Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 28

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 28

by Thivya Sathurshi
4.8
(20)

வாழ்வு : 28

சம்யுக்தாவுடன் அவளது அறைக்குள் வந்தான் தீஷிதன். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவளை தனக்கு அருகில் உட்காருமாறு சொன்னான். அவளும் மறுக்காமல் அவனின் அருகில் அமர்ந்தாள். “யுக்தா நான் வெளியில வித்யாவோட கல்யாணத்த பத்தி எடுத்த முடிவுல உனக்கு ஏதும் வருத்தம் இருக்கா?” என்றான். 

அதற்கு சம்யுக்தாவோ, “இல்லைங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்களுக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்றிங்க நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுல எங்களுக்கு சந்தோசம் தான். ஆனா ஒன்னு எனக்கு லீலா அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் பயமா இருக்கு.”

“அவங்கள பத்தி நீ எதுக்கு பயப்படுற? அவங்களால என்ன பண்ண முடியும்? அவங்க அந்த விக்டர் கிட்ட நல்லா மாட்டிகிட்டாங்க.”

“விக்டரா அது யாருங்க?”

“அது யாரா? உன் தங்கச்சி வித்யாவுக்கு அவங்க பார்த்த மாப்பிள்ளை. அவன் ரொம்ப மோசமானவன். உங்க அப்பா அவங்க கிட்ட ஏதோ கடன் வாங்கி இருக்கிறார் போல. அதை கொடுக்கலைன்னா உன் பொண்ண கல்யாணம் பண்ணி வை. இல்லனா சொத்தை என் பேருல எழுதி வைனு சொல்லியிருக்கிறான். உங்க அப்பாவும் எனக்கு என்னோட சொத்து முக்கியம். அதனால என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு வாக்கு கொடுத்துட்டாரு. இப்ப அவன் வித்யா எங்க வித்யா எங்கன்னு கேட்கிறான். இவங்களோ வித்யா ஊருக்கு போய் இருக்கா அங்க போய் இருக்கா இங்க போயிருக்கான்னு சமாளிக்கிறாங்களே தவிர இன்னும் அவன்கிட்ட உண்மைய சொல்லல.”

“என்னங்க இது, உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கு. அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க.”

“அதுதான் நான். அங்க என்ன நடக்குதுனு எனக்கு தெரியணும் இல்ல. ஏன்னா அவங்களோட எந்த ஒரு நடவடிக்கையும் உன்னையோ வித்யாவையோ பாதிக்க கூடாதுன்னு நான் உறுதியா இருக்கேன். அதனாலதான் அங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்.”

“ஏங்க அந்த விக்டரால அம்மா அப்பாக்கு ஏதாவது ஆபத்து வந்திடாதே?”

“இதான் நீ யுக்தா. ஏன் நீ இப்படி இருக்க? உன்னை அனாதராவா நடு ரோட்டில் விட்டவங்க அவங்க. அவங்களுக்கு போய் நீ பாவம் பாக்குற.”

“என்ன இருந்தாலும் அவங்க என்னை வளத்தவங்க இல்லையா? அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும். ப்ளீஸ்ங்க அந்த விக்டர்கிட்ட இருந்து அவங்களை எப்படியாவது காப்பாத்துங்க.”

“யுக்தா அதுக்கு ஒண்ணு அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்கணும். அது உனக்கு ஓகேவா?”

“ஏங்க இப்படி பேசுறீங்க? நீங்க தானே சொல்றீங்க அவன் ரொம்ப மோசமானவன்னு இப்போ அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க? அவளோட வாழ்க்கை என்ன ஆகும்?”

“இப்போ புரியுதா உனக்கு? அதனால தான் அவங்களுக்கு சீக்கிரமாவே நிச்சயம் பண்ணனும்னு சொன்னேன். அந்த விக்டரால வித்யாவுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது. அது மட்டும் இல்ல உங்க அம்மா அப்பா அவங்க சொத்தை அவன் பெயரை எழுதி கொடுத்துட்டா இந்த பிரச்சனை முடிஞ்சிடும். வித்யாவை கல்யாணம் பண்ணி கொடுத்துத்தான் பிரச்சனையை முடிக்கணும்னு இல்ல.”

“ஆனா அப்பா சொத்தை கொடுக்க ஒத்துக்கலனா என்ன பண்றது?”

