காத்திருப்பு : 42
கீர்த்தியும் நந்தனும் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு அருகில் ஒரு கேஸ் விசயமாக ஒருவரை சந்திப்பதற்கு வந்திருந்த சக்தி அமர்ந்திருந்தான். இவர்கள் பேசுவதை தனது போனில் பதிவு செய்திருந்தான். பின் அவ் இடத்தை விட்டு சூர்யாவைப் பார்க்க hospital வந்தான்.
hospitalல் சூர்யா கண்விழிப்பதற்காக காத்திருந்தனர் அனைவரும் இவர்களுடன் கீர்த்தியும் ஒருத்தி. சில நிமிடங்களில் சூர்யா கண்விழித்தவன் “ஆதி…. ஆதி……” என புலம்பினான். இதனைக் கேட்ட நர்ஸ் வெளியே வந்தார்.
“இங்க ஆதி யாரு?”
“என்னோட பையன்தான் எதுக்கு கேக்கிறீங்க?”
“உள்ள இருக்கிற patient ஆதி… ஆதினு சொல்லிட்டு இருக்காரு நீங்க பையன அனுப்புங்க நான் டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றன்.”
“ஆதி அப்பா கூப்பிடுறாங்க போய் பேசுடா கண்ணா”
“சதி மா” என்றவர் உள்ளே சென்றான்.
ஆதி உள்ளே சென்றபோது சூர்யா கண்விழித்திருந்தான். உள்ளே வந்த ஆதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி படுத்திருந்தான். தன் மறுபதிப்பாக இருந்த ஆதியைக் காணக் காண தெவிட்டவில்லையவனுக்கு.
தந்தையினருகில் வந்த ஆதி “அப்பா….” என்றான் சூர்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு. தன் மகனின் தொடுகையில் சிலிர்த்தது அவனது உடல்.
“ஆதிமா” என்றான் தன் மொத்த அன்பையும் அக்குரலில் காட்டி.
“அப்பா நல்லாகித்தீங்களா?”
“ஆமாடா கண்ணா”
“அப்பா நீங்க அவங்ககித்த தோத்துப்போகல அப்பா ” என்றான்.
மகனது மழலை மொழியை ரசித்திருந்தவன் அவன் சொன்னதை கவனிக்கத் தவறினான். அதைக் கவனித்திருந்தால் பின்னால் வரும் பிரச்சனைகள் பலவற்றை தடுத்திருக்கலாம்.
“கண்ணா எப்பிடிடா இருக்கீங்க?அப்பாவ உங்களுக்குத் தெரியுமா? “எனக் கேட்கும் போதே அவனுக்கு தன்மகனை இத்தனைநாள் அவனைக் காட்டாது வளர்த்த வதனாமீது கோபம் வந்தது.
“தெதியும்பா அம்மா போத்தோ காத்துவாங்கப்பா. உங்களப்பத்தி நெதைய சொல்லுவாங்க. “
தன்னிடம் சொல்லாவிட்டாலும் மகனுக்கு தன்னை அடையாளம் காட்டிருக்கிறாள் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வதனா மீதிருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது. சூர்யா accidentஆகி இருந்த போது வாசு வந்து தூக்கியது ஆதி அப்பா என்று அழைத்தை எல்லாம் உணர முடிந்தது அவனால்.
டாக்டருடன் நர்ஸ் வந்தார். சூர்யாவைப் பரிசோதித்த டாக்டர் ஒருவாரத்தில சரியாயிடும் எனும் போதே குடும்பத்தினர் எல்லாரும் அறைக்குள் வந்தனர்.
“நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் அவர டிஸ்ரப் பண்ண வேண்டாம்.”
“எப்ப டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்?”
“கமலேஷ் நீங்களே ஒரு டாக்டர் நீங்க அவர்கூடத்தானேஇருப்பீங்க அதனால evng வேணும்னாலும் கூட்டிட்டுப்போலாம். ஒரு பிரச்சனையும் இல்லை.”
“சரி டாக்டர் நாங்க evng கூட்டிட்டுப்போறம் “
“ok நான் அப்புறம் வந்து பார்க்கிறன்” எனக் கூறிவிட்டு டாக்டர் செல்ல சூர்யாவை அனைவரும் சுற்றி நின்றனர். வதனா மட்டும் கதவருகிலே நின்றுவிட்டாள்.
