அத்தியாயம்-9
மைத்ரேயியோ அவள் இருந்த அறையிலேயே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்க…
“அட சும்மா அழுதழுது உடம்ப வீணாக்கிக்காத.. நாளைக்கு வந்துருவாரு உன் வருங்கால புருஷன்.. அவரோட டாட்டா காட்டிட்டு கிளம்பிட்டே இரு..” என்று காஞ்சனா கூறியவாறு செல்ல..
ராகவ்வோ “பரவால்ல உன்னால எங்களுக்கு இந்த வகையிலையாவது யூஸா இருக்கே..” என்றவாறு அங்கிருந்து செல்ல போக…
“ப்ளீஸ் ராகவ் நீயாவது அப்பாட்ட, சித்திக்கிட்ட சொல்லேன்.. என்ன அந்த ஆளு கூட அனுப்ப வேணாம்னு சொல்லு ப்ளீஸ்…”என்று கதற.. அவனோ அவளை உதட்டை சுருக்கி நக்கலாக சிரித்தவாறே செல்ல… இருவரையும் விழி விரித்து பார்த்த மைத்ரேயிக்கோ மனதோ அற்று போகியது.
இப்போது அவள் மனதில் இருப்பதெல்லாம்.. எப்படியாவது இங்கிருந்து தப்பி சென்று விட வேண்டும் என்று மட்டும் தான்… மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த வீட்டினை வீட்டு வெளியேறியவளோ பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறி போனை வாங்கி தன்னுடைய நண்பன் ஜான்சனுக்கு அழைத்து விட்டாள்…
ஜான்சன் என்றால் மிகவும் நெருக்கமான நண்பன் என்று எல்லாம் இல்லை… அவளுடன் ஒன்றாக படித்தவன் அவ்வளவுதான்.. மைத்து அவனிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூற.. அவனோ அனைத்தையும் கேட்டவன்.. “ஓகே மைத்து.. நீ உடனே ரயில்வே ஸ்டேஷன் வந்துரு… என்னோட பெரியம்மா சென்னையில இருக்காங்க.. நீ அங்க அவங்களோட போயிட்டனா உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. அவங்க ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தான்..” என்று கூற மைத்ரேயிக்கு அது தான் சரி என்று பட்டது.
சரி என்று கூறியவளோ வேகவேகமாக தன்னுடைய வீட்டிற்கு ஓடியவள் சுற்றி முற்றி பார்க்க… இன்னும் ரயில் வருவதற்கு இரண்டு மணி நேரம்தான் இருந்தது, காஞ்சனாவோ பணம் கிடைத்த குஷியில் நகை வாங்குவதற்காகவும், ராகவ்வோ சூதாட்டத்திற்கும் சென்று விட்டிருந்தான்.
வீட்டிலோ ஆட்கள் அவ்வளவாக இல்லை.. அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு தான் மைத்ரேயியோ தன்னுடைய பாட்டினை பார்க்க செல்ல.. ரமணியோ முற்றிலும் மயக்க நிலைக்கு தான் சென்றிருந்தார்..
அவரை அழுகையுடன் பார்த்தவள் அவரின் அருகில் உட்கார்ந்து “என்ன மன்னிச்சிடு பாட்டி கடைசி காலத்துல கூட உன்னோட இருக்க முடியாத அளவுக்கு நான் கோழை ஆயிட்டேன்…” என்று மைத்ரேயி அழுக.. அது அந்த வயதானவர் காதில் விழுந்தது போல.. அவர் கண்ணில் இருந்து தாரதாரையாக கண்ணீர் வடிந்தது.. அதனை பார்த்தவள் அதனை தன்னுடைய தாவணியில் துடைத்துவிட்டு தன்னுடைய பாட்டிக்கு நெற்றியில் முத்தமிட்டவள்…
“பாட்டி… நான் போயிட்டு வரேன்..”என்றவள் மனமே இல்லாமல் வேகமாக அந்த வீட்டினை விட்டு ஓட ஆரம்பித்து விட்டாள்…
மைத்ரேயி இதோ இப்போது இரண்டு மணி நேரமாக ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து இருக்க அவளது நண்பன் ஜான்சனும் டிக்கெட்டை வாங்கி விட்டு வந்து விட்டான்… அவனோ கலக்கமாக உட்கார்ந்திருக்கும் பெண்ணவளை பார்த்து..
