காத்திருப்பு : 38
சூர்யாவை அழைக்க வாசு வெளியே வந்ததும் registrar மாலை வாங்கி வரச்சொல்ல சந்திரா பின்பக்க வழியாக மாலை வாங்கச் சென்றாள். சூர்யாவை அழைத்து வந்த வாசு
“சந்திரா எங்க?”
“மாலை வாங்கி வரப் போயிருக்காங்க”
“சரி வாசு சீக்கிரமா கையெழுத்துப் போட்டுட்டு நான் போகணும் “
” sir please சந்திரா வந்திருவா sir”
“ok vasu” என்றவன் காத்திருக்கும் போது சக்தி போன் பண்ணினான்.
“சொல்லு சக்தி”
“சூர்யா நான் உன்ன உடனே பார்க்கணும்”
“இப்பவா?”
“ஆமாடா நம்ம மீட் பண்ண ஹோட்டல்கு வந்திரு”
“சரிடா”
“வாசு எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் உடனடியாக போகணும் நீங்க கையெழுத்து போட்டுடுங்க அப்புறம் மாலை மாத்திக்கலாம்”
“ok sir”
சூர்யாவும் கையெழுத்துப் போட்டுவிட்டு சக்தியைப் பார்க்க சென்றான். அதன் பின் வந்த சந்திராவிடம்
“ஏன்மா லேட்?”
“நல்ல மாலையா பார்த்து வாங்கிட்டு வரநேரமாயிட்டு அண்ணா”
“சரிமா பரவால்ல வா வந்து கையெழுத்துப் போடு”
“சரிணா ” என்றவள் கையெழுத்துப்போட்டாள். அப்போதும் தன்னவன் கையெழுத்தை அவள் பார்க்கவில்லை. இதுதான் விதியோ???
சந்திரா தனது ஆபிஸ்க்கு செல்ல சந்தனாவும் வாசுவும் தங்களது ஆபிஸ்க்கு சென்றனர்.
ஹோட்டல்……………
“சக்தி எதுக்கு என்ன அவசரமா வரச்சொன்ன?”
“சூர்யா வதனாவ பத்தி கொஞ்சம் தெரிஞ்சிகிட்டன்”
“வதனாவ பாத்தியாடா?”
“இன்னும் இல்லடா நாளைக்குதான் அவளோட அட்றஸ் கெடைக்கும்”
“சரிடா தெரிஞ்சிகிட்டத சொல்லுடா”
நந்தன் கீர்த்தியிடம் கூறிய அனைத்தையும் கூறினான். கூறிமுடித்தவன் நிமிர்ந்து பார்க்க விழிகளில் நீருடன் இருந்தான் சூர்யா.
“சூர்யா?”
“சக்தி எனக்கு பையன் இருக்கான்டா. என்னப்போலவே இருப்பானாடா?”
“போட்டோ கிடைக்கலடா. நாளைக்கு அவங்களப் பற்றின டீடைல்ஸ்ஸோட மீட் பண்ணுவம் சரியா? “
“சரிடா “
இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
V.K கம்பனி……………..
லேட்டாக வந்ததால் சந்திராவை எம்டி அழைப்பதாக அழைப்பு வந்தது சந்திராவிற்கு. தன் விதியை நொந்தபடி உள்ளே சென்றாள்.
“ஏன் லேட்?”
“கொஞ்சம் பெர்சனல் வேலை சேர்.”
“இனிமேல் இப்பிடி நடக்கக்கூடாது” என்றான். வாய் பேசினாலும் கண் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க கோவத்தில் சந்திரா
“சேர் டீசண்டா பிகேவ் பண்ணுங்க”
“எப்பிடி ? கொஞ்சம் என்ன அஜ்ஜஸ்ட் பண்ணிட்டு போனா உனக்கு நல்லது. இல்லனா வேலைய விட்டு தூக்கிடுவன்” என்றவன் அருகில் வந்து கையைப் பிடிக்க பளாரென அறைந்தாள்.
