Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 33 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 33 (On Going Story)

by Thivya Sathurshi
4.8
(17)

வாழ்வு : 33

தீஷிதன் டாக்டரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். தீக்ஷிதனின் கார் சத்தம் கேட்டதுமே அறைக்குள் இருந்த சம்யுக்தா வேகவேகமாக கீழே ஓடி வந்தாள். பரந்தாமனும் தமயந்தியும் சம்யுக்தாவைப் பார்த்து சிரித்தனர். ஆனால் சம்யுக்தா அதைக் கவனிக்காமல் வாசலுக்கு ஓடினாள். அதே நேரத்தில் உள்ளே வந்த தீக்ஷிதன் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டான். 

“என்ன யுக்தா.. கார் சத்தம் கேட்டு ஓடி வந்தியா?”

“ஆமாங்க, நீங்க சீக்கிரமா வந்திடுறன்னு சொல்லிட்டு இப்போதான் வர்றீங்க.. ரொம்ப பயந்திட்டேன்..”

“சரி அதுதான் நான் வந்திட்டேன்ல.. உள்ள வா போகலாம்.” என்று அவளது தோளில் கையைப் போட்டு உள்ளே அழைத்து வந்தான். 

“தீஷி எங்கதான் போன? ஒரு நாள் ஃபுல்லா நீ இல்லை.. எங்க போன எதுக்கு போனனு நாங்க பயந்துட்டோம்.” என்றார் பரந்தாமன். 

“டாடி ரொம்ப இம்போர்ட்டான வேலை.. அதனாலதான் போனேன்.”

“அப்படி என்ன வேலை?”

“அதெல்லாம் இப்போ சொல்ல மாட்டேன்.. டைம் வரும் போது சொல்றன். அத்தை எனக்கு பசிக்குது.. சாப்பாடு எடுத்து வைங்க நான் ஃப்ரெஷாகிட்டு வர்றேன். யுக்தா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி கொண்டு வா.” என்றவன் உள்ளே செல்ல, சம்யுக்தா காபி போடச் சென்றாள். 

“தமயந்தி தீஷியோட நடவடிக்கை சரியில்லையே.. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு.”

“என்ன அண்ணா இப்படி சொல்றீங்க?”

“தீஷிதன் ஏதோ பண்றான்னு மட்டும் புரியுது பாக்கலாம்.”

“அவன் எது செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் அண்ணா. நீங்க எதையும் போட்டு குழப்பிக்க வேணாம். நான் போய் அவனுக்கு சாப்பாட்டை ரெடி பண்றன்.”

“சரிமா..” என்றவர் அமரேந்திரனுடன் வெளியே இருந்த வேலையைப் பார்க்கச் சென்றார். 

அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து பால்கனியில் நின்றான். அப்போது அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது. அதன் ஓசைக்கு சொந்தக்காரியான சம்யுக்தா கதவை திறந்து உள்ளே வந்தாள். 

“எங்க இருக்கீங்க?”

“நான் பால்கனியில இருக்கேன் யுக்தா இங்க வா” என்றான். 

அவளும் காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து விட்டு, அங்கே நின்றிருந்த சம்யுக்தாவை தனது கையணைப்பில் கொண்டு வந்தான். தீக்ஷிதனின் ஒரு கரம் அவளது இடையை இறுகப் பற்றியது. மறு கையோ அவளது நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கியது. சம்யுக்தா கண்களை மூடிக் கொண்டு நின்றாள். அவளது முகத்தைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா..” என்றான். 

“ம்ம்ம்..”

“யுக்தா என்ன பயந்துட்டயா?”

“ம்ம்ம்..” என்றவள் கண்களைத் திறக்க, அவள் கண்கள் குளமாகின. 

“என்னாச்சிமா? எதுக்காக இந்த அழுகை? நான் தான் சொல்லியிருக்கேன்ல இப்படி நீ அழவே கூடாதுனு..”

“நான் ரொம்ப பயந்துட்டேன்.. நைட் போனீங்க.. ஈவ்னிங்காச்சு லேட்டாகவும் பயந்துட்டேன்.. உங்களுக்கு அந்த பிரகாஷால ஏதாவது நடந்திடுமோனு பயந்துட்டே இருந்தேன்..”

“என்னை அவனால ஒண்ணும் பண்ண முடியாது.. அப்பிடி எனக்கு எதுவும் நடந்தாலும் உன்னை இங்க இருக்கிற எல்லோரும் நல்லா பாத்துக்குவாங்க..” என்று தீஷிதன் சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயில் தனது கையை வைத்து அவனின் பேச்சை நிறுத்திய சம்யுக்தா, “உங்களுக்கு ஏதாவது நடந்தா, சத்தியமா சொல்றேன் அதுக்கு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுங்க. அதை மட்டும் மறந்திடாதீங்க.” என்றாள். 

உடனே தீஷிதன், “யுக்தா இப்போ நீ என்ன சொன்ன?” என்றான் ஒருவிதமான பதட்டத்துடன். அவனைப் பார்த்தவள், “அவனிடம் தான் சொன்னதை மறுபடியும் சொன்னாள். நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாதுங்க.” என்று அவள் மறுபடியும் சொன்னதைக் கேட்ட தீக்ஷிதன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் இறுக்கம் அதிகமாகியது. 

