- நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் :

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன்.
“புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி.
“நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!”
” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.
இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!
குறிஞ்சி மலர்.. 34
ஜேம்ஸின் அருகில் மணப்பெண்ணாய் அவன் கட்டிய தாலியை சுமந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த கோதைக்கு, கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
இப்படியொரு திருப்பம் தன் வாழ்வில் வருமென்று அவள் கனவு கூட கண்டிருக்கவில்லை. ஆனாலும் அவளும் சராசரி பெண்கள் போல கணவன், குழந்தை என ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படாதவள் இல்லை.
அவளுக்கு தன்னை முதலில் மணம் முடித்த வாகீசன் மீது, திருமணம் முடித்த புதிதில் எந்த ஈர்ப்பும் வரவேயில்லை. மாறாக அவனது சிநேகிதமான அணுகுமுறையில், மரியாதை அவளுக்கு நிறையவே இருந்தது. போகப் போக அவனைத் தனக்குப் பிடித்து விடும் என அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட நேரத்தில் தான் அவன் இறந்தான்.
தில்லையம்பலத்தின் வீட்டில் இருக்கும் போது தான் தனக்கு நிம்மதியே கிடைத்ததில்லை. புகுந்த வீட்டிலாவது அது கிடைக்கும் என எதிர் பார்த்தவளுக்கு அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கோதை இயல்பிலேயே கலகலப்பான பெண் என்பதால் தான் அவளால், அவளுக்கு நடந்த கொடுமைகளை தாண்டி வர முடிந்திருந்தது. இதே வேறு பெண்ணாக இருந்திருந்தால் அவளைப் புதைத்த இடத்தில் புல் என்ன பூவரசம் மரமே வளர்ந்திருக்கும் என்பது தான் உண்மை.
இந்த திடீர் திருமணத்தை எப்படி எடுத்துக் கொள்வது என அவளுள் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தனது பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்பதற்காக தானே என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான் இந்த வெள்ளைக்காரன் என்கிற எண்ணம் அவளது மனதில் ஆழமாய் பதிந்து போய் விட்டிருந்தது.
மெல்ல நிமிர்ந்து பக்கத்தில் இருந்தவனைப் பார்த்தாள் கோதை
“காளியாத்தா.. என்னைய எங்க கொண்டு வந்து விட்டிருக்கிறாய்..”
என அவளது வாய் முணுமுணுக்க, அவளது பார்வை அவனை விட்டு விலகவேயில்லை.
எதேச்சையாக அவளைப் பார்த்த ஜேம்ஸோ குறுகுறுனு பார்க்கிறாளே கண்டு பிடிச்சிடுவாளோ என நினைத்தானோ தெரியவில்லை, உடனே முகத்தை வேண்டுமென்றே இறுக்கமாக வைத்துக் கொண்டான். அப்போது தானே அவனுக்கும் இது பற்றி ஒன்றும் தெரியாது என்றும், இது திடீர் திருமணம் தான் என்றும் அவள் நினைத்துக் கொள்வாள். அதை விட்டு முகமெல்லாம் பிரகாசமாக இருந்தால் அவள் கண்டு பிடித்து விட மாட்டாளா.
ஜேம்ஸின் கடின முகத்தை பார்த்ததும் கோதைக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இவ்வளவு தூரத்துக்கு பிடிக்காமல் எதற்கு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன தான் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றாலும் இப்படியா பிடிக்காத பந்தத்துக்குள் இணைவது என யோசனை செய்தவள். ஏதோ நடந்து தொலையட்டும் என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என நினைத்து மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிவடைந்து, ஜேம்ஸின் திருமண நாளுக்காக அங்கே வேலை செய்த அனைவருடைய குடும்பத்தினருக்கும் திருமண விருந்து நடந்தது.
அதைத் தொடர்ந்து வந்த றிஜிஸ்டார் மூலம், கோதை சட்டப்படி ஜேம்ஸின் மனைவியாகி விட, அவள் ஜேம்ஸ்பீட்டர்ஃபோல் பூங்கோதை ஆனாள். தன் கையணைவில் தன் புத்தம் புதிய மனைவியை வைத்துக் கொண்டு, அவள் தான்
மிஸஸ் ஜேம்ஸ்பீட்டர்ஃபோல் என மீடியாவின் முன் அறிமுகப் படுத்தினான் கோதையின் அசுரன். எல்லாவற்றையும் ஒரு இறுக்கத்துடன் எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் செய்து கொண்டிருந்தாள் கோதை.
ஜீவோதயத்தின் வழக்கப்படி சமையலறையினுள் முப்பத்தெட்டு வேலையாட்களும் கைகட்டி நிற்க, புதுப் பானையில் பால் காய்ச்சினாள் கோதை. இதற்கு இந்த வீட்டின் மொத்த உரிமையும் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு போகிறது என அர்த்தம். இனி அவளுக்கு ஒரு மருமகள் வரும் வரை அவள் தான் இந்த அரண்மனைக்கு எஜமானி என்பது அங்கு ஆண்டாண்டாய் எழுதப் படாத சட்டம்.
ஜேம்ஸின் பரம்பரை நகைகள் ஒரு லாக்கரில் பூட்டப் பட்டு, அதன் சாவி ஜேம்ஸிடம் தான் இருந்தது.
அதை கோதையிடம் கொடுப்பதற்காக ஜேம்ஸ் எடுத்து வர, அவனைப் பிடித்து தடுத்து நிறுத்தினார் வியாகேசு.
“இப்ப என்ன செய்யப் போறாய் நீ..”
“இந்த சாவியை பேபியிட்டை குடுக்க போறன்..”
“உன்னைய எவ்வளவு பெரிய அறிவாளி எண்டு நினைச்சன்..”
“வை..”
“நீ பொசுக்குனு இவ்வளவு மதிப்புள்ள சாவியை அவளிட்டை தூக்கி குடுத்தா அவள் என்ன செய்வாள் தெரியுமோ..”
“ஹப்பியாயிடுவா..”
“அது தான் இல்லை..”
“ஏன்..”
“உன்னைய சந்தேகமா பாப்பா..”
“புரியல்லை..”
“புரியுற மாதிரியே சொல்லுறன் கேளு.. இப்ப உனக்கும் அவளுக்கும் நடந்த கலியாணம் நாங்கள் பிளான் போட்டது எண்டு அவளுக்கு தெரியாது.. அவளைப் பொருத்தவரை இது எதிர்பாராத விதமா உன்ரை மானத்தையும் அவளுந்தை நீலாம்மாந்தை மானத்தையும் காப்பாத்த நடந்த கலியாணம்..”
“ஓ அது தெரியும்.. அதுக்கென்ன இப்ப..”
“அதுக்கென்னவோ.. இந்த சாவியைக் கொண்டு போய் நீ கோதையிட்ட குடுத்தால் அவள் சந்தோஷப் பட மாட்டாள்.. சந்தேகப் படுவாள்.. இதை ஏன் என்னட்டை தாரியள் எண்டு கேப்பாள்.. நீ உடன உன்னை மறந்து.. நீ தான் என்ரை உயிர் பயிர் எண்டுவாய்.. கோதைக்கு கோணல் மாணலா மூளை வேலை செய்ய வெளுக்கிட்டிடும்.. பிறகு அந்த கோமாவர்ஷியை நீ தான் கடத்தினி எண்டு தெரிஞ்சிடும்.. பிறகு நடக்கிறதை நான் சொல்லத் தேவையில்லை எண்டு நினைக்கிறன்..”
“சரி தான் பேபிக்கு மூளை கொஞ்சம் சார்ப் தான்.. ஸோ கண்டு பிடிப்பாள்..”
“கண்டு பிடிப்பாள் இல்லை.. கண்டு பிடிச்சிருவாள்.. கண்டு பிடிச்சாளோ அடுத்ததா நடக்குற சம்பவத்தை பத்தி நான் சொல்ல தேவையே இல்லை எண்டு நினைக்கிறன்..”
“அதை வேறை ஏன் நினைவு படுத்திரியள்..”
“என்ன பீட்டர் பயப்படுறியோ..”
“பயமா எனக்கா.. அதுகும் எம் பொண்டாட்டி கிட்டேயா.. இந்த பீட்டரை பத்தி என்ன நினைச்சீங்கள்..”
“பயப்பிடுறீயோண்டு தான கேட்டனான்.. உன்ரை பொண்டாட்டி பத்தி நான் பேசவே இல்லையே.. நீயாவே சொல்லாமல் சொல்லுறாய்.. இதுல இருந்தே தெரியுது..”
“என்ன தெரியுது..”
“அதை என்ரை வாயால வேறை சொல்லோணுமோ.. அது கூட பரவால்லை இந்த பீட்டரை பத்தி என்ன நினைச்சீங்கள் எண்டு கேட்டீயே.. உன்னைப் பத்தி என்னென்னவெல்லாமோ நினைச்சனேடா.. இப்புடி பொசுக்குனு கவுந்திட்டியே..”
“போதும் போதும்..”
“ம்க்கும்.. இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை..”
என வியாகேசு பொய்யாக அலுத்துக் கொண்ட வேளை, நீலரூபி அங்கே வந்தார்.
வந்தவரோ நேராகப் போய் ஜேம்ஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு
“தம்பீ.. ஏதவோ என்ரை கோதை நல்லா இருக்கோணும் எண்டுறதுக்காகவும்.. நீங்கள் அவளை கலியாணம் செய்ய ஆசைப் பட்டதாலயும் தான் நான் இவ்வளவு தூரம் கஷ்டப் பட்டன்.. அதைப் போல அவளையும் ஒரு மாதிரி வேப்பிலையடிச்சு உங்களுக்கு கட்டி வைச்சிட்டன்.. இனியாவது அவள் நிம்மதியா இருக்கோணும்.. உங்களை நம்பி தான் நான் இருக்கிறன்.. ஆனா நாங்கள் செய்தது யாருக்குமே தெரியக் கூடாது..”
எனக் கண்ணீர் விட, அவர் செய்த உதவியை அவனால் மறக்க தான் முடியுமா. நீலரூபி செய்த உதவியை வியாகேசு மறுபடி நினைவுகூர்ந்தார்.
இன்று காலை முகத்தை தூக்கி வைத்தபடி தன்னறைக்கு வந்த வியாகேசின் காதுகளில் ஜேம்ஸ்
“இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிட்டு சுத்துறியள்.. நான் சாக்லேட்டு நிற பேபியைத் தான் கலியாணம் கட்டப் போறன்..”
எனச் சொல்ல, முதலில் புரியாமல் விழித்த வியாகேசுக்கு அது கோதை என்பது புரிந்து போனது.
“டேய் உண்மையாவோடா..”
என சந்தோஷம் தாங்க முடியாமலும், அவன் சொன்னதை நம்ப முடியாமலும் வியாகேசு கேட்க, அவரின் தலையில் வைத்து சத்தியம் செய்ததோடு மட்டுமன்றி, திருமணம் முடிந்து ஒரு கிழமைக்கு பிறகு நடத்த வேண்டிய மணமக்கள் வரவேற்பிற்கான அழைப்பிதழை கொண்டு வந்து அவரிடம் நீட்டினான்.
