Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 27

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 27

by Thivya Sathurshi
4.8
(21)

வாழ்வு : 27

சம்யுக்தாவும் தீஷிதனும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, இவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் விழுந்தது. அப்போது தீஷிதன், “என்ன பேசிட்டு இருக்கீங்க? எது சரியா வராது?” என்றவாறு வந்து விக்கியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். சம்யுக்தா தமயந்தியின் அருகில் நின்றாள். 

தீஷிதனிடம் திரும்பிய விக்ராந்த், “நீங்களே சொல்லுங்க அத்தான். நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றாங்க. இது நியாயமா? உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு மட்டும் ஒரு நியாயமா?” என்று கேட்டான். 

அதற்கு சிரித்துக் கொண்டே தீஷிதன், “இப்போ என்ன விக்கி, உனக்கு நீ விரும்புற பொண்ணோட கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே. நீ பொண்ணு யார்னு மட்டும் சொல்லு, எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்திடு” என்றான் தீஷிதன். 

அதற்கு விக்கியோ, “அதெல்லாம் தூக்கிட்டு வர தேவையில்லை. பொண்ணு இங்கதான் இருக்கா”

“என்ன பொண்ணு இங்க இருக்கா? ஆமா நீ யாரை சொல்ற?” என்று கேட்க, 

“வேற யாருப்பா அது தான் நம்ம சம்யுக்தாவோட தங்கச்சி வித்யாவைதான் சொல்றாங்க” என்றார் தமயந்தி. 

“என்ன நம்ம வித்யாவையா?” என்றாள் சம்யுக்தா. 

“ஆமாங்க அக்கா, இங்க பாருங்க அக்கா, சம்யுக்தா உங்க கூட பொறந்த தங்கச்சி இல்ல தானே. அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு இருக்கு? இவங்க எல்லாம் நீங்க எனக்கு அக்கா முறையாம். அதனால உங்க தங்கச்சி எனக்கு தங்கச்சி முறைன்னு சொல்றாங்க. அக்கா பாருங்க உங்க கூட பிறந்திருந்தாக்கூட பரவால்ல இது…” என்று இழுத்தான். 

இப்போது சம்யுக்தா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். தீக்ஷிதன் தான், “விக்கி” என்றான். 

“சொல்லுங்க அத்தான் நீங்க ஒரு முடிவு சொல்லுங்க. என்னோட வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு” என்றவனைப் பார்த்தவன், அமரேந்திரனிடம் திரும்பி, “நீங்க என்ன சொல்றீங்க மாமா?”

“இதுல நான் சொல்ல என்னப்பா இருக்கு? இது அவனோட லைப் அவனுக்கு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறானோ அவங்களையே அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும்”என்றார். 

“சரியா சொன்னீங்க மாமா, இத்தனை நாள் என்னை மாதிரி அவனும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தான். இப்போ வித்யாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றான். இதுல என்ன இருக்கு, அவளும் நல்ல பொண்ணு தானே. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். சம்யுக்தாவுக்கு தங்கச்சி தான். ஆனா அதனால எந்த பிரச்சனையும் இல்லை. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். வேணும்னா எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கு இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்” என்றான். 

சம்யுக்தாவ, “ஒரு தடவை லீலா அம்மாகிட்ட பேசிட்டா நல்லா இருக்கும்ங்க. ஏன்னா அவங்க எப்ப பிரச்சனை பண்ணலாம்னு இருப்பாங்க. வித்யா வேற சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டா. நாளைக்கு ஏதும் பிரச்சனை வந்துட்டா என்ன பண்ணுறது?”

“எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீ பீல் பண்ணாத.”

“அதுக்கு இல்ல முதல்ல வித்யாக்கிட்ட இவங்களை கட்டிக்க சம்மந்தமான கேக்கணும்” என்றாள். 

“அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காது. வித்யாக்கிட்ட இதைப் பற்றி நானே கேட்கிறேன். அத்தை எங்க வித்யா?” என்றான். 

“வித்யாவும் மதுராவும் உன் கல்யாணத்துக்கு மதுராவோட பிரெண்ட்ஸை அழைக்கிறதுக்காக போயிருக்காங்க.”

“அப்படியா சரி வரட்டும், வந்தது நான் வித்யா கிட்ட கேட்கிறேன்.” என்றான். 

பரந்தாமன், “தீஷி என்னாச்சுப்பா போன விஷயம் என்னாச்சு?” என்றார். 

“ரொம்ப சிறப்பா முடிஞ்சுது டாடி. யுக்தா தான் அங்க பிரகாஷைப் பார்த்த உடனே ரொம்ப பயந்துட்டா. அதுக்கப்புறம் சமாளிச்சுட்டு பேசினா பாருங்க, அவனை யார்னே தெரியாத மாதிரி பேசினா. யுக்தா நீ எப்பவும் இதே மாதிரி ரொம்ப போல்டா இருக்கணும் சரியா”என்றான். பின்னர் அனைவரும் கல்யாண வேலை சம்மந்தமாக அங்கே பேசிக்கொண்டு இருந்தார்கள். மதுராவின் வித்யாவும் வீடு வந்து சேர்ந்தனர். 

