இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

4.8
(23)

Episode – 17

 

தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.

 

“என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,

 

மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.

 

தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து நின்று, தமயந்தி தங்கி இருக்கும் வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

அப்படியே அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அவளின் வீட்டைப் பார்த்தவாறே உறங்கியும் போனான்.

 

( இவன் இப்படியெல்லாம் பண்றான் மக்காஸ். ஆனா கேட்டா காதல் இல்லைன்னு சொல்றான். எனக்கே மண்டை காய வைக்கிறானே மக்காஸ் இவன், இந்த தீரனை என்ன பண்ணுவம்….) 

 

மறு நாள் அவன் கண் விழித்தது தமயந்தியின் குரலைக் கேட்டுத் தான்.

 

இனிய குரலில் அவள் மனம் உருகி கடவுளை வேண்டிப் பாடல் பாட,

 

அந்தக் குரலின் இனிமையை ஆழ்ந்து அனுபவித்தவாறு,

 

சற்று நேரம் அப்படியே கண்களை மூடி அமர்ந்து இருந்தவன், 

மனதிலும் ஒரு வித அமைதி உருவாகி இருந்தது.

 

அவளை வெளியில் பாடக் கூடாது என கட்டளை இட்டதனால், அவள் தனது வீட்டுக்குள் பாடிக் கொண்டு இருந்தாள்.

 

அவன் பால்கனியில் நின்று கொண்டிருந்ததனால், இன்று அவனுக்கும் அவளின் பாடல் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

 

அவள் பாடி முடித்து வெளியில் வரும் வரையிலும் அப்படியே நின்று கொண்டு இருந்தவன்,அவள் வெளியில் வரவும், ஆர்வமாக அவளின் முகம் பார்த்தான்.

 

அவன் கொடுத்த அதே பச்சை கலர் சாயம் போன புடவையில், எந்த வித ஒப்பனைகளும் இன்றி பேரழகு தேவதையாக வந்தவளைக் கண்டு, முகம் மலர்ந்தவன், அவள் தோட்டத்தில் அங்கும் இங்கும் திரிந்து பூக்கள் பறித்து, மாலை கட்டும் வரையும், அங்கேயே நின்று இருந்தான்.

 

தமயந்தியின் உள்ளுணர்வு, அவளை யாரோ கண் காணிக்கிறார்கள் என மீண்டும் மீண்டும் கூற,

 

அவளின் பார்வை, அவளையும் அறியாது, பால்கனிப் பக்கம் போனது.

 

அங்கே, விடி விளக்கின் ஒளியில் தெரிந்த தீரனைக் கண்டு அவள் சற்று மிரண்டு தான் போனாள்.

 

அவனோ, அவள் தன்னைக் கண்டதும், முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டவன்,

 

சைகையால் தான் கீழே வருவதாக காட்டியவன்,

 

அடுத்த பத்து நிமிஷத்தில் ரெடியாகி கீழே வந்தான்.

 

அவன் வரவும், அவள் மாலைகளை கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது.

 

அவனோ, எதுவும் பேசாது அவளை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்தவன்,

 

“என்ன மேடம், பூமாலை கட்டுறீங்க 

போல?, யார கேட்டு தோட்டத்தில பூ பறிச்சீங்க?” என கேட்டான்.

 

அதற்கு அவள் பதில் கூறும் முன்பாக,

 

விழிகளில் பளபளப்புடன், “இது, உன்னோட வருங்கால புருஷன் வீடுன்னு நினைப்போ உனக்கு?” என அடுத்துக் கேட்கவும்,

 

விழி விரித்து அவனை நோக்கியவள், 

 

“அப்படி எல்லாம் இல்ல சார்  சாமிக்கு போடத் தான் பூ பறிச்சனே தவிர, நீங்க சொல்ற எந்த எண்ணமும் கனவுல கூட எனக்கு வந்தது இல்லை. வரவும் வராது.” 

என அவசரமாக கூறினாள் அவள்.

 

“ம்க்கும்…. அப்படியே இருந்தா 

எல்லாத்துக்கும் நல்லது.”என வெளியில் திமிராக கூறியவன், 

 

மனசுக்குள், “இனி மேல் உன் மனசுக்குள்ள அந்த எண்ணத்தை வர வைக்கிறது தான் என்னோட முதல் வேலை.” எனவும் எதிர்மாறாக எண்ணிக் கொண்டான்.

