மான்ஸ்டர்-20

4.9
(10)

அத்தியாயம்-20

மைத்ரேயி தன்னுடைய அறையில் முகம் வீங்க படுத்திருந்தாள்அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்த வண்ணமே இருந்ததுஅவள் முகமும் களையிழந்து போய் இருந்ததுகிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இப்படித்தான் அழுது புரண்டு கொண்டிருந்தாள்.. அதற்கு காரணம் மார்ட்டின் மட்டுமே

ஆம் அவன் தான் காரணம் அன்று அறைகுறை சாப்பாட்டுடன் மார்ட்டின் வேகமாக வெளியில் சென்று கொண்டிருப்பதை பார்த்து மனம் தாளாமல் வேக வேகமாக அவன் பின்னால் தாஸ் தாஸ்…” என்று அழைத்த வண்ணமே ஓடிக் கொண்டிருக்கஅந்த பெயரைக் கேட்டு கேட்க அவனுக்குள்ளும் ஏதோ வேதியல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்ததுஅதனை அப்படியே மறைத்துவாறே தன்னுடைய காரினை நோக்கி செல்லஇதற்கு மேல் விட்டால் சரி வராது என்று வேகமாக ஓடிய பெண்ணவளோ திடீரென்று அவன் நிற்பான் என்று தெரியாமல் ஓடிய வேகத்திற்கு அவன் மீது தள்ளாடி விழமார்ட்டினோ அதனை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதவன் எங்கே அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று பயந்தவாறு அவள் இடையில் கைகோர்த்து தன்னுடன் இறுக்க பிடித்துக் கொண்டான்…

இதனை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பெண்ணவளுக்கு அதிர்ச்சி என்றாலும் அவனின் முரட்டு கரங்கள் தன்னுடைய இடையில் இருப்பதை பார்த்து பெண்ணவளின் முகம் சிவந்து போனது வெட்கத்தில்ஆடவனுக்கோ அந்த இடையின் மென்மை அவனின் இறும்பு கரத்தை உருக்குவதாக இருக்க… அப்படியே அசையாமல் நின்றுவிட்டான்அப்படியே அவளை இறுக்கி தன் உடலுடன் அவள் உடல் உரசுமாறு இறுக்கிக் கொண்டவனோ.. விழிகள் அவளையே உறுத்து விழித்தவாறே…

ம்ச் பார்த்து வரமாட்டியா எப்ப பாத்தாலும் இப்படி தான் கண்ண மூடி எங்கேயாவது விழ பார்த்துட்டே இருப்பியா…என்று கடுமையான குரல் என்றவாறே கிறக்கமான குரலில் கூற…

பெண்ணவளுக்கோ அதில் வெட்கம் பிடுங்கி தின்றதுஅப்படியே அவனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பியவாறு இருக்கமார்ட்டினுக்கோ அவளது அழகிய வெட்க முகம் காண திகட்டவே இல்லைஅப்படியே அவளையே மெய்மறந்து ரசித்தவாறு இருக்க

பாஸ்…” என்ற கபீரின் குரலில் தான் இருவரும் சுயம் பெற்றனர்.. மார்ட்டின் சட்டென்று நினைவுக்கு வந்தவனுக்கு அப்போது தான் தான் செய்து கொண்டிருக்கும் செயல் புரிந்ததுசற்றென்று அவளை தன்னிடமிருந்து வேகமாக விலக்கியவனோ தன்னுடைய தலையை அழுத்த கோதிக் கொண்டு அவளை அனல் தெறிக்க முறைத்து பார்த்தவன்அவளை தன்னை விட்டு விலக்கி வைக்கவும் அவன் மறக்கவில்லை…

அவளால் தனக்கு ஏற்படும் உணர்வுகளை தடுக்கவும் வழி தெரியாமல் அவளை முறைத்தவாறே இருந்தவன்… அவளை கடுமையாக பார்த்தவாறே… “உனக்கு அறிவு இருக்கா இல்லையா… இப்படித்தான் எப்ப பாத்தாலும் வந்து என் மேல மோதணும்னு நினைப்பியா.. மேல மோதுறதுக்கு அலைறியாடிநீ…என்ற வார்த்தையை விட..