தன்மீது சூர்யா கோபமாக இருப்பானென்று வதனாவுக்குத் தெரியும். அவள் அவனிடம் சொல்லாமல் சென்றதே குற்றம். அதிலும் ஆதியை மறைத்து பெரும்குற்றம் இவற்றுக்கு சூர்யா எப்படி react செய்வான்னே தெரியாது வதனாவுக்கு. ஆனால் விக்கியினால் என்ன இனி யாராலும் பிரச்சனை வராது என்று தெரியும்.
சூர்யாவைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் பயத்தில் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்.
“கவனமா வண்டியோட்டக்கூடாதாப்பா?”
“பார்த்துதான்மா போனன்”
“அண்ணா நான் பயந்தே போயிட்டன்”
“எனக்கு ஒண்ணுமாகாது தேவிமா. நான் இப்போ சாகணும்னு இருந்திருந்தா உன்னோட அண்ணிவிட்டுட்டு போனப்பவே செத்திருக்கணும். நீ பயப்படாத எனக்கு ஒன்னுமாகாது சரியா?”
“மச்சான் ” என்ற கமலேஷ் சூர்யாவை கட்டியணைத்தான். அவ் அணைப்பே சொன்னது அவனது வலியையும் அன்பையும். சூர்யாவும் தன் ஒருகையால் அவனை அணைத்தான்.
“சூர்யா வதனா…….”
“அதப்பத்தி இப்போ பேசவேண்டாம் அப்பா. நான் வீடடுக்கு போகணும்”
“அது இல்லப்பா…..”
“விடுங்க uncle சூர்யா அத பற்றி பேசவேணாம்னு சொல்றான்ல” என கீர்த்தி சொல்லும் போது
” எதைவிடச் சொல்றீங்க வதனாவையா?” எனக் கேட்டபடி வந்தான் சக்தி.
“சூர்யா accident ஆனதாலதானே இவ வந்தா இல்லனா வந்திருப்பாளா?”
“hello சூர்யா accident ஆனதால வதனா வரல. அவன் accident ஆனதே அவளப் பார்க்க போகும் போதுதான்” என்றான்.
“என்னப்பா சொல்ற?”
“ஆமாம்மா சூர்யா எங்கிட்ட வதனாவ தேடித் தரச்சொல்லி சொன்னான்மா…….”
“சக்தி வீட்ல போய் பேசிக்கலாம்”
“சரி சூர்யா.”
“வாசு”
“சொல்லுங்க sir”
“உங்க தங்கைச்சியோட things வீட்ல இருக்கும் கொஞ்சம் என் வீட்ட எடுத்திட்டு வரமுடியுமா பிளீஸ்”
“ஐயோ sir எதுக்கு பிளீஸ் எல்லாம் நான் இப்பவே போய் எடுத்திட்டு வர்றன்”
“வாசு சந்தனாவையும் கூட்டிட்டு வாங்க”
“சரி sir”
சூர்யா வதனா என்றுகூடச் சொல்லாமல் வாசுவின் தங்கை என்று சொல்வதிலேயே அவனது கோபம் புரிந்தது. அவனது கோபம் நியாயமானதாக இருந்தாலும் அவனது கண்ணம்மா அல்லது வது என்றாவது அழைப்பாவது கிடைக்காதா என நினைத்தவள்கண்கள் குளமாகியது. அப்போது
“அம்மா அப்பா பாத்தியா வாமா அப்பா கித்த போவம்.” என்றவன் தனது தந்தையருகில் தாயை அழைத்து வந்தான். இதைப் பார்த்த கமலேஷ்
“எல்லோரும் வீட்டுக்கு போங்க நானும் வதனாவும் கூட்டிட்டு வர்றம்” என்றவன் அவர்களைப் பார்த்து சைகை செய்ததும் அவர்கள் சரி என்று வெளியேறினர். கமலேஷூம் டாக்டரிடம் பேசிவிட்டு வருவதாக கூறிச் சென்றான்.
சூர்யா அருகில் வந்த வதனா எதுவும் கூறாமல் தலைகுனிந்தபடுடிநின்றிருந்தாள்.
“அம்மா அப்பாவ பாதும்மா. நீ அப்பாவ பாத்தா கத்தி(கட்டி) அழணும்னு சொன்னல்மா ஏன் அப்பிதி நிக்கித?” எனக் கேட்க வதனா பயத்தில் விழிகளை உருட்டியபடி நின்றாள்.
