அத்தியாயம்-22
“இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வீட்டை விட்டு போயிருப்பா….” என்று மார்ட்டின் தன்னுடைய வீட்டில் தன் அறையில் குட்டிப்போட்ட பூனையாக அங்குமிங்கும் அலைந்தவாறே யோசித்துக் கொண்டே இருக்க…
“ம்ச் டேய் கடுப்பேத்தாத… நீ தானடா அவளை இந்த வீட்டை விட்டு துரத்துன… இப்போ என்னனா அவள போய் திட்டுட்டு இருக்க… அவ இங்க இருந்து போனதுக்கான காரணம் நீதாண்டா…” என்று அவனது ஒரு பக்கமாக அவனை பயங்கரமாக திட்ட..
“நான் என்ன வேணாலும் திட்டி இருக்கட்டும் அதுக்காக அவ இந்த வீட்ட விட்டுட்டு போவாளா..” என்று கொதித்துக்கொண்டு இருந்தான்.. “அவ போனது உனக்கு நல்லது தானடா.. இனிமே அவ உனக்கு எந்த வகையிலும் டிஸ்டர்பா இருக்க மாட்டாளே.. உன்னோட புது புது உணர்வுகளுக்கு இனிமே வேலையே இல்லாம போச்சு இல்ல..”என்று அவனது ஆழ் மனம் கூற…
“ம்ம்ம் அதுவும் சரிதான்.. இனிமே என்னோட வாழ்க்கையில எந்த பொண்ணுக்கும் இடமே கிடையாது, அதோட எந்த உணர்வுகளுக்கும் இனிமே இடமே கிடையாது..”என்று மனதிற்குள் கர்வமாம நினைத்தவனால் அடுத்த அடுத்த நாட்களில் அவன் எண்ணம் தரை மட்டம் ஆனது…
இந்த இடைப்பட்ட நாட்களாக மார்ட்டின் தினமும் காலையில் மைத்ரேயி போட்டுத்தரும் சூடான காபியிலிருந்துதான் அவன் நாட்கள் ஆரம்பிக்கும்… ஆனால் இப்போது எல்லாம் வேலையாள் கொடுக்கும் காய்ந்துப்போன காபியை கண்டு கடுப்பேறியது… அதுவும் காலையில் மைத்ரேயி அன்புடன் செய்துக்கொடுக்கும் விதவிதமான உணவுகள் இல்லாமல் ஏதோ கடமைக்கென்று தரும் கான்ப்ளக்ஸ், மற்றும் ஓட்ஸ் கஞ்சி வகையான உணவுகளையே பெரும்பாலும் வேலையாட்கள் செய்து கொடுக்க… மார்டினுக்கோ அதனை கண்டு வெறுப்பு தான் ஆகியது…
அவனுக்கோ இதுதான் வேண்டும்,அதுதான் வேண்டும் என்று உரிமையுடன் கேட்க முடியாத நிலை… ஏதோ சாப்பிட்டும், சாப்பிடாமலேயே பல நாட்கள் தன்னுடைய வேலையை பார்க்க ஓடிக் கொண்டிருந்தான்.. ஆனால் என்று மைத்ரேயி வந்தாளோ அனைத்தும் டோட்டலாக மாறிவிட்டது.. மைத்ரேயி இருந்தது வரை அவனுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்காமலையே அனைத்து வேலையையும் செய்து நிவர்த்தி செய்து வைத்திருந்தாள்…
ஆனால் இப்போதோ அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு செய்ய யாருமே அங்கு இல்லை.. ஏன் அதனை புரிந்து கொள்ளக்கூட அங்கு யாருமில்லை… “ஷட்.. இவ என்னடா என்னை இப்படி மாத்தி வச்சிட்டா… மாயக்காரி…” என்று தன்னுடைய தலையை வேக வேகமாக கோதிக் கொண்டவனுக்கு ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும், பெண்ணவளின் ஞாபகமாகவே இருந்தது.. இவள் ரொம்ப என்னை டார்ச்சர் பண்ற என்று நினைத்தவாறு அவனும் வேலையில் ஈடுபாடாக இருக்க முயன்றான்… ஆம் முயல மட்டுமே முடிந்தது… ஆனால் அதிலும் அவனுக்கு தோல்விதான் கிடைத்தது…
