Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 35 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 35 (On Going Story)

by Thivya Sathurshi
4.6
(27)

வாழ்வு : 35

மணிகண்டனும் லீலாவதியும் அங்கிருந்து செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்தினார் துர்க்கா. 

“ரெண்டு பேரும் கொஞ்சம் நில்லுங்க.”

“அத்தை அவங்களை எதுக்கு நிற்க சொல்றீங்க?” என்றான் தீஷிதன். 

“இரு தீஷி சொல்றேன். நீங்க இங்க வாங்க” என்று அவர்களை அழைத்தார். அவர்களிடம், “நீங்க இப்போ பண்ணினது பெரிய தப்புதான். ஆனா என் பொண்ணு சின்ன வயசுல பாதுகாப்பா, வேளைக்கு சாப்பிட்டு, நல்லா படிச்சிருக்கானா அதுக்கு நீங்கதான் காரணம். நாட்டில இப்போ சின்னக் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஆனால் நீங்க அந்த வயசுல சம்முக்கு பாதுகாப்பு குடுத்திருக்கிறீங்க. அதுக்கு நன்றிக்கடனா உங்களுக்கு உதவி பண்ணலாம்னு இருக்கேன். தீஷி இவங்களை நாங்க இருந்த அந்த ஆச்சிரமத்துல சேர்த்து விடு. அங்க வேலை பார்த்திட்டு இருக்கட்டும். அப்போதான் இவங்களுக்கு பாசம், உறவுகளோட அருமை புரியும்” என்றார். 

தீஷிதனும் துர்க்கா கூறியதற்கு எதிர்த்துப் பேசாமல், “சரிங்க அத்தை. இப்பவே அனுப்பி வைக்கிறன். ஆனால் இவங்க போவாங்களா?”

அவர்களை எப்படியாவது அங்கே அனுப்பினாலாவது அவங்க திருந்த வாய்ப்பு இருக்கும் என்று நினைத்த வித்யா அவர்களிடம் வந்து, “உங்களுக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு இது. துர்க்கா அம்மா சொல்ற அந்த ஆச்சிரமத்துக்கு போங்க. அப்பிடி அங்க போனா நான் எப்பவாவது வந்து பார்த்துக்குவேன். இல்லை இவங்களை பழிவாங்கணும், சம்மு அக்காவை கஷ்டப்படுத்தணும்னு ஏதாவது பண்ணப் பார்த்தீங்க அப்புறம் பொண்ணுனு சொல்ல நான் இருக்க மாட்டேன்” என்றாள். 

இதைக் கேட்ட லீலாவதி, “ஐயோ வித்து என்னம்மா இப்பிடி சொல்ற? நீ சொல்ற மாதிரி அங்கேயே போயிடுறோம். எங்களுக்கு நீ நல்லா இருந்தா போதும். சம்மு எங்களை மன்னிச்சிடுமா.. உனக்கு எவ்வளவு கெடுதல் பண்ணியிருக்கம். ஆனால் நீ எப்பவும் எங்க மேல பாசத்தையே காட்டின. இதுக்கு பிறகு எங்களால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அம்மா நீங்க சொல்ற மாதிரி அந்த ஆச்சிரமத்துக்கே நாங்க போயிடுறோம்” என்றார். 

அப்போதும் அவர்களை சந்தேகத்துடன் பார்த்த தீக்ஷிதனைப் பார்த்த மணிகண்டன், “தம்பி நாங்க நிஜமா திருந்திட்டோம். எப்போ எங்க பொண்ணு எங்களோட இருக்கிறது பாதுகாப்பு இல்லைனு சொன்னாளோ அப்பவே நாங்க செத்துட்டோம். எங்களை அந்த ஆச்சிரமத்தில விட்டிருங்க” என்றார். 

பின்னர் தீஷிதன் அவனின் ஆட்களில் ஒருவனை அழைத்து அவர்களை ஆச்சிரமத்தில் கொண்டு விடும்படி கூறினான். 

அதன் பிறகு பரந்தாமன் பேச ஆரம்பித்தார். 

“தீஷி நீ எப்பிடி துர்க்காவை கண்டுபிடிச்ச?”