………………………………………………….

மணிகண்டனும் லீலாவதியும் தங்களது வீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவருக்கும் தங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கி இருப்பது புரிந்தது. ஆம் வித்யா மட்டும் கிடைக்கவில்லை என்றால் விக்டர் இவர்களை சும்மா விடமாட்டான். இத்தோடு நூறாவது முறையாக கால் பண்ணி வித்யா வந்துவிட்டாளா வந்துவிட்டாளா என்று கேட்டு விட்டான். இவர்களும் ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்துக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை. இருவரின் ஆட்களும் ஒவ்வொரு இடங்களிலும் வித்யாவை தேட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் வித்யா எங்கே என்று தான் யாருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு அப்போதுதான் லீலா, “ஏங்க இப்ப என்ன பண்றது? பேசாம நீங்க வாங்கின கடனுக்கு நம்ம சொத்து எல்லாத்தையும் கொடுத்து இருக்கலாமா?”

“அப்புறம் சொத்து எல்லாத்தையும் கொடுத்துட்டு ஒண்ணும் இல்லாம ரோட்ல பிச்சை எடுக்கப் போறியா?” என்று எரிந்து விழுந்தார் மணிகண்டன்.  

“வேற என்ன தான்ங்க பண்றது? அந்த எடுபட்ட சிரிக்கி வேற நம்மகிட்ட சொல்லாம இப்படி மாயமா மறைஞ்சுட்டாளே. எங்க போன என்ன பண்றானு எதுவுமே தெரியல” என்று வித்யாவின் மீது தனது கோபத்தை காட்டினார் லீலா. 

…………………………………………………. 

வித்யாவும் மதுராவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வித்யாவிடம் தீஷிதன், “வித்யா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா இல்ல அப்புறமா பேசவா?” என்று கேட்டான். 

வித்யாவும், “ஐயோ என்ன மாமா இது? எதுக்கு நீங்க என்கிட்ட பேச டைம் கேட்டுட்டு இருக்கீங்க. சொல்லுங்க மாமா என்ன விஷயம்?” என்றாள். 

தீஷிதனும் அங்கே இருந்தவர்களைப் பார்த்துவிட்டு, “வித்யா இதோ இங்க இருக்கானே விக்கி இவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்காம். கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா உன்னைத்தான் பண்ணிக்குவானாம். ஆனா இவங்க தான் நீ சம்யுக்தாவோட தங்கச்சி. அதனால இவனுக்கு முறை இல்லன்னு சொல்லி சொல்றாங்க. ஆனா தப்பா எடுத்துக்காதமா நீ இப்படி இருந்தாலும் யுக்தாவோட கூட பிறந்த தங்கச்சி இல்லையே அதனால உனக்கு விருப்பம்னா இந்த கல்யாணம் நடக்கும். மற்றபடி உன்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டாங்க. உனக்கு புடிச்சிருந்தா மட்டும் உன்னோட முடிவை சொல்லுமா” என்றான். 

இதைக் கேட்ட வித்யா சம்யுக்தாவைப் பார்த்தாள். சம்யுக்தாவோ, “நான் எதுவும் சொல்லல வித்து. இது உன் வாழ்க்கை. நீ தான் முடிவு எடுக்கணும்.”

மதுரா வித்யாவை கட்டி அணைத்துக் கொண்டு, “வித்து நிஜமா நீயே எங்க விக்கி அத்தனை கல்யாணம் பண்ணிக்கோ டி. அவங்க ரொம்ப நல்ல பர்சன்” என்றாள். 

அதைப் பார்த்த தமயந்தி, “யாரும் அவளை கன்பியூஸ் பண்ண வேணாம். வித்யா அவளோட முடிவை சொல்லட்டும். எனக்கு வித்யா என் வீட்டுக்கு மருமகளா வர்றதுல எந்த பிரச்சினையும் இல்ல. அவளுக்கு பிடித்திருந்தா ஓகே தான். நான் ரெண்டு பேருக்கும் முறை சரியா வருதுன்னு யோசிச்சேன். ஆனால் இவங்க சொல்ற மாதிரி சம்முவோட ரெத்த பந்தம் இல்லல வித்யா. அதனால எந்த பி இல்லை” என்றார். 

வித்யா அமைதியாக நிற்பதைப் பார்த்த விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை பார்த்ததுமே படிச்சுப் போச்சு. அதனால நான் இதை தள்ளிப் போடாம சொன்னேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா சொல்லு இல்லன்னா இப்பவே சொல்லிடு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான். 