“மைத்து.. நீ ஒன்னும் பயப்படாத சென்னை போய் இறங்கினோனே உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது..” என்று ஜான்சன் கூற.
அவளோ அதற்கு வேகமாக தலையாட்டினாள்… ஆனால் ரயில் வருவதற்கு முன்பாகவே அந்த நிவாஸ் சேட்டின் ஆட்கள் மைத்ரேயியின் முன்னால் வந்து நிற்க அதில் அதிர்ந்தே போனாள் பெண்ணவள்… ஜான்சன் அவர்களை புரியாமல் பார்க்க… மைத்ரேயி ஜான்சனின் பின்னால் ஒழிந்துக்கொண்டாள்.. அதில் அவனுக்கு விளங்க.. அவளை மறைத்தவாறே நின்றான்… ஆனால் அவர்கள் ஜான்சனை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை… அவனை ஒரே தள்ளாக அந்த பக்கம் தள்ளிவிட்டவர்கள் மைத்ரேயியை ஒரே தூக்காக தூக்கிக்கொண்டு செல்ல…
“ஆஆஆ… என்ன விடுங்க ப்ளீஸ்.. என்ன விடுங்க…” என்று அவர்களிடம் பரிதவித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தவளை கவனிக்க பாவம் அங்கு யாருமே இல்லை..
“ஏண்டி இவளே.. எவ்வளவு தைரியம் இருந்தா வீட்டை விட்டு ஓடுவ…” என்று காஞ்சனா மைத்ரேயியை அடிக்க பாய…
அதனை சட்டென்று தடுத்த ராகவ்வோ… “அந்த நிவாஸ் என்ன சொல்லி இருந்தாரு இவ மேல கை வைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காருல்ல.. அப்புறம் எதுக்கு அவளை அடிக்க கை ஓங்குற…” என்ற ராகவ்வோ… “ம்ச் நல்லவேள அந்த சேட்டோட ஆளுங்க இந்த ஊர சுத்தி பாதுகாப்பு போட்டதால இவள ஓட விடாம புடிச்சிட்டு வந்தானுங்க…” என்று கூறிய ராகவ்வோ
அப்படியே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தவளின் அருகில் உட்கார்ந்து “நீ என்ன நெனச்சிட்டு இருக்க இந்த ஊர்ல இருந்து தப்பிச்சு போய்ட்டா உன்னை அந்த சேட்டு சும்மா விட்டுருவான்னு நினைச்சிட்டு இருக்கியா…” என்று கேட்க.. அதில் வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மைத்ரேயியை நக்கலாக பார்த்தவன் இல்லை என்று வேகமாக தலையாட்டியவாறே… “நீ இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் அந்த சேட்டு உன்ன தூக்காம விட மாட்டான்..” என்று கூற அதில் பெண்ணவளுக்கு பதறிக்கொண்டு தான் வந்தது.