அதில் அழகான தமிழ் எழுத்தில், மணமகள் என்பதன் கீழ் பூங்கோதை என அச்சடிக்கப் பட்டிருந்தது.
“டேய் அப்போ நீ.. அண்டைக்கு அந்தாளிட்டை.. உங்கடை மகளை கட்டிக் கொள்ள டபுள் ஓகே எண்டு சொன்னது கோதையை நினைச்சு தானா..”
எனக் கேட்க, அழகாக புன்னகைத்து ஆமாம் என்பது போல தலையசைத்தான் ஜேம்ஸ்.
அவனது அந்தப் புன்னகையைக் கண்டதுமே வியாகேசுக்கு ஒரே சந்தோஷமாகப் போய் விட்டது.
அதே சந்தோஷத்தோடே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த சந்தேகம் வரவே, அதை அவனிடமே கேட்டார்.
“இதெல்லாம் சரி தான் பீட்டர்.. ஆனா எனக்கொரு கேள்வி இருக்கே..”
“என்னது..”
“ஒருவேளை.. கோதைக்கு உன்னைய பிடிக்கேல்லை எண்டால்..”
“புரியேல்லை..”
“இல்லை அவளுக்கு உன்னை கலியாணம் கட்டுறதுல இஷ்டம் இல்லாட்டிக்கு..”
“அதெப்படி இஷ்டம் இல்லாமல் போகும்..”
“என்னடா உப்புடி கேக்கிறாய்.. அவளிந்தை தங்கச்சியை தானே நீ கட்டப் போறாய் எண்டு அவள் இப்ப வரை நினைச்சுக் கொண்டு இருக்கிறாள்..”
“அதுக்கு..”
“அதுக்கோ.. தான் வந்து வெளியால நிண்டால் அதை அபசகுனமா எல்லாரும் பாக்குங்கள்.. அதால தங்கச்சி கலியாணத்துல ஒரு தடங்கலும் வரக் கூடாது எண்டிட்டு அவள் வெளியாலயே வராமல் உள்ள அடைஞ்சு கிடக்கிறாள்.. இப்புடி யோசிக்கிறவள் தன்னால தன்ரை தங்கச்சி கலியாணம் நிண்டால் பேசாமல் இருப்பாளோ.. இல்லாட்டிக்கு உனக்கு கழுத்தை தான் நீட்டுவாளோ..”
“இந்தா இதைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. அவள்டை சம்மதத்தோட அவளை கட்டுறது எண்டால் கட்டுவன்..”
“இல்லாட்டிக்கு..”
“சம்மதம் இல்லாட்டிக்கும் கட்டுவன்..”
“என்னடா உப்புடி சொல்லுறாய்..”
“வேறை எப்புடி சொல்ல..”
“உனக்குப் பிடிச்சால் மட்டும் போதுமோ அவளுக்கு பிடிக்க வேண்டாமோ..”
“அதைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. அவ தான் எனக்கு பொண்டாட்டி..”
“சரி அவள் உன்னைய வேண்டாம் எண்டு விட்டு விலகிப் போனால்..”
என வியாகேசு கேட்டு முடித்திருக்கவில்லை அதற்குள்
“அவளைக் கொன்னுட்டு நானும் செத்துப் போயிடுவன்..”
என ஆக்ரோஷமாகக் கத்திய படி
முன்னால் கிடந்த மேசையை தூக்கியடித்து, பக்கத்தில் கிடந்த சோடாப் போத்தலை உடைத்து, தன் வலது கையை கிழித்திருந்தான் ஜேம்ஸ்.
வியாகேசு பதறி போய் அவனைப் பிடித்துக் கொண்டு
“என்ன இது பீட்டர்.. நீ மாறவே இல்லையடா..”
என ஆற்றாமையோடு சொல்ல
“நான் ஏன் மாறணும்.. அவளை என் கூடவே இருக்க சொல்லுங்கோ நான் மாற மாட்டன்..”
எனக் கிட்டதட்ட கர்ஜித்தான் ஜேம்ஸ்.
அவனை கஷ்ட ப்பட்டு கடினப் பட்டு சமாதானப் படுத்தி அமர வைப்பதற்குள், வியாகேசுக்கு விழி பிதுங்கி விட்டது.
“சரி அவளுந்தை மனசை நோகடிக்காமல் எப்புடி தாலி கட்டுறதுனு யோசிச்சு வைச்சுக்கிறாய்..”
“அதூ..”
“என்னடா இழுவையே சரியில்லை..”
“உங்களை கடத்தி வைச்சு பிளாக்மெயில் பண்ணலாம் எண்டு தான் முதல் யோசிச்சன்.. ஆனா பேபிடை மனசு நோகாமல் இருக்கணுமே.. அதுக்கு ஐடியா சொல்லுங்கோ..”
“ஓ உன்ரை போதைக்கு நானோடா ஊறுகாய் எல்லாம் என்ரை நேரம்.. அந்த கோமாவர்ஷியை பிடிச்சு எங்கையாவது அடைச்சு வைப்பமே..”
என வியாகேசு கேட்டுக் கொண்டு இருக்கையில் நீலரூபி அங்கே வந்தார்.
வியாகேசு திருதிருவென விழிக்க, கையோடு கொண்டு வந்த முதலுதவி பெட்டியை வைத்து ஜேம்ஸின் கைக் காயத்துக்கு மருந்து போட்டு விட்டார் நீலரூபி.
மருந்து போட்டுக் கொண்டே
“ரூபாவை எங்கையாவது அடைச்சு வையுங்கோ.. கோதை உங்களை கலியாணம் கட்ட சம்மதம் சொல்லுவாள்.. அதுக்கு நான் பொறுப்பு.. நேரமாகுது போங்கோ போய் ரூபாவை எங்கையாவது மறைச்சு வையுங்கோ..”
எனச் சொன்ன நீலரூபியை இருவருமே ஆச்சரியமாகப் பார்க்க,
“எனக்கு என்னோட கோதை நிம்மதியா இருந்தா மட்டும் போதும்..”
என்று விட்டு அவர் போய் விட்டார்.
அதன் பிறகு ரூபாவை தூக்கி, அவளை மிரட்டி கடிதம் எழுத வைத்து, கோதையை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க, நீலரூபி பேசி என ஜேம்ஸ் கோதை திருமணம் சட்டென்று முடிந்தது.
இதோ இப்போது கோதைக்கு நடந்த திருமணம் கொடுத்த நிம்மதியில், நீலரூபி ஜேம்ஸின் கையைப் பிடித்துக் கொண்டு தன் மனதை அவனிடம் சொல்ல, அவர் இறுதியாக சொன்ன
“யாருக்குமே தெரியக் கூடாது..”
என்ற வார்த்தை அப்போது அங்கே தாயைத் தேடிக் கொண்டு வந்த கோதையின் காதில் விழுந்து தொலைத்தது.
குறிஞ்சி மலர்.. 33
ரூபவர்ஷியை வீடு முழுவதும் தேடியும் அவள் எங்குமே கிடைக்கவில்லை. அதற்குள் பட்டு வேஷ்டி சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜேம்ஸ் கீழே இறங்கி வர தில்லையம்பலத்துக்கு பதட்டம் கூடி விட்டது.
ஒரு மர்மப் புன்னகையோடு அவரையே பார்த்தபடி போய் மணமேடையில் அவன் அமர்ந்து கொள்ள, மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என ஐயர் உத்தரவு கொடுத்தார்.
முகூர்த்தத்துக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது, ஐயர் ஏன் இப்போதே பெண்ணை அழைக்கிறார் என வஞ்சி யோசனையோடு பார்க்க, பதட்டத்தில் இருந்த தில்லையம்பலம் அதைக் கவனிக்கவில்லை.
அதற்குள் சமையலறைக்குள் நின்று, அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கோதையிடம் வியாகேசு போனார்.
“என்னம்மா என்ன.. எட்டி எட்டிப் பாத்திட்டே நிக்கிறாய்.. அங்க வந்து நிக்க மாட்டியோ..”
“வேண்டாம் அப்பா.. பிறகு என்னைப் பாத்திட்டு அபசகுனம் அது இதெண்டு கதைப்பினம்.. திடீரெண்டு கலியாணத்துல சின்ன தடங்கல் வந்தாலும் அது என்னால தான் எண்டும் சொல்லுவினம்.. பிறகு எனக்கு தான் கஷ்டமா இருக்கும்..”
“நீ வெளியால வந்தாலும் வராட்டிக்கிலும்.. நீ நினைக்கிற கலியாணம் நடக்காது போலயே..”
“ஏனப்பா..”
“உன்ரை தொங்கச்சியை காணேலையாம்..”
“காணேல்லையோ.. ஏன் எங்க போட்டாள்.. இன்னும் முக்காமணி நேரத்துல முகூர்த்தத்தை வைச்சுக் கொண்டு எங்கினை போய்த் தொலைஞ்சாள்..”
“அது தான் தெரியேல்லை பிள்ளை.. உனக்கேதும் தெரியுமோ..”
“எனக்கென்னப்பா தெரியும்.. அவள் வீட்டுலயே இல்லை எண்டுறதே நீங்கள் சொல்லி தான் தெரியுது..”
“போச்சுது எல்லாம் போச்சுது..”
“என்னப்பா..”
“பீட்டர் இத்தினை நாள் கட்டிக் காத்து வைச்ச அவனிந்தை மானமே போகப் போகுது..”
“உவள் காணாமல் போனதுக்கும் அவரிந்தை மானம் போறதுக்கும் என்னப்பா சம்பந்தம்..”
“என்ன பிள்ளை நீ.. ஒரு கலியாணம் நடக்கப் போகுது.. அதுக்கு இன்னும் முக்காமணி நேரம் தான் இருக்கு.. ஆனா பொம்பிளையைக் காணேல்லை எண்டால்.. மாப்பிள்ளைக்கு என்ன குறையோ என்ன வியாதியோ அது தான் கடைசி நேரத்துல பொண்ணு ஓடிப் போயிடுச்சு எண்டு கதைப்பாங்கள்..”
“உப்புடி எல்லாம் கதைப்பாங்களோ..”
“உதுக்கு மேலயும் கதைப்பாங்கள் பிள்ளை.. அது கூடப் பரவாயில்லை சமூகத்துல எங்கடை பீட்டர் எவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறான்.. அவனுந்தை கலியாணமே இப்ப நிக்க போகுதெண்டால் அது அவனுக்கு எவ்வளவு பெரிய கறுப்பு புள்ளி.. இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான் கலியாணம் கட்டுவம் எண்டு இறங்கி வந்தான்.. அது இப்புடியோ முடியோணும்.. பாவம் அவனே நொந்து போயிடுவானே..”
“பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதேங்கோப்பா.. அவருக்கு அப்புடி எல்லாம் நடக்காது.. அவள் உங்கினை தான் நிப்பாள்.. ஒருவேளை பியூட்டி பார்லர் போயிருப்பாள் போல.. இருங்கோ நான் தேடுறன்..”
என்று கொண்டு பதட்டத்துடன் வெளியே போனவளைத் தொடர்ந்து வெளியே வந்த வியாகேசு ஜேம்ஸைப் பார்க்க, அவன் புருவங்களை உயர்த்தி என்னவென கேட்க, கொஞ்சம் பொறுமையா இரு என்பது போல சைகை காட்டி விட்டு, கோதைக்கு பின்னால் போனார் அவர்.