“சொல்றன் அப்பா. நீங்க அன்னைக்கு எங்கிட்ட யுக்தா பற்றி சொன்னீங்க.. உங்களோட தங்கச்சி பொண்ணுனு. ஆனா அத்தை எங்க இருக்காங்கனு சொல்லலை. அதை வச்சு நான் தேட ஆரம்பிச்சப்போதான் அத்தையும் மாமாவும் இருக்கிற இடம் தெரிஞ்சது. அப்பறம் அங்க இருக்கிற ஒருத்தர் கிட்ட ஹெல்ப் கேட்டேன். அதுமட்டுமல்ல அத்தை மாமாவோட டிஎன்ஏவோட யுக்தா டிஎன்ஏ ஒண்ணாகுதான்னு பார்த்தேன். அதுவும் மேட்சாகிட்டு. சோ யுக்தா இவங்களோட பொண்ணுனு கன்பார்மாகிடிச்சி.. எங்களோட கல்யாணத்துக்கு அத்தை இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கே ஏற்ற மாதிரியே அவங்களும் கண்ணு முழிச்சிட்டாங்கனு அங்க இருந்து எனக்கு போன் வந்திச்சு அதுதான் நைட்டே கிளம்பி புகழை கூட்டிட்டு போனேன். அப்புறம் நைட் புகழ் வீட்ல இவங்களை தங்க வச்சேன்” என்று நடந்தது முழுவதையும் சொல்லி முடித்தான். 

அனைத்தையும் கேட்ட தமயந்தி, “தீஷி உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. யுக்தா மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா இப்படி அவளுக்காக பாத்து பாத்து இவ்வளவு பண்ணுவா. ரியலி யூ ஆர் கிரேட் தீஷி.”

“ஐயோ அத்தை. அதெல்லாம் ஒண்ணுமில்லை. யுக்தாக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். யுக்தா நான் சொன்ன மாதிரியே உன்னோட அம்மா அப்பாவை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டேன். இப்போ சந்தோஷமா?”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க. என்னை இனிமே யாரும் அநாதைனு சொல்ல மாட்டாங்கல” என்று குழந்தை போல கேட்டவளை அணைத்துக் கொண்ட தீஷிதன். 

“இல்லை யுக்தா நீ அநாதை இல்லை.. உனக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கு… நீ அநாதை இல்லடா” என்றான். 

சம்யுக்தாவின் அருகில் வந்த துர்க்கா, “அம்மாடி உன்னை வளர்க்கிற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கல.. இனிமே உன்னை நாங்க பாத்துக்குவம்” என்றார். 

இப்படியாக அங்கே அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அன்று மாலை தீஷிதன் சம்யுக்தாவிற்கும் ரிஷப்ஷனும் வித்து விக்ராந்த் மற்றும் மதுரா புகழின் என்கேஜ்மென்ட்டும் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடந்தேறியது. 

வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்தி விட்டு பரிசு கொடுத்து விட்டுச் சென்றதும், அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

தீஷிதன் சம்யுக்தாவிற்கு தமயந்தி ஆர்த்தி எடுத்து வரவேற்ற பின்னர் துர்க்கா கிருபாகரனுக்கும் ஆர்த்தி எடுத்தார். சம்யுக்தா சுவாமி அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கினாள். அனைவரும் ஹாலில் வந்து இருந்தனர். 

அப்போது மதுரா, “இன்னைக்கு நம்ம வீடே நிறைஞ்சு இருக்கு.. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றாள். 

“ஆமா மது.. இத்தனை நாள் இந்த வீட்டுல பெரும்பாலும் நான் மட்டும்தான் இருப்பேன். இனிமேல் என் மருமக, தங்கச்சி, பொண்ணு எல்லோரும் இருப்பாங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.. தமயந்தி நீங்களும் இங்கேயே வந்திடுங்களேன்.”

“எனக்கும் உங்க எல்லோர்கூடவும் இருக்கணும் போலத்தான் இருக்கு. ஆனா இவங்க பிஸ்னஸ் எல்லாம் அங்கதானே இருக்கு”

“அதுக்கென்ன தமயந்தி, உனக்கு இங்க இருக்கிறான் சந்தோஷம்னா இங்கேயே ஒண்ணா இருக்கலாம். மாசத்துக்கு ஒரு தடவை நான் அங்க போய் பிஸ்னஸை பார்த்திட்டு வர்றேன்” என்றார் அமரேந்திரன். 

அவரது இந்தப் பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

பின்னர் துர்க்காவும், “எல்லோருக்கும் டயர்டா இருக்கும்.. போய் தூங்குங்க காலையில பேசிக்கலாம்” என்றார். சிறுசுகள் அங்கிருந்து சென்றதும் தமயந்தியிடம் வந்த துர்க்கா, “தீஷிக்கும் சம்முக்கும் சடங்கு வைக்க ஏற்பாடு பண்ணலையா தமயந்தி?”

“இல்ல அக்கா, தீஷி இப்போ எதுவும் வேணாம்னு சொல்லிட்டான். சம்மு கொஞ்சம் ரிலாக்ஸாகட்டும், இந்த லைஃபை அவ ஏத்துக்கிட்ட அப்புறம் அதை பாத்துக்கலாம்னு சொன்னான் அக்கா. அதுதான் எதுவும் ஏற்பாடு பண்ணலை.”