 

கட்டிய மாலைகளை சாமிப் 

படத்துக்காக எடுத்து வைத்தவள்,

 

நிமிர்ந்து அவனைப் பார்க்க,

அவள் பார்க்கும் வரைக்கும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

அவள் பார்க்கவும், பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

 

அவளும், “போகலாமா சார்?” என கேட்க,

 

“ம்ம்ம்ம்….” என்றவன், ஓட ஆரம்பிக்க, 

 

அவளும் சேலையை, தூக்கிக் கட்டிக் கொண்டு, அவனின் பின்னாக ஓட ஆரம்பித்தாள்.

 

நின்று ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

 

“நீ ஓடி வரத் தேவை இல்ல. இங்கயே வெயிட் பண்ணு.” எனக் கூறி விட்டு, ஓட ஆரம்பிக்க,

 

“என்னடா இது இப்படி ஒரு திடீர் மாற்றம்?, என்னாச்சு இவருக்கு?” என எண்ணியவளும்அமைதியாக அங்கே உள்ள கல்லில் அமர்ந்து, சுற்றி வர உள்ள தோட்டத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

 

அவளை அமரச் சொன்னவன், அவளின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டு தான் ஓடவே ஆரம்பித்தான்.

 

அவள், தன்னைப் பார்க்காது சுற்றி உள்ளவற்றில் கவனம் செலுத்தவும்,

அவனுக்குள் அப்படி ஒரு கோபம் முகிழ்த்தது.

 

 “இங்க நான் ஒருத்தன் ஜாக்கிங் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்னைப் பார்க்காம அப்படி என்னத்த, சுத்திச் சுத்திப் பார்க்கிறா….?”

 

“அதே தோட்டம் தானே. ஏதோ புதுசா பார்க்கிறது போல பார்க்கிறா. இவள….” என பல்லைக் கடித்தவன்,

 

அடுத்த ரவுண்டு ஓடி முடிந்து அவள் அருகில் வந்து நின்றான்.

 

திடுமென,  அவன் வந்து அருகில் நிற்கவும், அவள் பயந்து போய் எழுந்து நிற்க,

 

“ம்க்கும்….” என்றவாறு அவளை நோக்கி கையை நீட்டினான் அவன்.

 

அவளும் அவன் கேட்பது அறிந்து துவாலையை அவனிடம் கொடுத்தாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டு துடைத்தவன், இயல்பாக அவளின் தோளில் துவாலையைப் போட்டு விட்டு,

 

“நான் இப்போ வரைக்கும் எத்தன ரவுண்டு ஓடி இருக்கேன் தமயந்தி?” என கேட்டான்.

 

அவளோ, மலங்க மலங்க விழித்து விட்டு, 

 

“எப்படியும், இரண்டு ரவுண்ட் தான் ஓடி இருப்பார். அதுக்கு மேல கண்டிப்பா போய் இருக்காது.” என முடிவு பண்ணியவள்,

 

மென்குரலில், “இரண்டு ரவுண்டு சார்.” என கூற,

 

அவளை முறைத்துப் பார்த்தவன்,

 

“நினைச்சன், நீ தப்பா சொல்லுவாய்னு, நீ கவனத்த என் மேல வைச்சா தானே. ஏனோ தானோன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்காய். உன்ன….” என பல்லைக் கடித்தவன்,

 

அவள் வழக்கம் போல மிரண்டு விழிக்கவும், 

 

“இந்தக் கண்ணு தான் எனக்கு எமன், அப்படியே ஆள உள்ள இழுக்குது.” என முணு முணுத்துக் கொண்டு,

 

அவளின் அருகே நெருங்கி நின்றான்.

 

அவளோ, அவனின் செய்கையில் பதட்டம் கொண்டு, எச்சில் விழுங்கிய படி அவனை நிமிர்ந்து பார்க்க,

 

“ம்ப்ச்…. நான் உன்னை பிடிச்சுத் தின்னுட மாட்டன்.” என கேலியாக கூறியவன்,

 

அவளின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, விரல்களால் அந்தக் கண்களை சுட்டிக் காட்டி,

 

“இந்த கண்ணு நான் ஜோக்கிங் பண்ணி முடிக்கும் வரைக்கும் என்ன மட்டும் தான் பார்த்துக் கொண்டு இருக்கணும். அத விட்டுட்டு அங்க…. இங்க…. போச்சு, அப்புறம் தெரியும்.” என மிரட்டலாக கூறியவன்,

 

அவளை விட்டு விலகி நின்று “என்ன சொன்னது புரிஞ்சுதா?” என கேட்டான்.