வேகமாக ரூபவர்ஷிக்காக ஒதுக்கப் பட்ட அறையை நோக்கி போனவளை, எதிர் கொண்டு அணைத்துக் கொண்ட நீலரூபி
“கோதை இங்க பாருடி.. அந்த விசரி செய்த வேலையை எங்க எண்டே தெரியேல்லையடி.. இப்ப இன்னும் ஏன் பொம்பிளையைக் கூட்டி வரேல்லையெண்டு கேக்க தான் மானம் போகப் போகுது..”
என எரிச்சல் கலந்த கவலையோடு சொல்ல,
“சரி சரி தேடுவம் நீலாம்மா.. ஒரு வேளை மேக்கப் போடப் போனாளோ தெரியேல்லையே..”
என்று கொண்டு தாயை சமாதானம் செய்தாள்.
அதற்குள் அங்கே வந்திருந்த வியாகேசு, அறையினுள் போய் ஒரு கடிதத்தோடு வெளியே வந்தார்.
“பிள்ளை ஏதவோ கடதாசி கிடக்கடி என்னெண்டு பார்..”
என்று கொண்டு அதை கோதையிடம் நீட்டினார்.
“கடதாசியோ..”
என கைகள் நடுங்க அதை வாங்கிக் கொண்டவள், ஓரமாகச் சென்று அதைப் படித்தாள்.
“அப்பா.. என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் இங்கிருந்து போகிறேன்.. உங்கடை ஆசைப்படி அந்த ஜேம்ஸை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. நேற்றிரவு தான் என் முன்னால் காதலன் கைலாஷ் என்னைப் பார்க்க வந்திருந்தார்.. அவர் எனக்காக தற்கொலை வரைக்கும் போய் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.. எனக்கு மனது கனத்து விட்டது.. அதனால் அவருடனேயே போகிறேன்.. இதை அந்த ஜேம்ஸிடம் சொல்லி விடுங்கள் அதோடு நான் இப்படி கடிதம் மூலம் சொல்லி விட்டு போவற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது.. அந்த ஜேம்ஸ் நமக்கு எதிரி அல்லவா அவனை பழி வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு.. கலியாணம் நடக்க இருக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது எனும் பட்சத்தில் அவனை வேண்டாம் என்று நான் வீட்டை விட்டு கிளம்பினால் அது அவனுக்கு அவமானம் தானே.. இந்த அவமானம் தாங்காமல் அவன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.. அதனால் நான் இப்போதே கிளம்புகிறேன்.. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போலவேயே காட்டிக் கொள்ளுங்கள்.. நான் உங்களை பிறகு என் காதலனுடன் சந்திக்கிறேன்..”
என முடிந்திருந்தது கடிதம்.
அது ரூபவர்ஷியின் கையெழுத்து தான் என்பதை ஒரே பார்வையில் புரிந்து கொண்டவளுக்கு தலை சுற்றியது.
தலையில் கை வைத்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்ட கோதை
“இப்ப என்னப்பா செய்யிறது..”
என பாவமாக வியாகேசைப் பார்க்க
“நீ நினைத்தால் இந்த இக்கட்டை மாத்தலாம் பிள்ளை..”
என அவர் சட்டென்று சொன்னார்.
“நானோ நான் என்னப்பா செய்ய..”
“இப்ப நீ என்னத்துக்காக கவலைப் படுறாய்.. உன்ரை கொப்பருந்தை மானம் போகப் போகுதெண்டோ.. இல்லாட்டிக்கு பீட்டர் அவமானப் பட்டு நிக்கப் போறான் எண்டோ..”
“இதுல தில்லையப்பாந்தை மானம் போகாதே.. பாவம் அந்த மனுஷன் தான் அவமானப் பட்டு நிக்கப் போகுது..”
“அதனால அவனுக்காக நீ கவலைப் படுறாய் அப்புடித் தானே..”
“கவலைப் படாமல் வேறை என்ன செய்யிறது..”
“அவனை இந்த அவமானத்துல இருந்து காப்பாத்த ஒரு வழி கிடைச்சால்.. அதை நீ செய்வியோ..”
“சத்தியமா செய்வன் அப்பா..”
“இஞ்சை பார் பிள்ளை இண்டைக்கு அவனுக்கு கலியாணம் முடிஞ்சு.. அடுத்த ஒரு மணி நேரத்துல மீடியாக்கு அதை தெரியப் படுத்த ஒரு மீற்றிங் இண்டைக்கு போட்டு இருக்கிறான்.. அவை வார நேரம் அவன் தலை குனியாமல் நிமிர்ந்து நிக்கோணும் எண்டால் அதுக்கு உன்னால மட்டும் தான் உதவ முடியும்..”
“என்னப்பா செய்யோணும் சொல்லுங்கோ நான் செய்யிறன்..”
“பேச்சு மாற மாட்டியே..”
“என்னப்பா நீங்கள்.. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறியள்.. என்னில நம்பிக்கை இல்லையோ..”
“உன்னில நிறைய நம்பிக்கை இருக்கு.. ஆனா இந்த காரியத்தை நீ செய்ய மாட்டாய் அது தான்..”
“அப்பா.. கடவுள் சத்தியமா.. உங்கள் மேல வைச்சிருக்கிற மரியாதை மேல ஆணையா.. நான் செய்வன் நீங்கள் சொல்லுங்கோ..”
“நீ ஜேம்ஸை கலியாணம் கட்டோணும்..”
“அப்போய்..”
“கத்தாத பிள்ளை.. இதுக்கு தான் சொன்னான் நான்.. நீ அந்த காரியத்தை செய்ய மாட்டாய் எண்டு.. பாவம் அவன்.. அவனுக்கு குடுத்து வைச்சது அவ்வளவு தான்..”
“என்னப்பா நீங்கள்.. என்னைய பத்தி தெரிஞ்சுமோ உப்புடிக் கேக்கிறியள்..”
“உன்னைய பத்தி தெரிஞ்சதால தான் கேக்கிறன் பிள்ளை..”
“அப்பா.. அவரிந்தை அந்தஸ்துக்கும் தகுதிக்கும் போயும் போயும் இந்த வாழ்விழந்தவளையோ கலியாணம் கட்டோணும்..”
“உப்புடி கதைக்காத பிள்ளை..”
“சரி நான் அப்புடி கதைக்கேல்லை.. அவர் ரூபாவைக் கட்டுறது பத்தி எவ்வளவு கனவு கண்டிருந்திருப்பார்.. நீங்கள் பாட்டுக்கு என்னை வந்து கேக்குறியளே இது அவருக்கு தெரிஞ்சால் எப்புடி இருக்கும்.. என்னைய கட்ட அவருக்கு எப்புடி விருப்பம் வரும்.. நான் இங்க வேலை பாக்க வந்தவள்..”
“அவன் தன்ரை பெயர் கெடாமல் இருக்க நீ இந்த உதவியை செய்யக் கூடாதோ பிள்ளை.. பாவமெல்லோ அவன்..”
“நான் என்ன சொல்லுறன் நீங்கள் என்ன சொல்லுறியள் அப்பா.. அவருக்கு இதுல இஷ்டம் இருக்குமோ தெரியேல்லையே..”
“அவன் சரி எண்டால் உனக்கு சம்மதமோ..”
“அது.. என்ரை தங்கச்சி வாழ்க்கை..”
“அவள் தான் ஆரைப் பத்தியும் யோசியாமல் காதலிச்சவனோட ஓடியிட்டாளே பிள்ளை..”
“என்னப்பா இப்புடி சங்கடத்துல மாட்டி விடுறியளே..”
“பிள்ளை ஒண்டு கேக்கிறன் சொல்லுறியோ..”
“என்னப்பா..”
“உனக்கு ஒழுங்கான அப்பா இருந்திருந்தால் உனக்கு மறுமணம் செய்து வைப்பர் தானே.. அப்ப நீ அதை வேண்டாம் எண்டு சொல்லுவியோ..”
“அப்பா..”
“இந்தப்பா என்ரை பிள்ளைக்கு கலியாணம் கட்டி வைக்க ஆசைப் படுறன் அது தப்போ.. எனக்கு நீயும் முக்கியம் பீட்டரும் முக்கியம்.. அவனுக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டியோ..”
என அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அந்த இடத்துக்கு ஜேம்ஸ் வந்து விட்டான்.
“என்ன நடக்குது இங்க.. சீக்கிரமா சடங்கு சம்பிரதாயங்கள் முடிஞ்சா தான் நான் மீடியாவை கூப்பிட முடியும்..”
என்று கொண்டு வந்து நின்றவனை திரும்பி பார்த்த கோதைக்கு மனதை ஏதவோ செய்தது. ஆனாலும் தன்னைக் கட்டிக் கொள்ள அவனுக்கு இஷ்டம் இருக்குமோ இல்லையோ என பேசாமல் நின்றாள்.
“தம்பி எங்களை மன்னிச்சிருங்கோ.. ரூபா எங்களை மோசம் செய்திட்டு அவள் விரும்புற பையனோட ஓடியிட்டாள்..”
என நீலரூபி விசயத்தை போட்டுடைக்க,
“யார் யாரோட ஓடினால் எனக்கென்ன.. சொன்ன நேரத்துல சொன்ன மாதிரி என்னோட கலியாணம் நடக்கணும் நடக்கும்..”
என அழுத்தமாகச் சொன்னவனை, இவன் என்ன லூசா ஓடிப் போனவளை எங்கே போய் பிடித்து வருவான் என்பது போல கோதை அவனைப் பார்த்திருந்தாள்.
சற்றே தள்ளி அமர்ந்திருந்த தில்லையம்பலத்தை சொடக்கிட்டு ஜேம்ஸ் அழைக்க, அவனருகே வேகமாக வந்து நின்றார்
“என்ன உங்கடை மகளை வைச்சு என்னை அவமானப் படுத்தின சந்தோஷமோ..”
என அவன் கேட்க, அவரோ திரு திருவென முழித்தார்.
மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தவன்,
“முகூர்த்தத்துக்கு இன்னும் இருபத்தைஞ்சு நிமிஷம் தான் இருக்கு.. என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..”
என கேட்டான்.
அப்போதும் தில்லையம்பலம் விழித்துக் கொண்டு நிற்க,
அவனுக்கு முன்னால் வந்து நின்ற நீலரூபி
“தம்பி.. எப்புடியும் எங்கடை மகளை தானே கலியாணம் கட்ட போறேனு சொல்லி இருக்கீங்கள்.. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க.. ஒருத்தி போனால் என்ன.. இன்னொருத்தி இருக்காள்..”
என்று சொல்லிக் கொண்டே, சற்றே தள்ளி நின்ற கோதையை இழுத்து அவன் முன்னால் விட்டு
“என்ரை மூத்த பொண்ணைக் கட்டிக்கோங்க மாப்பிள்ளை..”
என்று பட்டென்று சொன்னார்.
“அம்மாஆ..”
என அதிர்ந்து போய் கோதை அவரைப் பார்க்க
“சும்மாயிருடி.. அந்த பையனுக்கு நாங்கள் வாக்கு குடுத்து இருக்கிறம்.. அதை நிறைவேத்தோணும்.. அம்மா தலை குனிஞ்சு நிக்கிறது உனக்கு சந்தோஷம் எண்டால் என்னை மறுத்து பேசு..”
