வருவாயா என்னவனே : 37

4.9
(8)

காத்திருப்பு : 37

அனைத்திற்கும் அனுமதி கேட்டு நிற்கும் மகனை நினைத்தவளுக்கு பூரிப்பு ஏற்பட்டது.

“சரி ஆதி நீ போயிட்டு வா”

“அம்மா நீங்க தனியா இதுப்பீங்கமா நான் போதல”

“பரவால்லடா கண்ணா ஒருநாள்தானே சரியா பத்திரமா போயிட்டு வாங்க “

“தங்ஸ் அத்தைமா”

“சரிடா கண்ணா நாங்க வர்றம்.”

“நதி bye”

நதியை ஆசிரியரிடம் விட்டு விட்டு வந்தாள் சந்திரா. அதன் பிறகே குமார் வந்து தீராவை அழைத்துச் சென்றார்.

சந்திரா வீட்டிற்கு வரும் போது வாசு வந்து அவர்களுக்காக காத்திருந்தான்.

“என்ன அண்ணா “

“சந்திராமா நான் உங்கிட்ட முக்கியமான விசயம் பேசணும்மா”

“சொல்லுங்க அண்ணா”

என்றவள் வீட்டைத் திறந்துவிட்டு ஆதியிடம், 

“கண்ணா இன்னைக்கு நீங்களே குளிச்சிட்டு சமத்தா உங்க வேலைய பாப்பீங்களாம். மாமாகூட அம்மா பேசிட்டு வருவனாம் சரியா? அதுக்கு முதல் இந்த பாலையும் ஸ்னாக்ஸை சாப்பிடுங்கப்பா” என்றுவிட்டு வாசுவிடம் வந்தாள்.

“இப்ப சொல்லுங்கண்ணா”

வாசு சந்தனாவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை அனைத்தையும் கூறிமுடித்தான்.

“அண்ணா நீங்க அனுதாபம் பார்த்து சந்தனாவ கல்யாணம் பண்ணப்போறீங்களா?”

“இல்லம்மா சந்திரா எனக்கு அவளப்பிடிச்சிருக்கு”

“அப்போ சந்தோசம் அண்ணா. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க அண்ணா”

“நாளைக்கு அவளோட முடிவ சொல்லட்டும்மா சீக்கிரமே வீட்டுக்கு கூட்டிட்டு வர்றன்”

“சரிணா”

“சந்திரா வேலை எல்லாம் எப்பிடி போகுதுமா?”

“வேலை பரவால்ல அண்ணா. அண்ணா உங்க கம்பனில ஒரு வேலை கிடைக்குமா அண்ணா?”

“ஏன்மா ஏதும் பிரச்சனையா?”

“ஆமா அண்ணா அந்த எம்டி கொஞ்சம் சரியில்லை அண்ணா”

“சரிமா நான் எங்க எம்டிட்ட கேட்டுட்டு சொல்றன்.”

“சரிணா வாங்க சாப்டு போங்க அண்ணா”

“சரிமா ஆதி வாடா”

“மாமா நான் ஸ்கூல்ல திப் போதன் மாமா நதியும் வதுவா”

“ஓ… எப்படா ?”

“ரெண்டுநாள்ல அண்ணா”

“சரிமா சந்திரா”

ஹோட்டல்…………

“கீர்த்தி ஏன் வர்றதுக்கு இத்தனை நேரம் ?”

“அங்க இருந்து சமாளித்து வரணுமே நந்தன். சொல்லு என்ன விசயம்?”

“வதனாவ கண்டுபிடிச்சிட்டன்”

“நெஜமாவா எங்க இருக்கா?”

“இங்கதான்”

“இங்கன்னா?”

“சாமிமலைலதான்”

“ஓ….. என்ன பண்றா?”

“வேலை பார்க்கிறா. ஒரு பையன் இருக்கான்”

“அப்பிடினா கல்யாணமாகிடுச்சா?”

“இல்லை. அது சூர்யா கொழந்தை”

“வாட் ?”

“ஆமா கீர்த்தி. வதனா வீட்டைவிட்டு போகும்போதே pregnanta இருந்திருக்கா.”

“பிள்ளை இருக்கிறது தெரிஞ்சா சூர்யா பாசத்தில சேர்ந்திருவாங்க. “

“அதுக்கு ஒரு வழி இருக்கு”

“என்ன வழி நந்தன்?”

நந்தனின் பிளானைக் கேட்ட கீர்த்தி சரி அப்பிடியே பண்ணிடு என்றுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

தேவி வீட்டில்………………

“மாமா நான் திப் போப்பதன்”

“எப்படா குட்டிமா?”

“தெண்டு நாள்ல மாமா”

“சரிடா கண்ணா பத்திரமா போகணும் சரியா?”

“சதி மாமா”

“குட்டிமாகூட யாரு வர்றா?”

“ஆதி வதுவான் மாமா”

“யாருடாமாஆதி?”

“அன்னைக்கி சொன்னன் என்த பிதன்து ஆதி”

“சாரிடா மாமா மறந்திட்டன்”

“மாமா ஆதி என்ன நதினுதான் கூப்பிதுவான்”

“அப்பிடியாடா?”

“ஆமா மாமா அத்தைம்மாகூட நல்லால பேசுவாங்க”

“அது யாருடா அத்தைம்மா?”

“ஐயோ மாமா ஆதியோட அம்மா”

“சாரி…..சாரி… சாரிடா குட்டிமா”

“பதவால்ல மாமா” என்றவள் மாமாவுடன் தூங்கினாள்.

சூர்யாவும் அவனது கண்ணம்மாவின் நினைப்பில்ல கண்ணயர்ந்தான்.

வதனா சூர்யா நினைப்பிலே அழுதுகண்ணீர்விட்டபடி தூங்கினாள்.

பல மாற்றங்களுடன் விடியலும் வந்தது.

S.V கம்பனி………….

சந்தனாவின் வரவினை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான் வாசு. அவன் எதிர்பார்த்த சந்தனாவும் அவனருகில் வந்தவள் சொன்ன செய்தியைக் கேட்ட வாசு அதிர்ச்சியானான்.

“என்ன தனா சொல்ற?”

“ஆமா தேவ் நாம இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்”

“இவ்வளவு அவசரமாவா?”

“ஆமா தேவ் அவசரம்தான் பிளீஸ்”

“சரி” என்றவன் சந்திராவை அழைத்து ரிஜிஸ்டர் ஆபீஸ் வரச் சொன்னவன். சூர்யாவை அழைத்து நடந்ததைச் சொல்ல அவனும் வர்றதா சொல்ல தனாவை அழைத்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்தான்.

அங்கிருந்த சந்திராவை சந்தனாக்கும் சந்தனாவை சந்திராக்கும் அறிமுகப்படுத்தினான். அப்போது வாசு “sir வந்திட்டாரு கூட்டிட்டு வர்றனு “சொல்லி வெளியே வந்தான்.

சூர்யாவும் வதனாவும் ஒருவரை ஒருவர் காண்பார்களா???

காத்திருப்புத் தொடரும்……………..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!