காத்திருப்பு : 49
வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா.
அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா..
“பாட்டிமா”
“என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க”
“பா… ட்….டி…மா…இ….வ…ங்…க”
“எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட வந்திருக்கலாமே டா”
“பாட்டிமா” என அணைத்து அழுதவளை கடினப்பட்டு சமாதானப்படுத்திய பாட்டி அவளுக்கு தானே உணவூட்டி மடியில் வைத்து தட்டிக் கொடுக்க அவரது மடியிலே தூங்கிவிட்டாள்.
” பாட்டி திடீரென வந்திருக்கிறீங்க”
” ஒண்ணுமில்லைடா எல்லோரையும் பார்த்து நாளாச்சி அதுதான்”
அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வந்த ஆதி “நதிமா டைமாச்சு தூங்கலாம் வாங்க”
“சரி அத்தான்”
இருவரும் சென்றதும் கமலேஷ் தனது chief டாக்டர் கூறியதை அனைவரிடமும் கூறினான். அதற்கு சூர்யா மறுப்புத் தெரிவித்தான்.
” இல்லை கமலேஷ் நீ மட்டும் அங்க போறது சரியில்லை. நீ போக வேண்டாம்டா”
உடனே கமலேஷ் “சரிடா நான் போகலை”
” என்ன கமலேஷ் அவன் வேண்டாம்னு சொன்னதும் நீயும் சரினு சொல்ற?”
“பாட்டி எனக்கும் போறதுல விருப்பம் இல்லை. சூர்யாவை விட்டு இவ்வளவு நாளும் பிரிஞ்சிருந்ததே போதும் பாட்டி”
” நல்ல பிரண்ட்ஸ்டா நீங்க”
” கண்ணு வைக்காதீங்க அப்பா. மாமா கவலைப்படாதீங்க வதனா நிச்சயமா நாளைக்கு உங்ககூட பேசுவா”
” சரி மாப்பிள்ளை “
” சரி எல்லோரும் போய் தூங்குங்க. சூர்யா உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போ என் கால் வலிக்குது”
” சும்மா சொல்லாதீங்க பாட்டி. உங்களுக்கு வதுனா ரொம்ப இஸ்டம்னு தெரியும்”
” போடா உனக்கு பொறாமை”
வதனாவை தங்களது அறைக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்த சூர்யா குளித்து விட்டு வந்தவன் மனைவியைப் பார்க்க அவளைக் காணவில்லை.
சிரிப்புடன் பால்கனிக்கு சென்ற சூர்யா வதனாவை பின்னிருந்து அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் இருந்து விடுபடத் துடித்தவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு அவளை மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“கண்ணம்மா”
“ம்”
“கண்ணம்மா”
“ம்”
“கண்ணம்மா நான் சொல்றதை கேளுடா. அவங்க பேசினது தப்புதான். அதுக்காக அவங்களுக்கு நீ கொடுத்து அதிகம்டா கண்ணம்மா. போதும்டா அவங்களை மன்னிச்சிடு கண்ணம்மா. உன்னோட மாமாக்காக மன்னிச்சி பேசுடாமா”
தன்னவன் தன்னிடம் கெஞ்சுவது பிடிக்காமல்
” சரி மாமா உனக்காக… உனஉனக்காக மட்டும்தான் பேசுறன்”
” என்னோட செல்லம் டி நீ”
அவனது மார்பில் சாய்ந்த மனைவியை வாகாக அணைத்துக் கொண்டான் சூர்யா.
அடுத்த நாள் காலை கீர்த்தி விடைபெற்று லண்டன் சென்றுவிட்டாள். கமலேஷ் தனக்கு எங்கும் போக விருப்பமில்லை. கட்டாயப்படுத்தினால் தான் hospital விட்டு சென்றுவிடுவதாக கூற அவரும் அவனை வற்புறுத்தவில்லை. வதனாவும் தன் பெற்றோருடன் பேச ஆரம்பித்தாள். தன்னவனுக்காக….
விக்கியோ சூர்யாவை பழிவாங்குவதற்கான வேலையில் இருந்தான். சக்தியும் சூர்யாவும் இவர்களுடன் வாசுவும் இணைந்து விக்கிக்கு ஒரு முடிவு கட்ட காத்திருந்தனர். அன்றைய நாள் அவ்வாறே செல்ல விக்கி சொன்ன மூன்றாம் நாள் வந்தது.