எப்படி அவனிடமிருந்து தப்பிப்பதா இல்லை தன்னுடைய வாழ்க்கை அந்த கிழவனிடம் மாட்டி அவனிடம் அடிபட்டு சாகத்தான் வேண்டுமா என்று அதனையே நினைத்துக் கொண்டிருக்க அவளின் எண்ணத்தை சரி என்பது போல அந்த நிவாஸும் அடுத்த இரண்டு நாளில் அவளின் முன்னால் வந்து நின்றுவிட்டான்…
“என்ன பேபி என்ன விட்டு தப்பிச்சு ஓட பாத்தியாமே..” என்று நக்கல் தோரணையில் கேட்க…
அவளோ.. அவனை நிமிர்ந்து கூட பார்க்கவே இல்லை… அப்படியே குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருக்க.. சேட்டோ மாணிக்கவாசகத்தையும், காஞ்சனாவையும் வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தான்…
அதில் அரண்டவர்கள் “ஐயோ நாங்க தெரியாம அவளை ஓட விட்டுட்டோம் சார்.. எங்களை மன்னிச்சிடுங்க.. கழுத எங்கள ஏமாத்திட்டு வெளியில ஓடிருச்சு…” என்று மாணிக்கவாசகம் மன்னிப்பு கேட்க…
அதனை கேட்டு தலையாட்டிய நிவாஸோ “நாளைக்கு காலைல எங்களுக்கு மதுரை ஏர்போர்ட்ல தனி ஜெட் இருக்கு… நாங்க நாளைக்கு காலைல கிளம்பிடுவோம்..” என்று கூறிய நிவாஸோ… “காலையில நான் இவள வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்…” என்று கூறியவன் நேராக மைத்ரேயியின் அருகில் போய் உட்கார்ந்தவன் அவள் கன்னத்தை வருட… அவளுக்கோ அந்த அருவருப்பில் உடல் அதிர்ந்து போனது… வெடுக்கென்ற அவன் கையை தட்டி விட்டவளை பார்த்து…
“பார்ரா..” என்ற அந்த சேட்டோ..அவள் காதிடம் குனிந்தவன்… “மும்பை வா பேபி.. நான் வச்சு செய்றேன்…” என்று கூறியவன் அவள் உடல் முழுவதும் தன் பார்வையை மேய விட அவளுக்கோ அருவருப்பு தாங்கவே முடியவில்லை..
“உங்க பொண்ணா இருந்தா இப்படி விடுவிங்களா சித்தி…” என்று காஞ்சனாவிடம் கோவமாக கேட்க…
காஞ்சனாவோ “என்னடி ரொம்ப ஓவரா தான் பேசுற… உன் மேல கை வைக்க கூடாதுனு அமைதியா இருக்கேன்… இல்லன்னு வை உடம்புக்கு மேல வரி குதிரையாட்டம் போட்டு வச்சிருவேன்…” என்று கத்திய காஞ்சனாவோ.. “ம்ம் என்ன கேட்ட என் பொண்ணா இருந்தா இது மாதிரி பண்ணுவீங்களானு தானே கேட்ட… நீ தான் என் வயத்துலையே பொறக்கலையடி… அப்புறம் உனக்கு என்ன பண்ணா தான் எனக்கு என்ன…” என்று மனிதாபிமானமற்ற பதிலை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட… அந்த ராட்ஸசியின் பதிலில் சோர்ந்த பெண்ணவளும் அப்படியே வெற்றுத்தரையில் சிலை போல படுத்துவிட்டாள்…
நாளை நடக்கப் விபரீதம் அவளுக்கு ஈரக் கொலையையே நடுங்க செய்தது.. அப்படியே அதனையே யோசித்தவாறு படுத்திருக்க… அவள் மனமோ விடியவே கூடாது இறைவா என்று கூச்சலிட்டது.. ஆனால் இறைவன் அதனை காதிலையே போட்டுக்கொள்ளவில்லை..
காலையில் சரியாக எட்டு மணிக்கு அவள் வீட்டின் முன்னால் காரை நிறுத்திய நிவாஸோ வரமாட்டேன் என்று கதறி துடித்து பெண்ணவளை சட்டென்று காரில் இழுத்து போட்டுக்கொண்டு மதுரை ஏர்ப்போர்ட் நோக்கி சென்றுவிட்டார்..
