Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 29

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 29

by Thivya Sathurshi
4.6
(21)

வாழ்வு : 29

“குருஜி… குருஜி… என்னோட துர்கா கண்ணு முழிச்சிட்டா, வந்து பாருங்க குருஜி..” என்று பதட்டத்துடன் ஓடிவந்தவர் சிவலிங்கத்தின் முன்னால் இருந்த குருஜியின் கால்களைப் பிடித்தார். கண்களை விழித்துப் பார்த்த குருஜி, அவன் கூறியது கேட்டு, “கிருபாகரா உண்மையிலேயே துர்கா கண்விழித்து விட்டாளா?” என்று கேட்டார். 

“ஆமாம் குருஜி. நான் சொல்றது நிஜம்தான். நீங்களே வந்து பாருங்களேன். என்னோட துர்கா கண்ணுமுழிச்சிட்டா. வாங்க குருஜி வந்து பாருங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக துர்காவிடம் ஓடி வந்தார். 

குருஜி வந்து துர்க்காவின் அருகில் அமர்ந்தார். அவரது உதவியாட்கள் அங்கே வந்து நின்றிருந்தார்கள். துர்க்காவிற்கு ஒரு புறம் கிருபாகரன் வந்து அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “துர்கா… துர்கா.. என்னைத் தெரியுதா துர்க்கா” என்று தவிப்புடன் கேட்டார் கிருபாகரன். குருஜி அவரைப் பார்த்து, “கிருபாகரா கொஞ்சம் அமைதியா இருப்பா. நான் துர்காவை கொஞ்சம் பாக்கணும்” என்றார். அவரும், “சரி குருஜி” என்று அமைதியானார். அவரின் கைகளோ துர்காவின் கைகளை பற்றியபடி இருந்தது. குருஜி மெதுவாக துர்காவிடம் பேச ஆரம்பித்தார். 

அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் துர்கா நன்றாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். துர்காவின் அருகில் இருந்த கிருபாகரனை காட்டிய குருஜி, “அம்மாடி துர்கா இவரை உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். கிருபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்த துர்க்கா, “தெரியும் குருஜி. இவரு என்னோட வீட்டுக்காரர்.” என்றாள். 

கிருபாகரனிடம் திரும்பிய, “என்னங்க நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்?” என்று கேட்டாள். அதற்கு அவளை பார்த்த கிருபாகரன், “நாம ஒரு ஆச்சிரமத்தில் இருக்கிறம். இங்கே இருக்கிறவங்க தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கிறாங்க.”

“இங்கேயா ஆமா எனக்கு என்ன பிரச்சனை? நம்ம குழந்தை…. நம்ம குழந்தை…. ஏங்க நம்ம குழந்தை..” என்றவர் அழ ஆரம்பித்தார். அவளை அணைத்துக் கொண்டார் கிருபாகரன். 

குருஜி துர்காவிடம், “நீ இப்பதான் மா கண்ணு முழிச்சிருக்க. உடனே நீ இப்படி பதட்டப்படக் கூடாது. அப்புறம் திரும்பவும் நீ உன்னோட சுயநினைவை இழந்திருவ, முன்னாடியும் இப்படித்தான், உனக்கு நினைவு திரும்பினப்போ அழுது புலம்பி பழையபடி நினைவிழந்திட்ட, இப்போ மறுபடியும் நீ சுயநினைவு வந்திருக்க, இதோ இங்க உன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே என் புருஷன், அவரோட அன்பு தான் உன்னை திரும்ப இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்கு. நீ பிழைக்கிறது கஷ்டம்னு இங்க எல்லாருமே சொன்ன போதுகூட, அவர்தான் இல்ல என் பொண்டாட்டி எனக்காக கண்விழிப்பாள் என்று உனக்காகவே காத்திருந்தார். அந்த மனுஷனுக்காக நீ பழையது எதையும் யோசிக்கக் கூடாது. உனக்காகவே உன் கூடவே இருக்கிற உன்னோட புருஷனை பற்றி மட்டும் யோசிம்மா. கிருபா துர்காவை பாத்துக்கோ, இன்னொரு தடவை இப்படி சுயநினைவு இழந்துட்டானா அப்புறம் அது யார் கையிலயுமே இல்லை.. அதனால இவ பதட்டப்படாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு.. மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அவ நல்லாவே குணமாயிட்டா..” என்றார் குருஜி. இருவரையும் காலையில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து தனது உதவியாளர்களுடன் சென்றுவிட்டார். துர்கா கண்விழித்த செய்தி அந்த ஆச்சரியமும் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அந்த ஆசிரமத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது போனை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காமல் சென்று கால் பண்ணினார்.

