வருவாயா என்னவனே : 44

5
(8)

காத்திருப்பு : 44

அனைவருடனும் இருந்த சூர்யா

“அப்பா நானும் வதனாவும் ஆதியும் மதுரா இல்லத்துக்கு போறம்”

“என்ன சூர்யா சொல்ற உனக்கு இன்னும் சரியாகல சூர்யா”

“நான் அங்க treatment பார்த்துக்கிறன்பா”

“இப்பிடி அவசரமா போகணுமா மச்சான்”

“போயாகணும் என்ற அவசியம் மச்சான்”

“சூர்யா அம்மாவும் கூட வர்றனே”

“எதுக்குமா நீங்க நாங்க போயிட்டு one weekla வந்திர்றம்மா”

“பரவால்ல சூர்யா மதிகூட வரட்டும் இல்லனா யாரும் போகவேண்டாம்”

“சரிப்பா அம்மா வரட்டும்”

“மாப்பிள்ளை நாங்களும் ஊருக்கு போறம்”

“இல்ல மாமா நீங்க இங்க இருங்க நாங்க போயிட்டு வந்தப்புறம் முடிவெடுக்கலாம் மாமா”

“சரி மாப்பிள்ளை”

 

“வதனா போய் things எல்லாம் எடுத்து வை” வதனா மாடிக்கு சென்றதும் சூர்யா

” அப்பா வதனா மனசுக்குள்ளேயே feel பண்ணித்து இருக்கா அதுதான் நான் அங்க கூட்டிட்டு போறன்”

 

“சரிப்பா நீங்க போயிட்டு வாங்க”

 

எல்லோரிடமும் விடைபெற்று புறப்பட ஆரம்பிக்கும் போது தீரா தானும் வருவதாக அடம்பிடித்தாள். சூர்யா சொல்லியும் கேட்கவில்லை. ஆதிதான் தீராவை சமாதானப்படுத்தினான். தீராவும் bye சொல்லி இவர்களை அனுப்பி வைத்தாள்.

 

காரில் driver அருகில் சூர்யாவும். சூர்யா மடியில் ஆதியும் பின்னால் மதியும் வதனாவும் அமர்ந்திருந்தனர். பயணம் தொடங்கியது.

 

ஹோட்டல்………..

 

“வாங்க கீர்த்தி”

 

“என்ன எதுக்கு சக்தி வரச்சொன்னீங்க?”

 

“கீர்த்தி நீங்க சூர்யா லவ் பண்றீங்களா?”

 

சக்தி கேட்டதும் கீர்த்தி “இ….ல்…ல சக்தி”

 

“பொய் சொல்லாத கீர்த்தி. எனக்கு எல்லாம் தெரியும் வதனா உன்னாலதான் சூர்யாவிட்டு போனானும் எனக்குத் தெரியும். எதையும் மறைக்காம சொல்லு கீர்த்தி “

 

“சக்தி….அது…வந்து…. “

 

“நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டன் கீர்த்தி சொல்லு”

 

“நான் சூர்யாவ லவ் பண்ணன் சக்தி. தேவி கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் சூர்யாகிட்ட சொல்லலாம்னு இருந்தன். அதுக்குள்ள இப்பிடியாயிட்டு. கோபத்தில வதனாவ பேசிட்டன். ஆனா அவ போனதுக்கு நான் காரணமில்லை. அன்னைக்கு எங்க அப்பக்கு உடம்புசரியில்லைனு நான் கலம்பிட்டன்.

 

இப்போ கொஞ்சநாளைக்கு முதல்லதான் இங்க வந்தன். சூர்யாவ விட்டு வதனா போனது தெரிஞ்சிது.அதுதான் சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தன். ஆனா…….. அவங்க ரெண்டுபேரையும் இப்போ பார்த்த பிறகு நான் இங்க இருந்து போறதா முடிவெடுத்திட்டன் சக்தி.”

 

” திடீர்னு மாறக் காரணம் என்ன கீர்த்தி?”

 

“சக்தி நான் கெட்டவ இல்ல சூர்யாவ பிடிக்கும். அதனாலதான் அப்பிடி நடந்துகிட்டன். நான் இன்னைக்கே லண்டன் போறன் சக்தி. அப்புறம் சூர்யாகிட்ட இதை சொல்ல வேண்டாம். நான் நல்ல பிரண்டாவே அவன்கிட்ட இருந்து விலகிடுறன். “

 

“சரி கீர்த்தி நான் சொல்லல. ஆனா நீ லண்டன் போக தேவையில்லை.”

 

“இங்க எனக்கு யாருமே இல்லை சக்தி.So நான் போகணும்”

 

“கீர்த்தி நான் இருக்கன். லவ் யூ கீர்த்தி.”

 

“எ…ன்….ன.. ச…க்…தி…….”

 

“கீர்த்தி உன்ன பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு one week time தர்றன் யோசிச்சு சொல்லு சரியா?”

