அத்தியாயம்-16
அந்த பார்ட்டியில் அனைவரும் பிஸியாக இருக்க வீட்டில் நடந்தது எதுவுமே வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை… மார்ட்டின் வேகமாக தன்னுடைய கார் நின்றிருக்கும் இடத்தில் அவளை கொண்டு விட்டவன்.. “ம்ம்ம் சீக்கிரம் கார்ல ஏறு…” என்று காரில் ஏறியவன்…
“ம்ம் டிரைவர் சீக்கிரம் கார எடு…” என்று அவசரப்படுத்தினான்… சரி என்று டிரைவரும் வேகமாக காரினை எடுத்தார்… ஆனால் அதன் பிறகு மார்ட்டின் சர்வசாதாரணமாக காரில் உட்கார்ந்திருக்க ஆனால் பெண்ணவளுக்கு தான் அங்கு வராத நடுக்கம் இப்போது ஏற்பட்டது…
“அந்த ஆளு என்ன கண்டுபிடிச்சுருவாரா.. அப்புறம் என்ன மறுபடியும் இழுத்துட்டு போயிருவாரா… ஐயோ திரும்ப அந்த ஆளுக்கிட்ட எல்லாம் என்னால போக முடியாது.. அப்புறம் அவர என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது என்ன எப்படியாவது காப்பாத்துங்க…” என்று மறுபடியும் புலம்பியவாறே வர..
மார்ட்டினுக்கு தான் இந்த தொல்லை இன்னும் தனக்கு தேவையா என்றுதான் தோன்றியது… “ம்ச் கொஞ்சம் வாயை மூடுறியா…” என்று ஒரு அதட்டல் போட்டவன் “ம்ச் சீக்கிரம் போங்க வீட்டுக்கு…” என்று ட்ரைவரை அவசரப்படுத்தியவனுக்கோ கண்டிப்பாக தெரியும் பின் நாளில் இவளின் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக வரக்கூடும் என்று..
ட்ரைவர் காரினை வேகவேகமாக மார்ட்டினின் வீட்டிற்குள் கொண்டு சென்று நிறுத்த… “ஒரு மணி நேரத்தில நம்ம கிளம்பனும்… ரெடியா இரு…” என்று ட்ரைவரிடம் கூறியவாறு மார்ட்டின் மைத்துவை தன் வீட்டிற்குள் அழைத்து சென்றவன்.. ஹாலில் இருக்கும் சோபாவில் வேகமாக உட்கார்ந்தவனின் மனதிலோ பல கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தான்..
ஆனால் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல மைத்துவோ அந்த அரண்மனையையே சுற்றிமுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் முகத்தில் அப்படி ஒரு ரசனை.. “வாவ் எவ்வளவு அழகான அரண்மனை எவ்வளவு ஆர்கனைசிங்கா வச்சிருக்கீங்க.. உண்மையிலேயே நீங்க க்ரேட் தான்…”என்று அவனை பாராட்டிக்கொண்டே இருக்க…
ஆனால் மார்ட்டினோ அதனை கண்டு கொள்ளவே இல்லை… அங்கிருந்த ஒரு பெயின்டிங்கை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளோ… “இந்த பெயிண்டிங் ரொம்ப சூப்பரா இருக்கு..” என்று மறுபடி பார்ட்டிக்கொண்டே இருக்க… அதில் இப்போது மார்ட்டினுக்கு கோவம் தலைக்கு ஏறியது…
“ம்ச் என்ன பிரச்சினை உனக்கு…” என்று வேகமாக கத்தியவானோ… “நானும் அப்போல இருந்து பாக்குறேன் ஏதோ டூருக்கு வந்த மாதிரி வீட்டை சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்க… உனக்கு நியாபகம் படுத்துறேன் நீ ஒன்னும் இங்க டூரிஸ்டா வரல.. உன்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்துருக்கேன்…” என்று மார்ட்டின் தன் ஹேசல் விழிகளால் அவளை முறைத்தவன் அவளை பார்த்து கத்தியவன்… “போனா போதுன்னு உன்ன அங்க இருந்து சேவ் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன்… அத மனசுல வச்சிக்க… தென் நீ ஒன்னும் இந்த வீட்டு சொந்தக்காரி கிடையாது…”என்று அதட்டியவனோ…
