Episode – 03
மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,
எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.
அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,
அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,
அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,
ஆரண்யன் போட்டோவுடன் செய்தி ஒன்று வெளியிடப் பட,
அங்கு இருப்போரின் பார்வைகள் அனைத்தும் ஆர்வமாக அந்தப் பக்கம் திரும்ப,
குழுமமாக, நின்று இருந்த அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்,
“அங்க பாருங்க, அத தான் நான் சொன்னன். நான் சொல்லும் போது யாராச்சும் நம்பினீங்களா?, அந்த ஆன்டி ஹீரோ சும்மா இருக்க மாட்டார்னு சொன்னேன் தானே. இப்போ பாருங்க.” என கூற,
“அப்படி என்ன தான் டீவி யில் ஓடுகின்றது?” என யோசித்த சொர்ணாவும் பார்வையை தொலைக் காட்சி பக்கம் திருப்ப,
அங்கே, காலையில் ஆரண்யன் பற்றி வெளியிடப்பட்ட செய்தியை, சேகரித்துக் கொடுத்தவர் காரில் அடி பட்டு சீரியசான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருப்பதாக செய்திகள் ஓடிக் கொண்டு வந்து இருந்தது.
அந்த தகவலுக்கு கீழே, “இது வெறும் விபத்து தானா?, இல்லை திட்டம் இட்ட செயலா?, ஆரண்யன் அந்த செய்தி வெளி வந்ததுக்காக பழி வாங்கும் படலம் நடத்து கிறாரா?, இல்லை அவரது தந்தை மகனுக்காக செய்த பாவச் செயலா?, காலையில் வந்த செய்தியின் பிரதி பலிப்பு தான் இந்த விபத்தா?, இந்த செய்கை மூலம் நடந்த சம்பவம் இல்லை என்று ஆகி விடுமா?….”
“அடி வாங்கிய மகனுக்காக தந்தை எடுக்கும் பதில் நடவடிக்கையாக இருக்குமோ?, பாதிக்கப் பட்டவனுக்கு என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?”
“இந்தக் கேசும் மறைக்கப் பட்டு, உண்மைகள் மறுக்கப் பட்டு விடுமா?, இல்லை உண்மைகள் வெளி வருமா?,
வீடியோ எடுத்தவர் மேல் ஏன் கோபம் கொள்ள வேண்டும்?, அடித்த பெண் மீது தானே உண்மையில் கோபம் கொள்ள வேண்டும்?, அந்தப் பெண்ணை நேரடியாக எதிர் கொள்ள துணிவு இல்லாததின் விளைவு தான் இதுவா?, அந்தப் பெண்ணுக்கும் ஆரண்யனுக்கும் என்ன தொடர்பு?….” என அடுத்தடுத்து செய்திகள் வர,
சொர்ணாக்கு உண்ட உணவு தொண்டைக்குள் சிக்கியது.
“என்ன கொடுமை இது…. செய்தி வெளியிட்ட ஆளுக்கே இந்த நிலைமை என்றால்…. அப்போ என் நிலைமை…. மிஸ்டர் ஆரண்யன் என்ன இப்படிப் பட்ட மனுஷனா இருக்கார்?, இப்படி கொடூரமா நடந்து கொண்டு இருக்கார்?, பாவம் அந்த மனுஷனுக்கே அந்த நிலைமைன்னா என்னோட கதை என்னாகும்?” என எண்ணிப் பயந்து போனவள்,
சமாளிப்பாக தொண்டையை செருமி விட்டு, நீரை அருந்தினாள்.
“தேவை இல்லாது ஒரு மனிதரை சீண்டி விட்டு விட்டோமோ….” என எண்ணிக் கொண்டவளுக்கு,
“எதுவுமே வேண்டும் என்று செய்யவில்லையே?” என்கிற ஆதங்கமும், ஒரு வித மன அழுத்தமும் உருவாக, அதற்கு மேலும் சாப்பிடும் எண்ணம் இல்லாது போக, அங்கே இருக்கப் பிடிக்காது கடகடவென தனது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் தலையில் கை வைத்துக் கொண்டவள்,
“என்னடா இது எனக்கு வந்த சோதனை?” என யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
கடைசி முயற்சியாக “பேசாமல் அந்த நபருக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டு விடலாமா?” என்று கூட யோசித்தாள் சொர்ணா.
ஏனெனில் அவளுக்கு யாரிடமும் பிரச்சனைக்கு போவதோ…. பிரச்சனையை வளர்ப்பதோ…. பிடிக்காத காரியம் ஆகும்.