என்று கொண்டு கோதையைப் பார்த்து நீலரூபி சொல்ல, கண்கள் கலங்க தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் கோதை.
சரியாக இருபத்தைந்து நிமிட முடிவில், மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் ஜேம்ஸ் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் சிவப்பு வண்ண கூரைப் பட்டுடுத்தி தலை குனிந்து அமர்ந்திருந்தாள் கோதை. குனிந்திருந்த அவளது தலையையே பார்த்தபடி அவளது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டினான் ஜேம்ஸ்.
தாலி கட்டி முடித்ததும் ஜேம்ஸ், வியாகேசைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். பதிலுக்கு அவனைப் பார்த்துக் கண்ணடித்து சிரித்தவரோ, நிதானமாக கையில் கிடந்த பூந்தி லட்டை வாயில் அடைத்துக் கொள்ள, தில்லையம்பலமோ இரத்த கண்ணீர் வடிய ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தார்.
குறிஞ்சி மலர்.. 32
தன் அறையினுள் நுழைந்து கொண்ட கோதைக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஏன் அவனுக்கு முகம் அப்படி மாறியது என மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டாள்.
பிறகு தன்னைத் தானே மானசீகமாகத் திட்டியும் கொண்டாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பாட்டைப் பாடி இருக்க கூடாது. அந்த இடத்துக்கு ஏற்ற போல நல்ல பாட்டாப் பாடியிருந்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறியிருக்கும், அவனும் இப்படிப் பாதியில் எழுந்து வந்திருக்க மாட்டான் என நினைத்தவள் அலுப்புடன் வெளியே சென்றாள்.
வெளியே எங்குமே ஜேம்ஸைக் காணவில்லை. லேசாகப் பசிப்பது போல இருக்க, ஏதாவது எடுத்துக் கொறிக்கலாம் என கீழே சமையலறைக்கு போனவளை வஞ்சிமாறன் பிடித்துக் கொண்டான்.
“என்ன பிள்ளை.. அண்ணன் குழிப்பணியாரம் கேட்டனே.. குழி வெட்டிட்டியோ..”
“அப்பாவை கூப்பிடண்ணாச்சி..”
“ஏன் பிள்ளை..”
“குழி வெட்ட தான்..”
“அச்சோ சோலியே முடிஞ்சிடும் போ..”
“ஏன்..”
“அந்த மனுஷன் என்னையப் புதைக்கத் தான் குழி வெட்டும்..”
“ஹா ஹா அந்தப் பயம்.. சரி வாங்கோ வேறை எதாவது சாப்பிடத் தாரன்..”
“அப்ப குழிப்பணியாரம்..”
“அது குழி வெட்டியிட்டு கூப்பிடுறன்..”
எனச் சிரித்தவளைப் பார்த்துச் சிரித்தவன், தானும் அவளோடு சமையலறை சென்றான்.
வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் தீயாய் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதையே பார்த்தபடி உள்ளே சென்றவள், தனக்கும் வஞ்சிக்கும் தேநீர் ஊற்றத் தொடங்கினாள்.
“என்னண்ணாச்சி.. வீடெல்லாம் அலங்கார வேலை நடக்குது.. என்ன பங்ஷன்..”
“என்ன பிள்ளை உனக்கு விசியமே தெரியாதோ..”
“என்ன விசியம்..”
“பாஸ் திடீரெண்டு வந்து.. நாளைக்கே கலியாணம் எண்டு சொல்லீட்டார்..”
“என்னது..”
“ஓம்.. இங்க இருக்கிறவையளை மட்டும் வைச்சுக் கொண்டு சிம்பிளா முடிக்கப் போறாராம்..”
“அதுக்கு தில்லையப்பா ஒண்டும் சொல்லேலையோ..”
“சொன்னவர் தான்.. ஆனா பாஸ் சொன்னா சொன்னது தான்.. அதனால பேசாமல் இருந்திட்டார்..”
“ஓ..”
“சரி நீ உடுப்புகள் எடுத்து வைச்சிட்டியோ..”
“என்ன உடுப்புகள்..”
“நாளையான் விஷேசத்துக்கு தான்..”
“நான் ஒரு ஓரமா நிண்டு கொள்ளுவன்..”
“ஏன் ஏன் அப்ப நீ விஷேசத்துக்கு வர மாட்டியோ..”
“விஷேசம் வீட்டுல தானே.. நான் இங்க சமையல்கட்டுல நிண்டு கொள்ளுவன்..”
“ஏன் பிள்ளை..”
“நான் விஷேசத்துக்கு வரக் கூடாதண்ணா.. நான் வந்து அவை ஆரும் முகம் சுருக்க முந்தி நான் உள்ளயே இருக்கலாம் எல்லோ..”
என கோதை சொல்லவும், ஏதோ சொல்ல வந்த வஞ்சி பிறகு வாயை மூடிக் கொண்டான்.
அந்த நேரம் பார்த்து வியாகேசும் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் அவருக்கும் சேர்த்து தேநீர் ஊற்றிக் கொடுத்தாள் கோதை.
“அண்ணனும் தங்கையும் என்னைய விட்டிட்டு என்ன ரகசியம் கதைக்கிறியள்..”
“அது ஒண்டுமில்லை பெரிசு.. குழிப்பணியாரம் கேட்டன் எல்லோ.. அதுக்கு எத்தினை அடி குழி வெட்டலாம் எண்டு டிஸ்கஸ் செய்றம்..”
“ஆ மூஞ்சி போடா அந்தப் பக்கம்.. பிள்ளையிந்தை முகமே சரியில்லை.. அதை என்ன ஏதெண்டு கேக்காமல் அவருக்கு குழிப்பணியாரமும் சுழிப்பணியாரமும் கேக்குதாம்..”
“ஏன் அவள் நல்லா தானே இருக்கிறாள்.. ஏன் பிள்ளை உடம்பு ஏதும் சரியில்லையோ..”
“இல்லையே அப்புடியெல்லாம் இல்லையே.. ஏனப்பா..”
“இல்லை வழமையை விடவும் உன்ரை முகம் கொஞ்சம் அப்செட்டா இருக்கு அது தான்.. ஏன் அந்த தில்லையான் ஏதும் சொன்னவனோ..”
“அச்சோ அப்புடி எல்லாம் இல்லையப்பா.. எனக்கு தான் தலைவலிக்கிற போல கிடக்கு.. அது தான் தேத்தண்ணி குடிக்க வந்தன்.. தேத்தண்ணி குடிச்சால் சரியாயிடும்..”
“பாரன்.. பெரிசுக்கு மட்டும் டக்கு டக்குனு எல்லாரும் நல்லா இருக்கினமோ இல்லாட்டிக்கு அப்செட்டா இருக்கினமோ எண்டுறது தெரிஞ்சிடுது..”
“சரி இதைக் குடியுங்கோ.. நான் ஏதாவது சமைக்கப் போறன்..”
என்றபடி கோதை திரும்பிக் கொள்ள, அவளுக்கு மனது சரியில்லை என்பது வியாகேசுக்கு புரிந்து போனது.
என்ன நடந்தது ஏது நடந்தது என அவளைத் துளைத்து துளைத்து கேள்வி கேட்பது அவருக்கு சரியாகத் தோன்றவில்லை. கோதை கெட்டிக்காரி எதையும் சமாளிக்கும் இதயம் கொண்டவள். அவளே சமாளித்துக் கொள்ளுவாள். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக தன்னிடம் வந்து சொல்லுவாள் என நினைத்த வியாகேசு, அவளுக்கு இப்போது வேண்டியது தனிமை என்பதைப் புரிந்து கொண்டு, அங்கேயே நின்று வளவளத்து கொண்டிருந்த வஞ்சியை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
வஞ்சிக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, அவனும் அதற்கு பிறகு வாயைத் திறக்கவேயில்லை.
நேரம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க, ஜேம்ஸுக்கு உணவை எடுத்து வைத்தவள், அதை தான் கொண்டு போகவோ வேறு யாரிடமும் கொடுத்து விடவோ என யோசனை செய்து முடிப்பதற்குள், அவனே கீழே இறங்கி வந்து உணவு மேசையில் அமர, அவனோடு வியாகேசும் அமர்ந்து கொண்டார்.
ஒரு தடவை உணவுப் பாத்திரங்களை எடுத்துப் போய் மேசை மேல் வைத்தவள், அவன் தன்னைக் கண்டு கொள்ளாமல் தானே உணவைப் பரிமாறவும் கடுப்பாகி விட்டாள்.
“ரொம்பதான் பண்றான் வெள்ளைப்பண்ணி.. இப்ப நான் அப்புடி என்ன செஞ்சிட்டன் எண்டு உப்புடி உர்ரெண்டு இருக்கிறான் வெண்ணை.. ஒரு பாட்டு பாடினது குத்தமா.. சரி தான் போடா உனக்கு கோபம் எண்டால் எனக்கும் தான் கோபம்..”
என மனதினுள் அவனை வைதவள் திரும்பிப் போய் சமையலறையினுள் நின்று கொண்டாள்.
ஜேம்ஸ் உணவு முடித்து போகும் வரை கூட அவள் வெளியே தலை காட்டவே இல்லை. உணவை முடித்த ஜேம்ஸோ அவள் எங்கே என்பது போல நிமிர்ந்து பார்க்க, அவள் தான் அங்கே இல்லையே, சில நிமிடங்கள் அப்படியே இருந்து பார்த்தவன் அவள் அங்கே வரப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் மீண்டும் கடுப்பாகி தன் அறைக்கு போய் விட்டான்.
இருவருக்குமே அன்று சிவராத்திரி ஆகிப் போனது. இயல்பிலேயே சட்டு சட்டென்று கோபமாகும் ஜேம்ஸுக்கு, அவள் ஏன் என்னிடம் வந்து பேசவில்லை என்ற கோபம். இவனது கோபத்தையே பார்த்து பார்த்து அது பழகிப் போனவளுக்கு, இப்ப என்ன நடந்து விட்டது என்று நீ முகத்தை தூக்கி வைத்திருக்கிறாய் என்கிற கோபம்.
அவரவர் கோபத்தோடேயே இருவரும் விடிய விடிய விழித்திருந்து விட்டு அதிகாலையில் தான் தூங்கத் தொடங்கியிருந்தார்கள்.
மறு நாள் காலை தில்லையம்பலம் அந்த பங்களாவை ஒரு வழி செய்து கொண்டிருந்தார். இன்னும் சில மணி நேரங்களில் தன் மகள் அந்த பங்களாவுக்கு எஜமானி ஆகி, ஜேம்ஸின் சாம்ராஜ்யத்துக்கே மகாராணி ஆகப் போகிறாள் என்கிற மிதப்பில் அவருக்கு பெருமை பிடிபடவில்லை.
அங்கிருந்த வேலையாட்களை கிட்டத்தட்ட தரக்குறைவாக பேசி வேலைக்கு ஏவிக் கொண்டிருந்தார். அவர்களும் மறு வார்த்தை பேசாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியின் வருங்கால மாமனார் அல்லவா அந்த ஒரு மரியாதைக்காக அவர்கள் வாயே திறக்கவில்லை.