“அது அவங்களோட சாய்ஸ். ஆனா நான் இப்ப எதுக்கு இங்க வந்தேன் தெரியுமா? எனக்கு அர்ஜென்டா உங்கிட்ட இருந்து ஒரு ஹக் இல்லனா ஒரு கிஸ் வேணும்” என்று சொன்னான். 

இதைக் கேட்டதும் யுக்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “ஏய் எதுக்குடி இப்பிடி பார்க்கிற? நான் கேட்டதை கொடுப்பியா இல்லையா?” என்று அவளை நெருங்கினான். அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கியவன், அவள் முகத்தை கையில் ஏந்தி, அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அவளும் கண்களை மூடிக் கொண்டு அந்த முத்தத்தை ஏற்றாள். சிரிப்புடன் அவள் நெற்றியில் முட்டியவன், “யுக்தா கண்ணை தொற”

“ம்கூம் முடியாது..”

“ப்ளீஸ் டி” என்றான். அவளும் மெல்ல கண்களை திறக்க, அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் பார்வை உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள். 

“யுக்தா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். நீ அதை யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது.” 

“சரி சொல்ல மாட்டேன்.” என்றாள். 

“நான் வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் நம்மளோட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான். இதைக் கேட்டு அவனிடம் இருந்து பதறியபடி விலகினாள் சம்யுக்தா. 

“ஏய் எதுக்கு இப்பிடி பதறுற? இங்க வா” என்று மறுபடியும் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். 

“என்னங்க ஏங்க இப்படி பண்றீங்க? அவங்களுக்கு மட்டும் வித்யா இங்க இருக்கிறது தெரிஞ்சா, அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்கனே தெரியாது.”

“நீ என்ன நெனச்சிட்டு இருக்க யுக்தா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் கையாலாகாதவன்னு நினைக்கிறாயா? இங்க பாரு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. உன்னை அன்னிக்கு கதற கதற வெளியே அனுப்பினாங்க தானே. அதுக்கு அவங்களுக்கு பாடம் சொல்லியே ஆகணும். அவங்க உன்னை கைவிட்டாலும் நீ ராணி மாதிரி இருக்கிறதை அவங்க பாக்கணும். இந்த விஷயத்தில நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்ல யுக்தா.”

“வேணாம்ங்க.. ப்ளீஸ் சொன்னா கேளுங்க. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. வித்யாக்கோ உங்களுக்கு இங்க இருக்கிற மத்தவங்களுக்கோ ஏதாவது தப்பா நடந்தா அதை என்னால தாங்கிக்க முடியாது.”

“நான் திரும்பவும் சொல்றேன் என்னை மீறித்தான் உனக்கும் வித்யாக்கும் ஏதாவது பிரச்சனை வரும். நான் உன்னை பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்குல உனக்கு?”

“ம்ம்ம் ரொம்ப”

“அப்புறம் என்ன? எதைப் பத்தியும் யோசிக்காமல் நீ நம்ம கல்யாணத்தை பற்றி மட்டும் யோசிம்மா. அதை எப்படி என்ஜாய் பண்ணலாம்னு பாரு” என்றவனிடம் சம்யுக்தாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியானவள் அவனது கையை பிடித்துக்கொண்டு, அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

வித்யாவை அழைத்துக் கொண்டு விக்ராந்த் மாடிக்கு சென்றான். அங்கே வித்யா அவனைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு நின்றாள். அவனும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அந்த மௌனத்தை அவளே கலைத்தாள். 

“என்ன ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க, விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. உன்னைப் பார்த்த உடனே புடிச்சு போயிடுச்சு. அதனாலதான் வீட்ல உள்ளவங்க கிட்ட பேசி நம்ம கல்யாணத்தை பத்தி பேச சொன்னேன். உனக்கு என்னைய புடிச்சிருக்கா? இல்ல இவங்க எல்லாம் சொல்றாங்கனு என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டியா?”

“நான் உண்மையை சொல்லவா? எனக்கு உங்க மேல எந்த தப்பான அபிப்பிராயமும் இல்லை. அதே நேரத்துல எனக்கு எங்க வீட்டுக்கு போக இஷ்டம் இல்ல. இங்கே இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. மதுரா உங்களை பற்றி எங்கிட்ட நிறைய சொல்லியிருக்கிறா. அது மட்டும் இல்ல மாமா எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். அவங்களே நீங்க நல்லவங்கன்னு சொல்லும் போது நீங்க ரொம்ப நல்லவங்களாதான் இருப்பீங்கனு நான் கெஸ் பண்ணேன். அதனால தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன்”என்றாள். 

