Home Novelsமதுரனின் மதிமயக்கும் மங்கையவள்மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 01

மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 01

by Thivya Sathurshi
4.6
(26)

அத்தியாயம் : 01

“ஹலோ யார் மேல கை வச்ச… நான் யாருனு தெரியுமா…?” என்ற குரல் கேட்க, 

“டேய் நீ யாருனு உனக்கே தெரிலையா..? அய்யோ மாப்ள நீ அடிச்சதும் இவனுக்கு அவனையே மறந்துட்டு போலடா..” என்று ஒருவன் கத்த, 

“அதான்றேன்.. டேய் நீ யாருனு தெரிலையா டா..? நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடானு சொன்ன வேகத்துக்கு அடிச்சேனா அதான் மாப்ள மறந்துட்டான் போல….”என்று கூறினான் அவன். அவன் பெயர் வீரேந்திர ப்ரசாத்.. இதற்கு முன்னால் பேசியதோ அவனின் உயிர் நண்பன் பரத்.

அந்த அடிப்பட்டவனோ அவர்களையே முறைத்து பார்த்தவன் “என்னடா கிண்டலா..”என்று எகுறினான்.

“அடிங்க..”என்று அவன் மூக்கிலையே குத்திய வீரேந்திரனோ, “வாடா போடானா கூப்டுற..”என்று மறுபடியும் அவன் வாயில் குத்தினான்.

“மச்சான் அப்டிதான்டா அவனோட வாயில இருக்குற சைடு பல்ல கழட்டிடுடா…. அதப் பாக்கவே எனக்கு இரிட்டேட்டா ஆகுது…” என்றான் பரத் சாவகாசமாக அங்கிருந்த காரில் உட்கார்ந்தவாறே. 

“அதான்டா எனக்கும் பிடிக்கல…..” என்றவன் அவர்களுக்கு பிடிக்காத பல்லை உடைத்துவிட்டே நகர்ந்தான்.

“ஆஆஆஆ அம்மா என் பல்லு..” என்று அடிப்பட்டவன் அலற, 

“உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா…” என்றவாறே பரத் பாய்ந்து வந்தான். அதனை கேட்ட வீரேந்திரனோ பக்கென்று சிரித்துவிட்டான். கீழே விழுந்து புரண்டவனின் அருகில் வந்தவன், “உங்க வீட்ல அதிகமா உப்பு இருக்கோ இல்லையோ அதிகமா போத பொருள் வச்சிருக்க போல… அதான் அத பொட்டனமா போட்டு காலேஜ்ல விக்கிறியோ…?” என்றான் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மறைந்து கடுமையான முக மாற்றம் செய்தவாறே.

அதில் அவன் மிரண்டு விழிக்க.. அவனின் பயப்பார்வை கண்டு குதுக்கலித்தவனோ, “மச்சான் இவன பாறேன்.. இவன் பயத்துல முழிக்கறத பாத்தா உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது மச்சான்.. என்னவா இருக்கும்…?” என்றவாறே கன்னத்தில் கை வைத்தவாறு வீரேந்திர ப்ரசாத் கேட்க, 

“ம்ம்ம் எனக்கு தெரிஞ்சிடுச்சி மச்சான்… அது என்னனா துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொல்லுவாங்க இல்லடா அதுதான்.. ஆனா இதுல நோட் பண்ண வேண்டியது என்னனா நமக்கு துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொன்னதுக்கு பதிலா இவனுக்கு துன்பம் வரும்போது சிரிக்கிறம்.. ஒருவேள அதா இருக்குமோனு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிற…?” என்று பரத் கூறினான். 

“ம்ம் இருக்கலாம்…” என்ற வீரேந்திரனோ அந்த அடிப்பட்டவனின் அருகில் உட்கார்ந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி காட்டியவன், “படிக்கிற வயசுல என்னடா போத கேட்குது… ம்ம் போத கேட்குது போத…..” என்றவன் அவன் தலையிலையே நங்கு நங்கு என்று கொட்டினான். 

“ஆஆஆஆ அய்யோ வலிக்கிது வலிக்கிது..”என்று கத்தியவன், “என்ன அடிச்சது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சிது மவனே நீ காலி….” என்றான். 