இதற்கு நடுவில் நிவாஸ் வேறு சிறிது நாட்களாக ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போயிருக்க… மார்ட்டினின் முன்னால் மறுபடி மைத்ரேயியின் சித்தி,அப்பா, தம்பி அனைவரும் நிற்க… அதில் சலித்துக்கொண்டவனோ… “ம்ச் இங்க பாருங்க நான் எவ்வளவோ உங்க கூட போக சொல்லி உங்க பொண்ணுக்கிட்ட பேசிட்டேன்… ஆனா அவ உங்ககூட மட்டும் போக விருப்பப்படவே இல்லனு சொல்லிட்டா… அதுமட்டுமில்ல.. அவ இப்போ இந்த வீட்ல இல்ல.. அவ எங்க போனானு கூட எனக்கு தெரியாது… அவ இந்த வீட்டை விட்டு கிளம்பி ஒருநாள் ஆயிடுச்சு…”என்று தன்னை சாதாரணமாக காட்டியவாறே அவன் கூற..
அதில் அதிர்ந்து போனார்கள் அந்த மூவரும்… “அது எப்படிங்க எங்க பொண்ணு இங்க இருந்து காணாம போவா…” என்று காஞ்சனா வாயை விட…
ராகவோ காஞ்சனாவை அடக்கியவன்.. “சரி சார் அவ எங்க போனான்னு தெரிஞ்சிருந்தா எங்களுக்கு சொல்லுங்க சார்.. அவ இல்லாம நாங்க ஊருக்கு போகமாட்டோம்…” என்று பம்பியவன் தன்னுடைய நம்பரை மார்ட்டினிடம் கொடுக்க… அவனும் சரி என்று தலையாட்டியிருந்தான்…
இப்படியே நாட்கள் வேகமாக போய்க் கொண்டிருக்க.. சரியாக மைத்து மார்ட்டினின் வீட்டை விட்டு சென்று இரண்டு வாரம் ஓடியிருந்தது.. அந்த இரண்டு வாரமும் மார்ட்டின் பேய் பிடித்தது போல தான் சுற்றிக் கொண்டிருந்தான்.. ஏதோ உணர்வுகள் இல்லாத ஜடம் போல சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு தன் மனதை கொள்ளைக்கொண்ட பெண்ணவளின் நியாபகம் அடிக்கடி வந்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது..
“இது என்னடா தொல்லையா இருக்கு.. அவ இருந்தாலும் அவளுடைய ஞாபகமா இருக்கு.. இல்லேன்னாலும் அவ ஞாபகமா இருக்கு மொத்தத்துல அவ ஞாபகமா மட்டும்தான் இருக்கு..” என்று நினைத்துக் கொண்டிருந்த மார்ட்டினோ ஒரு வாரம் கழித்து தன் தாத்தாவை பார்க்க செல்ல…
அவரோ தன்னுடைய பேரனின் முகம் களை இழந்து போய் இருப்பதை பார்த்தவரோ மனம் சஞ்சலப்பட்டது… மனம் கேளாமல் அதனை அவனிடமே கேட்டார்… “என்னப்பா ஆச்சு ஏன் முகம் எல்லாம் ஒருமாதிரி இருக்கு… எதாவது பிரச்சனையா…”என்று பரிவாக கேட்க…
அதனை கேட்ட மார்ட்டினோ தன்னுடைய மனதில் இருப்பதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பியவனாக தன்னுடைய தாத்தனிடம் மைத்துவை பற்றி கூற… அவருக்கோ அவனின் காதலை கேட்க கேட்க அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.. தன்னுடைய பேரனின் வாழ்க்கையில் இதுபோல எந்த உறவும் வந்து விடாதா என்று ஆர்வமாக காத்திருந்தவருக்கு இது ஒரு நல்ல செய்தியாக பட…
“கண்ணா நீ உண்மையா தான் சொல்றியா.. உன்ன இப்டி மாத்துன என் பேத்தி எப்படி இருப்பா…” என்று ஆர்வத்துடன் கேட்க..