(அவள் ஆதியிடம் சூர்யாவைப் பற்றி எல்லாமே சொல்லியிருந்தாள். கீர்த்தி விசயம் உட்பட. அவள்தான் தன் கவலையை யாரிடம் சொல்வாள். தன் மகனுக்கு விளங்காது என்று மூன்று வயதிலிருந்தே அனைத்தையும் மகனிடம் சொல்லியிருந்தாள்.
அப்போதுதான் சூர்யாவைப் பார்த்தால் கட்டியணைத்து அழணும்னு பேச்சுவாக்கில் சொல்லியிருந்தாள். அதைத்தான் இப்போது ஆதி தந்தையிடம் சொன்னது. அவளுக்குத் தெரியவில்லை ஆதி புத்திசாலித்தனத்திலும் சூர்யாவைப் போல என்று.)
அவளைப் பார்த்த சூர்யாவிற்கு சிரிப்பு வந்தது.
“அம்மா செய்மா. ” (ஆதிக்கு எப்பிடியாவது தனது தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசை)
“கண்ணா” இருவரும் ஒரே நேரத்தில் கூப்டனர். ஆதி சிரித்தான். ஆதி சிரிக்கும் போது வதனாவைப் போல கன்னத்தில் குழி விழும். அதனைப் பார்த்த சூர்யா ஆதியின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஐ… ஜோலி அப்பா என்னை kiss பண்ணிட்டாரு ” என்று சந்தோசத்தில் கைதட்டினான்.
“அப்பா அம்மாக்கு”
“வேண்டாம்டா கண்ணா “
“ஏன் மா?”
“அது…. ஆ… இது hospital கண்ணா நான் வீட்ட போய் வாங்கிக்கிறன்”
“சதிமா”
“அப்பா”
“சொல்லுடா கண்ணா”
“நாங்க உங்ககூதவே வீத்த இதுக்கத்துமாப்பா?”
மகனது கேள்வியில் இருவருக்கும் கண்கலங்கியது.
“ஆதிமா அப்பா பக்கத்தில உக்காருங்க” வதனா ஆதியை சூர்யா பக்கத்தில் தூக்கி அமரவைத்தாள். ஆனால் மறந்தும் சூர்யாவைப் பார்க்கவில்லை.
“ஆதிமா அப்பாக்கு நீதான்டா எல்லாமே. நீ அப்பாவிட்டு இனிமே எங்கேயும் போகக்கூடாது சரியா? அப்பாகூடவே இருக்கணும்”
(அப்போ நான் உங்களுக்கு எதுவுமே இல்லைா மாமா என நினைத்தாள். )
“சதிப்பா அம்மாவும் இதுக்கணும்”
“சரிடா கண்ணா உனக்காக இருக்கட்டும்”
(அப்போ உங்களுக்கு நான் வேணாமா மாமா)
“சதிப்பா அம்மா அப்பா நம்ம கூதவே இதுப்பாதும்மா. நான் ஸ்கூல்ல friendsகித்த சொல்லுவன் அப்பாகூத இதுக்கன்னு அப்போதான் ராக்கி( ஆதியோட ஸ்கூல் பையன்) என்னப் பாத்து அப்பா இல்லாதவனு சிதிக்கமாத்தான்.”
“ஆதி ராக்கி எப்போ சொன்னான்? நீ ஏன்டாமா அம்மாகிட்ட சொல்லல?”
“அன்னைக்கு சொன்னான்மா நீ ஏற்கனவே அப்பாவ நெனைச்சி கவலப்பதுத. இதையும் சொன்ன வதுத்தப்பதுவனுதான் சொல்லலமா. ” என்றான் பெரிய மனுஷன்போல. ஆதியின் அன்பில் வதனா உருகினாள்.
அப்போது உள்ளே வந்த கமலேஷ் எல்லாம் “ok போலாமா?”
“சரி கமலேஷ். ஆதிமா நீங்க அம்மாகூட வெளியே இருங்க அப்பா இப்போ வந்திர்றன். ஒருவேளை உங்க அம்மா உன்னை மட்டும் இங்கவிட்டுட்டு அவ தனிய போனானா நீ அப்பாவ பார்க்கவே முடியாத இடத்துக்கு போயிடுவன் ஆதி”
“மச்சான் என்னடா பேசுற?”
“உண்மைதான் மச்சான்”
வதனா ஆதியை அழைத்துக்கொண்டு வெளியே வர கமலேஷிடம் முக்கியமான வேலையை சொன்னான் சூர்யா.
“எப்பிடி சூர்யா முடியும்?”
