வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21

4.6
(24)

வாழ்வு : 21

லீலாவதி காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டையை சுற்றிச் சுற்றி வந்தார். அதைப் பார்த்த மணிகண்டன், “லீலா வீட்டை சுத்தி சுத்தி வர என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு லீலாவதியோ, “என்ன ஆச்சுனா கேட்கிறீங்க? ஐயோ வித்யாவை காணோங்க.. நானும் காலையிலிருந்து நல்லா தேடிட்டேன்ங்க வீட்ல எங்கேயுமே இல்ல.. எங்க போனான்னே தெரியல..” என்று புலம்பினர் லீலாவதி. 

“என்ன சொல்ற வித்யாவை காணோமா? எங்க போய்ட போறா பக்கத்துல எங்கயாச்சும் பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பா..”

“அட நீங்க வேற அவ அப்படி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போகவே இல்ல.. அந்தப் பாளாப் போன சம்யுக்தாவைத் தேடித் தான் போவா ஆனால் இப்போ கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளயே தான் இருக்கா.. வெளியில எங்கேயும் போறதாவும் இல்ல.. அப்படி இருக்கிறவ இன்னைக்கு போய் இருக்கானா எனக்கு ஏதோ சந்தேகமா இருக்குங்க.. ஒருவேளை இந்த கல்யாணம் பிடிக்காம எங்கேயாச்சும் போயிட்டாளா என்ன?” என்றார். இதைக்கேட்ட மணிகண்டன் முகத்தில் அதிர்ச்சி வந்தது. “என்ன சொல்ற லீலா? வித்யா மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் நாம் கம்பெனிக்கு பிரச்சினை ஆயிடுமே சொல்லப்போனால் நம்ம நடுத்தெருவுக்கு வந்துருவோம்..”

“நீ நம்ம பிரச்சினை எல்லாம் வித்யா கிட்ட சொன்னியா என்ன?”

“இல்லங்க நான் எதுவுமே சொல்லல.. சொன்னா வித்யா அதுக்கு ஒத்துக்க மாட்டான்னு தான் நான் சொல்லலை..” என்றார் லீலாவதி தன் கையை பிசைந்து கொண்டு. 

மணிகண்டருக்கு கோபம் வர ஓங்கி அறைந்தார் லீலாவதிக்கு. “நீ புரிஞ்சுதான் பேசுறியா? நான் சொன்னேன் தானே நம்மளோட பிரச்சனையை அவக்கிட்ட சொல்லு அதுக்கப்புறம் முடிவெடுக்கட்டும்னு.. பிரச்சனையை சொல்லி இருந்தாலும் வித்யா போகாம இருந்திருப்பா.. இப்ப என்ன பண்ண போற? சாயந்திரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துருவாங்க.. ஒன்னு நம்ம கம்பெனியெல்லாம் எழுதிக் கொடுக்கணும்.. இல்ல பொண்ண கட்டி கொடுக்கணும் பொண்ண கட்டி கொடுத்து சம்மந்தியாக்கலாம்ன்னு பார்த்தா இப்படி வேலை பார்த்து வச்சிருக்க.. இப்போ எங்க அவ?”

“எங்கங்க போயிட போறா எப்படியும் இங்க தான் இருப்பா சாயந்திரத்துக்குள்ள அவளை எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடலாம்.. நம்ம ஆட்கள் கிட்ட சொல்லுங்க.” என்று சொல்ல, அவரும் “உன்னைச் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை ச்சே..” என்று தனது ஆளுங்களுக்கு அழைத்து வித்யாவை தேடச் சொன்னார். 

**********************************************

பிரகாஷ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு அந்த அறையை அளந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் தீக்ஷிதன் தனது வேலையை காட்டி இருந்ததால் அதற்கு கட்டுப் போடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அவனுக்கு கால் பண்ணினார் உமேஸ்வரன். 

“பிரகாஷ் மீட்டிங்கு எல்லாம் ரெடி தானே.. என்ன டைம் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்க?” என்று கேட்டார். அப்போது தான் பிரகாஷிற்க்கு இன்று காலையில் அவனுக்கு மீட்டிங் இருப்பதே ஞாபகம் வந்தது. 

“அப்பா அது வந்து…” என்று இழுத்தான். 

“என்ன அப்பா.. வந்து போய்னு இழுத்துக்கிட்டு இருக்க.. உன்ன எதுக்காக அங்க அனுப்பினேன்? அந்த மீட்டிங்குக்கு போய் நல்லபடியா முடிச்சு இந்த ப்ராஜெக்ட் நமக்கு வர்ற மாதிரி சைன் பண்ணி வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்.. அந்த வேலைய மட்டும் நீ சரியா பண்ணல அப்புறம் கெட்ட கோவம் வரும் எனக்கு..” என்றார். 

