாண்டமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டது…
மைத்ரேயியோ அப்படியே அறையில் அடைந்து கிடந்தவளுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்றே தெரியவில்லை.. எப்படியாவது இந்த அரண்மனை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்க… அந்நேரம் கதவு தட்டப்பட்டு திறந்து கொண்டு உள்ளே வந்தது என்னவோ அந்த வீட்டு பணியாளர் தான்.. அவளுக்கு உணவு கொண்டு வந்திருந்தார்… அந்த உணவினை கீழே வைக்க…
மைத்ரேயியோ நொடியும் தாமதிக்காமல்… “அண்ணா ப்ளீஸ் நா… நான்… என்னை எப்படியாவது இங்கிருந்து வெளியில அனுப்பிடுங்க… ப்ளீஸ் அண்ணா….” என்று அவள் சட்டென்று அவர் காலில் விழ… அவரோ அவளின் செயல் புரியாமல் பதறி போனார்…
ஏனெனில் அவரோ சுத்த ஹிந்தி… இவளோ சுத்த தமிழ்… அவருக்கு புரியவில்லை என்பது புரிந்த மைத்ரேயியோ செய்கையிலேயே அவரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க… அவரும் என்ன நினைத்தாரோ என்னவோ.. “பேட்டி இவர் சரியான அரக்கன் பேட்டி.. உன்னை நான் வெளில ஆரம்பிச்சேன்னா இவன் என்ன கொன்னே போட்டுடுவான்…” என்று அவரும் செய்கையில் காட்ட..
அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை… “ப்ளீஸ்ண்ணா… என்னை எப்படியாவது இங்க இருந்து அனுப்பிடுங்க.. பயமா இருக்குண்ணா…” என்று அவர் காலையிலேயே விழுந்து மறுபடிக் கதறிக் கொண்டிருக்க… அந்த பணியாளருக்கும் கொஞ்சம் ஈரம் இருந்ததோ என்னவோ… சட்டென்று அவருக்கும் ஒரு யோசனை தோன்ற… மைத்ரேயியை பார்த்து செய்கையிலேயே இன்று இரவு ஒரு பார்ட்டி நடப்பதாகவும் அந்த பார்ட்டியின் போது அனைவரும் இங்கே பிஸியாக இருப்பார்கள் அந்நேரம் பார்த்து உன்னை இங்கிருந்து அனுப்பி விடுகிறேன் என்று கூறினார்…
அதில் அவளுக்கோ ஆழக்கடலிலே துடித்தவளுக்கு ஒரு துடுப்பு கிடைத்தது போல சரி என்று வேகமாக தலையாட்டினாள்… “பத்து மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்கும் பேட்டி… நீ தயாராக இரு…” என்று கூறிவிட்டு செல்ல.
மைத்ரேயியோ 10 மணி வரை தன்னுடைய நேரத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள்… அவர் கூறிவிட்டு சென்றது போல பத்து மணி வரை தன்னுடைய படபடக்கும் நெஞ்சை அடக்கியவாறே பெண்ணவள் உட்கார்ந்திருக்க… சரியாக பத்து மணியின் போது அவளுடைய கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்.. அதே பணியாளர்…
பெண்ணவள் வேகமாக எழுந்தவள் அவரை பரிதவிப்பாக பார்க்க… “சீக்கிரமா இங்கிருந்து போயிடு பேட்டி… எல்லாரும் பார்ட்டில ரொம்ப பிசியா இருக்காங்க…” என்று கூற.
மைத்ரேயியோ சட்டென்று அவர் காலில் விழுந்தவளோ “ரொம்ப நன்றி அண்ணா…” என்று கூற.
