மான்ஸ்டர்-15

4.9
(12)

அத்தியாயம்-15

மார்ட்டின் நிவாஸின் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டு தன்னுடைய தலையை அழுத்த கோதியவாறே யோசனையில் இருந்தவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாகவும், அதே நேரம் வித்தியாசமாகவும் தான் இருந்ததுஇதுபோல ஊர், பெயர் தெரியாத பெண்ணே காப்பாற்றுவதாக உறுதியளித்துவிட்டு வந்த செயல் அவனுக்கே ஏதோ வித்தியாசமாக தான் தோன்றியதுஅது மட்டும் இல்லாமல் கண்களை சுருக்கி உதட்டை பாவம் போல விரித்து பாவமாக தன்னை காப்பாற்றும் படி கேட்ட அந்த பெண்ணவள் ஏதோ அப்படியே விட்டுப் போவதற்கு அவன் மனம் இடம் தரவில்லைஆனாலும் தன்னுடைய இந்த செயலை நினைத்து மார்ட்டினுக்கு கொஞ்சம் கடுப்பாகவும் தான் இருந்தது…

ஏனென்றால் அவன் மனம் வேறு அவனை அடிக்கடி நீ ஏன் கொஞ்ச நாளாவே வித்தியாசமா நடந்துக்குற…” என்று கேள்விக் கேட்டுக்கொண்டு இருக்க… “ம்ச் ஏதோ ஒரு சின்ன பொண்ணு அவளுக்கு உதவி செய்றதா நினைச்சுக்கிறேன் அவ்வளவுதான் இதுல எந்த வித்தியாசமும் இல்ல இது வேற எந்த பொண்ணுக்கு ஏற்பட்டாலும் நான் இப்படித்தான் செய்வேன்..” என்று ஒரு காரணம் கூறிக்கொள்ள…

அவனின் இன்னொரு மனமோ… ஓஓஓ அப்படியா…” என்று கேலி செய்துக் கொண்டிருக்கிறது

ம்ம்ச் நீ கொஞ்சம் அடங்கறியா…” என்று தன்னுடைய மனசாட்சியை அடக்கியவனுக்கோ கண்டிப்பாக தெரியும்.. இந்த நிவாஸ் இந்த மும்பையிலேயே இவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவன் என்றும் அவனிடம் வைத்துக் கொண்டால் கண்டிப்பாக மார்ட்டினுக்கு நிறைய பிரச்சனைகள் வரத்தான் செய்யும் என்றும்… ஆனால் அதனை எல்லாம் மார்ட்டின் சமாளித்துக் கொள்வான் தான் இல்லை என்று சொல்லவில்லை…. ஆனாலும் இது தேவையா என்று மூளை கேள்விக் கேட்டுக்கொண்டே தான் இருந்தது..

உனக்கு ஏன்டா இந்த பிரச்சனை… அவ யாருன்னே தெரியல அவளுக்கு போய் எதுக்குடா ஹெல்ப் பண்ற…” என்ற அவனுடைய மூளை ஐந்தாவது தடவையாக கேள்வி கேட்டு விட்டது… ஆனால் அவனுக்கோ அதற்கு காரணமே விளங்கவில்லை… ஏன் என்று யோசிக்கும் நேரம் எல்லாம் மைத்ரேயியின் பாவமான பூப்போன்ற முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது… அது மட்டுமில்லை அன்று அவன் மீது பூக்குவியலாக மோதியபோது.. இதோ சிறிது நேரத்திற்கு முன்பு அவனை அணைத்ததிலிருந்து அனைத்துமே அவனை கிறங்கடித்தது… அவளால் ஏதோ உணர்வுகள் அவனுக்கு தூண்டப்பட்டது… அந்த உணர்வுக்காகவும் தான் அவளை காப்பாற்ற இறங்கினான்..