“ஏய் நான் யாரென்டு தெரியாம அடிச்சிட்ட இதுக்கு நீ அனுபவிப்ப”
“சீ…. பொறுக்கி நாயே நான் இங்க இருந்தால்தானேடா. இது மட்டும் என்னோட புருஷனுக்கு தெரிஞ்சிது நீ உயிரோட இருக்கும் கடைசி நாள் இதுவாகத்தான் இருக்கும். ” என்றவள் வெளியே வந்தது தனது பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
S.V கம்பனி…………………..
வாசுவுக்கு போன் வந்தது.
“ஹலோ சொல்லுமா”
“அண்ணா நான் வேலையை விட்டுட்டன். உங்க கம்பனில ஏதும் வேலை இருக்காண்ணா?”
“இருக்குமா நீ உன்னோட பயோடேட்டாவை அனுப்பிவைமா நான் எம்டியோட பேசிட்டு சொல்றன்.”
“சரிணா” என்றவள் அவனுக்கு அனுப்பிவைத்துவிட்டு அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்றாள்.
“sir”
“வா வாசு”
“நீங்க ஒருவாரம் லீவ் எடுத்திருக்கலாமே”
“பரவால்ல சேர். நான் உங்ககிட்ட ஒரு வேலை கேட்டு வந்திருக்கன் “
“வேலையா? யாருக்கு?”
“என்னோட தங்கச்சிக்கு sir”
“ok vasu நீங்க அவங்க டீடைல்ஸ எனக்கு மெயில் பண்ணிடுங்க ரெண்டு நாள்ல சொல்றன்.”
“ok sir” என்று வெளியே வந்தவன் சந்திராவை அழைத்து நடந்தவற்றை சொன்னான்.
கோயிலில் இருந்த சந்திரா ஆதியைக் கூட்டிக்கொண்டு shopping போனாள். நாளை ஆதி trip போகணும் அப்போது சாப்பிடுவதற்காக ஸ்னாக்ஸ் வாங்கினாள். நதிக்கும் சேர்த்தே வாங்கினாள்.
வாசு வீட்டில்……
“தனா என்கூடவே வந்திட்ட. உங்க வீட்ல பிரச்சனை செய்யமாட்டாங்களா?”
“இல்லை தேவ் அவங்க பிரச்சனை செய்யக்கூடாதுனு இவ்ளோ நாள் நான் கஸ்ரப்பட்டு சம்பாதிச்ச எல்லா பணத்தையும் எடுத்து அவங்ககிட்ட கொடுத்திட்டு நான் செத்திட்டதா நெனச்சிக்கோங்க” என்று சொல்லிட்டு வந்திட்டன் தேவ். என்றவளின் குரல் தழுதழுத்தது.
” அழாத தனாமா நான் எப்பவும் உன்கூடவே இருப்பன் சரியா?”
“சரிங்க”
“மாமா…….மாமா”
“வாடா ஆதி”
“மாமா அம்மா சொன்னாங்க மாமா வீத்த புது அத்தை இதுக்காங்களானு பாத்தித்து சாப்பித கூப்து வதச் சொன்னாங்க”
“அப்பிடியாடா கண்ணா. இதோ இவதான் உன்னோட புது அத்தை சந்தனா. சந்தனா இவரு….”
“நானே சொல்லுதன் மாமா”
“நான் ஆதி”
“hi ஆதி. உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே”
“நாங்க வாசு மாமா கூடத்தான் இங்க வந்தம் அத்தை”
“சரிடா குட்டி”
“மாமா அத்தைய எனக்கு தொம்ப பிதிச்சிதிக்கு”
“ஹா…..ஹா……..சரிடா கண்ணா வா போலாம்”
சந்திரா வீட்டில்ல விருந்தே ரெடி பண்ணியிருந்தாள்.
“எதுக்குமா இதெல்லாம்?”
“பரவால்ல அண்ணா. சது (சந்தனா) வா சாப்பிடலாம்”
எல்லோரும் ஒன்றாக சாப்டுமுடித்தனர்.
