காத்திருப்பு : 47
சூர்யாவுக்கு போன் செய்த வாசு
“sir நம்மளோட புடவை கம்பனிய யாரோ கொளுத்தி விட்டிருக்காங்க. “
“என்ன சொல்ற வாசு ? எப்போ?”
“காலைலதான் sir நீங்க உடனே வாங்க”
“சரி ” என்றவன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சில மணிநேரங்களில் சாமிமலை வந்தான். வந்தவன் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தனது கம்பனியை நோக்கிச் சென்றான்.
எதுவும் புரியாத வீட்டினருக்கு சந்தனா நடந்தவற்றைக் கூறினாள். அப்போது வதனா “யார் செய்திருப்பாங்க சது?”
“வேற யாரு வதனா அந்த விக்கியோட வேலையா இருக்கும்”
“விக்கி…. S.k கம்பனியோட…..?”
“ஆமா வதனா”
“நான் முதல்ல வேலை பார்த்த கம்பனி சது”
“ஓ….ரொம்ப மோசமானவன் வதனா விக்கி”
“ஆமா சது”
“அத்தைமா”
“நதிக்குட்டி வாங்க”
“ஆதி எங்க ?”
“ஆதினு கூப்டாத தீராமா”
“அப்புறம் எப்பிடி கூப்ட?”
“அத்தான்னு கூப்பிடுடா”
“சரிமா”
“எங்க வதனா அண்ணா?”
“அவரு கம்பனில தீவிபத்தாம் தேவி பார்க்க போயிருக்காரு”
“ஐயோ ஏன் இப்பிடி பண்றானுங்கனே தெரியாது”
“சரி தேவி hospital போகணும் ரெடியாகு”
“செக்கப்பா தேவி?”
“ஆமா வதனா”
“சரி நீ போய் ரெடியாகு”
“நதி வாங்க ஆதிய பார்ப்பம்”
“சரி அத்தைமா”
ஆதி குளித்துவிட்டு வந்தான்.
“அத்தான் “என்றபடி வந்து அவனைக் கட்டிக்கொண்டாள் நதி.
“நதிம்மா என்ன அத்தானு சொல்ற?”
“அம்மாதான் ஆதினு கூப்டாத அத்தான்னு சொல்லுனு சொன்னாங்க”
“சரிடாமா. அம்மா நாங்க போய் விளையாடட்டுமா?”
“சரி பத்திரமா விளையாடுங்கடா”
வதனாவும் பயணக் களைப்புத்தீர குளித்துவிட்டு அறையை விட்டு வந்தவளை கீர்த்தனாவின் குரல் அழைத்தது.
“வதனா”
“சொல்லு கீர்த்தி”
“உங்கூட கொஞ்சம் பேசணும் பிளீஸ்”
“சரி வா” என்றவள் மொட்டைமாடிக்கு அழைத்துச்சென்றாள்.
“சொல்லு”
“என்னை மன்னிச்சிடு வதனா. “
“அதை பத்தி பேசாத கீர்த்தி. அதை மறந்திரு நான் அதை மறந்திட்டன்”
“என்னை மன்னிச்சிட்டனு சொல்லு வதனா”
“சரி மன்னிச்சிட்டன் போதுமா. அத மறந்திட்டு சரியா”
“சரி”
கம்பனி……………..
“என்னாச்சி வாசு”
“sir morningதான் நடந்திருக்கணும். ரொம்ப lost ஆகிடுச்சி “
“பரவால்ல வாசு யாரோட உயிருக்கும் எதுவும் ஆகலதானே”
“இல்ல sir”
“அதுபோதும் எனக்கு.”
அப்போது வாசுவுக்கு போன் வந்தது.
“sir உங்களுக்குதான் போன்”
“ஹலோ யாரு?”
“என்னடா என்னோட சரக்க நீ கொளுத்தினா நான் பார்த்திட்டு இருப்பனு நினைச்சியா? விடமாட்டன் சூர்யா உன்ன. இனிமேல் உனக்கு பிரச்சனை கொடுத்துக்கிட்டே இருப்பன்டா”
“அதுக்கு நீ உயிரோட இருக்கணும விக்கி”
“பார்க்கலாம் சூர்யா மூணு நாளைக்குள்ள உனத்கு பெரிய இழப்பு நடக்கும் “
“முடிஞ்சா பாருடா”
“பார்க்கலாம்டா” என்றவன் போனை கட் பண்ணினான்.
சூர்யா வாசுவிடம் insurance பற்றி பேசிவிட்டு வீட்டுக்குச் சென்றான். போகும் போது சக்திக்கு போன் பண்ணி அவனையும் வரச்சொன்னான்.
வீட்டிற்கு வந்த சூர்யா களைப்புடன் வந்து சோபாவில் அமரந்தான்.
“குடிக்க ஏதாச்சும் தரவா சூர்யா?”
“வேண்டாம்மா நான் குளிச்சிட்டு வர்றன்”
“சரிப்பா”
குளித்துவிட்ட வந்த சூர்யா அம்மாவை அழைத்தான்.
“எங்கம்மா தேவி வது சந்தனா யாரையும் காணல பசங்களகூட காணோம்”
“தேவியும் சதுவும hospital போயிருக்காங்க. பசங்கள தூங்கவைச்சிட்டு இருக்கா வதனா”
“ஓ….. சரிமா “
“சூர்யா என்னாச்சிப்பா?”
“ரொம்ப lost ஆயிட்டிச்சிப்பா. but ஒரே மாசத்தில நான் சரிபண்ணிடுவன்.”
“யாரு இதை பண்ண சூர்யா?”
“வேற யாரு விக்கிதான்பா”
“சூர்யா”
“வா சக்தி”
“என்ன சூர்யா அவசரமா வரச்சொன்ன?”
நடந்தவற்றை சொன்ன சூர்யா ” விக்கிய கொஞ்சநாளைக்கு கவனிச்சிக்கோ சக்தி”
“ஓகே சூர்யா”
“சக்தி காப்பி தரட்டுமா?”
“வேணாம்மா டீ தாங்க”
hospital…….
“ஏன் சது நீயும் அண்ணாவும் எப்போ அப்பா அம்மாஆகப்போறீங்க?”
“கொஞ்சநாளாகட்டும் தேவி”
“ஹா…..ஹா…சரி சரி”
“போ தேவி”
“உள்ள வாங்க மேடம்” என்றதும் உள்ளே சென்ற தேவியுடன் சதுவும் சென்றாள். அவளைப் பரிசேோதித்த டாக்டர் நர்ஸூடம்
“டாக்டர் கமலேஷை வரச்சொல்லுங்க”
“சரி டாக்டர்”
“எதுக்கு தேவி அண்ணாவ வரச்சொல்றாங்க?”
“தெரியல சது எனக்கு பயமா இருக்கு” எனும்போதே கமலேஷ் வந்தான்.
“hi அனு”
“வா கமலேஷ் “
“சொல்லு அனு”
டாக்டர் அனு சொன்னதைக் கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.
டாக்டர் என்ன சொன்னார்?????
காத்திருப்புத் தொடரும்……….