“ம்ச் தாத்தா கண்டதையும் நெனச்சி மனச கெடுத்துக்காதீங்க தாத்தா.. இது ஜஸ்ட் பாசிக் க்ளவுட்டா கூட இருக்கலாம்…”என்று கூறியவனுக்கும் கண்டிப்பாக மைத்துவை பாஸிங் க்ளவுட்டாக கூட நினைக்க முடியவில்லை…
“ம்ச் பொய் சொல்லாதடா உன் மனச தொட்டு சொல்லு அந்த பொண்ண நீ லவ் பண்ணலன்னு…”என்று அவனுடைய தாத்தா உறுதியாக கேட்க..
“அட தாத்தா என்ன பத்தி உனக்கு தெரியாதா தாத்தா… என் லைஃப்ல என்ன நடந்ததுனு தெரியாதா.. நான் சின்ன புள்ளையா இருக்கும்போது உண்மையான காதலுக்கு பொறந்தவன்னு நான் கர்வமா சுத்திகிட்டு இருந்தேன் ஆனா அந்த கர்வம் எனக்கு விவரம் தெரிஞ்சு கொஞ்ச நாளிலேயே அடியோடு மண்ணாக போகும்னு நான் நினைக்கவே இல்ல.. ஆசை ஆசையா லவ் பண்ணிக்கிட்டு இருந்த எங்க அப்பாவ பாத்து உன்னோட வாழ்ந்த வாழ்க்கை எனக்கு சலிச்சு போச்சுனு என்னோட டேட்ட அப்படியே விட்டுட்டு வேற ஒரு வாழ்க்கையை பார்த்துட்டு போனாங்களே அதெல்லாம் நினைக்கும் போது எனக்கு லவ் மேல இன்னும் நம்பிக்கை இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா…” என்று கேட்க..
அதில் இல்லை என்று வேகமாக தலையாட்டிய சார்லஸோ “எல்லா காதலும் உன் அம்மா காதல் மாதிரி ஆகாதுப்பா… சில உண்மையான காதல் அறுவது வயசு, எழுவது வயசு ஏன் சாகுறவரை கூட மறையவே மறையாது… அப்படிப்பட்ட லவ்வும் இந்த உலகத்துல இருக்குப்பா…ஏன் அப்படிப்பட்ட லவ்வா கூட உன் மேல அந்த பொண்ணு வச்சிருக்க காதலா கூட இருக்கலாமே…” என்று அவனுக்கு புரிய வைக்கும் நோக்கோடு சார்லஸ் கூற..
ஆனால் மார்ட்டினுக்கு ஏனோ அந்த லவ் என்ற வார்த்தையில் மட்டும் நம்பிக்கை வரவே இல்லை… “ம்ச் போதும் தாத்தா எனக்காக ஏதாவது சொல்லாதீங்க…” என்று சலித்தவனோ… “ம்ச் சரி நான் கிளம்பறேன் நீங்க உடம்ப பாத்துக்கோங்க…”என்று கிளம்ப…
“நான் சொன்னது உண்மை தான் மார்ட்டின்… சில காதலுக்கு அழிவே இல்ல… செத்தாலும் சரி.. அந்த மாதிரி காதல் அந்த பொண்ணுக்கிட்ட இருந்து கூட உனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு… அந்த பொண்ண விட்றாத மார்ட்டின்… அவ்ளோ தான் நான் சொல்லுவேன்..” என்று சார்லஸ் கூற..
