காத்திருப்பு : 48
கமலேஷை அழைத்த டாக்டர் அனு “வாழ்த்துக்கள் கமலேஷ் ரெட்டை குழந்தைங்க. ரொம்ப கவனமா பார்த்துக்கோ”
ஆனந்தத்தில் கமலேஷின் கண்கள் கலங்கின.
“ஓகே அனு கண்டிப்பா”
“தேவி பத்ரம் சரியா?”
“சரி டாக்டர்”
“போலாமா அனு”
“போலாம் கமலேஷ். மாத்திரைய டைம்க்கு எடுத்துக்கோங்க தேவி” என்றதும் மூவரும் விடை பெற்று வந்தனர்.
“அத்தான்”
“ரதிமா “
“நானும் இருக்கன் அண்ணா”
“ஐயோ நான் ஒண்ணும் சொல்லல சது. ரெண்டுபேரும் பத்திரமா போங்க நான் evng வர்றன்”
“சரி அத்தான்”
“என்ன அண்ணா ரீட் இல்லையா?”
“கண்டிப்பா evng வரும்போது வாங்கிட்டு வர்றன்”
“சரி அத்தான் நாங்க வர்றம்”
“சரிடாமா”
வீட்டில்……………
“சூர்யா உங்கூட தனிய பேசணும்”
“வாடா ” என்று தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான் சூர்யா.
“சொல்லு சக்தி”
“சூர்யா நானும் கீர்த்தியும் லவ் பண்றம்டா மச்சான்”
“என்னடா சொல்ற?”
“ஆமாடா நீதான் கீர்த்தி அப்பாகிட்ட பேசணும்”
“கண்டிப்பா பேசுறன் மச்சான். கல்யாணத்துக்கு அப்புறம் எங்கடா லண்டனா?”
“பார்க்லாம் மச்சான்”
“சரிடா போலாமா”
“சரிடா வா”
தேவியும் சதுவும் வீடு வந்து சேர்ந்தனர். வாசுவும் அப்போதுதான் வந்திருந்தான்.
“என்ன சொன்னாங்க தேவி?”
“வதனா அதுவந்து….நீயே சொல்லு சது”
“நானா….. நீயே சொல்லு தேவி”
“என்ன சொன்னாங்கனு சொல்லு தேவிமா ” என்றபடி தங்கையருகில் வந்தமர்ந்தான் சூர்யா.
“அண்ணா எனக்கு ரெட்டை குழந்தைங்க அண்ணா”என சொன்னவள் அண்ணனின் தோளில் சாய்ந்தாள். தங்கையின் தலையை வருடிக்கொடுத்தான் சூர்யா.
“wow super தேவி”
“தாயே மூணு உசுரையும் காப்பாத்தி குடுத்திடுமா” என்றார் மதி.
“sir நானும் தனாவும் போகட்டுமா?”
“எங்க வாசு?”
“வீட்டுக்கு”
“வாசு நீயும் சந்தனாவும் மூணு நாள்ல பிரான்ஸ் போறீங்க சரியா?”
“அங்க எதுக்கு sir?”
“அங்க புதுசா ஒரு கம்பனி start பண்ணலாம்னு இருக்கன் அதுதான். அதோட ஹனிமூனும் கொண்டாடிட்டு வாங்க”
“sir….”
“எதுவும் சொல்ல வேணாம் போயிட்டு வாங்க “
“சரி sir”
“அண்ணா சது enjoy பண்ணிட்டு வாங்க”
“சும்மா இரு வதனா”
“ஹா……ஹா…..”
“வாசு நீங்க போற வரைக்கும் இங்கேயே தங்கிக்கோங்க. “
“ஓகே sir.”
“சூர்யா நான் நாளைக்கு லண்டன் போறன் அப்பா வரச்சொல்லி போன் பண்ணிட்டே இருக்காரு”
“ஓகே கீர்த்தி நீ மட்டுமா போற?”
“ஆமா ஏன் சூர்யா?”
“சக்தி வரலயா?”
“அது அப்புறம் வருவாங்க சூர்யா”
“சரி கீர்த்தி பத்திரமா போகணும் போயிட்டு போன் பண்ணு”
“சரி சூர்யா”
“மாப்பிள்ளை நாங்களும் ஊருக்கு போறம்”
“எதுக்கு மாமா கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்தானே”
“எங்க பொண்ணு பேசவேமாட்டன்னு இருக்கா பேரன் நல்லா பேசுறான்தான் ஆனா பொண்ணு பேசாம பக்கத்தில இருக்கிறது கஸ்ரமா இருக்கு அதுதான்”
சூர்யா வதனாவைப் பார்க்க வதனா எதுவும் பேசாமல் நின்றாள்.
“மூணுநாள் கழிச்சு போங்க மாமா. நாளைக்கு உங்க பொண்ணு பேசுவா மாமா”
“மாமா”
“பேசாத வது”
“ஆதி நதி வாங்க போய் குளிக்கலாம்” என்றபடி பிள்ளைகளைக் கூட்டிட்சு அறைக்குள் சென்றாள் வதனா.