அறியாமல் நடந்த செயல் இப்படி கொண்டு வந்து நிறுத்தி விடும் என கனவிலும் எண்ணவில்லையே.
அதை விட தந்தைக்கு இந்த மாதிரியான விடயங்கள் தெரிய வந்தால் அவர் மேலும் குழம்பிப் போகக் கூடும்.
ஏற்கனவே இந்த இடம் பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு இருப்பவர்,
இப்படி என்று தெரிந்தால் தொடர்ச்சியாக வேலை செய்யவும் அனுமதிக்க மாட்டார். என பலதும் யோசித்தவளுக்கு,
இறுதியில், “ஏண்டா அந்த ஹோட்டலுக்கு அவரை சாப்பிட அழைத்துச் சென்றோம்?” என்ற யோசனை தான் வந்தது.
சற்று யோசித்தவள், பெருமூச்சு ஒன்றுடன், ஆரண்யனின் போன் நம்பரை தேட ஆரம்பித்தாள்.
நாட்டிலே மிகவும் பேமஸ்சான நபர் அவன்.
எப்படியும் அவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என அவளுக்கு நன்கு தெரியும்.
ஆகவே அவனது கம்பெனி பற்றி தேட ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அப்போது தான் அவன் யார்?, அவனின் நிலை என்ன?, படிப்பு என்ன?, உலக நாடுகள் எங்கும் எத்தனை கம்பெனிகளுக்கு அவன் சொந்தக்காரன்?, அவனது பெயரில் உள்ள பிசினஸ்கள்?, அவனது சொத்துக்கள் பற்றிய விபரங்கள் முழுவதும் அவளுக்கு தெரிய வந்தது.
ஒரு கணம் உண்மையில் மலைத்துத் தான் போனாள் சொர்ணா.
இப்படிப்பட்டவனையா அடித்தோம் என எண்ணி உள்ளுக்குள் உதறல் எடுக்க,
ஒருவாறு அவனுக்கு சொந்தமாக சென்னையில் இருக்கும், ஆரா சாப்ட்வேர் நிறுவனத்தின் ரிசப்ஷன் நம்பரை தேடி எடுத்தவள்,
தனது செல்லில் இருந்து கால் பண்ணி விட்டு,
கடைசி ரிங் போய், மறு புறம் “ஹலோ….” என கூறவும்,
பட்டென கட் பண்ணி வைத்து விட்டாள்.
“சே…. எனக்கு என்னாச்சு?, ஏன் இப்படிப் பயந்து சாகுறேன். ஓகே…. சொர்ணா பி போல்ட். நோ…. நோ…. உன்னால முடியும்.” என தனக்குத் தானே கூறிக் கொண்டு,
மீண்டும் ஒரு முறை கால் பண்ணியவள், இம்முறை பயம் கொள்ளாது, மறு புறம் போன் எடுக்கப்பட்டதும்,
“ஹலோ, என்னோட பெயர் சொர்ணாம்பிகை, நான் மிஸ்டர் ஆரண்யன மீட் பண்ணலாமா?” என கேட் டாள்.
மறு புறம், இருந்த பெண்ணவளோ,
“மேம்…. வாட்ஸ் யுவர் நேம்…. சொர்ர்ர்ர்…. ணா….ம்பிகை ரைட்?” என இழுத்துக் கூற,
“என் பெயர இதுக்கு மேல யாரும் டேமேஜ் பண்ண முடியாது. என்ன இழுவ இழுக்கிறா….” என எண்ணிய சொர்ணா,
“யெஸ் மேம், மை நேம் இஸ் சொர்ணாம்பிகை. நாட் சொர் ர்….ணாம்பிகை.” என மறுபடியும் அழுத்திக் கூற,
“ஓஹ்….ஓகே மேம். நீங்க யாரு?, எங்க இருந்து பேசுறீங்க?, சார் ரொம்ப பிஸி மேடம். அவர ஈஸியா சந்திக்க முடியாது. அப்பொய்ன்மெண்ட் போடணும். அதுவும் சாருக்கு ப்ரொப்பர் ரீசன் சொல்லணும். உங்கள மாதிரி ஆயிரம் கால்ஸ் ஒரு நாளைக்கு வருது. சோ…. நீங்க எதுக்காக சார் கிட்ட பேசணும்னு காரணம் சொன்னீங்கன்னா…. பர்தரா நாங்க பேசலாம். நான் உங்க பெயரை சாரோட கேபினுக்கு அனுப்புவன். அங்க, உள்ள சாரோட பி. ஏக்கள் தான் சாருக்கு உங்கள பத்தி சொல்லுவாங்க. சார் ஓகேன்னு சொன்னா நீங்க அவர சந்திக்கலாம்.” என ஆங்கிலத்தில் தெளிவாக சொல்லி முடிக்க,
சொர்ணாக்கு கண்ணைக் கட்டியது.
