5.யாருக்கு இங்கு யாரோ?

4.7
(15)

அத்தியாயம் 5

“எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”

 

தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்…

கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு அதிர்ந்து போனால்..

“ஏய்…. அம்மு என்னாச்சுடி? ஏன் இப்படி கொட்டுற மழையில வந்து இருக்க?” என்று கேட்டவாறே அமுதினியை உள்ளே அழைத்துச் சென்ற அகல்யா… அவளை சோபாவில் அமர வைத்து விட்டு ஒரு டவலை எடுத்து வந்து பெண்ணவளின் ஈர கூந்தலை துவட்டி விட்டவள்.

“அடியே… நான் உன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். நீ என்ன எதுவும் பேசாமல் அமைதியா இருக்க? போன விஷயம் என்னாச்சு?  தேவ் கிட்ட பேசிட்டியா? தேவ் என்ன சொன்னாரு?” என்று அகல்யா ஒரு வித பதட்டத்தோடு கேட்க… இவ்வளவு நேரம் ஏதோ சிலை போல் அமர்ந்திருந்தவள். தன் தோழியை கண்கள் கலங்க ஒரு பார்வை பார்த்தவள். எதுவும் பேசாமல் நேராக தன் அறையில் இருக்கும் பாத்ரூமிற்குள் சென்று விட்டால்.

“ஏய்…. அம்மு.. என்னாச்சு டி?” என்று கேட்டவாறே அகல்யாவும் அவள் பின்னோடே சென்றால். இங்கு பாத்ரூமுக்குள் வந்த அமுதினி ஷவரை திறந்து விட்டுவிட்டு அதன் கீழ் ஒரு நொடி அமைதியாக நின்றவள். பின்பு அவன் பேசிய அத்தனை வார்த்தைகளையும் நினைத்து கதறி கதறி அழ ஆரம்பித்தால்..

போயிம் போயிம் இப்படி ஒருவனிடம் ஏமார்ந்து விட்டோமே, அதிலும் இத்தனை வருடங்களாக இவனையா தான் நான் உருகி உருகி காதலித்தேன்? என்று நினைத்தவள் மேலும் கதறி அழுதாள். 

இந்த நிமிடம் வரை தேவ் தன்னை ஏமாற்றி விட்டான் என்பதை அவளால் சிறிது கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

“ எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு? இத்தனை வருஷத்துல என்னுடைய லவ் உனக்கு ஒரு தடவை கூட புரியவே இல்லையா? அதுவும் என்னை பார்த்து நீங்க அந்த வார்த்தை சொல்விங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல தேவ்” என்று இவள் இங்கு அழுவதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவுக்கு என்ன நடந்திருக்கு என்றும் புரிந்தது தன் தோழியின் நிலையை நினைத்து மிகவும் வருந்தினால்.

அப்படி இப்படி என்று ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்த நிலையில்  எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள். தன் உடையை மாற்றி விட்டு நேராக சென்று படுத்து கொண்டால். அமுதினியின் நிலையை நினைத்து மிகவும் கவலைப்பட்ட அகல்யாவோ அவளின் உடல்நலம் கருதி அவளுக்காக உணவை எடுத்து வந்து சாப்பிட அழைக்க,

“இல்ல எனக்கு வேண்டாம் அகல் நீ சாப்பிட்டு” என்று அமுதினி மறுக்க

“ இப்ப மட்டும் நீ சாப்பிடல நான் உடனே ஆதிக்கு போன் பண்ணி இங்க நடந்த எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடுவேன்” என்று அகல்யா அமுதினியை மிரட்ட, அவளும் எங்கு இது தன் அக்காவுக்கு தெரிந்து விடுமோ என்று நினைத்து பயந்தவள். வேறு வழியில்லாமல் ஏதோ பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள்.