“யுக்தா அப்போ உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு தானே அர்த்தம். என்னை மனப்பூர்வமாத்தானே கல்யாணம் பண்ணிக்கிற. உன்னோட வாயிலிருந்து வந்த இந்த வார்த்தை… இந்த வார்த்தை மட்டும் போதும் எனக்கு. என்ன நடந்தாலும் அதை சமாளிக்க என்னால முடியும்.”

“ஆரம்பத்துல நீங்க எல்லாம் சொல்றீங்கனுதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் நீங்க எப்படி என் மனசுக்குள்ள வந்தீங்க, உங்களை எப்படி எனக்கு பிடிச்சதுனு எனக்கு தெரியாதுங்க.. ஆனா, இப்போ இந்த நிமிஷம் சொல்றேன், நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாது. அது மட்டும் நிஜம். ப்ளீஸ் என்னை விட்டு எப்பவுமே போகமாட்டீங்க தானே” என்று அவனைப் பார்த்து ஏக்கமாகக் கேட்டாள். 

“ஏய் உன்னை விடுறதுக்காடி நான் இவ்வளவு பாடுபடுறேன். உன்னை எப்பவுமே இப்படியே என் கைக்குள்ளேயே வச்சிக்குவேன். யுக்தா ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

பதிலுக்கு சம்யுக்தாவும், “ஐ லவ் யூ மோர் தான் யூ” என்றாள் சிரிப்புடன். 

“ஏய் கேடி…”

“சரிங்க நான் ஒன்னு கேட்கட்டுமா, நீங்க எங்க போனீங்க?”

“கண்டிப்பா சொல்லுவேன். உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன். நாளைக்கு நான் எங்க போனேன் எதுக்கு போனேன்னு எல்லாமே உனக்கும் மற்றவங்களுக்கும் தெரிய வரும். நீ ஒன்னும் வொரி பண்ணாத.”

“சரிங்க வாங்க சாப்பிடலாம்” என்று கீழே அவனை அழைத்துக் கொண்டு வர, தமயந்தி சாப்பாடு எடுத்து வைத்தார். 

சிறிது நேரத்தின் பின்னர் நலங்கு, மெஹந்தி பங்ஷனுக்கான ஏற்பாடுகள் வீட்டில் ஆரம்பித்தன. வண்ண வண்ண விளக்குகளால் அந்த மாளிகையே ஜொலித்தது. வரும் விருந்தினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் தோட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. டிஜே ஒரு பக்கம், சாப்பாடு ஒரு பக்கம், மெஹந்தி ஒரு பக்கம் என்று அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. 

சம்யுக்தா அருகே வித்யாவும் மதுராவும் நின்று கொண்டு அவளை கேலி செய்து கொண்டிருந்தார்கள். பியூட்டிஷியன் பெண்ணிடம் சம்யுக்தா தான் வரைந்த ஒரு டிசைனை காட்டி இதை போட்டு விட முடியுமா என்று கேட்க, அவளும் சிரித்துக் கொண்டே, “சரிங்க மேடம்” என்றாள். 

விக்ராந்த் தீஷிதனுடன் சேர்ந்து கொண்டு அங்கு நடைபெற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிஸியாக இருந்தாலும் அவன் கண்களை அடிக்கடி வித்யாவிடம் சென்று வந்தது. வித்யாவும் அடிக்கடி விக்ராந்தை பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் மதுரா தனது போனை எடுத்து புகழுக்கு அழைத்தாள். 

புகழ் தனது வீட்டில், கிருபாகரன் மற்றும் துர்க்காவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது போன் அடிக்க எடுத்துப் பார்த்த புகழ், போனை எடுக்காமல் வைத்து விட்டான். துர்க்கா, “போன் எடுக்கல புகழ்” என்றார். 

“இல்லம்மா மதுரா தான் கால் பண்றா. இன்னைக்கு தீஷி வீட்டில் நலங்கு ஃபங்ஷனும் மெஹந்தி பங்ஷனும் இருக்கு. நான் இன்னும் போகல இல்ல அதான் கால் பண்றா.”

“அதுக்கு என்னப்பா நீ போயிட்டு வரவேண்டியது தானே.”

“இல்ல அம்மா உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எப்படி போறது?”

“ஐயோ பரவால்ல புகழ் நாங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக மாட்டோம். வீட்லதான் இருப்போம் பயப்படாம நீ போய் என்ஜாய் பண்ணிட்டு வா.”

“இல்லம்மா நான் உங்க கூடவே இருக்கிறேன். நான் அப்புறமா மதுராவை சமாதானப்படுத்திக்குவேன்.”

“இல்ல புகழ் இதெல்லாம் எப்போவாவது வர்றது தானே. நீ போயிட்டு வா” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்போது புகழுக்கு தீஷிதன் கால் பண்ணினான்.  

“சொல்லு தீஷி” என்றான் போனை எடுத்த புகழ். 

“என்ன பண்ணிட்டு இருக்க புகழ்?”