“இப்படி ஒரு சாரி கேட்கணுமா?, இவங்க சொல்ற வழில போகணும் னா. மாசக் கணக்கு தான் ஆகும்.” என எண்ணியவள்,
“நோ, தேங்க்ஸ்.” என கூறி விட்டு வைத்து விட்டாள்.
ஆனால், அவளின் பெயரும் சேர்த்து, ஆரண்யனுக்கு அனுப்பப்பட்டது அவளுக்கு தெரியாது போனது.
அன்றைய நாளில் அதற்கு மேல் அவளுக்கு சோதனைகள் எதுவும் இருக்கவில்லை.
வேலையை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு சென்றவள், அதன் பிறகு தந்தையுடன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தாள்.
மறுபுறம் ஆரண்யனோ, அன்றைய நாள் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, கடைசி மீட்டிங்கையும் சக்ஸஸ் ஆக முடித்து விட்டு நெட்டி முறித்தவன்,
சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவாறு,
நேரத்தைப் பார்க்க, அதுவோ இரவு எட்டு மணி என காட்டியது.
“இப்போ தான் எட்டு மணியா?” என முணு முணுத்தவன் அன்றைய இரவு வேலைக்கான பி. ஏ வை அழைத்தான்.
ஆம், அவனுக்கு மார்னிங் ஒரு. பி. ஏ. நைட் ஒரு பி. ஏ என இரு பி. ஏ க்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
காரணம், காலையில் இருந்து வேலை செய்யும் பி. ஏ. டையர்ட் ஆக கூடாது என்பது தான்.
ஒரு வேளை அவனின் பி. ஏ களைப்பில் தூங்கி வழிந்தால் அவ்வளவு தான்.
ஆரண்யனுக்கு மதம் பிடித்து விடும்.
அவனுக்கு தான், இரவு விழித்து இருக்கும் நேரம் வரைக்கும் விழித்து இருந்து வேலை செய்யும் நபர் தான் வேண்டும். அவன் இராக் கோழி போல் அயராது வேலை செய்வான்.
அதே போல அனைவரும் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பான் அவன்.
ஆகவே, அவனுக்கு இரண்டு பி. ஏ க்களை நியமித்து விட்டு இருந்தனர்.
இப்போதும் அந்த பி. ஏ வை அழைத்தவன், இன்று யார் யார் கம்பெனிக்கு தன்னை சந்திக்க வந்தார்கள் என கேட்க ஆரம்பித்தான்.
அவர்களில் முக்கியமான சிலரை மட்டும் செலக்ட் செய்து அடுத்த நாளுக்கு அப்பொய்ன்மெண்ட் கொடுக்க சொன்னவன்,
அடுத்தடுத்த பெயர்களும், அவர்களின் பர்போஸ்சும் வாசிக்கப் பட,
“நெக்ஸ்ட்…. நெக்ஸ்ட்….” என கூறிக் கொண்டு சென்றவன்,
“சொர்ணாம்பிகை….” என்ற பெயரைக் கேட்டதும் சுழல் நாற்காலியில் சுற்றுவதை நிறுத்தி விட்டு தனது நெற்றியை இரு விரல்களால் நீவி விட்டு,
“சொர்ணாம்பிகை….” என ஒரு முறை உச்சரித்துப் பார்த்தான்.
“அந்தப் பேர் உள்ள போர்ம்ம மட்டும் தனியா எடுத்து வச்சுக் கொள்ளுங்க.” என்று கூறி விட்டு மீதிப் பெயர்கள் அனைத்தையும் வாசிக்கச் சொல்லி செலக்ட் செய்து விட்டு,
மீண்டும் இறுதியாக சொர்ணாம்பிகை என்று எழுதப்பட்டிருந்த பேருக்குரிய அப்பாயின்ட்மென்ட் படிவத்தை வாங்கிப் பார்த்தான்.