“ம்ம்ம் சீக்கிரம் அந்த லாக்கெட்ட கழட்டி கொடுத்துட்டு இங்கிருந்து கிளம்பு…” என்று மார்ட்டின் அவசரமாக கத்த… ஆனால் அவன் மனமோ ஏதோ தவறு செய்வது போல பிராண்டியது…
அவன் திட்டியதிலையே அவளது பளீர் என்ற புன்னகை முகம் அப்படியே சுருங்கி போக… அதனை பார்த்த மார்ட்டினுக்கோ ஒருமாதிரியாகி போனது. அதே நேரம் மனம் ஒரு மாதிரி பரிதவிப்பாக இருக்க ஆனாலும் அதனை வெளி காட்டாமல் அவன் பிடியிலையே முனைப்பாக இருந்தான்… “ம்ம்ம் ம்ம் சீக்கிரம் கிளம்பு.. எனக்கு வேல இருக்கு…” என்று எரிந்து விழுந்தான்…
அவளோ பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டி.. “ம்ச் போ போனா நான் எங்க சார் போவேன்…”என்று சலிப்பாக கத்தியவளோ… “இப்படி சீக்கிரமா என்னை கிளம்ப சொன்னா நான் எங்க தான் போறது.. எனக்கு இந்த ஊரு புதுசு, ஆளுங்க புதுசு…”என்று மார்ட்டினை பார்த்து சினுங்கியவளின் குரல் மார்ட்டினுக்கு போதை தான் ஏற்றியது.. அதுவும் அவள் வேகமாக தன் அருகில் வருவதை பார்த்தவனோ வேகமாக…
“ம்ச் எதுனாலும் அங்கே இருந்தே பேசுடி என் கிட்ட வராத…”கத்தியவனோ… “கிட்ட வந்து தொட்டுக்கிட்டு உசுப்பேத்துறா… ஏற்கனவே தூரத்துல இருந்தே டார்ச்சர் பண்றா.. இதுல கிட்ட வேற வந்துக்கிட்டு…”என்று புலம்பியவன்… “உன்ன போக சொல்லாம.. பின்ன எங்கூடவே வச்சி சோறு போட்டு காப்பாத்த சொல்றியா…” என்று கூற… அவளோ முகம் சிவக்க, சுருங்கிய முகத்துடன்…
“ம்ச் எனக்குனு இந்த உலகத்துல யாருமே கிடையாது… என்னோட அப்பாக்கிட்டையோ இல்லனா என் சித்திக்கிட்டையோ என்னால போக முடியாது… அவங்கதான் என்னுடைய இந்த நிலைமைக்கே காரணம்… இப்போ திடீர்னு போக சொன்னா நான் எங்க போறது…” என்று கேட்க.
மார்ட்டினுக்கோ இது என்னடா புது தலைவலி என்று தான் தோன்றியது. அவனுக்கோ அவளை இங்கிருந்து வேகமாக துரத்தும் எண்ணம் தான் அதிகமாக வந்தது.. ஏற்கனவே தன்னுடைய மனம் அவளின் ஒற்றை தொடுகைக்கு கூட மயங்கி கிடப்பது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.. இந்நிலையில் அவளை அருகிலே வைத்துக்கொண்டு சுற்ற அவனுக்கு என்ன பைத்தியமா…
“ம்ச் அதுக்காக உனக்கு காலம் பூரா வெச்சு சோறு போட சொல்றியா… அதான் உனக்கு அப்பா இருக்காருல்ல அவர பாத்து போ.. இங்க இருந்துட்டு என்னை டார்ச்சர் செய்யாத…”என்று கூறியவனுக்கோ அவளின் “என்னோட இந்த நிலைக்கே என் அப்பா சித்தி தான் காரணம்..”என்று கூறியது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது… “அப்டி என்ன செஞ்சிருப்பாங்க இவளோட பேரன்ட்ஸ்…”என்று நினைத்தவனுக்கோ அதனை அவளிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ள மட்டும் எண்ணம் வரவில்லை… ஏனோ அதனை அவளிடம் கேட்டு அவள் இங்கையே இருப்பதற்கு வசதி செய்துக்கொடுக்க அவனுக்கு மனம் ஒப்பவில்லை..