 

அவனின் வியர்வை வாசம் அவளது நாசியில் பட்டு ஏதோ செய்ய,

 

அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கொண்டு,

 

குத்து மதிப்பாக எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தாள்.

 

அவனும், “குட்….” என்றவாறு மீண்டும் ஓட ஆரம்பிக்க,

 

தமயந்தியும், மனசுக்குள் அவனை ஒரு முறை திட்டி விட்டு, 

 

அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,

 

அவளை அடிக்கடி செக் பண்ணுகிறேன் என்ற பெயரில் பார்த்து வைத்தவன்,

 

வழக்கத்தை விட மூன்று ரவுண்டுகள் அதிகமாகவே ஓடினான்.

 

ஆனால் அப்போதும் அவனது மனம், 

“சே…. என்ன இது டைம் இப்படி சீக்கிரமா முடிஞ்சு போச்சு. இப்போ என்ன செய்ய?” என தான் எண்ணிக் கொண்டது.

 

ஜாக்கிங் முடிய அவளின் அருகே வந்தவன்,

 

மீண்டும் எண்ணிக்கையைக் கேட்க,

இந்த முறை உடனே சரியாக கூறியவள்,

 

“ஓகேவா சார்?” என்பது போல பார்க்க,

 

அவனோ, அவளையே ஆழ்ந்து பார்த்தவன், 

 

“ம்ம்ம்ம்…. கரெக்ட் தான்.” என கூற, 

அவளும், “ஓகே சார், அப்போ நான் கிளம்பட்டுமா?” என கேட்டாள்.

 

அவனோ, வெறுமனே தலையை மட்டும் ஆட்ட,

 

அவளும் விட்டால் போதும் என ஓடி விட்டாள்.

 

ஓடும் போது தான்,

அவளது சேலையில் இருந்த சிறு கிழிசல் அவனது கண்களுக்கு பட்டது.

 

அவளைத் தான் கண்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் அவள் அணிந்து இருந்த ஆடையை நினைத்துப் பார்த்தான் அவன்.

 

அவளின் ஆடைகள் அனைத்தும் சிம்பிளாகவும், அத்துணை நேர்த்தியாகவும் இருந்தது நினைவடுக்கில் வந்து போனது.

 

அப்படிப் பட்டவள் சிறு சுணக்கமும் இன்றி, அவன் கொடுத்த பழைய சேலையை அணிந்து இருந்தாள்.

 

இப்போது அவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தவனுக்கு பெரு மூச்சு ஒன்று வெளியாக,

உடனடியாக அவளுக்கான நல்ல ஆடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என அவனின் மனம் பர பரத்தது.

 

அடுத்த கணம், அவனது மனசாட்சி, 

“நீ செய்து வைச்சு இருக்கிற வேலைக்கு, அவ நீ கொடுத்த ட்ரெஸ்ச  வாங்கிட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பா.” என இடித்துரைக்க,

 

“ம்ப்ச்…. எல்லாம் எனக்கு தெரியும். நானே பார்த்துக்கிறன். அவளுக்கு எப்படி அந்த ட்ரெஸ்ச கொடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ அடங்கி இரு.” என மனதை அடக்கி வைத்தவன்,

 

தனது வேலைகளை பார்க்க கிளம்பி விட்டான்.

 

அதன் பின்பு நேரம் இறக்கை கட்டிப் பறக்க,

 

தீரன் சொன்னபடியே, அவனது ஆபீஸ்ற்கு சென்று பார்கவ்வை சந்தித்தான்.

 

அவனும் தீரனைக் கண்டதும், ஓடி வந்து அணைத்தவன்,

 

“மச்சி, மத்தவங்களுக்கு எல்லாம் வயசு ஏற ஏற…. அழகும், பாடி மெயின்டெயின் பண்றதும் குறைஞ்சு கொண்டே போகும். ஆனா நீ மட்டும் எப்படி மச்சி அப்படியே ஹாண்ட்சமா இருக்காய்.” என கேட்க,

 

அவனைப் பார்த்து பொய்யாக முறைத்தவன், 

 

“டேய் அரட்டை போதும்டா. என்ன சொல்றீயே…. உன்னோட கன்னக் குழி அழகுக்காக இன்னுமே உன் பின்னாடி நிறைய பொண்ணுங்க சுத்துறதா காத்து வாக்குல செய்தி வந்துச்சுடா. என் அருமைத் தங்கச்சி, அதான்டா உன் மனைவி, உன்னை மத்த பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த ரொம்ப போராடுறான்னு கேள்விப்பட்டன். உண்மையாவாடா?” என கேட்க,

 