“அட சீக்கிரம் போ பேட்டி… அதுக்கெல்லாம் இப்ப டைம் இல்ல…” என்று அவசரமாக அவளை துரத்த… அதில் வேகமாக மைத்ரேயியோ அந்த வீட்டினை விட்டு வெளியில் ஓடி வந்தாள்.. எல்லாரும் அந்நேரம் அந்த பார்ட்டியில் குடித்து மயக்கத்தில் பின்னி பினைந்துக்கொண்டு கிடக்க… அதனை பார்த்து அருவருத்து போனவள் வேகமாக அந்த வீட்டினை விட்டு வெளியே வர நினைத்தாள்…
ஏற்கனவே அந்த பணியாளர் மெயின் கேட் வழியாக செல்லாதே… அங்கு ஆட்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லி இருக்க அதனாலயே வீட்டின் பின்பக்கம் ஓடியவளோ அங்கு ஆட்கள் குறைவாக இருப்பதை பார்த்து பதுக்கி பதுங்கி சென்றவள்… அங்கிருந்த ஒரு ஏணியின் மூலம் சுவரினை தாண்டி அந்த பக்கம் குதித்து விட்டாள்…
இதனை எல்லாம் அங்கு கூடி பேசிக் கொண்டிருந்த அந்த அடியாட்களோ பார்க்கவே இல்லை… வேகமாக குதித்த மைத்ரேயிக்கோ எங்கே செல்வது என்றே தெரியவில்லை… ஆனால் இந்த இடத்தில் மட்டும் இருக்கக்கூடாது என்று நினைத்தவள் வேகமாக அந்த இடத்தினை விட்டு ஓட ஆரம்பித்து விட்டாள்… இப்படியாக அவள் ஓட ஆரம்பித்து பத்து நிமிடத்தில் அவள் பின்னால் ஒரு கார் துரத்திக் கொண்டு வர… அவளுக்கோ பகிரென்று ஆனது…
ஆம் மைத்ரேயி அந்த வீட்டினை விட்டு தப்பித்து சென்ற அடுத்த நிமிடமே அது அந்த நிவாஸிற்கு தெரிந்து போனது. அதுவும் மைத்ரேயி தப்பித்து செல்வது சிசிடிவி கேமரா அறையில் தெளிவாக காட்டியிருக்க… அவர்தான் இப்போது நிவாஸிற்கு தகவல் கூறியது.. அந்த நிவாஸோ அவளை தப்பிக்க வைத்த பணியாளரை கையும். களவுமாக பிடிக்க… அவனோ அவன் காலில் விழுந்து கெஞ்சி கொண்டிருந்தான்…
“பாஸ் நான் இல்ல பாஸ்… நான் இல்ல…” என்று கதறியவாறே கெஞ்சி கொண்டிருக்க… ஆனால் அதனை இரக்கமற்ற அரக்கனாக பார்த்தவன் அதனைக் கேட்பதாகவே இல்லை.. அந்த பணியாளரின் நெத்தியில் துப்பாக்கி வைத்து ஒரு அழுத்து அழுத்த அந்த பணியாளரின் மூளையோ சிதறி அப்படியே இறந்து போனார்…
“ஷட்… எங்கிட்ட வேலப்பாத்துட்டு எனக்கே துரோகம் செய்றான்….”என்று உறுமியவனோ… “எனக்கு உடனே அவ வேணும்…” என்று கத்திக் கொண்டிருக்க… அதனைக் கேட்ட மற்ற அடியாட்களும் அடுத்த நிமிடம் ஜீப்பினை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்…
ரொம்ப நேரம் எல்லாம் ஓடி இருக்க மாட்டாள் என்று அவர்கள் கணக்கு செய்ய நான்கு பக்கமும் அவளை ரவுண்டப் செய்ய நினைக்க… அவளோ வேகமாக ஓடியவளுக்கோ எங்கு சென்று தன்னை மறைத்துக் கொள்ளலாம் என்று தெரியவில்லை… பின்னால் வேறு துரத்தி வருபவர்களிடம் மறுபடி அவள் மாட்ட தயாராகவே இல்லை… அப்போது அவள் கண்களுக்கு கிடைத்தது என்னவோ அந்த நைட் க்ளப் தான்..
அதன் வாசலிலேயே கும்பல்கள் அவ்வளவு இருக்க… அதனைப் பார்த்தவள்.. அதன் உள்ளே சென்றால் மாட்டாமல் தப்பித்து விடலாம் என்று வேகமாக அந்த பப்பிற்குள் நுழைந்துவிட்டாள்…
ஜீப்பில் அவளை தேடிக் கொண்டு வந்தவர்களோ அவள் அங்கு இல்லாமல் போக… “ச்ச எங்கடா போன அவ…” என்று சுற்றி பற்றி பார்த்துக் கொண்டே இருக்க அவர்களது கண்களிலும் கிட்டியது என்னவோ அதே நைட் பப் தான்… “ஒரு வேள இதுக்குள்ள போயிருப்பாளோ…” என்று ஒருவன் கூற…
இன்னொரு அடியாளோ அந்த பப்பை பயத்துடனே பார்த்தவன்… “டேய் இது யாரோட பப் தெரியுமா…” என்றான்..
“ம்ச் அதெல்லாம் எனக்கு தெரியாது.. தெரிஞ்சக்கவும் ஆச இல்ல.. எனக்கு நம்ம பாஸ் சொன்ன வேலையை முடிக்கணும் அவ்வளவுதான்…” என்றவனோ மும்பைக்கு புதிது.. “வாங்கடா..” என்று இரண்டு, மூன்று பேர் அந்த பப்பிற்குள் நுழைய… அந்த யாருடையது என்று தெரிந்தவனோ அந்த பப்பிற்குள் நுழையவே இல்லை… அவனுக்கும் உயிர் பயம் இருக்கும் அல்லவா..
மைத்ரேயியோ வேகமாக பப்பிற்குள் நுழைந்து அங்குமிங்கும் ஒழிந்துக் கொண்டே செல்ல… அவளை தேடியவாறே வந்தவர்களில் ஒருவரின் கண்ணில் பெண்ணவள் மாட்ட… “டேய் அதோ இருக்காடா…” என்று அவளை துரத்த பார்க்க.. தன்னை துரத்துபவர்களை பார்த்து அவளுக்கு இதயம் வாயில் வந்து துடிக்கும் அளவிற்கு படபடப்புடன் ஓடியவள் ஒரு வலிய நெஞ்சில் மோதி சடார் என்று கீழே விழுந்து விட்டாள்.
(கேப்பச்சினோ…)