காத்திருப்பு : 40
ஆதி வெளியே சென்றதும் சூர்யா அருகில் வந்த வதனா.
தனது நடுங்கும் விரல்களால் அவனது கையைப்பிடித்தாள்.
“மாமா…..” என்றாள்.
அவளது அழைப்பு அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. எத்தனை நாட்கள் அவளது அழைப்பிற்காகக் காத்திருந்தான். இன்று அவள் அழைக்கிறாள். அவன் கேட்டு மகிழ முடியவில்லை.
“மாமா உன்னோட கண்ணம்மா வந்திருக்கன் மாமா.என்ன கண்ணம்மானு ஒரு தடவை கூப்டு மாமா. மாமா நீ ஆசைப்பட்ட மாதிரியே நமக்கு பையன் இருக்கான் மாமா.
” பாரு மாமா அவனை. ” என்று அவள் அழுதுகொண்டிருந்தாள்.
வெளியே வந்த ஆதி யாருடனும் பேசாது hospital வெளியே வந்தான். வெளியே விக்கி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான்.
“என்ன காளி ( விக்கியின் அடியாள்) சூர்யா செத்திருவானா?”
“ஆமா ஐயா. அவன் வண்டிய நல்லா அடிச்சிட்டன். பொழைக்கிறது கஸ்ரம் ஐயா.”
“அந்த சூர்யா சாகணும் காளி. அவன் மட்டும் இங்க வந்திருக்காமல் இருந்திருந்தா எனக்குத்தான் அந்த project கிடைச்சிருக்கும். இப்போ அவன் accidentஆகி இருக்கான்.
அதைக் காரணம்காட்டி நான் அந்த projectஅ வாங்கிக்கொள்வன். சூர்யா தோத்திடுவான். யார்கிட்டையும் தோத்துப்போகாதவன் என்கிட்ட தோத்துப்போயிடுவன்.” என சிரித்தபடி காளியுடன் அங்கிருந்து சென்றான்.
இதைக் கேட்ட ஆதிக்கு வதனா சொன்னது ஞாபகம் வர தன் தந்தை தோக்கவேகூடாது என நினைத்தவன் சூர்யா அறையை நோக்கி ஓடியவன். கதவை வேகமாக திறந்துகொண்டு நுழைந்தான்.
மகன் வந்ததை அறிந்த வதனா
“என்னாச்சி ஆதி”
“அம்மா அப்பாவ எந்திரிக்கச் சொல்லுங்க அப்பா தோத்துப்போயிதகக்கூதாதுது.” என்றான்.
“என்ன சொல்ற ஆதி”
தான் கேட்டவற்றை தாயிடம் சொன்னவன். தந்தையின் அருகில் சென்று
“அப்பா நீங்க யாதுகித்தையும் தோத்துப்போயிதக்கூதாதுப்பா. அவங்க மோசம்பா எந்திரிசிச்சி வந்து அவங்கள அதிப்பா.”
“அம்மாஉங்களபத்தி நெறைய சொல்லும்பா. நீங்க என்னை தொம்ப எதிர்பாத்ததா சொல்லுவாங்கப்பா. நான் உங்கள மிஸ் பண்றன்பா. ஆதிகூத பேசுங்கப்பா. அம்மா அழுதாங்கப்பா அலங்ககூத பேசுங்கப்பா.”
“ஆதிக்கு அப்பா வேணும். அவது தோத்துப்போகக்கூதாதுப்பா” என்ற ஆதி சூர்யா எதுவும் பேசாமல் இருக்க அழ ஆரம்பித்தான்.
அதைப் பார்த்த வதனா
“மாமா ஆதி எப்பவும் அழுததே இல்ல மாமா. அவன் உன்னப்போலதான் மாமா எதுக்கும் கலங்கமாட்டான். பேசு மாமா”
“நான் உன்னவிட்டு போகமாட்டன் மாமா. கண்ணம்மானு கூப்டு மாமா” என அழுதாள் வதனா. அவனது ஒரு பக்கம் வதனாவும் மறுபக்கம் ஆதியும் சூர்யாவைப் பார்த்தபடியே இருந்தனர்.
அப்போது சத்தி அவ் அறைக்கு வந்தான். சூர்யாவைப் பார்த்த அவனது கண்ககளும் கலங்கின.