பெண்ணவளின் அறையில் இருந்து வேகமாக வெளிவந்தவனோ ஒன்றுமே தெரியாதது போல நிவாஸின் பார்ட்டியில் வந்து சேர்ந்துக் கொள்ள,.. நிவாஸோ மார்ட்டினை நல்லபடியாக கவனித்துக்கொண்டான்.. மார்ட்டினின் கையில் ஒரு மதுகோப்பையை கொடுத்து விட்டு செல்லஆனால் மார்ட்டினோ அதை கொஞ்சம் கூட அருந்தவில்லைஅப்படியே கையில் வைத்துக்கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே கண்களால் அந்த இடத்தையும், செக்யூரிட்டி ஆட்களையும் அழந்துக்கொண்டிருந்தான்…

மார்ட்டின் இந்த பார்ட்டிக்கு தனியாக தான் வந்திருந்தான்கபீர் மார்ட்டினுடன் வருவதாக கூறியிருக்க ஆனால் மார்ட்டினோ வேண்டாம் என்று மறுப்பு கூறிவிட்டு தான் வந்திருந்தான்… நோ கபீர் இத நான் தனியா ஹேன்டில் பண்ணிப்பேன்.. உனக்கு தெரியும் இல்ல கபீர்…”என்று அழுத்தமாக கேட்க…

கபீருக்கோ கண்டிப்பாக தெரியும் தன்னுடைய பாஸ் இந்த வேலையை கத கச்சிதமாக முடித்துவிடுவான் என்று.. அதனால் அவனும் தலையாட்டியவாறு மார்ட்டினை தனியாக அனுப்பியிருந்தான்டிரைவர் வெளியில் காருடன் நிற்க இப்போது மார்ட்டினின் எண்ணம் எல்லாம்… எப்படி மைத்ரேயியை அந்த வீட்டிலிருந்து வெளியில் அழைத்து செல்வது என்று மட்டுமே தோன்றிக்கொண்டிருந்தது….

ஏனென்றால் அதற்கு முக்கிய காரணம் அவள் கழுத்தில் போட்டிருந்த அந்த லாக்கெட் தான்… அவன் எடுப்பதற்காக வந்த லாக்கெட் இப்போது அவளின் கழுத்தில்தான் கிடந்திருந்ததுஇந்த விழாவிற்கு முதல் நாள் தான் அவளை அலங்கரிப்பதற்காக பியூட்டிஷியங்கள் ஏற்பாடு செய்திருந்த நிவாஸோ டிரையல் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது இந்த லாக்கெட்டை எடுத்து வந்து அந்த பியூட்டிஷியனிடம் கொடுத்து அதனை பெண்ணவளின் கழுத்தில் அணிய வைத்திருந்தான்…

அவளின் மேக்கப்பையும், அழகையும் கண்களால் பருகியவனோ… “அது ரொம்ப முக்கியம் பேபி… உன்னோட அது ரொம்ப ப்ரிசியஸ் பேபிஅத பத்திரமா பாத்துக்கோ…” என்று நிவாஸ் மிரட்டிய தோனியில் கூறிவிட்டு செல்ல பெண்ணவளோ சிலை போல உட்கார்ந்திருந்தாள்.. அவளுக்கு அவள் வாழ்க்கை எப்படியாவது இந்த கிழவனிடம் இருந்து காக்க வேண்டும் என்று பயம் தான் வேறு ஒன்றும் இல்லை..

மாட்டின் இப்போது எப்படி அந்த அரண்மனையிலிருந்து வெளியில் அழைத்துச் செல்வது என்று யோசித்தவன் கண்டிப்பா இதனால பெரிய பிரச்சனை வரும் இது அத நம்ம தாக்கி தான் ஆகணும்…” என்று நினைத்துக் கொண்டவனுக்கு.. கண்டிப்பாக பெண்ணவளை ஏமாற்றி செல்ல மட்டும் யோசனை வரவே இல்லை…

ம்ச் பாவம் சின்ன பொண்ணு இந்த நிவாஸ் கிழவன்கிட்ட அஞ்சாவது பொண்டாட்டியா இருந்து என்ன என்ன கஷ்டப்பட போறாளோ…” என்று அவனது ஒரு பக்க மனம் கதறிக் கொண்டிருக்க.. “அட அவ கஷ்டப்பட்டா உனக்கென்னடா…” என்று இன்னொரு மனம் அவனை நக்கலாக பார்த்துக் கூறிக்கொண்டு இருக்க.. “ம்ச் பாவம் அவள காப்பாத்தி விட்டுட்டு தான் போவோமே…”என்று நினைத்தவாறு இருந்தவனுக்கு தான் கூறிய அரைமணி நேரம் ஓடிவிட்டது நினைத்து சுற்றமுற்றி பார்க்கநிவாஸோ ஒரு பக்கம் நின்று போதையில் தள்ளாடியவாறு சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்

அதனைப் பார்த்த மார்ட்டினோ தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதற்காக பதுங்கி பதுங்கி அப்படியே முதல் தளத்திற்கு சென்றுவிட்டான். அவளது அறைக்குள் வேகமாக நுழைந்தவன் ரெடியா…” என்று கேட்க..