“அப்பா அது வந்து…”

“நிறுத்து பிரகாஷ் என்ன ஆச்சு? உன் குரல் நல்லா இல்ல.. நீ மீட்டிங் போக ரெடியா இருக்கியா இல்லையா? முதல்ல அத சொல்லு..” என்றார். 

உடனே பிரகாஷ், “இங்க நான் அந்த சம்யுக்தாவைப் பார்த்தேன் அப்பா..”

“அவ எப்படிப்போனா உனக்கு என்னடா?”

“அப்பா நீங்க நினைக்கிற மாதிரி அவளை ஒன்னும் ரோட்ல பாக்கல.. ஒரு ஹோட்டலில் பார்த்தேன்.. ஒரு பணக்கார பையன் கூட பார்த்தேன்..”

“பிரகாஷ் என்ன சொல்ற?”

“ஆமாப்பா நானும் அவள அவமானப்படுத்தலாம்னு போனேன்… ஆனா அவ அந்த பையனை வச்சு என்ன அடிச்சிட்டாங்க.. அது மட்டும் இல்ல அவனுக்கும் அவளுக்கும் இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம்னு என்கிட்ட சவால்விட்டா.. அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேனா இந்த வேலையை கொஞ்சம் கவனிக்கலப்பா..”

“இங்க பாரு பிரகாஷ் முதல்ல நம்ம எடுத்த வேலையை முடிக்க பழகு.. வேற பிரச்சினைகள் எல்லாம் இந்த விஷயத்தில் காட்டக்கூடாது என்ன புரிஞ்சுதா? முதல்ல அந்த கம்பெனி ப்ரொஜெக்டை நம்மளோட கைக்கு கொண்டு வர்ற வழியைப் பாரு.. அதுக்கு அப்புறமா அந்த சம்யுக்தாவை என்ன வேணா பண்ணிக்கோ..”

“ஓகே டாட் நான் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன் மீட்டிங்கு..”

“சரி ஆல் தி பெஸ்ட் முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு…” என்ற உமேஸ்வரன் போனை வைத்தார். இந்த பக்கம் இருந்த பிரகாஷோ, “என்னை மீறி உனக்கு எப்படி அந்த நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்று பார்க்கிறேன்.. கேவலம் உனக்கு போய் இப்படி ஒரு மாப்பிள்ளையா? விடமாட்டேன் டி என்னைய அவன வச்சு அடிச்சி அசிங்கப்படுத்திட்ட இல்ல உன்னை என்ன பண்றேன் பாரு..” என்ற பிரகாஷ் மீட்டிங்கு தயாராகிச் சென்றான்.

************************************************* 

சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் தனது கம்பெனிக்கு சென்றான். அங்கே அவனது ப்ராஜெக்டை எந்த கம்பெனிக்கு கொடுக்கலாம் என்பதற்கான மீட்டிங் தயாராகிக் கொண்டிருக்க, இவன் தனது கேபினில் இருந்தான். அங்கிருந்து எதார்த்தமாக சீசிடீவி வழியே அவனது கம்பெனியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரகாஷ் அவனது கண்களில் பட்டான். அதுவும் மீட்டிங் நடக்க இருக்கும் இடத்தில் அவன் இருப்பது இவனுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஏனெனில் அவன் தான் பிரகாஷைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தன் கைவசம் வைத்திருந்தானே. 

‘என்கிட்டயே வந்துட்டியா வா வா.. நீ இங்க வந்து நீயே என்கிட்ட மாட்டிக்கணும்னுதாண்டா நான் ஹோட்டல்ல வச்சு உன்னை தெரிஞ்சுக்காத மாதிரியே காட்டிகிட்டேன்..’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவனது கேபின் கதவை தட்டிவிட்டு வந்து நின்றான் அவனது பிஏ. 

“சார் மீட்டிங்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு…”

“ஓகே..” என்ற ஒத்த வார்த்தையுடன் அவன் அங்கிருந்து எழுந்தான். மீட்டிங் நடக்கும் அறைக்குள் சென்றதும், அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்றனர். அனைவருக்கும் ஒரு தலையசைப்பை மாத்திரம் பதிலாக கொடுத்தவன், அவனுடைய சேரில் வந்து அமர, அவனைப் பார்த்த பிரகாஷின் முகத்தில் ஈ ஆடவில்லை. 

தீக்ஷிதன் அவனை தெரியாதவாறு காட்டிக் கொள்ள முயன்றான். தீஷிதனுடைய ப்ரொஜெக்ட் பற்றி அவன் எடுத்துரைக்க அந்த மீட்டிங்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நிச்சயமாக இந்த ப்ராஜெக்ட் தங்களுக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் தாங்களும் இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று அங்கு வந்திருந்த அனைவரும் நினைத்துக் கொண்டனர். அதனால் அந்த தீக்ஷிதனின் ப்ராஜெக்டை தங்கள் கம்பெனிக்கு தருமாறு ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். 