“வதனா”
அவனைத் திரும்பிப்பார்த்த வதனாவிடம்
“நான் சக்தி. டிடைக்டீவா இருக்கன். சூர்யாவோட பிரண்ட்டுமா. உங்கள தேடத்தான் என்ன வரச்சொன்னான்மா. உன்ன பார்க்கத்தான் வந்தான். அதுக்குள்ள இப்பிடியாயிடுச்சேமா”
“அண்ணா உண்மையாவா? அவரு என்னைத்தேடியா வந்தாரு?”
“ஆமாம்மா. உன்னையும் ஆதியையும் பார்க்கத்தான்மா. வந்தான்”
“அண்ணா ” என்றவள் ஆதி தன்னிடம் கூறியவற்றை சக்தியிடம் சொன்னான்.
“சரிமா நான் அதைப் பார்த்துக்கிறன். நான் வெளில இருக்கன்மா ” என்றவன் வெளியே வந்தான்.
சிறிது நேரத்தில் வந்த டாக்டர் அவர்களை வெளியில் இருக்கச் சொன்னார். வதனாவும் ஆதியும் வெளியில் வந்தனர். வாசு சந்தனாவிடம் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துப்போகச் சொன்னான். கமலேஷூம்அதற்குச் சம்மதித்தான்.
வதனா போவதற்கு மறக்கவே யாரும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. ஆதிக்கு அவர்களை முதல்லேயே தெரியும் என்பதால் பிரச்சனை பண்ணவில்லை. இறுதியில் வதனா, கமலேஷ் , வாசு , சக்தி மூவரும் வெளியில் இருந்தனர்.
கமலேஷ் அனைவரையும் தேநீர்ர குடிப்பதற்காக அழைத்துச் சென்றான்.
“வதனா நீ ஏன் எங்களை விட்டுப் போன என்று நாங்க உன்கிட்ட கேக்கணும்னு இருந்தோம். ஆனா சூர்யா நீ எப்போ திரும்பி வந்தாலும் உங்கிட்ட அதை மட்டும் கேக்கவே கூடாதுனு சொல்லிட்டான்மா.”
“சூர்யா தன் மீது வைத்திருக்கும் அன்பில் அவளுக்கு அழுகை வந்தது.
வதனா நீ போனப்புறம் என்னாச்சினு தெரியுமா?”என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லிமுடிக்க வதனாவால் தாங்கமுடியாமல் அழுதுகரைந்தாள். எத்தகைய அன்பு தன்னவனது அன்பு என நினைத்து நினைத்து அழுதாள்.
அவளைத் தேற்றிய மூவரும் சூர்யா அறையை நோக்கி சென்றனர். வதனா தன்னவன் நினைவிலே மூழ்கிருந்தாள்.
தேவி வீடு……….
தீரா சாப்பிடாமல் அடம்பிடிக்க ஆதிதான் சமாதானம் செய்து உண்ணவைத்தான்.
அனைவரும் அவனிடம் தங்களை அறிமுகப்படுத்த வந்தனர். அதனைத் தடுத்த ஆதி.
“எனக்கு உங்க எல்லோரையும் அறிமுகப்படுத்த வேண்டியது என்னோட அப்பாதான். பிளீஸ் அவரு வந்து நீங்க யாருனு சொல்லட்டும் அதுவரைக்கும் நான் எனக்கு பிடிச்சமாதிரி கூப்டுவன் சரியா?”
அவனது பேச்சில் தெரிந்த கம்பீரத்தை உணர்ந்த அனைவரும் அவன் சொன்னபடி சூர்யாவே அறிமுகப்படுத்தட்டும் என்றனர். பின் அவர்கள் தத்தம் அறைக்குச் சென்றனர்.
hospital…………
டாக்டர் சொன்ன நாலுமணி நேரம் முடிந்துவிட்டது. டாக்டர் என்ன சொல்வார் என்று பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தனர். வதனா தன் கையினால் தாலியை நன்றாகப்பிடித்தபடி இருந்தாள். தன்னவன் தன்னைவிட்டு எங்கும் போகக்கூடாது என்பதைப் போல் அது இருந்தது.
டாக்டரும் சில நிமிடங்களில் வெளியே வந்தார். தன்னையே ஆவலுடன் பார்த்தபடி நின்ற அனைவரையும் பார்த்தவர். பெருமூச்சுடன் தான் சொல்லவந்ததைச் சொன்னார். அதைக் கேட்ட வதனா மயங்கி விழுந்தாள்.
டாக்டர் என்ன சொன்னார்?????
காத்திருப்புத் தொடரும்…………………