அங்கு கட்டிலில் உட்கார்ந்து வேக வேகமாக நகத்தை கடித்துக்கொண்டிருந்தவளோ சடார் என்று எழுந்தவள் வேகமாக இவனை நோக்கி ஓடியவள் இறுக்க கட்டிக்கொண்டாள்…

அவளின் செயலில் மறுபடி அதிர்ந்த மார்ட்டினோ… அட என்னடா இது கொடுமை…”என்று தான் ஓடியது…

ம்ம்ச் நகருமா… டைம் ஆகுது நாம இப்டியே நின்னா அப்புறம் மாட்டிப்போம்….மூவ்…” என்று மெதுவாக பேசியவனைக்கண்டு அவளும் மாடுபோல தலையாட்ட.. சட்டென்று அவள் கையைப் பிடித்து அழைத்து செல்ல தொடங்கினான்

ஏங்கஇப்படியே போனா… நாம மாட்டிக்க மாட்டோம்… அந்த பின் பக்கம், இல்லனா பால்கனி வழிய இப்டி போலாமா…” என்று கேட்டவளை கண்டு முறைத்தவன்…

அட கொஞ்சம் வாயை மூடிட்டு வரியா…” என்றவனோ வேக வேகமாக அவளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினான்… சரியாக அவனும் தரை தளத்திற்கு வர அந்நேரம் பார்த்து அவ்வளவு நேரம் போதையில் சிரித்து பேசிக்கொண்டிருந்த நிவாஸோ இயற்கை அலைப்பினை முடிப்பதற்காக வீட்டினுள் வர அப்போது அவன் கண்களில் பட்டது என்னவோ மார்ட்டின் மைத்ரேயியின் கையை பிடித்து இழுத்து செல்வதுதான்…

நிவாஸ் அதனை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்தவனோ.. போதையில் தள்ளாடியவாறே பாஸ்என்ன பண்றீங்க…” என்று ஓடி போய் மார்ட்டினின் முன்னால் நிற்க…

மார்ட்டினோ அவனை இங்கு எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி இருந்தாலும் அதனை கண்களில் காட்டாமல் சேட்டினை முறைத்தவாறே நின்றிருந்தான்… இந்த பொண்ணு யாரு நிவாஸ்…”என்று அழுத்தமாக மார்ட்டின் கேட்க..

அதில் நிவாஸிற்கு கொஞ்சம் பயம் எழ தான் செய்தது.. “பாஸ் இது என்னோட பர்சனல்… இத கேட்க யாருக்கும் உரிமை இல்ல.. என்னோட பார்ட்டிக்கு தான் உங்கள கூப்டேன்… ஆனா நீங்க என்னோட விசியத்துல தலையிடுறது எனக்கு புடிக்கல பாஸ்…”என்று கண்களால் மைத்துவை எரித்தவாறே கூற…

மைத்துவோ அவனின் முறைப்பில் பயந்தவள் மார்ட்டினின் முதுகு பகுதியில் நன்றாக சாய்ந்து ஒழிந்துக்கொண்டாள்…

எது பர்சனல் நிவாஸ்… ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை தூக்கிட்டு வர்றது தப்புன்னு உனக்கு தெரியாதா… அதுக்கு சப்பக்கட்டு வேற கட்டுற…”என்று குரலை உயர்த்திய மார்ட்டினோ… உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு வேணும்னா உன் சொத்துக்காக உன்ன கட்டிக்க ஆயிரம் பேர் இருப்பாங்க… அப்டி ஒரு பொண்ண தேடி கண்டுப்பிடி.. அத விட்டுட்டு உன்னோட முப்பது வயசு கம்மியான சின்ன பொண்ண போய் தூக்கிட்டு வந்து அடச்சி வச்சி மிரட்டி கல்யாணம் பண்ன பாக்குற… திஸ் இஸ் நாட் ஃபேர் நிவாஸ்..”மார்ட்டின் கடும்கோவத்தில் நிவாஸிடம் பேசிப்பார்த்தான்…