அதில் பெண்ணவள் துடிதுடித்து போனாள்… தாஸ்…” என்று அவள் அழுத்தமாக அழைக்க…

ம்ச் இன்னொரு தடவை தாஸ்னு கூப்பிடாதடி…” என்று கடுமையாக கத்தியவானோ யார்டி நீ முதல்ல.. ஹான் யாரு நீ… இந்த வீட்ல இருக்குறதுக்கு உனக்கு என்னடி உரிமை இருக்கு…” என்று எடுத்தெறிந்து பேசஅதில் அப்படியே அவனை இமைக்காமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளோ…

ஓஓஒ எனக்கு இங்க இருக்க எந்த உரிமையுமே இல்லையா…” என்று அழுகை குரலில் கேட்கஅந்த குரல் அவனை அசைக்கத்தான் செய்தது

ஆனாலும் அதனை உள்ளே மறைத்தவனோ என்னது உனக்கு இங்க இருக்குறதுக்கு உரிமை இருக்கா…” என்று கேலியாக கேட்டவன்… ஹா ஹா….” என்று அந்த இடமே அதிர சிரித்தவனோ ம்ச் நீ யாருடி மொதல்ல எனக்கு… ம்ச் சரி விடுமொதல்ல என்னை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்.. கிட்டத்தட்ட ஒரு ஒரு மாசமா தெரியுமாஇந்த ஒரு மாசமா இந்த வீட்ல நீ வேலைக்காரியா இருக்க அவ்வளவுதான் உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்பே… அதத்தவற வேற ஒன்னும் இல்லஏதோ போனா போகுதுன்னு இருக்குறதுக்கு இடம் கொடுத்தா நீ என்னடானா மடத்தப் பிடிக்கிற மாதிரி என்னை மயக்கி இந்த வீட்டிலேயே ராணி ஆகலாம்னு பாக்குறியாஅதுக்கு நான் எப்போதும் ஒத்துக்கவே மாட்டேன்.. போடி இங்கிருந்து முதல…” என்று அவன் வெறுப்பாக கத்த…

மைத்ரேயியோ அவன் பேசிய பேச்சில் அப்படியே அதிர்ச்சியாக நின்றவளின் விழிகளோ அவன் பேசியதில் கலங்க ஆரம்பித்துவிட்டது.. தன்னவனா பேசியது… தன்னுடைய தாஸா பேசியது.. நான் இவனுக்கு வெறும் வேலைக்காரிதானா.. இவன் அப்டிதான் என்னை பாக்குறானா…”என்று மனதில் நினைத்தவளுக்கோ வேதனை தாங்க முடியவில்லை.. அதே நேரம் அவமானமாக இருக்க அப்படியே தலைக்குனிந்து நின்றுவிட்டாள்…

இதை கொஞ்சம் தூரம் நின்றவாறே கபீரும் கேட்டுக் கொண்டே தான் இருந்தான்பாஸ் என்று அவன் தடுக்க பார்க்க… அதில் அவனை திரும்பி எரித்தப்பார்வை பார்த்த மார்ட்டினோ… கபீர் நாம போலாம்… இது ஒன்னும் நமக்கு முக்கியமில்லாதது.. இத விட முக்கியமான வேல நிறைய இருக்கு…”வெடுக்கென்று கூறிய மார்ட்டினோ… அவளை பார்க்காமல் காரினை நோக்கி நடந்தான்… கபீர் அவளையே பாவமாக பார்த்தவாறே மார்ட்டினை தொடர்ந்து செல்ல.. பாவம் இங்கு பெண்ணவளின் நிலைதான் பாவமாக இருந்தது…