“இங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“அப்படியா சரி நீ வரலையா இங்க?”

“நான் எப்படி தீஷி வர்றது? அம்மா அப்பா இருக்காங்களே அவங்கள பார்த்துக்கனுமேடா”

“அதுவும் சரிதான் ஆனா புகழ், இங்க உன்னை எல்லாரும் தேடறாங்க. யுக்தா வேற புகழ் அண்ணா வரலையா? என்று கேட்டுட்டு இருக்கா நீ ஒன்னு பண்ணு அத்தையையும் மாமாவையும் நீ இங்க கூட்டிட்டு வர்றியா?” என்றான். 

“என்ன சொல்ற தீஷி?” என்றான். 

அதற்கு தீஷிதன், “அவங்க வந்தா நல்லா இருக்கும். ஆனா என்ன பண்றது எனக்கு அவங்க இங்க இருக்கணும் போல இருக்குடா” என்றான். 

“தீஷி புரிஞ்சிதான் பேசுறயா? ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு அவங்க அங்க வரட்டும். இன்னைக்கு வந்து ஏதாவது பிரச்சினை வந்தா எல்லாமே எதிர்பாக்காத மாதிரியாயிடும் தீஷி” என்றான். 

“நீ சொல்றது சரிதான் புகழ்” என்று தீஷிதன் பேசிக் கொண்டிருக்கும்போது, புகழிடமிருந்து போனை வாங்கினார் துர்க்கா. 

“தீக்ஷி புகழ் இரண்டு பேரும் எதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க? எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நாங்க இங்க இருக்கோம் புகழ் அங்க வந்துட்டு வரட்டுமே. இதுல என்ன இருக்கு, அவனும் அங்க இருக்கத் தானே வேணும். புகழ் நீ போ நாங்க இங்க பத்திரமா இருப்போம். நாங்க காலையில வரோம்” என்றார் துர்க்கா. 

“அத்தை நீங்களும் மாமாவும் ஏதும் நினைச்சிக்காதீங்க. தப்பா எடுத்துக்காதீங்க அத்தை ப்ளீஸ்” என்றான். 

“ஐயோ தீஷி, இதுல என்ன தப்பா நினைக்க இருக்கு? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியுது சரியா? நாளைக்கு காலைல உங்களை இங்க கூட்டிட்டு வர புகழையும் காரையும் அனுப்பறேன். நீங்க புகழ் கூடவே வந்துடுங்க” என்றான் தீஷிதன். 

“சரி தீஷி” என்றவர் போனை வைத்து புகழிடம் திரும்பி, “நீ சாப்பிட்டு போயிட்டு வாப்பா” என்றார். 

அப்போது கிருபாகரனும் புகழிடம் விளையாட்டாக, “ஆமா ஆமா சீக்கிரமா கிளம்பு, எங்களுக்கும் கொஞ்சம் பிரைவசி வேணுமில்ல புகழ்” என்றதும் அவரைப் பார்த்து பொய்யாக அதிர்ச்சி அடைந்தவன், “அடப்பாவி அப்பா அப்போ நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் என்னை அனுப்புறீங்களா?” என்றதும் துர்க்கா, “ஐயோ நீங்க வேற ஏங்க என் மானத்த வாங்குறீங்க?” என்று தலையில் அடித்துக் கொண்டார். 

புகழ் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் வீட்டுக்குச் சென்றான். 

ஆட்டம் பாட்டம் என்று அங்கே தீஷிதன் வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடி கொண்டிருந்தது. புகழும் வந்துவிட தீஷிதன், புகழ், விக்ராந்த் மூவரும் நன்றாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தனர். ஸ்டேஜில் விக்ராந்தும் வித்யாவும் ஒரு பக்கமாக ஆட, மதுராவும் புகழும் இன்னொரு பக்கம் ஆடினார்கள். தீக்ஷிதன் சம்யுக்தா அருகே உட்கார்ந்து இருந்தான். 

“அக்கா நீயும் வா” என்று வித்யா அவளை அழைக்க, “இல்ல நான் வரல, நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றாள். 

“அட வாக்கா” என்று அவளையும் பிடித்து இழுத்தார்கள் வித்யாவும் மதுராவும். அப்போது அவளுக்கு துணைக்கு வந்தான் தீக்ஷிதன். 

“யுக்தா வா என்கூட” என்றவன் அவள் கையைப் பிடித்து ஸ்டேஜிக்கு அழைத்துச் சென்றான். மெல்ல மெல்ல அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தாள் சம்யுக்தா. 

அங்கே வந்திருந்தவர்கள் எல்லோரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். இப்படியாக நலங்கு ஃபங்ஷன் மெஹந்தி பங்க்ஷனும் இனிதே நடைபெற்று முடிய, புகழ் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான். 

“சரி சரி சீக்கிரமா நீங்க எல்லாம் போய் தூங்குங்க. நாளைக்கு நேரத்துக்கு எந்திரிக்கணும்ல. இப்ப தூங்கினால் தான் காலையில முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்” என்று ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் சிறுசுகளை அனுப்பி வைத்தார் தமயந்தி. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana October 5, 2025 - 8:01 pm

Super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!