அதில் இன்னும் கலகலவென சிரித்த வீரேந்திரன் “அடேய் முட்டாள் டெப்ளட்டு… மிஞ்சி மிஞ்சி போனா உன் அப்பன் என்னடா செய்வான்.. ம்ம் என்ன என்னை வேலையை விட்டா தூக்க போறான்… ம்ச் இந்த பழைய படத்துல சொல்ற மாதிரி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துறதா பீலா விடுவான்… ஆனா ஒன்னு மட்டும் புரிலடா… தண்ணி இல்லாம எப்டிடா காடு வளரும்.. சரி விடு இதப்பத்தி நாம அப்புறம் பேசலாம்.. ம்ம் எங்க விட்டன்….?” என்று அவன் கேட்க, 

“தண்ணீல்லா காடு மச்சான்..”என்று பரத் எடுத்துக்கொடுத்தான். 

“ஹான் ஆமா ஆமா.. மச்சான் நீ தூங்கலடா முழிச்சிதான் இருக்க..?”என்று பரத்தின் தோளை வீரேந்திரன் தட்ட

“ம்ம்ச் அது எப்டி மச்சான் தூங்கத்தான் விட்டுடுவியா என்ன….?” என்று கேட்டான். 

அதில் வீரேந்திரன் ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தான். அதில் கப்பென்று வாயை மூடிக்கொண்டான் பரத். “ம்ம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துவான்.. ம்ச் இல்லனா எங்காச்சும் அதிக க்ரைம் நடக்குற இடத்துக்கு தூக்கி போடுவானா போடட்டும்… நமக்கும் இப்டி சில்லற கேஸ்லாம் பாத்து போர் அடிக்கிதே.. நாலு குண்டார்ஸ போட்டு தள்ளுனோமா ப்ரோமோஷன் வாங்குனோமா, கல்யாணம் பண்ணுனோமா, குட்டி…”என்று வீரேந்திரன் பேச, 

“மச்சான் இப்போ இது அவசியமாடா..” என்று பரத் இடைபுகுந்தான். 

“ம்ச் இல்லைல..” என்றான் வீரேந்திரன். அவனை பார்த்து பரத்தும் ஆம் என்று தலையாட்ட. “சரி விடுடா நம்ம கஷ்டம் நமக்கு….” என்றவனோ அந்த அடிப்பட்டவனின் காலடியில் உட்கார்ந்தான், “இதுலாம் தான் உன் அப்பன் பண்ணுவான்.. இத தவிர வேற ஒன்னும் உன் அப்பனால..” என்று தன் தலை முடியை பிடுங்கி காட்டியவன், “இத கூட பண்ண முடியாது..”என்றான். 

அதில் அந்த அடிப்பட்டவன் கடுப்பாகினான். “என் அப்பாக்கு போன் போடுறேன் என்னத்த புடுங்குறாருனு பாருடா..” என்றான் கத்தலாக.  

“அட கொப்பன் மவனே..” என்ற வீரேந்திர ப்ரசாத் அவனை அப்படியே கழுத்தை பிடித்து தூக்கினான். 

“மச்சான் அப்டிதான் அப்டிதான் தூக்குடா.. உன்னால முடியும்டா.. ம்ம் யூ கேன்..” என்று பரத் ரன்னிங் கமென்டரி கொடுத்தான். 

வீராவின் பிடியில் இருந்தவனோ “ஆஆம்ம்ம்…ம்ம்ம்….” என்று மூச்சிக்காற்றுக்கு திணறியவாறே கால்கள் அந்தரத்தில் உதைத்துக்கொண்டிருக்க, 

“இவ்ளோ நேரம் பேசுனல இப்போ பேசு.. இப்போ பேசுடா….” என்று பரத் அவனை சுற்றி சொடக்கு போட்டான். ஆனால் வீராவின் முகமோ ரெளத்திரத்தில் சிவந்து போய் இருந்தது. “மரியாதையா சொன்னா கேட்கமாட்ட… அடிச்சி சொன்னாதான் கேப்ப..”என்றவன் அவனை தூக்கி வீசியிருந்தான்.

அவனோ, “ஆஆஆ…..” என்ற கத்தலுடன் பறந்துக்கொண்டிருக்க, 

அப்போது தான் காலையில் முதல்நாள் வேலைக்கு வீட்டையே அதங்களம் செய்தவாறே கிளம்பினாள் சுதர்ஷினி. 

“அம்மா சாப்பாடு கட்டிட்டியா..?” என்று குரல் கொடுத்தாள். அது முடியும் முன்னரே, “அப்பா என் சேரிய அயர்ன் பண்ணியா….?” என்று அடுத்த ஆர்டரை பறக்க விட்டாள். 