மைத்து அவனது வார்த்தையில் துடித்து போனவள் அப்படியே அசையாமல் நின்று கொண்டு இருந்தாள்அன்று மட்டுமல்ல அடுத்தடுத்த நாட்களும் அதே போல நிகழ்ந்து கொண்டே இருந்தது

ம்ச் வாட் தெ ஹெல் இஸ் திஸ்… எனக்கு சமைக்க வேண்டியது நீ மட்டும் தான்.. நீ சமைச்சா சமை இல்லனா வேலைய விட்டு ஓடு… சும்மா கண்டவங்களையும் என்னை சாப்பாட்டு மூலமா நெருங்க இந்த மாதிரி சீப் டெக்னிக் யூஸ் பண்ண வேண்டாம்….”என்று சமையக்காரனிடம் கத்தியவனோ இனி நீ தான் சமைக்கனும்…. இனி அவ கிச்சன் பக்கம் வந்தான்னா உன்னை தான் கொல்லுவேன்,.” என்று சமையல்காரனையும் மிரட்டிக்கொண்டு இருக்க… மைத்ரேயியோ அதனை கேட்டவளுக்கோ அழுகை பொத்துக்கொண்டு வந்தது..

சிறிது நாட்களாக தான் அவள் மார்ட்டினின் வீட்டில் இருக்கிறாள்.. ஏன் அவளுக்கு சிறிது நாட்களாக தான் மார்ட்டினையும் தெரியும்ஆனால் அவனது ஒதுக்கம் ஏனோ அவளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது… அன்று அவன் அவளை திட்டும்போது கூட அவனை தன்னவன் தன்னவன் என்று மனதில் பேசிக்கொண்டது அப்போது அவளுக்கு நினைவில் வரவில்லை என்றாலும் அன்று இரவே அவளின் நினைவிற்கு வந்து உருக வைத்தது… அது எப்டி அவரு என்னவன் ஆக முடியும்…”என்று அவள் யோசிக்க.. அவளது மனமோ மார்ட்டினின் மீது இருக்கும் காதலை எடுத்துரைத்தது…

என்னது காதலா…”என்று முதலில் அதிர்ந்தவளின் இதழ்களோ புன்னகைக்க… அடுத்த நிமிடமே அவளின் புன்னகையோ அப்படியே மறைந்து போனது… “ம்ச் ஏற்கனவே நீ ப்ளான் பண்ணி அவர மயக்க பாக்குறன்னு கண்டப்படி பேசுறாரு.. இதுல அவர மட்டும் நீ காதல் பண்றன்னு அவருக்கு தெரிஞ்சிது அதோ கதிதான் உன் கதி…”என்று நினைத்தவளோ

அப்படியே கண்கள் மூடிக்கொண்டு அறையிலையே முடங்கி விட்டவள்… ம்ச் காதல உணர்ந்த அடுத்த நிமிஷமே மூடு விழா பண்ணிட்டான் அந்த மான்ஸ்டர்…”என்று மனதில் அவனை திட்டாமல் இல்லை…

அந்த வீட்டிற்கு புத்தம் புதியதாக வந்த போது மைத்ரேயிக்கு இருந்த ஒரு குதூகலம் இப்போது இல்லாமலே போனதுஅது மட்டுமல்ல கிட்டத்தட்ட ஒரு வாரமாக அதுவே தான் தொடர்ந்து கொண்டே இருந்ததுஇப்போது எல்லாம் மார்ட்டின் எங்கும் இவள் கண் முன்னால் வருவதே கிடையாது… “அவர் எங்க போனாரு… பக்கனும் போல இருக்கே…”என்று மனதில் நினைத்தவாறே வேலையாட்களிடம் அதையே கேட்டாலும்…

சாரி மேடம் பாஸ பத்தி நீங்க என்ன கேட்டாலும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க மேம்…” என்று அந்த பணியாளர்களும் அவளுக்கு பதில் கூற அதில் நொந்தே போனாள் அவள்…

