கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12

4.4
(7)

அத்தியாயம் 12

 

அதிகாலையிலேயே கவி எந்திரிச்சு குளிச்சிட்டு சமையல் அறையில் சமையல் செய்பவருக்கு உதவிக் கொண்டு இருந்தாள். ராஜன் ஐயா தான் முதலில் கவியைப் பார்த்து விட்டு சந்தோஷமாக சென்று அமர்ந்தார். அவருக்கு கவி டீ கொண்டு போய் கொடுத்தாள். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.

 

பின்னர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று விட்டாள். சோழனும் அப்போது தான் எழுந்தான். அறையில் கவியைத் தேடினான், அங்கே இல்லை அதனால் அவனே எங்கே ஆச்சு உட்கார்ந்து அழுதுட்டு இருப்பா அப்படின்னு நினைச்சிட்டுக் குளிக்க போய்டுறான்.

 

அப்புறம் சோழன் குளித்து விட்டு ரெடியாகி கீழே வந்தான். அவன் வருவதைப் பார்த்ததும் கவியும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அவளை கவனிக்காமல் எனக்கு எதுவும் வேண்டாம்கா என்று பாதி சொல்லி விட்டு அவளைப் பார்த்ததும் நிறுத்தி விட்டான்.

 

இரண்டு நிமிடம் அப்படியே அவளை ஆச்சிரியமாகப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ காஃபியை எடுத்துக் கொண்டான். கவியும் உள்ளே சென்று விட்டாள். சோழன் அமைதியாக காஃபியைக்‌ குடித்தான். ராஜன் ஐயா தான் இதை எல்லாம் பார்த்து சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டார்.

 

சேரனும் அப்போது தான் எழுந்து வந்தான். கவி அவனுக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அவனும் கவியை சோழனைப் போல் ஆச்சரியமாக பார்த்தான். இருந்தும் எதுவும் கூறாமல் அமைதியாக காஃபியை எடுத்துக் கொண்டான்.

 

சோழன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான். ராஜன் ஐயாவும் வயலைப்‌ பார்க்கணும் என்று போய்டுறார். சேரனும் 9 மணிக்கு மேல் தன் தொழிற்சாலைக்கு கிளம்பி போய்டுறான். வீட்டில் கவியும் சமையல் செய்யும் பெண்ணும் மட்டுமே இருந்தனர். இவர்கள் இல்லாமல் வெளியே தோட்டத்தில் வேலை செய்பவரும் காவலாளியும் இருந்தார்கள்.

 

சோழன் தான் யோசித்துக் கொண்டே தன் கார்மன்ஸில் அவனுடைய அறையில்‌ அமர்ந்து இருந்தான். நான் நைட் அப்படி கோவமா பேசினதால தான் இன்னைக்கு இப்படி நடந்துக்கிச்சா அந்த பொண்ணு அப்படின்னு நினைச்சிட்டு இருக்கான். இனிமே மறுபடியும் அழுது கொண்டு இருந்தாள்னா இதே போல பண்ணிட வேண்டியது தான் என்று தனக்குள்ளே பேசி முடிச்சிட்டு வேலையைப் பார்க்கிறான்.

 

சோழன் கார்மென்ட்ஸ் அந்த ஏரியாவில் மிகவும் பெயர் பெற்றது. அதை சோழன் தான் நடத்தி வருகிறான். அந்த கார்மென்ஸினால் நிறைய பெண்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் சுற்றி இருக்கும் அனைத்து ஊர்களிலும் சோழன் ஃபேமஸாக இருந்தான்.

 

சோழனுக்கு விவசாயத்திலும் ஆர்வம் இருந்தது. அதனால் தான் ஊரை விட்டு செல்லாமல் அங்கேயே தொழிலும் பார்த்து வந்தான்.

சேரனும் வெளி ஊரில் டெக்ஸ்டைல் தொழிற்சாலை வைத்து பாத்துட்டு இருக்கான். அது கூட டெக்ஸ்டைல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வைத்து அதையும் கவனித்து வந்தான்.

 

கவி தான் யாரும் இல்லாத நேரத்தில் கீதாவை நினைத்து கவலையுடன் இருப்பாள். மற்றவர்கள் முன்னிலையில் எதுவும் காட்டாமல் சாதரணமாக இருந்தாள். ஆனால் சோழன் கவியை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அதே போல் ராஜன் ஐயாவும் இருவரையுமே கவனித்துக் கொண்டு இருந்தார்.

 

அன்று மாலை போல் ராஜன் ஐயா ஊர்க்காரர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது தான் சோழன் வீட்டினுள் நுழைந்தான். நேராக தன் அறையை நோக்கி சென்று விட்டான் சோழன். அங்கே சென்று கை கால் கழுவி விட்டு கீழே வந்து பார்த்தால் கவி எங்கேயும் இல்லை.

 

வெளியேயும் ராஜன் மற்றும் ஊர்மக்கள் தான் இருந்தனர். சமையலறையிலும் கவியைக் காணவில்லை. தோட்டத்தில் சென்று பார்த்தால் அங்கே மரத்தடியில் வானை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள். அதைப் பார்த்தவுடன் சோழன் சத்தமாக ஃபோன் பேசுவதை போல் நடித்தான்.

 

அவனின் சத்தத்தைக் கேட்டு கவி வேகமாக கண்ணைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். ஆனால் சோழன் அதைக் கவனித்து விட்டான். பின்னர் சோஃபாவில் வந்து யோசனையோடு அமர்ந்தான்.

 

கவியும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள். அப்போது சரியாக சோழனின் ஃபோனுக்கு அழைப்பு

வந்தது. ஏதோ தெரியாத எண்ணில் இருந்து ஃபோன் வந்ததால் எடுக்காமல் விட்டான். மறுபடியும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

 

இரண்டாவது முறை அழைப்பு வரவும் சோழன் எடுத்து பேசினான். அதில் கூறிய செய்தியில் கலவரமானான்.

 

அப்படி யார் சோழனிடம் பேசினார்கள்?

கவியை சோழன் எப்படி மாற்றப் போகிறான் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!