இதைப் பார்த்த வியாகேசுக்கு சரியான கடுப்பாகிப் போனது. ஆனாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு போய் விட்டார்.
ஜேம்ஸ் கொடுத்த பெட்டியை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனவர், ஜேம்ஸின் அறைக் கதவை தட்டி, கதவைத் திறந்தவனிடம் வேண்டா வெறுப்பாக பெட்டியை நீட்டினார் வியாகேசு.
அவரது முகத்தின் வழி அவரது உணர்வுகளைப் படித்தவனுக்கு, மெல்லியதாக சிரிப்பு வரவே அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல்,
“உள்ள வாங்கோ..”
என்று அவரது கையைப் பிடித்து உள்ளே இழுத்து விட்டு கதவைப் பூட்டினான்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு..”
“சரி..”
“கதவைத் திறந்து விடு..”
“சரி..”
“விளையாடாத பீட்டர்..”
“சரி.. நான் விளையாடேல்லை.. என்ன முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு..”
“என்ன மாதிரி கிடக்குது.. அதெல்லாம் நல்லா தான் கிடக்கு.. என்னைய போக விடு..”
“இல்லை உங்களுக்கு என்னில கோபம்..”
“உன்னில கோபப் பட எனக்கென்ன உரிமை கிடக்கு..”
“யப்பா.. என்ன கோபம் இப்ப..”
“எனக்கு ஒண்டும் இல்லை போக விடு..”
“ஓ.. உங்களுக்கு நான் அந்த பிள்ளையை கலியாணம் கட்டுறது பிடிக்கேல்லை அப்புடி தானே..”
“பிடிக்கேல்லை எண்டால் மட்டும் பேசாமல் இருந்திடுவியோ..”
என்று கடுப்படித்தவரின், கன்னத்தை மெல்லத் தட்டியவன், அவரது காதோரம் ஏதோ இரகசியம் சொல்ல, அதைக் கேட்ட வியாகேசுக்கு ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விழிகள் விரிந்தன.
“உண்மையாவோடா..”
என அவனை நம்பாத பார்வை பார்க்க, அவரின் தலையில் கை வைத்து அவரைப் பார்த்தான் அவன். அது போதுமே அவருக்கு, வியாகேசின் மேல் ஆணையாக ஜேம்ஸ் ஒரு விசயம் சொல்கிறான் என்றால் அதை உயிரைக் கொடுத்தென்றாலும் நிறைவேற்றி வைப்பான் என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை.
“அதெல்லாம் சரி தான் இதை எப்புடி நடத்தி முடிக்க போறாய்..”
“ஒரு பெரிய மனுஷன் எண்டு உங்களை அதுக்கு தானே கூப்பிட்டன்.. ஏதாவது ஐடியா சொல்லுங்கோ..”
“ஐடியா தானே..”
என குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி வியாகேசு தீவிரமான யோசனையில் இறங்கி விட, அவரையே பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான் ஜேம்ஸ்.
சில நிமிடங்கள் அப்படியும் இப்படியும் யோசனை செய்து விட்டு, அவனருகில் வந்து அமர்ந்து கொண்டு
“எனக்கொரு ஐடியா வருதுடா.. ஆனா அதுல உன்னை வெறுக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கே..”
என தன் சந்தேகத்தை சொன்னார் அவர்.
“அதெல்லாம் பிறகு பாத்துக் கொள்ளலாம்.. அதோட போகப் போக அதெல்லாம் சரியாயிடும்..”
“நீ சொல்லுறதும் சரி தான்..”
“ம்ம்..”
“சரி உனக்கு தோணுறதை நீ சொல்லு.. எனக்கு தோணுறதை நான் சொல்லுறன்..”
“சரி”
என்று கொண்டு ஜேம்ஸ் தன் ஐடியாவை சொல்ல, வியாகேசு தன் ஐடியாவை சொன்னார். அதன் படி அடுத்த ஒரு மணி நேரத்தில் ரூபவர்ஷி காணாமல் போனாள்.
ஜேம்ஸ் கிறிஸ்தவன் என்றாலும், பெண் இந்து என்பதால் திருமணச் சடங்குகள் இந்து முறைப்படியே நடக்க வேண்டும் என்று அவனே சொல்லி விட்டான்.
அதன்படி முகூர்த்தத்துக்கு இன்னும் இரண்டு மணி நேரமே இருக்க, ஐயரும் வந்து சேர்ந்து விட்டார். மணமகளை சீக்கிரமாக தயாராகச் சொல்லுங்கள் என வியாகேசு நீலரூபியிடம் சொல்ல, அவரோ வேண்டா வெறுப்பாக மகளின் அறைக்குச் சென்றார்.
அங்கே ரூபாவுக்காக ஒதுக்கி கொடுக்கப் பட்ட அறை திறந்து கிடந்தது. அறையைத் திறந்து போட்டு விட்டு இந்த எருமை என்ன செய்கிறது என தலையில் அடித்துக் கொண்டு அறையினுள் போனவர், அடுத்த பத்து நிமிடத்தில் ரூபா அங்கே இல்லை என்பதை கண்டு கொண்டார்.
அடுத்து அவர் தில்லையம்பலத்திடம் போய் நின்றார். தொலைபேசியில் யாருடனோ வெட்டி வீராப்பு பேசிக் கொண்டிருந்த கணவரைப் பார்க்க பார்க்க நீலரூபிக்கு கடுப்பேறியது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ரூபா அறையில் இல்லாத விசயத்தை மட்டும் அவரிடம் சொன்னார்.
முதலில் மனைவி மீது எரிந்து விழுந்த தில்லையம்பலம், யாரிடமும் எதுவும் சொல்லாமல் தானும் மெல்ல மகளைத் தேட, ஒரு மணி நேரம் அப்படியே போனது தவிர அவளை ஆளைக் காணவேயில்லை. அவளது ஃபோன் வேறு வேலையே செய்யவில்லை. அப்படியே தலையில் கைவைத்துக் கொண்டு அவர் அமர்ந்து விட, நீலரூபியோ பேசாமல் அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
குறிஞ்சி மலர்.. 31
கொஞ்சமே கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் மெல்லிய குளிர் காற்று வீச, கோதைக்கு உடம்பு மெல்லக் கூசிச் சிலிர்த்தது. அதே நேரத்தில் அவன் தூக்கும் போது அவன் கை பட்டும் உடல் லேசாகக் கூசியது.
எட்டாவது படிக்கு போக, அவளைத் தூக்கப் போனவனது கையைத் தடுத்தவளை என்னவென்பது போலப் பார்த்தான் ஜேம்ஸ்.
“இல்லை உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.. மெல்ல மெல்ல எக்கினால் நானே ஏறிடுவன் போல..”
என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.
ஜேம்ஸ் நீயே ஏறு என்பது போல, ஒரு படி கீழே இறங்கி நிற்க, அவனைப் பார்த்துக் கொண்டே மெல்ல எம்பி எம்பிப் பார்த்தவளுக்கு மேலே போகவே முடியவில்லை, சரி கீழேயாவது போவோம் எனக் கீழே பார்த்தவளுக்கு, அவளது பாதம் கீழ்ப் படிக்கு எட்டவேயில்லை. அதைப் பார்த்தவளுக்கு தேவையில்லாமல் வாயைக் குடுத்து விட்டோம் என்பது நன்றாகவே புரிந்தது.
மெல்ல குனிந்து அவனைப் பாவமாகப் பார்க்க, அவனோ பேசாமல் அவளையே தான் பார்த்திருந்தான். சட்டு சட்டென்று மாறும் அவனது முக பாவனையில் அவள் அடிக்கடி தன்னைத் தொலைத்தாலுமே, இந்த முக பாவனையில் அவளுக்கு உள்ளூர லேசாக உதறியது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு, அவனது தோளின் மேல் மெல்ல கை வைத்து
“சாரியிங்கோ.. என்னில பிழை தான்.. நான் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கோணும்.. இனி வாயே திறக்க மாட்டன்.. பிளீஸ் தூக்கி விடுங்கோவன்.. இங்க பாருங்கோவன் பயத்துல கால் நடுங்குது..”
என்று கெஞ்சலோடு சொல்ல, அப்போதும் கோபம் குறையாமல் நின்றவனது விழிகள் எதேச்சையாக அவள் கால்களைப் பார்த்தன.
அவளின் கால்கள் நடுக்கு வியாதிக்காரர் போல அப்படி நடுங்கிக் கொண்டிருந்தது. உடனே சட்டென்று அவளைத் தூக்கி விட்டான். இப்போது பட்டும் படாமலும் எல்லாம் தூக்கவில்லை. நன்றாகவே இறுகப் பிடித்தணைத்து தான் தூக்கியிருந்தான்.
அவனது அணைப்பின் வித்தியாசம் அவளுக்கு புரிந்தாலுமே கூட, வாயை இறுக மூடிக் கொண்டு விட்டாள். பின்னே அவள் எதையாவது சொல்லப் போக, அவன் கோபமாகி அங்கேயிருந்தே அவளை கீழே போட்டாலும் போட்டு விடுவான். அவன் செய்யக் கூடியவன் தான். பிறகு தான் தான் சிதறு பூசணி போல சிதறிக் கிடக்க வேண்டும் என யோசனை செய்தவள், அவன் குடிலின் வாசலில் தூக்கி விடும் வரை வாயைத் திறக்கவேயில்லை.
அவளை மேலே தூக்கி விட்டு, தானும் மேலே வந்தவன், சட்டைப் பையினுள் இருந்த சாவியை எடுத்து அந்த மரக் குடிலின் கதவைத் திறந்து விட, வேகமாக உள்ளே சென்ற கோதை அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டாள். வெளியே இருந்த மரக் குடிலுக்கும், உள்ளே இருந்த அமைப்புக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல இருந்தது உள் அமைப்பு.
நடுவே ஒரு கூடம் இருக்க, அதன் இரண்டு பக்கமும் இரண்டு கதவுகள் இருந்தன. கால் வைத்து நடக்கும் இடத்தில் மென்மையான கம்பளி கிடந்தது. கூடத்தில் அலங்காரப் பொருட்களும், பூச்சாடிகளும் என அழகழகாக அடுக்கப் பட்டிருக்க, கூடத்தின் நடுவில் ஒரு பெரிய மெத்தை கிடந்தது. மெத்தைக்கு பக்கத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு ராக்கையில் புத்தகங்கள் அடுக்கப் பட்டிருந்தன.
வாசலோடு ஒட்டி வலது புறமாக ஒரு நீளமான சோபாவும், சோபாவின் முன்னால் ஒரு சிறிய மரமேசையும் கிடந்தது.
வலது புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து பார்த்தாள் கோதை. அது ஒரு குளியலறை.
“இங்க எப்புடி தண்ணி வரும்.. வாளியில அள்ளி அள்ளிக் கொண்டு வந்து நிரப்புறனியளோ..”
என தனது முதல் சந்தேகத்தை கோதை கேட்க,
அவளுக்கு பின்னால் கை கட்டி நின்றிருந்தவன்
“அந்த சுவிட்சை போடு பேபி..”
என கை காட்டினான்.
அவன் காட்டிய இடத்தில் இருந்த சுவிட்சை கோதை போட, அங்கே கிடந்த தொட்டிக்குள் நீர் வேகமாக வந்து விழுந்தது. சட்டென்று சுவிட்சை நிறுத்தியவள்,
“எப்புர்ரா..”