தேவியும் களைப்பாய் இருக்க தூங்கச்சென்றாள். கீர்த்தியும் சக்தியும் வெளியே சென்றனர். வாசுவும் சதுவும் அவர்கள் அறைக்குள் செல்ல சூர்யா தனது மாமனாருடன் பேசிக்கொண்டிருந்தான். மதியும் தங்கம்மாவும் சமையலறைக்குள் சென்றனர்.
கடற்கரையோரத்தில்………….
சக்தி தோளில் சாய்ந்தவாறு இருந்தாள் கீர்த்தி
“கீர்த்துமா போயித்தானாகணுமாடா?”
“ஆமா சக்தி போயிட்டு அப்பாகிட்ட நம்ம விசயத்தை சொல்லிட்டுவன். நீங்களும் என்கூட வர்றீங்களா சக்தி?”
“இப்போ இங்க சூர்யா குடும்பத்துக்கு விக்கியால ஆபத்து இருக்கு கீர்த்தி என்னால விட்டுட்டு வர முடியாது”
“சரி சக்தி அப்போ நான் போயிட்டு வர்றன். but உங்களை ரொம்ப miss பண்ணுவன் சக்தி”
“நானும்தான்டா செல்லம்”
“டைம்மாச்சி சக்தி போலாமா?”
“போலாம் கீர்த்தி”
hospital…………
“டாக்டர் உங்கள chief டாக்டர் வரச்சொன்னாங்க”
“சரி ” என்ற கமலேஷ் chief டாக்டர் அறைக்குள் நுழைந்தான்.
“hi doctor “
“hello கமலேஷ்”
“என்ன கூப்டீங்களா டாக்டர்?”
“ஆமா கமலேஷ் இந்தியாவில இருக்கிற ஒரு hospitalகு நீங்க போகணும் “
“எப்போ டாக்டர்?”
“மூணு நாளைக்கு அப்புறம்”
“டாக்டர் என்னோட wife இப்போ கன்சீவா இருக்காங்க”
“அங்க நீங்க போயாக வேண்டிய நிலமை கமலேஷ். வேணும்னா உங்க wife உங்ககூடவே கூட்டிட்டு போங்க. no problem “
“நான் வீட்ல பேசிட்டு சொல்றன் டாக்டர்”
“சரி கமலேஷ்”
“ok டாக்டர் நான் கிளம்புறன்”
“ok கமலேஷ்”
மாலையானதும் சுவீட்ஸை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான் கமலேஷ்.
கமலேஷை அணைத்து வாழ்த்துச்சொன்னான் சூர்யா.
சுவீட் பொக்ஸை வாங்க ஆதியும் தீராவும் கைநீட்டினர். கமலேஷ் யாரிடம் கொடுப்பது என குழம்பி நின்றான். அதைப் பார்த்த சூர்யாய சிரிக்க ஆதி
“மாமா நீங்க நதிமாகிட்டையே குடுங்க” என்றான்.
“இல்ல அப்பா அத்தான்கிட்ட குடுங்க”
“இல்ல நதிகிட்ட”
“இல்ல அத்தான்கிட்ட”
“ரெண்டுபேருக்கும் இல்ல எனக்குத்தான் ” என்றபடி சுவீட் பொக்ஸை வாங்கினாள் சது.
“அத்தை நதிக்கிட்ட குடுங்க”
“முடியாது ஆதி பையா”
“அத்தான் எனக்கு சுவீட் வேணும்”
“இருடாமா ” என்றவன் சதுவிடம் சென்றான். அனைவரும் இவர்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.
“சது அத்தை நீங்க பெரிய பொண்ணுதானே. பாவம் என்னோட நதிமா பிளீஸ் அவகிட்ட குடுங்க அத்தை”
“முடியாது ஆதி உனக்கு வேணும்னா தரலாம் நதிக்கு முடியாது”
“நதிக்கு இல்லாதது எனக்கு தேவையில்லை” என்றவன் சமையலறைக்கு சென்றான் அங்கே குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்த மதியம் மதி செய்த சுவீட்டை எடுத்து வந்து நதிக்கு கொடுத்தான் ஆதி.
“நதிமா இது ரொம்ப டேஸ்டா இருக்கும். இதை சாப்பிடுங்க சரியா?”
“சரி அத்தான்” என்றவள் பேசாமல் சாப்டாள்.
இவர்கள் அன்பை பார்த்த அனைவரும் சிலிர்த்தனர். சது இருவருக்கும் அருகில் வந்து மன்னிப்பு கேட்டு கமலேஷ் வாங்கிவந்த சுவீட்டை கொடுத்தாள்.
அனைவரும் hallல் இருக்க வதனா மட்டும் கோபத்தில் அறையினுள்ளே இருந்தாள். யார்வந்து கூப்டும் வரவேயில்லை. அப்போது
“வதனா” என்ற அழைப்பை கேட்டவள் கண்ணில் கண்ணீருடன் கீழே வந்தாள்.
வதனாவை அழைத்தது யார்????
காத்திருப்புத் தொடரும்…………….