இங்கு மார்ட்டினோ தன்னுடைய தாத்தாவை பார்ப்பதற்காக வந்திருந்தான். அவனது முகமோ எப்போதும் இருக்கும் இறுக்கத்தை விட இப்போது அதோடு சேர்ந்து ஒரு வித ஏக்கமும், சோர்வும் கலந்து முகம் வாடி போய் இருந்ததுஅதனை யார் கண்டு கொண்டார்களோ இல்லையோ அவனது தாத்தா பார்த்தவர் உடனே கண்டுப்பிடித்துவிட்டார்..

என்னப்பா மார்ட்டின் என்னாச்சி ஆர் யூ ஓகே.. உன் முகம் ஏன் இவ்வளவு டல்லா இருக்கு…” என்று திக்கி திணறியவாறு கேட்க..

மார்ட்டினோ சட்டென்று தன் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டவன்… அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா.. ஐ ம் ஓகே..” என்று கூற..

அவருக்கா தெரியாது தன் பேரனை பற்றிஅதுவும் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று கூறுவதற்காகவே அவர்தான் எப்போதும் அந்த வீட்டில் ஒரு ஆள் வைத்திருந்தாறே அந்த ஆள் மூலம் மைத்ரேயியை பற்றி அவருக்கும் தெரிந்து போக… அதற்கு மேலும் அவனிடம் கேட்காமல் இருக்க கூடாது என்று…

ம்ம் எதுக்காக அந்த பொண்ணு கிட்ட அப்படி எரிஞ்சு விழுற மார்ட்டின்..” என்று சரியாக கேள்வி கேட்டார்..

அதில் மார்ட்டின் அவரை முறைத்தவன்… “எப்ப பார்த்தாலும் என்னை வேவு பாக்குறது தான் உங்களுக்கு வேலையா.. உங்களுக்கு வயசாயிடுச்சு தாத்தா அதுவும் இல்லாம உடம்பு சரியில்லைகொஞ்சம் உங்களுடைய ஹெல்த் மேல அக்கறையா இருங்கஅத விட்டுட்டு என் மேல எதுக்காக அக்கறையா இருக்கணும்நான் என்னை பாத்துப்பேன்.. நீங்க கவலப்படாதீங்க..” என்றவனோ… “ம்ச் உடம்ப பாத்துக்கோங்க.. நான் அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன்…” என்று எங்கே அங்கு இருந்தால் வேறு ஏதும் கேள்வி கேட்பாரோ என்று நினைத்து அங்கிருந்து வேகமாக எழுந்து வந்து விட்டான்..

அதன் பிறகு மார்ட்டின் இரண்டு முறை பார்ருக்கும்,ஒரு முறை கேங்ஸ்டர் மீட்டிங்கிற்கும் கூட சென்று வந்துவிட்டான்அந்த மீட்டிங்கில் நிவாஸும் கலந்து கொள்ள அவனது பார்வை அடிபட்ட புலியாக மார்ட்டினை வெறித்ததுமார்ட்டினுக்கு அவனது பார்வை சிரிப்பை தான் ஏற்படுத்தியது..

நீங்க யார்கிட்ட வச்சுக்கிட்டீங்க தெரியுமா ஜீ…” என்று நிவாஸ் பம்மிக்கொண்டு பேச..

அதில் மார்ட்டினோ ஸ்டைலாக இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன்.. “உங்ககிட்ட தான் வச்சிக்கிட்டேன் மிஸ்டர் நிவாஸ்…”கேலியாக பேச…

அதில் நிவாஸிற்கு பத்திக்கொண்டு வந்தது… என் வீட்டுக்குள்ள புகுந்து நான் கல்யாணம் பண்ணிக்க இருந்தவள நீங்க தூக்கிட்டு போயிட்டீங்கஅதுவும் இல்லாம எங்களோட குடும்ப பொக்கிஷத்தை சேர்த்து தூக்கிட்டு போயிருக்கீங்க.. இதுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லனும்…” என்று கூற..