அவள் என்னவோ தலையை குனிந்து கொண்டு முகம் வாட நின்றவள் “என்னை கொஞ்ச நாள் மட்டும் இங்க இருக்க விடுறீங்களா அதுக்கப்புறம் நானாவே ஒரு வேலைய தேடிக்கிட்டு இங்க இருந்து போய்டுறேன்….” என்று கூற.
மார்ட்டினுக்கு இது சரியாகப்படவில்லை… ஏனென்றால் அவளை பார்த்த நாளிலிருந்து இல்லை இல்லை அவள் முதல் முதலில் தன் மீது வந்து மோதிய நாளிலிருந்து ஏதோ அவன் மனமும், உடலும் வித்தியாசமாக நடக்க தொடங்கியிருந்தது… அதுவும் இவளிடம் மட்டும்தான்.. வேற எந்த பெண்களை பார்த்தாலும் அவனுக்கு இதுவரை தோன்றாத உணர்வுகள் எல்லாம் இவளை பார்த்து தோன்ற ஆரம்பித்திருந்தது… அது எதனால் என்று அவனும் ஆராய பயப்பட்டு தான் அவளை இங்கு வைத்திருப்பதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறான்…
“இவ என்ன நமக்கே ஆப்படிக்க பாக்குறா…”என்று புலம்பியவன்… “ம்ச் அதெல்லாம் முடியாது உன்ன இங்க வச்சுக்கிட்டு என்னால அடை காக்குற மாதிரி காக்க முடியாது…”என்றவனோ அவளை அடை எல்லாம் காக்க வேண்டாம்.. ஏற்கனவே அவனின் வீட்டின் காவல் அந்த அளவிற்கு கடுமையாக தான் இருக்கும்… அதில் ஒருவன் உள்ளே நுழைவடே கடினம்… அப்படி இருக்கும்போது அந்த நிவாஸ் மட்டுமில்லை வேறு யாராக இருந்தாலும் உள்ளே விரலை கூட நீட்ட முடியாது… ஆனாலும் அதை நிவாஸிற்கு அரசியல்வாதிகளின் பெரிய பெரிய தலைகளில் எல்லாம் கனெக்சன் வைத்திருப்பதால் அவனை நம்பவே கூடாது.. எப்படியானாலும் இவளை அவள் ஊரிற்கு அனுப்பியாக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு பெண்ணவளோ முடியவே முடியாது தான் இங்கிருந்து செல்லவே முடியாது என்று உறுதியாக மனதில் நினைத்துக் கொண்டிருப்பது பாவம் தெரியாமலே போனது…
மைத்து மார்ட்டின் யோசிப்பதை பார்த்தவளோ… “ம்ச் நான் என்ன காலம் பூரா இங்க தங்கறதுக்காகவா கேக்குறேன்… கொஞ்ச நாள் தங்கறதுக்கு தான கேக்குறேன்…. என் படிப்புக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வேலை கிடைச்சசிட்டா நான் இங்கேயிருந்து போயிடறேன் ப்ளீஸ்…” என்று கெஞ்சியவள்… “அதுவரைக்கும் இங்கேயே இருக்க விடுங்க… எனக்கு இந்த மும்பை வேற ரொம்ப புதுசு… இங்க எனக்கு யாருமே எனக்கு தெரியாது… ஏன் நான் எங்க ஊரை விட்டு தாண்டுனது கூட கிடையாது… அப்படிப்பட்டவள இப்படி நீங்க தனியா துரத்த நினைக்கிறீங்களே இது கொஞ்சமாச்சும் நியாயமா…” என்று தன்னுடைய பளப்பளப்பான முகத்தை சுருக்கி பரிதவிப்பாக கேட்டுக் கொண்டிருந்த பெண்ணவளை பார்க்க பார்க்க மார்ட்டினிற்கு இன்னும் உள்ளத்தில் புதுப்புது உணர்வுகள் தோன்றிக் கொண்டே தான் இருந்தது…