அவனோ, தீரனையே வாய் பிளந்து பார்த்தவன், 

 

“உனக்கு இப்படி எல்லாம் பேச வருமாடா?, நீ இப்படி கேலி பேசியோ, சிரிச்சோ நான் பார்த்ததே இல்லையேடா.” என கேட்டவன்,

 

“ஆனா மச்சி நீ சொல்றது உண்மைடா. டாக்டரம்மாவை விரும்பி, உன் கிட்ட சொல்லி போராடி நீ எங்க இரண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வைச்சாய். இப்போ மூணு மாசம் ஆகுது. ஆனா நான் இன்னும் கன்னிப் பையன் தான்டா. இரண்டு பேரும் வேலை வேலைன்னு ஓடுறம். பேசாம அவ ஹாஸ்பிட்டலயும், நான் வேலையையும் கலியாணம் பண்ணி இருக்கலாம்டா. என் புழப்பு இப்படி இருக்குடா. சொன்னா வெட்கம்டா ஒரு கிஸ்சுக்கே இங்க வழி இல்லடா.” என கூறியவனின் பேச்சில் சத்தமாக சிரித்து விட்டான் தீரன்.

 

அவன் சிரிப்பதை முறைத்துப் பார்த்தவன், “என் வயித்தெரிச்சல் உனக்கு சிரிப்பா இருக்காடா?” என அவன் எகிற,

 

“என்னடா செய்ய சிரிப்பு வருதே….” என கூறிய தீரன், 

 

“அப்புறம் கயல் விழி எப்படிடா இருக்கா?” என  கேட்கவும்,

பார்கவ் முகத்தில் அப்படி ஒரு சாந்தமும், காதலும் போட்டி போட,

 

“என் வாழ்க்கையில கிடைச்ச பொக்கிஷம்டா அவ. என் வெறுமையான வாழ்க்கையில வந்த விடி வெள்ளிடா அவ. ஆனா ரொம்ப வெகுளிடா. பயந்தவடா. எப்படித் தான் டாக்டர் ஆனாளோ….”

 

“ஹ்ம்ம்…. அவ உன்னை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கா. பத்திரமா பார்த்துக் கோடா.” என்றவனுக்கு முதன் முறை, ஒரு உண்மைக் காதலனின் உணர்வுகள் புரிந்தது. 

 

பார்கவ்வும் பதிலுக்கு, “அவ என்னோட உயிர்டா. அவள நான் எந்தக் காரணம் கொண்டும் இழக்க மாட்டன்டா.” என உறுதியாக கூறியவன்.

 

“மச்சி, நீ இந்த ஊருக்கு வந்ததுல இருந்து தான் உன்ன எனக்கு தெரியும்டா. நீயும் உன்ன பத்தி சொல்ல விரும்பல, நானும் கேட்கலடா. ஆனா இப்போ யோசிக்கும் போது, அப்பவே உன்ன பத்தி கேட்டு இருக்கணும்னு தோணுதுடா. டூ லேட் தான். பரவாயில்ல சொல்லுடா.” என கேட்கவும், 

 

அது வரையும், புன்னகை செய்து கொண்டு இருந்தவனின் முகம் இறுக்கமாக மாற,

 

“சொல்றேன்டா. ஆனா, நீ இத எப்படி எடுத்துப்பாய்னு தெரியல.” என பீடிகையோடு ஆரம்பித்தவன், 

 

தனது வாழ்க்கையில், அதுவரையும் யாரிடமும் சொல்லாத மொத்தக் கதையையும் சொல்லி முடிக்க,

 

கதை கேட்ட பார்கவ்வின் கண்கள் கூட சற்று அதிர்ச்சியில் விரிந்து பின்பு பழைய நிலைக்கு வந்தது.

 

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, அவனின் கையை தட்டிக் கொடுத்தவன்,

 

“வாழ்க்கையில நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காய்னு எனக்கு தெரியாமல்ப் போச்சுதுடா. ரியலி யூ ஆர் கிரேட்டா. உன்ன மாதிரி யாரும் இருக்க மாட்டாங்கடா. அப்போ நீ சொன்ன அந்தப் பொண்ணு….” என பார்கவ் இழுக்க,

 

“ம்ம்ம்…. தமயந்தி தான்டா.” என பெரு மூச்சுடன் கூறினான் தீரன்.