அன்று காலை அனைவரும் வழமை போல இருந்தாலும் சூர்யாவும் வாசுவும் பதற்றத்துடனே இருந்தனர். இதனை அவதானித்த குமார் project விசயமாக இருக்கும் என நினைத்து அதனை பெரிதுபடுத்தவில்லை.
“சூர்யா ஏதும் பிரச்சனையாப்பா?”
“ஒண்ணுமில்லை பாட்டி”
“உன்னோட முகம் சரியில்லையேடா”
“கொஞ்சம் project வேலை பாட்டி. அதுதான். வாசு போலாமா?”
“போலாம் sir”
“சந்தனா நீ கம்பனிக்கு வர வேண்டாம். நாளைக்கு நீங்க கிளம்புறதுக்கான வேலையை பாருங்க ok”
“ok sir”
அவர்கள் சென்றதும் சது வதனாவிடம் வந்து ” வதனா dress கொஞ்சம் வாங்கணும் shopping போலாமா?”
“போலாம் சது”
“அத்தைம்மா நானும்”
“நதிமா உங்களை இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு போறன் டாமா”
“நானும் வர்றன் அத்தை”
“எங்க நதிமா?”
“நாங்க shopping பண்ணப் போறம் ஆதி. நதிமாவும் கூட வரணும்னு சொல்றாடா”
“அத்தான் கூட்டிட்டு போகச் சொல்லு அத்தான் “
” கூட்டிட்டு போங்க அம்மா”
” சதுக்கு dress எடுக்கணும் ஆதி. நதிமாவை கூட்டிட்டு போனா யாரு அவளைப் பார்துதுககிறது. அதுதான் நதிமா நாம நாளைக்கு மாமா கூட போலாம்டா “
” நானும் வரணும்னு ” அழ ஆரம்பிக்க..
” அழாதடா நதிமா.. அம்மா நானும் வர்றன். நான் நதிமாவை பார்த்துக்கிறன். நீங்க dress எடுங்க”
“சரி ஆதி”
” என்ன சது? “
” விடு வதனா பாவம் பசங்க. ரெடியாகி வாங்க போலாம். “
இருவரும் வந்ததும் பாட்டி மற்றும் மதியிடம் சொல்லிக் கொண்டு சென்றனர்.
” மதி”
“சொல்லுங்க அத்தை”
” நான் கோயிலுக்கு போகணும்மா வர்றியா? “
” சரி அத்தை. இருங்க தங்கத்தையும் கூட்டிட்டு வரட்டுமா? “
” சரிமா ரெண்டு பேரும் வாங்க சேர்ந்து போகலாம்”
தங்கமும் மதியும் ரெடியாகி வர பாட்டி
“ஆமா குமாரும் சுந்தரமும் எங்க?”
“அவங்க நூலகத்துக்கு போயிருக்கிறாங்க அத்தை”
” சரிமா வாங்க போகலாம் “
மால்…………………………..
” ஆதி நதியை வைச்சிகிட்டு இங்கையே இருக்கணும் நாங்க dress எடுத்திட்டு வந்து உங்களுக்கு ice-cream வாங்கித் தர்றம் சரியா?”
“சரிமா. அத்தை உங்களோட போனைத் தர்றீங்களா? போரடிக்கும் நாங்க விளையாடுறம்”
” இந்தா ஆதி”
இருவரும் பக்கத்தில் dress எடுத்துக் கொண்டிருக்க ஆதியும் நதியும் போனில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
விக்கியும் தனது திட்டத்தை செயற்படுத்த காளியை அனுப்பி வைத்தான்.
கம்பனியில் வேலை செய்துகொண்டிருந்த சூர்யா வீட்டிற்கு போன் பண்ணினான். யாரும் அழைப்பை ஏற்கவில்லை. பதட்டமடைந்த சூர்யா வாசுவை அழைத்தான்.
“வாசு வீட்டிற்கு போன் பண்ணன் யாருமே எடுக்கல”
“வாங்க sir வீட்டுக்கு போலாம்”
“சரி வா வாசு”
“வாசு நீ சந்தனாக்கு போன் பண்ணிப்பாரு”
“sir offனு வருது”
பதட்டத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்த சூர்யாவைப் பார்ப்பதற்கு வாசுவுக்கு கவலையாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் வீட்டை வந்தடைந்தவர்கள் வீட்டினுள் இருப்பவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்…
வாசுவும் சூர்யாவும் ஏன் அதிர்ச்சியானார்கள்???
காத்திருப்புத் தொடரும்…….