என அவனைப் பார்த்தாள்.
“தண்ணி வார மாதிரியான சிஸ்டம் எல்லாம் போன கிழமை தான் பேபி செய்தன்..”
“அது தான் எப்புடி..”
“ஏன் பேபி.. அதொண்டும் கஷ்டமான வேலையில்லையே..”
“நானும் கஷ்டம் எண்டு சொல்லேல்லை.. எந்த வயரையுமே காணோமே எப்புடி இந்த இடத்துக்கு கரண்ட் கணெக்சன் குடுத்தியள் எண்டு கேக்கிறன்..”
“அது கீழால பைப் வைச்சு குடுத்திருக்கு.. அந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கெதுக்கு.. உனக்கு இடம் பிடிச்சிருக்கோ..”
“பிடிக்காமல்.. ரொம்ப ரொம்ப பிடிச்சூ.. இந்த தொட்டி மரத்துல செய்து.. உள்ள ரப்பர் போட்டு இருக்கென்ன..”
“ஆராய்ச்சி முடிஞ்சால் அடுத்த பக்கம் போவமோ..”
“இன்னும் ஒரு டவுட்டு..”
“இப்ப என்னடி..”
“இதுக்கெல்லாம் என்ன செய்வியள்.. கீழ காடு தானே எண்டு ப்பிரீ பேர்ட் ஆயிடுவியளோ..”
என கோதை சின்ன விரலைத் தூக்கிக் காட்ட, முதலில் என்னவென்பது போல புரியாமல் பார்த்தவன் அடுத்த கணமே அவள் சொல்ல வருவது புரிந்து போக,
“அடிங்க..”
என பக்கத்தில் கிடந்த துவாலையால் அவளை நோகாமல் அடித்தான்.
பின்னர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தவளிடம் உள்ளே கிடந்த இன்னொரு கதவை காட்ட, அதைத் திறந்து பார்த்தவள் அந்தக் கழிவறையின் சுத்தத்தில் அவனை மனதோடு மெச்சிக் கொண்டு திரும்பி பார்க்க,
“இப்ப என்ன.. உதுக்கு எப்புடி என்ன கணெக்சன் எண்டு கேக்கப் போறியோ..”
எனக் கேட்ட ஜேம்ஸை பார்த்து
ஈ எனப் பற்களைக் காட்டியவள் வேகமாக வெளியே வந்து விட்டாள்.
வெளியே வந்தவள் அடுத்த பக்கம் செல்ல முயல, அவளை மறித்தவன்
“என்னைய பாத்து ஏன் பயந்தனீ எண்டு கேக்க.. பிறகு சொல்லுறன் எண்டியே இப்ப சொல்லு..”
எனக் கேட்க, முழியை முழியைப் பிரட்டியவள், அவன் பதில் சொல்லாமல் விடப் போவதில்லை என உணர்ந்து தான் கண்ட கனவை அப்படியே ஒப்புவித்தாள்.
அவள் சொல்லி முடித்து விட்டு அவனின் முகம் பார்க்க, அதுவோ உணர்ச்சி துடைத்த முகமாக இருந்தது.
கோபமாகி விட்டானோ என அவள் உள்ளூர கலங்க, அடுத்த கணமே பக்கென சிரித்து விட்டான் ஜேம்ஸ். அவனுக்கு இப்படிக் கூட சிரிக்க தெரியுமா என அவள் விழி விரிக்க,
“ஆக மொத்தம் என்னைய ரத்தம் குடிக்கிற காட்டேரி எண்டே நினைச்சிட்டாய்..”
என மீண்டும் சிரித்துக் கொண்டு முன்னே போய் விட்டான்.
அவன் கோபப் படுவான் என அவள் நினைத்திருக்க, அவனது அந்த சிரிப்பு அவளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
அடுத்து இடப் பக்க அறையைத் திறக்க, ஒரு அழகான சமையலறை அவளை இரு கரம் நீட்டி வரவேற்றது.
ஒரு குட்டி பிரிஜ், மினி அடுப்பு, சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள் என அந்த இடமும் படு சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
அவளைத் தாண்டி உள்ளே வந்தவன், பிரிஜ்ஜில் இருந்து அவளுக்கு தோடம்பழச்சாறு எடுத்துக் கொடுக்க, அவனுக்கு வில்லங்கமாகப் பாதி பழச்சாறைக் கொடுத்து விட்டு, மீதியை வாங்கி கடகடவென குடித்தவளுக்கு வயிறும் மனமும் குளிர்ந்து போனது.
“அவ்வளவு தானா..”
“என்ன..”
“நொறுக்குத்தீனி ஒண்ணுமே இல்லையா..”
“ஓ அதுவா..”
“அதே தான்..”
“அதெல்லாம் நான் வாங்கி வைக்கிறதில்லை..”
“என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்.. என் இத்தனூண்டு இதயம் சல்லி சல்லியா நொறுங்கிப் போச்சு போ.. இனி வாங்கி வைக்கோணும் சரியோ..”
“சரிங்க மேடம்..”
“சரி இப்ப என்ன இருக்கு கொறிக்க..”
“ப்புரூட்ஸ் இருக்கு..”
“அதையாவது குடுங்கோ தின்டு தொலைவம்..”
என்றவளின் கையில் ஜேம்ஸ் பழக் கூடையையே வைத்தான்.
அதில் இருந்த கொய்யாப் பழத்தை கொறித்தபடி
“இங்க நிண்டு எப்புடி வெளியால வானத்தை பாக்குறது.. முன் வாசல் பக்கமாவோ..”
என விளக்கம் கேட்க,
“எனக்கு பின்னால வா..”
என்று கொண்டு, சமையலறையை விட்டு வெளியே வந்தவன், கூடத்தில் மெத்தை கிடந்த இடத்தை நோக்கி நடந்தான்.
மெத்தைக்கு வலது பக்கம் கிடந்த திரைச்சீலையை விலக்க, அங்கே ஒரு கதவு, அதைத் திறக்க அங்கே விரிந்த காட்சியில் அடுத்த கட்டமாக கோதை மயங்கிப் போய் நின்றாள்.
அவளது முகத்துக்கு முன்னால் ஜேம்ஸ் சொடக்குப் போடத் தான் அவளுக்கு சுரணையே வந்தது. கிட்டத்தட்ட பால்கனி போன்று இருந்த அந்த இடத்தில் இடப் பக்கமாக ஒரு மர ஊஞ்சலும் வலப் பக்கமாக இரண்டு மரக் கதிரைகளும் கிடந்தன. அதைச் சுற்றி இருந்த அடைப்பும் மரத்தால் தான் செய்யப் பட்டிருந்தது. குடிலைச் சுற்றிப் படர்ந்திருந்த பூங்கொடிகள் அங்கேயும் காணும் இடம் யாவிலும் பற்றிப் படர்ந்திருந்தன.
போதாக்குறைக்கு இங்கிருந்து பார்க்கையில் மேற்கு வானம் அத்தனை அழகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.
தூரமாகத் தெரிந்த பச்சைக் காட்டின் வனப்பும், இடையே போன ஓடையின் வனப்பும், பலவிதமான பறவைகளின் காட்சியும் என பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது அந்த இடம்.
கோதை அப்படியே வீட்டின் சுவரோடு சாய்ந்து, கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து விட, அவளின் அருகில் ஜேம்ஸும் அமர்ந்து விட்டான்.
“காலம் முழுக்க இப்புடியே இருந்திடலாம் போல இருக்கே.. எவ்வளவு அழகு.. உலகத்துல இருக்கிற அழகு முழுக்க இங்க தான் கொட்டிக் கிடக்கிற போல கிடக்கு..”
என்றவளையே பார்த்திருந்த ஜேம்ஸ்
“பேபி.. நீ சொல்றது சரி தான்.. இந்த மாதிரியான ஒரு இடத்தை காட்டின எனக்கு என்ன செய்யப் போறாய்..”
எனக் கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்
“எதையோ எதிர்பார்த்து தானே கேக்கிறியள்.. என்னெண்டு கேளுங்கோ..”
எனச் சொன்னாள்.
கைகளைக் கட்டி காலை நீட்டி, வாகாக சுவரோடு சாய்ந்து கொண்டு மேற்கு வானத்தைப் பார்த்தான் ஜேம்ஸ். இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டி விடும் என்பது போல, சூரியன் மறைந்து நிமிடங்கள் கரைந்திருந்தன.
என்ன கேக்கப் போறானோ என கோதை மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருக்க
“எனக்காக ஒரு பாட்டு பாடுறியா பேபி..”
என ஆழ்ந்த குரலில் கேட்டவனை இமை கொட்டாமல் பார்த்தாள் கோதை.
நேரம் ஆக ஆக அவள் மனதில் உயர உயரப் போய்க் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
அவளது பார்வையில்
“என்னடி.. பாட்டு பாடுறியோண்டு தானே கேட்டன்.. ஓம் எண்டால் பாடு இல்லாட்டிக்கு இல்லையெண்டு சொல்லு.. அதுக்கேன் அப்புடிப் பாக்குறாய்..”
என லேசாகக் குரல் தடுமாறக் கேட்டவன், கோதைக்கு புதிது.
அந்த அசுரனுள் இருந்த அடுத்த பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. அவனின் அழகான அன்பான பரிமாணத்தில் கொஞ்சம் சலனமும் தடுமாற்றமும் அவளுள் மெல்ல மெல்ல நடந்து கொண்டு தான் இருந்தது.
அவனைப் பார்த்திருந்த விழிகளை விலக்கி மேற்கு வானத்தைப் பார்த்தவள்
“என்ன பாட்டு..”
என பதிலுக்கு கேட்டாள்.
“லவ் ஸோங்னு கேட்டால் நீ உதைப்பாய்.. அதனால ஏதாவது தத்துவ பாட்டா பாடு..”
என ஜேம்ஸ் சொல்லி முடிக்கவும், மீண்டும் ஒரு முறை அவனைப் பார்த்து விட்டு அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினாள் கோதை.
“அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்
என் சிலம்பொலியும்
புலம்புவதைக் கேள்..
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சமாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இருவிழியில் வரும் பொழுது..”
என அவளது உள்ளுணர்வுகள் வெடித்துப் பரவ, அவளின் குரலில் அந்தப் பாடல் அவளின் நிலையை பிரதிபலிப்பது போல வெளிப் பட்டது.
“ஆ.. ஆகாயம் இல்லாமலே ஒரு
நிலவு தரை மீது தள்ளாடுது..
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது..
தாளத்தில் சேராத தனி பாடல்
ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது..
விடியாத இரவேதும் கிடையாது
என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது..
வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி..”
எனப் பாடிக் கொண்டே போனவள்
“தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்..”
என்ற வரிகள் பாடும் போது, கோதையின் மூடியிருந்த இமைகளின் ஊடே கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
கோதை பாடலை பாடி முடிக்கவும் அந்த இடமே மயான அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டது. தன் கண்ணீரை அவன் பார்த்து விடக் கூடாதென நாசுக்காக துடைத்தவள் மெல்ல நிமிரவும், ஜேம்ஸ் தெற்குப் பக்கமாகத் திரும்பி நின்றிருந்தான்.