“ஏன்டி டீச்சரா தானே வேலைக்கு போற.. என்னவோ சென்னைக்கே கலெக்டர போற மாதிரி ஆர்டர் மேல ஆர்டர் போட்டுட்டு கிளம்புற..”என்று அவளின் தாய் சுமதி கத்தினார். 

அதில் வெறிகொண்டு அவரை முறைத்தவாறே வந்து நின்றாள் சுதர்ஷினி. “அம்மா நீ சொல்ற கலெக்டர கூட நாங்க தான் உருவாக்குறோம்..” என்று கையை ஆட்டியவாறே அவள் பெருமை பேச, 

அதில் உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவறே “இன்னிக்கி தான் முத நாளு காலேஜிக்கு வேலைக்கு போறா.. ஆனா பல வருஷமா நல்லாசிரியர் விருது வாங்குன மாறி பெருசா பீத்திக்கிறா..” என்று சத்தமாக முனகினார் சுமதி. 

ஆனால் அவர் முகத்திலோ அவர் பேசியதற்கு மாறாக தன் மகளை ஆசிரியராக்கியதற்கான பெருமை வழிந்தது.

“ஆமாம்மா பீத்தல் தான்.. இருக்காதா பின்ன கிட்டதட்ட ஏழு வருஷம் இதுக்காக படிச்சிட்டு வந்துருக்கேன்.. அப்போ இத்துனூண்டு பீத்தல் கூடவா இல்லாம இருப்போம்..”என்றவள் தன் அன்னையை பார்த்து உதட்டை கோணியவாறே நடந்தாள். 

“அதான்டி அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கொட பிடிப்பான்… அந்த மாதிரில இருக்கு உன்ன பாத்தா.. ஆள பாத்தா அரைகுண்டான் அழக பாத்தா முக்கா குண்டான்…” என்று அவர் ஏதோ பேசிக்கொண்டே போனார். 

“இந்தா பிள்ளைய ஏன் காலையிலையே ஒரன்ட இழுத்துட்டு இருக்க சுமதி…” என்றவாறே மகளின் சேலையை கையில் எடுத்து வந்து தன் மகளிடம் நீட்டினார் சரவணன். 

“ஆமா அப்டியே பச்சப்புள்ள தூக்கி இடுப்புல வச்சிட்டு பள்ளிக்கூடத்துல போய் விட்டுட்டு வாங்க..”என்று அதட்டியவர் தன்னுடைய சமையல் வேலையை பார்க்க கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.

சுதர்ஷினி தன் அப்பாவை பார்த்து உதட்டை பிதுக்கினாள். அவரோ அவளைப் பார்த்து ஒற்றை கண் அடித்து சமாதானம் செய்தவர், “போடா போய் கிளம்பு டைம் ஆச்சி பாரு..”என்று கூறினார். 

அவளோ தன் படப்படக்கும் விழிகளுடன் ஹாலில் மாட்டிருந்த வால் க்ளாக்கை பார்த்தவள், “அய்யோ அப்பா உன் பொண்டாட்டி சண்ட போட்டுட்டு இருந்ததுல டைம் ஓடியே போச்சி…. இன்னைக்கி முத நாள் காலேஜ் வேற….” என்றவள் தன் தந்தையின் கையில் இருந்த புடவையை வாங்கியவள் தன் அறைக்குப் பறந்துவிட்டாள்.

இப்படியே அரைமணி நேரம் ஓட.. தன் தாய், தந்தையர்களிடம் கூறிவிட்டு தன் கல்லூரிக்கு ஓடினாள் சுதர்ஷினி.

‘அய்யோ இந்த அம்மா கூட சண்ட போட்டதுல காலேஜ்க்கு டைம் ஆச்சே… முதல் நாள் வேற இன்னைக்குன்னு லேட்டா போனா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…? எல்லா பஸ்சும் கூட்டமாயிடுச்சு… இதுல இந்த சாரி வேற கட்டிக்கிட்டு எப்படி போறதுன்னு வந்த ரெண்டு மூணு பஸ்ஸையும் விட்டதுக்கு…. நெருங்கமா இருந்தாலும் பரவால்லன்னு அந்த முதல் பஸ்லயே வந்திருக்கலாம்…. இப்போ டைம் ஆயிடுச்சு…’ என்றவாறு, மெல்லிய ஊதா நிற புடவையை அணிந்து, தோளில் ஹேண்ட் பேக் தொங்க, கையில் சில புத்தகங்களையும் குடையையும் எடுத்துக் கொண்டு, நெற்றியில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டவள், கண்கள் இரண்டும் அலை பாய்ந்த படி ஓட்டமும் நடையுமாக, வந்து அந்த காலேஜின் முன்னால் நின்றாள்.  