ஆனால் நிவாஸோ இப்போது முழு போதையில் இருந்ததால் அதனால் மார்ட்டினுக்கு பயப்படாமல் அதைக் கேட்க நீ யாருடா…” என்று கேட்க…

மார்ட்டினுக்கோ வந்ததே ஆத்திரம் தனக்கு முன்னால் நிற்கவே பயப்படும் ஆள் இப்போது தன்னை எதிர்த்து பேசவும் ஆத்திரத்தில் வேகமாக நிவாஸின் கன்னத்தில் ஒரு அறை அறைய

அதனை யார் கண்டு ரசித்தார்களோ இல்லையோ அதனை அணு அணுவாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் மைத்ரேயி… வாங்கு வாங்கு நல்லா வாங்கு என்ன எப்டிலாம் அடச்சி வச்சி டார்ச்சர் செஞ்ச… ஐய்ய்ய்யா… நம்ம ஈஃபில் டவரு நல்ல அறையிது…”என்று மார்ட்டினை மனதில் செல்ல பேர் வைத்து அந்நேரத்திலும் கொஞ்சிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்…

நிவாஸோ போதையில் அந்த ஒற்றை அறையை தாங்க முடியாதவன் போதையில் இன்னும் தள்ளாடிக் கொண்டே இருக்கமார்ட்டினுக்கோ இன்னும் சினமேறியது… இன்னொன்று ஓங்கி அவன் நெஞ்சிலையே ஒரு மிதி மிதிக்க… எகுறிக்கொண்டு விழுந்தான் நிவாஸ்ஏதோ அந்த நேரம் மார்ட்டினுக்கு மைத்துவை சாக துணிந்த நிலையை நிலைத்து கோவம் இன்னும் பலமடங்கு அதிகரித்தது…

ஆஆஆ….” என்று நிவாஸ் கத்தியவாறே சோபாவில் போய்விழ… இன்னும் அவனை வெறிக்கொண்டு அடிக்க மார்ட்டினின் மனம் பிராண்டியது.. ஆனால் எந்நேரமும் நிவாஸின் ஆட்கள் உள்ளே வரலாம்.. என்னதான் மார்ட்டின் பலம் பொருந்திய கேங்க்ஸ்ட்டராக இருந்தாலும் அவனால் ஒரே நேரத்தில் நிவாஸின் மொத்த பாதுகாப்பு படையிடமும் மோத முடியாது என்பது தான் நிதர்சனம்… ஆனால் மார்ட்டின் அவனின் படைகளுடன் வந்திருந்தால் நிவாஸின் ஆட்களால் அவன் முன்னால் கூட நிற்க முடிந்திருக்காது..

ம்ம்ம் சீக்கிரம் வா…” என்று மைத்துவை பிடித்திழுத்தவன் வீட்டினை விட்டு வெளியேற முயன்றான்.. ஆனால் மைத்து அவனின் கையை நகர முடியாத அளவிற்கு இறுக்க பிடித்துக் கொண்டவள் அப்படியே நிற்கமார்ட்டினுக்கோ ஒன்றுமே புரியவில்லை… மார்ட்டின் திரும்பி அவளை புரியாத பார்வை பார்த்தவன்… ம்ச் வாட்…”என்று வேகமாக கத்த…

ம்ச் அவன் எப்படி எல்லாம் என்னை டார்ச்சர் பண்ணான்னு தெரியுமாஎப்படி அவன இப்டி ஒரு அறையோடவும், ஒரு ஒதையோடவும் மட்டும் விட்டுட்டு போக சொல்றீங்கஇது உங்களுக்கே நியாயமா இருக்கா…” என்று கேட்கமார்ட்டினுக்கோ அவளது பேச்சு அந்த நேரத்திலும் சிரிப்பைதான் கொடுத்ததுஆனால் அதனை வெளிக்காட்டாமல்…

ம்ச் இப்ப அதுக்காக அவன என்ன பண்ண சொல்ற….” என்று கேட்க.