மார்ட்டினோ புருவத்தை வருடியவனோ… ம்ம்ம் இதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா உங்ககிட்ட…”என்றவனின் வார்த்தையில் நிவாஸ் அப்படியே ஆத்திரத்தை அடக்கியவாறு இருக்க…

ம்ம்ம் ஏதாவது ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் மிஸ்டர் நிவாஸ்…” என்றவனோ… தன் வாட்சை திருப்பி பார்த்தவன்… ம்ம்ம் எனக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன்…” என்றவனோ நீ எல்லாம் ஒரு ஆளா என்ற ஒரு பார்வை பார்த்தவாறு அங்கேயிருந்து நகர்ந்துவிட்டான்.

நிவாஸோ போகும் அவனை அடிபட்ட வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு கண்டிப்பா நீ இதுக்கு ஒரு நாள் ஃபீல் பண்ணுவ மார்ட்டின்…” என்று நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்றது போல திட்டமும் தீட்டி கொண்டிருந்தார்…

இங்கு மும்பைக்கு வந்து இறங்கிய மாணிக்கவாசகமும், காஞ்சனாவும், ராகவ்வும் முதலில் போய் நின்றது மார்ட்டினின் வீட்டிற்கு முன்னால் தான்… மூவரும் மார்ட்டினின் வீட்டை பார்த்து ஆ என்று வாயை திறந்துக்கொண்டு நிற்க..

வாட்ச்மானோ அவர்களை வித்தியாசமாக பார்த்தவர் யார் நீங்க எதுக்காக இங்கே பாத்துட்டு இருக்கீங்க..” என்று கேட்க…

உங்க முதலாளிய பாக்கனும்ங்க…”என்று ராகவ் கூற

அதெல்லாம் ஐயாவை பார்க்க முடியாது…” என்ற வாட்ச்மேனோ… அய்யாவோட அனுமதி இல்லாம யாரையும் இங்க பார்க்க முடியாதுஅதுவும் அவர் வீட்ல எல்லாம் வச்சு பார்க்கவே முடியாது…” என்று கூற

இல்ல சார் இங்க எங்க பொண்ணு இருக்கு…” என்று காஞ்சனா இழுக்க…

ம்ச் அதெல்லாம் யார் இருந்தாலும் பார்க்க முடியாது மேடம்… முதல கிளம்புங்க…”என்றார் வாட்ச்மேன்..

காஞ்சனாவிற்கோ அதனை கேட்டு கோவம் பொங்கியது… “அதெல்லாம் நீ எப்படி சொல்லுவஎன் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு தான் நாங்க வந்து வந்தோம்எங்களையே உள்ளே விட மாட்டியா…” என்று காஞ்சனா கத்திக் கொண்டே இருக்க..

அப்போது தான் உறக்கத்திலிருந்து விழித்து தோட்டத்தில் ரன்னிங் போவதற்காக இறங்கி இருந்தான். மார்ட்டின்அவனும் ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்க அப்போதுதான் வாசல் கதவுப்பக்கம் இருந்து சத்தம் கேட்க… புருவம் சுருக்கியவனோயாரது என்று வெளியில் வந்து எட்டிப் பார்க்க..

அங்கே நின்றிருக்கும் மூவரையும் வித்தியாசமாக பார்த்த மார்ட்டினோ வாட்ச்மேனின் அருகில் வந்தவன் யாரது…” என்று கம்பீரமான குரலில் கேட்க… அதில் வாட்ஸ்மேன் மட்டும் அல்ல அந்த மூவருமே பயந்து போனார்கள்…

சார் இவங்க யாரோ நம்ம வீட்ல இருக்காங்களே மைத்தும்மா.. அவங்கள பாக்குறதுக்காக வந்துருக்காங்களாம் சார்.. உங்க அனுமதி இல்லாம உள்ள விடமாட்டேன்னு சொன்னேன் இவங்க வம்பு பண்றாங்க சார்…”என்று கூற..