பிரகாஷிற்கோ தான் என்ன பேச வேண்டும் என்பதே மறந்து போய் அமர்ந்திருந்தான். தீஷிதனை பார்த்துக் கொண்டு இருந்த பிரகாஷிற்கு உமேஸ்வரன் சொன்னது ஞாபகம் வந்தது. ‘எப்படியாவது இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பெனிக்கு எடுத்துட்டு போகணும்.. இல்லனா டாட் சும்மா இருக்க மாட்டாங்க.. அதே நேரம் இவன் நமக்கு அதை தருவான்னு சொல்றதுக்கும் இல்லை.. என்ன பண்ணலாம்..’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். 

அவனைப் பார்த்த தீக்ஷிதன், “என்ன மிஸ்டர் பிரகாஷ் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கிற மாதிரி இருக்கு வாட் ஹப்பெண்ட்..? ஆமா என்னாச்சு உங்க முகத்தில் எல்லாம் காயம் மாதிரி இருக்கு அடி ரொம்ப பலமோ..” என்று நகையாடினான் பிறர் அறியாத வகையில். பிரகாஷிற்கோ அவனது வாயை உடைக்க வேண்டும் போல இருந்தது. என்ன செய்வது என்று அமைதியாக இருந்தான்.  

“இல்ல சார் நைட் வரும்போது அடிபட்டிருச்சு அதுதான்..” என்றான். 

“ஓகே இப்போ நீங்க உங்களோட ப்ரெஷென்டேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க… நான் அதைப் பாத்துட்டு இந்த ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்கலாம்னு டிசைட் பண்றன்..” என்று சொன்னான். 

ஒவ்வொருவராக அவர்களது ப்ரெஷென்டேஷனை நன்றாகச் செய்து கொண்டு இருந்தனர். பிரகாஷின் முறை வந்ததும் அவனும் அவனது ப்ரெஷென்டேஷனை செய்தான். இப்படியாக எல்லோரும் செய்து முடித்ததும் தீக்ஷிதன் எழுந்து நின்றான். 

“வெல் இந்த மீட்டிங்கு வந்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. உங்களுடைய ப்ரெஷென்டேஷன் ஒவ்வொண்ணுமே எனக்கு உங்களோட திறமையை வெளிப்படுத்தியிருக்கு.. பை த வே நான் இந்த ப்ரொஜெக்ட்ட வந்து எந்த கம்பெனி கொடுக்கிறனோ அந்த கம்பெனியில எனக்கு 20% ஷேர் வேணும்.. அது மட்டும் இல்ல அந்த ப்ராஜெக்ட் நடக்குறப்போ அந்த ப்ரொஜெக்டர் அடிக்கடி பாக்குறதுக்கு என்னோட சைட்ல இருந்து என்னோட பெட்டர் ஹாப் ஐ மீன் என்னோட மனைவி வருவாங்க… அவங்களுக்கு கீழே தான் நீங்க ஒர்க் பண்ண வேண்டி வரும்.. உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லைனா சொல்லுங்க..” என்றான். அவனது வழமையான புன்னகையுடன். அதைப் பார்த்து அனைவரும் இந்த ப்ராஜெக்ட் மட்டும் கிடைத்துவிட்டால் போதும். யாருக்கு கீழே வேலை செஞ்சா என்ன என்பது போல சரி சார் என்று உடனே தலையாட்டினார்கள். பிரகாஷின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. 

“ஓகே நான் இந்த ப்ராஜெக்ட்டை மிஸ்டர் பிரகாஷோட கம்பெனிக்கு கொடுக்கலாமான்னு இருக்கேன்.. ஏன்னா அவரோட ப்ரெஷென்டேஷன் வித்தியாசமா இருக்கு… என்ன பிரகாஷ் உங்களுக்கு என் வைஃப் கீழ வொர்க் பண்ண ஓகே தானே.. ஏதாவது பிராப்ளமா என்ன?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான் பிரகாஷைப் பார்த்து. 

பிரகாஷிற்கு கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது, “நோ ப்ராப்ளம் சார்.. எனக்கு இந்த ப்ராஜெக்ட் ரொம்ப இம்போர்ட்டண்ட்.. என்னோட டேட் எப்படி இருந்தாலும் இந்த ப்ரொஜெக்டர் வரணும்னு சொல்லி இருந்தாரு..” என்றார். 

“ஓகே மிஸ்டர் பிரகாஷ் அப்படின்னா நீங்க நாளைக்கு இங்க வாங்க நம்ம நாளைக்கு அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிடலாம்.. எனிவே காய்ஸ் மத்தவங்களும் உங்களோட டைம் ஒதுக்கி இங்க வந்து இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்.. நம்ம நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்ல சந்திக்கலாம்.. தேங்க்யூ ஒன்ஸ் அகைன்…” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். இங்கே ஹோட்டல் அறைக்கு வந்த பிரகாஷ் அங்கு இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

15ரேட்டிங் வந்தா அடுத்து ரெண்டு எபி தர்றேன் பட்டூஸ் 😍

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!