அமுதினியின் மனநிலையை புரிந்து கொண்ட அகல்யா இப்போதைக்கு அவளிடம் எதையும் கேட்டு கஷ்ட்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவள். அதே சமயம் அவளை இந்நிலையில் தனியாக விடுவதும் சரியாக வராது என்று உணர்ந்து என்றும் இல்லாத அதிசயமாக இன்று அமுதினியுடனே ஒரே அறையில் தாங்கினாள்.

 இரவு முழுக்க அவன் பேசிய அந்த வார்த்தைகளை நினைத்து கண்ணீர் வடித்தவள். ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றிப் போக, அப்போதும் கண்களை கூட மூடாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடி அப்படியே படுத்து இருந்தவள் எப்படி உறங்கினால் என்று தெரியாமலேயே உறங்கிப் போனால்..

 அடுத்த நாள் காலை எழுந்த அகல்யா ரெஸ்ப்ரெஸ் ஆகிவிட்டு இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்தவள். 

“ஏய் … அம்மு…. அம்மு… காபி கொண்டு வந்து இருக்கேன் பாரு எழுந்திரு டி..” என்று அவளை எழுப்ப அவளோ  அசையாமல் அப்படியே படுத்து இருந்தால்…

“ஏய்… அம்மு… எழுந்திரு டி” என்றவாறே அவளை தட்டி எழுப்பிய அகல்யா ஒரு நொடி அதிர்ந்து தான் போனால்..

“ஏய்…. அம்மு என்னாச்சு டி? எழுந்திரு டி…” என்று அகல்யா அவள் கன்னம் தட்டி எழுப்ப, அவளோ கண்களை கூட திறக்க முடியாமல் படுத்து இருந்தால்…

“ஏய்… கண்ணை திறந்து என்னை பாரு…” என்று அகல்யா சற்று பலமாக அவள் கன்னத்தை தட்ட அப்போதே லேசாக கண் விழித்து பார்த்தால் அமுதினி…

“என்ன அம்மு இது? உடம்பு நெருப்பா கொதிக்குது, எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம்…” என்று அகல்யா அவளை எழுப்பி அமர வைக்க, அமுதினியும் கஷ்ட்டப்பட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

“ஹாஸ்பிடல் எல்லாம் ஒன்னும் வேண்டாம் டி… அங்க ட்ரால டேப்லெட் இருக்கும் பாரு அதை எடு..” என்று அமுதினி கூற 

“அடி வாங்க போற பாரு… ஒழுங்கு மரியாதையா எழுந்து வா ஹாஸ்பிடல் போகலாம்.. நீ இப்படி இருக்கறது மட்டும் ஆதிக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான் அவ என்னை கொன்றுவா” என்று அகல்யா கூற 

“ஏய்… அக்கா கிட்ட எல்லாம் நீ இதை பற்றி எதுவும் சொல்லாத” என்று அமுதினி கூற

“சரி… நான் சொல்லல ஆனா, அதுக்குன்னு உன்னை இப்படியே எல்லாம் ஒன்னும் விட முடியாது. ஒழுங்கா எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம்.” என்று அகல்யா கூற அமுதினியும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொள்ள, அகல்யா உடனே தன் ஆஃபீஸிற்கு போன் செய்து லீவு சொல்ல… 

“என்ன அகல்யா நீயும் இப்படி பண்ண எப்படி? ஏற்கனவே நம்ப டீம்ல 2 பேர் லீவ்… இப்போ அமுதினியும் வரமாட்டான்னு வேற சொல்ற அப்போ நீயாவது ஆஃபீஸ் வரனும்ல ம்மா” என்று மேனேஜர் கூற 

“நான் என்ன சார் பண்றது? இங்க இவளுக்கு ரொம்ப முடியல ஹை பீவர் கூட வேற யாருமே இல்ல, நான் தான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்” என்று அகல்யா கூற 

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அகல்யா… என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ அது எனக்கு தெரியாது, கரெக்ட் டைம்க்கு ஆஃபீஸ் வந்து சேரு, இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குது, வேணும்ன்னா அந்த மீட்டிங்கை முடிச்சிட்டு நீ கிளம்பு” என்று கூறியவர் போனை கட் செய்து விட, அதில் கடுப்பான அகல்யா தன் போனை முறைத்து பார்த்து கொண்டு இருக்க, இதை கண்ட அமுதினி..