லேப்டாப்பில் இருந்து தனது வேலையைச் செய்து கொண்டிருந்த தீஷிதனுக்கு போன் வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புருவங்கள் சுருங்கின. ‘என்ன இந்த நேரத்துல போன் பண்றாங்க’ என்று நினைத்தவன் போனை எடுத்து காதில் வைத்தான். 

“ஹலோ…”

“ஹலோ சார் நான் ராமசாமி பேசுறேன்.”

“சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி என்ன விஷயம்?”

“சார் ரொம்ப முக்கியமான விஷயம்.அதுதான் இந்த நேரத்துல கூப்டேன்”

“அப்படியா என்ன விஷயம்”

“சார் நீங்க என்னை பாத்துக்க சொன்ன அந்த அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க சார்.”

“வாட் கண்முழிச்சிட்டாங்களா? இப்போ அவங்க எப்படி இருக்கிறாங்க?”

“ரொம்ப நல்லா இருக்காங்க சார். அவங்க வீட்டுக்காரரை கூட சரியா அடையாளம் சொல்லிட்டாங்க. குருஜி அவங்களை பாத்துட்டு, அவங்க பூரணமா குணமாயிட்டாங்கனு சொல்லிட்டாங்க சார்.”

“அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் உடனே அங்க வரேன்.”

“சரிங்க சார்” என்றவர் போனை வைத்தார். 

தீஷிதனும் போனை வைத்துவிட்டு தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர, அங்கே ஹாலில் பரந்தாமன் உட்கார்ந்திருந்தார். 

“டாடி நீங்க இன்னும் தூங்கலையா?”

“இல்ல தீஷி தூக்கம் வரல. உன் கல்யாண நல்லபடியா நடக்கணும்னு அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றார். 

“டாடி எல்லாம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லபடியா கல்யாணம் நடக்கும்.”

“அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் தீஷி. ஆமாம் இந்த நேரத்துல நீ எங்க கிளம்பிட்ட?”

“அதுவா டாடி, ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்துடறேன்.”

“தீஷி விளையாடுறயா? நாளை கழிச்சு கல்யாணத்தை வச்சுட்டு நீ இந்த நேரத்துல வெளில போறது சரியில்ல.”

“இல்ல டாடி நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும். நான் சீக்கிரமா வந்துடுவேன்.”

“அப்படி எங்க தான் போற தீஷி?”

“டாடி அதை இப்போ என்னால சொல்ல முடியாது நான் போயிட்டு வந்து சொல்றேன். ஆனா நான் போற இடம் உங்களுக்கு தெரிஞ்ச இடம் தான்.”

“என்ன எனக்கு தெரிஞ்ச இடமா? அப்படி எங்க போக போற?”

“அதை வந்து சொல்றேன் டாடி. நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குங்க.” என்றவன் அங்கிருந்து சென்றான்.

கார் அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்தது. காரை ஓட்டிக்கொண்டே புகழுக்கு போன் அடித்தான். புகழும் நல்ல தூக்கத்தில் இருந்தான். 

“ஹலோ புகழ்..”

“சொல்லுடா, என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க. எனி ப்ராப்ளம்?”

“ப்ராப்ளம் இல்ல புகழ், நீ சீக்கிரம் கிளம்பி இரு, நாம் ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.”

“இந்த நேரத்துல ஏன்டா இப்படி படுத்துற?”

“ரொம்ப ரொம்ப முக்கியம் புகழ். நீ சீக்கிரம் வா நான் உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.” 

“டேய் அவசரத்துக்கு பொறந்தவனே இருடா நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்.”

“நாம ஒன்னும் உனக்கு பொண்ணு பாக்க போகல ஃப்ரெஷாகிட்டு போக, அப்படியே எழுந்திரிச்சு வந்து வெளியே நில்லு” என்றவன் போனை கட் பண்ணினான். 

தலையில் அடித்துக் கொண்ட புகழ், “உலகத்துல ஆயிரம் ப்ரெண்ட்ஸ் வைச்சிருக்கிற எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு ப்ரெண்ட வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே, அப்பா முருகா நீ தான் என்னை காப்பாத்தணும். இந்த நேரத்துல எங்க கூப்பிடறான்னு தெரியலையே” என்றவன் முகத்தை கழுவி விட்டு வெளியில் வர அங்கே தீஷிதனின் கார் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து முன்னால் ஏறிய புகழ், என்னவென்று கேட்கும் முன்னரே கார் வேகமாக சென்றது. 