மார்ட்டினுக்கோ அவர்கள் யார் என்று தெளிவாக புரிந்து போனது… மார்ட்டினின் கண்கள் அவர்களையே அளந்துக்கொண்டிருக்க.. தங்களுக்கு முன்னால் சிங்கம் போல கம்பீரமாக நிற்கும் ஆடவனை பார்த்து அந்த மூவரும் கொஞ்சம் டர்ஜ் ஆகதான் செய்தார்கள்…

மார்ட்டினோ முதலில் அவர்களை சந்தேகமாக பார்த்தவன் அதன் பின்பு அவன் மனதிலோ இதுதான் சரியான சமயம் இவர்களுடன் மைத்ரேயியை அனுப்பி விட வேண்டியது தான் என்று தன் மனதில் இருக்கும் அவளுக்கு ஒரு இறுதி அத்தியாயம் போட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தவனோ…

ம்ம்ம் அவங்கள உள்ள விடு…”என்றவன் அவர்களை பார்வையால் உள்ளே வரசொல்ல…

அந்த மூவரும் அப்பாடா என்று பல்லை இளித்தவாறு உள்ளே வந்து விட்டனர்உள்ளே வந்து ஹாலில் மூவரையும் உட்கார வைத்த மார்ட்டினோ கம்பீரமாக அரிமா போல சோபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டு அவர்கள் மூவரையும் குறுகுறுவென்று பார்க்கஅவர்களோ அந்த வீட்டினை தான் கண்களால் அளந்துக்கொண்டிருந்தான்.

காஞ்சனாவோ கடவுளே இந்த வீட்லையா அவ மாசக்கணக்கா இருந்தா… ஆஆஅ அப்ப்டியே அரண்மனை மாதிரில்ல இருக்கு…”என்று மனதில் பொருமிக்கொண்டே உட்கார்ந்திருக்க…

ராகவ்வும், மணிவாசகமும் கொஞ்சம் அவனது தோரணையில் பயப்படத்தான் செய்தனர்.. நேராக முன்பை வந்து இறங்கியவுடன் மார்டினின் வீட்டிற்கு தான் வந்து இறங்கினார்கள்.. அவர்களுக்கும் அவனை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது தான்.. ஆனால் ஊரிலிருந்து வரும்போது நிவாஸிற்கு அழைத்து மார்ட்டினை பற்றி விசாரிக்கவும் தயங்கவில்லை..

என்ன செய்ய போறீங்க…”என்று நிவாஸ் புரியாமல் கேட்க..

எப்டியாச்சும் நாங்க அவள இழுத்துட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறோம் மாப்ள.. அதுக்காக தான் நாங்க மும்பை வரோம்..”என்று காஞ்சனா குழைய..

நிவாஸோ சிறிது நேரம் யோசித்தவனோ.. மனதில்.. “நாம கூப்டா தான் வரமாட்றா அட்லீஸ்ட் இவங்க கூடையாச்சும் வராலான்னு பாப்போம்.. அந்த லாக்கெட் போனா போது.. பல வருஷமா இருந்தது தானே.. ஆனா அந்த மைத்ரேயி அந்த லாக்கெட்ட விட காஸ்ட்லி.. அவ என்னை ஏமாத்திட்டு அந்த மார்ட்டினோட போனதுக்கு நான் வாழ்நாள் முழுசும் அவள எங்கூட வச்சி சித்ரவதை செய்யனும்… ம்ம் அதான் சரி…”என்று நினைத்துக்கொண்டவனோ… இங்க பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி மார்ட்டின் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல.. அவன் மும்பையிலையே பெரிய கேங்ஸ்டர்… சோ அவன நீங்க நெருங்குறதே கஷ்டம் தான்.. ஆனா அங்க இருக்குறது உங்க வீட்டு பொண்ணு சோ மார்ட்டின் கொஞ்சம் இறங்க வாய்ப்பிருக்கு.. அவள பாசமா அன்பா பேசி இழுத்துட்டு வந்து எங்கிட்ட ஒப்படைங்க.. இல்லனா என் காசும் அந்த இடமும் எனக்கு வந்தாகனும்…”என்று மிரட்டியவன் இன்னும் மார்ட்டினை பற்றி கூறியவன் அவனின் வீட்டு முகவரியையும் கொடுத்தான்..