“நீ அந்த போனை முறைச்சு பார்த்து என்ன டி ஆக போகுது? போ போய் நீ ஆபிஸ்க்கு கிளம்பு நான் டேப்லெட் போட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்கிறேன்”  என்று அமுதினி கூற அகல்யாவும் வேறு வழியில்லாமல் அமுதினிக்கு தேவையான உணவுகளை சமைத்து வைத்து விட்டு ஆபிஸ்க்கு கிளம்பி சென்று விட்டாள்.

மீட்டிங் முடிந்த உடனே பர்மிசன் போட்டு விட்டு வந்து விடலாம் என்று அகல்யா நினைத்திருக்க, அவள் நேரமோ என்னவோ மீட்டிங்க கிட்டத்தட்ட மதியம் வரை நடந்து கொண்டிருந்தது. அப்படி இப்படி என்று மீட்டிங்கை முடிந்து மேனேஜரிடம் பேசி பர்மிசன் வாங்கியவள்.  அவசர அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருக்க அப்பொழுது ரிசப்ஷனில் இருந்த அகல்யாவிற்கு கால் வந்தது..

“ஹலோ அகல், அமுதினி எங்க? அவ இருந்த கொஞ்ச போன் அவகிட்ட கொடு” என்று அந்த பெண் கூற 

“இல்ல அவள் இன்னைக்கு ஆஃபீஸ் வரல, ஏன் இப்போ நீ திடிர்னு அவளை கேட்குறே?” என்று அகல்யா கேட்க 

“அமுதினிய தேடி ஒரு பொண்ணு வந்திருக்காங்க, அவளை பார்க்கணும்னு சொல்லி கேட்குறாங்க… அனேகமா அவங்க அமுதினியோட சிஸ்டர் நினைக்கிறேன்.” என்று அவள் கூற இங்கோ அகல்யாவிற்கு அந்த வார்த்தையை கேட்டதுமே தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. பயத்தில் கை கால்கள் உதற 

“அவங்க யார்? அவங்க பேர் என்ன?” என்று அகல்யா கேட்க‌ 

“ஏதோ ஆதி…. ஹான்… ஆதிலட்சுமின்னு சொன்னாங்க” என்றதும் இங்கே அகல்யாவிற்கு சப்த நாடியும் அடங்கிப் போனது. 

“சரி அவங்களை அங்கையே வெயிட் பண்ண சொல்லு நான் வரேன்” என்று கூறியவள். தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கீழே செல்ல.. அங்கோ ஆதி சற்று கோபத்தோடு அமர்ந்திருந்தால்.

“ஏய்… ஆதி நீ இங்க என்ன பண்ற?” என்று அகல்யா கேட்க 

“எங்கடி உன்னோட ஃப்ரண்ட்?” என்று ஆதி கோபமாக கேட்க 

“அது அவ இன்னிக்கு ஆபீஸ் வரல, ரூம்ல இருக்கா.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல” என்று அகல்யா கூற 

“என்னது உடம்பு சரி இல்லையா? ஏன் என்னாச்சு? நேத்து காலையில் என் கிட்ட பேசும் போது கூட நல்ல தானே இருந்தா, அதுக்குள்ள என்னாச்சு?” என்று ஆதி கேட்க 

“அது…. அது வந்து… நேத்து மழையில ஃபுல்லா நெனைஞ்சுட்டா, அதுல அவளுக்கு காய்ச்சல் வந்துடுச்சு போல” என்று அகல்யா கூற

“சரி…. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க” என்று ஆதி தன் தங்கையின் மீது உள்ள அக்கரையில் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க.. 