 

“ஹ்ம்ம்…. பாவம்டா அந்தப் பொண்ணு. கண்டிப்பா ஒரு நாள் அவ உன்ன புரிஞ்சுப்பாடா.” என கூறியவனைக் கூர்ந்து பார்த்த தீரன்,

 

“அவ என்னப் புரிஞ்சுக்கலன்னாலும் பரவாயில்லடா. நான் நினைச்சத செய்தே ஆவேன்டா.” என அழுத்தமான குரலில் கூறினான்.

 

அவனைக் கவலையாக பார்த்தவன், 

“அப்போ உன் வாழ்க்கைடா…. உனக்குன்னு அன்பான மனைவி, குழந்தை, குடும்பம் வேணாமாடா?”

 

“ம்ப்ச்…. அதெல்லாம் நடக்குற நேரம் நடக்கும்டா. பார்ப்பம்.” என கூறியவனை,

 

ஆழ்ந்து பார்த்த பார்கவ், 

“உன் கண்ணுல காதல் வந்ததுக்கான அறிகுறி தெரியுதடா.” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்,

 

வெளியில், “உனக்கு எப்போ என்ன, ஹெல்ப் வேணுமென்டாலும் என்ன கேளுடா. உனக்காக நாங்க இரண்டு பேரும் எப்பவும் இருக்கம்டா…. இல்லடா மாறி சொல்லிட்டேன்டா. மூணு பேர்டா.” என கூறினான்.

 

“அது யாருடா அந்த மூணாவது ஆளு?” என தீரன் புருவம் சுருக்க,

 

“நல்லா யோசிச்சுப் பாரு…. உனக்கு நெருக்கமான இன்னொரு உறவுடா….” என பார்கவ் கூற,

 

புரிந்து கொண்ட தீரனும், “புரிஞ்சிடுச்சுடா.”என மென் புன்னகை உடன் கூறி விட்டு,

 

அவனிடம் மேலும் சில விஷயங்கள் பேசி விட்டு விடை பெற்று செல்ல,

பார்கவ்வும், நண்பனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டான்.

 

தீரன், அப்படியே ஆபீஸ்ற்கு சென்றவன்,

 

தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

 

அவனுக்குள் ஆயிரம் குழப்பங்கள், எண்ணங்கள், கவலைகள்…. ஆனால் அனைத்தும் வந்து நின்ற கடைசி இடம் என்னவோ தமயந்தி தான்.

 

அவளின் எண்ணங்கள் அவனின் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.

 

“சே…. என்னடா இது. அவ நினைப்பாவே இருக்கு. முதல்ல அவளுக்கு நல்ல ட்ரெஸ் வாங்கிக் கொடுக்கணும், அதுக்கு என்ன பண்ணலாம்?” என எண்ணியவனின் பார்வை காலெண்டர் பக்கம் போக,

 

அவனின் உதட்டில் புன்னகை ஒன்று உருவாகி மறைந்தது.

 

“யெஸ்…. இது தான் சரியான வழி.” என முணு முணுத்தவன்,

 

அதன் படியே செய்ய எண்ணி தனது பி. ஏவை அழைத்து, அவருக்கான கட்டளைகள் சிலவற்றை அதிரடியாக கூறி விட்டு,

 

நிம்மதியாக கதிரையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடியவனின் கண்களுக்குள் வந்து நின்று புன்னகை செய்தாள் தமயந்தி.

 

மறு நாள் அவன் ஏற்பாடு செய்தவை அனைத்தும் அச்சுப் பிசகாது நிகழ்ந்த அதே நேரம் அவன் எதிர்பாராத நிகழ்வு ஒன்றும் நடந்தது.

 

அதன் விளைவாய் அவன் மனதில், தமயந்தி மீது இலை மறை காயாய் உருவாகி இருந்த காதலும் அவனுக்கு வெட்ட வெளிச்சம் ஆனது.

 

அப்படி என்ன நிகழ்வு நடந்து இருக்கும்?

 

தீரன் காதல் நிறைவேறுமா?

 

தமயந்திக்கு தீரன் வாழ்க்கையில் நடந்த விடயங்கள் தெரிய வருமா?

 

அவனது வாழ்வில் மாற்றம் உண்டாகுமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

இந்த எபில குட்டி க்ளு ஒண்ணு இருக்கு. கண்டு பிடிச்சு வைங்க. அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும்..

 

அடுத்த எபி நாளைக்கு வரும்.

 

பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் 😍😍

 

இனி கதை விரைவாக நகரும் மக்காஸ் 💖💖

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17”

    1. Sorrydama…. Ini mudincha varai ovvoru naalum epi poda try panrenma… Okca… Unga supportai thodarnthu kodunga 😍😍😍😍😍nanrima💖💖💖💖

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!