கிட்டத்தட்ட அவளை அழைத்து வந்து ஒரு மணி நேரமாக இதனை மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தாள்… அது மார்ட்டினுக்கு கடுப்பாக தான் இருந்தது… “அதெல்லாம் முடியாது இங்க நான் மட்டும் தான் இருக்கேன்… எந்த பொண்ணுக்கும் இங்க அலோவ்ட் இல்ல.. உன்னை வச்சுக்கிட்டு இங்க என்னால சகிச்சிட்டு இருக்க முடியாது… உன்ன தவிற இங்க வேற பொண்ணுங்களே கிடையாது.. அப்டி இருக்க உன்ன இங்க வச்சிட்டு என்ன செய்ய சொல்ற…” என்று கூற….
அனைத்தையும் கேட்டவள் அவனின் எனக்கு பொண்ணுங்கனாலே சுத்தமா பிடிக்காது என்றுது மட்டும் மூளையை போட்டு குழப்ப… “ஏன் பொண்ணுங்க பிடிக்கல இவருக்கு.. ஒருவேள லவ் ஃபெயிலியரோ…”என்று சிந்தனை செய்தது…
ஆனால் அவளுக்கு மார்ட்டினை பார்த்து பயமோ இல்லை கெட்டவனாகவே தோன்றவே இல்லை…. ஏனோ அவனின் தோற்றம் கூட அவளுக்கு கன்னியமாக தெரிந்தது.. அவனின் கடுமையான பார்வை மட்டுமே அவளை கொஞ்சம் பயப்படுத்த ஆனால் அதனையும் அவள் தாண்டி தான் வருகின்றாள்.. முன்பு இருந்த மைத்துவாக இருந்தால் மார்ட்டினின் பார்வைக்கே பயந்திருப்பாள்.. ஆனால் இப்போதோ ஆனாகப்பட்ட நிவாஸ் வெறிநாயையே அல்லவா பார்த்துவிட்டு வந்துருக்கின்றாள்.. அதனால் அவளுக்கு அவ்வளவாக பயமில்லை…
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன்… கொஞ்ச நாள் நான் இங்கே இருக்கேன்.. நான் இங்க இருக்குறதால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது… வேணும்னா இந்த வீட்ல எல்லா வேலையும் நானே பார்க்கிறேன்.. அதுக்கு எந்த சம்பளமும் நீங்க தர வேணாம்.. இங்க என்னை தங்க வச்சாலே போதும்…” என்று கண்களை சுருக்கி கெஞ்சலாக கூற…
மார்ட்டினுக்கோ அவள் கூறுவதை கேட்டு சலிப்பாக தான் இருந்தது… வேலியில் ஓடுவதை தூக்கி வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக அல்லவா தோன்றியது அவனுக்கு… அப்படியே தலையை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தவனோ… “இங்க பாரு உன் பேரு கூட எனக்கு தெரியாது…ஆனா…”என்று அவன் ஆரம்பிக்க…
“நான் மைத்ரேயி… ஊரு மதுரை.. அப்பா இருக்காரு, அம்மா இல்ல.. சித்தி இருக்காங்க… ஒரு தம்பி இருக்கான்… சாரி இவங்கெல்லாம் இருந்தாங்க ஆனா இப்போ யாரும் எனக்காக இல்ல…”என்று அவசரமாக தன்னை பற்றி அறிமுகம் செய்துக்கொள்ள,…
அவனோ அவளையே இமைக்காமல் பார்த்தான்… அவள் முகத்திலோ ஒரு வேதனையின் சாயல் அப்பட்டமாக காட்டியது… “ம்ச் உன் நல்லதுக்காக தான் சொல்றேன்.. இதுக்கு மேலையும் நீ இருந்தனா உனக்கு தான் பிரச்சனை… அந்த சேட்டு ஒன்னும் சாதாரண ஆள் இல்ல… அவன் எப்படியாவது உன்னை கண்டுபிடிச்சி தூக்கிட்டு போயிடுவான்… அதுக்காக தான் சொல்றேன் இங்க இருந்து இல்ல இல்ல இந்த ஊர விட்டே போய்டு…”என்றவனுக்கோ ஏனோ அவளுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்ற பரிதவிப்பு.. அதற்காகவே திட்டியாவது அவளை எப்படியாவது இங்கிருந்து அனுப்பி ஆக வேண்டும் என்று கூற..