ஒரு கணம் அந்த பெயரை “மிஸ். வி. சொர்ணாம்பிகை, மீன்ஸ் சொர்ணாம்பிகை வெங்கட மூர்த்தி குருக்கள்….” என கூறிப் பார்த்தவன்,
“இவங்க என்ன சந்திக்க கேட்டதற்கான பெர்ப்பஸ் என்ன?” என அழுத்தமான குரலில் கேட்க,
அவனது பி. ஏவோ “போன்ல காண்டாக்ட் பண்ணி இருக்காங்க. அதனால தெரியல சார், அவங்க வேலை செய்ற இடமும், பெயரையும் தவிர வேற எதுவுமே தெரியல சார்.” என்று கூறவும்,
ஒரு கணம் அவளது உதடுகளில் கேலிப் புன்னகை ஒன்று உருவாகி மறைய,
“எனக்கு நல்லாவே தெரியும், நீங்க என்ன பண்றீங்க…. நாளைக்கு ஈவினிங் மூணு மணிக்கு இந்த மேடமுக்கு அப்பாய்மென்ட் கொடுங்க. என்னை கண்டிப்பா வந்து சந்திக்கணும்னு சொல்லுங்க. முக்கியமா ஆரண்யன் சார் கண்டிப்பா சந்திக்கணும்னு சொல்லி இருக்கார்னும் சொல்லுங்க.” என கூறியபடி,
அவளது பெயர் போடப் பட்ட அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை கசக்கி குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டு,
“இனி நான் பார்த்துக்கிறன்.” என பேச்சை முடித்துக் கொண்டான்.
அவனது அந்த செய்கை பி.ஏக்கு கிலியைக் கிளப்பியது.
ஆனாலும் கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் அமைதியாக எழுந்து சென்று விட்டார் அவர்.
அவர் போனதும் அந்த சுழல் கதிரையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்தவனுக்கு, அவள் அடித்த நினைவு மீண்டும் உலா வர,
“உன்ன பத்தி எல்லா டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிட்டேன். பிங்கர் டிப்ஸ்ல வைச்சு இருக்கேன். வா…. நீயா வரணும். இப்போ உனக்கு இந்த ஆரண்யன் பத்தி தெரிஞ்சு இருக்கும். என்ன சந்திக்கும் வரைக்கும் நீ பயத்தோடயே ஒவ்வொரு நிமிஷமும் இருக்கணும். இனிமேல் தானே ஆரம்பிக்கப் போகுது என்னோட ரீவஞ்ச்.” என கூறிவிட்டு ரௌத்திரம் பொருந்திய கண்களுடன் அங்கிருந்து கிளம்பினான்.
எப்போது ஒருவர் ஒரு நபரின் மீது அவரைப் பற்றி யோசித்து யோசித்து மனதுக்குள் ரௌத்திரத்தை வளர்த்துக் கொள்கிறாரோ அவரின் கோபம் குறித்த ஆளிடம் வெளிப்படும் போது அதி பயங்கரமானதாக இருக்கும் அல்லவா.
அதே விடயம் தான் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.
ஆரண்யன் அவள் மீதான கோபத்தை தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டே இருந்தான்.
அது வெடித்து வெளி வரும் போது அதன் பாதிப்பை சொர்ணாம்பிகை எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ?
மறு நாள் பொழுதும் நல்ல படியாக புலர்ந்தது.
வேலைக்கு வந்து அமர்ந்த சொர்ணாக்கு, சற்று நேரத்திலேயே மாலை மூன்று மணிக்கு ஆரண்யனை சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது.
அந்த ஒற்றை அழைப்பே மீண்டும் அவளின் நிம்மதி பறி போக காரணமாக அமைந்தது.
“நான் வேணாம்னு சொல்லித் தானே போன வைச்சேன். அப்புறம் எப்படி எனக்கு அப்பொய்ன்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” ஒரு வேள இது மிஸ்டர் ஆரண்யனோட வேலையா இருக்குமோ?, சே…. அவருக்கு இருக்கிற வேலைக்கு என்ன ஒரு ஆளாவே அந்த மனுஷன் மதிக்க மாட்டார். சரி போய்ப் பார்ப்பம். சான்ஸ் கிடைச்சா மன்னிப்பு கேட்பம்.” என முடிவு எடுத்தவள் மாலை மூன்று மணிக்கு அங்கு செல்ல ரெடியானாள்.
ஆனால் அங்கு ஒருவனோ, தனது முக்கிய வேலைகள், மீட்டிங்குகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவளின் வருகைக்காகவே காத்து இருந்தான்.
சொர்ணா எப்படி ஆரண்யனிடம் மன்னிப்பு கேட்கப் போகிறாள்?
அவனது கோபத்தை எங்கணம் எதிர் கொள்ளப் போகிறாள்?
ஆரண்யன் எடுத்து இருக்கும் முடிவு என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
கொஞ்சம் லேட் எபி தான்.. இனி கொஞ்சம் வேகமாக எபிகள் வரும்.