அதனை பற்றி யோசித்துக்கொண்டே இருந்த மார்ட்டினோ… “ம்ச் சரி தாத்தா ரொம்ப பேசிட்டீங்க… கொஞ்சம் தூங்குங்க..” என்று அவரை உறங்க வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்…
காரில் வரும் வழியெல்லாம் அவன் தாத்தா கூறியதே அவன் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்க… “அய்யோ தலைவலிக்கிது… இவரு வேற பேசி கொளப்பிட்டாரு… ம்ச் இவ வேற எங்க போனான்னு தெரியலையே…” என்று யோசித்தவனால் அடுத்த நிமிடம் அவளை தன் கண் முன்னால் கொண்டு வந்து நிற்க வைக்க முடியும் தான்… ஆனால் அதனை செய்யாமல் அவள் முன்னால் போய் சென்று நிற்க வேண்டும் என்றுதான் அவனுக்கு தோன்றியது…
அதனால் அப்படியே அமைதியாக யோசனை செய்து கொண்டே வந்தவனுக்கு தலைவலி தாங்க முடியாமல் போக… எப்படியும் வீட்டிற்கு சென்றால் வேலையாள் கொடுக்கும் காபியில் இன்னும் தன் தலைவலி தான் கூடும் என்று நினைத்தவன்… “ட்ரைவர் எனக்கு ரொம்ப தலை வலிக்குது ஒரு காபி ஷாப் பார்த்து நிறுத்து…” என்று கூற..
“ஓகே பாஸ்…” என்ற ட்ரைவரும் அடுத்த திருப்பத்தில் அதாவது மார்ட்டினின் வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில் காரை நிறுத்தினான்…
மார்ட்டின் வேகமாக காரிலிருந்து இறங்கியவன் காபி ஷாப் உள்ளே சென்று உட்கார்ந்தவனின் மூளையோ ஏதேதோ யோசனையிலையே இருந்தது… அதனை தடை செய்வது போல ஏதோ அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு குரல் அவன் காதில் விழ.. அந்த குரலை கேட்டவனுக்கோ கண்கள் ஆச்சரியத்தில் விரிய முகமோ பளப்பளத்தது…
அந்த குரலை கேட்ட வேகத்திற்கு அவன் உள்ளம் சிலிர்த்து போனது… அந்த குரலுக்கு சொந்தக்காரியை தேடி சுற்றிமுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க.. அப்போதுதான் அவன் கண்களுக்கு விருந்தாக வந்து விழுந்தாள் மைத்ரேயி… அதுவும் அந்த காபி ஷாப்பின் சீருடையில் தான்..
ஆம் மைத்ரேயி அந்த காபி ஷாப்பில் தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.. மார்ட்டினின் வீட்டில் இருக்கும்போது அவள் பார்த்து கண்டுபிடித்த வேலை தான் இந்த காபி ஷாப் வெயிட்டர் வேலை… ஏனோ அவளுக்கு மார்ட்டினை விட்டு விலகி செல்ல முடியவே இல்லை.. அதனால் தான் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருக்கும் காபி ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவளோ அந்த காபி ஷாபிற்கு மேலே இருந்த ஒரு அறையில் தங்கி கொண்டிருந்தவள் இரவு நேரத்தில் சத்தம் போடாமல் மார்ட்டினின் வீட்டையே பார்த்தவாறே அப்படியும், இப்படியும் கிராஸ் செய்தவளின் கண்களோ ஆர்வமாக எங்காவது தன் மனதை கெடுத்தவன் தட்டுப்படுகிறானா என்று பார்க்கவும் தவற மாட்டாள்.
இதுவே அவளின் வாடிக்கையாகி போய் இருந்தது… ஆனால் அவள் வெளியில் செல்லும் போதெல்லாம் முகத்தை மாஸ் கொண்டு மூடிக்கொண்டு தான் செல்வாள்.. அந்த நிவாஸின் பார்வையிலோ, அல்லது தன்னை தேடி வந்த தன் குடும்பத்தின் கண்களிலோ தான் படவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்… அதனால் அவள் மார்ட்டினின் கண்களில் கூட கடைசி வரை படவே இல்லை…
(கேப்பச்சினோ…)