அவளோ “இந்த வீட்டோட பாதுகாப்ப நான் வெளியிலிருந்து வரும்போது பார்த்தேனே இந்த வீட்ல கண்டிப்பா யாராலயும் நுழைய கூட முடியாது… அந்த சேட்டாலையும் தா…”என்று கூறியவளுக்கு கண்டிப்பாக மார்ட்டின் புதிய ஆள் தான்… ஆனால் அவனை பார்த்து அவளுக்கு பயமே வரவே இல்லை… தன்னை காப்பாற்றிய ஒரு நல்லவன் என்று மட்டுமே அவனை நினைத்துக் கொண்டிருந்தாள்…
மற்றப்படி மார்ட்டினை பற்றி அவளுக்கு ஒன்றுமே தேவையேபடவில்லை… அப்படித்தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்… “ம்ச் ஏய் என்னடி சொன்னதே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க…” என்று கோபமாக எழுந்தவனை கண்டவள்…
“ஏங்க எனக்கு தலை சுத்துது நான் ஒழுங்கா சாப்பிட்டு ஒரு வாரம் ஆகுது தெரியுமா… ஏதோ ஏனோ தானோன்னு தான் உயிர் வாவுறதுகாக சாப்பிட்டுட்டு இருந்தேன்… ஆனா இப்போ எனக்கு ரொம்ப பசிக்கிது…” என்று தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் உட்கார…
மார்ட்டினுக்கு அதற்கு மேல் அவளை என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை… “ம்ச் அதான் சூசைட் பண்ணிக்க போனியே அப்புறம் எதுக்கு நீ டெய்லி சாப்பிட்டு சாப்பிட்டு உயிரோட இருந்த… அப்டியே சாப்பிடாம செத்துப் போக வேண்டியது தானே…” என்று வேணுமென்றே அவளை வம்பிழுக்க…
அவளோ பாவமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கும் உயிர் வாழ ஆசை இருக்கும் இல்ல… அதுவும் இல்லாம கடைசி நேரத்துல உங்கள மாதிரி யாராவது ராஜா கணக்கா வந்து என்ன காப்பாத்தலாம் இல்லையா…” என்று ஒற்றை கண்ணடித்தவாறே கூற..