“சந்திரா ஆதிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு”
“ஆதி அவங்க அப்பா மாதிரி. அப்பாவையே உரிச்சி வச்சிருப்பான்”
“ஹா……ஹா……”
“சரிமா நாங்க வர்றம்.”
“சரிணா”
காலைக் கதிரவன் பல நிகழ்வுகளுக்கு ஆரம்பகர்த்தாவாக விளங்க எழுந்து வந்தான். விதியும் தனது திட்டத்தை செய்வதற்கு தகுந்த நேரத்தினை எதிர்பார்த்திருந்தது.
காலையிலே மகனை பல புத்திமதிகளுடன் ஸ்கூலில் விட்டு வீடு வந்த சந்திராவுக்கு மனசு சஞ்சலமாய் இருந்தது. ஏனென்றே தெரியவில்லை.
பலமாடிக்கட்டடங்களுடன் வானுயர்ந்து நின்றது Moon company. இது வெளிநாட்டவர் கம்பனி. இந்தக் கம்பனியுடைய project தமக்கு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். பல பிஸ்னஸ்மேன்கள். அவர்களுள் விக்கியும் சூர்யாவும் ஒன்று.
Moon company C.E.O வந்ததும் meeting ஆரம்பமானது. பல விவாதங்களுடன் நடைபெற்ற meeting இறுதிக்கட்டத்திற்கு வந்தது.
Moon company C.E.O எழுந்து
“நமது கம்பனியின் இந்த வருட project surya group of companiesகு வழங்கப்படுகிறது. Good luck Mr. suryakumar.”
விக்கியை ஒரு ஏளனப் பார்வை பார்த்த சூர்யா கம்பீராகச் சென்று projectக்கான அக்ரீமென்டில் சைன் பண்ணினான். meeting முடிந்ததும் வெளியில் வந்த விக்கி ஒருவனுக்கு போன் செய்து சில கட்டளைகளை இட்டவன். அங்கிருந்து சென்றுவிட்டான்.
ப்ராஜக்ட் கிடைத்த மகிழ்ச்சி இருந்தபோதும் தனது கண்ணம்மா இந்த தருணத்தில் தன்னுடன் இல்லையே என்று வருந்தினான் சூர்யா. சிறிது நேரத்தில் தன்னை சமன்செய்துகொண்டவன். S.V கம்பனியை வந்தடைந்தான்.
“hello sir”
“hi vasu”
“sir project நமக்குதானே”
“yes vasu. you are correct. நம்ம கம்பனிக்குதான் project. வாசு நாம கவனமா இருக்கணும். விக்கி எப்ப என்ன பண்ணுவான்னே தெரியாது வாசு”
“ok sir”
ஆதியும் நதியும் ஏனைய பிள்ளைகளுடன் ஜோலியாக விளையாடிக்கொண்டு இருந்தனர்.
மாலை சக்தி சூர்யாவுக்கு போன் பண்ணினான்.
“ஹலோ சூர்யா”
“சொல்லு சக்தி”
“சூர்யா எங்க இருக்க?”
“கம்பனிலதான்டா”
“சரி இரு நானே வர்றன்”
“சரிடா”
“sir எல்லோரும் போயிட்டாங்க நீங்க இன்னும் போகல”
“வேலை இருக்கு வாசு நீங்க போங்க”
“இல்லை சேர் நான் வெளில இருக்கிறன்.” என்றவன் வெளியே வரவும் அவனுக்கு போன் வரவும் சரியாயிருந்தது.
“சொல்லுமா சந்திரா”
“அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?”
“என்னம்மா இது உதவினு சொல்லிட்டு. என்ன பண்ணனும்?”
“ஆதி trip போயிருக்கான்தானே அண்ணா. அவன் 7.00கு ஸ்கூல்கிட்ட வந்திடுவான். கொஞ்சம் கூட்டிட்டு வர்றீங்களா அண்ணா?”
