கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5

4.4
(7)

 

 

 

        அத்தியாயம் 5

 

சோழபுரம்,

 

கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர்.

 

கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும் டிராஃபிக் சிக்னல் இரைச்சல் சத்தம்னு எப்படி இருக்கும் இங்கே எவ்வளவு அமைதியாக இருக்கிறது‌.

 

அப்படியே இதுலாம் சுற்றி பார்த்தால் இங்கேயே இருந்துடலாம் னு தோணுது அம்மா அப்படின்னு சொல்றா. ஆனால் அவளுக்கு அப்போது தெரியவில்லை அதுதான் நடக்க போகிறது என்று. அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டார் கீதா ஆனால் எதுவும் பதிலளிக்கவில்லை ஏதோ ஒரு யோசனையிலேயே இருந்தார்.

 

அப்போது கார் ஒரு இடத்தில் நின்றது. அங்கு ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் தான் கீதாவும் முன்பு ஃபோன் பேசி இங்கு இருக்கும் நிலையைத் தெரிந்து கொண்டார்‌. அவர் தான் ராம்பிரசாத் அவருடைய நண்பர் அவரும் வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டார். அவர் கீதாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் அங்கு என்ன நிலவரம்னு கூறினார். காரும் பெரிய வீட்டை நோக்கி நகர்ந்தது.

 

ராஜன் இல்லம்‌ (பெரிய வீடு),

 

மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமாக சோழனும் வந்து விட்டான். அவனை அமர வைத்து சடங்குகளை செய்தார் ஐயர். அதை பார்த்ததும் ராஜன் மிகவும் சந்தோஷமாக இருந்தார். ஆனால் அந்த சந்தோஷம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் காணாமல் போகும் என்று அவருக்குத் தெரியவில்லை.

 

கொஞ்சம் நேரத்தில் பொண்ணை அழைச்சிட்டு வாங்கன்னு ஐயர் சொன்னதும் பொண்ணை அழைக்க சென்றார்கள். ஆனால் பத்து நிமிடம் ஆகியும் யாரும் வரவில்லை. அதனால் ஐயர் நாழி ஆகுது சீக்கிரமா பொண்ணை வர சொல்லுங்க ன்னு சொல்றார். அப்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு பெண் சென்று அழைக்கப் போனார்.

 

இங்கே மணமேடையில் அமர்ந்து இருந்த சோழனுக்கும் பெண் இன்னும் வரவில்லை என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும்‌ அதே சமயத்தில் ஐயாவிற்கு கவலையாகி விடுமே கல்யாணம் நின்று போனால் என்று யோசனையோடு அமர்ந்து இருந்தான். ஆனால் அவனுக்கும் தெரியவில்லை சற்று நேரத்தில் கல்யாணம் நடக்கப் போகிறது என்று.

 

என்னாச்சு பெண்ணை அழைத்து வர சொல்லி இவ்வளவு நேரம் ஆகிறது இன்னும் யாரும் வரவில்லை என்று ராஜன் ஐயா தற்போது சேரனை அனுப்பி பார்த்து விட்டு வர சொன்னார். சேரனும் சென்று பார்த்தால் அங்கே பெண் வீட்டார் சோகத்தில் அமர்ந்து இருந்தனர். அதைப் பார்த்தவுடன் சேரனுக்கு ஏதோ தவறு நடந்து விட்டது என்று தெரிந்து கொண்டான். அதனால் சென்று தன் அப்பாவிடம் கூறி நீங்களே வந்து பாருங்கள் ஐயா என்று அழைத்துப் போனான்.

 

 

கல்யாணப் பெண்ணிற்கு என்னானது, சோழன் ஏன் சந்தோஷமாக இருந்தான், கவியின் வருகை சோழனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றப் போகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!