காத்திருப்பு : 39
ஆதியைக் அழைத்துக்கொண்டு வந்த வாசு எதிரில் பார்க்க அங்கே சூர்யாவின் கார் accidentஆகியிருந்தது. வாசு அதனருகில் செல்லப்போக ஆதியும் வருவதாகக் கூற அவனையும் அழைத்துக்கொண்டு அருகில் சென்றான்.
சூர்யா அருகில் சென்று அவனைப் பார்க்க முகத்தை திருப்பினான் வாசு. அப்போதுதான் சூர்யாவின் முகத்தைப் பார்த்த ஆதி
“அப்பா ” என்றான்.
அவனைப் பார்த்த வாசு
“ஆதி இவருதான் உன்னோட அப்பாவா?”
“ஆமா மாமா அப்பாக்கு என்னாச்சி?”
“ஒண்ணுமில்லடா அப்பா விழுந்திட்டாங்க. hospital கூட்டிட்டு போலாம் சரியா?”
“சரி மாமா”
பின் சூர்யாவை தூக்கிவந்து தன்காரில் ஏற்றி hospital கொண்டு சேர்த்தான். அதன்பின்பே சூர்யா விட்டினருக்கு தொடர்புகொண்டு விசயத்தைச் சொன்னவன் ஆதியிடம் வந்தான்.
“ஆதி கண்ணா. இவரு உங்க அப்பானு யாரு சொன்னா?”
“அம்மா மாமா. போத்தோ காத்திதுக்காங்க”
“சரிடா இரு அம்மாகிட்ட சொல்லுவம் என்று போன் எடுத்தான்.”
தேவி வீட்டில்……………
சூர்யாவுக்கு accident என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
அவளது மயக்கத்தினை தெளித்த கமலேஷ்
“தேவி பதட்டப்படாதமா நீ இந்த நேரத்தில பதட்டப்படக்கூடாது.”
“எப்பிடிங்க அண்ணாக்கு இப்பிடியாயிடுச்சி”
“நாம முதல்ல hospital போலாம்மா. அத்தை மாமா வாங்க சீக்கிரம் போலாம்.”
“சரிப்பா”
அனைவரும் hospital நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
வாசு சந்தனாவுக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னவன் சந்திராவிடம் எதுவும் கூறாமல் அழைத்துவரச் சொன்னான்.
சந்தனாவும் சந்திராவிடம் சென்று hospital போகணும் கூட வர்றியா எனக் கேட்க அவளும் வருவதாகக் கூற அழைத்து வந்தாள்.
hospital………..
Emergency அறைக்கு வெளியில் அனைவரும் வந்திருந்தனர். ஆதியும் எதுவும் பேசாமல் தீரா அருகில் அமர்ந்திருந்தான். வாசுவும் அவர்களிடம் எதுவும் கூறவில்லை.
சந்தனாவுடன் வந்த சந்திரா emergency அறைக்கு வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் சந்திராவின் கால்கள் அசைவற்றிருந்தன. சந்திராவை முதலில் பார்த்தது ஆதிதான். அவளை நோக்கி ஓடிவந்தான்.
அவளது கால்களைக் கட்டிக்கொண்டு “அம்மா அப்பாக்கு ” என்றவன் அழ ஆரம்பித்தான். அவனது அழுகுரலில் திரும்பிய அனைவரும் வதனாவைக் (இனிமேல் வதனா என்றே அழைக்கலாம்)கண்டதும் அதிர்ச்சியுற்றனர்.
“வதனா” என அழைத்தபடி அவளருகில் வந்த தேவி யாரும் எதிர்பார்க்காவண்ணம் அவளை அறைந்திருந்தாள்.
“அவளை விடும்மா” என்றார் மதி.
எல்லோரும் அங்கிருப்பதை உணர்ந்தவள் தன்னவன் மட்டும் இல்லாததையும் உணர்ந்துகொண்டாள். மெல்ல நடந்து வந்து மதியின் அருகில் வந்தவள்.
“அத்தை அவருக்கு என்னாச்சி?”
“accidentஆகிடுச்சிமா. வாசுதான் போன் பண்ணினான்மா”
“வாசு அண்ணா உங்களுக்கு எப்பிடி அவரைத் தெரியும்?”
“நான் siroda கம்பனிலதான் வேலை பார்க்கிறன்மா. ஆதியை கூட்டிட்டு வரும் போது நம்ம வீட்டுக்கு பக்கத்தில siroda வண்டி accidentஆகி இருந்தது. அவரைப் பார்த்ததும் ஆதி அப்பானு சொன்னான். எனக்கு பதட்டத்தில sira hospital கூட்டிட்டு வந்திட்டு வீட்டுக்கு தகவல் சொன்னன்.”
“ஆமா அண்ணா ஆதி சொன்னது உண்மைதான். அவரோட பையன்தான் ஆதி ” என்றாள்.
அதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களை விட்டுப்போன வதனா மற்றும் அவள் பிள்ளை இருவரும் இப்போது அவர்களுடன் இருக்கின்றனர். இவர்களால் வரவேற்க முடியவில்லை என வருந்தினர்.
“எல்லாவற்றையும் அப்புறம் பேசலாம் மதி. முதல்ல சூர்யாவைப் பார்க்கலாம்” என்றார் குமார்.
அனைவரும் சூர்யாவை எண்ணியபடி கவலையில் இருந்தனர். வதனாவும் அவரு எதுக்காக அங்கே வந்தாரு ஒருவேளை நம்மள தேடி வந்தாரானு யோசித்தவள். கடவுளிடம் தன்னவனுக்காக மன்றாடத் தொடங்கினாள்.
அனைவரும் வெளியே இருக்க அங்கே வந்த டாக்டரிடம் என்னவென்று கேட்டனர்.
“கொஞ்சம் கிரிட்டிக்கலான ஸ்டேஜ்லதான் அவரு இருக்காரு. நாலுமணிநேரத்துக்கு அப்புறம்தான் எதுவும் சொல்ல முடியும்” என்றார்.
அதைக்கேட்ட அனைவரும் மீண்டும் கண்ணீரில் ஆழ்ந்தனர்.
“ஒவ்வொருவராக சென்று அவரிடம் பேசிப் பாருங்கள். ஏதாவது முன்னேற்றம் தெரியுதானு பார்க்கலாம்” என்றார்.
தேவி, மதி, குமார், கமலேஷ் , தீரா, வாசு என அனைவரும் சென்று பேசிவிட்டு வந்தனர். இறுதியில் வதனாவிடம் வந்த மதி
“உனக்காக ரொம்ப நாளாக் காத்திருந்தான்மா. நீ போய் பேசுமா”என்றார்.
வதனாவும் ஆதியை அழைத்துக்கொண்டு அவனருகில் சென்றாள். ஆதியிடம் “உங்க அப்பாகூட பேசு ஆதி ” என்றாள்.
ஆதியும் சூர்யா அருகில் சென்று
“அப்பா…..நான் ஆதிப்பா ஏன்பா இங்க இதுக்கீங்க?வாங்கப்பா நம்ம வீத்த போலாம்.” என்றவன் தந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.
“ஆதி நீ போ கண்ணா அம்மா பேசிட்டு வர்றன்”
“சதிமா ” என வெளியே வந்த ஆதி தனியாக நடந்து வெளியே வந்தான். அங்கே இருவர் பேசுவதைக் கேட்ட ஆதி மீண்டும் சூர்யாவை வைத்திருந்த அறைக்குள் வேகமாக நுழைந்தான்.
ஆதி என்ன கேட்டான்???????
காத்திருப்புத் தொடரும்…………..