“தீஷி சம்முக்காக பார்த்து பார்த்து பண்றதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்பிடி எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.”

“ஆமா அக்கா, அக்கா நீங்களும் டயர்டா இருப்பீங்க. போய் தூங்குங்க அக்கா. நான் இங்க இருக்கிற வேலையை முடிச்சிட்டு தூங்குறேன்.”

“சரி தமயந்தி.. நீயும் ரொம்ப நேரம் இருக்காம தூங்குமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். 

தீஷிதனின் தனது அறையில் இருந்தான். சம்யுக்தா அவளது அறைக்குள் சென்று குளித்துவிட்டு விட்டு ஒரு புடவையை அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். சம்யுக்தாவுடன் தீஷிதன் பேசுவதை தவிர்த்துக் கொண்டிருந்தான். அது சம்யுக்தாவைப் பெரிதும் பாதித்தது. அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்து தீஷிதனின் அறைக்குள் சென்றாள். அங்கே தீஷிதன் அப்போதுதான் குளித்துவிட்டு வந்து தலையை துவட்டிக் கொண்டு நின்றான். 

அவன் அறைக் கதவை திறந்து வாசலில் நின்றவள், “என்னங்க” என்றாள். திரும்பிய தீஷிதன் அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, “யுக்தா வாடா” என்றான். அவ்வளவுதான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். 

“ஏங்க.. ஏன் என்கூட பேசாம அவாய்ட் பண்றீங்க?”என்று அழுதாள். 

சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவன், “இதோ இதுக்காகத்தான் உன் பக்கமே வரலைடா. நான் உன் பக்கத்தில வந்திருந்தா நீ இருக்கிற இடம் மறந்து இப்படி அழுதுட்டு இருப்ப.. அங்க நீ அழுதா உன்னை நான் எப்படி சமாதானப்படுத்துவது? நம்ம ரெண்டு பேரு மட்டும் இருக்கும் போது சமாதானப்படுத்துறது ரொம்ப ஈஸி.. அதுதான் கொஞ்சம் விலகி இருந்தேன்.” என்றவன் நெஞ்சில் குத்தியவள் பின்னர் அழ ஆரம்பித்தாள். 

“எனக்காக நீங்க பண்ண இதுக்கு என்னால கைமாறாக என்னங்க பண்ண முடியும்? ஒரே நிமிஷத்துல என்னோட வாழ்க்கையேயே மாற்றி விட்டீங்க.. அநாதையாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கொடுத்திருக்கிறீங்க. எனக்கு சந்தோஷத்துல மூச்சு முட்டுதுங்க.” என்று அழுது கொண்டு இருந்தவளை அப்படியே அணைத்துக் கொண்டு சோபாவில் அவன் அமர்ந்து அவளை தனது மடியில் வைத்துக் கொண்டான். 

“யுக்தா.. இது வரைக்கும் அழுதது போதும். இனிமேல் நீ எப்பவும் அழவே கூடாது.. இந்த கண்கள்ல கண்ணீரை நான் பார்க்க விரும்பவே இல்லை. இதுக்கு மேல நீ அழுதா நான் இல்லைனு அர்த்தம் யுக்தா.” என்றவனைப் பார்த்து, “இப்படி எல்லாம் சொல்லாதீற.. நான் இனிமே அழமாட்டேன்.. நான் எதுக்கு அழணும்? என்னைப் பார்த்துக்கத்தான் என் புருஷன் இருக்காரே.” என்றவள் இதழோடு இதழ் சேர்த்தான் தீஷிதன். 

இப்படியாக அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டு நாட்களின் பின்னர் தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னை போக வேண்டும் என்றான். இதைக் கேட்ட பரந்தாமன், “எதற்கு தீஷி இப்போ சென்னைக்கு போகணும்னு சொல்ற?”

“அங்க ஒரு ப்ரொஜெக்ட் பண்ண வேண்டி இருக்கு அப்பா, இதுக்கு யுக்தா தான் லீடர்.. அதனால அங்க போயேயாகணும்” என்றான். 

“அப்டியா.. சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார். 

அவர்களிடம் சொல்லி விட்டு, இங்க இருக்கும் கம்பனியை பார்த்துக் கொள்ளுமாறு புகழிடம் சொல்லிவிட்டு தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றான். 

சென்னையில சம்யுக்தா வீட்டிலே இருவரும் தங்கினார்கள். அடுத்த நாள் காலையில் மணிகண்டனிடம் இருந்து சம்யுக்தா பெயருக்கு மாற்றிய கம்பெனிக்கே சம்யுக்தாவை அழைத்துச் சென்றான் தீஷிதன். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana October 5, 2025 - 8:14 pm

Wow super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!