“ஐயோ கடவுளே…. வெறும் காய்ச்சலுக்கே இவ நம்ப கிட்ட இத்தனை கேள்வி கேட்குற, நடந்த விஷயம் எல்லாம் மட்டும் இவளுக்கு முழுசா தெரிஞ்ச என்னை என்ன பண்ண போறாளோ.. தெரியலையே” என்று அகல்யா தனக்குள் புலம்பிக் கொண்டு இருக்க..

“ஏய்… அகல் என்னடி நான் பாட்டுக்கு இங்க பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கண்ணை முழிச்சு கிட்டே கனவு கண்டுக்கிட்டு இருக்க?” என்று ஆதினி கேட்க 

“அது வந்து ஆதி… இனி தான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்… இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்க அதான் இந்த மேனஜர் கண்டிப்பா வந்தே ஆகணும்னு சொல்லிட்டான். எனக்கும் வேற வழி இல்ல அதான்… ஆபிஸ்க்கு வந்து மீட்டிங் மட்டும் அட்டன் பண்ணிட்டு இதோ வீட்டுக்கு கிளம்பிட்டேன்” என்று அகல்யா கூற, அவளை முறைத்த ஆதினி.

“சரி… வா வந்து கார்ல ஏறு, போகலாம்…” என்ற ஆதினி அகல்யாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டே அவர்கள் தாங்கி இருக்கும் வீட்டிற்க்கு வந்தால்..

“அம்மு…. அம்மு…” என்று அகல்யா கதவை தட்ட அதுவோ திறக்கபடவில்லை…

“டேப்லெட் போட்டு தூங்கிற போல அகல்… நீ உன்கிட்ட இருக்க கீயை வெச்சு டோரை ஓபன் பண்ணு…” என்று ஆதினி  கூற அகல்யாவும் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்தால்..

 உள்ளே சென்ற ஆதினி சுற்றும் முற்றும் பார்க்க அங்கு எங்குமே அவளது தங்கை அமுதினி இல்லை, 

“ஆதி அவ அவளோட ரூம்ல தான் இருப்பா, இரு நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்” என்று கூறிய அகல்யா அமுதினியின் அறைக்கு செல்ல போக 

“இல்ல வேண்டாம் விடு.. அவளை டிஸ்டப் பண்ணாத அவ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும், நீ போ நானே போய் அவளை பாத்துக்கிறேன்.” என்று கூறிய ஆதினி தன் தங்கையின் அறைக்குள் நுழைய, அகல்யாவோ ஆதினிக்காக காபி போட கிச்சன் அறைக்கு சென்று விட்டால்.

மெல்ல சத்தம் வராதவாறு உள்ளே சென்ற ஆதினி… தன் தங்கையின் அருகில் அமர்ந்தவள். சிறு புன்னகையோடு பெண்ணவளின் தலைக்கோதியவள். கண்கள் சுருங்க அமுதினியின் உடலை தொட்டு பார்க்க அதுவோ ஜில்லென்று இருந்தது.

“என்ன இது? அகல்யா காய்ச்சலுன்னு சொன்ன இப்போ என்ன உடம்பு இவ்வளவு ஜில்லுனு இருக்குது?” என்று நினைத்தவள். அமுதினியை அவள் பக்கமாக திருப்பியவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய…

“அம்மு….”  என்று அந்த அறையே அதிரும் படி ஆதினி கத்த, இங்கு அவளுக்காக காபி போட்டு கொண்டு இருந்த அகல்யாவும் ஆதியின் அலறலில் ஒரு நொடி பயந்தவள். வேகமாக அமுதினியின் அறைக்கு செல்ல அங்கு அவள் இருக்கும் நிலை கண்டு அகல்யாவுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அப்படி அமுதினிக்கு என்னாச்சு? ஆதினியின் தங்கை தான் அமுதினியா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

யாருக்கு இங்கு யாரோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!