அத்தியாயம் 3
சோழபுரம்,
சோழன் கல்யாண பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர்.
ஆனால் இவர்களே எதிர்ப்பார்க்காத மாதிரி அந்த கல்யாண பொண்ணே சோழனுக்கு ஃபோன் செய்து பேசினாள். கல்யாணத்திற்கு ரெண்டு நாட்கள் முன்பு ஃபோன் பண்ணினாள். தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வரவும் யாரு இது என்ற யோசனையோடு எடுத்து பேசினான். அவள் பேச இவனும் பேசிவிட்டு சரி என்ற பதிலோடு வைத்துவிட்டான். அவளும் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.
அந்த பொண்ணு கூட பேசிய பிறகு தான் இவன் நார்மலாக சுற்றி கொண்டு இருந்தான். கல்யாண வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. அந்த பெரிய வீட்டின் அளவிற்கு சொந்த பந்தங்கள் ரெண்டு நாட்கள் முன்பே கூடி இருந்தனர். அதனால் சத்தமும் இரைச்சலுமாக வீடே கலகலப்பாக இருந்தது. சோழனை தவிர அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ராஜன் தான் எந்த தடையும் இல்லாமல் கல்யாணம் நல்ல படியாக நடக்கனும் னு வேண்டிக் கொண்டு இருந்தார். சேரனும் தன் அப்பாவிடம் ஒன்றும் கவலைப் படாதிங்க ஐயா அண்ணா கல்யாணம் நல்ல படியாக முடியும் என்று ஆறுதல் கூறினான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்னு சொல்வார்கள். அது மாதிரி இங்கும் என்ன நடக்கப் போகுதோ.
மும்பை ,
கவி அம்மாவை சாதாரண அறைக்கு மாற்றியதும் சென்று பார்த்தாள். அவரும் அப்போது தான் கண் விழித்தார். கவியைப் பார்த்து கொஞ்சமாக சிரித்தார். ஆனால் கவி அழுது கொண்டே ஏன் அம்மா இப்படி பண்ணுனிங்க என்ட எதுக்கு மறைச்சிங்க. முன்னாடியே சொல்லிருந்தா நம்ம எப்படியாவது பெரிய ஹாஸ்பிடலிற்கு சென்று டிரீட்மண்ட் பண்ணிர்க்கலாம்ல அப்படின்னு சொல்றார் தேம்பி தேம்பி அழுகிறாள்.
கீதாவும் அழாதே கவி இனிமே தான் நீ இன்னும் தைரியமா இருக்கனும். நான் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியாது அதுக்குள்ள உன்ன ஒரு நல்ல இடத்தில் சேர்க்கனும்னு சொல்றாங்க. அதற்கு அவள் எனக்கு யாரும் வேண்டாம் அம்மா நீங்க மட்டும் என் கூட இருந்தால் போதும்னு சொல்றா.
சரி அதை விடு அப்புறம் பார்க்கலாம் நீ என் ஃபோன் எடுத்துக் கொண்டு வான்னு சொல்லி அனுப்பினார். அவளும் கொண்டு வந்து கொடுத்தாள். எனக்கு டாக்டரிடம் கேட்டு எதுவும் ஜுஸ் வாங்கிட்டு வா என்று மறுபடியும் அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய ஃபோனில் ஒருவருக்கு அழைத்து பேசினார். அந்த பக்கம் கூறியதைக் கேட்டு கவலையாக இருந்தார்.
கவியும் ஜுஸ் வாங்கி வந்து குடிக்க வைத்தாள். டாக்டரிடம் எப்போது கிளம்பலாம்னு கேளு கவி எனக்கு நம்ம வீட்டுக்கு போகனும்னு சொல்றாங்க. நான் கேட்டேன் அம்மா 10 நாள் கண்டிப்பாக இங்கே தான் இருக்கணும்னு சொன்னாங்கனு சொல்றா. 10 நாளா என்னால அவ்ளோ நாளெல்லாம் இங்கே இருக்க முடியாது நீ மறுபடியும் கேளு கவின்னு சொல்றாங்க.
அவளும் போய் கேட்கிறாள். அதற்கு அவர் சரி ஒரு நான்கு நாட்கள் இருந்து விட்டு வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. கவியும் வந்து அம்மாவிடம் கூறினாள். கீதாவும் நாளு நாளான்னு யோசித்துக் கொண்டிருந்தார். அப்படியே ஹாஸ்பிடலில் நான்கு நாட்களும் சென்று விட்டது.
அவர்கள் வீட்டிற்கும் வந்து விட்டனர். ஆனால் கீதாவின் உடல் நிலை மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு நாள் அவரும் முன்பு பேசிய நபரிடம் மறுபடியும் பேசினார். நாங்கள் சீக்கிரமா அங்கே வருகிறோம் என்று கீதாவும் அவரிடம் கூறினார்.
கவி ஒரு நாள் தன்னுடைய அம்மாவிடம் உங்களுக்கு ஆசை ன்னு எதுவும் இருக்கா அம்மான்னு கேட்டாள். அதற்கு அவர் எனக்கு ஆசைன்னு ஒன்றும் இல்லை. ஆனால் என்னுடைய சொந்த ஊருக்கு போயிட்டு வரனும் பல வருடங்களாச்சு என் ஊருக்கு போய் அப்படின்னு சொல்றார்.
நீங்க உங்க ஊரை பற்றி இது வரைக்கும் சொன்னது இல்லையே அம்மான்னு கேட்கிறாள். சொன்னது இல்லை தான் சொல்ல வேண்டிய சூழ்நிலை அமையல. இப்போ தான் அமைஞ்சிருக்கு. அங்கு என்னை கூட்டிட்டு போறியான்னு கேட்கிறார். கண்டிப்பாக கூட்டிட்டு போறேன்மான்னு சொல்றா. அங்கே போனதும் நான் ஒன்று கேட்பேன் நீ மறுக்காம செய்யனும் அப்படின்னு சொல்றாங்க. நீங்க சொல்லி செய்யாமல் இருப்பேனா அம்மா நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்னு சொல்றா.
கவியிடம் அவளோட அம்மா அப்படி என்ன கேட்க போறாங்க.
சோழனிடம் கல்யாண பொண்ணு என்ன கூறி இருப்பாள்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.