 

“இல்…ல நான் போ..றன்”

 

“போலாம் ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா போலாம் சரியா?இப்போ வா உன்ன சூர்யா வீட்ல விட்டுட்டு போறன்.”

 

எதுவும் பேசாமல் சக்தியுடன் சென்றாள் கீர்த்தி. கீர்த்தியை வீட்டில் விட்டுவிட்டு வதனாவுக்கு call பண்ணினான் சக்தி. வதனா போனா கட் பண்ணி message போட சொன்னாள். சக்தி ஏற்கனவே வதனாவிடம் கீர்த்தியிடம் பேசப்போவதைப் பற்றி கூறியிருந்தான். அதனால்தான் சூர்யா இருப்பதால் போனை கட் பண்ணி message போட சொன்னாள்.

 

சக்தியும் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பின் சூர்யாவிடம் சொல்லா வேண்டாம் என்றும் கூறியிருந்தான். அதைப் பார்த்த வதனா நான் அவர்கிட்ட எதையும் மறைக்க மாட்டன் அண்ணா. ஆனா அவரால கீர்த்தி கூட இருக்கிற friendship எப்பவும் போல இருக்கிறமாதிரி பார்த்துக்குவன் சொல்லிவிட்டு message அழித்துவிட்டாள்.

 

சூர்யா குடும்பத்துடன் மாலை நேரத்தில் மதுரா இல்லம் வந்து சேர்ந்தான். வதனாவுக்கு பழைய ஞாபகங்கள் வர கண்கள் காவிரியை தத்தெடுத்தன. சூர்யா ஆறுதலாக அவளது கையைப் பற்றினான்.

 

“இருங்க வர்றன்” என்ற மதி வீட்டினுள் சென்று ஆரத்தி தட்டுடன் வந்தவர். மகன் மருமகள் பேரன் என மூவரையும் சேர்த்து ஆரத்தி எடுத்தவர் உள்ளே போகச் சொல்லிவிட்டு வள்ளியை அழைத்து தட்டை கொடுத்தார்.

 

சூர்யா “அம்மா களைப்பா இருக்கு றூமுக்கு போறன்மா. நைட் சாப்பிட எழுப்புங்கமா ” என்றவன் தன்னுடன் மகனையும் கூட்டிச் சென்றான். வதனா மதியுடன் சமையலறைக்குச் சென்றாள்.

 

சூர்யா ஆதியை அழைத்து வந்தவன் மகனுடன் சேர்ந்து குளித்தவன் கட்டிலில் மகனை அணைத்தபடி உறங்க ஆரம்பித்தான்.

 

சமையலறையில் வள்ளியை அனுப்பிவிட்டு மதியும் வதனாவும் பேசிக்கொண்டே சமைத்தனர்.

 

“வதனாமா இனிமேல் சூர்யாவ விட்டு போயிடாதமா பையன் ரொம்ப உடைஞ்சிபோயிட்டான்மா. வெளில எதையும் காட்டிக்கல. எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வைச்சி கஸ்ரப்பட்டான்மா.”

 

“மன்னிச்சிடுங்க அத்தை”

 

“மன்னிப்பெல்லாம் எதுக்குமா? அதை விடும்மா. உங்க அப்பா அம்மாவ மன்னிச்சிடலாமே மா”

 

“அவங்க என்ன என்னவேணாலும் சொல்லலாம். என்னோட புருஷன தப்பா சொன்னத என்னால மன்னிக்க முடியாது அத்தை. என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் பிளீஸ் அத்தை”

 

“சரிமா போய் சூர்யாவையும் ஆதியையும் சாப்ட கூட்டிட்டு வாம்மா”

 

“நீங்க போங்க அத்தை பிளீஸ். அவரு என்மேல ரொம்ப கோவமா இருக்காரு”

 

“சரிமா நானே கூட்டிட்டு வர்றன்” என்றவர் சூர்யாவை வரச்சொன்னார். சூர்யா மீண்டுமொருமுறை குளித்துவிட்டு ஆதியுடன் வந்தான். வதனா மதி அறையில் குளித்து புடவை மாற்றி வந்தாள். நால்வரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

சாப்பிட்டு முடிந்ததும் சூர்யா ஆதியிடம்

“ஆதிமா இன்னைக்கு பாட்டிகூட தூங்குங்க சரியா?”

 

“சரிப்பா குட்நைட்”

 

“குட்நைட் கண்ணா”

 

“குட்நைட் அம்மா “

 

“பாட்டிய தொந்தரவு பண்ணக்கூடாது சரியா? குட்நைட்டா ஆதிமா. “

 

“சதிமா. பாட்டி போலாம் எனக்கு தூக்கம் வதுது.”

 

“சரிடாமா வா போலாம்”

 

சூர்யா hallல் TV பார்த்துக்கொண்டிருக்க வதனா சமையலறையை ஒழுங்குபடுத்திவிட்டு வந்து சூர்யாக்கு மாத்திரை கொடுத்தாள். எதுவும் பேசாமல் போட்டுக்கொண்டான். 