இங்கு மார்ட்டினோ வழக்கம்போல தன்னை ஏமாற்றிய ஒருவனை வைத்து வதம் செய்து கொண்டிருக்க… அவனது அலைபேசியோ ஒலி எழுப்பியது… கையில் இருக்கும் ரத்தத்தை கபீர் நீட்டிய டவலில் துடைத்துக்கொண்டவனோ… பின் போனை எடுத்துப்பார்க்க.. அதில் வந்த நம்பரை புருவம் சுருக்கி யோசித்தவாறே பார்த்தவன் போபை காதில் வைக்க… அதிலோ அவனுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்று கிடைத்திருந்தது…
“ம்ம்ம்… ஓ அப்படியா.. ம்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்… ஐ நோ… அந்த பெரிய ராஜ குடும்பத்தோட பாரம்பரிய லாக்கேட் தானே…”என்று போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க… அவனுக்கு முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உயிரை விட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்…
“ம்ம்ம் சரி சரி டீல் எனக்கு ஓகே தான்.. ஆனால் இது முடிச்சதுக்கு அப்புறம் ஐ வான்ட் லாட் ஆஃப் பே…” என்று கம்பீரமாக கூற…
அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ… மார்ட்டின் நக்கல் சிரிப்பினை சிந்தியவன்.. “நான் மார்ட்டின் லுதாஸ்.. என்ன ஏமாத்த நினைக்காத… ஐ வான்னா கில் யூ..”என்று கத்தியவன்… அவன் போனிலேயே டீலை பேசிக்கொண்டு இருக்க… “அந்த நகையோட மதிப்பு எனக்கு தெரியாதுன்னு ஒரு மதிப்ப நீயா சொல்றியா..” என்ற மார்ட்டினோ… “கிட்டத்தட்ட அந்த நகையோட மதிப்பு பல லட்சம் கோடி… ஏன்னு கேட்குறியா அது கிட்டதட்ட நானூறு வருஷம் பழமையான கல் வச்ச லாக்கேட்… அதுவும் அந்த காலத்துலையே கியூபாவுல இருந்த ஒரு ராணிக்கிட்ட இருந்து தூக்கிட்டு வந்த லாக்கெட் அது.. அதுக்கு அவ்ளோ மதிப்பு இருக்கதானே செய்யும்…”என்று அனைத்தையும் பிட்டு பிட்டு வைக்க… அந்த பக்கத்திலோ பயங்கர அமைதி..
இருக்காதா பின்னே மார்ட்டினின் மூளையை எதிரில் உள்ளவன் சாதாரணமாக அல்லவா எடைப்போட்டுவிட்டான். அந்த பக்கம் என்னவோ கேட்க… “ம்ம் வழக்கம் போல இதுல எனக்கு 20% கிடையாது… 40% கொடுக்கணும்…” என்று கூற.. அதற்கு அந்த பக்கம் உள்ளவன் ஏதோ மறுப்பு கூறினான் போல “ம்ச் அப்ப இந்த ப்ராஜெக்ட்ட நீ வேற யார் கிட்டையாவது கொடுத்துடு…” என்று கூற…
அதற்கும் அந்த பக்கம் ஏதோ மறுப்பு வர… “ஸீ… உனக்கே தெரியும் அது ஒரு ராஜ குடும்பத்தோட வீட்டுக்குள்ள பதுக்கி இருக்குன்னு.. அதை போய் எடுக்கறதே பெரிய ரிஸ்க்.. இந்த நேரத்துல நான் உனக்கு இந்த ரிஸ்க்லாம் தாண்டி தான் உனக்கு எடுத்து கொடுக்கணும்…. அதனால இதோட ரேட் அதிகம் தான். வேணும்னா ஓகே சொல்லு இல்லன்னா வை..” என்று ஒரு டீலைப் பேசிக் கொண்டிருந்தான்… அதில் அந்த பக்கம் ஓகே சொல்ல…
“ம்ம் குட்… டீல்…ஓகே..” என்று மார்ட்டின் போனை வைத்தவன்… கபீரை அர்த்தத்துடன் பார்க்க… அவனும் தலையாட்டியவாறே சென்றான்… இந்த ஒரு டீல் தான் அவனது வாழ்க்கையையே மாற்றப்போகிறது என்று பாவம் அவனுக்கு தெரியாமல் போனது.
(கேப்பச்சினோ…)