அவள் கூறியதை காட்டிலும் அவளது கண் சிமிட்டல் அவனை போதை ஏற்றியது.. ஆனால் அதனை வெளிக்காட்டாதவன்.. “ரொம்பதான்..” என்றவனோ சட்டென்று ஒரு பணியாளரை வேகமாக அழைக்க… உடனே நான்கு வேலைக்காரர்கள் வந்து அவன் முன்னால் பவ்வியமாக நிற்க… அதை எல்லாம் ஆச்சரியமாக பார்த்துவைத்தாள் பெண்ணவள்…
“இவங்களுக்கு சீக்கிரம் சாப்பாடு ஏதாவது அரேஞ்ச் பண்ணுங்க…” என்று கூற அவர்களும் மைத்துவை நிமிர்ந்து கூட பார்க்காமல் சரி என்று தலையாட்டியவாறு கிச்சனுக்குள் நுழைந்துகொண்டனர்… அவளுக்கோ அவனது செயல்களை பார்க்க பார்க்க கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது…
“அய்ய் அப்போ நான் இங்க இருக்கலாமா… ம்ச் நீங்க ரொம்ப நல்லவங்க…” என்று மழலை சிரிப்பில் கூற…
“ம்கூம்…”என்று சலித்துக்கொண்டவன் மனம் என்ன திட்டம் போடுகின்றது என்று அவனுக்கே தெரியவில்லை.. “ஓகே கோ வித் தி ஃப்ளோ…”என்று நினைத்தவனோ… “நல்லவனா நானா… ம்கூம்… நம்மளோட வண்டவாளம் தண்டவாளமெல்லாம் தெரிஞ்சா இதே டயலாக்க சொல்வாளோ என்னமோ…” என்று நினைத்துக் கொண்ட மார்ட்டினோ…
“சரி ஓகே நீ சொல்ற மாதிரி இங்கே கொஞ்ச நாள் இருக்க நான் ஒத்துக்குறேன்… ஆனா இங்க இருக்கிற இந்த கொஞ்ச நாளும் நீ என் கண்ணுல கூட படக்கூடாது..”. என்று கூற…
அதில் வேகமாக தலையாட்டியவளோ.. அவன் இவ்வளவு தூரம் ஒத்துக் கொண்டதே போதும் என்று நினைத்தவள்… “பட் இங்க என்னால சும்மா எல்லாம் இருக்க முடியாது… ஏதாவது வேலை செய்றேன்…”என்று கூற..
அதில் முறைத்தவனோ… “இது என்னோட வீடா இல்ல இவ வீடா… ஏதோ ரூல்ஸ் எல்லாம் போடுறா…”என்றவனோ அவளிடம் பேச்சிக்கொடுக்க விரும்பாமல் சரி என்று வேகமாக தலையாட்டினான்…
“கண்டிப்பா நான் நல்லா வேலை பார்ப்பேன் சார்…” என்று அவளும் விடாமல் கூற…
“ம்ச் சரி ஏதோ பண்ணி தொல…”என்று கடுப்படித்தவன்… “இங்க கீழ ஏதாவது ஒரு ரூம எடுத்துக்கோ…“என்றவன் வேக வேகமாக வெளியில் சென்று விட்டான்… பெண்ணவளோ போகும் அவனையே பார்த்து நின்று கொண்டிருந்தவளுக்கு ஆடவனின் நடை கூட இப்போது கம்பீரமாக தெரிந்தது. இத்தனைக்கும் அவனுடைய பின் போர்ஷன் மட்டும்தான் அவளுக்கு தெரிந்தது… ஆனாலும் அவனின் நடையின் கம்பீரம் அவளை கவரத்தான் செய்தது..
“வாவ் எவ்வளவு கம்பீரமா இருக்காரு… இந்த தமிழ் நாவல்லலாம் வர மாதிரி ஹீரோ கணக்கா இல்ல இருக்காரு…” என்று அவள் தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க… “அடியேய்… தேவையில்லாம இப்படி அவருக்கு முன்னாடி பேசிராதடி.. இப்பதான் அவரு ஏதோ பெரிய மனசு பண்ணி இங்க தங்க ஒத்துக்கிட்டு இருக்காரு அதுக்கு ஆப்பு வச்சிடாத….இங்க இருக்குற வர கம்முன்னு இரு…” என்று பேசி கொண்டவளுக்கோ இங்கே இருந்து எப்போது எப்படி வெளியில் செல்லலாம் என்றெல்லாம் யோசனையே வரவில்லை…
“ம்ச் அதப்பத்தி அப்புறம் யோசிப்போம்… இப்போ போய் சாப்டலாம்…”என்று எண்ணியவளோ அந்த வீட்டினை சுற்றி ஆராய்ந்தவாறே சரியாக டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்..
(கேப்பச்சினோ….)