ருத்ரப்ரணவி அந்த மிகப் பெரிய போர்ம் மெத்தையில் உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
அவ்வப்போது தனக்கருகே இருந்த ஐ ஃபோனை எடுத்து, எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது முகமோ ஒரே பரபரப்பாக இருந்தது.
‘எப்பதோடா மணி பன்னிரெண்டைத் தொடும்.’ என்று காத்திருந்தாள்.
பிறக்கப் போகும் புதிய நாளுக்காக. அது அவளது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தின் ஆரம்பம். ஆம் அவளது பிறந்தநாள். ஸ்வீட் சிக்ஸ்டீன். அந்த வயதுக்குரிய அழகும், ஆர்ப்பாட்டமும் அவளிடம் கொட்டிக் கிடந்தது.
எப்பொழுதும் போல் தாய், தந்தையின் வாழ்த்துக்காகத் தான் தூங்காமல் காத்துக் கொண்டிருந்தாள் ருத்ரப்ரணவி.
அவளை ஏமாற்றாமல் சரியாக பன்னிரண்டு மணிக்கு மூர்த்தியும் திலகாவும் வந்தனர்.
“ஹாப்பி பர்த்டே பேபி.”என்றவாறே ஒரு அழகிய கவர் சுற்றிய கிஃப்ட் பாக்ஸை நீட்டியவாறே வாழ்த்துக் கூறினார் மூர்த்தி.
************************
இரவு முழுவதும் ஒரு வாழ்த்திற்காக காத்திருந்த ருத்ரப்ரணவியோ, அழுது வீங்கிய கண்களுடன், ஃபோனை எடுத்து அந்த எண்ணை அழுத்தினாள்.
ஒரு வித பயமும். எதிர்பார்ப்புமாக காத்திருக்க.
அந்தப் பக்கமோ இரண்டு, மூன்று முறை கட் செய்யப்பட்டது.
நிராசையில் துடித்த மனதை அடக்கி, ‘இன்னும் ஒரு முறை அழைப்போம்.’என்று மீண்டும் ஒரு முறை அழைத்தாள்.
இந்த முறை அவளை ஏமாற்றாமல் அந்தப் பக்கம் ஃபோனை எடுத்திருந்தாலும், அவளைப் பேச விடாமல்,”அறிவில்ல! ஃபோனை கட் பண்ணா பிஸியா இருக்காங்கனு தெரிய வேண்டாமா?” என்றவனின் சினத்தில் பயந்தவளோ, “ஹலோ! நான்…” என்று ஏதோ கூற முயன்றாள் ருத்ரப்ரணவி.
அவனோ போனை வைத்துவிட.
‘அம்மா ! ஏன் மா என்னை விட்டுட்டுப் போனீங்க. இப்போ பாருங்க நான் தனிமையில் தவிக்கிறேன்.’ என்னவளின் கதறல் அந்த நான்கு சுவற்றிற்குள் மட்டுமே ஒலித்தது.