பின்னால் இருந்து பார்க்கும் போதே, அவன் இறுகிப் போய் நிற்பது அப்படியே தெரிந்தது. அவள் மெல்லப் போய் அவனைத் தொடுவதற்கு முதல், வேகமாகத் திரும்பியவனது முகம் அதுவரை இருந்தவனா இவன் என்பது போல இறுகி இருக்க
அதற்கு தோதாக கடினக் குரலில்
“வீட்டுக்கு போகலாம்..”
என்றபடி அவன் முன்னே செல்ல, வேறு வழியில்லாமல் அவனைத் தொடர்ந்தாள் கோதை.
படிகளில் அவளை இறக்கி விடும் போதும் சரி, கீழே இறங்கி வீடு போய் சேரும் வரையும் சரி அவன் அவளது முகத்தைப் பார்க்கவே இல்லை.
அதுவரை இருந்த அழகான நேரம் சட்டென்று இருண்டது போல இருக்க, கோதையும் பேசாமல் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
( “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”)
“உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி.
“நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு”
“நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா நீங்க அவளை எதுவும் சொல்லலையே” என்றான் கார்த்திகேயன்.
“அன்டுகே மீ முசாலி ஸ்டிர் நேனு எடைனா செப்பனா அனி அடிகிட்டே நேனு வினானு”
அதானே அவளை நான் எதுவும் சொன்னேன்னான்னு கேள்வி கேட்ப ஆனால் அவளை கேட்க மாட்ட என்று முகத்தை வெட்டினார் சௌந்திரவள்ளி.
“மீ அம்மா எம்மன்னாரு பாவா” உங்க அம்மா என்ன சொன்னுச்சு பாவா என்றாள் தெய்வானை.
“அம்மா ஏமி செப்பினா நேனே னா உம்புடுகாட்டென்னா ஏ ப்ரஸ்னாலு அடகானு” அம்மா என்ன சொன்னால் என்னடி நான் என் மயக்கியை எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் என்ற கார்த்திகேயனை அணைத்தாள் தெய்வானை.
(
“எண்டுக்கு பாவா ஆலா”) “ஏன் பாவா அப்படி” என்ற தெய்வானையின் கன்னத்தில் முத்தமிட்டவன் (“அன்டே நா ப்ரேமா”) அதெல்லாம் அப்படித் தான் டீ என் மயக்கி என்றான் கார்த்திகேயன்.
(“பாவா நுவ்வு 80ஸ்ல பிள்ளவி, நுவ்வு சைக்கிள் தொக்குட்டுன்னாவு காதா? நுவ்வு நானு நி சைக்கிள் மிடா பட்டணம் அன்டா டிஸுகேல்டாவு”)
” பாவா நீங்க 80ஸ் கிட் தானே. சைக்கிள் ஓட்டுவீங்க தானே என்னை உங்க சைக்கிளில் உட்கார வச்சு ஊரெல்லாம் சுத்தி காட்டுவீங்களா?” என்ற தெய்வானையை தன் மடியில் அமர வைத்தவன் (இதி என்டா வின்டா கொரிகா சொடாரா, நின்று புல்லட் லோ வெசி நகரம் கூட்டு திப்புட்டானு, நாகு சைக்கிள் வாடு) ” இது என்னடி விபரீத ஆசை பாவா உன்னை புல்லட்ல வச்சு ஊரையே சுத்துறேன் சைக்கிள் மட்டும் வேண்டாமே? ” என்றான் கார்த்திகேயன்.
(“அன்டே காது பாவா, நுவ்வு நானு சைக்கிள் மிடா திஸுகே அலி அன்டே”)”அதெல்லாம் இல்லை பாவா என்னை நீங்க சைக்கிளில் கூட்டிட்டு போக தான் வேண்டும் என்று பிடிவாதமாக கூறினாள் தெய்வானை.
பிறகு என்ன அவளை முன்னே அமர வைத்து சைக்கிளில் ஊர்வலம் தான்…
குறிஞ்சி மலர்.. 30
ஜேம்ஸ் பீட்டர் தன்னிடம் கொடுத்து விட்டுப் போன, அந்தப் பெரிய பெட்டியைக் கையில் திறந்து வைத்திருந்தபடி வியாகேசு விழித்துக் கொண்டு நிற்க, அவருக்கு பின்னால்
“பெரிசு.. பெரிசூஊஊ..”
என ஏலம் போட்டபடி வந்து நின்றான் வஞ்சிமாறன்.
“என்ன பெரிசு நிண்டபடியே நித்திரையோ.. உதென்ன கையில ஏதும் புதையல் கிடைச்சிதோ..”
என்று கொண்டு அவரின் கையில் இருந்த பெட்டியை எட்டிப் பார்த்தவன்
“வாவ்..”
என வாயைப் பிளந்தான்.
“பூச்சியேதும் உள்ள போவப் போகுது வாயை மூடடா..”
என்று கொண்டு அவர் கீழே அமர்ந்து விட, தானும் அவரோடு அமர்ந்து கொண்டு அந்தப் பெட்டியை ஆராய்ந்தான் வஞ்சி.
பெட்டிக்குள் அழகான சிகப்பு வண்ண கூரைப் பட்டு சேலையும், அதற்கு படு பொருத்தமாக ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸும் இருக்க, அதற்கு மேலே மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலிக்கயிறும், வெள்ளி மெட்டியும், வெள்ளிக் கொலுசும் அப்படியே குங்குமச் சிமிழும் வரிசையாகக் கிடக்க, ஒரு பக்கத்தில் வண்ண வண்ண வளையல்களும் ஒரு பெரிய வைர ஆரமும் கிடந்தது.
“எல்லாம் சரி தான் பெரிசு இது யார் குடுத்தது.. நம்ம பாஸா..”
“ஓமடா..”
“அதை ஏன் உங்க கிட்டே குடுத்தாரு..”
“அது தான்டா எனக்கும் தெரியேல்லை..”
“ஒரு வேளை கலியாணப் பொண்ணுட்ட குடுக்க சொல்லிக் குடுத்திருப்பாரோ..”
“அவன் ஒண்டுமே சொல்லேல்லை.. என்னட்டை குடுத்திட்டு நான் கேக்கும் போது குடுங்கோண்டு மட்டும் சொன்னான்..”
“அப்ப பவுத்திரமா வைச்சுக் கொள்ளுங்கோவன்..”
“ம்ம்..”
“அது சரி என்ன பலமா யோசிக்கிறியள்..”
“பீட்டருக்கு போயும் போயும் அந்த தில்லையம்பலத்தின்ரை பிள்ளையைத் தான் கலியாணம் கட்ட விருப்பம் வந்திருக்குதோ.. அதை நினைக்க நினைக்க தான் கடுப்பா கிடக்குது.. பிறகு என்ன இருந்தாலும் வாழப் போறவன் அவன் தானே எண்டு என்னை நானே சமாதானப் படுத்தி வைச்சிக்கிறன்..”
“ஏன் உங்களுக்கு அந்தப் பிள்ளையைப் பிடிக்கேல்லை..”
“அந்தப் பிள்ளையும் சரியில்லை அந்தப் பிள்ளையிந்த அப்பனும் சரியில்லை..”
“எங்கடை கோதை அந்தக் குடும்பத்துல இருந்து வந்தவள் தானே..”
“அங்க இருந்து வந்தாலும் எங்கடை கோதைக்கும் அவைக்கும் எந்த விதமான ரத்த சம்மந்தமும் இல்லை.. அதோட அவள் சேத்துல முளைச்ச செந்தாமரை.. அவள் ஆறு வயசுலயே அப்பாம்மா இல்லாமல் இவையிந்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள் அவ்வளவு தான்..”
“ம்ம்ம்.. ஆனால் அவை என்ன சரியில்லை பெரிசு.. சொத்துபத்துக்கோ ஆசைப் பட்டு வருகினம்..”
“அதுகள் மோசமான ஆக்களடா.. அப்புடியான ஆக்களை பீட்டர் எப்புடி தான் உள்ள விட்டானோ தெரியேல்லை.. ஒருவேளை எனக்கே தெரியாமல் புதுசா வேறை ஏதும் ஐடியா போட்டிருப்பான் எண்டு நினைக்கிறன்..”
“அவை என்ன மோசம் எண்டு சொல்லுங்கோவன்..”
“என்னடா கதை கேக்க படு ஆர்வமா இருக்கிறாய் போலயே..”
“ஹீ ஹீ அப்புடியெல்லாம் இல்லையே..”
“உன்ரை உந்த இளிப்பே உன்ரை வள்ளலைச் சொல்லிக் குடுக்குதே பிறகென்ன..”
“இல்லை அவை எப்புடிப் பட்டவை எண்டு தெரிஞ்சால் நானும் கொஞ்சம் அலேட்டா இருக்கலாம் எல்லோ அது தான்..”
“உனக்கு எல்லாமே விளையாட்டு தான்.. சரி ரொம்ப ஆர்வமாக் கேக்கிறதால சொல்லுறன்..”
“தில்லையம்பலத்துக்கு எங்கடை பீட்டர்ல சரியான பொறாமை.. அவன்ரை பேரில தானே எல்லா பிஸினஸும் கொடி கட்டிப் பறக்குது அது தான் அந்த பொறாமைக்கு காரணம்.. கிட்டதட்ட ஒரு ரெண்டு மாசத்துக்கு முதல் இங்க வந்து துள்ளினானே ஒருத்தன் அவன் அந்தாளிந்தை ஆள் தான்.. அவனை அனுப்பினதே பீட்டரை போட்டுத் தள்ளத்தான்.. பீட்டரோட பார்வைக்கு இதெல்லாம் தப்புமா.. ஆனா அவன் பெரிசா கண்டு கொள்ளேலை.. பிறகு இந்த வீட்டுல பெரியாக்கள் எண்டுற பேருல சுத்தித் திரியுதுகளே நாலு பன்னாடையள் அதுகளுக்கும் ஏதவோ ஆசை காட்டி தன்ரை பக்கம் இழுத்து.. அதுகளை வைச்சும் ஏதவோ சதி பண்ணுறான்.. அவையிந்த நினைப்பு பீட்டருக்கு ஒண்டும் தெரியாதாக்கும் எண்டு.. அவனுக்கு தெரியாம இங்க எதுவுமே நடக்காது எண்டு அவைக்கு தெரியேல்லை.. பொறுமையா விட்டு வைச்சிருக்கிறான்.. இதுக்குள்ள அவன் செய்யிறதை எல்லாம் செஞ்சு போட்டு நல்ல பிள்ளை போல அவனிட்டையே வந்து தன்ரை மிகளை கலியாணம் கட்டுறியோ எண்டு கேட்டால் அவனுக்கு கோபம் வருமோ வராதோ.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்தாளிந்தை மகளெண்டு ஒருத்தி வந்திருக்காளே கோவாவர்ஷியோ சோவாவர்ஷியோண்டு..”
“ரூபவர்ஷி..”
“அந்த மேனாமினுக்கி தான்.. இது வரை ரெண்டு பேரை காதலிச்சு ஏமாத்திப் போட்டாள்.. ஒருத்தன் சரி தான் போடி ரூபா இல்லாட்டிக்கு சோபா எண்டு வேறை ஒருத்தியை காதலிச்சு கலியாணம் கட்டியிட்டான்.. இன்னொருத்தன் போத்திலும் தாடியுமா திரியுறான்.. இப்ப இங்க வந்து நிக்கிறாள்..”