“இங்கதான் மச்சான்”
” எப்போ”
“நேற்று”
“சரிடா” என்றவன் அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். டாக்டரிடம் பேசிவிட்டு மூவரையும் காரின் அருகில் அழைத்து வந்தான்.
“மச்சான் நான் பின்னாடி இருக்கன். ஆதி உனக்கு பக்கத்தில முன்னாடி இருக்கட்டும். ஆதி முன்னால இருக்கிறியாடாமா?”
“சதிபா” என்றவன் முன்னால் அமர வேறு வழியின்றி வதனா பின்னால் சூர்யா பக்கத்தில் அமர்ந்தாள்.கமலேஷ் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
“ஆதி”
“மாமா”
“நீ சூர்யா சொன்னதும் ஏன் எதுவும் கேட்காம முன்னாடி இருந்திட்ட?”
“அம்மா சொல்லிதுக்காங்க மாமா. அப்பா எது சொன்னாலும் அதில அர்த்தம் இதுக்கும் எதித்து பேசக்கூதானு சொல்லிதிக்காங்க மாமா”
“நல்ல வளர்த்திருக்க வதனா”
“மச்சான் தீராவ ஏன்டா கூட்டிட்டு வரல பாவம்டா அவ என்ன நெனைச்சி அழுதிருப்பா”
“ம்… ரொம்ப அழுதா சூர்யா. ஆதிதான் சமாதானப்படுத்தினான். அதோட வீட்ல அழாம இரு நதிமா உன்னோட மாமா வந்திருவாருனு சொன்னா”
“அப்போ தீரா சொல்ற ஆதி… அத்தைமா…..?”
“இவங்க ரெண்டுபேரும்தான்டா”
“ஓ…..”
“மாமா நீங்க வாசு மாமா மாதிதி ஜோலியா இதுக்கீங்க. உங்களை எனக்கு தொம்ப பிதிச்சிதுக்கு”
“எனக்கும் உன்ன பிடிச்சிருக்குடா மருமகனே” என்றான் கமலேஷ். இப்படி
ஆதியும் கமலேஷூம் பேசிக்கொண்டு வந்தனர். சூர்யா வதனா இருவரும் பேசாமல் தங்கள் துணைகளின் அருகாமையை உணர்ந்தபடி பேசாமல் இருந்தனர்.
இருபது நிமிடங்களில் வீட்டை வந்தடைந்தனர். காரிலிருந்து நால்வரும் இறங்கினர். கமலேஷ் சூர்யாவைப் பிடித்தான்.ஆதியும் தன்னால் இயன்ற சூர்யாவின் கைவிரல்களைப் பிடித்தான். சூர்யாவும் கமலேஷூம் சிரித்துக்கொண்டனர்.
வதனா வந்து சூர்யா அருகில் நின்றிருந்தாள். கார் சத்தம் கேட்டு முதலில் ஓடிவந்த தீரா சூர்யாவின் கால்களை பிடித்துக்கொண்டாள். சூர்யா கண்ணசைக்க தீராவைத் தூக்கினான் கமலேஷ்.
“குட்டிமா மாமாவால தூக்க முடியாதுடா அப்பாக்கிட்ட இருங்கம்மா”
“சதி மாமா” என்றவள் கமலேஷிடம் இருந்தவாறே சூர்யாவை முத்தமிட்டாள். சூர்யாவும் பதில் முத்தமிட்டான். வீட்டினர்
அனைவரும் வெளியில் வந்தனர்.
“சூர்யா நீ வதனா ஆதி மூணுபேரும் சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுக்கணும்”
“சரிமா ” என்றான் ஆதி.
“தேவிமா ஆரத்தியை கொண்டு வரச்சொல்லுடா”
“சரிமா” என்றவள் ஆரத்தியெடுக்க வரச்சொன்னாள். ஆரத்தித்த தட்டுடன் வந்தவரை முதலில் பார்த்த சூர்யா வதனாவின் கைகளைப் பிடித்தான். அதுவரை எங்கேயோ பார்த்துக்கொண்டருந்த வதனா சூர்யாவின் தொடுகையில் அவனைப் பார்க்க அவன் கண்களில் ஒருவித வலியுடன் அவளைப் பார்த்தான்.
பின் முன்னால் பார்க்கும்படி கண்ணசைவில்கூற என்னவென்று வதனா முன்னால் பார்க்க தன் முன்னால் ஆரத்தியுடன் நின்றிருப்பவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்…
ஆரத்தியுடன் நின்றிருப்பவர் யார்????
காத்திருப்புத் தொடரும்……………..