சிறிது நேரத்திற்கு பிறகு “தூங்க போலாம் வதனா” என்றவன் கீழே இருந்த அறைக்குள் செல்ல வதனா எதுவும் பேசாமல் அவன் பின்னால் சென்றாள்.

 

சூர்யாவுக்கு கால் இன்னும் சரியாகவில்லை மாடியேறுவது கடினமாக இருந்தது. அதனால் கீழே ஒரு அறையில் தங்கினான். சூர்யா எதுவும் பேசாமல் பால்கனியில் போய் நின்றான். 

வதனாவும் எதுவும் பேசாமல் அவனருகில் நின்றாள். மௌனங்களே அங்கு நிலவியது. ஒரு பெருமூச்சு விட்ட சூர்யா

” ஆதி சொன்னான் என்ன பார்த்தும் கட்டிப்பிடிச்சி அழணும்னு நீ சொன்னதா சொன்னான்.ஏன் பண்ணல?”

 

“திரும்பி பார்த்த வதனா நான் ஏன் மாமாவதான் கட்டிப்பிடிச்சி அழணும்னு இருந்தன் சூர்யாவ இல்ல. “

 

“அப்பிடியா நீ விட்டுட்டு போனப்பவே உன்னோட மாமா செத்திட்டான். இப்போ இருக்கிறது ஆதியோட அப்பா சூர்யா”

 

கண்கள் நீரைப்பொழிய ஆரம்பித்தது.

“மன்னிச்சிடுங்க”

 

“யாருக்கு வேணும் மன்னிப்பு. நான் உன்மேல வைச்ச அன்பை ஏன் வதனா புருஞ்சிக்கல?”

 

“இல்ல….”

 

“பேசாத சூர்யாவுக்காக மட்டும்தான் நம்ம சேர்ந்திருக்கம். நீ போய் தூங்கு”

 

நான் உங்களுக்கு வேணாமா மாமா. கண்ணம்மானு ஒரு தடவை கூப்பிடுங்க மாமா என மனசுக்குள் தன்னவனுடன் பேசியவள் தூங்கச் சென்றாள். சிறிது நேரத்தில் வந்த சூர்யா அழுதபடி தூங்கிய வதனாவின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு தூங்கினான்.

 

மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது… மதியும் சூர்யாவிடம் வதனாவுடன் பேசச் சொன்னார். சூர்யாவோ எதுவும் பேசவில்லை. வதனாவிடம் சூர்யாகூட பேசுமா என்றார். அவளும் மௌனம் சாதித்தாள்.

 

நான்காம் நாள் மாலை சூர்யா hospital சென்று வந்தான்.

“டாக்டர் என்ன சொன்னாரு சூர்யா”

 

“இப்போ முழுசா குணமாகிட்டன்னு சொன்னாருமா. கால்ல எந்த பிரச்சனையும் இல்ல மாடி ஏறலாம்னு சொன்னாரு.”

 

“சரிப்பா சூர்யா”

 

“அம்மா நான் நாளைக்கு கம்பனிக்கு போறன்மா”

 

“இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு போ சூர்யா”

 

“பார்க்கலாம் மா” என்றவன் ஆதியுடன் விளையாடச் சென்றான். இரவானதும் சாப்பிட வந்தனர்.

 

சாப்டு முடிந்ததும் hallல் Tv பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மதி

“நான் போய் தூங்குறன்பா “

 

“சரிமா”

 

“அப்பா இன்னைக்கு பாத்திகூத தூங்கட்டுமா?”

 

“சரிடா கண்ணா போய் தூங்குங்க”

 

“குட்நைட் பா.”

 

“குட்நைட் கண்ணா”

 

“குட்நைட் மா”

 

“குட் நைட் கண்ணா”

 

“வதனா பால் எடுத்திட்டு மேல வா”

 

“சரி”

 

வதனாவும் பால் எடுத்திட்டு மேலே உள்ள தங்களது அறைக்குள் நான்கு வருடங்களுக்கு பின் நுழைந்தாள். அறைக்குள் வந்தவள் அவ் அறை சுவர் முழுவதிலும் இருந்த புகைப்படங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். ஆம், சுவர் முழுவதும் இருவரது படங்களே நிறைந்திருந்தன. அதைப் பார்த்து விம்மினாள் வதனா.

 

அவ் அறையில் தங்கள் இருவரது நினைவுகளையும் நினைத்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்தவள். சூர்யாவைப் பார்க்க அவனோ வழக்கம் போல பால்கனியில் நிலாவை பார்த்தபடி நின்றிருந்தான். அவனருகில் வந்த வதனா பாலை கொடுத்தாள். அதை வாங்கிக் குடித்தவன். பக்கத்திலிருந்த மேசையில் கிளாஸை வைத்தான்.

 

வதனா அறைக்குள் செல்ல திரும்பியவள் சூர்யா சொன்னதைக் கேட்டு சிலையென நின்றாள்.

 

 

சூர்யா என்ன சொன்னான்????

 

காத்திருப்புத் தொடரும்…………..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!