“கடவுளே உதெல்லாம் தெரிஞ்சே அதுகளை பாஸ் உள்ள விட்டிருக்கிறார்..”
“தெரிஞ்சதால தான் உள்ளயே விட்டிருக்கிறான்..”
“பாஸ் அதெல்லாம் தெரிஞ்சுமா அந்தப் பிள்ளையைக் கட்டப் போறாரு..”
“அதெல்லாம் எனக்கு தெரியேல்லை.. பீட்டர் எப்போ என்ன முடிவு எடுப்பான்னே தெரியேல்லை..”
“சரி பாப்பம்.. நடக்குறது நடக்கட்டும்.. பாஸுக்கு தெரியும் தானே எது செய்யோணும் செய்யக் கூடாதெண்டு.. நீங்கள் ஒழும்பி வாங்கோ நாங்கள் போய் வீட்டு அலங்காரம் எல்லாம் எப்புடி இருக்கெண்டு பாப்பம்..”
“நீ போ.. நான் கொஞ்சத்தால வாரன்..”
“சரி பெரிசு.. நீங்கள் ஆறுதலா வாங்கோ.. உவள் கோதையைக் கண்டியளோ..”
“அறைக்குள்ள படுத்திருந்தாளேடா.. ஏதும் அவசரமோ..”
“இல்லை குழிப் பணியாரம் கேட்டனான்.. முறைச்சுப் பாத்துட்டு.. எத்தினை அடியில குழி கிண்டுறது எண்டு கேட்டிட்டு போனவள்.. ஒரு வேளை குழி கிண்ட மண்வெட்டி எடுக்க போட்டாளோ தெரியேல்லை..”
“இப்ப வந்தன் எண்டால் உன்னையக் குழி கிண்டிப் புதைப்பன் ஓடிரு..”
“வர வர உமக்கு என்னில பாசமே இல்லை.. கோதை வந்ததும் கட்சி மாறிட்டாய்.. மகளுக்கும் அப்பாவுக்கும் என்னுல கொஞ்சங் கூட மரியாதை இல்லை..”
“வெட்டிக்கதையை விட்டிட்டு போய் மகளுக்கு ஏதாச்சும் உதவி செய்..”
“இப்ப போறன்.. திரும்பி..”
“திரும்பி..”
“திரும்பி வர மாட்டன் எண்டு சொல்ல வந்தன்..”
“வந்திராதே..”
“தங்கச்சீ கோதாவாரி..”
என இராகமாக அழைத்தபடி வஞ்சி அங்கிருந்து போக
“நல்ல காலம் கோதாரினு கூப்பிட்டு.. அவளிட்டை அகப்பைக் காம்பால அடி வாங்காமல் விட்டியே..”
எனப் பின்னால் இருந்த வியாகேசு சிரிக்க, அவருக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடி விட்டான் வஞ்சி.
………………….
அந்தப் பெரிய மரத்தின் கீழே நின்று மேலே இருந்த குடிலை அண்ணாந்து பார்த்தாள் கோதை. அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம்.
இப்படி ஒரு அழகான, இயற்கையான, ஏகாந்தமான சூழலில் ஒரு மரத்தின் மேல் ஓரளவு பெரிய குடில் என்பதெல்லாம் அவள் கனவில் மட்டுமே கண்டு இருக்கிறாள்.
அதை நேரில் பார்க்கையில், அந்த இடத்தை தனக்கு அறிமுகப் படுத்தியவன் மேல் தனி அன்பே வந்து விட்டது.
“ப்ப்ப்பாஆஆ.. இப்புடி ஒரு இடத்தை நான் பாத்ததே இல்லை.. எவ்வளவு அழக்கா இருக்கு.. உங்களுக்கும் என்னையப் போலத் தான் ரசனை என்ன.. நான் இந்த இடத்தை எதிர்பார்க்கவே இல்லை.. சும்மா சொல்லக் கூடாது உந்த சிடுமூஞ்சிக்கு பின்னாலயும் இப்புடி ஒரு ரசனையா எண்டு திகைக்க வைக்குது..”
என முகமெல்லாம் பிரகாசமாக அவனைப் பார்ப்பதும் அந்தக் குடிலைப் பார்ப்பதுமாக நின்றவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஜேம்ஸ்.
“என்ன நிண்டபடியே நித்திரையோ.. இதுல எப்புடி ஏறுறது.. கொஞ்சம் சொல்லுங்களேன்..”
என அவன் முன்னால் அவள் சொடக்கிட்டு கேட்க, தலையை உலுக்கி தன்னைச் சமன் படுத்தியவன், பக்கவாட்டில் கிடந்த பெரிய ஏணியைக் காட்டினான்.
கிட்டத்தட்ட அரைப் பனையளவு உசரத்தில், அந்த மரத்தில் கட்டப் பட்டிருந்த அந்தக் குடிலுக்கு பத்தே பத்து ஏணிப்படிகள் தான் இருந்தன. ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கிடையில் இருந்த இடைவெளி பெரிதாக இருந்தது.
அவன் காட்டிய ஏணியை ஆர்வத்தோடு எட்டிப் பார்த்த கோதைக்கு ஒரே கவலையாகிப் போய் விட்டது. அந்தப் படிகளில் ஜேம்ஸ் தாவித் தாவி ஏறி விடுவான். ஆனால் பாவம் கோதையால் எப்படி ஏற முடியும். சாதாரண ஏணிகளில் ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இருக்க வேண்டிய இடைவெளி, இங்கே இரண்டு படிகளுக்கு நடுவில் மூன்று மடங்கு இடைவெளியாக இருந்தது.
அவளையே பார்த்திருந்தவன்
“என்ன பேபி.. ஏன் பாத்துட்டே நிக்கிறாய்.. மேல ஏறிப் பாக்க ஆசையில்லையோ..”
என்று கேட்டபடி, முன்னால் போய் அந்த ஏணிகளில் வேகமாகத் தாவி ஏறினான்.
ஐந்து படிகளைக் கடந்த நிலையில் நின்று கீழே பார்த்தவன், கீழே நின்று அவனையே அண்ணாந்து பாவமாகப் பார்த்தவளின் பார்வையில்
“என்னடி..”
என்று கேட்க,
“உங்கடை பாட்டுக்கு பாஞ்சு பாஞ்சு போறியளே.. உதுல நான் எப்புடி ஏறுறது எண்டு கொஞ்சமாச்சும் யோசிச்சியளோ..”
எனக் கடுப்பாகிப் போனாள்.
“ஏன்டி ஏறத் தெரியாதோ..”
“ஏறத் தெரியாதாவோ.. லூசாப்பா நீயி..”
“ஏன்டி..”
“உதுல நான் எப்புடி ஏற..”
“ஏன்டி ஏறுறதுக்கு என்ன..”
“டேய் வந்தன் எண்டால் உழக்குவன்..”
“ஏன்டி..”
“கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருங்கோ..”
“என்னத்தை..”
“ஆ.. என்ரை மூஞ்சியை..”
“சரி பாக்கிறன்..”
என அவன் சொல்லி முடிப்பதற்குள், அவனை நோக்கி ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து எறிந்திருந்தாள் கோதை.
அது தன்னில் படாமல் மெல்ல விலகிக் கொண்டவன்
“என்ன தான்டி உன்ரை பிரச்சினை..”
என சீரியஸாகக் கேட்க,
ஏணிப்படிகளைக் கை காட்டி
“இதுல நான் எப்புடி ஏறுறது.. ஒரு படிக்கும் மத்தப் படிக்கும் எவ்வளவு இடைவெளி எண்டு பாத்தியளோ.. நீங்கள் பாட்டுக்கு ஏறி நிண்டு கொண்டு மேல வா மேல வா எண்டால் எப்புடி வாரது நான்..”
எனக் கடுப்புக் குறையாமல் கோதை சொல்ல, அப்போது தான் அவள் சொன்னதைக் கவனித்தவன், வேகமாகக் கீழே வந்தான்.
“இப்ப எப்புடியுங்கோ ஏறுறது.. எனக்கு அழுகையா வருது.. இதுக்கு நீங்கள் என்னைய இங்க கூட்டிக் கொண்டு வராமலேயே விட்டிருக்கலாம்..”
என கோதை முகத்தைத் தூக்கி வைத்தபடி சொல்லி விட்டு
“மரியாதையா..நாளைக்கே நான் விழாமல் டக்கெண்டு ஏறுற போல படியள் கட்டி விடுங்கோ..”
என்றும் சொன்னாள்.
சில நொடிகள் யோசனை செய்தவன், அவளைப் பார்த்து
“நான் சொல்லுற போல செய்றியோ..”
எனக் கேட்க,
“டக்கெண்டு செல்லுங்கோ.. எனக்கு எப்படா மேல போய் சுத்திப் பாப்பன் எண்டு கிடக்கு..”
எனப் பரபரத்தாள் கோதை.
“இப்ப மட்டும் உன்னை ஒரே ஒரு தடவை தொடட்டோ..”
என அவன் கேட்க, அவள் அவனை முறைக்க
“உனக்கு இப்ப மேல போகோணுமோ இல்லையோ..”
என அவன் பாயிண்டை பிடிக்க,
“போகோணும் போகோணும்..”
என்று கொண்டு அவனுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் கோதை.
அதை அனுமதியாக எடுத்துக் கொண்டவன், அவளைப் பட்டும் படாமலும் மெல்லத் தூக்கி, முதல் படியில் அமர்த்தினான். இப்படியே மெல்ல மெல்ல தானும் ஏறி, அவளையும் ஒவ்வொரு படியாக தூக்கி அமர்த்த, ஒரு வழியாக இருவரும் ஏழு படிகளுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆனால் கோதைக்கு தான் வாய் சும்மா கிடக்குமா,
“ஏனுங்கோ.. நான் பாரமா இல்லை தானே.. தெரியும் எனக்கு.. ஏனெண்டால் நான் இப்ப சிலிம் ஆயிட்டன்.. அது தான் உங்களுக்கு கஷ்டமா இல்லை எண்டு நினைக்கிறன்..”
எனக் கேட்டு வைக்க, அடுத்த படிக்கு அவளைத் தூக்க கையைக் கொண்டு போனவன், அவளை மேலும் கீழுமாகப் பார்த்த பார்வையில், கோதையின் தலை தானாக கவிழ்ந்து கொண்டது.
சிலிண்டர் சைஸில் உருளைக் குட்டி வடிவத்தில் இருந்து கொண்டு சிலிம் அது இதென பேசினால், பாவம் அவனும் தான் என்ன செய்வான்.
ஏற்கனவே அவனுக்கு அவளைத் தூக்கித் தூக்கி வைத்ததில் லேசாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. இதில் அவளது அந்த வெண்ட கதைக்கு அவன் பேசாமல் நின்றதே பெரிய விசயமாக இருந்தது.
ஒரு ரியாக்சனும் காட்டாத அவனது முகத்தைப் பார்த்தவள்,
இதற்கு பேசாமலேயே வாயை மூடி வைத்திருக்கலாம் என மானசீகமாக தன் தலையில் குட்டிக் கொண்டாள்.