“ஏன் விக்கி எதுக்குப்பா அவசரப்பட்டு? அவளுக்குரிய டைம் நம்ம கொடுப்போம்” என்ற தீஷிதன் வித்யாவிடம் திரும்பி, “வித்யா அவன் கிடக்கிறான். உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ. அப்படி இந்த கல்யாணத்துல இஷ்டம்னா சொல்லு, எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கே உங்களுக்கு நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்” என்றான். 

இவர்கள் எல்லோரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற வித்யா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் தீஷிதனிடம், “மாமா எனக்கு இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா எங்க அப்பா அம்மாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு. அது மட்டும் இல்ல அவங்களோட ஆளுங்க வேற என்னை தேடிட்டு இருப்பாங்க. அதுதான் ரொம்ப பயமா இருக்கு.”

“அப்படியா வித்யா, அதெல்லாம் பாத்துக்கலாமா நீ ஒண்ணும் பயப்படாத, இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல. உனக்கு இவனை கட்டிக்க சம்மதம்னா மட்டும் சொல்லும் நிச்சயதார்த்தம் நடக்கும். இல்லை, இன்னும் டைம் வேணும்னா எடுத்துக்கோ ஒன்னும் அவசரமில்லை” என்றான் மீண்டும் சொன்னதையே சொல்லியபடி. 

“மாமா எனக்கு திரும்பவும் எங்க வீட்டுக்கு போக விருப்பம் இல்லை. நான் இங்கேயே இருந்துடறேனே. மாமா நீங்க எங்க அக்காவுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க. நீங்க சொன்ன அவங்க நல்லவங்களா தான் இருப்பாங்க. அதனால நான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா” என்றாள்.

“வித்யா வாவ் சூப்பர் …வித்து ஐ அம் சோ ஹாப்பி.” என்றாள் மதுரா. 

விக்ராந்த், “பாத்தீங்களா இப்ப வித்யாவே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா. இப்ப இந்த கல்யாணத்துல யாருக்காவது எந்த அப்ஜக்ஷனாவது இருக்கா?” என்று கேட்ட, எல்லோரும் சேர்ந்து, “எந்அப்ஜெக்ஷனும் இல்லை. தீக்ஷிதன் சம்யுக்தா கல்யாணத்து அன்னைக்கே உங்களுடைய நிச்சயதார்த்தத்தோட இவங்க நிச்சயதார்த்தத்தையும் சிறப்பாக பண்ணிடலாம்” என்றார் பரந்தாமன். 

“யுக்தா நீ மட்டும் என்ன அமைதியா இருக்க? உனக்கு இதுல விருப்பம் இல்லையா?” என்ற தமயந்தியிடம், “ஐயோ அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு அங்க அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. அவங்களுக்கு மட்டும் இது தெரிந்தது என்றால், என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. அதுதான் பயமா அமைதியா இருக்கேன்” என்றாள். 

என்னோட தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்றவளை அணைத்துக் கொண்டாள் வித்யா. 

“இங்கே யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எந்த பிரச்சனையும் வராது. சரி போங்க போய் ஃப்ரெஷாகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் தமயந்தி. 

அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல, விக்ராந்த் மெல்ல வித்யாவிடம் சென்று, “உன் கூட கொஞ்சம் பேசணும் மொட்டை மாடி வரைக்கும் வா” என்று சொன்னான். 

அவளோ, “அங்க எதுக்கு என்னால வர முடியாது” என்ற வித்யாவிடம் விக்ராந்த், “ப்ளீஸ் வித்து கொஞ்சம் வா. கண்டிப்பா உன் கூட பேசியே ஆகணும்” என்றான். 

இதைக் கேட்ட மதுரா, “அதுதான் அத்தான் கூப்பிடறாங்கல போயிட்டு வா வித்து. ஏதாவதுனா ஒரு குரல் கொடு நான் வந்து பாத்துக்குறேன்.” என்றாள். 

“உன்னை..” என்று அவளை போலியாக மிரட்டிய விக்ராந்த் மதுராவின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்து விட்டு, “உன் ப்ரெண்டுக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது மேடம்” என்றான். 

சம்யுக்தாவின் பின்னாடியே தீக்ஷிதன் சென்றான். அவன் தன் பின்னால் வருவதை உணர்ந்த சம்யுக்தா, “ஏதாவது பேசணுமா?” என்றாள். 

அவனும், “ஆமா பேசணும், உள்ள வா” என்று அவளுக்கு முன்னால் அவள் அறைக்குள் சென்றான். 

‘என்னவா இருக்கும்’ என்று யோசித்துக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா. அப்போது தீஷிதன் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்தன. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 

உங்கள் அன்புத்தோழி 

திவ்ய சதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana September 19, 2025 - 2:28 pm

Appidi enna solli itupaann

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!