ம்ம்ம்ச் இந்த ஆள இன்னும் நாலு மிதி மிதிங்களேன்… எனக்காக ப்ளீஸ்…” என்று கண்களை சுருக்கி சிறுபிள்ளை போல கேட்பவளை என்ன செய்வது என்றே அவனுக்கு புரியவில்லை…

ஓஓஓ காட்… நேரம் காலம் புரியாம இம்ச பண்றாளே…” என்று தன் தலையை அழுத்த கோதியவன்… “ம்ச் நீ என்ன விளையாடுறியா இன்னும் கொஞ்ச நேரம் நம்ம இங்க இருந்தாலும் அந்த நிவாஸோட ஆட்கள் உள்ள வந்துடுவானுங்க… அப்புறம் அவ்ளோதான்…” என்று கூற

ம்ச் அதெல்லாம் உங்களால அவங்கள சமாளிக்க முடியும்…” என்று ஏதோ பல வருடங்களாக மார்ட்டினை பார்ப்பது போலவும், அவனுடன் பழகுவது போலவும், அவனை பற்றி நன்றாக தெரியும் போலவும் கதை எடுத்துவிடஅதை பார்த்தவனுக்கு வெறி ஏறியது..

ம்ச் பேசாம வாடி…” என்று மறுபடியும் அவள் கையை இழுக்க…

ஆனால் அவளோ அவளது கையை தன்னுடைய இரு கைகளால் இறுக்கி பிடித்துக் கொண்டவள்… “ப்ளீஸ் எனக்காக அவன இன்னும் நாலு அடி அடிக்கிறீங்களாநான் கிட்டத்தட்ட ஒரு வாரமா தூங்கவே இல்ல தெரியுமாஇது எல்லாம் இந்த நாயால வந்தது.. எப்போ என் ரூமுக்கு வருவானோ எப்போ என் மேல கை வைப்பானோன்னு பயந்துட்டே இருப்பேன்…. பத்தாததுக்கு நாலு தடவ என்னை தொட கூட முயற்சி பண்ணான்… அவனோட கைய உடைங்க… ப்ளீஸ்…” என்று சோபாவில் போதையில் உருண்டு புரண்டு கொண்டிருந்த நிவாஸை காட்டி கூற…

மார்ட்டினுக்கோ அந்நேரம் அவள் பட்ட துயரம் நெஞ்சை ரணமாக வலிக்கத்தான் செய்தது… அவளுக்காக அவள் பட்ட கஷ்டத்திற்காக அவன் முகத்தில் நான்கு குத்து என்ன அவன் கையை கூட உடைக்கலாம் என்று நினைத்தவனோ அதனை முகத்தில் காட்டாமல் ம்ச் சரி அடிச்சு தொலையுறேன்…” என்று வேகமாக அ நிவாஸின் அருகில் வந்தவன் அவனின் பாதி சொட்டை விழுந்த தலையை முடியை இறுக்க பிடித்து தூக்கி நிறுத்தியவன் அவன் முகத்திலையே நான்கு குத்து வைக்க….

ஆஆஅ மார்ட்டின்…”என்று கத்தினான் நிவாஸ்…

மார்ட்டினோ பல்லை கடித்தவாறே அவன் வயிற்றிலேயே ஓங்கி ஒரு இறும்பு கையால் குத்து வைக்க… ஆஆஆஅ…” என்று கதறியவாறு மறுபடியும் சோபாவில் விழுந்தான்… அப்போதும் மார்ட்டினுக்கு கோவம் குறையாது இருக்க… மைத்துவின் மீது கை வைக்க நினைத்தவனின் கையை அவனுக்கு முதுகு பக்கம் கொண்டு வந்த மார்ட்டினோ அதனை அசால்ட்டாக உடைக்க… எலும்பு உடையும் சத்தம் நன்றாக வெளியில் கேட்டது…

ஆஆஆஅ….. அம்மா…”என்று நிவாஸ் கதற… மார்ட்டினுக்கோ அப்போது தான் வெறியே அடங்கியது… இவள தொடனும்னு இனி நெனச்சாலும் முடியாதுடா உன்னால…”என்று ஆக்ரோஷமாக கத்தியவனை ரசித்தவாறே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளை நிமிர்ந்து பார்த்த மார்ட்டினுக்கு அவள் முகத்தில் தெரிந்த புன்னகை கொஞ்சம் சமாதானம் செய்தது.. அதுவும் இல்லாமல் அவளின் புன்னகை அவனுக்கு ரசிக்கத்தான் செய்ததுஆனால் இப்போது அதனை முழுதாக நின்று ரசிக்கவும் நேரம் இல்லாததால் அவள் கையை வெடுக்கென்று பிடித்துக்கொண்டவன்…

ம்ம் இப்ப சந்தோஷமா வா போலாம்…” என்று வேகமாக வெளியில் கூட்டி வந்தான்…

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!