அதை வைத்துதான் அவர்கள் நேராக மார்ட்டினின் வீட்டிற்கே வந்துவிட்டனர்… மார்ட்டினோ அவர்களையே யோசனையாக பார்த்தவன்… ம்ம் சொல்லுங்க உங்க பொண்ணு இங்க தான் இருக்காஅவள கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களா..” என்று தாடையை வருடியவாறே கேட்க…

அதனை கேட்ட காஞ்சனாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை… ஆமா ஆமா தம்பி அவள கூப்ட்டு போக தான் வந்திருக்கோம்…” என்று கூறிய காஞ்சனாவோ… தம்பி என் பொண்ணு அம்மா இல்லாத பொண்ணு தம்பி.. என் பொண்ணு மாதிரியே வளத்தேன்ப்பா அவள தெரியுமாஆனால் அவ என்னனா நாங்க ஏற்பாடு பண்ண கல்யாணம் புடிக்கலைன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டா தம்பி…” என்று கூற..

இதை எல்லாம் கேட்ட மார்ட்டினின் முகமோ யோசனையில் சுருங்கி போக… “அப்புறம் எப்படி இவ நிவாஸ் கைல மாட்டியிருப்பா…” என்று யோசித்தவனுக்கோ என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் போனது..

மைத்துவும் அவளுக்கு என்ன நடந்தது தன் குடும்பம் தனக்கு என்ன செய்தது என்று எதையும் மார்ட்டினிடம் கூறியிருக்கமாட்டாள்… வீட்டை விட்டு வந்துட்டேன் சார்..”என்று மட்டும் சுருக்கமாக கூறியிருக்கஅதுவும் நிவாஸ் தன்னை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவது மட்டுமே கூறி இருக்க.. தவிற அவள் சித்தியின் கொடுமை பற்றியோ.. தம்பி, அப்பாவினை பற்றியோ எதுவும் கூறாததால் மார்ட்டினோ ஏதோ கல்யாணம் பிடிக்கலன்னு ஓடி வந்துட்டா போல இருக்கு…” என்று தான் நினைத்துக் கொண்டான்…

காஞ்சனாவோ அவனின் யோசனை முகத்தையே கலவரமாக பார்க்க.. “ம்ம் சரி ஓகே உங்க பொண்ண அனுப்பி வைக்கிறேன் அவளை நீங்க ஊருக்கு கூட்டிட்டு போலாம்…” என்று கூற… அதில் தான் அந்த மூவருக்கும் நிம்மதியே வந்தது…

ஹப்பாடா…”என்று காஞ்சனா நெஞ்சில் கை வைக்க… மார்ட்டினோ மைத்துவை அழைக்க அவள் அறையினை நோக்கி சென்றவன் அந்த அறையின் கதவினை தட்டமைத்து இப்போது எல்லாம் அறையில் தான் அடைந்து கிடக்கின்றாள்.. இத்தனைக்கும் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழும்புபவள் அப்படியே அறையிலேயே முடங்கி கிடப்பாள்இப்போது தன்னுடைய அறை தட்டப்படவும் வேலைக்காரர்கள் தான் வந்துவிட்டார்கள் போல என்று நினைத்த மைத்துவோ போய் கதவினை திறக்கஅங்கு கண்டிப்பாக அவள் மார்ட்டினை எதிர்பார்க்கவே இல்லை…

(கேப்பச்சினோ…)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!