“டேய் மெதுவா போடா.. ஏன்டா இப்படி பாடா படுத்துற? அப்படி என்ன தலை போற காரியம் இவ்வளவு அவசரமா போறதுக்கு?”

“தலை போற காரியம் தான் மச்சான். அங்க போனா உனக்கு விஷயம் விளங்கும் அதுவரைக்கும் அமைதியா இரு. அப்படியா சரி அப்ப நான் கார்ல தூங்குறேன் நீ போக வேண்டிய இடம் வந்ததும் என்னை எழுப்பி விடு.”

“மவனே என்ன ஆனாலும் நீ இன்னைக்கு தூங்கவே கூடாது.”

“தீஷி இது உனக்கு நியாயமா தெரியுதா? நைட் வரைக்கும் கான்பிரன்ஸ் மீட்டிங்ல என்ன கலந்துக்க வச்சுட்டு, அப்போதான் போய் தூங்கினேன். அந்த நேரம் பார்த்து என்ன கூட்டிட்டு வர்ற ஏண்டா டேய் என்னால முடியலடா” என்றான் புகழ். 

“சரி… சரி கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்புறம் எழுப்பி விடுறேன்.”

“நன்றி நண்பா… நன்றி நண்பா..” என்றவன் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்கினான். 

………………………………………………… 

கிருபாகரனின் அணைப்பில் இருந்தாள் துர்க்கா. எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி தனது கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்து, கிருபாகரனின் இடது கை துர்க்காவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தது. 

“என்னங்க..”

“என்னம்மா..”

“நீங்க ஏங்க என் கூடவே இருந்தீங்க? என்னால உங்க வாழ்க்கையும் பாளாப் போச்சு. என்னை விட்டுட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு சந்தோஷமா இருந்திருக்கலாம்ல.”

“ஏய் என்ன துர்க்கா பேசுற? இன்பத்திலேயேயும் துன்பத்திலேயும் உன்கூட இருப்பேன்னு தான் உன் உன் கழுத்துல தாலி கட்டி, உன் கையை பிடிச்சேன். இப்போ இப்படி ஆயிட்டனு நான் உன்னை விட்டுட்டு போயிருவேன்னு நினைச்சியா? ஏன் துர்க்கா எனக்கு இப்படி நடந்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிருப்பியா?”

“என்னங்க சொல்றீங்க? உங்களை விட்டுட்டு எப்படிங்க என்னால இருக்க முடியும்?”

“அப்படித்தான் நானும், என்னால் மட்டும் எப்படி நீ இல்லாம இருக்க முடியும்” என்றவரை இறுக அணைத்துக் கொண்டார் துர்க்கா. “என்னங்க எனக்கு எங்க அண்ணா, தங்கச்சி எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. ஆமா எங்க அண்ணன் என்னை தேடி வரலையா?”

“வந்தாரு மா ஒரு நாள், ஆனா எனக்கு அவங்க கூட போக விருப்பம் இல்ல. அதான் உனக்கு குணமாகட்டும்னு உன் கூடவே இருந்திடுறன்னு சொல்லிட்டு நான் இங்கே இருந்துட்டேன்.”

“எனக்கு அவங்களை பாக்கணும் போல இருக்குங்க.”

“கண்டிப்பா பாக்கலாம். உனக்கு குணமாயிட்டுன்னு தெரிஞ்சாலே மச்சான் ஓடி வந்துருவாரு.”

“அண்ணனோட பசங்க, தங்கச்சியோட பசங்க எல்லோரும் வளர்ந்திருப்பாங்க இல்ல.”

“ஆமா துர்க்கா ரொம்பவே வளர்ந்து இருப்பாங்க”

“ஏங்க நம்ம குழந்தைய மட்டும் ஏன்ங்க அந்த கடவுள் பறிச்சிக்கிட்டாரு?”

“துர்கா எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான். நீ அந்த குழந்தையை பத்தி பேசி உனக்கு ஏதாச்சும் இன்னொரு முறை ஆயிடுச்சின்னா, அப்புறம் நீ கண்முழிச்சாலும் என்னை பார்க்க முடியாத இடத்துக்கு நான் போயிடுவேன். எனக்காக அதை நீ மறந்து தான் ஆகணும் துர்க்கா.”

“ஐயோ என்னங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க மட்டும் போதுங்க.” என்று இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து பேசிக்கொண்டே இருந்தார்கள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana September 19, 2025 - 6:11 pm

Wow super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!