“சரிடாமா சந்திரா உனக்கென்னாச்சு வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு ?”
எப்பிடிச் சொல்வாள் தன் கணவனை நினைத்து அழுததை. தன்னை சரிசெய்தவள்.
“ஒண்ணுமில்லை அண்ணா தலைவலி “
“டெப்லட் போட்டியாமா?”
“ஆ..ஆமாணா”
“சரிமா பத்திரமா இரு. சந்தனாவ உன்கூட வந்து இருக்கச்சொல்றன். நான் ஆதியை கூட்டிட்டு வரறன்.”
“சரிணா”
“sir நான் போகலாமா”
“போங்க வாசு.என்னோட பிரண்ட் சக்தி வர்றான் பேசிட்டு நானும் கலம்பிருவன்.”
“சரி சேர்.”
சிறிது நேரத்தில் சக்தி வந்தான்.
“என்ன சக்தி வது பற்றி ஏதாச்சும் தெரிஞ்சிதா?”
“ஆமாடா எல்லாம் தெரிஞ்சிது.”
“சொல்லுடா சீக்கிரம்”
“வதனா இங்க கொஞ்சநாளைக்கு முன்னாடி வேலைக்கு மாற்றலாகி வந்திருக்கா. அதுக்கு முதல் நம்ம இடத்திலதான் இருந்திருக்காடா.”
“என்னடா சொல்ற?”
“ஆமாடா. அதுமட்டுமில்லை அவ இப்போ வேலை பார்க்கிறது V.K கம்பனில. அதையும் நேற்று ராஜினாமா பண்ணிட்டா. காரணம் விக்கி. அதுமட்டுமில்லை. வதனாக்கு கூட இருந்து இப்போ ஹெல்ப் பண்றது வாசு.”
“வாசுவா?”
“ஆமா. ஆனா வாசுக்கு அவ உன்னோட wifeனு தெரியாது.என்றவன் வாசுவுக்கும் வதனாக்கும் இடையிலான உறவை ஆரம்பம் முதல் இப்போ வரை சொல்லிமுடித்தான்”
“அப்போ வாசு வேலை கேட்டது வதனாவுக்கா ? என்றவன் தன் மெயிலை open பண்ணி பார்க்க உண்மை புரிந்தது.
“சூர்யா உன் பையன் நட்சத்திராகூட படிக்கிறான். பேரு ஆதவக்குமார். உங்க குடும்பபேரையே வைச்சிருக்காடா வதனா”
“அப்போ தீரா ஆதி அத்தைம்மானு சொன்னது என்னோட மகனையும் வதுவையும்தானாடா”
“ஆமாடா “
“சரிடா எனக்கு இப்பவே வதுவ பார்க்கணும்டா “
“போய் பாருடா”
“நான் வர்றன்டா ” என்றவன்றவன அங்கிருந்து செல்ல. சந்தோசத்துடன் செல்லும் தன் நண்பனைப் பார்த்து சிரித்த சக்தி தன் வீட்டிற்குச் சென்றான்.
ஸ்கூல்…….
“மாமா அம்மா வதலயா?”
“இல்லடா. நான்தான் ஆதிய கூட்டிட்டு வர்றனு சொன்னன்.”
“சதி மாமா. bye நதி. அத்தைம்மா , தாத்தாவ கேத்ததா சொல்லு”
“சதி ஆதி bye நீயும் அத்தைமாவ, புது அத்தைய கேத்ததா சொல்லு”
“சதி நதி. போலாம் மாமா. எனக்கு அம்மாவ பாக்கணும்”
“சரிடா போலாம் bye தீராமா”
“bye மாமா” என்றவள் driverஉடன் சென்றாள்.
ஆதியுடன் பேசிக்கொண்டு காரில் வந்துகொண்டிருந்த வாசு தன் எதிரில் பார்த்தவன். அதிர்ச்சியுடன் வண்டியை நிறுத்தினான்.
வாசு எதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்??
காத்திருப்புத் தொடரும்………………….