காலேஜின் வாசலின் முன்னால் வந்து நின்றவள். கீழே குனிந்து, தனது கையால் அதன் வாயிலைத் தொட்டு கும்பிட்டவள் நிமிர்ந்து, ‘கடவுளே இந்த காலேஜ்ல நான் ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே டீச்சர் வேலை கிடைச்சிருக்கு… இந்த வேலையில எந்த பிரச்சனையும் வரக்கூடாது…. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு ஸ்டூடண்ட்ஸ்க்கு நல்ல வழிய சொல்லிக் கொடுக்கணும்….’ என்று கண்ணை மூடிக்கொண்டு, இறைவனை வணங்கியவள் தனது வலது காலை எடுத்து வைத்து காலேஜுக்குள் வந்தாள். சரியாக அந்த நேரத்தில், அவள் காலடியில் வந்து விழுந்தான் ஒருவன். உடனே அவளது நடை தடைப்பட்டது. ‘என்னடா இது… இவன் எங்க இருந்து வந்தான்…? இப்பதானே முருகா எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு கேட்டேன்…. அதுக்குள்ள பிரச்சனையை பார்சல் பண்ணி அனுப்பிட்டியா…. இரு உன்னை ரெண்டு நாளைக்கு வந்து நான் பாக்கவே மாட்டேன்… அது தான் உனக்கு நான் தர்ற பனிஷ்மென்ட்….’ என்று அவள் முருகனுடன் டீல் பேசிக் கொண்டிருக்கும்போதே. கீழே கிடந்தவனை எட்டி உதைத்தான் வீரேந்திர ப்ரசாத். “என்ன விட்டு… என்ன விட்டுடு…” என்று அழுதவன் குரலை கேட்டு நினைவுக்கு வந்தவள்.  

‘ஐயோ இருக்கிற இடம் தெரியாம இப்படி சிலை மாதிரி நிக்கிறியே சுதர்….’ என்று தன்னைத்தானே திட்டியவள் கீழே கிடந்தவனைப் பார்க்க, அவனை அடித்தவன் இழுத்துக் கொண்டு சென்றான். 

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்…” என்றாள். ஆனால் அவன் அடித்துக் கொண்டு இருந்ததால் அவள் அழைத்து அவனுக்கு சரியாக கேட்கவே இல்லை. 

அவனை நோக்கி கையை நீட்டி மீண்டும் அழைக்கும் போது வாட்ச் நேரமானதை உணர்த்தியது. ‘நேரம் போயிடுச்சு… சீக்கிரம் போய் சைன் பண்ணிட்டு அப்புறம் வந்து இவன பார்த்துக்கொள்ளலாம்….’ என நினைத்தவள் அங்கிருந்து வேகமாக ஆபீஸ்க்கு சென்றாள்.  

அவள் சென்றதும், வீரேந்திர பிரதாப் அருகில் நின்ற அவனின் நண்பனிடம், “பரத் யாரோ கூப்ட மாதிரி இருந்திச்சு.. திரும்பிப் பாத்தேன் ஆளையே காணோம்…”

“நான் யாரையும் பாக்கலையே மச்சான்… நீ அவனைப் போட்டு இந்த அடி அடிச்சிட்டு இருக்கும் போது என்னால எப்படிடா அதைப் பாக்காம இருக்க முடியும் சொல்லு…”

“டேய் ஏன்டா ஏன்….” என தலையில் அடித்துக் கொண்டான் வீரேந்திர பிரதாப். அதைப் பார்த்த சிரித்தான் அவனின் நண்பன் பரத்.

“சரி வா இவன ஸ்டேஷன் கூட்டிட்டு போலாம்.. இந்நேரம் அழையா விருந்தாளியா வந்து உட்கார்ந்திருக்குற கேஸை வேற பாக்கனும்..” என்றான் பரத்.

“ஹாஹா ஒன்னாவே சமாளிப்போம்… நண்பேன்டா..” என்று வீரேந்திர ப்ரசாத் பரத்தின் தோளை பிடித்து குலுக்க, அதில் புன்னகைத்துக்கொண்டான் பரத். 

நல்லநாள் அதுவுமா புதுக் கதையோட வந்திருக்கிறன் பட்டூஸ்… நீங்க எவ்வளவு கமெண்ட்ஸ் அண்ட் ரேட்டிங் தர்றீங்களோ அவ்வளவு வேகமாக எபி வரும்.. 

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!