“அப்போ என்ன லவ் பண்ண மாட்டியா?”

“அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன லவ் பண்ணி தானே ஆகணும்” என்று சொல்லி சிரித்தாள். 

“சான்ஸ்ஸே இல்ல தியா. நீ இப்படி பேசுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.”

“வேற அப்படி பேசுறது? வாழ்க்கை எதை நோக்கி போகுதோ அதன் போக்கிலேயே நாம போய்க்கொண்டே இருக்கணும். என்னோட அம்மா அப்பா இங்க வர்றது கஷ்டம். ஆனா ஒருவேளை அவங்க இங்க வந்து என்னை கூட்டிட்டு போனாங்கன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“என்ன பண்ணுவேன்னா கேக்கிற, வித்யா என்னோட பொண்டாட்டி, அவளை எப்படி நீங்க கூட்டிட்டு போகலாம்னு அவங்ககூட சண்டை போய்டுவேன்.”

“அதையும் மீறி கூட்டிட்டு போக பார்த்தாங்கனா?” என்றாள். 

“உன்னை கடத்திட்டு மலேசியாக்கு போய்டுவேன். அங்க யாராலையும் உன்னை கண்டுபிடிக்க முடியாதுடி” என்று சிரித்தவன், “தியா நீ எதுக்கு பயப்படுற? அதுதான் அத்தான் இருக்காங்கல அவரை மீறி எதுவும் நடக்காது. நான் மட்டும் என்ன அவ்வளவு குறைந்தவனா அவங்க உன்னை கூட்டிட்டு போகும் வரைக்கும், நான் பார்த்துட்டு அமைதியா இருப்பேன்னு நினைச்சியா? என்கிட்ட இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது. என்னை நம்பி வா கண்டிப்பா உன்னை நான் எப்பவும் விட மாட்டேன்” என்று கூறியவனின் வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள் வித்யா. 

“ஏய் இது என்ன? நீ எப்பவுமே சின்ன பிள்ளை போல கலகலன்னு தான் இருக்கணும்” என்றவனை அணைத்துக் கொண்டாள் வித்யா. 

………………………………………………….

இரவு வேளையில் இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. அந்த இடமே ஒரு அமைதியை தத்தெடுத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே இருந்த ஒவ்வொரு குடிசைகளிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அந்த இடத்திலுள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரோ தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு இடத்தில சிலருக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பெரிய சிவலிங்கத்திற்கு முன்பாக ஒரு குருஜி தியானத்தில் அமர்ந்திருந்தார். 

ஒரு குடிசையில் மட்டும் கீழே விரிக்கப்பட்ட துணியில் ஏராளமான இலைகள் போடப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகமே நீண்ட நாள் அவள் உறக்கத்தில் இருப்பதாக தெரிந்தது. அவளுக்கு அருகில் அவள் முகத்தில் எதையோ தேடியவாறு ஒரு ஆண் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தார். 

அவர் எத்தனை மணி நேரம் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. திடீரென்று அந்த தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஒரு அசைவு. அவளது கண்களோ பட்டாம்பூச்சி போல படபடவென்று அடித்துக் கொண்டது. அவர் பிடித்திருந்த கைவிரல்கள் அசைய தொடங்கின. 

இதுபோல் எத்தனை முறை நடந்திருக்கிறது. அவர் அவள் எழுந்துவிட்டார் என்று எண்ணி எத்தனை தடவைகள் ஏமாற்றம் அடைந்திருப்பார். அதுபோல இதுவும் தனது பிரம்மை என்று நினைத்துக் கொண்டவர் அமைதியாக இருந்தார். ஆனால் இம்முறை அப்பெண் அவரை ஏமாற்றவில்லை. படுக்கையில் இருந்தவர் மெல்ல மெல்ல தனது கண்களை திறந்தார். இதைப் பார்த்த அவர் அவளது கையை கீழே வைத்துவிட்டு சட்டென்று வெளியே ஓடினார். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana September 19, 2025 - 2:33 pm

Yaara irukkum

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!